Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருசில சாட்சிகளுக்காக வேறு நீதிமன்றுக்கு வழக்கு மாறுவது சட்டப்படி கண்டனத்துக்குரியது

Featured Replies

அரசியல் கைதிகள் குறித்த கேள்வியும் முதலமைச்சரின் பதிலும்…

ஊடகவியலாளர்களின் கேள்விக்கான முதலமைச்சரின் பதில்

vikki-300x180.jpg
பதில் : இரண்டு விடயங்கள் உண்டு. ஒன்று பொதுவானது. மற்றது பிரத்தியேகமானது. அதாவது தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் உடனே பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது பொதுவான கோரிக்கை. அது பயங்கரவாதத் தடைச்சட்டத்துடன் தொடர்புடையது. ஜெனிவாவில் பல வருடங்களுக்கு முன்னரே ஐ.நாவுக்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனே கைவாங்குவதாக உறுதி மொழி கொடுத்த இலங்கை இன்னமும் அதைச் செய்யவில்லை. அதனைக் கைவாங்கி விட்டால் அதன் கீழ் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களை உடனே பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுங்கள் என்று கோருவது இலகுவாய் இருந்திருக்கும். ஏனென்றால் எமது வழக்கமான சட்ட ஏற்பாடுகளுக்கு முரணான ஷரத்துக்களே குறித்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் இது காறும் இருந்து வந்துள்ளன. அவற்றின் அடிப்படையிலேயே பெரும்பான்மையான கைதிகள் இதுவரையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளனர். அதாவது எமது வழமையான சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணான விதத்திலேயே அவர்கள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளார்கள்.

இங்கு தான் நான் கூறிய பிரத்தியேகமான இரண்டாம் விடயம் வருகிறது. அதாவது தற்பொழுது அநுராதபுரத்தில் விளக்கத்திற்காக அநுராதபுர சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் பிரச்சனை. முன்னையது பொது என்றால் இது குறிப்பிட்ட கைதிகளோடு தொடர்புடையது.

2009ல் இருவர் கைது செய்யப்பட்டு 2012 வரையில் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தொடர்ந்து மறியலில் வைத்திருக்கப்பட்டார்கள். மூன்றாம் நபரைக் கைது செய்த பின் 2012ல் குற்றச்சாட்டுப் பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐம்பது தடவைகளுக்கு மேல் வழக்கு தவணை கொடுக்கப்பட்டு ஈற்றில் மூன்று நாட்களுக்கு தொடர் விளக்கம் வவுனியா மேல் நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டு வழக்கு தொடங்கவிருக்கும் நேரத்தில் அநுராதபுரத்திற்கு மாற்றுமாறு சட்டத்துறை தலைமை அதிபதி ஆணை வழங்கியுள்ளார்கள். இது ஒரு பொறுப்பற்ற செயலாகத் தென்படுகிறது. உண்மையில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி வேண்டாவெறுப்பாகத்தான் உத்தியோகபூர்வ கட்டாயத்தின் நிமித்தம் வழக்கை அநுராதபுரத்திற்கு மாற்றினார். காரணங்கள் கூறப்படாவிட்டாலும் சாட்சிகள் பயமுறுத்தப்பட்டதாலேயே இவ்வாறு மாற்றியதாகக் கூறப்படுகின்றது.

சட்டப்படி சாட்சிகளுக்காக வழக்கை இன்னொரு நீதி மன்றத்திற்கு மாற்றுவது கண்டனத்திற்குரியது. சாட்சிகளைப் பொலிசாரே மன்றுக்குக் கொண்டுவந்து திரும்பவும் கொண்டு போய் அவர்கள் வதிவிடங்களில் சேர்ப்பிக்க முடியும். ஒன்றரை இலட்சம் படையினர் வடமாகாணத்தில் குடி கொண்டிருக்கும் போது சாட்சிகள் பயந்துவரத் தயங்குகின்றார்கள் என்பது எனக்கு ஒரு நொண்டிச்சாட்டாகவே தென்படுகிறது.

மருத்துவ மனையில் இருந்து கொண்டே இது பற்றி ஆராய்ந்தேன். எனக்குக் கிடைத்த தகவல்களின் படி போர் முடிவடையும் தறுவாயில் முன்னரே கைது செய்து வைத்திருக்கப்பட்ட சிலரை விடுதலைப்புலிகள் கொன்றார்கள் என்றும் அதனுடன் இந்த குறிப்பிட்ட கைதிகள் தொடர்புபட்டிருந்தார்கள் என்பதே அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை என்று தெரிய வந்துள்ளது. அத்துடன் கைதில் இருக்கும் வேறு சில கைதிகள் அரச சாட்சிகளாக மாறி குறித்த கைதிகளுக்கு எதிராகச் சாட்சியம் கூறினால் விடுதலை கிடைக்கும் என்று அவர்களுக்குக் கூறப்பட்டதாகத் தெரிகின்றது. அப்படியெனில் அரச சாட்சிகளாகமாறிய இந்த மூன்று தமிழ்ச் சாட்சிகள் பற்றியே அரசுக்கு கரிசனை போலத் தெரிகிறது. இங்கு அரசியல் கலந்திருப்பதை நான் காண்கின்றேன். நடந்ததோ இல்லையோ எப்படியாவது விடுதலைப்புலிகள் கடைசிக் கட்டத்தில் தம்வசம் இருந்த சிறைக்கைதிகளைச் சுட்டுக்கொன்றார்கள் என்பது நீதிமன்றத்தில் நிரூபணமாகிவிட்டால் படையினர் செய்த அட்டூழியங்களுக்குச் சமனாகப் புலிகளும் யுத்த குற்றங்களில் ஈடுபட்டிருந்தனர் என்று சர்வதேச அரங்குகளில் இலங்கை அரசாங்கம் கூறமுடியும். இதனால்த்தான் வேறு கைதிகளையே அரச சாட்சிகளாக்கி தமக்கு வேண்டிய ஒரு முடிவை குறித்த வழக்கில் கொண்டுவர அரசு பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகின்றது. இவை என்னுடைய ஊகமே ஒளிய முழுமையான தரவுகள் எனக்கு இன்னமுந்தரப்படவில்லை.

சாட்சிகள் வவுனியா வரப் பயப்படுகின்றார்கள் என்றால் யார் யார் என்னமாதிரியான பயமுறுத்தல் காரணமாக அங்கு வரப் பயப்படுகின்றார்கள் என்று சட்டத்துறை தலைமையதிபதிக்கு சத்தியக் கடதாசிகள் கையளித்துள்ளார்களா என்பதை அவர் வெளிப்படுத்த வேண்டும்.

குறித்த தமிழ் அரச சாட்சிகள் தமிழ்ப் பிரதேச நீதிமன்றத்தில் தமிழ் நீதிபதி முன்னிலையில் சுதந்திரமாக சாட்சியமளிக்க முடியும். அவ்வாறு சாட்சியமளிக்கும் போது தம்மிடம் இருந்து எவ்வாறு சாட்சியங்களுக்கான விபரங்களை அரச தரப்பு பெற்றுக்கொண்டது என்பதை அவர்கள் வெளிப்படுத்தி விடுவார்களோ என்ற பயமே வழக்கை அநுராதபுரத்திற்கு மாற்றியமைக்கான காரணம் என நான் யூகிக்கின்றேன். உண்மை வெளிவந்தால் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி வழக்கைத் தூக்கி எறியத் தயங்க மாட்டார் என்பது சட்டத்துறைத் தலைமை அதிபதிக்குத் தெரியும்.

மேலும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்கள் வளமையான சட்டத்திற்குப் புறம்பாக, தருணத்திற்கு ஏற்றவாறு கொண்டுவரப்பட்ட மிகக் கேவலமான சாட்சியம் என்றே உச்ச நீதிமன்ற நீதியரசர் விக்னேஸ்வரன் உள்ளடங்களாக நீதிபதிகள் பலர் கணித்து வந்துள்ளனர். நாகமணி வழக்கில் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்கள் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை மட்டுமே சாட்சியமாக வைத்து ஒருவரைக் குற்றவாளியாக்குவது மிகவும் ஆபத்தானது என்று குறிப்பிட்டுள்ளார். ஆகவே குறித்த ஒப்புதல் வாக்குமூலங்களில் நடந்ததாகக் கூறப்படும் முக்கிய விடயங்கள் சம்பந்தமாக அனுசரணைச் சாட்சியமும் பெறப்படவேண்டும் என்று கூறியிருந்தார். இவற்றை சில நீதிமன்றங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. பல ஏற்றுக்கொள்ளவில்லை. மேற்படி தமிழ் அரச சாட்சிகளின் சாட்சியம் முரணாக இருந்தால்க்கூட வெறுமனே குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களை வைத்து கைதிகளைக் குற்றவாளிகள் ஆக்கிவிடலாம் என்றே அரசு கருதுகின்றது. இதனால்த்தான் வெறும் குற்ற ஒப்புதல் வாக்கு மூலங்களை மட்டும் வைத்து குற்றவாளிகளாக்கிக் கொண்டிருக்கும் நீதிமன்றங்களுக்கு மாற்றுவதை உசிதமென அரசாங்கமும் அதன் சட்டத்துறைத் தலைமையதிபதியும் எண்ணுகின்றார்கள் போல் தெரிகின்றது.

எது எவ்வாறு இருப்பினும் இவ்வாறான மாற்றுதல் கைதிகளின் மனித, சட்ட உரிமைகளைப் பாதிக்கின்றன. சட்டத்துறைத் தலைமையதிபதி புறநிலை  வைத்தே இவ்வாறான வழக்குகளை நோக்கவேண்டுமேயொழிய அக நிலையில் இருந்து நோக்குவது கண்டிக்கத்தக்கது.

http://globaltamilnews.net/archives/44911

  • தொடங்கியவர்
‘வழக்கை அநுராதபுரத்துக்கு மாற்ற பயமே காரணம்’
 

image_8119b8323d.jpg

“தமிழ் அரச சாட்சிகள் தமிழ்ப் பிரதேச நீதிமன்றத்தில் தமிழ் நீதிபதி முன்னிலையில் சுதந்திரமாக சாட்சியமளிக்க முடியும். அவ்வாறு சாட்சியமளிக்கும்போது தம்மிடம் இருந்து எவ்வாறு சாட்சியங்களுக்கான விபரங்களை அரச தரப்பு பெற்றுக்கொண்டது என்பதை அவர்கள் வெளிப்படுத்தி விடுவார்களோ என்ற பயமே வழக்கை அநுராதபுரத்துக்கு மாற்றியமைக்கான காரணம் என நான் யூகிக்கின்றேன்” என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள ஊடக அறிக்கையில்,

“ஜெனீவாவில் பல ஆண்டுகளுக்கு முன்னரே ஐ.நாவுக்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனே கைவாங்குவதாக உறுதிமொழி கொடுத்த இலங்கை இன்னமும் அதைச் செய்யவில்லை. அதனைக் கைவாங்கி விட்டால் அதன் கீழ் குற்றவாளிகளாக காணப்பட்டவர்களை உடனே பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுங்கள் என்று கோருவது இலகுவாய் இருந்திருக்கும். ஏனெனில், எமது வழமையான சட்ட ஏற்பாடுகளுக்கு முரணாகவுள்ள பயங்கரவாதத் தடை சட்டத்தின் சரத்துகளின் கீழேயே பெரும்பாலான கைதிகள் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளனர்” என சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது அநுராதபுரத்தில் உண்ணாவிரதமிருக்கும் கைதிகளின் வழக்கு, வவுனியா மேல் நீதிமன்றத்தில் தொடங்கவிருக்கும் நேரத்தில், வழக்கை அநுராதபுரத்துக்கு மாற்றுமாறு சட்டமா அதிபர் ஆணை வழங்கியுள்ளமையானது பொறுப்பற்ற செயலொன்றாகத் தென்படுகிறது எனக் கூறியுள்ள சி.வி. விக்னேஸ்வரன், சாட்சிகள் பயமுறுத்தப்பட்டதாலேயே இவ்வாறு மாற்றியதாகக் கூறப்படுகின்ற நிலையில், சட்டப்படி சாட்சிகளுக்காக வழக்கை இன்னொரு நீதிமன்றத்துக்கு மாற்றுவது கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.  

மேலும் கருத்துத் தெரிவித்த சி.வி. விக்னேஸ்வரன், “எனக்குக் கிடைத்த தகவல்களின் படி, போர் முடிவடையும் தறுவாயில் முன்னரே கைது செய்து வைத்திருக்கப்பட்ட சிலரை விடுதலைப்புலிகள் கொன்றார்கள் என்றும் அதனுடன் இந்த குறிப்பிட்ட கைதிகள் தொடர்புபட்டிருந்தார்கள் என்பதே அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை என்று தெரிய வந்துள்ளது. அத்துடன் சில கைதிகள் அரச சாட்சிகளாக மாறி குறித்த கைதிகளுக்கு எதிராகச் சாட்சியம் கூறினால் விடுதலை கிடைக்கும் என்று அவர்களுக்குக் கூறப்பட்டதாகத் தெரிகின்றது.

இங்கு அரசியல் கலந்திருப்பதை நான் காண்கிறேன். நடந்ததோ இல்லையோ எப்படியாவது விடுதலைப் புலிகள் கடைசிக் கட்டத்தில் தம்வசம் இருந்த சிறைக் கைதிகளைச் சுட்டுக் கொன்றார்கள் என்பது நீதிமன்றத்தில் நிரூபணமாகிவிட்டால் படையினர் செய்த அட்டூழியங்களுக்குச் சமனாகப் புலிகளும் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டிருந்தனர் என்று சர்வதேச அரங்குகளில் இலங்கை அரசாங்கம் கூறமுடியும். இதனால்தான் வேறு கைதிகளையே அரச சாட்சிகளாக்கி தமக்கு வேண்டிய ஒரு முடிவை குறித்த வழக்கில் கொண்டுவர அரசு பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகின்றது” என மேலும் கூறியுள்ளார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வழக்கை-அநுராதபுரத்துக்கு-மாற்ற-பயமே-காரணம்/71-205424

 

  • தொடங்கியவர்

புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என நிரூபிக்கவே அரசு செயற்படுகிறது

 

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் தடுத்துவைத்திருந்த சிறைக்கைதிகளை கொலை செய்தார்கள் என்பதை நிரூபித்து ஸ்ரீலங்கா இராணுவம் உட்பட அரச படையினருக்கு  நிகராக அவர்களும் யுத்த குற்றங்களில் ஈடுபட்டார்கள்  என்று சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் நிரூபிக்கும் சதி முயற்சிகளில் ஸ்ரீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்  சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என நிரூபிக்கவே அரசு செயற்படுகிறது

இதனை அடிப்படையாக கொண்டே அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டள்ள தமிழ் அரசியல் கைதிகளை் உட்பட அரசியல் கைதிகளை விடுவிக்காது ஸ்ரீலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்துவருவதாகவும்  வட மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று தற்போது ஓய்வில் இருக்கும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் ஊடகவியலாளர்கள் எழுத்துமூலம் கேட்ட கேள்விகளுக்கு அவர் எழுத்துமூலம் அளித்துள்ள பதில்களிலேயே இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்காவில் தொடர்ந்தும் நடைமுறையிலுள்ள மிகவும் கொடூரமான சட்டமாகக் கருதப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்தை கைவிடுவதாக ஐக்கிய நாடுகள் சபைக்கு வாக்குறுதி வழங்கிய ஸ்ரீலங்கா அரசாங்கம் அந்த வாக்குறுதியை இதுவரையில் நிறைவேற்றவில்லை எனவும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருந்தால்  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் வாடும் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு  கோரிக்கை விடுவது இலகுவாக இருந்திருக்கும்  எனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சுலக்சன் உட்பட தமிழ் அரசியல் கைதிகள் மூவரினதும் வழக்குகளை வவுனியாவில் இருந்து அநுராதபுர நீதிமன்றத்திற்கு மாற்ற முற்படுவதில் பாரிய சதித் திட்டமொன்று இருப்பதாகவும் முதலமைச்சர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இதனாலேயே ஒன்றரை இலட்சம் படையினர் வடமாகாணத்தில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்,  சாட்சியாளர்களுக்கு பாதுகாப்பில்லை என தெரிவித்து தமிழ் பிரதேசங்களில் இருந்து சிங்களப் பிரதேசங்களுக்கு வழக்குகளை மாற்ற முனைந்துள்ளதாகவும் முதலமைச்சர் சாடியுள்ளார்.  

தமிழ் அரச சாட்சிகள் தமிழ்ப் பிரதேச  நீதிமன்றத்தில் தமிழ் நீதிபதி முன்னிலையில் சுதந்திரமாக சாட்சியமளிக்க  முடியும் என்று கூறும் அவர், அவ்வாறு சாட்சியளிக்கப்படும் பட்சத்தில் தம்மிடம் இருந்து எவ்வாறு சாட்சியங்களுக்கான விபரங்களை அரச தரப்பு பெற்றுக் கொண்டது என்பதை அவர்கள் வெளிப்படுத்தி  விடுவார்களோ  என்ற  பயமே  வழக்கை  அநுராதபுர  நீதிமன்றிற்கு மாற்றியமைக்கான  காரணம் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

போர் முடிவடையும் தறுவாயில், முன்னரே கைது செய்து வைத்திருந்த சிலரை தமிழீழ விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்று நிரூபிப்பதற்காகவே குறிப்பிட்ட தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இந்த அரசியல் கைதிகள் மீதான இவ்வாறான பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு தடுப்பில் இருக்கும் வேறு சில கைதிகளை அரச சாட்சிகளாக மாற்றி குறித்த கைதிகளுக்கு எதிராகச் சாட்சியம் கூறினால் விடுதலை கிடைக்கும் என்று அவர்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தமக்குத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் அதிர்ச்சித் தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.

எப்படியாவது தமிழீழ விடுதலைப் புலிகள் கடைசிக் கட்டத்தில் தம்வசம் இருந்த சிறைக்கைதிகளைச் சுட்டுக்கொன்றார்கள் என்பதை நீதிமன்றத்தில் நிரூபணமாகிவிட்டால் அரச படையினர் செய்த அட்டூழியங்களுக்குச் சமனாகப் தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டிருந்தனர் என்று சர்வதேச அரங்குகளில் கூற முடியும் என ஸ்ரீலங்கா  அரசாங்கம் கருதுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனாலேயே தடுப்பில் இருக்கும் தமிழ் கைதிகளை அரச சாட்சிகளாக்கி தமக்கு வேண்டிய ஒரு முடிவை குறித்த வழக்கில் கொண்டுவர ஸ்ரீலங்கா அரசு கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் வட மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

https://news.ibctamil.com/ta/internal-affairs/north-cm-press-release

cm-colombo-press-1.jpg

இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் தம்மிடமுள்ள கைதிகளை படுகொலை செய்தார்கள் என நிரூபித்து அதன்மூலம் அவர்களும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டனர் என்பதை நிரூபிக்கவே அரசாங்கம் இத்தகைய சதிவேலையை ஆரம்பித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனை அடிப்படையாக வைத்தே குறித்த கைதிகள் அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கு மின்னஞ்சல் மூலம் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள சுலக்சன் உட்பட தமிழ் அரசியல் கைதிகள் மூவரினதும் வழக்குகளை வவுனியாவில் இருந்து அநுராதபுர நீதிமன்றத்திற்கு மாற்ற முற்படுவதில் பாரிய சதித் திட்டமொன்று இருப்பதாக சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இதனாலேயே ஒன்றரை இலட்சம் படையினர் வடமாகாணத்தில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில்,  சாட்சியாளர்களுக்கு பாதுகாப்பில்லை என தெரிவித்து தமிழ் பிரதேசங்களில் இருந்து சிங்களப் பிரதேசங்களுக்கு வழக்குகளை மாற்ற முனைந்துள்ளதாகவும் முதலமைச்சர் சாடியுள்ளார்.

தமிழ் அரச சாட்சிகள் தமிழ்ப் பிரதேச  நீதிமன்றத்தில் தமிழ் நீதிபதி முன்னிலையில் சுதந்திரமாக சாட்சியமளிக்க  முடியும் என்று கூறும் அவர், அவ்வாறு சாட்சியளிக்கப்படும் பட்சத்தில் தம்மிடம் இருந்து  எவ்வாறு  சாட்சியங்களுக்கான  விபரங்களை  அரச தரப்பு  பெற்றுக் கொண்டது என்பதை அவர்கள் வெளிப்படுத்தி  விடுவார்களோ  என்ற  பயமே  வழக்கை அநுராதபுர  நீதிமன்றிற்கு மாற்றியமைக்கான காரணம் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

போர் முடிவடையும் தறுவாயில், முன்னரே கைது செய்து வைத்திருந்த சிலரை தமிழீழ விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்று நிரூபிப்பதற்காகவே குறிப்பிட்ட தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இந்த அரசியல் கைதிகள் மீதான இவ்வாறான பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு தடுப்பில் இருக்கும் வேறு சில கைதிகளை அரச சாட்சிகளாக மாற்றி குறித்த கைதிகளுக்கு எதிராகச் சாட்சியம் கூறினால் விடுதலை கிடைக்கும் என்று அவர்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தமக்குத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் அதிர்ச்சித் தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.

எப்படியாவது தமிழீழ விடுதலைப் புலிகள் கடைசிக் கட்டத்தில் தம்வசம் இருந்த சிறைக்கைதிகளைச் சுட்டுக்கொன்றார்கள் என்பதை நீதிமன்றத்தில் நிரூபணமாகிவிட்டால் அரச படையினர் செய்த அட்டூழியங்களுக்குச் சமனாகப் தமிழீழ விடுதலைப் புலிகளும் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டிருந்தனர் என்று சர்வதேச அரங்குகளில் கூற முடியும் என ஸ்ரீலங்கா  அரசாங்கம் கருதுவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனாலேயே தடுப்பில் இருக்கும் தமிழ் கைதிகளை அரச சாட்சிகளாக்கி தமக்கு வேண்டிய ஒரு முடிவை குறித்த வழக்கில் கொண்டுவர ஸ்ரீலங்கா அரசு கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் வட மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=81099

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒருசில சாட்சிகளுக்காக வேறு நீதிமன்றுக்கு வழக்கு மாறுவது சட்டப்படி கண்டனத்துக்குரியது

 

ஊடகவியலாளர்களின் கேள்விக்கான முதலமைச்சரின் பதில்'  என்ற தலைப்புடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் உடனே பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்படவேண்டும் என்பது பொதுவான கோரிக்கை. அது பயங்கரவாதத் தடைச்சட்டத்துடன் தொடர்புடையது. ஜெனிவாவில் பல வருடங்களுக்கு முன்னரே ஐ.நாவுக்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை உடனே கைவாங்குவதாக உறுதிமொழி கொடுத்த இலங்கை இன்னமும் அதைச் செய்யவில்லை. அதனைக் கைவாங்கிவிட்டால் அதன்கீழ் குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்களை உடனே பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யுங்கள் என்று கோருவது இலகுவாக இருந்திருக்கும்.

ஏனென்றால், எமது வழக்கமான சட்ட ஏற்பாடுகளுக்கு முரணான ஷரத்துகளே குறித்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் இதுகாறும் இருந்துவந்துள்ளன. அவற்றின் அடிப்படையிலேயே பெரும்பான்மையான கைதிகள் இதுவரையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளனர். அதாவது, எமது வழமையான சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு முரணான விதத்திலேயே அவர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளார்கள்.

இரண்டாம் விடயம், தற்பொழுது அநுராதபுரத்தில் விளக்கத்திற்காக அநுராதபுர சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் பிரச்சனை. முன்னையது பொது என்றால் இது குறிப்பிட்ட கைதிகளோடு தொடர்புடையது.

2009இல் இருவர் கைதுசெய்யப்பட்டு 2012 வரையில் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் தொடர்ந்து மறியலில் வைக்கப்பட்டார்கள். மூன்றாம் நபரைக் கைதுசெய்த பின் 2012இல் குற்றச்சாட்டுப்பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐம்பது தடவைகளுக்கு மேல் வழக்கு தவணை கொடுக்கப்பட்டு ஈற்றில் மூன்று நாட்களுக்கு தொடர் விளக்கமளிக்கப்பட்டு வவுனியா மேல்நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கவிருக்கும் நேரத்தில் அநுராதபுரத்துக்கு மாற்றுமாறு சட்டமா அதிபர் ஆணை வழங்கியுள்ளார்.

இது ஒரு பொறுப்பற்ற செயல். வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி வேண்டாவெறுப்பாகத்தான் உத்தியோகபூர்வ கட்டாயத்தின் நிமித்தம் வழக்கை அநுராதபுரத்துக்கு மாற்றினார். காரணங்கள் கூறப்படாவிட்டாலும் சாட்சிகள் பயமுறுத்தப்பட்டதாலேயே இவ்வாறு மாற்றியதாகக்  கூறப்படுகின்றது.

எனக்குக் கிடைத்த தகவல்களின்படி, முன்னரே கைதுசெய்யப்பட்டிருந்த சிலரை போர் முடிவடையும் தறுவாயில் விடுதலைப்புலிகள் கொன்றார்கள் என்றும் அதனுடன் இந்த குறிப்பிட்ட கைதிகள் தொடர்புபட்டிருந்தார்கள் என்பதும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை என்று தெரியவந்துள்ளது. 

கைதில் இருக்கும் வேறு சில கைதிகள் அரச சாட்சிகளாக மாறி குறித்த கைதிகளுக்கு எதிராகச் சாட்சியம் கூறினால் விடுதலை கிடைக்கும் என்று அவர்களுக்குக் கூறப்பட்டதாகத் தெரிகின்றது. அப்படியெனில் அரச சாட்சிகளாக மாறிய இந்த மூன்று தமிழ்ச் சாட்சிகள் பற்றியே அரசுக்குக் கரிசனைபோலத் தெரிகிறது.

இங்கு அரசியல் கலந்திருப்பதை நான் காண்கின்றேன். நடந்ததோ இல்லையோ எப்படியாவது விடுதலைப்புலிகள் கடைசிக் கட்டத்தில் தம்வசம் இருந்த சிறைக்கைதிகளைச் சுட்டுக்கொன்றார்கள் என்பது நீதிமன்றத்தில் நிரூபணமாகிவிட்டால் படையினர் செய்த அட்டூழியங்களுக்குச் சமனாகப் புலிகளும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருந்தனர் என்று சர்வதேச அரங்குகளில் இலங்கை அரசு கூறமுடியும். 

இதனால்தான் வேறு கைதிகளையே அரச சாட்சிகளாக்கி தமக்கு வேண்டிய ஒரு முடிவை குறித்த வழக்கில் கொண்டுவர அரசு முயற்சிப்பது தெரிகிறது. இவை என்னுடைய ஊகமே ஒழிய முழுமையான தரவுகள் எனக்கு இன்னமும் தரப்படவில்லை.

சாட்சிகள் வவுனியா வரப் பயப்படுகின்றார்கள் என்றால் யார் யார் என்னமாதிரியான பயமுறுத்தல் காரணமாக அங்கு வரப் பயப்படுகின்றார்கள் என்று சட்டமா அதிபருக்கு சத்தியக்கடதாசிகள் கையளித்துள்ளார்களா என்பதை அவர் வெளிப்படுத்தவேண்டும்.

குறித்த தமிழ் அரச சாட்சிகள் தமிழ்ப் பிரதேச நீதிமன்றத்தில் தமிழ் நீதிபதி முன்னிலையில் சுதந்திரமாக சாட்சியமளிக்க முடியும். அவ்வாறு சாட்சியமளிக்கும்போது தம்மிடமிருந்து எவ்வாறு சாட்சியங்களுக்கான விவரங்களை அரச தரப்பு பெற்றுக்கொண்டது என்பதை அவர்கள் வெளிப்படுத்தி விடுவார்களோ என்ற பயமே வழக்கை அநுராதபுரத்துக்கு மாற்றியமைக்கான காரணம் என நான் ஊகிக்கிறேன். உண்மை வெளிவந்தால் வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி வழக்கைத் தூக்கி எறியத் தயங்கமாட்டார் என்பது சட்டமா அதிபருக்குத் தெரியும்.

எது எவ்வாறிருப்பினும், இவ்வாறான மாற்றுதல் கைதிகளின் மனித, சட்ட உரிமைகளைப் பாதிக்கின்றன. சட்டத்துறைத் தலைமையதிபதி புறநிலை வைத்தே இவ்வாறான வழக்குகளை நோக்கவேண்டுமேயொழிய அகநிலையில் இருந்து நோக்குவது கண்டிக்கத்தக்கது என்றுள்ளது.

http://tnaseiithy.com/news/it-is-legal-to-denounce-the-case-for-a-few-other-witnesses

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் அரசியல் கைதிகளை வைத்து மனித குலத்திற்கு எதிரான போர்க்குற்றங்கள் புரிந்தவர்களை காப்பாற்றவும், தேர்தலில் தமிழரின் வாக்குகளை  கொள்ளை அடிக்கவும் பயன்படுத்துவதற்காகவே இத்தனை அலைக்கழிப்பு.   தமிழ்  ராஜதந்திரிகள்  இந்த  திட்டத்திற்கு  பின்னால் இருப்பார்கள்  என்று யூகிக்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.