Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கை: மூத்த பத்திரிகையாளர் கோபு (“எஸ்.எம். ஜீ”) காலமானார்

Featured Replies

ஊடகவியலாளர் கோபாலரத்தினம் காலமானார்
 

image_2294ce8f36.jpgகே.எல்.ரி.யுதாஜித்

“எஸ்.எம். ஜீ” என்று செல்லமாக எல்லோராலும் அழைக்கப்படுபவரும் இலங்கைத் தமிழ் ஊடகத் துறையின் விருட்சமெனப் புகழப்படுபவருமான ஊடகவியலாளர் எஸ்.எம். கோபாலரத்தினம், மட்டக்களப்பில் இன்று (15) காலமானார்.

இறுதிக் கிரியைகள், மட்டக்களப்பு பூம்புகார் 4ஆம் குறுக்கிலுள்ள அவரது மகளின் வீட்டில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறவுள்ளதென,  உறவினர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், கன்னாதிட்டியில் 1930.10.03இல் பிறந்து பெருமாள் கோயிலடியில் வாழ்ந்த கோபலரத்தினம், தனது ஆரம்பகல்வியை சேணிய தெரு சன்மார்க்க போதனா துவிபாசா பாடசாலையிலும் பின்னர் இராமகிருஷ்ண மிஷன் யாழ்.வைதீஸ்வரா கல்லூரியிலும் கற்றார். சில மாதங்கள் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலயத்திலும் கற்றுள்ளார்.

இலங்கையின் வீரகேரியில் தொடங்கி, ஈழநாடு, ஈழமுரசு, காலைக்கதிர், செய்திக்கதிர், ஈழநாதம், தினக்கதிர், சுடரொளி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார்.

2002ஆம், 2004ஆம் ஆண்டுகளில் ஜேர்மனி பிரான்ஸ், லண்டன் முதலிய ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று திரும்பிய கோபு, அங்கு எழுத்தாளர் சங்கங்களின் வரவேற்றுகளையும் பெற்றார்.

அரை நூற்றாண்டுக்கு மேல் பத்திரிகையையே வாழ்வாக்கிக் கொண்டிருந்த கோபு, பத்திரிகைத்துறையில் பல வாரிசுகளை உருவாக்கித்தந்தவர்.

கோபுவின் அரை நூற்றாண்டு கால பத்திரிகைப்பணியைப் பாராட்டி தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர், 2004ஆம் ஆண்டு ஜுன் மாதம் 4ஆம் திகதி தேசியச் சின்னம் பொறிக்கப்பட்ட தங்கப்பதக்கம் வழங்கிக் கௌரவித்திருந்தார்.

கோபு, பத்திரிகையாளர் என்பதற்கு அப்பால், ஸ்ரீ ரங்கன் என்ற பெயரில் பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

எஸ்.எம்.ஜீ.பாலரெத்தினம், ஊர் சுற்றி எனப் பல பெயர்களிலும் திரை விமர்சனம், இசை விமர்சனம், நூல் விமர்சனம், என அவர் பல விடயங்களையும் எழுதியுள்ளார்.

அரசியல் கட்டுரைகள், பொதுக்கட்டுரைகள் என ஆயிரக்கணக்கில் எழுதியுள்ள எஸ்.எம்.ஜீ., “ஈழ மண்ணில் ஓர் இந்தியச்சிறை”, “அந்த ஓர் உயிர்தானா உயிர்”, “பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு”, “ஈழம் முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு” ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/ஊடகவியலாளர்-கோபாலரத்தினம்-காலமானார்/73-207226

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இலங்கை: மூத்த பத்திரிகையாளர் கோபு காலமானார்

 
பத்திரிகையாளர் கோபு

இலங்கையில் மூத்த தமிழ் பத்திரிகையாளரான கோபு எனப்படும் எஸ்.எம். கோபாலரெத்தினம் இன்று புதன்கிழமை 87-வது வயதில் மட்டக்களப்பில் காலமானார்.

தமிழ் பத்திரிகை துறையில் 1953-ஆம் ஆண்டு வீரகேசரி நாளிதழில் ஒப்பு நோக்குநராக இணைந்து கொண்ட இவர் அதே ஆண்டில் உதவி ஆசிரியரானார்.

1960-ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளிவந்த 'ஈழநாடு' நாளிதழில் செய்தி ஆசிரியராக இணைந்து கொண்ட அவர், அந்தப் பத்திரிகையின் ஆசிரியராக உயர்வு பெற்று 20 வருடங்களுக்கு மேல் அந்நிறுவனத்தில் பணியாற்றினார்.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் வெளியான காலைக்கதிர், செய்திக்கதிர் , ஈழமுரசு ஆகிய பத்திரிகைகளிலும் ஆசிரியராக பணியாற்றி இறுதியாக 2000-ஆம் ஆண்டு மட்டக்களப்பில் வெளியான " தினக்கதிர் " நாளிதழ் ஆசிரியராக இணைந்து சில வருடங்கள் பணியாற்றினார்.

யாழ்பாணத்தில் வெளிவந்த " ஈழமுரசு "பத்திரிகை ஆசிரியராக பணியாற்றிய வேளை 1987ம் ஆண்டு நவம்பர் 23-ஆம் தேதி இந்திய அமைதிப்படையினரால் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் வரை தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

பத்திரிகையாளர் கோபு

இந்திய அமைதிப்படையினரால் கைதாகி தடுத்து வைக்கப்பட்டிருந்த தனது அனுபவத்தை " ஈழ மண்ணில் ஓர் இந்திய சிறை " என்ற தலைப்பில் எழுதினார்.

இந்த கட்டுரை "ஜுனியர் விகடன் " இதழில் தொடர் கட்டுரையாக வெளியாகியிருந்தன.

இலங்கை தமிழ் பத்திரிகை உலகில் கோபு ,எஸ்.எம்.ஜி என பலராலும் அறியப்பட்ட எஸ்.எம். கோபாலரெத்தினம் ஆணித்தரமான அரசியல் தலையங்கங்கள், கட்டுரைகள் மற்றும் செய்திகள் மூலம் துணிச்சல் மிக்க பத்திரிகையாளராக விளங்கினார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-41995300

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் மறைந்தார்!

 
23517615_10155791186665279_2089690332513
 

கோபு என்றும், எஸ்.எம்.ஜி. என்றும் நன்கு அறியப்பட்ட  தனித்துவமான பத்திரிகையாளராக விளங்கிய மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் இன்று காலமானார்.  ஈழத்தின் கிழக்கே மட்டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட கோபாலரத்தினம் 1950களில் வீரகேசரியில் தனது பத்திரிகைத்துறைப் பயணத்தை ஆரம்பித்தார். அதன் பின்னர் 1956களில் ஈழநாடு பத்திரிகையில் இணைந்தார். அப்  பப்பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றினார்.

 
இவர் பத்திரிகை ஆசிரியராக செயற்பட்ட காலத்திலேயே ஈழநாடு பத்திரிகை தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தம் பெற்றது. 1981இல் இலங்கை இராணுவத்தால் ஈழநாடு பத்திரிகை எரியூட்டப்பட்டபோது கோபாலரத்தினம் தெய்வாதீனமாக உயிர் தப்பியிருந்தார்.

 

அதன் பின்னர் ஈழமுரசு பத்திரிகையின் ஆசிரியராக இருந்தபோது இந்திய இராணுவத்தால் சிறைவைக்கப்பட்டார். அந்தச் சிறை அனுபவங்கள் குறித்து இவர் எழுதிய ஈழமண்ணில் ஓர் இந்திய சிறை என்ற நூலை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் வெளியிட்டிருந்தது.

மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த தினக்கதிர் தினசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும், பின்னர் ஆலோசகராகவும் கடமையாற்றினார். 2000ஆம் ஆண்டின் பின்னர் மட்டக்களப்பில் தங்கியிருந்த அவர் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் ஆலோசகராக வழிநடத்தினார்.

 
 இலங்கையின் பத்திரிகைத்துறையில் பல சிறந்த பத்திரிகையாளர்களையும் பத்திரிகை ஆசிரியர்களையும் இவர் உருவாக்கினார். தமிழ் தேசியம் சார்ந்து இவர் ஆற்றிய பணிகளுக்காக புலிகளின் தலைவர் பிபாகரன் 2006இல் இவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவித்தார்.
கடந்த சில வருடங்களாக சுகவீனமான நிலையில் இருந்த மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம், இன்று காலமாகியதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

http://globaltamilnews.net/archives/49934

அஞ்சலிகள்!

  • தொடங்கியவர்

கோபுவின் மரணம் தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பு –மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்

 

கோபுவின் மரணம் தமிழ் ஊடகத்துறைக்கு பேரிழப்பு –மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்

ஊடக வரலாற்றில் எஸ்.எம்.கோபாலரத்தினம் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாதது

இலங்கையின் ஊடக வரலாற்றில் பல நெருக்கடியான காலகட்டங்களில் தனது எழுத்துக்களின் ஊடாக உண்மைகளை வெளிக்கொண்டுவந்த ஊடகப் போராளி எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திரிகை உலகில் அறிமுகமான மூத்தபத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் அவர்களின் மறைவு தமிழ் ஊடகத்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது இரங்கள் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. 
அமரர் கோபாலரத்தினம் அவர்களின் மறைவு குறித்த இரங்கள் செய்தியில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் பின்வருமாறு தெரிவித்துள்ளது.

இலங்கையின் ஊடக வரலாற்றில் பல நெருக்கடியான காலகட்டங்களில் தனது எழுத்துக்களின் ஊடாக உண்மைகளை வெளிக்கொண்டுவந்த ஊடகப் போராளி எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் அறிமுகமான மூத்தபத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் அவர்கள் இன்று காலமானார் .
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் மட்டக்களப்பினை வசிப்படமாக தற்போது கொண்டிருந்த கோபாலரத்தினம் அவர்கள் 1950களில் வீரகேசரியில் இணைந்து தனது பத்திரிகை தொழிலை ஆரம்பித்தார்.
அதன் பின்னர் 1956களில் ஈழநாடு பத்திரிகையில் இணைந்து பின்னர் அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றினார்.

 கோபாலரத்தினம் அவர்களின் காலத்திலேயே ஈழநாடு பத்திரிகை மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்றதுடன் பல்வேறு ஆபத்தான காலகட்டங்களில் அதில் பணியாற்றியிருந்தார்.
1981ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தினால் ஈழநாடு பத்திரிகை எரியூட்டப்பட்ட போது அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.

அதன் பின்னர் ஈழமுரசு பத்திரிகையின் ஆசிரியராக இருந்த போது இந்திய இராணுவத்தால் சிறைவைக்கப்பட்டார்.
ஈழமண்ணில் ஓர் இந்திய சிறை என்ற நூலின் ஊடாக அந்த சிறை அனுபவங்களை தொடராக எழுதினார். அதனை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் வெளியிட்டிருந்தது.

மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த தினக்கதிர் தினசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் ஆலோசகராகவும் அவர் கடமையாற்றினார்.
இலங்கையின் மூத்த பத்திரிகையாளர்களான கானமயில்நாதன், திருச்செல்வம், குகநாதன், கந்தசாமி, அனந்த பாலகிட்ணர் என பல பத்திரிகையாளர்களை செதுக்கிய பெருமை எஸ்.எம்.கோபாலரத்தினம் அவர்களையே சாரும்.
2000ஆம் ஆண்டின் பின்னர் மட்டக்களப்பில் தங்கியிருந்த அவர் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் ஆலோசகராக இருந்து அச்சங்கத்தை வழிநடத்தினார்.
நோய்வாய்ப்பட்டிருந்த காலத்திலும் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த எஸ்.எம்.கோபாலரத்தினம் அவர்களின் உயிர் இன்று பிரிந்து விட்டது. அன்னாரின் ஆத்மசாந்தி அடைய மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் சார்பாக இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
இவரது பிரிவு துயரில் வாடிநிற்கும் அன்னாரின் குடும்பத்திற்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

http://www.samakalam.com/செய்திகள்/கோபுவின்-மரணம்-தமிழ்-ஊடக/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DOsctjBXUBAPu8r.jpg

அஞ்சலிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.