Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரியாலை இளைஞனை துப்பாக்கியால் சுட்டது விசேட அதிரடிப்படையா?

Featured Replies

அரியாலை இளைஞனை துப்பாக்கியால் சுட்டது விசேட அதிரடிப்படையா?

 

அரியாலை துப்பாக்கி சூடு - தடயப்பொருள் விசேட அதிரடிப்படை முகாமில் சற்று முன் கண்டுபிடிப்பு
அரியாலை கிழக்கு துப்பாக்கி சூட்டு சம்பவத்தை மேற்கொண்டவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்பட்ட முச்சக்கர வண்டி பண்ணையில் உள்ள விசேட அதிரடிப்படை முகாமில் சற்று முன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அரியாலை இளைஞனை துப்பாக்கியால் சுட்டது விசேட அதிரடிப்படையா?

அரியாலை கிழக்கு பகுதியில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து, பின்னர் சிகிச்சை பலனின்றி டொன்பொஸ்கோ ரிக்மன் என்ற இளைஞர் உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவம் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் பாரிய விசாரணைகள் விசேட பொலிஸ் தரப்பால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதில் ஒரு கட்டமாக முப்படைகளையும் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

நேற்று கடற்படை முகாமில் விசாரணை நடத்தப்பட்டது.

தேடுதல் மேற்கொள்ளப்படவில்லை. இன்று விசேட அதிரடிப்படை முகாமில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் குறித்த முச்சக்கர வண்டி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

விரைவில் கைது நடவடிக்கை இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://news.ibctamil.com/ta/internal-affairs/shooting-ariyalai-evidence

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதமேந்திய சிங்களக் கொலைப்படைகள் ஒருபோதும் சிந்தனைமாற்றத்தைக் காணாது என்பதைக் கமால் குணரத்தன முதல்  இந்தக்கொலைகளீறாய்ப் புலப்படுத்துகின்றது. ஆனால், அனைத்துலக குமுகாயமோ  இன்னும் கைப்புண்ணுக்குப் பூதக்கண்காடி தேடிக்கொண்டிருக்கிறது. இனப்பிரச்சினைக்கான தீர்விருக்கட்டும்; முதலில் இந்த அனைத்துலக குமுகாயமானதுதமிழரது காவற்கவசமாக விளங்கிய படைபலத்தைக்  கூட்டுச்சேர்ந்து அழித்தவர்கள் என்றவகையில்  தமிழரது பாதுகாப்பை உறுதிசெய்யும் கடப்பாட்டை நிறைவுசெய்ய முன்வரவேண்டும். சிங்களப்படைகள் முதற்கட்டமாக முகாம்களுள் முடக்கப்பட்டு வெளியேறும் காலஅட்டவணையைத் திட்டமிடுவதோடு, காவற்றுறை அதிகாரம் மாகாணசபைக்குப் பாரப்படுத்தப்பட்டு மாகாணஅரசினது தலைமையின் நேரடிவழிகாட்டலோடு செயற்படவைக்கவேண்டும். அதுஒன்றே இதுபோன்ற அநாமதேயக்கொலைகளை நிறுத்தவும் நீதியை நிலைநாட்டவும் பாரபட்சமின்றிக் காவற்றுறை செயற்படவும் வழியேற்படும்.

  • தொடங்கியவர்

அரியாலை சூட்டுச் சம்பவத்தின் காணொளிக் காட்சிகள் வெளியாகின!

 

அரியாலை கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்மந்தமான கண்காணிப்புக் கமெரா காணொளியினை பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த 22ஆம் திகதி அரியாலைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தினால் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனின்றி அன்றிரவே உயிரிழந்தார்.

இந்த நிலையில் உந்துருளியில் வந்த நபர்களே குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக கொலையுண்டவரின் நண்பர் குறிப்பிட்டிருக்கிறார். சம்பவம் இடம்பெற்றதன்பின்னர் துப்பாக்கிச் சன்னத்தை முச்சக்கர வண்டியில் வந்தவர்கள் எடுத்து சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்.

இதன்படி தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், குறித்த பகுதியிலுள்ள உள்ள கண்காணிப்புக் கமெரா கட்சிகளை பெற்றுக்கொண்டுள்ளனர். குறித்த கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அந்த காட்சிகளின்படி,

பிற்பகல் 2.16 மணிக்கு உந்துருளியில் இருவர் (துப்பாக்கிதாரிகள் என சந்தேகிக்கப்படுபவர்கள்) செல்கிறார்கள்.

2.24 மணிக்கு முச்சக்கர வண்டி ( துப்பாக்கி சன்னம் எடுத்து சென்றதாக சந்தேகிக்கப்படும்) ஒன்று அவ்வழியால் செல்கிறது

2.24 மணிக்கு பின்னர் சில வினாடிகளில் அப்பகுதியால் ரிக்மனும் (கொலையுண்டவர்) அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் செல்கிறார்கள்.

2.42 மணிக்கு (துப்பாக்கி சூட்டின் பின்) ரிக்மனை மோட்டார் சைக்கிளில் ஏற்றியபடி நண்பர்கள் செல்கிறார்கள்.

மேற்குறித்த காட்சிகள் அடங்கிய காணொளியினை அடிப்படையாக வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

அதன் அடிப்படையிலேயே குறித்த முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன விசேட அதிரடிப்படையின் முகாமில் உள்ளதாக தகவல் கிடைத்தது. அதனையடுத்து பொலிஸார் அங்கு செல்வதற்கு நீதிமன்ற அனுமதி பெற்றுக்கொண்டனர்.

ஆனால் குறித்த பகுதிக்கு செல்லவேண்டாம் என்று மேலிடத்திலிருந்து உத்தரவு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அந்த உத்தரவின்படி குறித்த அதிரடிப்படை முகாமிற்குள் புகுந்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொள்வது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

https://news.ibctamil.com/ta/internal-affairs/shooting-in-ariyalai-28

  • தொடங்கியவர்

அரியாலை துப்பாக்கிச் சூடு- சந்தேக நபர்களின் சீ.சீ.ரி.வி புகைப்படங்கள் வெளியாகின

 

 

  அரியாலை துப்பாக்கிச் சூடு- சந்தேக நபர்களின் சீ.சீ.ரி.வி புகைப்படங்கள் வெளியாகின

மணியம் தோட்டம், உதயபுரம் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் விசாரணை வலயத்தில் உள்ள சீ.சீ.ரி.வி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 22 ஆம் திகதி குறித்த பகுதியில் இளைஞர்கள் மீது இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 24 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்மன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ள விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மேற்படி சம்பவம் இடம்பெற்ற தினம் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்களில் தொடர்பான காணொளியே பொலிஸாரின் விசாரணை வலயத்தில் தற்போது உள்ளது. குறித்த காணொளியில் உயிரிழந்த இளைஞர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் செல்வது பதிவாகியுள்ளதுடன், அதற்கு முன்னதாக சந்தேகத்திற்கு இடமான முறையில் முச்சக்கரவண்டி ஒன்று செல்வதும், உயிரிழந்த இளைஞர் செல்வதை தொடர்ந்து மேலும் இருவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்வரும் இந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
மேற்படி ஆதாரங்களை வைத்தே, முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றியிருப்பதுடன், துப்பாக்கிதாரிகளையும் கைது செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.(15)cctv-jaffna-291017-seithy (2)cctv-jaffna-291017-seithy (3)

http://www.samakalam.com

 

 

அரியாலை சூட்டு சம்பவம் : CCTVயில் கிடைத்த சாட்சிகள்

 

 

அரியாலை சூட்டு சம்பவம் : CCTVயில் கிடைத்த சாட்சிகள்

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் அண்மையில் துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாரும் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் அது தொடர்பாக அவர்கள் பல்வேறு தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக சம்பவம் இடம்பெற்ற பகுதியிலுள்ள வீடொன்றின் சீ.சீ.ரீ.வி கமார காட்சிகளை ஆராய்ந்துள்ளதுடன் இதன்மூலம் குறித்த இளைஞன் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கு முன்னர் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் முச்சக்கர வண்டியொன்றும் மற்றும் பின்னால் மற்றுமொரு மோட்டார் சைக்கிளொன்றும் செல்வது பதிவாகியுள்ளது. -(3)Shoot 01Shoot 02

 

http://www.samakalam.com/

  • தொடங்கியவர்

அரியாலைக் கொலையை விசாரிக்க கொழும்பிலிருந்து பொலிஸ் குழு!!

 

அரி­யா­லை­யில் இளை­ஞன் சுட்­டுக் கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­ க­ளுக்­காக கொழும்­பி­லி­ருந்து தனி­யான குற்ற விசா­ர­ணைப் பிரி­வுப் பொலிஸ் குழு ஒன்று நேற்று வந்து

உட­ன­டி­யா­கவே யாழ். பொலி­ஸா­ரிடம் இருந்து வழக்கு விசா­ர­ணை­கள் அனைத்­தை­யும் அது பொறுப்­பெ­டுத்­துக் கொண்­டது.

கொலையை செய்­தி­ருக்­கக்­கூ­டி­ய­வர் கள் என்று சந்­தே­கி­கப்­ப­டும் நபர்­களை யாழ்ப்­பா­ணம் பொலி­ஸார் நெருங்­கி­யி­ருந்த தரு­ணத்­தில் கொழும்­பி­லி­ருந்து வந்­தி­ருக்­கும் தனிக் குழு விசா­ர­ணை­க­ளைப் பொறுப்­பெ­டுத்தி ருக்­கி­றது.

கொலை நிகழ்ந்த இடத்­திற்கு அரு­கில் இருந்த சிசி­ரிவி கமெ­ராக்­க­ளின் உத­வி­யு­டன் கொலை­யு­டன் தொடர்­பு­டை­யவை என்று சந்­தே­கிக்­கப்­ப­டும் ஓட்டோ மற்­றும் மோட்­டார் சைக்­கிள் என்­ப­வற்றை பொலி­ஸார் இனங்­கண்­ட­னர். கொல்­லப்­பட்­ட­வர்­கள் மோட்­டார் சைக்­கி­ளில் செல்­வ­தும் அவர்­க­ளின் பின்­ன◌ால் அந்த ஓட்டோ செல்­வ­தும் அதன் பின்­னால் மற்­றொரு மோட்­டார் சைக்­கி­ளில் இரு­வர் செல்­வ­து­மான காட்­சி­கள் அதில் தெளி­வா­கப் பதி­வா­கி­யுள்­ளன.

விசா­ர­ணை­க­ளில் அந்த ஓட்டோ பாது­காப்பு அமைச்­சின் கீழ் பதி­யப்­பட்டு படை­யி­ன­ரின் பயன்­பாட்­டில் இருந்­தமை கண்­ட­றி­யப்­பட்­டது.

IMG-20171028-WA0021-750x400.jpg

கடற்­ப­டைப் புல­னாய்­வா­ளர்­க­ளால் ஓட்டோ பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தான தக­வல்­களை அடுத்து நீதி­வா­னின் அனு­ம­தி­யு­டன் மண்­டை­தீவு கடற்­படை முகா­மி­னுள் பொலி­ஸார் தேடு­தல் நடத்­தி­னர். ஆனால், ஓட்டோ அங்கு கிடைக்­க­வில்லை. தொடர் விசா­ர­ணை­க­ளில் அந்த ஓட்டோ சிறப்பு அதி­ர­டிப் படை­யி­ன­ரா­லும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தான தக­வல்­கள் கிடைத்­தி­ருந்­தன.

image-750x400.jpg

இதை­ய­டுத்து பண்­ணை­யில் உள்ள சிறப்பு அதி­ர­டிப் படை முகா­மி­னுள் தேடு­தல் நடத்­து­வ­தற்­கான அனு­ம­தி­யைப் பொலி­ஸார் நீதி­வா­னி­டம் கோரி­யி­ருந்­த­னர். இந்­தச் சம­யத்­தில் விசா­ர­ணை­களை இடை­நி­றுத்தி அவற்­றைக் கொழும்­பி­லி­ருந்து வரும் குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வின் தனிக் குழு­வி­டம் ஒப்­ப­டைக்­கும்­படி பொலி­ஸா­ருக்கு மேலிட உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது. இத­னால் பண்ணை சிறப்பு அதி­ர­டிப் படை முகா­மி­னுள் சோதனை நடத்­து­வது தடைப்­பட்­டது.

நேற்று மாலை யாழ்ப்­பா­ணத்தை வந்­த­டைந்த தனிக் குழு விசா­ர­ணை­க­ளைப் பொறுப்­பெ­டுத்­துக் கொண்­டது. யாழ்ப்­பா­ணப் பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரி­யி­டம் விவ­ரங்­க­ளைப் பெற்­றுக்­கொண்ட அவர்­கள் சிறப்பு அதி­ர­டிப் படை அதி­கா­ரி­க­ளு­ட­னும் இது குறித்து நேற்­றுப் பேச்­சுக்­க­ளில் ஈடு­பட்­ட­னர் என்று “உத­யன்” அறிந்­தான்.

IMG-20171028-WA0022-750x400.jpg

கொலை­யோடு தொடர்­பு­டை­யது என்று சந்­தே­கிக்­கப்­ப­டும் ஓட்­டோவை அந்­தச் சம­யத்­தில் செலுத்­திச் சென்­ற­வர்­கள் இன்­றைய தினம் அனே­க­மா­கக் கைது செய்­யப்­ப­ட­லாம் என்று பொலிஸ் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

http://newuthayan.com/story/41755.html

  • தொடங்கியவர்

அரியாலை டொன் பொஸ்கோ ரிக்மனின் கொலையில் CC TV காணொளி துப்புதுலக்குமா?

Untitled-1-1.jpg

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கடந்த 22 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனின் கொலை தொடர்பான காவற்துறையினரின் விசாரணையில் CC TV காணொளி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலியான 24 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்மனின், கொலையில் துப்புதுலக்குவதற்காக, கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் கடந்த 25 ஆம் திகதி மண்டைதீவு கடற்படை முகாமிலும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். இளைஞனை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட வாகனத்தினை மண்டைதீவு கடற்படை முகாமில் கண்டதாக காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த தேடுதல் இடம்பெற்றது.

கடற்படை முகாமில் வாகனத்தை சோதனை செய்வதற்கான அனுமதி நீதிமன்றத்தில் பெறப்பட்டு அதனடிப்படையில் கடந்த 25 ஆம் திகதி மாலை திடீரெனச் சென்ற குழுவினர் கடற்படை முகாமில் அவ்வாறான வாகனம் ஏதும் உள்ளதா என்பது குறித்து சோதனை நடத்தியுள்ளனர். எனினும் அங்கு அத்தகையதொரு தடயமும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள குறித்த குழுவினர் தொடர்ந்தும் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில், காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற CC TV  காணொளியில், சம்பவம் இடம்பெற்ற தினம் அந்தப் பகுதியில் சென்ற முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் காணப்படுகிறது. இவை குறித்து பார்வையை திருப்பியுள்ள காவற்துறையினர் சந்தேகத்திற்கு இடமான வாகன பிரசன்னம் குறித்து விசாரணைகளை முடுக்கியுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இந்த CC TV காணொளியில் உயிரிழ்ந்த இளைஞர் அவரது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் செல்வது பதிவாகியுள்ளது.

cctv3.jpg

இந்த மோட்டார் சைக்கிளை முந்திக்கொண்டு சந்தேகத்திற்கு இடமான முறையில் முச்சக்கரவண்டி ஒன்று செல்வது பதிவாகியுள்ளது.

cctv2.jpg

உயிரிழந்த இளைஞர் செல்வதை தொடர்ந்து மேலும் இருவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடரும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

cctv.jpg

இந்த தடயங்களை அடிப்படையாகக்கொண்டு முச்சக்கரவண்டியையும், மோட்டார் சைக்கிளையும், விசாரணை வலையத்துள், காவற்துறையினர் கொண்டு வந்திருப்பதுடன், கொலையாளிகளை இனம் காணும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதேவேளை இந்தக் கொலை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவந்த யாழ் காவற்துறை குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணைகளை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ள காவற்துறைமா அதிபர், கொழும்பில் இருந்து காவற்துறை உயர் அதிகாரி திசேரா தலமையிலான குழுவனிரை விசாரணைகளுக்காக அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை டொன் பொஸ்கோ ரிக்மனின் கொலையில் பல மர்மங்கள் வெளிவராது இருப்பதாகவும், இதனைத் திசை திருப்பவே காவற்துறை இந்த CC TV காணொளியை வெளியிட்டு இருப்பதாகவும், கடற்படை முகாம், விசேட அதிரடிப்படை முகாம் என தேடுதல்களை மேற்கொண்டதாகவும், யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இன்று யாழ் சென்றடைந்த கொழும்பின் உயர்மட்ட காவற்துறை விசாரணைக் குழு கொலையின் உண்மையை வெளிக்கொண்டு வருமா? இன்றி கொலையாளிகளை பாதுகாக்குமா என்பதனை பொறுத்திருந்தே பார்க்க முடியும் என யாழ் முக்கியஸ்த்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/47437

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.