Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பல்கலையில் திறந்த கலந்துரையாடல்

Featured Replies

யாழ்.பல்கலையில் திறந்த கலந்துரையாடல்

 

புதிய அரசியல் யாப்பின் இடைக்கால வரைபு தொடர்பான திறந்த கலந்துரையாடல் ஒன்று இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடல் யாழ்ப்பாணம் – கைலாசபதி கலையரங்கில் காலை நடைபெறவுள்ளது.

யாழ்.பல்கலையில் திறந்த கலந்துரையாடல் 

கலந்துரையாடலை யாழ்ப்பாணம் கல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறும் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு  விடுத்துள்ளனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Interim-Plan-Constitution-Open-Discussion-Jaffna

  • தொடங்கியவர்

யாழ்.பல்கலையில் ஆரம்பமானது அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடல்

 

உத்தேச அரசியலமைப்பு தொடர்பிலான கலந்துரையாடல் யாழ்.பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

யாழ்.பல்கலையில் ஆரம்பமானது அரசியலமைப்பு தொடர்பான கலந்துரையாடல்

இந்த மாநாட்டில் தெரிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பிலான மேலதிக தகவல்கள் தொடர்ந்து பதிவிடப்படும்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/The-Constitutional-Discussion-started-in-Jaffna

  • தொடங்கியவர்

தமிழர்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி வாக்கெடுப்பு நடத்த முடியும்

 

புதிய யாப்புக்கான இடைக்கால அறிக்கை தமிழர்களுக்கு எதுவுமில்லை, நிராகரிப்பதைத் தவிர வேறு வழியில்லையென யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் கூறப்பட்டுள்ளதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ் பல்கலைக்கழக அசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடைக்கால அறிக்கை தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் தொடர்பாக சந்தேகம் எழுப்பப்பட்டன. அரசியல் விஞ்ஞானத்துறை தலைவர் கலாநிதி கே.ரி.கணேசலிங்கம், ஊடகத்துறை விரிவுரையாளர் கலாநிதி ரகுராம், சட்டத்துறை விரிவுரையாளர் கலாநிதி குமாரவேல் குருபரன் ஆகியோர் பொதுமக்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தனர்.

அரசியலமைப்பின் ஒன்பதாவது திருத்தத்தை மீறாமல் வடக்கு கிழக்கு மக்கள், தங்கள் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கான வாக்கெடுப்பை கோர முடியும் என கலாநிதி குமாரவேல் குருபரன் தெரிவித்தார். குறிப்பாக தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு என்று கூறாமல், மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி ஒருமித்த குரலோடு எடுத்துக் காட்டுவதற்கான வாக்கெடுப்பு ஒன்றை நடத்த முடியும் என அவா் சுட்டிக்காட்டினார்.

கற்றலோனி, குர்திஸ்த்தான் மக்கள் சுதந்திர தாயகத்தை மீட்டெடுப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தியது போன்று தமிழர்களும் அவ்வாறான வாக்கெடுப்பு ஒன்றை நடத்த முடியுமா என எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

அதேவேளை ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி என்பது கிடையாது. ஆனால் தமிழரசுக் கட்சி அவ்வாறு கூறுவதாகவும் இடைக்கால அறிக்கையில் இனப்பிரச்சினை தீர்வுக்கான பிரத்தியேகமான அம்சம் எதுவும் இல்லை என்றும் குருபரன் மேலும் கூறினார். ஒற்றையாட்சியைத்தான் இடைக்கால அறிக்கை தாங்கி நிற்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழரசுக் கட்சி சுயாட்சி என்ற கோட்பாட்டை கைவிட்டுள்ளது என்று கலாநிதி கணேசலிங்கம் தெரிவித்தார். இடைக்கால அறிக்கையை அடியோடு நிராகரிக்க வேண்டும் என்றும் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பிரத்தியேகமான முறையில் தமிழர்களுடன் பேசி வரைபை தயாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஆனால் தமிழரசுக் கட்சியுடன் கூட பேச்சுக்கள் நடத்தப்படவில்லை என்றும் தமிழர்களுடன் தனித்துவமான பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை அரசாங்கமே செய்ய வேண்டும் என்றும் கலாநிதி கணேசலிங்ம் கூறினார்.

இடைக்கால அறிக்கை வெறுமனே பரிந்துரை மாத்திரமே. அந்த விதப்புரைகளில் கூட பல விடங்களில் அரசாங்கம் உடன்படவில்லை என்று காநிதி ரகுராம் தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாட்டை விமர்ச்சித்த ரகுராம் இடைக்கால அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் ஒவ்வொன்றையும் விரிவாக அலசி ஆராய்ந்தார்.

ஒவ்வொரு கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் யோசகைகள் மாத்திரமே இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளன. அவை நகல் சட்டமூலம் அல்ல என்று ரகுராம் விளக்கமளிக்கும்போது கூறினார். இங்கு கேள்வி எழுப்பிய பொதுமக்கள், நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சித்ததாகவும் தமிழரசுக் கட்சி மீது குற்றம் சுமத்தியதாகவும் ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

சுமார் இரண்டு மணித்தியாளமாக இடம்பெற்ற கருத்தரங்கில் பல் துறைசார்ந்தவர்களும் கலந்துகொண்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார். இடைக்கால அறிக்கையை நிராகரிப்பததுடன் மாத்திரம் நில்லாது அடுத்த கட்டாமாக பொது மக்கள் வழிப்படைந்து நல்ல தலைவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்ற கருத்துக்கள் கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டன.

தமிழ் தலைமைகளை இனிமேலும் நம்புவதால் எந்தப் பயனும் இல்லையென கலந்துரையாடலில் கலந்துகொண்ட பொதுமக்கள் பலரும் உணர்வுபூர்வமாக கருத்து வெளியிட்டதாகவும், அனேகமான மக்கள் தமிழர் தாயகத்தை வலியுறுத்தி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்ததாகவும் ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரித்தார்.

அதேவேளை அரசியலமைப்பின் ஒன்பதாவது திருத்தம் தனிநாட்டுக் கோரிக்கைக்கு எதிரானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://news.ibctamil.com/ta/politics/Political-discussion

jaffnauniversity.jpg

இடைக்கால அறிக்கையால் தமிழர்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பதால் அதனை நிராகரிப்பதே மேல் எனவும், தமிழர் தமது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி பொதுவாக்கெடுப்பை நடத்த முடியும் எனவும் யாழ். பல்கலைக்கழக ஒன்றுகூடலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நேற்று யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இடைக்கால அறிக்கை தொடர்பான கலந்துரையாடல் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அரசியல் விஞ்ஞானத்துறை தலைவர் கலாநிதி கே.ரி.கணேசலிங்கம், ஊடகத்துறை விரிவுரையாளர் கலாநிதி ரகுராம், சட்டத்துறை விரிவுரையாளர் கலாநிதி குமாரவேல் குருபரன் ஆகியோர் பொதுமக்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்தனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய மூவருமே இடைக்கால அறிக்கையை முழுமையாக நிராகரிக்கவேண்டுமென உரையாற்றியிருந்தனர்.

சட்டத்துறை விரிவுரையாளர் குருபரன் கருத்துத் தெரிவிக்கையில், இடைக்கால அறிக்கையானது முற்றுமுழுதாக ஒற்றையாட்சியையே தாங்கி நிற்பதாகவும் அதில் சமஷ்டி ஆட்சி முறைக்கான எந்தவொரு பண்புக்கூறுகளும் இணைக்கப்படவில்லையெனத் தெரிவித்தார்.

மேலும், தமிழ் மக்கள், அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்தை மீறாமல் வடக்கு கிழக்கு மக்கள், தங்கள் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கைக்கான வாக்கெடுப்பை கோர முடியும் எனவும் தனிநாட்டுக்கான வாக்கெடுப்பு என்று கூறாமல், மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி ஒருமித்த குரலோடு எடுத்துக் காட்டுவதற்கான வாக்கெடுப்பு ஒன்றை நடத்த முடியும் என அவா் சுட்டிக்காட்டினார்.

கற்றலோனி, குர்திஸ்த்தான் மக்கள் சுதந்திர தாயகத்தை மீட்டெடுப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தியது போன்று தமிழர்களும் அவ்வாறான வாக்கெடுப்பு ஒன்றை நடத்த முடியுமா என எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், அரசியல் விஞ்ஞானத்துறை தலைவர் ஜிரி.கணேசலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியானது சுயாட்சிக் கோரிக்கையைக் கைவிட்டுவிட்டதெனக் குற்றஞ்சாட்டியஅவர், இடைக்கால அறிக்கையை முழுமையாக நிராகரிக்கவேண்டுமெனத் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=81056

 

இதுபோன்ற கலந்துரையாடல்கள் அடிக்கடி நடைபெறுவது ஆரோக்கியமானது.

  • தொடங்கியவர்

யாழ் பல்கலைச் சமூகத்தின் கருத்துக்கள், தமிழரசுக் கட்சிக்கு விழுந்த மரண அடி

 

இடைக்கால அறிக்கையில் எதுவும் இல்லையெனவும் அதனை நிராகரிக்க வேண்டும் என்றும் யாழ் பல்கலைக்கழக கல்விச் சமூகம் முன்வைத்த கருத்துக்கள், தமிழரசுக் கட்சிக்கு விழுந்த மரண அடி என அரசியல் பத்தி எழுத்தாளர்கள் கூறுவதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ் பல்கலைச் சமூகத்தின் கருத்துக்கள், தமிழரசுக் கட்சிக்கு விழுந்த மரண அடி

யாழ் பல்கலைக்கழகத்தில் நேற்று புதன்கிழமை முற்பகல் இடம்பெற்ற இடைக்கால அறிக்கை தொடர்பான கலந்துரையாடலில் இடைக்கால அறிக்கையில் உள்ள பரிந்துரைகள், யோசனைகள் குறித்து கடுமையான எதிர் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

1972- 78 ஆம் ஆண்டுகளின் அரசியல் யாப்புக்களை எதிர்த்த, அன்றைய தமிழ் தலைமைகள், இன்று நல்லாட்சி என்ற புனைபெயரில், இனவாத முகம் காட்டிக் கொண்டிருக்கும் அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் யாழ் பல்கலைக்கழ கல்விச் சமூகம் முன்வைத்த கருத்துக்களை, தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் வரிக்கு வரி படித்துப் பார்த்து எதிர்கால அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அரசியல் பத்தி எழுத்தாளர்கள் வலியுறுத்தியுள்ளதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் ஆறாவது திருத்தச்சட்டம் பிரிவினைக்கு எதிரானது. அதனால் மக்கள் தனிநாடு என்று கோராமல், தங்கள் சுயநிர்ணய உரிமையை வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் வலியுறுத்தலாம் என சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவேல் குருபரன் சுட்டிக்காட்டியமை நல்ல உதாரணம்.

ஆகவே, அவ்வாறான வாக்கெடுப்பின் மூலம், 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான அரசியல் சூழலில் தமிழர்கள் பிரிவினையைக் கோரவில்லை எனவும் ஆனால் தாயகம், தேசியம் என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்ற செய்தியை சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்த முடியும் என்றும் அரசியல் பத்தி எழுத்தாளர்கள் கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

புதிய அரசியல் யாப்புக்கான வழிகாட்டல் குழுவின் கூட்டத்தில் வடக்கு கிழக்கு இணைப்பு சமஷ்டி பற்றி சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்திக் கூறவில்லை என்றும், பெரும்பான்மைக் கட்சிகளின் யோசனைக்கு உடன்பட்டுவிட்டனர் என்றும் அமைச்சர் மனோ கணேசன் லண்டனில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

இந்த நிலையில், தமிழரசுக் கட்சியின் அரசியல் செயற்பாடுகள் பற்றிய நேர்மையற்ற தன்மைகள், அம்பலப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டிய அரசியல் பத்தி எழுத்தாளர்கள், யாழ் பல்கலைக்கழக கல்விச் சமூகம் முன்வைத்த கருத்துக்களை உணர்ந்து மக்கள், அரசியல் ரீதியாக விழிப்படைய வேண்டும் என்று கூறியதாகவும் ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் யாழ் பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர், கலாநிதி கேரி.ரி.கணேசலிங்கம், ஊடகத்துறை கற்கைநெறியின் தலைவர், கலாநிதி எஸ்.ரகுராம், சட்டத்துறைத் தலைவர், கலாநிதி குமாரவேல் குருபரன் ஆகியோர் விளக்கமளித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/politics/Death-blow

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.