Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓய்வுபெற்றார் ட்ரவிஸ் சின்னையா!

Featured Replies

ஓய்வுபெற்றார் ட்ரவிஸ் சின்னையா!

கடற்படைத் தளபதியாக குறுகிய காலமே பதவி வகித்த தமிழர் ட்ரவிஸ் சின்னையாவுக்கு பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.

1_Travis.jpg

முப்பத்தைந்து வருட காலம் கடற்படையில் சேவை புரிந்த ட்ரவிஸ் சின்னையா இரண்டு மாதங்களுக்கு முன் தளபதியாக நியமிக்கப்பட்டார். தமிழர் ஒருவர் கடற்படையின் உயரிய பதவியை அலங்கரித்த முதல் முறை இதுவே! அன்றிலிருந்து ஒரு மாத காலமே அவர் பதவி வகிக்கவேண்டியிருந்தது.

அப்போது, அவரது பதவிக் காலத்தை மேலும் ஒரு மாதமாக அதிகரித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டார். இதையடுத்து, மேலும் ஒரு மாதம் ட்ரவிஸ் சின்னையா கடற்படைத் தளபதியாகவே தொடர்ந்தார்.

இந்நிலையில், அவரது பதவிக்காலம் நேற்றுடன் நிறைவுபெற்றது. மேலும், ட்ரவிஸ் சின்னையா கடற்படையில் இருந்து இன்றுடன் (26) ஓய்வுபெறுகிறார்.

இதையடுத்து, அவருக்கு அட்மிரலாகப் பதவியுயர்வு அளித்து கௌரவப்படுத்தியிருக்கிறது அரசு.

கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க பொறுப்பேற்றுள்ளார்.

http://www.virakesari.lk/article/26293

  • தொடங்கியவர்

சின்னையாவுக்கு பதவியுயர்வு

 
 
சின்னையாவுக்கு பதவியுயர்வு
 

இலங்கைக் கடற்படைத்தளபதி பதிவியிலிருந்து இன்றுடன் ஓய்வு பெறும் வைஸ் அட்மிரல்  ட்ராவிஸ் சின்னையா, அட்மிரலாகப்  பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

அரச தலைவரின் ஆலோசனைக்கு அமைவாக அவருக்கு இந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இவர் கடற்படையில் 35 வருடங்களாகக் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://newuthayan.com/story/40701.html

  • கருத்துக்கள உறவுகள்

வைஸ் அட்மிரல் என்ற உயர் படிமைத் தலைமைத்துவ பதவியை  கொண்டிருப்பதற்கு சொரி லிங்காவின் சகதி உவர் நீர் பேட்டை ரவுடி கும்பலுக்கு தகுதி உள்ளதா?

இது தன்னை தமிழனாக வேடமிட்டுக் கொள்ளும் சிங்கள சின்னையாவின் உள்வீட்டுப்  பிரச்னையான போர்க்கப்பல் பேரமும், அதன் வெளியாக பரிமாணமுமான சின்னையாவின் மேற்கத்திய (அமெரிக்கா) சார்பான கண்ணோட்டமும், அதனால் சொறி இலங்கை அரசிற்குள் உருவாக்கி இருக்கும் பனிப்போரை முடித்து வைப்பதற்கும் எடுக்கப்பட்ட முடிவை வைத்து சிங்கள சின்னையாவும், சொறி லங்காவும், தற்போதைய தமிழின அழிப்பு போர் வெற்றி மமதையை  கொண்டு சொரி  லங்காவும் கிந்தியவனும் ஈழத்தமிழ் தேசத்தை   பரிகசிப்பதே.      

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டம்ளர் சின்னையாவுக்கு தமிழ் தெரியுமோ?

  • தொடங்கியவர்

கடற்படைத் தளபதியாக அதிக மற்றும் சொற்ப காலம் பதவிவகித்த இரண்டு தமிழர்கள்!

 

ஸ்ரீலங்கா கடற்படை வரலாற்றில் தமிழர்களின் ஈடுபாடு மிகவும் குறைவான நிலையில் காணப்பட்டாலும் கடற்படையின் தளபதிகள் வரிசயில் இரண்டு தமிழர்கள் குறிப்பிடத்தக்க நேரெதிர் மையங்களாக விளங்குகின்றனர்.

அவர்களில் ஒருவர் மிக அதிக காலம் பதவியில் இருந்தவராகவும் மற்றொருவர் மிக சொற்ப காலம் பதவியில் இருந்தவராகவும் விளங்குகின்றனர். அதே நேரம் இரண்டு பேரும் மட்டுமே கடற்படையின் தளபதிகளாகப் பதவி வகித்த தமிழ் அதிகாரிகளாவர்.

கடற்படைத் தளபதியாக அதிக மற்றும் சொற்ப காலம் பதவிவகித்த இரண்டு தமிழர்கள்!

மிக நீண்ட காலம் கடற்படைத் தளபதியாக இருந்தவர் ரியர் அட்மிரல் ராஜன் கதிர்காமர், அதேபோல் மிக சொற்ப காலம் பதவியில் இருந்தவர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா என்பவராவார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த ராஜன் கதிர்காமர் 1960 தொடக்கம் 1970ஆம் ஆண்டுவரை பத்து ஆண்டுகள் கடற்படைத் தளபதியாக இருந்தார். ஸ்ரீலங்காவின் முன்னாள் வெளி விவகார அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமரின் மூத்த சகோதரர்களில் ஒருவர். ராஜன் கதிர்காமருக்கு லக்‌ஷ்மன் கதிர்காமர் உட்பட மூன்று ஆண் சகோதரர்கள் இருந்துள்ளனர். நால்வரும் ஸ்ரீலங்கா அரச மற்றும் அரசாங்கத் துறைகளில் முக்கிய பங்கினை வகித்தவர்களாவர்.

ராஜன் கதிர்காமர் பதவியிலிருந்து ஓய்வுபெற்றபோதுதான் அவருக்கு ரியல் அட்மிரல் பதவியும் வழங்கப்பட்டது. தற்பொழுது மிகச் சொற்ப காலம் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற ட்ராவிஸ் சின்னையா வைஸ் அட்மிரல் பதவியிலிருந்து அட்மிரலாக பதவியுயர்வு பெற்றுள்ளார். சின்னையா பதவியில் இருந்த காலம் வெறும் இரண்டு மாதங்களும் நான்கு நாட்களும் மட்டுமே.

கடந்த ஆகஸ்டு மாதம் 22ஆம் திகதி புதிய கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்று அண்மையில் அதிலிருந்து ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/sl-navy-two-tamil-captians

  • தொடங்கியவர்

சின்னையாவின் ஓய்வு கவலையளிக்கின்றது- அமைச்சர் மனோ

 
சின்னையாவின் ஓய்வு கவலையளிக்கின்றது- அமைச்சர் மனோ
 

வைஸ் அட்மிரல் சின்னையா குறுகிய காலத்­துக்கே கடற்­ப­டைத் தள­ப­தி­யாகப் பதவி வகித்­துள்­ளார். அவ­ருக்­குப் பதவி நீடிப்பு வழங்­கப்­ப­டா­மல் ஓய்­வு­பெ­றச் செய்­த­மை­யா­னது பெரும் கவ­லை­யாக இருக்­கின்­றது. நல்­லாட்சி அர­சி­லும் தமி­ழர்­கள் தமது உரி­மை­க­ளுக்­காகப் போராட வேண்­டி­யுள்­ளது என்­ப­தையே இது காட்­டு­கின்­றது.

இவ்­வாறு தேசிய கலந்­து­ரை­யா­டல், சக­வாழ்வு மற்­றும் அர­ச­க­ரும மொழி­கள் அமைச்­ச­ரும் தமிழ் முற்­போக்­குக் கூட்­ட­ணி­யின் தலை­வ­ரு­மான மனோ கணே­சன் தெரி­வித்­தார்.

கடற்­ப­டைத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ ருந்த சின்­னை­யா­வுக்கு இரண்டு மாதங்­கள் மாத்­தி­ரமே அந்­தப் பத­வியை வகிக்க முடிந்­துள்­ளது.

படைத்­த­ரப்­பில் பணி­பு­ரி­யும் அதி­கா­ரி­கள் 55ஆவது வய­தில் ஓய்­வு­பெ­ற­வேண்­டும். பாது­காப்பு அமைச்­சர் என்ற வகை­யில் அரச தலை­வர் அவர்­க­ளுக்­கான கால­நீ­டிப்பை வழங்­க­மு­டி­யும்.

இதற்கு முன்­னர் பல­த­ட­வை­கள் இவ்­வாறு பதவி நீடிப்பு வழங்­கப்­பட்­டி­ருந்­தது.
இரண்டு வரு­டங்­கள் முழு­மை­யாகப் பதவி வகித்த தள­ப­தி­க­ளுக்­குக்­கூட மேலும் இரண்டு வரு­டங்­கள்­வரை நீடிப்பு வழங்­கப்­பட்­டது.

ஆனால், சின்­னை­யா­வுக்கு ஒரு­மாத கால­நீ­டிப்­பையே அரச தலை­வர் வழங்­கி­னார். படைத் தள­ப­தி­யொ­ரு­வ­ருக்கு வழங்­கப்­ப­டும் சிறப்­பு­ரி­மை­கள் அவ­ருக்கு உரி­ய­வ­கை­யில் வழங்­கப்­ப­ட­வில்லை.

தமி­ழர் ஒரு­வ­ரையே தள­ப­தி­யாக நிய­மித்­து­விட்­டோம். இது­தான் நல்­லாட்­சி­யின் நல்­லி­ணக்­கம் என்­பதை காட்­டு­வ­தற்­கா­கவே இந்­தக் குறு­கி­ய­கால நாட­கம் அரங்­கேற்­றப்­பட்டது என்று தமி­ழர் தரப்­பில் குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுáள் ­ளது.

இது தொடர்­பில் அமைச்­சர் மனோ­ வி­டம் வின­வி­ய­தற்கு, நான் ஓர் அமைச்­ச­ராக இருக்­க­லாம். ஆனால், அதை எல்­லாம்­விட நான் ஒரு தமி­ழன்.

எமது மக்­கள் சார்­பில் பேச­வேண்­டிய கடப்­பாடு எனக்கு இருக்­கின்­றது. நீங்­கள் கூறு­வ­து­போல் சின்­னை­யா­வுக்கு பதவி நீடிப்பு வழங்­கப்­ப­டா­தது எனக்­கும் பெரும் கவ­லை­யா­கத்­தான் இருக்­கின்­றது.

தமி­ழர்­கள் என்­றா­லேயே புறக்­க­ணிப்பு, இரண்­டாம்­பட்­சம்­தான் என்ற மனோ­நி­லையை மாற்­று­வ­தற்­காக நான் அர­சுக்­குள் இருந்­த­வாறே முயற்­சித்து வரு­கின்­றேன்.

உள்­நோக்­கத்­தின் அடிப்­ப­டை­யில் இந்த விட­யத்­தில் முடிவு எடுக்­கப்­பட்­டி­ருந்­தால் அது ஏற்­பு­டை­ய­தல்ல என்­பதே எனது கருத்­தா­கும் – – என்­றார்.

http://newuthayan.com/story/41195.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.