Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா டிசம்பரில் திருமணம்?

Featured Replies

விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா டிசம்பரில் திருமணம்?

 

 
kohli,_anushka

 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் முன்னணி நடிகை அனுஷ்கா ஷர்மா விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் இருவரும் சமீபத்தில் நடித்து வெளிவந்த விளம்பரத்தில் வரும் காதல் காட்சிகள் தற்போது நிஜமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

virat,anushka_2.jpg

கடந்த 2013--ம் ஆண்டு இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இவர்களுக்குள்ளான நட்பு வெளிப்பட்டது. பின்னர் இது காதலாக மாறியதாக தகவல்கள் கசிந்தாலும் அதனை இருவரும் தொடர்ந்து மறுத்து வந்தனர். ஆனாலும் விராட் கோலியின் சமூக வலைதள பக்கங்களில் இருவரும் ஜோடியாக இருப்பது போன்ற புகைப்படங்கள் அடிக்கடி வெளியானது.

இதையடுத்து 2015-ம் ஆண்டு இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் விழுந்ததாகவும் இதனால் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து விராட் கோலியின் ரசிகர்கள் அனுஷ்காவை சமூக வலைதள பக்கத்தில் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

அதற்கு, அனுஷ்கா ஒரு சிறந்த பெண் அவரை எனது ரசிகர்களாக இருந்தால் இதுபோன்று செய்ய வேண்டாம் என விராட் கோலி கேட்டுக்கொண்டார். இதையடுத்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி ஏற்பட்டது. பின்னர் நடந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் இருவரின் நட்பும் தொடர்ந்தது. 

virat,_anushka_1.jpg

இந்நிலையில், வரும் டிசம்பர் மாதத்தில் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா ஜோடி திருமணம் செய்யப்போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிபடுத்தும் விதமாக விராட் கோலியின் செயல்கள் அமைந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வு தேவை என அவர் தெரிவித்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படி இருந்தாலும் வரும் 2018-ம் ஆண்டுக்குள் இந்திய கிரிக்கெட் அணியின் முதல் பெண்ணாக (கேப்டன் மனைவி) அனுஷ்கா ஷர்மா இருக்கப்போவது உறுதி என்றே கூறப்படுகிறது.

http://www.dinamani.com/sports/sports-news/2017/oct/23/virat-kohli-anushka-sharma-to-get-married-in-december-2794757.html

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா டிசம்பரில் திருமணம்?

 

 
kohli,_anushka

 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் முன்னணி நடிகை அனுஷ்கா ஷர்மா விரைவில் திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் இருவரும் சமீபத்தில் நடித்து வெளிவந்த விளம்பரத்தில் வரும் காதல் காட்சிகள் தற்போது நிஜமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

virat,anushka_2.jpg

கடந்த 2013--ம் ஆண்டு இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இவர்களுக்குள்ளான நட்பு வெளிப்பட்டது. பின்னர் இது காதலாக மாறியதாக தகவல்கள் கசிந்தாலும் அதனை இருவரும் தொடர்ந்து மறுத்து வந்தனர். ஆனாலும் விராட் கோலியின் சமூக வலைதள பக்கங்களில் இருவரும் ஜோடியாக இருப்பது போன்ற புகைப்படங்கள் அடிக்கடி வெளியானது.

இதையடுத்து 2015-ம் ஆண்டு இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் விழுந்ததாகவும் இதனால் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து விராட் கோலியின் ரசிகர்கள் அனுஷ்காவை சமூக வலைதள பக்கத்தில் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

அதற்கு, அனுஷ்கா ஒரு சிறந்த பெண் அவரை எனது ரசிகர்களாக இருந்தால் இதுபோன்று செய்ய வேண்டாம் என விராட் கோலி கேட்டுக்கொண்டார். இதையடுத்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி ஏற்பட்டது. பின்னர் நடந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் இருவரின் நட்பும் தொடர்ந்தது. 

virat,_anushka_1.jpg

இந்நிலையில், வரும் டிசம்பர் மாதத்தில் விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா ஜோடி திருமணம் செய்யப்போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை உறுதிபடுத்தும் விதமாக விராட் கோலியின் செயல்கள் அமைந்துள்ளது. டிசம்பர் மாதத்தில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வு தேவை என அவர் தெரிவித்துள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எது எப்படி இருந்தாலும் வரும் 2018-ம் ஆண்டுக்குள் இந்திய கிரிக்கெட் அணியின் முதல் பெண்ணாக (கேப்டன் மனைவி) அனுஷ்கா ஷர்மா இருக்கப்போவது உறுதி என்றே கூறப்படுகிறது.

http://www.dinamani.com/sports/sports-news/2017/oct/23/virat-kohli-anushka-sharma-to-get-married-in-december-2794757.html

கொடுமையடா:unsure:

  • தொடங்கியவர்

டிசம்பர் 2-வது வாரத்தில் வீராட்கோலி-அனுஷ்கா இத்தாலியில் திருமணம்?

 

வீராட்கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை நீண்ட காலமாக காதலித்து வருகிறார். இவர்களது திருமணம் டிசம்பர் 2-வது வாரத்தில் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடக்கிறது.

 
டிசம்பர் 2-வது வாரத்தில் வீராட்கோலி-அனுஷ்கா இத்தாலியில் திருமணம்?
 
சென்னை:

கிரிக்கெட் வீரர்களுக்கும், பாலிவுட் நடிகைகளுக்கும் எப்போதுமே தொடர்பு உண்டு. மறைந்த இந்திய அணி முன்னாள் கேப்டன் பட்டோடி பிரபல இந்தி நடிகையாக இருந்த ‌ஷர்மிளா தாகூரை திருமணம் செய்து இருந்தார். அந்த வரிசையில் அசாருதீன் -சங்கீதா பிஜ்லானி, மனோஜ் பிரபாகர்- பர்ஹீன், யுவராஜ்சிங்- ஹாசல்கபூர் திருமணம் நடந்தது.

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரும், இந்திய கிரிக்கெட்டின் 3 நிலைகளிலும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக இருப்பவருமான வீராட்கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை நீண்ட காலமாக காதலித்து வருகிறார்.

இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்த படங்களை அவர்களே வெளியிட்டு இருந்தனர். தொடக்கத்தில் அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பின்னர் மீண்டும் ஒன்றாக இணைந்தனர்.

இந்த நிலையில் வீராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.
201710251055104511_1_anu._L_styvpf.jpg
இவர்களது திருமணம் டிசம்பர் 2-வது வாரத்தில் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திருமண விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.

திருமணத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. நவம்பர் 7-ந்தேதியுடன் இந்த தொடர் முடிகிறது.

அதைத் தொடர்ந்து இலங்கை அணி இந்தியா வந்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது.

இதில் முதல் 2 டெஸ்டில் மட்டும் வீராட்கோலி விளையாடுகிறார். 3-வது டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் அவருக்கு ஓய்வு கொடுக்கப்படுகிறது. இந்த நேரத்தில் வீராட்கோலி திருமணம் செய்ய இருக்கிறார். கடைசி டெஸ்ட் டிசம்பர் 2-ந்தேதி தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஒருநாள் தொடர் டிசம்பர் 10-ந்தேதி தொடங்குகிறது. 17-ந் தேதி வரை ஒருநாள் தொடர் முடிகிறது. 20 ஓவர் தொடர் டிசம்பர் 20-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடக்கிறது.

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் தொடர் அல்லது தென்ஆப்பிரிக்கா பயணத்தின்போது கோலி அணியோடு இணைவார். டிசம்பர் கடைசியில் இந்திய அணி தென்ஆப்பிரிக்கா செல்கிறது. அந்த அணியுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவரில் விளையாடுகிறது.

கோலிக்கு ஓய்வு கொடுக்கப்படும்போது ரகானே கேப்டனாக நியமிக்கப்படுவார். அவர் தற்போது டெஸ்ட் அணிக்கு துணை கேப்டனாக உள்ளார்.

வீராட்கோலியின் திருமணத்தில் டோனி உள்ளிட்ட இந்திய வீரர்கள் பங்கேற்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. திருமண தேதி சமயத்தில்தான் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் நடைபெறுகிறது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/10/25105501/1124874/virat-kohli-Anushka-married-in-Italy-in-the-2nd-week.vpf

  • 1 month later...
  • தொடங்கியவர்

விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா அடுத்த வாரம் திருமணம்

 

 
virat,_anushka_1

 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் முன்னணி நடிகை அனுஷ்கா ஷர்மா அடுத்த வாரம் திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 இவர்கள் இருவரும் சமீபத்தில் நடித்து வெளிவந்த விளம்பரத்தில் வரும் காதல் காட்சிகள் தற்போது நிஜமாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

virat,_anushka_2.jpg

கடந்த 2013--ம் ஆண்டு இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இவர்களுக்குள்ளான நட்பு வெளிப்பட்டது. பின்னர் இது காதலாக மாறியதாக தகவல்கள் கசிந்தாலும் அதனை இருவரும் தொடர்ந்து மறுத்து வந்தனர். 

ஆனாலும் விராட் கோலியின் சமூக வலைதள பக்கங்களில் இருவரும் ஜோடியாக இருப்பது போன்ற புகைப்படங்கள் அடிக்கடி வெளியானது. 

virat,_anushka_4.png

2015-ம் ஆண்டு இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் விழுந்ததாகவும் இதனால் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. 

இதையடுத்து விராட் கோலியின் ரசிகர்கள் அனுஷ்காவை சமூக வலைதள பக்கத்தில் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

அதற்கு, அனுஷ்கா ஒரு சிறந்த பெண் அவரை எனது ரசிகர்களாக இருந்தால் இதுபோன்று செய்ய வேண்டாம் என விராட் கோலி கேட்டுக்கொண்டார். இதையடுத்து இதற்கு ஒரு முற்றுப்புள்ளி ஏற்பட்டது. 

பின்னர் நடந்த ஐபிஎல் தொடரில் மீண்டும் இருவரிடையிலான நட்பு மலர்ந்தது. 

இந்நிலையில், வரும் டிசம்பர் 12-ந் தேதி விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா ஜோடி திருமணம் செய்யப்போவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 

virat,_anushka_3.jpg

வரும் 9-ந் தேதி துவங்கும் திருமண வைபவங்களை அடுத்து டிசம்பர் 12-ல் இவர்கள் திருமணம் இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறும் எனவும், இதில் இரு குடும்பங்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்ளப்போவதாகவும், இதனைத்தொடர்ந்து 21-ந் தேதி இந்தியாவில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதனை உறுதிபடுத்தும் விதமாக விராட் கோலியின் செயல்கள் அமைந்துள்ளது. அடுத்து நடைபெறவுள்ள இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து தனது தனிப்பட்ட காரணங்களுக்காக ஓய்வு தேவை என அவர் தெரிவித்துள்ளார். இதனை கடந்த செப்டம்பர் மாதமே பிசிசிஐ-யிடமும் தெரிவித்துவிட்டார்.

இருப்பினும் இவை அனைத்தையும் அனுஷ்கா ஷ்ரமாவின் மேலாளர் மறுத்துள்ளார். இது வெறும் வதந்தி என்றும் குறிப்பிட்டார்.

http://www.dinamani.com/sports/special/2017/dec/06/virat-kohli-and-anushka-sharma-to-get-married-on-december-12-2821415.html

  • தொடங்கியவர்

ஸ்விட்சர்லாந்துக்குப் பறந்த விராட் கோலி - அனுஷ்கா சர்மா! இத்தாலியில் திருமணம்?

 

 
kohli_anushka1xx

 

கிரிக்கெட் மற்றும் பாலிவுட்டில் விராட் கோலி - அனுஷ்கா சர்மாவின் திருமணச் செய்திதான் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், அடுத்த ஒரு வாரத்தில் திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகிறார்கள்.

இந்நிலையில் விராட் கோலி, அனுஷ்கா சர்மா ஆகிய இருவரும் தற்போது ஐரோப்பாவுக்குப் பறந்துள்ளார்கள். அதுவும் நேற்றிரவு அனுஷ்கா சர்மா - பெற்றோர், அண்ணன் என தனது குடும்பத்துடன் ஸ்விட்சர்லாந்துக்குச் சென்றுள்ளதால் திருமணம் குறித்த செய்திகளும் யூகங்களும் அதிகமாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. அனுஷ்கா மும்பையிலிருந்தும் கோலி தில்லியிலிருந்தும் ஸ்விட்சர்லாந்துக்குப் பறந்துள்ளார்கள்.

திருமணம் செய்வதற்காக அனுஷ்கா சர்மா இத்தாலிக்குச் செல்லவில்லை என அனுஷ்கா சர்மாவின் செய்தித் தொடர்பாளர் தகவல் கூறியிருந்தாலும் யாரும் அதைப் பெரிதாகப் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. கோலி, அனுஷ்கா ஆகிய இருவரும் முதலில் ஸ்விட்சர்லாந்துக்குச் சென்றுவிட்டு பிறகு இத்தாலியில் திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளதைப் பல செய்திகள் உறுதிப்படுத்துகின்றன. 

கோலியின் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா, சிகே நாயுடு போட்டியிலிருந்து விடுப்பு எடுத்துள்ளார். அதற்கு அவர் சொன்ன காரணம் - உறவினரின் திருமணம்! இந்தச் செய்தி கோலியின் திருமணத்தை மேலும் உறுதிப்படுத்துவதாக உள்ளது. அனுஷ்காவின் பெற்றோர் தங்களுடைய உறவினர்களுக்கு இத்திருமணம் குறித்து சமீபத்தில் விளக்கியதாவும் கூறப்படுகிறது. இதனால் தென் ஆப்பிரிக்கா தொடருக்கு முன்பு கோலியின் திருமணச் செய்தி அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

டிசம்பர் 10 அல்லது 12 அன்று இத்தாலியின் மிலன் நகரில் கோலி - அனுஷ்கா சர்மா காதல் ஜோடியின் திருமணம் நடைபெறவுள்ளது, மும்பையில் ஜனவரி 4 அன்று திருமணம் பதிவு செய்யப்படும் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிருக்கான விடை விரைவில் கிடைக்குமா?

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/dec/08/italian-wedding-virat-and-anushka-leave-for-switzerland-with-family-2822694.html

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பக்கம் தான் சொன்னால் நானும் பருப்பும் சோறும் சாப்பிடுவன் தானே.:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 hours ago, நவீனன் said:

ஸ்விட்சர்லாந்துக்குப் பறந்த விராட் கோலி - அனுஷ்கா சர்மா! இத்தாலியில் திருமணம்?

இண்டியன் கிரிக்கட் விளையாட்டுக்காரரை....கிரிக்கெட் விளையாடுற நாடுகளை தவிர வேறை எந்த குஞ்சுகுருமனுக்கும் தெரியாது....அதிலையும் இத்தாலி!!!! குருவி கூட திரும்பிப்பாக்காது....அப்பிடியான இடங்களிலை தான் இவையள் தங்கடை அட்டகாசத்தை ஒப்பினாய் செய்யலாம். tw_blush:

2 hours ago, சுவைப்பிரியன் said:

எனக்கு பக்கம் தான் சொன்னால் நானும் பருப்பும் சோறும் சாப்பிடுவன் தானே.:)

பருப்பும் சோறும்....
எங்கடை சனத்துக்கு எப்பபார்........ பருப்பும் சோறும்... பருப்பும் சோறும்.... பருப்பும் சோறும்.... பருப்பும் சோறும்.... பருப்பும் சோறும்..... பருப்பும் சோறும்... பருப்பும் சோறும்..... பருப்பும் சோறும்..... பருப்பும் சோறும்........ பருப்பும் சோறும்..... பருப்பும் சோறும்.... பருப்பும் சோறும்.... பருப்பும் சோறும்..... பருப்பும் சோறும்..... பருப்பும் சோறும்.....

எங்கை போனாலும் பருப்பும் சோறும் வாய்ப்பாடுமாதிரி வந்திட்டுது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இண்டியன் கிரிக்கட் விளையாட்டுக்காரரை....கிரிக்கெட் விளையாடுற நாடுகளை தவிர வேறை எந்த குஞ்சுகுருமனுக்கும் தெரியாது....அதிலையும் இத்தாலி!!!! குருவி கூட திரும்பிப்பாக்காது....அப்பிடியான இடங்களிலை தான் இவையள் தங்கடை அட்டகாசத்தை ஒப்பினாய் செய்யலாம். tw_blush:

பருப்பும் சோறும்....
எங்கடை சனத்துக்கு எப்பபார்........ பருப்பும் சோறும்... பருப்பும் சோறும்.... பருப்பும் சோறும்.... பருப்பும் சோறும்.... பருப்பும் சோறும்..... பருப்பும் சோறும்... பருப்பும் சோறும்..... பருப்பும் சோறும்..... பருப்பும் சோறும்........ பருப்பும் சோறும்..... பருப்பும் சோறும்.... பருப்பும் சோறும்.... பருப்பும் சோறும்..... பருப்பும் சோறும்..... பருப்பும் சோறும்.....

எங்கை போனாலும் பருப்பும் சோறும் வாய்ப்பாடுமாதிரி வந்திட்டுது. :grin:

பருப்பும், சோறும்... காணாது.
இவங்களுக்கு, "நெய்"... விட்டு.. "புட் பால்" விளையாட அனுப்ப வேணும்.
வெறுங்காலுடன்...... திரும்பி, வருவாங்கள்..

  • தொடங்கியவர்

திருமண வதந்திக்கு எண்ணெய் ஊற்றும் ஆதாரங்கள்!

 

 
 

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலியும் அவரது காதலியும் பொலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் அடுத்த ஓரிரு வாரங்களில் இத்தாலியில் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக செய்தி எழுந்தது. அதை அனுஷ்கா தரப்பு மறுத்தபோதும் திருமணம் நடைபெறவிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சில செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

10_Kohli.jpg

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து அனுஷ்கா ஷர்மா இத்தாலிக்குப் பயணமானார். அவருடன், அவரது குடும்பத்தினரும் சென்றிருப்பதை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அதுபோலவே, கோலியின் குடும்பத்தினரும் நண்பர்கள் சிலரும் இத்தாலிக்குப் பயணம் செய்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது பற்றிக் கிடைத்திருக்கும் சுருக்கமான விபரம் இதுதான்:

மூன்று மாதங்களுக்கு முன்னரே இரு தரப்பினரும் கலந்து பேசி திருமணத்துக்கு நாள், இடம், நேரம் அனைத்தையும் குறித்திருக்கிறார்கள். அதன்படி, இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகி குடும்பத்தினருடனும் நெருங்கிய நண்பர்கள் சிலருடனும் இத்தாலி சென்றிருக்கிறார் கோலி. 

இதுமட்டுமன்றி, கோலியின் ஆரம்ப காலப் பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மாவும் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் என்று தெரியவருகிறது.

கிரிக்கெட் வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவ்ராஜ் சிங் ஆகியோருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும் அனுஷ்கா தரப்பில், நடிகர் ஷாருக் கான், அமீர் கான் மற்றும் தயாரிப்பாளர் ஆதித்ய சோப்ரா உட்பட ஒரு சிலர் மட்டும் அழைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.

இம்மாதம் 12 அல்லது 18ஆம் திகதி திருமணம் நடைபெறலாம் என்றும் தென்னாபிரிக்க சுற்றுத் தொடர் ஆரம்பமாவதற்கு ஒரு சில நாட்கள் முன்னதாக நாடு திரும்பவுள்ள கோலி-அனுஷ்கா தம்பதியர்(!) மும்பையின் ‘சோபோ’ எனும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு உபசாரத்தை நடத்தவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

தென்னாபிரிக்க சுற்றுலாவின்போது தானும் போவதற்கு வசதியாக அனுஷ்கா விசாவுக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

http://www.virakesari.lk/article/28046

  • தொடங்கியவர்

இத்தாலி டஸ்கனில் உள்ள புகழ்பெற்ற ரிசார்ட்டில் விராட் கோலி - அனுஷ்கா சர்மா திருமணம்

இத்தாலி நாட்டின் டஸ்கனில் உள்ள புகழ்பெற்ற ரிசார்ட்டில் விராட் கோலி - அனுஷ்கா சர்மா திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

 
 
இத்தாலி டஸ்கனில் உள்ள புகழ்பெற்ற ரிசார்ட்டில் விராட் கோலி - அனுஷ்கா சர்மா திருமணம்
 
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரராகவும், கேப்டனாகவும் செயல்படுபவர் விராட் கோலி. இவர் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக இணைந்து பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். இதனால் அவர்கள் காதல் உறுதி செய்யப்பட்டது.
 
இந்தியா - இலங்கை இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை தொடர் முடிந்தவுடன் இந்தியா - தென்ஆப்பிரிக்கா தொடர் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி வருகிற 27-ந்தேதி நள்ளிரவு இந்தியாவில் இருந்து புறப்படுகிறது.
 
201712101047123256_1_Kohlianushkha003-s._L_styvpf.jpg
 
டெல்லியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் கடந்த 6-ந்தேதி முடிவடைந்தது. அதில் இருந்து கோலிக்கு சுமார் 20 நாட்கள் வரை ஓய்வு உள்ளது. இந்த நேரத்தில் அவருக்கும் அனுஷ்கா சர்மாவிற்கும் திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டது.
 
தற்போது அந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் திருமணம் எங்கு வைத்து நடக்கும் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. திருமணம் என்ற செய்தி வந்ததும் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் வைத்து திருமணம் நடைபெற இருப்பதாக கூறப்பட்டது.
 
ஒவ்வொரு பத்திரிகைகளும் எந்த இடம் என்பதை அதிகாரப்பூர்வமாக தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டின. இதற்கான முழு முயற்சிகளையும் செய்து வந்தனர். இந்நிலையில் இத்தாலி நாட்டின் டஸ்கனில் உள்ள புகழ்பெற்ற ரிசார்ட்டில் திருமணம் நடைபெறுவதாக ஒரு ஆங்கிலப்பத்திரிகை செய்து வெளியிட்டு, உறுதிப்படுத்தப்பட்ட செய்தி என்று வெளியிட்டுள்ளது.
 
201712101047123256_2_Kohlianushkha002-s._L_styvpf.jpg
 
விராட் கோலி - அனுஷ்கா சர்மா திருணம் பஞ்சாபி முறையில் நடைபெறும் எனவும், திருமணம் அடுத்த வாரம் நடைபெற இருப்பதாகவும், திருமணம் முடிந்து டெல்லியில் வருகிற 26-ந்தேதி வரவேற்பு விழா நடதப்பபடும் எனவும் செய்தி வெளியாகியுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/12/10104709/1133728/Virat-Kohli-Anushka-Sharma-wedding-confirmed-venue.vpf

  • தொடங்கியவர்

விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா திருமணம் நடந்ததாக தகவல்

 
 

விராட்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவை இத்தாலியில் திருமணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில வருடங்களாகவே இவர்களது காதல் வாழ்க்கை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தன. 

 
 

கடந்த ஜனவரி மாதம் இவர்கள் இருவருக்குமிடையே திருமணம் நடக்கவிருப்பதாகவும் அதற்காக பிரபலங்கள் மொகாலி செல்வதாகவும் வதந்தி பரவியது. ஆனால் அது பொய் என கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். ஆனால் தற்போது இலங்கை தொடரில் ஓய்வளிக்கப்பட்ட கோலி இத்தாலிக்கு அனுஷ்கா மற்றும் குடும்பத்தினருடன் சென்றிருப்பதாகச் செய்தி பரவியது. இந்நிலையில் கோலி, அனுஷ்காவுக்கு நெருங்கிய நண்பர்கள் சூழ திருமணம் நடைபெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நீண்ட நாள்களாக அதிகம் எதிர்பார்க்கப்பட்ட காதல் திருமணத்தில் முடிந்துள்ளது. கிரிக்கெட்டில் பல சாதனைகளைச் செய்து வரும் கோலியின் இரண்டாவது இன்னிங்ஸ் இது. வாழ்த்துகள் விருஷ்கா என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டரில் ட்ரெண்டாகியுள்ளது. திருமணம் பற்றிய செய்தியை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/110456-virat-kohli-married-anushka-sharma.html

DQxxr3DUEAAmw9H.jpg

Sir Ravindra Jadeja @SirJadeja
Folgen@SirJadeja folgen
Mehr

"Today We've Promised Each Other To Be Bound In Love Forever. We Are Truly Blessed To Share The News With You.This Beautiful Day Will Be Made More Special With The Love & Support Of Our Family Of Fans & Well Wishers"-Virat Kohli & Anushka Sharma ????#VirushkaWEDDING #Kohli

DQxtxp2UQAACUcP.jpg
Sir Ravindra Jadeja @SirJadeja
Folgen@SirJadeja folgen
Mehr

It All Makes Sense Now. Team India Was In A Hurry Yesterday To Attend Virat Kohli And Anushka Sharma's Wedding At Italy.????#VirushkaWEDDING #VirushkaKiShaadi #ViratKohi #AnushkaSharma #Kohli

DQxqRE7VQAA9vnZ.jpg

When Life Gives You Relationship, Make It Like Virat Kohli And Anushka Sharma?#VirushkaWEDDING #VirushkaKiShaadi #ViratKohi #AnushkaSharma #Kohli

DQxwgXJUMAA7fwb.jpg
  • தொடங்கியவர்

அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார் விராட் கோலி

 YouTube
2527653010159599384395004911594032n

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை இன்று திருமணம் செய்து கொண்டார்.

இத்தாலியில் டஸ்கனி நகரில் தனிப்பட்ட முறையிலான நிகழ்வில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இது குறித்து விராட் கோலி தன் ட்விட்டரில், “வாழ்நாள் முழுதும் அன்பின் பிணைப்பில் இணைய இன்று இருவரும் உறுதிமொழி பூண்டோம். உங்களுடன் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறோம். இந்த அழகிய நாள் எங்கள் குடும்பத்தினர், ரசிகர்கள், நலம் விரும்பிகள் ஆகியோருடன் சிறப்பு வாய்ந்ததாக விளங்குகிறது. எங்கள் பயணத்தின் முக்கிய அங்கம் வகிப்பதற்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

Virat%20Anushka%201jpg
 

முன்பு இத்தாலியில் திருமணம் என்று செய்தி வெளி வந்த போது அனுஷ்கா தரப்பு மறுத்தது. மேலும் இதற்கு முன்பாகக் கூட திருமண செய்தி வந்தபோது திருமணத்தை மறைவாகச் செய்து கொள்ள மாட்டோம் என்று தெரிவித்திருந்தார் கோலி.

டிசம்பர் 21-ம் தேதி தம்பதிகள் புதுடெல்லியில் உறவினர்களுக்காக வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, பிறகு டிச.26-ம் தேதி மும்பையில் கிரிக்கெட் சகாக்கள் மற்றும் பிறருக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தென் ஆப்பிரிக்கா தொடருக்கு விராட் கோலி, அனுஷ்கா ஷர்மா செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனுஷ்கா ஷர்மா மும்பையில் ஷாரூக் கான் படத்தில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

 

http://tamil.thehindu.com/sports/article21413860.ece?homepage=true

  • தொடங்கியவர்

Bild könnte enthalten: 3 Personen

  • தொடங்கியவர்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா

 

 

 

13CHPMUVIRATKOHLI

விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடி.   -  PTI

புதுமணத் தம்பதியான விராட் கோலி, அனுஷ்கா சர்மாவுக்கு சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவின் திருமணம், நேற்று முன்தினம் இத்தாலியின் மிலன் நகர் அருகே உள்ள டஸ்கனி பகுதியிலுள்ள பாரம்பரியமிக்க ரிசார்ட் ஒன்றில் நடைபெற்றது. பஞ்சாபி முறைப்படி நடைபெற்ற திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

விராட் கோலி-அனுஷ்காவின் திருமண வரவேற்பு மும்பை மற்றும் டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 21-ம் தேதி டெல்லியில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் உறவினர்களும் அதைத் தொடர்ந்து 26-ம் தேதி மும்பையில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்களும் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் புதுமணத் தம்பதிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.

சச்சின்: தம்பதிகளுக்கு திருமண வாழ்த்துகள். நீங்கள் இருவரும் அற்புதமாக இருக்கிறீர்கள்.

பிசிசிஐ: தம்பதிக்கு உளம்கனிந்த வாழ்த்துகள். திருமண வாழ்க்கை சிறக்கட்டும்.

ஷிகர் தவண்: அன்பு கொண்ட ஜோடிக்கு வாழ்த்துகள். கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.

புஜாரா: வாழ்க்கையில் அனைத்து ஆசீர்வாதங்களையும், மகிழ்ச்சியையும் பெற வாழ்த்துகிறேன்.

ஷோயிப் அக்தர்: வாழ்க்கையில் புதிய இன்னிங்ஸை மேற்கொள்ளும் ஜோடிக்கு வாழ்த்துகள்.

உமேஷ் யாதவ்: அற்புதமான ஒரு வாழ்க்கை உங்கள் முன்னால் இருக்கிறது. மகிழ்ச்சி பொங்க கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.

ஷாகித் அப்ரிடி: கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். திருமண பரிசாக மகிழ்ச்சியை வழங்குவார்.

சானியா மிர்சா: நீங்கள் அன்பாக இருப்பதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. உலகில் உள்ள அனைத்து சந்தோஷத்தையும் பெற வாழ்த்துகள்.

விராட் கோலி, அனுஷ்கா சர்மாவின் திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றுள்ளது. தம்பதிகளுக்கான ஆடையை பிரபல வடிவமைப்பாளரான சபாச்சி முகர்ஜி தயார் செய்திருந்தார்.

உலகில் மிக விலை உயர்ந்த செலவில் விடுமுறை நாட்களை செலவழிக்கும் போர்கோ ஃபினோசிச்சியோ ரிசார்ட்டில் விராட் கோலியின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த ரிசார்ட் பிபியானோ என்ற கிராமத்தில் உள்ளது. இங்கு 100-க்கும் குறைவான மக்களே வசித்து வருகின்றனர். இந்த கிராமம் இத்தாலியின் டஸ்கனி மண்டலத்தில் அமைந்துள்ளது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி முடிவடைந்ததும் விராட் கோலியுடன், அனுஷ்கா சர்மா தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்கிறார். புத்தாண்டை அங்கு கொண்டாடிய பின்னர் ஜனவரி முதல் வாரத்தில் அனுஷ்கா சர்மா இந்தியா திரும்புகிறார். அதைத் தொடர்ந்து மும்பையில் ஷாருக்கானின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அதேவேளையில் விராட் கோலி, தென் ஆப்பிரிக்க தொடரில் கலந்து கொண்டு விளையாட உள்ளார்.

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் 2 மாதங்கள் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி, 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே புதுமணத் தம்பதி மும்பை வோர்லி நகரில் உள்ள புதிய வீட்டில் குடியேறவும் முடிவு செய்துள்ளது. - ஏஎன்ஐ

http://tamil.thehindu.com/sports/article21571341.ece

  • தொடங்கியவர்

கோலி - அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்திய பிரதமர் மோடி

 

டெல்லி தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற விராட் கோலி - அனுஷ்கா சர்மாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

 
கோலி - அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்திய பிரதமர் மோடி
 
புதுடெல்லி:

இந்திய அணி கேப்டன் விராட் கோலியும், இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 11-ந்தேதி இத்தாலியில் உள்ள டுஸ்கேனியில் இருக்கும் சொகுசு விடுதியில் திருமணம் செய்து கொண்டனர். 4 ஆண்டு கால காதலுக்கு பிறகு இந்த திருமணம் நடைபெற்றது. மிகவும் ரகசியமாக நடத்தப்பட்ட இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்களும், குடும்ப நண்பர்களும் மட்டுமே பங்கேற்றனர்.

201712212258075686_1_omeht57l._L_styvpf.jpg

இந்நிலையில், நேற்று முன்தினம் இந்தியாவுக்கு திரும்பிய புதுமண தம்பதி, பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது இன்று, டெல்லி தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மோடிக்கு திருமண ஜோடி அழைப்பு விடுத்தனர்.

இன்று டெல்லி தாஜ் ஹோட்டலில் விராட் கோலி - அனுஷ்கா ஜோடியின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில், இருவீட்டாரின் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

201712212258075686_2_modi-virat1._L_styvpf.jpg

இதைத் தொடர்ந்து வரும் 26ம் தேதி மும்பையில் மற்றொரு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் என்று பலரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த வரவேற்பு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியுடன் கோலி இணைகிறார். அவருடன் அனுஷ்கா சர்மாவும் தென் ஆப்பிரிக்கா சென்று புத்தாண்டை சிறப்பிக்க உள்ளனர். இதையடுத்து மும்பை திரும்பும் அனுஷ்கா சர்மா ஷாருக்கான் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/12/21225806/1135992/PM-Narendra-Modi-attends-Virat-Anushka-reception-at.vpf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.