Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவம்பர் 24-ம் தேதி நமீதாவுக்கு திருமணம்

Featured Replies

நவம்பர் 24-ம் தேதி நமீதாவுக்கு திருமணம்

 

 

 

namitha

தமிழ் திரையுலகின் பல்வேறு படங்களில் நடித்த நமீதாவுக்கும், வீராவுக்கும் நவம்பர் 24-ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நமீதா. அதனைத் தொடர்ந்து 'ஏய்', 'இங்கிலீஷ்காரன்', 'சாணக்யா', 'கோவை பிரதர்ஸ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இறுதியாக 2016-ம் ஆண்டு 'இளமை ஊஞ்சல்' படத்தில் நடித்திருந்தார். விரைவில் பரத்துடன் இவர் நடித்துள்ள 'பொட்டு' வெளியாகவுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்பு, சில காலம் ஓய்வில் இருந்து வந்தார் நமீதா

தற்போது 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரைசா தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ பதிவொன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் "நமீதா மற்றும் வீர் இருவரும் திருமணம் செய்யவுள்ளார்கள். இதை அறிவிப்பதில் சந்தோஷப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ பதிவில் நமீதா பேசியிருப்பதாவது

நானும் வீரேந்திராவும் நவம்பர் 24-ம் தேதி திருமணம் செய்யவுள்ளோம். உங்களது அனைவருடைய அன்பும், ஆதரவும் வேண்டும். நன்றி மச்சான்ஸ்

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article20088302.ece

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வடையும் போச்சி

  • தொடங்கியவர்

'யெஸ்.... எனக்கு கல்யாணம்!' நெகிழும் நமீதா

நடிகை நமிதாவுக்கு டும்டும்டும். நமீதாவுக்கும் அவரது நண்பர் வீரா என்பவருக்கும் வரும் நவம்பர் 24-ம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது. இதுகுறித்து பிக்பாஸ் ரைசா  ட்விட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.

திருமணம் குறித்து நமீதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “நானும் வீராவும் திருமணம் செய்யப்போவதாக வெளியான தகவல் உண்மை தான். எங்கள் இருவருக்கும்  நவம்பர் 24ம் தேதி திருப்பதியில் திருமணம் நடக்கிறது. இது காதலுக்குப் பின் உறவினர்களின் சம்மதத்தோடு நடைபெறும் திருமணம்.

நமிதா

எங்களின் இருவரின் நெருங்கிய நண்பரான ஸ்ரீதர் பாபு என்பவரால் எங்களிடையே நட்பு ஏற்பட்டது. அதன்பின்னர் அந்த நட்பு நெருக்கமானது. கடந்த செப்டம்பர் 6ம் தேதி ஒரு இரவு விருந்தில் வீரா என்னிடம் தனது காதலைச் சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. ஏனெனில் நாங்கள் இருவரும் முன்னரே எங்கள் எதிர்கால லட்சியங்கள், பிடித்தவைகள் குறித்து பகிர்ந்திருந்தோம். அவருக்கு உடனே ஓ.கே. சொல்லி விட்டேன். எனக்கு முக்கியத்துவம் தருகிற ஒருவருடன் இருப்பது பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன். கடந்த 3 மாதங்களாக வீராவை நான் முழுமையாகப் புரிந்து கொண்டுள்ளேன். அவர் எனக்குக் கிடைத்தது அதிர்ஷ்டம். அவருடைய ஆதரவு மற்றும் கனிவால் ஆண்களின் மீதான எனது நம்பிக்கை மீண்டு வந்துள்ளது. தொடக்க காலத்தில் இருந்தே எனக்கு ஆதரவளித்து வரும் அனைவருக்கும் எனது நன்றி. எங்கள் இருவருக்கும் உங்கள் வாழ்த்துகளும் அன்பும் வேண்டும். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்’ என்று நமீதா கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/cinema/107421-namitas-statement-about-her-marriage.html

  • தொடங்கியவர்

வீராவுடன் காதல் மலர்ந்தது எப்படி? - நமீதா விளக்கம்

 

 
namithajpg

வீராவுடன் காதல் மலர்ந்தது எப்படி என்று நமீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருக்கிறார்.

'எங்கள் அண்ணா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நமீதா. அதனைத் தொடர்ந்து 'ஏய்', 'இங்கிலீஷ்காரன்', 'சாணக்யா', 'கோவை பிரதர்ஸ்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

     

நவம்பர் 24-ம் தேதி தயாரிப்பாளர் மற்றும் நடிகர் வீராவை திருமணம் செய்யவுள்ளதாக நமீதா வீடியோ பதிவொன்றில் தெரிவித்திருந்தார்.

இத்திருமணம் குறித்து நமீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

அனைவருக்கும் வணக்கம், நானும் வீராவும் வரும் நவம்பர் 24-ம் தேதி திருப்பதி கோயிலில் திருமணம் செய்து கொள்ளவிருக்கும் செய்தி உங்களை இந்நேரம் வந்தடைந்திருக்கும். வீரா என்னுடைய சிறந்த நண்பர், என் மனதுக்கு இனியவர். அவர் தயாரிப்பாளர் என்பதுடன் ஆர்வமிக்க நடிகர். இந்தத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட காதல் திருமணம்.

namitha3jpg
 

எங்கள் சிறந்த நண்பர் சஷிதர் பாபு மூலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் நல்ல நண்பர்களானோம். செப்டம்பர் 6, 2017-ல் கடற்கரையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் எங்களுக்கு இரவு உணவு விருந்து அளிக்கும் போது காதலை வெளிப்படுத்தினார். நான் மெய்சிலிர்த்துப் போனேன். ஏனென்றால் நான் இதை எதிர்பார்க்கவேயில்லை. ஆனால், இருவரும் ஒரே வாழ்க்கை லட்சியத்தைப் பகிர்ந்து கொள்கிறோம், இருவரும் ஆன்மிக விழிப்பு பெற்றவர்கள் ஆகிய காரணத்தினால் நான் அவரது இந்த விருப்பத்துக்கு சம்மதம் தெரிவித்தேன். பயணம், மலையேறுதல், இயற்கையை ரசித்தல் என்று இருவருமே அன்பைப் பகிர்ந்து கொண்டோம்.

namitha2jpg
 

இருவருக்குமே விலங்குகளை நேசிப்பவர்கள், இருவருக்குமே வாழ்க்கை மீது பெரிய நேசமும் பற்றுதலும் இருக்கிறது. என்னை ஒருவர் அவரது வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்தது குறித்து நான் ஆசிர்வதிக்கப்பட்டவளாக என்னை உணர்ந்தேன். இருவருக்குமிடையே ஒளிவு மறைவு கிடையாது. கடந்த 3 மாதங்களாக நான் அவரை நிரம்பவும் புரிந்து கொண்ட பிறகு அவருடன் சேர்ந்து வாழ்வதை இன்னும் கூடுதல் அதிர்ஷ்டமாக உணர்ந்தேன். அவரது மென்மையான அக்கறை மற்றும் ஆதரவினால் ஆண்கள் மீதான என் நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது. எனக்கு ஆதரவளித்த உங்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றிகள், உங்கள் நேசத்தையும் ஆசீர்வாதத்தையும் இருவருமே நாடுகிறோம். நன்றி, கடவுள் உங்களைக் காப்பார்.''

இவ்வாறு நமீதா  தெரிவித்திருக்கிறார்.

namitha1jpg

http://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article20103151.ece

  • கருத்துக்கள உறவுகள்
On 10/11/2017 at 8:03 AM, colomban said:

இந்த வடையும் போச்சி

இது உங்களுக்கு வடையா ஐயா????

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

காதலரை மணந்தார் நடிகை நமீதா! திருப்பதியில் நடைபெற்ற திருமணத்தின் புகைப்படங்கள் 

 

 
IMGL8454

 

எங்கள் அண்ணா படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான நடிகையாக உள்ள நமீதா தனது காதலர் வீரேந்திர செளத்ரியைத் திருமணம் செய்துள்ளார். நடிகை நமீதா - வீரேந்திர சவுத்திரி திருமணம், திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள  ஹரேராமா ஹரே கிருஷ்ணா கோயிலில் இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

சரத்குமார், ராதிகா, சக்தி, ஆர்த்தி, காயத்ரி ரகுமார் போன்ற தமிழத் திரையுலகைச் சேர்ந்தவர்களும் இத்திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

IMGL8427.JPG

IMGL8454.JPG

IMGL8475.JPG

IMGL8482.JPG

IMGL8484.JPG

 

 

 
IMGL8454

 

எங்கள் அண்ணா படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி பிரபலமான நடிகையாக உள்ள நமீதா தனது காதலர் வீரேந்திர செளத்ரியைத் திருமணம் செய்துள்ளார். நடிகை நமீதா - வீரேந்திர சவுத்திரி திருமணம், திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள  ஹரேராமா ஹரே கிருஷ்ணா கோயிலில் இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

சரத்குமார், ராதிகா, சக்தி, ஆர்த்தி, காயத்ரி ரகுமார் போன்ற தமிழத் திரையுலகைச் சேர்ந்தவர்களும் இத்திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

 

IMGL8511.JPG

IMGL8518.JPG

IMGL8526.JPG

 

IMGL8355.JPG

IMGL8288.JPG

IMGL8334.JPG

http://www.dinamani.com/cinema/cinema-news/2017/nov/24/காதலரை-மணந்தார்-நடிகை-நமீதா-திருப்பதியில்-நடைபெற்ற-திருமணத்தின்-புகைப்படங்கள்--வீடியோ-2814089--2.html

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி ஒருத்தன் கண்ணுக்குமா படல ஒருத்தன் அண்டாவை கவுத்துட்டு போயிட்டான் இனியா ஒருத்தி வரப்போறா மச்சான்ஸ் என்று கூப்பிட:unsure:tw_blush:

Edited by தனிக்காட்டு ராஜா

  • தொடங்கியவர்

எங்கிருந்தாலும் வாழ்க: மனதை இரும்பாக்கிக்கிட்ட மச்சான்ஸ், ட்விட்டரில் டிரெண்டாகும் #Namitha

 

நடிகை நமீதாவுக்கு கல்யாணம்-வீடியோ


சென்னை: நமீதாவை மச்சான்ஸ் வாழ்த்தி வரும் நிலையில் #Namitha என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.

மச்சான்ஸ் என்ற ஒரேயொரு வார்த்தையை கூறி தமிழகத்து ரசிகர்களை அன்பால் கட்டிப்போட்டு வைத்தவர் நமீதா. அதே நமீதா தான் இன்று வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து மச்சான்ஸ் தலையில் இடியை இறக்கிவிட்டார்.

இருப்பினும் மச்சான்ஸ் எல்லாம் மனதை இரும்பாக்கிக் கொண்டு நமீதாவை வாழ்த்துகிறார்கள்.

ட்விட்டர்

ட்விட்டர்

திருமதியாகியுள்ள நமீதாவுக்கு திரையுலகினரும், மச்சான்ஸ்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் #Namitha என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

காயத்ரி

 

காயத்ரி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் காயத்ரி ரகுராம், ஆர்த்தி, சக்தி ஆகியோர் திருப்பதி சென்று மணமக்களை நேரில் வாழ்த்தியுள்ளனர்.



Read more at: https://tamil.filmibeat.com/news/namitha-trending-on-twitter-050201.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.