Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த இளைஞன்

Featured Replies

மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த இளைஞன்

 

 

மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்த இளைஞன்

கூகிள் தேடல் கருவியானது இந்த நவீன உலகத்த்தில் நம் அனைவராலும் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தேடல் கருவிக்கு மேலதிகமாக கூகிள் நிருவனத்தினால் பல்வேறுபட்ட சேவைகள் வழங்கப்பட்டுவந்த போதிலும் இவற்றுள் பிரதானமாக பயணிகளாலும் சாரதிகளாலும் பெரும்பாலும் பாவிக்கப்பட்டு வரும் சேவையே கூகிள் வரைபடம் ஆகும். ஆயினும் கூகிள் வரைபடத்தில் காணப்படும் அனைத்துத் தகவல்களும் கூகிள் நிருவனத்தினால் உள்ளிடப்பட்டவை அல்ல. இவற்றில் பெரும்பாலானவை தன்னார்வமுள்ள கூகிள் லோக்கல் கயிட்ஸ் எனப்படும் இந்த குளுவினரால் அவர்களது ஓய்வு நேரத்தினால் உள்ளிடப்பட்டவையாகும்.

எவ்வாறாயினும் இந்த லோக்கல் கயிட்ஸ் குழுவினர் கூகிள் நிறுவனத்தினால் பணியமர்த்தப்பட்டவர்கள் அல்ல. தத்தமது பிரதேசங்களில் உள்ள கூகிள் வரைபடங்களை மேம்படுத்தும் நோக்குடன் உலகளாவிய ரீதியில் சேவை செய்யும் குழுவினர் ஆகும்.

இவ்வாறு உலகெங்கும் சேவை புரியும் லோக்கல் கயிட்ஸ் குழுவினரில் சிறப்பாக சேவை செய்யும் ஒரு சிலர் கூகிள் நிறுவனத்தினரால் பாராட்டப்படும் உச்சிமானாடு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மானிலத்தில் ஆண்டுக்கொருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

இம்முறை 2017 ஆம் ஆண்டுக்கான இந்த உச்சிமானாட்டில் இலங்கையை பிரதி நிதித்துவப்படுத்தும் முகமாக மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இளங்கோவன் துஷ்யந்தா என்பவரும், கொழும்பைச்சேர்ந்த அனுராத பியதாச என்பவரும் கலந்துகொண்டமை வியக்கத்தக்க விடயமாகும்.

இவர்களில் மட்டு.மண்ணைப் பிறப்பிடமாகக்கொண்ட இளங்கோவன் துஷ்யந்தா என்பவர் இத்தோடு இரண்டாவது முறையாக இந்த உச்சிமானாட்டில் கலந்து கொள்கிறார்.

அது மட்டுமல்லாது இந்த உச்சிமானாட்டில் விஷேட விருது பெற்ற ஆறு பேரில் மட்டக்களப்பு லோக்கல் கயிட்ஸ் குழுவினரைச்சேர்ந்த இவரது பெயரும் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

கடந்த வருடம் இடம்பெற்ற முதலாவது கூகிள் உச்சிமானாட்டில் கலந்துகொண்ட முதலாவது இலங்கையர் மற்றும் முதலாவது தமிழர் என்ற பெருமையும் இவரையே சாரும். இவ்வாறான தன்னார்வம் கொண்ட இளைஞர்கள் மட்டுமானகரத்திலிருந்து உருவாவது பெருமைதரக்கூடிய விடையமாகும்.

22494765_10213227287932764_1633397406_o22497123_10213227301013091_715953606_o22522503_10213227301053092_2096472922_o

http://www.samakalam.com

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

இருவருக்கும் வாழ்த்துகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.