Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிராமப்புறப் பாடசாலைகளை மூடுமாறு கோருகிறார் வடக்கு விவசாய அமைச்சர்

Featured Replies

கிராமப்புறப் பாடசாலைகளை மூடுமாறு கோருகிறார் வடக்கு விவசாய அமைச்சர்

 
 
கிராமப்புறப் பாடசாலைகளை மூடுமாறு கோருகிறார் வடக்கு விவசாய அமைச்சர்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

வடக்கு மாகா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு ஆசி­ரி­யர்­களை சமச்­சீ­ராக நிய­மிப்­ப­தி­லுள்ள பிரச்­சி­னைக்­குத் தீர்­வாக வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சர் க.சிவ­நே­சன் அதிர்ச்சி தரும் யோச­னையை முன்­வைத்­துள்ளார்.

“வடக்கு மாகா­ணத்­தில் பின்­தங்­கிய கிரா­மப் புற பாட­சா­லை­கள் அனைத்­தை­யும் மூடி­விட்டு, அந்த பகுதி மாண­வர்­களை நக­ரப்­புற பாட­சா­லை­க­ளில் கற்க ஏது­வான வழி­களை மாகாண கல்வி அமைச்சு செய்ய வேண்­டும்” என்று அவர் வலி­யு­றுத்­தி­னார்.

அவ­ரின் இந்த யோச­னை­யின் அடிப்­ப­டை­யில் வடக்கு மாகா­ணத்­தில் தற்­போது இயங்­கும் 967 மாகா­ணப் பாட­சா­லை­க­ளில் 446வரை­யான பாட­சா­லை­கள் மூடப்­ப­ட­வேண்­டும் என கல்வி அதி­கா­ரி­கள் சுட்­டிக்­காட்­டி­னர்.

வடக்கு மாகாண சபை­யின் 107ஆவது அமர்வு அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தலை­மை­யில் நேற்று நடை­பெற்­றது.

அமர்­வில் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் ஜி.ரி.லிங்­க­நா­தன், “கல்வி அபி­வி­ருத்தி சார்­பாக வடக்கு மாகாண பாட­சா­லை­க­ளின் பின்­ன­டை­வுக்கு பல கார­ணங்­கள் இருந்­தா­லும் சமச்­சீ­ரற்ற ஆள­ணிப் பங்­கீ­டும் அதற்கு மிக முக்­கிய கார­ணி­யா­கும். எனவே பின்­தங்­கிய கிரா­மப்­புற பட­சா­ளை­க­ளுக்கு இடையே சமச்­சீ­ரான ஆள­ணி­யைப் பேணு­வதை உறு­திப்­ப­டுத்த மாகாண கல்வி அமைச்சு காத்­தி­ர­மான நட­வ­டிக்­கையை எடுக்க வேண்­டும்” என பிரே­ரணை ஒன்றை முன்­மொ­ழிந்­தார்.

இந்­தப் பிரே­ரணை மீது கருத்­துத் தெரி­விக்­கும் போதே வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சர் மேற்­கண்ட யோச­னையை முன்­வைத்­தார்.

“வடக்கு மாகா­ணத்­தில் ஆசி­ரி­யர் நிய­ம­னத்தை சமச்­சீ­ராக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு சாத்­தி­ய­மில்லை.நிய­ம­னம் பெற்ற அன்­றைய தினமே சில ஆசி­ரி­யர்­கள் தமக்கு வேண்­டிய இடங்­க­ளுக்கு இட­மாற்­றத்தை பெற்­றுச் செல்­கின்­ற­னர். இவ்­வா­றான நிலை­யில் நாம் எப்­படி சமச்­சீ­ரான நிய­ம­னத்தை வழங்க முடி­யும்.எனவே கிரா­மப்­புற பாட­சா­லை­களை மூடி­விட்டு நக­ரப்­புற பாட­சா­லை­கள் அல்­லது ஆசி­ரி­யர்­கள் பணி­யாற்­றக் கூடிய பாட­சா­லை­களை தெரிந்து நாம் அபி­வி­ருத்தி செய்­வதே சிறந்த தீர்­வாக இருக்­கும்” என்று வடக்கு மாகாண விவ­சாய அமைச்­சர் க.சிவ­நே­சன் தெரி­வித்­தார்.

http://newuthayan.com/story/34949.html

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்கள் கல்வி அறிவு பெறுவதற்கு ஆசிரியர்கள் பணிபுரிந்தது அந்தக்காலம். :rolleyes:

ஆசிரியர்கள் காசு பணம் பெறுவதற்கு மாணவர்கள் பணிபுரிய வேண்டியது இந்தக்காலம். :grin:

  • தொடங்கியவர்

சிவ­நே­ச­னின் கருத்துக்கு ஆசிரியர்கள் கண்டனம்

சிவ­நே­ச­னின் கருத்துக்கு ஆசிரியர்கள் கண்டனம்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

தூர இடங்­க­ளைச் சேர்ந்த ஆசி­ரி­யர்­கள் செல்ல மறுக்­கும் வசதி குறைந்த பாட­சா­லை­களை மூடு­வதே ஆசி­ரி­யர் வளப் பங்­கீட்­டுப் பிரச்­சி­னைக்கான தீர்வு என்று வடக்கு மாகா­ண­சபை  விவ­சாய அமைச்­சர் சிவ­நே­சன் வெளி­யிட்ட கருத்­துக்­குக் கண்­ட­னங்­கள் எழுந்­துள்­ளன.

‘‘இது முட்­டாள் ­த­ன­மான  யோசனை. இதனை வன்­மை­யாக கண்­டிக்­கின்­றோம்’’ – என இலங்­கைத் தமி­ழர் ஆசி­ரி­யர் சங்­கம் தெரி­வித்­துள்­ளது.

இது தொடர்­பில் சங்­கம் வெளி­யிட்­டுள்ள செய்திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­வது:

வட­பு­லத்­துக் கல்­வி­யில் ஏற்­பட்­டுள்ள வீழ்ச்சி தொடர்­பில் இது­வரை எந்­த­வி­த­மான ஆக்­க­பூர்­வ­மான செயற்றிட்­டங்­க­ளை­யும் வடக்கு மாகா­ண­சபை முன்­னெ­டுக்­க­வில்லை.

வடக்கு மாகா­ணத்­தின் கல்­வி­வீழ்ச்சி என்­பது மாகா­ண­சபை உரு­வா­கிய பின்­னர் ஏற்­பட்ட நில­மையே. இதனை நாம் இது­வரை வெளிப்­ப­டுத்­த­வில்லை.

இது தொடர்­பில் வடக்கு மாகாண சபை­யின் அவைத்­த­லை­வர் உள்­ளிட்ட மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளி­டம் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே நாம் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருந்­தோம்.

நாம் சுட்­டிக்­காட்­டிய அனைத்­தை­யும் அனை­வ­ரும் ஏற்­றுக்­கொண்­ட­னர். அதற்­கான தீர்வை மேற்­கொள்­வ­தா­க­வும் உறு­தி­ய­ளித்­த­னர்.

ஆனால் எது­வும் நடக்­க­வில்லை. மாறாக மாகாண சபை­யின் அமர்­வு­க­ளில் சில உறுப்­பி­னர்­கள் சண்­டை­யும், சச்­ச­ர­வும், எதிர்­வா­தங்­க­ளை­யும் மட்­டுமே புரிந்­து­வ­ரு­கின்­ற­னர். அவற்றை தொலைக்­காட்­சி­க­ளி­லும் ஒளி­ப­ரப்­புச் செய்­கின்­ற­னர்.

இது வாக்­க­ளித்த மக்­க­ளுக்­கும், நொந்­து­போ­யுள்ள தமிழ்ச் சமூ­கத்­திற்­கும் பெரும் ஏமாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

குருதி சிந்­திப் பல ஆயி­ரக்­க­ணக்­கான உயிர்­க­ளைப் பறி­கொ­டுத்­துப் போரா­டிய எமக்கு கிடைத்த ஒரு­துளி விமோ­ச­னமே வடக்கு மாகா­ண­சபை.

அதைக்­கூட நாம் சரி­யா­கப் பயன்­ப­டுத்­தாது குரங்­கின் கையில் பூமா­லை­யா­கப் பயன்­ப­டுத்­து­வது வேத­னை­யாக உள்­ளது. இதனை வட­பு­லத்­தில் உள்ள அனைத்து மக்­க­ளும் இன்று பேசிக்­கொள்­கின்­ற­னர்.

மாகா­ணத்­தின் கல்வி வீழ்ச்சி தொடர்­பாக அதி­பர்­கள், ஆசி­ரி­யர்­க­ளைக் குறை­கூ­று­வதை இலங்­கைத் தமி­ழர் ஆசி­ரி­யர் சங்­கம் வன்­மை­யா­கக் கண்­டிக்­கின்­றது. இதற்­கான கார­ணங்­களை முன்­கூட்­டியே சங்­கம் விரி­வா­கத் தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது.

வடக்கு மாகா­ணத்­தில் உள்ள பல ஆயி­ரம் ஆசி­ரி­யர்­க­ளுக்கு நாற்­பது கோடி  ரூபா­வுக்கு மேலே சம்­பள நிலு­வை­கள் உள்­ளன. இது­தொ­டர்­பில் பல­ரு­டன் பேசி­யும் இது­வரை நிலு­வை­கள் வழங்­கப்­ப­ட­வில்லை.

ஆசி­ரிய தொழிற்­சங்­கத்­தின் தலை­யீட்­டால் கல்வி பாதி­க்கப்­ப­டு­கின்­றது என்­கின்ற மாகா­ண­ சபை உறுப்­பி­னர் எஸ்.தவ­நா­த­னின் கருத்­தை­யும் இலங்­கைத் தமி­ழர் ஆசி­ரி­யர் சங்­கம் வன்­மை­யா­கக் கண்­டிக்­கின்­றது.

ஆசி­ரிய தொழிற்­சங்­கம் என்­றால் என்ன, அதன் பெறு­மதி என்ன என்­ப­தை தவ­நா­தன் அறி­யா­மல் இருப்­பது வேத­னை­த­ரு­கி­றது —- எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

முன்­ன­தாக, நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற வடக்கு மாகாண சபை அமர்­வில் உரை­யாற்­றிய விவ­சாய அமைச்­சர் சிவ­நே­சன், ஆசி­ரிய ஆள­ணியை அனைத்­துப் பாட­சா­லை­க­ளுக்­கும் சரி­யா­கப் பங்­கி­டு­வ­தில் உள்ள பிரச்­சி­னைக்கு யோசனை ஒன்­றைத் தெரி­வித்­தார்.

பின்­தங்­கிய பகு­தி­க­ளில் உள்ள பாட­சா­லை­க­ளுக்கு ஆசி­ரி­யர்­களை நிய­மித்­தா­லும், தூர இடங்­க­ளைச் சேர்ந்த அவர்­கள் உட­ன­டி­யா­கவே இட­மாற்­றம் பெற்­றுச் சென்­று­வி­டு­கி­றார்­கள் என்­ப­தால் ஆசி­ரி­யர்­கள் அவ்­வாறு செல்­லத் தயங்­கும் பாட­சா­லை­களை மூடி­விட்டு நக­ரப்­புற பாட­சா­லை­க­ளை­யும் ஆசி­ரி­யர்­கள் வந்து செல்­லக்­கூ­டிய வச­தி­கள் உள்ள பாட­சா­லை­க­ளை­யும் மட்­டும் இயக்­கு­வதே இதற்­கான தீர்­வாக அமை­யும் என்று தெரி­வித்­தார் அமைச்­சர்.

http://newuthayan.com/story/35200.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.