Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊழல், போர்க்­குற்­றங்­க­ளி­லி­ருந்து தப்­பு­வ­தற்­காக இடைக்­கால அறிக்­கையை எதிர்க்­கி­றார்கள்.... ஒற்­று­மையைக் கருத்­திற்­கொண்டு அமைதியாக இருக்­கிறோம் என்­கிறார் மாவை எம்.பி.

Featured Replies

ஊழல், போர்க்­குற்­றங்­க­ளி­லி­ருந்து தப்­பு­வ­தற்­காக இடைக்­கால அறிக்­கையை எதிர்க்­கி­றார்கள்

Sp23-b2771e667e841dcd58c5013ddc1d98e1433c57cc.jpg

 

ஒற்­று­மையைக் கருத்­திற்­கொண்டு அமைதியாக இருக்­கிறோம் என்­கிறார் மாவை எம்.பி.

(எம்.நியூட்டன்)

ஊழல்­களை மறைக்­கவும் போர்க் குற்றம் புரிந்­த­வர்கள் தப்பிச் செல்­லவும் ஆட்­சியைக் கவிழ்க்க வேண்டும் என்­ப­தற்­காகவும் தான் தமிழ் மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்கான தீர்வு விடயத்தை இன­வா­த­மாகப் பார்க்­கி­றார்கள். இத­னால்தான் வெளி­வந்­துள்ள இடைக்­கால அறிக்­கையை எதிர்க்­கின்ற நிலைமை உருவாகி யுள்ளது எனத் தெரி­வித்த இலங்கை தமி­ழ­ரசுக் கட்சித் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா, எம்மை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு உரிய பதிலை வழங்­க முடியும். எனினும் ஒற்­று­மையைக் கருத்­திற்­கொண்­டுதான் அமை­தி­யாக இருக்­கின்றோம் என்றும் குறிப்­பிட்டார்.

இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் காங்­கே­சன்­துறை தொகுதி கிளையின் புதிய அலு­வ­லகத் திறப்பு விழா நேற்று மாவிட்­ட­பு­ரத்தில் நடை­பெற்­றது. இந்­நி­கழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய மாவை எம்.பி. மேலும் தெரி­விக்­கையில், 

பல போராட்­டங்கள், தியா­கங்கள் மத்­தியில் வாழ்ந்த நாங்கள் பத­வி­க­ளுக்­காக போராட்­டங்­களைச் செய்­ய­வில்லை. மகிந்த ராஜபக் ஷவின் ஆட்­சி­யா­னது கொடுங்கோல், இரா­ணுவ ஆட்சி. நாங்கள் அத்­த­கைய பாதை­களில் போரா­டி­ய­வர்கள். பத­வி­க­ளுக்­காகப் போரா­ட­வில்லை. அதற்­காக அதனை சுமந்து கொள்­ள­மாட்டோம் என்றும் அர்த்தம் இல்லை.

சமஷ்டி தன்மை வாய்ந்த அர­சி­ய­ல­மைப்பில் அதி­காரப் பகிர்வு, நிதி­களைக் கையாளும் விட­யங்கள், வடக்கு, கிழக்கு இணைப்பு முயற்­சி­களில் ஈடு­பட்டு வரு­கின்றோம். அர­சாங்­கத்­திற்கும் இதற்­கான கட­மைகள் இருக்­கின்­றது. இத்­த­கைய சந்­தர்ப்­பத்தைத் தூக்கி வீசி­விட்டு வனாந்­த­ரத்தில் நிற்­க­மு­டி­யாது. இதற்­காக மக்கள் எமக்கு ஆணை தர­வில்லை. இரா­ஜ­தந்­திர ரீதியில் ஐ.நா. பேர­வை­யூ­டாக சந்­தர்ப்பம் கிடைத்­தி­ருப்­பதை நாங்கள் தூக்கி வீச முடி­யாது. அதற்­கான காலம் இருக்­கி­றது. இந்த வரு­டத்தில் அதற்­கான முடி­வுகள் எடுக்க வேண்­டி­வரும். இத்­த­கைய நிலையை தொடர்ந்து கொண்டு செல்­ல­மு­டி­யாது. இதனைத் தான் ஐ.நா. இரா­ஜ­தந்­தி­ரி­களும் சர்­வ­தேச இரா­ஜ­தந்­தி­ரி­களும் கூறி­வ­ரு­கி­றனர். தற்­போ­தைய சந்­தர்ப்பம் போல் இதற்கு முன்னர் இருந்­த­தில்லை. இனி­மேலும் வருமோ என்று கூற­மு­டி­யாது. இதனை ஏற்­றுக்­கொள்­கின்ற மனப்­பான்மை வேண்டும்.

தற்­போது ஏற்­பட்­டுள்ள சூழ்­நி­லை­யா­னது குறிப்­பாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி, ஐக்­கிய தேசியக் கட்சி இணைந்­துள்ள நிலையில், ஐ.நா.பேர­வை­யா­னது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் தொடர்ச்­சி­யாக 2011 ஆம் ஆண்டு முதல் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களை அமுல்­ப­டுத்­து­வதில் தொடர்ந்து பேசி வரு­கின்­றது. இவற்றைக் கருத்திற் கொண்­டுதான் இனப்­பி­ரச்­சினைத் தீர்வு மற்றும் ஏனைய பிரச்­சி­னைகள் தொடர்பில் எந்­நே­ரமும் கலந்­து­ரை­யா­டலை மேற்­கொண்டு மக்­க­ளது ஆணையை நிறை­வேற்ற முயற்­சித்துக் கொண்­டி­ருக்­கின்றோம். அப்­ப­டியும் இந்த அரசு ஏமாற்­றினால் பான் கீ மூனுக்கு கூறி­ய­து­போல வடக்கு, கிழக்கில் சிங்­கள தேசத்தின் ஆட்சி நிர்­வாக ரீதி­யா­கவோ அல்­லது மாற்று வழி­யிலோ இல்­லா­தி­ருக்­கக்­கூ­டிய திட்­டங்­களை ஏற்­ப­டுத்த சர்­வ­தே­சத்­துடன் இணைந்து தீர்­மா­னங்­களை எடுக்­க­வேண்­டி­வரும். இதனைச் செய்­வ­தற்கும் நாம் ஆயத்­த­மாக இருக்­கின்றோம்.

எங்கள் தலை­வர்­களைப் பற்றி சிலர் விமர்­ச­னங்­க­ளையும் கண்­டனத்­தையும் கூறு­கி­றார்கள். முடிந்­த­ள­வுக்கு ஒற்­றுமை காத்துச் செல்­கின்ற பக்­கு­வத்தை இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி கொண்டுள்ளது. இத­னால்தான் நாங்கள் பொறு­மையைக் காத்து வரு­கின்றோம். இதற்கு எதி­ராக நாங்கள் அணி­தி­ரள முடியும். எனினும் எங்­க­ளுக்குக் கிடைத்­துள்ள வாய்ப்­புக்­களை நாங்கள் முறை­யாகப் பயன்­ப­டுத்த வேண்டும். இத­னால்தான் அமை­தி­யாக இருக்­கின்றோம்.

மாகாண சபை­யூ­டாக பல அனு­ப­வங்­களைப் பெற்­றுள்ளோம். இந்த மாகாண சபையில் படிக்­கா­த­வர்கள் யாரா­வது இருந்­தார்­களா? அனு­ப­வஸ்­தர்கள் இருந்­தார்கள். இதன் பயனை நாங்கள் ஏக்­கத்­து­ட­னேயே பார்க்­கின்றோம். மக்­க­ளுக்கு ஏமாற்­றத்தைக் கொடுத்­த­வர்­க­ளா­கவே இருக்­கின்றோம். முத­ல­மைச்சர் பதவி பிரச்­சி­னை­யல்ல. எங்­க­ளு­டைய மக்கள் விடு­தலை பெற­வேண்டும் என்­ப­தற்­காக என்னை அர்ப்­ப­ணிப்­பதே என்­னு­டைய விருப்பம்.

புதிய அர­சி­ய­ல­மைப்புத் தொடர்பில் ஒரு இடைக்­கால அறிக்கை வெளி­வந்­துள்­ளது. இது அர­சியல் தீர்வுத் திட்டம் அல்ல. இதனைத் திரித்துப் பேசு­கி­றார்கள். ஒரு நாட்­டி­னு­டைய அமைப்பு ஒற்­றை­யாட்­சியா? சமஷ்­டியா? என்பது முக்கியமானது. சந்­தி­ரிகா முத­லா­வ­தாக அதனைத் திறந்து வைத்தார். ஒற்­றை­யாட்­சியை ஒழித்து பிராந்­தி­யங்­களில் ஒன்­றி­யங்கள் என்று ஒரு பிரே­ரணை கொண்டு வந்தார். அன்று ஐ.தே.கட்சி அதனை எதிர்க்­கா­தி­ருந்­தி­ருந்தால் அந்தப் பிரே­ர­ணைகள் எமக்குப் பலத்தைத் தந்­தி­ருக்கும். தற்­போது பாரா­ளு­மன்­றமே அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­க­வேண்­டு­மென்று தீர்மானம் எடுத்துள்ளது.

அதற்­காகப் பல குழுக்கள் அமைக்­கப்­பட்­டன. இதில் அதி­கா­ரங்­களைப் பகிர்­வதில் ஒரு முன்­னேற்றம் ஏற்­பட்­டுள்­ளது. ஒன்­பது முத­ல­மைச்­சர்­க­ளி­டத்­திலும் நாங்கள் அங்கம் வகிக்கும் 6 குழுக்­க­ளிலும் அதி­கா­ரங்கள் உச்­ச­மாகப் பகி­ரப்­பட வேண்­டு­மென்று திட்­ட­வட்­ட­மாகப் பேசி­யி­ருக்­கின்றோம். இது ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

முத­ல­மைச்சர் உட்­பட பலர் இதனை நிரா­க­ரிக்­கின்றோம் என்று கூறு­கி­றார்கள். தற்­போது வெளி­வந்­தி­ருப்­பது ஒரு இடைக்­கால அறிக்கை. தீர்வுத் திட்டம் அல்ல. இன்னும் படிக்­க­வில்லை. ஆனால், அதை நிரா­க­ரிக்­கின்றேன் என்று கூறு­வதன் அர்த்தம் என்ன. அது நிரா­க­ரிக்­கப்­ப­ட­வேண்­டி­யது அல்ல. அது மேம்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டி­யது. இதில் ஒன்றும் இல்­லை­யென்று சிலர் வாதா­டு­கி­றார்கள். ஆனால் அனைத்துக் கட்சித் தலை­மை­களும் இணைந்து ஒரு இணக்­கத்தை எட்­டு­வ­தற்­காக இந்தப் பிரே­ர­ணையை முன்­வைத்­தி­ருக்­கி­றார்கள். ஒற்­றை­யாட்சி அல்ல சமஷ்டி என்ற சொல் பாவிக்­கப்­ப­ட­வில்லை. ஆனால்

இப்­போது வெளி­வந்­த­துதான் இறுதித் தீர்­மானம் என்று நாங்கள் கூற­வில்லை. பொருத்­த­மான இணக்­கங்கள் எங்கு வரு­கின்­றதோ அதுதான் தீர்­மா­னங்கள் ஆகும்.

ஏக்கிய இராஜ்­ஜிய என்று சிங்­க­ளத்­திலும் ஒரு­மித்த நாடு என்றும் தமி­ழிலும் கூறப்­ப­டு­கின்­றது. இதனை ஏற்கச் செய்­வ­தற்கு பல நெருக்­க­டி­களைச் சந்­தித்தோம். அப்­ப­டி­யி­ருந்தும் இதில் ஒன்­று­மில்லை என்று கூறி­கின்­றார்கள். பெளத்த பிக்­கு­களும் அவர்­களை தவ­றாக வழி­ந­டத்­திய மஹிந்த ராஜபக் ஷவும் தங்­க­ளு­டைய ஊழல்­களை மறைக்­கவும் போர்க் குற்றம் செய்­த­வர்கள் இவற்­றி­லி­ருந்து தப்பிச் செல்­வ­தற்கும் இந்த ஆட்­சியைக் கவிழ்க்க வேண்டும் என்­ப­தற்­காக எங்­க­ளு­டைய இனப்­பி­ரச்­சி­னையை இன­வா­த­மாகப் பார்க்­கி­றார்கள்.

அவர்­க­ளு­டைய சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் இது­வொரு ஆபத்­தான தீர்­மானம் என்றும் ஒரு­மித்த நாடு என்றும் பயன்­ப­டுத்­து­வ­தற்கு விளக்கம் தேவை என்று குரல் எழுப்­பு­கி­றது. அவர்­களே இதற்கும் பதில் கூறு­கி­றார்கள்.

நாங்கள் இவை பற்றி அதிகம் பேச­வில்லை. கூறினால் பிரச்சினையை மேலும் கூட்டிவிடும். அதைக்கூட விளங்குவதற்கு சந்தர்ப்பம் இல்லாமல் நிராகரிக்கின்றோம் என்று ஒரு பகுதியினர் கூறுகின்றார்கள். அது அவர்களுடைய ஜனநாயகம். இதற்கு எதிராக மக்கள் போராடினால் கூட நாங்கள் அதனை ஏற்போம். ஆனால் நாங்கள் வழிகாட்ட வேண்டும். மக்கள் எமக்கு ஆணை தந்திருக்கின்றார்கள். சர்வதேச சமூகத்தின் ஆதரவு அவர்களுடைய தலையீடு எப்போதும் இருக்கும் என்று யாரும் தீர்மானிக்க வேண்டாம். முன்னெப்போதுமில்லாத சந்தர்ப்பம் இன்று ஏற்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைப் பேரவையூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும். அதுமட்டுமன்றி ஏனைய விடயங்களும் தீர்த்து வைக்கப்படவேண்டும். இதற்காகத் தான் நாங்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றோம் என்றார். 

http://epaper.virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

ஐ.நா. மனித உரிமைப் பேரவையூடாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும். அதுமட்டுமன்றி ஏனைய விடயங்களும் தீர்த்து வைக்கப்படவேண்டும். இதற்காகத் தான் நாங்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றோம் என்றார். 

உங்களுக்கு நம்பிக்கை இருக்கு போலகிடக்கு சிங்களவ்ர்கள் எதாவது தருவார்கள் என்று  .....ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.