Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாமலின் முன்னாள் செயலாளர் கைது

Featured Replies

நாமலின் முன்னாள் செயலாளர் கைது
 

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் முன்னாள் செயலாளர் படபொல ஆராச்சிலாகே ஓனெல்ல இரேஷா சில்வா, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ஷவின் 30 மில்லியன் ரூபாய் கறுப்புப் பணத்தை, நிறுவனமொன்றின் மூலம் மாற்றுவதற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவினரால் தேடப்பட்டு வந்த நிலையிலேயே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அபுதாபியில் கைது செய்யப்பட்ட இவர், இலங்கைக்கு இன்றுக்காலை  கொண்டுவரப்பட்ட போதை கைது செய்யப்பட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/நாமலின்-முன்னாள்-செயலாளர்-கைது/175-205254

  • தொடங்கியவர்

நாமலுக்கு சொந்தமான நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் கைது 

 

 

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு சொந்தமானது என்று கருதப்படும் நிறுவனம் ஒன்றின் முன்னாள் பணிப்பாளர் இரேசா சில்வா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Batapola-Arachchige-Oranella-Iresha-Silv

டுபாயில் இருந்து நாடு திரும்பிய வேளையில் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக் ஷ தெளி­ வு­ப­டுத்த முடி­யாத வழி­களில் சம்­பா­தித்­த­தாக கூற­ப்படும் 30 மில்­லியன் ரூபாவை வரை­ய­றுக்­கப்­பட்ட

கவர்ஸ் கோப்­ரேஷன் சேர்­விசர்ஸ் தனியார் நிறு­வனம் ஊடாக கறுப் 

புப் பண சுத்­தி­க­ரிப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­தி­ய­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள,

அவ­ரது செய­லா­ள­ராக கரு­தப்­படும் பட்­ட­பொல ஆரச்­சிகே ஒரெ­னெலா இரேஷா சில்வா அபு­தா­பியில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். 

கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு குற்றச் சாட்டில் பிர­தி­வா­தி­யாக கரு­த­ப்படும் மேற்­படி நாமலின் செய­லா­ள­ரான யுவதி, தொடர்ச்­சி­யாக நீதி­மன்றை புறக்­க­ணித்து வந்த நிலையில் அவ­ருக்கு எதி­ராக பிறப்­பிக்­கப்பட்­டி­ருந்த சிவப்பு அறி­வித்தல் பிர­காரம் இவ்­வாறு அபு­தா­பியில் வைத்து அந் நாட்டு காவல் துறை­யி­னரால் கைது செய்­யப்பட்­டுள்­ள­தா­கவும் இன்று முற்­பகல் அவர் இலங்­கைக்கு நாடு கடத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும் பாதுகாப்புத் துறையின் உயர் மட்ட தக­வல்கள் கேச­ரிக்கு தெரி­வித்­தன.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் முதலாம் திக­திக்கும் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் கொழும்பில் வைத்து, முறைப்­பாட்­டாளர் தரப்பு அறி­யாத பல­ருடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டி உழைக்­கப்பட்ட விதத்தை தெளி­வு­ப­டுத்த முடி­யாத வகையில் 30 மில்­லியன் ரூபாவை சம்­பா­தித்தன் ஊடாக கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு சட்­டத்தின் கீழ் குற்றம் ஒன்­றினை புரிந்­தமை, அதற்கு உதவி ஒத்­தாசை புரிந்­தமை உள்­ளிட்ட 11 குற்றச் சாட்­டுக்­களின் கீழ் நாமல் ராஜ­பக்ஷ உள்­ளிட்ட ஆறு பேருக்கு எதி­ராக சட்ட மா அதி­பரால் கொழும்பு மேல் நீதி­மன்றில் வழக்கு தொட­ரப்­பட்­டுள்­ளது.

 இந்த வழக்கில் நான்காம் பிர­தி­வாதி தற்­போது அபு­தா­பியில் கைது செய்­யப்பட்­டுள்ள பட்­ட­பொல ஆரச்­சிகே ஒரெ­னெலா இரேஷா சில்வா  ஆவார். இவர் குறித்த சர்ச்­சைக்­கு­ரிய வரை­ய­றுக்­கப்பட்ட கவர்ஸ் கோப்ரட் சேர்விஸ் தனியார் நிறு­வ­னத்தின் பங்­கு­தா­ர­ரா­கவும், பணிப்­பாளர் சபை உறுப்­பி­ன­ரா­கவும் செயற்­பட்­டுள்­ள­துடன் அந் நிறு­வ­னத்தின் செய­லா­ள­ரா­கவும் பதவி வகித்­த­தாக நிதிக் குற்றப் புல­ன­யவுப் பிரிவு விசா­ர­ணைகள் ஊடாக கண்­ட­றி­யப்பட்­டி­ருந்­தன.

 இது தொடர்பில் இரேஷா சில்வா தேடப்பட்டு வந்த நிலை­யி­லேயே, சிவப்பு அறி­வித்தல் பிரகாரம் அபு­தா­பியில் கைது செய்­யப்பட்­டுள்­ள­தா­கவும் இன்ரு அவர் இலங்­கைக்கு நாடு­க­டத்­தப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அறிய முடி­கின்­றது.

இத­னி­டையே எச்.சி.129/17 எனும் இலக்­கத்தின் கீழ் விசா­ரிக்­கப்பட்டு வரும் இந்த கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு வழக்கும் இன்று கொழும்பு 7 ஆம் இலக்க மேல் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. இரேஷா சில்­வ­ாவுக்கு மேல­தி­க­மாக இந்த கவர்ஸ் கோப்­ரடிஸ் சேர்­விசஸ் வழக்கில் முதல் பிர­தி­வா­தி­யாக நாமல் ராஜ­பக்ஷ பெய­ரி­டப்பட்­டுள்ள நிலையில் 2ஆம் 3 ஆம் பிரதிவாதிகளாக முறையே இந்திக பிரதாப் கருணாஜீவ, சுஜானி போகொல்லாகம ஆகியோரும் 5 ஆம் பிரதிவாதியாக  நித்திய சேனானி சமரநாயக்கவும் 6 ஆவது பிரதிவாதியாக வரையறுக்கப்பட்ட கவர்ஸ் கோப்ரடீஸ் சேர்விசஸ் தனியார் நிறுவனமும் பெயரிடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

http://www.virakesari.lk/article/25526

  • தொடங்கியவர்

நாமல் ராஜபக்ஸவிற்கு சொந்தமானது எனக் கூறப்படும் நிறுவனத்தின் பணிப்பாளர் இரேஷா டி சில்வா கைது

  • தொடங்கியவர்

நாமலின் முக்கியபுள்ளிக்கு பிணை 

 

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு சொந்தமானது என்று கருதப்படும் நிறுவனம் ஒன்றின் முன்னாள் பணிப்பாளர் இரேசா சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

Batapola-Oranella-Iresha-Silva.jpg

 

டுபாயில் இருந்து நாடு திரும்பிய வேளையில் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு சொந்தமானதெனக் கருதப்படும் கவர்ஸ் கோப்­ரேஷன் சேர்­விசர்ஸ் தனியார் நிறு­வனத்தின் பணிப்பாளரான  இரேசா சில்வா கைதுசெய்யப்பட்டார்.

 

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ தெளி­வு­ப­டுத்த முடி­யாத வழி­களில் சம்­பா­தித்­த­தாக கூற­ப்படும் 30 மில்­லியன் ரூபாவை வரை­ய­றுக்­கப்­பட்ட கவர்ஸ் கோப்­ரேஷன் சேர்­விசர்ஸ் தனியார் நிறு­வனம் ஊடாக கறுப்புப் பண சுத்­தி­க­ரிப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டுத்­தி­ய­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள. குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர்  கரு­தப்­படும் பட்­ட­பொல ஆரச்­சிகே ஒரெ­னெலா இரேஷா சில்வா அபு­தா­பியில் கைது செய்­யப்­பட்­டு நாடு கடத்தப்பட்டிருந்தார்.

 

இந்நிலையில் அவர் இன்று  முற்­பகல் இலங்­கைக்கு நாடு கடத்­தப்­ப­ட்டதையடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அவரை கைது செய்து நிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்திருந்தனர்.

இதையடுத்து நிதி குற்றவியல் புலனாய்வு பிரிவினர் அவரை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்த நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/25547

நாமலுக்கு கயிறு இறுகுகின்றது. அனேகமாக ஆள் கன காலத்துக்கு உள்ளே  போகப் போகின்றார்

நாமலின் பினாமியாக டுபாயில் என் சிங்கள நண்பர் ஒருவர் இருக்கின்றார். முகனூலில் இன்று மைத்திரி அரசுக்கு எதிராக கதறிக் கொண்டு இருக்கின்றார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, நிழலி said:

நாமலுக்கு கயிறு இறுகுகின்றது. அனேகமாக ஆள் கன காலத்துக்கு உள்ளே  போகப் போகின்றார்

நாமலின் பினாமியாக டுபாயில் என் சிங்கள நண்பர் ஒருவர் இருக்கின்றார். முகனூலில் இன்று மைத்திரி அரசுக்கு எதிராக கதறிக் கொண்டு இருக்கின்றார்

ஐரோப்பா அமெரிக்க நாடுகளிலையெல்லாம்  ஒரு ஆள் ஆறுமாதம் உள்ளுக்கை இருந்தாலே அவர்ரை ஆட்டம் குளோஸ்...அங்காலை ஒரு குண்டூசி கூட  கடனுக்கு வாங்கேலேலாத அளவுக்கு தனிமனித உரிமைகளை இறக்கி வைத்திருப்பார்கள்.
ஆனால் இலங்கை இந்திய  நாடுகளிலை இப்பிடியான பேர்வளிகள் ஆறுமாதம் உள்ளுக்கை இருந்து வெளியே வந்தால்....அதுவும் தாடியுடன் வந்தால் "தியாகி"

  • தொடங்கியவர்
காலையில் கைதான இரேஷாவுக்கு பகல் பிணை
 

பேரின்பராஜா திபான் 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரும் ஐக்கிய மக்கள் சுத்திரக் கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் கவர்ஸ் கோர்ப் நிறுவனத்தின் பணிப்பாளர்களுள் ஒருவரான, படபொல ஆராச்சிலாகே ஓனெல்ல இரேஷா சில்வா, நேற்று (10) கைது செய்யப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நேற்றையதினமே பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அபுதாபி நகரத்திலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட அவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால், நேற்றுக் காலை கைதுசெய்யப்பட்டு, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.   

நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, தனது சேவை பெறுநர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் பணிபுரிந்து வந்தார் என்றும் விஸா காலாவதியானதால் அவர் நாடுகடத்தப்பட்டார் என்றும் அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சம்பத் மென்டிஸ் நீதிமன்றத்தில் அறிவித்தார்.  

மேலும், இந்த வழக்கில் பிரதிவாதியாகப் பெயர்குறிப்பிடப்பட்டிருந்தமையை அறிந்த இரேஷா, நாட்டுக்கு வர முயன்றபோதும், ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலைக்கு வந்துள்ளமையால் அவருடைய கடவுச்சீட்டை வழங்க முடியாது என, அவர் பணியாற்றிய நிறுவனம் கூறியதாகவும் 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவருடைய விஸா காலவதியாகியுள்ளதாவும் குறிப்பிட்ட சட்டத்தரணி, அவருக்குப் பிணை வழங்குமாறு கோரினார்.  

அதற்குரிய ஆவணங்கள், நீதிபதி பியசேன ரணசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டன. இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜராகியிருந்த சிரேஷ்ட அரச சட்டத்தரணி பத்மால் வீரசேகர, ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.  

இதனையடுத்து, இரேஷா சில்வாவை, 5 இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையொன்றிலும் செல்ல அனுமதியளித்த நீதிபதி பியசேன ரணசிங்க, மாதாந்தம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.  

மேலும், அவருடைய கடவுச்சீட்டை முடக்குமாறு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.  

2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில், நாமல் எம்.பிக்குச் சொந்தமான கவர்ஸ் கோர்ப் நிறுவனத்தின் பங்குகளை விற்று, 30 மில்லியன் ரூபாய் பணச்சலவையில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.   

அந்நிறுவனத்தின் உரிமையாளரான நாமல் ராஜபக்‌ஷ, பணிப்பாளர்களான இந்திக பிரபத் கருணாஜீவ, சுஜானி போகொல்லாகம, இரேஷா சில்வா, சேனானி சமரநாயக்க ஆகிய ஐவருக்கு எதிராகவும் கவர்ஸ் கோர்ப் நிறுவனத்துக்கு எதிராகவுமே வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  

இந்திக பிரபத் கருணாஜீவ, இரேஷா சில்வா ஆகிய இருவரும் தலைமறைவாகியிருந்த நிலையில், இன்டர்போலினூடாக, அவர்களுக்கு சர்வதேசப் பிடியாணை பிறப்பித்து, கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட சில ஆவணங்களை, நேற்றைய தினம் தமக்குத் தருவதாக முறைப்பாட்டாளர் தரப்பு அறிவித்திருந்ததாகவும் அவை வழங்கப்படாவிடின், சாட்சியப்பதிவுகளின் போது, தமக்குப் பாதகமாக அமையக் கூடும் என, நாமல் எம்.பி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்கவும் சட்டத்தரணி சம்பத் மென்டிஸும் கோரி நின்றனர்.  

அந்த ஆவணங்களை, அடுத்த அமர்பில் தாம் வழங்க எதிர்பார்ப்பதாக அறிவித்த சிரேஷ்ட அரச சட்டத்தரணி பத்மால் வீரசேகர, அதற்கொரு தினத்தை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.  

அதற்கான தினமாக, இம்மாதம் 31ஆம் திகதியை அறிவித்த நீதிபதி, இந்த வழக்கின் சாட்சியப்பதிவுக்கான தினங்களாக அடுத்தவருடம் பெப்ரவரி 16 மற்றும் 20ஆம் திகதிகளைக் குறித்தார். 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/காலையில்-கைதான-இரேஷாவுக்கு-பகல்-பிணை/150-205322

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.