Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பௌத்தர்களா நாங்கள்? பிக்குகளின் செயற்பாடு குறித்து அமைச்சரின் சந்தேகம்

Featured Replies

பௌத்தர்களா நாங்கள்? பிக்குகளின் செயற்பாடு குறித்து அமைச்சரின் சந்தேகம்

 

பௌத்தர்களா நாங்கள்? பிக்குகளின் செயற்பாடு குறித்து அமைச்சரின் சந்தேகம்

புகலிடம் தேடி ஸ்ரீலங்காவுக்குவந்த ரோஹிங்கியா முஸ்லிம்களை கடும்போக்குவாத பிக்குகள் விரட்டியடிக்க முயற்சித்த செயற்பாட்டினால் தாங்களும் சிங்கள பௌத்தர்களா என்று ஒருதடவை சிந்திக்கத் தோன்றுகிறது என ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உள்விவகார அமைச்சர் வஜித அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கடும்போக்குவாத பௌத்த பிக்குகளின் இவ்வாறான செயற்பாட்டின் ஊடாக ஒட்டுமொத்த பௌத்த மக்களுக்கே பேரவமானம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பு கல்கிஸை பகுதியில் இடைத்தங்கல் முகாமில் தங்கியிருந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் 30 பேரை நாடு கடத்தும்படி தென்னிலங்கையைச் சேர்ந்த கடும்போக்குவாத பௌத்த பிக்குகள் அமைப்புக்கள் இணைந்து அண்மையில் பாரிய ஆர்ப்பாட்டத்திலும், கலகத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

ஸ்ரீலங்காவில் தஞ்சதடைந்த ரோஹிங்கிய அகதிகளை தாக்குவதற்கும் அந்தப் பிக்குகள் முயற்சி செய்த போதிலும் தலையீடு செய்த பொலிஸார் அவர்களை காப்பாற்றி காலி – பூசா இராணுவ முகாமுக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் மாத்தளை பிரதேச செயலகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் உள்விவகார அமைச்சர் வஜித அபேவர்தன கலந்துகொண்டார்.

இதன் பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், குறித்த கடும்போக்குவாத பிக்குகளால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாட்டினை வன்மையாக கண்டித்து கருத்து வெளியிட்டார்.

 “மியன்மார் சம்பவத்தை பார்த்தால் நாங்கள் இந்த நாட்டு பௌத்தர்களா என்று சிந்திக்கத் தோன்றுகிறது. மிருகங்கள் மற்றும் மனிதர்களுக்கு பிரச்சினை அல்லது ஆபத்து ஏற்பட்டால் ஐயோ பாவம் எனக் கூறுகின்ற பழக்கம் சிங்கள பௌத்த மக்களுக்கு இருக்கிறது. ஆனால் மியன்மார் சம்பவத்தை பார்த்தால் எவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொண்டிருக்கிறார்கள். நாட்டிலுள்ள சிலர் அரசியல் மயப்படுத்த முயற்சிக்கின்றனர். அப்படி செய்ய வேண்டாம். ஸ்ரீலங்கா கடற்பரப்பில் தத்தளித்தவர்களை பாதுகாத்து கரைசேர்த்து ஸ்ரீலங்கா சட்டம் மற்றும் ஐ.நா சட்டங்களுக்கு அமைய உணவு வழங்கி உதவி வழங்கி சொந்த நாட்டிற்கு வழியனுப்பிவைக்கப்படுவார்கள். மனித உயிரொன்று உலகில் எந்த பகுதியானாலும் பாதுகாப்பது நம்கடமை. அரசியலில் பகைத்துக் கொள்வதற்கு நாம் கற்றுக்கொள்ளவில்லை. எனவே பலமான இலக்குகளை அடைந்துகொள்வதற்கே அரசாங்கம் என்ற வகையில் எதிர்பார்க்கின்றோம். அதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர்” என்றார்.

 

https://news.ibctamil.com/ta/politics/vajira-abewardane-question-on-monks

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.