Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்த தமிழரின் பங்களிப்பு பற்றாக்குறைகள் பல

Featured Replies

அதி முக்கியமாக இங்கு போராட்டத்திற்கு வேலைசெய்வோரின் தனிப்பட்டவிலாச எடுவை. ஏதோ தமிழ்ச்சனம் இங்கால வந்து புலிகளுக்கோ, தமிழ்மக்களுக்கோ காசு குடுக்கத்தான் வேண்டும் என்ற அந்த மனோநிலை.அவர்கள் இலங்கையில் இருந்து இங்கால வந்தவர்கள். இருக்கும் போது பயத்தில் உறைந்து போய் இருந்தவர்கள் இங்கால் வெளிநாடுகளில் தப்பிவிட்டோம் எனி என்ன மயிருக்கு நாங்கள் இந்த பிரச்சனையில தலயைவைக்கவேண்டும் என்று உள்ளுக்குள் நினைப்பது.

இவையளுக்கு பாஸ் எடுக்க எவ்வளவு காசு கொடுத்து விட்டு வந்தனாங்கள் என்ன ஆட்டம் ஆட்டிவிடீனம் என்று கறள் வைத்திருப்பது.

தமிழரினை ஒற்றுமை இல்லாது ஆள்க்கு ஒரு இயக்கம் என்று வாழ்ந்து ஆக்களிடம் அடிக்க ஏலுமானதுகளை அடிச்சுப்போட்டு இங்கால தப்பினோம் என்ற ம்னோநிலையில் விட்டது.

அங்க கஸ்டப்பட்டு வாழ்ந்த சனம் இங்கால தான் காசைக்கண்டு( இது எல்லோருக்கும் பொருந்தும்) அதுக்குப்பிறகு ஆகா இப்படி ஒரு வாழ்க்கையை தந்த நாங்கள் கொடுத்துவைத்தவர்கள். என்று கோயிலுகளுக்கு பூசை செய்துகொண்டு எனிமேலும் கீழ கஸ்டப்படவேண்டிய நிலைமைகள் வந்திரும் இதுகளுக்க தலையைக் கொடுத்தா என்று சுய நலமாக அதே நேரம் அவர்களுக்கு ஒரு பூரண விடுதலை என்று நினைத்து தங்கள் பிள்ளைகளை வாழ வாக்க நினைப்பது...இப்படி தான் 98% வீதமான் மக்கள் அவுஸ்திரேகியாவில் இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா நாம் ஒருவரை ஒருவர் குற்றஞ் சுமத்தாமல் நான் நாட்டிற்காக இன்னும் அதிகமாக என்ன செய்யலாம் என்று தனிமையில் இருந்து இரண்டு நிமிடம் சிந்தித்துப் பார்த்தேன் என்றால் விடை எனக்கே தெரிந்து விடும். நானும் ஒரு உண்மையான தேச பக்த்தனாகவும் மாறிவிடுவேன்.

Edited by Valvai Mainthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைப்புக்கு மீன்டும் வந்தால்,

மற்ற ஊடகங்களையும் ஏனையவையும் விமர்சனம் செய்ய முன்னர், நாம் ஒரு முன்னுதாரணமாக நடப்போமானால் இன்னும் நன்றாக இருக்கும்.

யாழ்களத்தில் நடக்கும் முக்கிய விவாதங்கள் நிறைய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு முடிவுகள் எட்டப்பட வேன்டும். இது ஒரு முக்கிய விவாதம்.

இது வரை என் அறிவுக்கு உட்பட்ட வரையில் எந்தஒரு விவாதமும் முடிவுகள் எட்டப்படும் வரை சென்றதில்லை என்பது கவலைக்குரிய விடயம்.

  • தொடங்கியவர்

செய்திக்களத்தை மாற்றி அமைக்க கொடுக்கப்பட்ட பரிந்துரைகள் என்ன ஆச்சு?

மாப்பிள்ளை முன்மொழிந்த rating system அய் யாழின் மூலம் அமுல்படுத்தலாம்.

கடுவன் பூணை குருக்ஸ் என் கேள்விக்கு என்னா பதில்? பதில் இல்லாட்டி அப்பு என்னத்துக்கு மதில் பாய்ஞ்சு வந்து என்ர படுக்கிற இடத்தில மூத்திரம் அடிச்சிட்டு போனனீர். வாலை ஒட்ட நறுக்கிப்போடுங்கள் என்ர கடுவன் அலுசேசன் டோக்குகள் :P

  • கருத்துக்கள உறவுகள்

ஜயா நாம் ஒருவரை ஒருவர் குற்றஞ் சுமத்தாமல் நான் நாட்டிற்காக இன்னும் அதிகமாக என்ன செய்யலாம் என்று தனிமையில் இருந்து இரண்டு நிமிடம் சிந்தித்துப் பார்த்தேன் என்றால் விடை எனக்கே தெரிந்து விடும். நானும் ஒரு உண்மையான தேச பக்த்தனாகவும் மாறிவிடுவேன்.

நாடு நம்மிடம் எதைஎதிர்பார்க்கின்றது என நாம் ஒவ்வொருவரும சிந்துத்து முடிவெடுப்போமாயின்

தமிழீழம் என்ற எமது இலட்சியம் கைக்கெட்டிய தூரம் தான்.

கந்தன் இன்றைக்குச் சிந்திப்பார் குப்பன் நாளைக்குச் சிந்திப்பார். சுப்பன் சிலசமயம் இன்னும் 20 வருடங்களின் பின் தான் சிந்திப்பார். அதுவரை நாம் பொறுக்க முடியுமா? முடியாது!

எனவே இதை ஏற்கனவே சிந்தித்து விளங்கிக்கொன்ட நாம் இதை சிந்திக்க முடியாமல் இருக்கும் மற்ற எல்லாருக்கும் அந்த சிந்தனையை தூன்டும் படி என்ன செய்யலாம் என்று சிந்தியுங்கள். ஈழ விடுதலையை விரைவுபடுத்த அதுவே வழி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திக்களத்தை மாற்றி அமைக்க கொடுக்கப்பட்ட பரிந்துரைகள் என்ன ஆச்சு?

நேற்று (பெப்ரவரி 28) பரிந்துரைகள் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டன.

"உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. அங்கு நடைபெற்ற கருத்தாடல்களைத் தொடர்ந்து அவதானித்தே வந்திருந்தோம். உடனடியாக இல்லாதுவிடினும் 2-3 வாரங்களில் சிறு மாற்றங்களைக் களத்தில் கொண்டு வர எண்ணியுள்ளோம். அப்போது இங்கு தெரிவிக்கப்பட்ட கருத்துக்களையும் கவனத்தில் கொள்கின்றோம்"

என்ற பதில் கிடைத்துள்ளது.

நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பிள்ளை முன்மொழிந்த rating system அய் யாழின் மூலம் அமுல்படுத்தலாம்.

எந்தெந்த இணையத்தளங்களை நாங்கள் rating செய்யப்போகிறோம்?

  1. தமிழ்நாதம்
  2. புதினம்
  3. தமிழ் கனேடியன்
  4. புதினம்
  5. சங்கதி
  6. யாழ்
  7. தமிழ் டொட் இன்போ
  8. தமிழ் அவுஸ்திரேலியன்
  9. தாகம்
  10. தமிழ்வின்
வேறு எவை எவை? கருத்துத் தெரிவியுங்கள் ...

என்னென்ன விடயங்களை கருத்திலெடுக்க வேண்டும்?

  1. தமிழ் தேசியத்துக்கு வலுச்சேர்க்கும் செய்திகள்
  2. உண்மைத்தன்மை
  3. uptodateness
  4. செய்திகளின் மூலம் தொடர்பான விதிகளினை பின்பற்றுதல்
  5. சொந்த ஆக்கங்களை வெளியிடும் வீதம்
  6. தமிழர் பரப்புரைக்குத் தேவையான பொருட்களை (tools) கொண்டிருத்தல்
வேறு என்ன? கருத்துத் தெரிவியுங்கள் ...

Edited by பண்டிதர்

  • தொடங்கியவர்

எதிர்த் தரப்பு (சிங்களம், துரோகிகள், சர்வதேசம், தவறான சிந்தனை கொண்ட இந்தியத்தரப்பின் ஒரு பகுதி) இன் நிகழ்ச்சி நிரல்களிற்கு அறிந்தோ அறியாமலோ வலுச் சேர்க்கும் செய்திகள் கண்ணோட்டங்களை சுயமாக தயாரித்து வழங்குபவர்கள். (fatal)

எதிர்தரப்புகளின் புலநாய்வுத்துறையினால் உளவியல் பிரச்சார நோக்கில் வெளியிடப்படும் செய்தி விதைப்புகளை தெரிந்தோ தெரியாமலோ உள்வாங்குபவர்கள், அவற்றை தமிழர்கள் மத்தியில் திறம்படப் பரப்புபவர்கள். (fatal)

எமது போராட்டம் இன்றய காலகட்டத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் சிக்கல்களை சரியாக உணர்ந்து தாம் பிரசுரிக்கும் ஆக்கங்கள் அதை சரியாக பிரதிபலிக்கிறதா என்ற அடிப்படை விடையத்தில் கவனம். (severe)

எமது போராட்டத்தின் இன்றய தேவைகள் பலவீனங்களை சரியான கண்ணோட்டத்தில் விளக்கி மக்களை அவற்றை நிவர்த்தி செய்யத் தூண்டும் ஆக்கங்களை தருவது. (severe)

காலத்திற்கு ஒவ்வாத வகையில் எமது போராட்டம் பற்றிய தவறான கருத்தியலை ஊட்டி அதன் மூலம் தவறான பிரதிநிதித்துவத்தை உருவாக்கும் கருத்துகள் கண்ணோட்டங்களை புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் விதைப்பவர்கள். (severe)

தமிழ்த் தேசியம் பற்றி ஒரு மிதவாத கருத்தியலை அறிந்தோ அறியாமலோ பரப்புவது அல்லது அவ்வாறான சிந்தனை கொண்டவர்களைத் திருப்த்திப்படுத்தும் கண்ணோட்டங்களை வெளியிடுவது. மொத்தத்தில் தமிழ்த் தேசியத்தை தவறாக பிரதிநிதித்துவப் படுத்தப்படுவதற்கு துணை போதல்.(fatal)

தவறான தகவல்கள் செய்தியாக்கப்படுதல். அவை திருத்தப்படுவதில்லை. திருத்தப்பட்டாலும் அதுபற்றி தெளிவாக குறிப்பு எழுதுவதில்லை. ஒரு சம்பவத்தில் இறந்த காயப்பட்ட பொதுமக்கள் தொகை அதிகமாக அறிவிக்கப்பட்டால் அதை திருத்தி மன்னிப்பு கேட்கும் நாகரீகம் இல்லை. (severe)

செய்திகளை channels ஆக பகுத்து அவற்றிற்கு RSS சேர்ப்பது (improvement idea).

rating வந்து -10 இல் இருந்து +10 வரை இருக்கலாம்.

எல்லா ஒரே தாக்கம் கொண்டது அல்ல. அவற்றை Fatal, severe, minor, Improvement idea என்று வகைப்படுத்தலாம்.

தாகம், தமிழ்வின், லங்காசிறி, சியூஸ்தமிழ்நெற் போன்றவை கவனத்தில் எடுக்கத்தேவையில்லாதவை.

பதிவு, சூரியன், வெப்ஈழம் போன்றவற்றைச் சேர்க்கலாம்.

இறுதியில் ஒரு அட்டவணையாக rate பண்ணுப்பட்டவர்கள் முழுவிபரங்களோடு பிரசுரிக்க வேண்டும்.

யாழை rate பண்ணுவது எங்கடை முதுகை நாங்களே மாறி மாறி செறிஞ்சு சிரட்டை மாலை போட்டதாக இருக்கும்.

இத்தோடு ஊடகங்களில் ஆய்வுகள் ஆக்கங்கள் கண்ணோட்டங்கள் என்று எழுதித்தள்ளுபவர்கள் வானொலியில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் நடத்துபவர்களையும் rate பண்ண வேண்டும் அடுத்த கட்டமாக.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அன்புடன் சாணக்கியனுக்கு!

நான் பல தடவைகள் உங்களுடைய கருத்துக்களை வாசித்திருக்கிறேன் சிலவற்றுடன் ஒத்து போகிறேன் சிலவற்றை எதிர்கிறேன். உங்களுக்கு பதில் கருத்தெழுத நேரமின்மையால் எழுதுவதில்லை. ஓரு வேளை பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் ரகமா நீர் என்ற சந்தேகம் எனக்குள் எழுவதுண்டு. ஆனாலும் சிந்தனைகளின் திசை ஒன்றாக இருக்க முடியாதுதானே என நானே எனுக்குள் நினைப்பதும் உண்டு. இந்த தலைப்பு உங்களுக்கு திறந்த மடல் ஒன்றுடன் சந்திப்பதற்கு ஏதுவாக அமைந்துவிட்டது அதனால்தான் எழுதுகிறேன்.

நீங்கள் பல இடங்களில் "ஈழ பிரேதேசத்திற்குள் வாழும் மக்கள் மீது அதிக கவலை கொண்டுள்ளீர்கள்". அவர்களை பிறர் மாடுகள் போல் நினைக்கின்றார்கள் என்றெல்லாம் எழுதியிருக்கின்றீர்கள்.

நான் திரும்பவும் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதா ஒரு கருத்தை உங்களுக்கு வலியுறுத்த விரும்புகிறேன். சிறிலங்கா சிங்கள கொலை வெறியரின் வெறியாட்டத்திற்கு எதிராக போரடவேண்டியவர்கள் அவர்களே. அவர்களின் போராட்ட போக்கு என்பது மிகவும் மந்த நிலையிலேயே இருக்கிறது. புலம் பெயர்ந்தவர்கள் பங்களிப்பை புறக்கணிப்பதற்கு எத்தனை காரணங்களை மேலே முன்வைக்கின்றார்கள் என்று பார்தீர்களா? இன்னும் ஏராளம் இருக்கின்றன. ஆனாலும் அவை எல்லாவற்றையும் ஒரு வரியுனுள் அடக்கமுடியும். "தெளிவான அறிவின்மை". இந்த ஒன்றே முக்கிய காரணம். குறக்காலபோவானின் ஆதங்கத்தை நீங்கள் பலதடவை பார்த்திருக்கலாம் அதாவது தமிழ் ஊடகங்கள் சரியாக செயற்படுவதில்லை என்று. அதை பல தடவைகள் எவ்வாறு என்று நான் அவரை கேட்டிருக்கிறேன் பதில் கிடைப்பதில்லை. நெடுக்காலபோவான் ஓரிடத்தில் எழுதினார் 10 பவுன்ஸ்ல் இணையம் நடத்தலாம் என்பதால் யார்யாரோ எல்லாம் எதை எதையோ எழுதுகிறார்கள் என்று. 10 பவுன்ஸ்ல் இணையம் நடத்தலாம் என்று தெரிகிறதல்லவா அப்போ. பொறுப்பான இணையம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரே முன் உதாரணமாக ஒரு இணையத்தை நடத்தி காட்டலாமே?. முடியாது ஒன்றை ஆக்க நினைப்பவன் ஆக்குபவனுக்குத்தான் அதன் சிரமங்கள் புரியும். விமர்சனங்கள் என்பது இலகு என்ற சொல்லிற்கே உதாரணம் அதுதான் காரணம் அவை நேர்மையானவையாகவோ சரியானதாகவோ 99 வீதம் இல்லாதிருப்பதை நான் பார்த்திருக்கிறேன். மீண்டும் விடயத்திற்கு வருகிறேன்........

போர் சூழலில் வாழும் மக்கள்தான் இந்த போரால் பதிக்க பட போகின்றவர்கள் அதலால் தான் நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன். அவர்கள்தான் போரட்டத்தின் அசைவை விழித்தபடி பார்க்க வேண்டியவர்கள் எமது எதிர்காலம் என்பது எதை நோக்கி செல்கின்றது என்பதை அவர்களே தாமாக அறிய முன்வர வேண்டும். யாரவது தமக்கு போர்பற்றி அறிவூட்டுவார்கள் என இனியும் பொறுக்கலாமா? நான் அமெரிக்கா நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்..... இந்த நாட்டிற்கு ஒரு இக்கட்டான நிலை வந்தால் நான் கட்டாயமாக போர்களத்திற்கு அனுப்பப்படுவேன் அங்கே எனது சுய விருப்பு வெறுப்பு பற்றி சிந்திக்க நேரமில்லை. இந்த நாடு அருந்தால்தான் நான் வசிக்கும் ஊர் (சிற்றி) இருக்கும் அது இருந்தால்தான் நான் வசிக்க என் வீடிருக்கும். அதில் எனக்கு எந்த கருத்து வேறுபாடுமில்லை. ஒரு வேளை நான் போரிலே இறப்பினும் எனது எஞ்சிய குடும்பம் எவ்வளவு நாளும் நாம் உழைத்து சேர்த்ததை வைத்து வாழுவதற்கு வழியிருக்கும்! ஆம் நீர் கேட்கும் கேள்வி எனக்கு புரிகிறது இதல்லாம் அமெரிக்காவில் நடக்க வாய்ப்பில்லை என்பதானால் உம்மால் எழுத முடிகின்றது அப்படித்தானே? ஆனால் ஈழ பிரதேசத்தில் அதுதானே நடக்கிறது? ஓடினாலும் கொலை ஓழிந்தாலும் கொலை சரணடைந்து வாழ்ந்தாலும் கொலை. ஆக தமிழனென்றிருந்தால் முடிவு தெளிவாக தெரிகின்றது அப்போ அவர்கள் முளு மூச்சுடன் போராடுவதே ஓரே வழி என நான் கூறினால் நீங்கள் எதிர்கின்றீர்கள். நீங்கள் நினைகின்றீர்கள் நாம் தப்பிவிட்டோம் அவர்களின் எதிர்காலம் பற்;றி எமக்கு கவலை இல்லை அதனால் இலகுவாக எம்மால் அதை எழுதமுடிகின்றது என்று. சணக்கியா நீர் நல்லவனோ அல்லது நல்லவன் போல் வேடம் போடும் ஒரு துரோகி நான் அறியேன். ஆனாலும் தர்மம் வெல்லும் இதில் எனக்கு நுறு வீதம் அசையாத நம்பிக்கை உண்டு.அதர்மம் அழிந்து போகும் அது வெறும் வெறியால் உருவானது தர்மம் அப்படியில்லை நீதியால் பிறப்பானது. பிரச்சார உத்தி எல்லாம் தற்கால வெற்றியைதான் கொடுக்கும்...... உதாராணத்திற்கு ஈராக் போரை பாருங்கள் வெளியுலகிற்கு தெரிந்ததெல்லாம் அமெரிக்கா சொன்னதுதான் பலனை அமெரிக்காவே இப்போது உணர்கின்றது என்றே நான் நினைக்கின்றேன். ஈராக் ஒரு போதும் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலாக இருந்நததில்லை. ஈராக்கில் போர் என்பது வெறும் எண்ணைக்காவே தொடக்கப்பட்டது. இப்போது போரின் செலவை பார்த்தால் அரைவாசி செலவுடன் ஈராக்கின் மொத்த எண்ணையையும் சமாதானமாக வியாபார யுத்தியுடன் பெற்றிருக்கலாம். ஆனால் ஈரான் எப்போதுமே அமெரிக்காவிற்கு அச்சுறுத்தலான நாடு இன்று அணுவாயுதத்தை தொட்டும் தொடமலும் பார்க்கின்றது போர் தொடுப்போம் என்று சும்மா மிரட்டினாலும் முடியாது என்பது ஈரானுக்கே தெரியும் காரணம் இஸ்ரேல்! இஸ்ரேலை எட்ட கூடிய ஏவுகணைகளை எப்போதே ஈரான் தயாரித்து வெற்றி கரமாக பரிசித்தும் பார்த்து விட்டது. எனியென்ன.......... சமாதான பேச்சொன்றெ ஒரே வழி. சும்மா மீடியாக்களுக்கு வீரம்காட்ட அறிக்கைகள் விட்டாலும் உள்வீட்டு வேலையெல்லாம் பேச்சுவார்தையை நோக்கி நகர்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

மகிந்த அரசு தனது ஆட்சியை நிலைநாட்ட வேண்டும்! முடிந்ததை சுருட்ட வேண்டும். அதற்கு சிங்கள மக்களை திசைதிருப்பி வைத்திருக்க வேண்டும் அதன் விழைவுதான் நாம் இப்போது பார்ப்பது. ஆனால் புலிகளின் இலக்கும் தாகமும் வேறு. இதை ஈழ பிரதேசத்தில் வாழும் மக்கள் இனிவரும் நாட்களில் என்றாலும் தெளிவாக புரிந்து அதற்கு அசைவாக நடக்க வேண்டும் என்பதே எனது அவா. உங்களின் பதில் கருத்தை எதிர்பார்த்திருக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்த் தரப்பு (சிங்களம், துரோகிகள், சர்வதேசம், தவறான சிந்தனை கொண்ட இந்தியத்தரப்பின் ஒரு பகுதி) இன் நிகழ்ச்சி நிரல்களிற்கு அறிந்தோ அறியாமலோ வலுச் சேர்க்கும் செய்திகள் கண்ணோட்டங்களை சுயமாக தயாரித்து வழங்குபவர்கள். (fatal)

எதிர்தரப்புகளின் புலநாய்வுத்துறையினால் உளவியல் பிரச்சார நோக்கில் வெளியிடப்படும் செய்தி விதைப்புகளை தெரிந்தோ தெரியாமலோ உள்வாங்குபவர்கள், அவற்றை தமிழர்கள் மத்தியில் திறம்படப் பரப்புபவர்கள். (fatal)

எமது போராட்டம் இன்றய காலகட்டத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் சிக்கல்களை சரியாக உணர்ந்து தாம் பிரசுரிக்கும் ஆக்கங்கள் அதை சரியாக பிரதிபலிக்கிறதா என்ற அடிப்படை விடையத்தில் கவனம். (severe)

எமது போராட்டத்தின் இன்றய தேவைகள் பலவீனங்களை சரியான கண்ணோட்டத்தில் விளக்கி மக்களை அவற்றை நிவர்த்தி செய்யத் தூண்டும் ஆக்கங்களை தருவது. (severe)

காலத்திற்கு ஒவ்வாத வகையில் எமது போராட்டம் பற்றிய தவறான கருத்தியலை ஊட்டி அதன் மூலம் தவறான பிரதிநிதித்துவத்தை உருவாக்கும் கருத்துகள் கண்ணோட்டங்களை புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் விதைப்பவர்கள். (severe)

தமிழ்த் தேசியம் பற்றி ஒரு மிதவாத கருத்தியலை அறிந்தோ அறியாமலோ பரப்புவது அல்லது அவ்வாறான சிந்தனை கொண்டவர்களைத் திருப்த்திப்படுத்தும் கண்ணோட்டங்களை வெளியிடுவது. மொத்தத்தில் தமிழ்த் தேசியத்தை தவறாக பிரதிநிதித்துவப் படுத்தப்படுவதற்கு துணை போதல்.(fatal)

செய்திகளை channels ஆக பகுத்து அவற்றிற்கு RSS சேர்ப்பது (improvement idea).

rating வந்து -10 இல் இருந்து +10 வரை இருக்கலாம்.

எல்லா ஒரே தாக்கம் கொண்டது அல்ல. அவற்றை Fatal, severe, minor, Improvement idea என்று வகைப்படுத்தலாம்.

தாகம், தமிழ்வின், லங்காசிறி, சியூஸ்தமிழ்நெற் போன்றவை கவனத்தில் எடுக்கத்தேவையில்லாதவை.

பதிவு, சூரியன், வெப்ஈழம் போன்றவற்றைச் சேர்க்கலாம்.

இறுதியில் ஒரு அட்டவணையாக rate பண்ணுப்பட்டவர்கள் முழுவிபரங்களோடு பிரசுரிக்க வேண்டும்.

யாழை rate பண்ணுவது எங்கடை முதுகை நாங்களே மாறி மாறி செறிஞ்சு சிரட்டை மாலை போட்டதாக இருக்கும்.

இத்தோடு ஊடகங்களில் ஆய்வுகள் ஆக்கங்கள் கண்ணோட்டங்கள் என்று எழுதித்தள்ளுபவர்கள் வானொலியில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் நடத்துபவர்களையும் rate பண்ண வேண்டும் அடுத்த கட்டமாக.

எல்லோரும் எல்லா திசைகளையும் சிந்தனையால் எட்டுவார்கள் என எதிர்பார்க்க முடியாது!

அதலால் இவ்வாறான செயற்பாடுகளை நாம் முன்னெடுக்க வேண்டியே காலகட்த்தில் இருக்கிறோம் என்பதை யாவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

குறுக்காலபோவானின் இந்த ஆக்கம் என்னை உண்மைணிலேயே சிந்திக்கவும் செயற்படுத்தவும் துண்டியிருக்கின்றது. ஊடகங்களுடன் நாமும் சேர்ந்து செயற்பட்டாலே நல்ல ஊடகங்களை எட்ட முடியும் எனப்து எனது எண்ணம். தமிழ் ஊடகங்களின் பிழைகளை நாம்தான் சுட்டி காட்ட வேண்டும். வீணாண கேலி விமர்சனங்களால் ஏதும் ஆகிவிட போவதில்லை. மிகவும் குறைந்த வருவாயுடன் கூடிய செயற்பாட்டை யாராலும் முன்னெடுக்க முடியாது ஆதலால் உண்மையாக உழைக்கும் ஊடகங்களை நாம் தெரிவு செய்வதன் மூலம் அவர்களுக்கான ஆதரவை நாம் கொடுக்க முடியும். அதன் பிரகாரம் அவர்களிடம் நாம் வளர்ச்சியையும் எதிர்பார்க்க முடியும் என நான் நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறவுகள்

Fatal, severe, minor, Improvement idea

எங்கேயோ பார்த்தமாதிரி உள்ளதே.. எப்படி வகைக்படுத்தினாலும் திருந்தவேண்டும் என்று நினைப்பவர்கள்தான் திருந்துவார்கள். மற்றையோர் As specified என்று தங்கள் பாணியில் தொடர்வார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.