Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை!

Featured Replies

புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை!

 
புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை!
 

பிலியந்தலை பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 30 போ் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளியாக இனங்காணப்பட்ட நபருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

2007ம் ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றின் மீது
குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் 30 பேர் உயிரிழந்ததோடு சுமார் 42 பேர் வரை காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில், தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கின் மீதான விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிபதி பியசேன ரணசிங்க குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து தீா்ப்பளித்தார்.

http://newuthayan.com/story/44881.html

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கும் கைதிகள் மீது ஏதாவது  ஒரு கேசைப்போட்டு உள்ள தள்ளுங்கடா நாங்க இப்படியே பார்த்திட்டு போறம் tw_cold_sweat:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவி மக்களை கொலைசெய்த, புலி உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை


பிலியந்தலை பேருந்து நிறுத்தத்தில் கிளேமோர் குண்டு பொருத்திய மற்றும் வெடிக்கச் செய்த வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று -08- ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. 2007ஆம் ஆண்டு பிலியந்தலை பேருந்து நிறுத்தம் அருகே சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்றில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பேருந்தில் பயணம் செய்த முப்பது பேர் கொலை செய்யப்பட்டனர். 42 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் சச்சிதானந்தன் ஆனந்த சுதாகர் எனப்படும் வசந்தன் மற்றும் தேவேந்திரன் சின்னையா ஆகியோர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டது. நீதிபதி பியசேன ரணசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. அதில், சந்தேக நபர்கள் மீதான குற்றங்களை அரச தரப்பு சட்டத்தரணிகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்திருப்பதாகக் கூறி, முதலாவது சந்தேக நபருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். இரண்டாவது சந்தேக நபரான தேவேந்திரன் சின்னையா விசாரணையின்போதே உயிரிழந்து விட்டமை குறிப்பிடத்தக்கது. Posted in: செய்திகள்

முழு விபரம்: http://www.akuranatoday.com/news/?p=183759 .
 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

விசாரணையின்போதே உயிரிழந்து விட்டமை குறிப்பிடத்தக்கது

நைஸ் கன்றியா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.