Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் காணி அற்றவர்களிற்குக் காணிகள் வழங்கும் திட்டம் !!

Featured Replies

யாழில் காணி அற்றவர்களிற்குக் காணிகள் வழங்கும் திட்டம் !!

 

 

யாழ்ப்பாணத்தில் தற்போது வரையில் முகாமில் வாழும் காணி அற்றவர்களில் 55 பேருக்கு காணிகள் வழங்கி அதற்கான உறுதியும் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழில்   காணி அற்றவர்களிற்குக்  காணிகள் வழங்கும் திட்டம் !!

அத்துடன், மேலதிகமாக 15 பேருக்கு காணி வழங்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கான உறுதியும் விரைவில் வழங்கப்படும் என மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

அதேநேரம், மேலும் 43 பேருக்கான காணிகள் மதிப்பீட்டில் உள்ளது.

அவை கிடைக்கப் பெற்றதும் உடனடியாக உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

இவ்வாறே, மேலும் 32 காணிகள் நில அளவீட்டில் உள்ளது. இவையும் அடுத்த கட்டமாக மக்களிற்கு வழங்கப்படும்.

இதுவே இந்த காணி விநியோகம் அந்த மக்கள் விரும்பும் இடத்தில் உள்ள காணி ஒரு பரப்பிற்கு 2 லட்சம் ரூபா வீதம் 2 பரப்பு கொள்வனவு செய்ய முடியும்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் தற்போதுவரை நிலவும் வறட்சிக்கு தொடர்ந்தும் நீர் விநியோகம் இடம்பெறுகின்றது.

அதேபோன்று வறட்சி நிவாரணத்தின் இரண்டாம் கட்ட விநியோகம் இடம்பெறுகின்றது.

அவ்வாறு இடம்பெறும் நிவாரண விநியோகத்தில் மக்கள் தரம்,  நிறை என்பனவற்றை பரீட்சித்து கொள்வனவு செய்ய முடியும்.

அதில் தரம் அல்லது நிறைச் சோர்வு காணப்பட்டால் உடனடியாகவே முறையிடமுடியும்.

ஏனெனில் தீவகப் பிரதேசத்தில் ஓர் கிளையில் மேற்கொள்ளப்பட்ட விநியோக முறைகேட்டினை உடனடியாக வழக்குத் தாக்கல் செய்யுமாறு பணித்துள்ளேன்.

அதேபோன்று எதிர் வரும் ஒக்டோபர் 6முதல் 12 வரை உணவு உற்பத்தி வாரம் ஜனாதிபதி செயலக ஏற்பாட்டில் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படவுள்ளது.

இதில் தரிசு நிலத்தினை பயிர்ச் செய்கைக்கு உட்படுத்துவது  மற்றும் வருமானம் ஈட்டும் பயிர்ச் செய்கையை ஊக்குவித்தல் போன்றன அடங்கும் இந்த வேலைத்திட்டம் அரச நிறுவனங்களிற்கும் பொருந்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

  • தொடங்கியவர்

முகாமில் வாழும் 55 பேருக்கு உறுதியுடன் கூடிய காணிகள்

 
 
முகாமில் வாழும் 55 பேருக்கு உறுதியுடன் கூடிய காணிகள்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

யாழ்ப்­பா­ணத்­தில் தற்­போது முகா­மில் வாழும் காணி அற்­ற­வர்­க­ளில் 55 பேருக்­குக் காணி­கள் வழங்­கப்­பட்டு அவர்­க­ளுக்­கான காணி உறு­தி­க­ளும் வழங்­கப்­பட்­டுள்­ளன. மேலும் 15 பேருக்கு காணி­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. அவர்­க­ளுக்­கான உறுதி விரை­வில் வழங்­கப்­ப­டும். இவ்­வாறு யாழ்ப்­பாண மாவட்டச் செய­லர் நா.வேத­நா­ய­கன் தெரி­வித்­தார்.
அவர் தெரி­வித்­ததாவது:

இவர்­களை விட­வும் 43 பேருக்­கான காணி­கள் மதிப்­பீட்­டில் உள்­ளன. அவை கிடைத்­த ­தும் அவை உட­ன­டி­யாக உரி­ய­வர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும். 32 காணி­கள் நில அள­வீட்­டில் உள்­ளன. அவை­யும் அடுத்த கட்­ட­மாக மக்­க­ளுக்கு வழங்­கப்­ப­டும். அந்த மக்­கள் விரும்­பும் இடத்­தில் ஒரு பரப்­புக்கு 2 லட்­சம் ரூபா வீதம் 2 பரப்­புக் காணி கொள்­வ­னவு செய்ய முடி­யும். அதே­வேளை, யாழ்ப்­பா­ணத்­தில் தற்­போது நில­வும் வறட்­சி­யால் தொடர்ந்­தும் குடி­தண்­ணீர் விநி­யோ­கம் இடம்­பெ­று­கின்­றது.

வறட்சி உத­வி­க­ளின் இரண்­டாம் கட்­டம் வழங்­கப்­ப­டு­கின்­றது. வறட்சி உத­வி­களை மக்­கள் தரம் , நிறை என்­ப­ன­வற்றைப் பரீட்­சித்­துக் கொள்­வ­னவு செய்ய முடி­யும். அதில் தரம் அல்­லது நிறைக் குறைவு காணப்­பட்­டால் உட­ன­டி­யா­கவே முறை­யி­ட­மு­டி­யும். தீவ­கப் பிர­தே­சத்­தில் ஓர் கிளை­யில் மேற்­கொள்­ளப்­பட்ட விநி­யோக முறை­கேட்டை அடுத்து உட­ன­டி­யாக வழக்­குத் தாக்­கல் செய்­யப் பணித்­துள்­ளேன்.

எதிர்­வ­ரும் ஒக்­ரோ­பர் மாதம் 6 ஆம் திகதி முதல் 12ஆம் திக­தி­வரை உணவு உற்­பத்தி வாரம் அரச தலை­வர் செய­லக ஏற்­பாட்­டில் நாடு முழு­வ­தும் கடைப்­பி­டிக்­கப்­ப­ட­வுள்­ளது. அதில் தரிசு நிலத்தை பயிர்ச் செய்கைக்கு உட்படுத்துவது மற்றும் வருமானம் ஈட்டும் பயிர்ச் செய்கையை ஊக்கு வித்தல் போன்றன அடங்கும். இந்த வேலைத்திட்டம் அரச நிறுவனங்களுக்கும் பொருந் தும்- – என்றார்.

http://newuthayan.com/story/33735.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.