Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் மக்கள் மீது எவ்­வாறு தாக்­கு­தல்கள் ஏவி­வி­டப்­பட்­டன? கமால் குண­ரட்­ணவின் நந்­திக்­கடல் புத்­தகம் எடுத்­துக்­காட்டு

Featured Replies

வடக்கில் மக்கள் மீது எவ்­வாறு தாக்­கு­தல்கள் ஏவி­வி­டப்­பட்­டன?

 

கமால் குண­ரட்­ணவின் நந்­திக்­கடல் புத்­தகம் எடுத்­துக்­காட்டு 
(நமது விசேட நிருபர்)

விமல் வீர­வன்ச, கமால் குண­ரட்ண, சரத்­ வீ­ர­சே­கர உள்­ளிட்டோர் தெரி­வித்­தி­ருக்கும் கருத்­துக்­களை பார்க்­கும்­போது அவர்கள் அதி­கா­ரத்­தி­லி­ருக்­கும்­போது எவ்­வாறு செயற்­பட்­டி­ருப்­பார்கள் என்­பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்­டும்­ என்று நிதி­ மற்றும்  ஊட­கத்­துறை  அமைச்சர் மங்­கள சம­ர­வீர தெரி­வித்­தி­ருக்­கிறார்.  

62 இலட்சம் மக்­களின் ஆணைக்கு அமைய புதிய அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்க ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் தலை­மை­யி­லான அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டு வரு­கி­றது. அத்­துடன் நந்­திக்­கடல் என கமல் குண­ரத்­ன­எ­ழு­திய புத்­த­கத்தில் அவர்கள் வடக்கில் அப்­பாவி பொது மக்கள் மீது எவ்­வாறு தாக்­கு­தல்­களை ஏவி விட்­டனர் என்­ப­தையும் எவ்­வாறு அவர்­களின் சொத்­துக்­களை அப­க­ரித்­தனர் என்­ப­தையும் விளக்­கி­யி­ருக்­கிறார். இவ்­வா­றான கடு­மை­யான செயற்­பா­டு­க­ளினால் எவ்­வா­றான வக்­கி­ரத்­தன்­மையை பெற்றுக் கொண்டார் என்­ப­தையும் அவர் விளக்­கி­யி­ருக்­கிறார். இது போன்ற விட­யங்­களே யுத்த குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அமைச்சர் மங்­கள சம­ர­வீர விடுத்­து­ளள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்க்­ப­பட்­டுள்­ளது. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

அண்­மையில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தலை­மையில் நடை­பெற்ற ஒரு நிகழ்வில் பேசிய முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரி­யொ­ருவர் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு ஆத­ரவு தெரி­விப்­ப­வர்கள் கொல்­லப்­பட வேண்டும் என கூறி­யி­ருந்தார். காட்டிக் கொடுப்­ப­வர்­க­ளுக்கு மரண தண்­டனை என்ற விட­யத்தை முன்­வைத்தே அவர் இவ்­வாறு கூறி­யி­ருந்தார். அவ்­வாறு கொல்­லப்­பட்­ட­வர்­க­ளுக்கு எந்­த­வி­த­மான சடங்கும் செய்­யப்­ப­டக்­கூ­டாது என்றும் அவர் கூறி­யி­ருந்தார்.

இந்த நாட்டில் 2015 ஆம் ஆண்டு 63 இலட்சம் மக்கள் நிரந்­தர சமா­தா­னத்­தையும் ஸ்திர தன்­மை­யையும் நல்­லி­ணக்­கத்­தையும் அடை­வ­தற்­காக புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று கொண்­டு­வ­ரப்­பட வேண்டும் என ஆணை­வ­ழங்­கி­யுள்ள நிலை­யி­லேயே அந்த இரா­ணுவ அதி­காரி இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருக்­கிறார். அத்­துடன் அர­சாங்­கமும் மக்­களின் ஜன­நா­யக அர­சாங்கம் என்ற வகையில் ஜனா­தி­பதி மற்றும் பிர­தமர் தலை­மையில் மக்கள் வழங்­கிய ஆணையை நிறை­வேற்ற அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றது.

தோற்க்­க­டிக்­கப்­பட்ட அதி­கார தாக­முள்ள சக்­திகள் ஜன­நா­ய­கத்தை மதிக்­காத நிலையில் ஒரு வெறி­யுடன் செயற்­ப­டு­வதை காண முடி­கி­றது. ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் உள்­நாட்­டிலும் சர்­வ­தே­சத்­திலும் காணப்­டு­கின்ற அங்­கீ­கா­ரத்தை அவர்கள் ஏற்க மறுக்­கின்­றனர். இன­வாத சக்­திகள் இவ்­வாறு உரை­யாற்­றி­ய­மைக்கு நாம் பதி­ல­ளிப்­பது பெறு­ம­தி­யா­ன­தல்ல. மாறாக ஜன­நா­ய­கத்தை மதிக்­கின்ற பெரும்­பா­லான மக்­களின் சார்பில் பேசு­வதே சரி­யா­னது என உணர்­கிறேன். ''வியத்­மக'' என்ற அமைப்­பா­னது கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் அர­சியல் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­யவே உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

வெள்ளை வேன் கலா­சா­ரத்தின் ஸ்தாபக தலை­வ­ரான கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவின் கடு­மை­யான மிரு­கத்­த­ன­மான செயற்­பா­டுகள் தொடர்­பான அவ­ரது கனவு இன்னும் முடி­வுக்கு வர­வில்லை என்­ப­தையே தெரி­கி­றது. கமல் குண­ரத்ன தான் அண்­மையில் எழு­திய புத்­த­கத்தில் இலங்கை இரா­ணு­வத்தை காட்டிக் கொடுத்­தி­ருக்­கிறார்.

''நந்­திக்­கடல்'' என அவர் எழு­திய புத்­த­கத்தில் அவர் வடக்கில் அப்­பாவி பொது மக்கள் மீது எவ்­வாறு தாக்­கு­தல்­களை ஏவி விட்­டனர் என்­ப­தையும் எவ்­வாறு அவர்­களின் சொத்­துக்­களை அப­க­ரித்­தனர் என்­ப­தையும் விளக்­கி­யி­ருக்­கிறார். இவ்­வா­றான கடு­மை­யான செயற்­பா­டு­க­ளினால் எவ்­வா­றான வக்­கி­ரத்­தன்­மையை பெற்றுக் கொண்டார் என்­ப­தையும் அவர் விளக்­கி­ய­ருக்­கிறார். இது போன்ற விட­யங்­களே யுத்த குற்­றச்­சாட்­டு­க­ளுக்கு கார­ண­மாக அமைந்­தி­ருக்­கின்­றன. மேலும் அவர் இரா­ஜ­தந்­திர சேவை­யி­லி­ருந்­த­போது இலங்­கையர் ஒருவர் மர­ண­மா­கி­யமை தொடர்பில் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­கின்­றன.

சரத் வீர­சே­கர என்­ப­வரும் கோத்­தா­பா­யவின் சொல் பேச்சு கேட்­ப­வ­ரா­கவே இருக்­கிறார். அவரும் அர­சி­ய­ல­மைப்பை ஆத­ரிப்­ப­வர்கள் கொல்­லப்­பட வேண்டும் கூறி­யி­ருக்­கிறார். அடுத்­த­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்ச, 1988, 1989 ஆம் ஆண்­டு­களில் மேற்­கொள்­ளப்­பட்ட வழி­மு­றைகள் குறித்து பேசி­யி­ருக்­கிறார். அதா­வது பாரா­ளு­மன்றம் மீது குண்டு வைக்க வேண்டும் என அவர் கூறி­யி­ருக்­கிறார். அவரின் மைத்­து­னரே கடந்த காலத்தில் பாரா­ளு­மன்­றத்தின் மீது குண்டுத் தாக்­குதல் மேற்­கொண்டார். அந்த யுகத்தை மீண்டும் விமல் வீர­வன்ச அழைத்­தி­ருக்­கின்றார். அதன்­மூலம் தான் மிரு­கத்­த­ன­மான அர­சி­யலை கொண்­டவர் என வெ ளிக்­காட்­டி­யி­ருக்­கிறார்.

அதி­கா­ரத்தில் இல்­லா­த­போது அவர்­க­ளினால் இவ்­வா­றான கோர­மான கருத்­துக்­களை முன்­வைக்க முடி­யு­மானால் அதி­கா­ரத்­தி­லி­ருக்­கும்­போது எவ்­வாறு செயற்­பட்­டி­ருப்­பார்கள் என்­பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கூற்­றுக்கள் ஜன­நா­யத்தை விரும்பும் மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பை ஆத­ரிக்கும் மக்­களை ஆபத்தில் போட்­டி­ருக்­கி­றது. அவர்கள் அர­சாங்­கத்தில் இருந்­தாலும் இல்லா விட்­டாலும் இரத்த தாக­மு­டைய கொலை­கா­ரர்­க­ளா­கவே செயற்­ப­டுவோம் என்­பதை அவர்கள் எமக்கு நினைவுப் படுத்­தி­யி­ருக்­கின்­றனர். இந்த நாட்டு மக்கள் ராஜ­பக்ஷ யுகத்தை இன்னும் மறந்­து­வி­ட­வில்லை. சிவி­லி­யன்­களை கடத்­தி­யமை, இர­க­சிய கொலை கார கும்பல் பயன்­ப­டுத்­தப்­பட்­டமை, ஊட­க­வி­ய­லா­ளர்கள் வெ ள்ளை வேனில் கடத்­தப்­பட்­டமை என்­பதை மக்கள் மறக்கவில்லை.

இவ்வாறான நிலை மீண்டும் வரக்கூடாது என்பதற்காக 62 இலட்சம் மக்கள் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என ஆணை வழங்கியிருக்கின்றனர். கடந்த கால இரக்கமற்ற தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டதுடன் நிராகரிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் சர்வாதிகார தலைமைத்துவம் தொடர்பாக இன்னும் அச்சம் கொண்டுள்ளனர்.

எனவே அவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இந்த நாட்டில் நிரந்தர சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம். இரத்த தாகமுடைய இரக்கமற்ற சக்திகளை தோற்கடிக்க நாம் அனைத்து முற்போக்கு மற்றும் சமாதானத்தை விரும்பும் மக்களுடன் இணைந்து செயற்பட தயாராகவிருக்கின்றோம். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-10-27#page-1

46 minutes ago, நவீனன் said:

அண்­மையில் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தலை­மையில் நடை­பெற்ற ஒரு நிகழ்வில் பேசிய முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரி­யொ­ருவர் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு ஆத­ரவு தெரி­விப்­ப­வர்கள் கொல்­லப்­பட வேண்டும் என கூறி­யி­ருந்தார். காட்டிக் கொடுப்­ப­வர்­க­ளுக்கு மரண தண்­டனை என்ற விட­யத்தை முன்­வைத்தே அவர் இவ்­வாறு கூறி­யி­ருந்தார். அவ்­வாறு கொல்­லப்­பட்­ட­வர்­க­ளுக்கு எந்­த­வி­த­மான சடங்கும் செய்­யப்­ப­டக்­கூ­டாது என்றும் அவர் கூறி­யி­ருந்தார்.

ஒரு பயங்கரவாதியால் தான் இப்படிக் கூறமுடியும்.

அந்தப் பயங்கரவாதி வேறு யாருமல்ல - கமால் குணரட்ன என்பவர் தான்.  

இது போன்ற உண்மையான பயங்கரவாதிகள் பலர் சொறிலங்காவில் சுதந்திரமாக நடமாடி திரிகின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.