Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்களையாவது தமிழக முதல்வர் காப்பாற்ற வேண்டாமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்களையாவது தமிழக முதல்வர் காப்பாற்ற வேண்டாமா?

அண்மைக்காலமாக தமிழக மீனவர்கள் மீது ஸ்ரீலங்கா கடற்படை நடத்தும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் துப்பாக்கிச் சூட்டுக்கள் அதிகரித்து வருகின்றன.

பெப்ரவரி 14 இல் (2007) நாகபட்டினம் கடற்கரைக்கு அப்பால் ஒன்பது இந்திய மீனவர்களை ஏற்றிச் சென்ற படகு மீது ஸ்ரீலங்கா கடற்படை துப்பாக்கிச் சூடு நிகழ்த்தியது. இதில் படகு பெரும் சேதமடைந்தது மட்டும் அல்லாமல் இலங்கைக் கடற்படையினர் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களைப் பறித்துச் சென்றுவிட்டனர்.

பெப்ரவரி 16 இல் அய்யம்பட்டினம் ஊரைச் சேர்ந்த மீனவர்களின் இரண்டு படகுகள் அழிக்கப்பட்டு அவர்களது வலைகளும் சேதப்படுத்தப்பட்டது. வழக்கம் போல் அவர்கள் பிடித்திருந்த மீன்களை ஸ்ரீலங்கா கடற்படையினர் எடுத்துச் சென்றுவிட்டனர். அந்த மீனவர்கள் அனைவரும் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்துத் தப்ப வேண்டியதாயிற்று.

பெப்ரவரி 24 இல் இராமநாதபுரம் மாவட்டதைச் சேர்ந்த அருள்தாஸ் மற்றும் மூன்று மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினம் கிராமக் கடற்கரைக்கு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது ஸ்ரீலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அருள்தாசிற்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது.

அதே நாளன்று ஸ்ரீலங்கா கடற்படையினர் மேலும் 10 படகுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் துரத்தியடித்தனர்.

பெப்ரவரி 26 இல் ஸ்ரீலங்கா இலங்கைக் கடற்படையினர் கலியபெருமாள், அஜீத்குமார் மற்றும் 5 பேர் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கலியபெருமாள் கொல்லப்பட்டார். அஜீத்குமார் காயமடைதார்.

தமிழக மீனவர்கள் ஸ்ரீலங்கா கடற்படை தொடர்ச்சியாக தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் விரட்டியடிக்கப்பட்டும் வரும் அட்டூழியங்களைச் சுட்டிக் காட்டி தமிழக முதல்வர் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு ஒரு மடல் வரைந்துள்ளார். மடல் வரைவது இதுதான் முதல் தடவை அல்ல. மடல் எழுதுவதும், அவ்வப்போது வீரா வேசமாக வசனம் பேசுவதும் பின்னர் அதனை மறந்து விடுவதும் அவருக்கு வாடிக்கையாகப் போய்விட்டது. “அத்து மீறி நுழைந்தால் கைது செய்வதுதானே? சுடச் சொல்லி எந்தச் சட்டம் சொல்கிறது? ஸ்ரீலங்கா அரசு தமிழகத்தின் பொறுமையைச் சோதிக்கிறது, இப்படியான கொலைகள் தொடர்ந்து இடம்பெற்றால் விளைவுகள் பாரதூரமாக இருக்கும் என்று மனோகரா பாணியில் முதல்வர் கருணாநிதி முன்னரும் படதடவை பேசியும் எழுதியும் வந்திருக்கிறார்.

முதல்வர் கருணாநிதிக்கு சூடு சொரணை இருக்குதோ இல்லையோ இப்படித் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் வைத்து ஸ்ரீலங்காவின் சிங்களக் கடற்படையினரால் காக்கை குருவிபோல் சுடப்பட்டு கொலைசெய்யப் படுவதைப் பார்க்க உலகளாவிய தமிழர்களுக்கு அவமானமாக இருக்கிறது. தலைக் குனிவாக இருக்கிறது. ஸ்ரீலங்கா ஒரு சுண்டக்காய் நாடு. விடுதலைப் புலிகளிடமே ஸ்ரீலங்காவின் கடற்படை அடிவாங்கி வருகிறது. ஆனால் நூறு கோடி மக்களைக் கொண்டதும் உலகத்தின் 4 ஆவது பெரிய இராணுவத்தையும் உடைய இந்தியாவின் பெருங்குடி மக்கள் ஸ்ரீலங்காவின் கடற்படையினரால் கேட்டுக் கேள்வியின்றிச் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள்!

இம்முறை “இந்தக்கொடுமை பற்றி இந்தியப் பிரதமருக்கு பலமுறை கடிதங்கள் தமிழக அரசின் சார்பில் எழுதி விட்டோம். திரும்பத் திரும்ப தமிழக மீனவர்களைத் தாக்கும் செயல் நடைபெறுமேயானால், தமிழனுடைய கை அந்தக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் என்று மாத்திரம் கருத வேண்டாம்” எனத் தனது கடிதத்தில் முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

“திரும்பத் திரும்ப தமிழக மீனவர்களைத் தாக்கும் செயல் நடைபெறுமேயானால், தமிழனுடைய கை அந்தக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்குமென்று மாத்திரம் கருத வேண்டாம்” என முதல்வர் கருணாநிதி மனோகரா பாணியில் வீரம் கொப்பளிக்க மடல் வரைந்துள்ளார் என யாரும் மகிழ வேண்டாம்!

அதென்ன மனோகரா பராசக்தி பாணி என இளந்தலைமுறையினர் கடாவலாம். வேறொன்றும் இல்லை. கலைஞர் கருணாநிதி மனோகரா பராசக்தி போன்ற திரைப்படங்களில் அனல் தெறிக்கும் உரையாடலை எழுதியிருக்கிறார். அதை நடிகை சிவாஜி கணேசன் நடிகை கண்ணாம்பா போன்றோர் மூச்சு விடாமல் கனல் தெறிக்கப் பேசுவார்கள்!

என் அருமைச் செல்வமே! உன் தந்தையின் நன்மைக்குத்தான் உன் வீரக்கரங்களைக் கட்டிப் போட்டேன்! இந்த விசமக்காரி முன் சிரம் தாழ்த்தி நின்றேன்! யாருக்காக?

பொறுமை பொறுமை என்று சொல்லி வந்தேனே அவரையே சிiறியில் போட்ட பிறகு பொறுமைக்கு எங்கிருக்கிறது பெருமை? என் அருமை மனோகரா பொறுத்தது போதும்! பொங்கி எழு! தாயின் ஆணை கிடைத்து விட்டது! புறப்படு மனோகரா புறப்படு! மகாராசா எங்களுடைய குடும்பம் எப்படிச் சீரழிந்து விட்டது என்பதைப் பார்த்தீர்களா? கட்டுண்டு தவிக்கும் மனோகரனைப் பாருங்கள் மகாராசா?

ஹா! .....ஹா! ...ஹா!

ஏன் சிரிக்கிறீர்கள்? செவ்வாழைத் தோட்டத்தில் குதித்தாடும் குரங்குகளே! மானிட உருவில் வந்து இந்த மண்ணை வளைக்க வந்த மாபாபிகளே!

இப்படிச் சிரித்தவர்கள் வாழ்ந்ததில்லை! அழுதவர்கள் கெட்டதில்லை! என்று ஜெகம் சொல்லும் மந்திரத்தை மறந்து விட்டீர்களா? செப்படி வித்தையால் செங்கோலை முறியடிக்க வந்த சிறுநரிக் கூட்டமே!

கண்ணீரின் மகிமையை உணர முடியாத கயவர் கும்பலே! மனோகராவில் நடிகை கண்ணாம்பாவின் நீண்ட முழக்கத்தின் ஒரு பகுதியைத்தான் நினைவுப் பெட்டகத்தில் இருந்து மீட்டுத் தந்திருக்கிறேன்.

“தமிழனுடைய கை அந்தக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்குமென்று மாத்திரம் கருத வேண்டாம்” என்று முதல்வர் கருணாநிதி எழுதியதை வைத்துக் கொண்டு இனிமேல் தமிழக மீனவர்கள் ஸ்ரீலங்கா கடற்படைக்கு எதிராக தங்கள் கையில் துப்பாக்கி ஏந்தப் போகிறார்கள் என்று நீங்கள் முடிவு கட்டினால் அது உங்களுடைய பிழை! நானுந்தான் கடிதத்தைப் படித்துவிட்டு முதலில் குழம்பிப் போனேன்!

துப்பாக்கியாவது கத்தரிக்காயாவது. முதல்வர் கருணாநிதிக்கு புறநானூற்று வீரம் பிடிக்கும். அதற்கு விரிவுரை பொழிப்புரை எல்லாம் எழுதத் தெரியும். ஆனால் உண்மையான வீரம் பிடிக்காது! அவர் சொன்னது என்னவென்றால் இனித் தமிழனுடைய கை அந்தக் கடலில் மீன் பிடிக்காது என்பதுதான்!

கடலில் மீன் பிடிக்காவிட்டால் யாருடைய வயிறு காயும்? அதே ஏழை மீனவர்களது வயிறுதான்!

இவ்வாறு நடுக்கடலில் தமிழக மீனவர்கள் நடாத்தும் தாக்குதல்கள், கொலைகள்பற்றி இந்திய கடலோரக் கடற்படை கண்டுகொள்வதில்லை. வி.புலிகள் இந்தியாவிற்குள் ஊடுருவுகிறார்கள் என்று சொல்லிக் கொண்டு கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்தியக் கடலோரக் கடற்படை ஸ்ரீலங்கா கடற்படை இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களைத் தாக்குவதை ஒருமுறைதானும் தடுத்ததில்லை! காரணம் அது இந்தியப் படை அல்ல இந்திப் படை! கொழும்பில் இருக்கும் இந்தியத் தூதுவர் கவலைப்படுவதோ கண்டுகொள்வதோ இல்லை.

தில்லி அரசோ முற்றாகக் கண்டு கொள்வதில்லை. சாதாரணமாகவே தமிழர்கள் என்றாலே வடக்கில் இருக்கும் இந்திக்காரனுக்கு இளப்பம் அதிகம். அதிலும் சாகிறவர்கள் தமிழர்கள் அதிலும் சமூக ஏணியின் அடிமட்டத்தில் வாழும் வசதி வாய்ப்பற்ற வறிய மீனவர்கள் என்றால் தில்லியில் இருப்பவர்கள் ஏன் ஏறெடுத்துப் பார்க்கப் போகிறார்கள்?

தமிழக மீனவர்கள் எல்லை மீறி இலங்கைக் கடற்பரப்புக்குள் புகுந்தார்கள் என ஸ்ரீலங்கா அரசு சொல்கிறது. இந்தியக் கடல் எல்லைக்குள் புகுந்து தாக்குவததை அது ஒத்துக் கொள்வதில்லை. சரி, எல்லை மீறி வந்தார்கள் என்று சொன்னால் முதல்வர் கருணாநிதி கேட்பதுபோல் அவர்களைக் கைது செய்வதுதானே? அவர்களை காகம் குருவி சுடுவதைப்போல் சுட்டுக் கொல்ல எந்த நாட்டுச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது?

இந்தக் கொலைத் தாக்குதல்களுக்கு எதிராக வேலை நிறுத்தம், உண்ணாவிரதப் போராட்டம், சாலை மறியல் எனப் போராட்டங்கள் நடாத்தி இராமேசுவரம், நாகபட்டினம், வேதாரண்யம் போன்ற கடலோர மீனவர்கள் களைத்தே போனார்கள். அவ்வப்போது ஆட்சியாளர்களாலும் அதிகாரிகளாலும் உறுதி மொழிகள் சில வழங்கப்பட்டாலும் அந்த உறதி மொழிகள் பின்னர் காப்பாற்றப்படுவதில்லை. காற்றோடு கலந்துவிடும்.

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு கடந்த 21 ஆண்டுகளில் 112 தமிழக மீனவர்கள் பலியாகி இருக்கிறார்கள். 896 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான படகுகள் நாசமாக்கப்பட்டுள்ளன. கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான வலைகள் மீன்பிடி உபகரணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதனை இந்திய அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது.

கச்சதீவு இராமேசுவரத்தில் இருந்து 12 மைல் தொலைவிலும், தமிழீழத்தில் இருந்து 13 மைல் தொலைவிலும் இருக்கிறது. கிழக்கு மேற்காக ஒரு மைல் தூரமும் வடக்குத் தெற்காக அரை மைல் தூரமும் கொண்டது. ஆனால் அதன் சிறப்பு அதனை அண்டிய கடற்பகுதி நிறைய மீன்வளம் கொண்டதாக உள்ளது.

கச்சதீவு கைமாறியதால் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதற்கு 13 கடல் மைல் தொலைவு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 9 கடல் மைல் தொலைவு பாறைகள் மட்டும்தான் இருக்கிறது. மீதம் இருக்கும் 4 கடல்மைல் தொலைவில் உள்ள கடல்பகுதியில்தான் தமிழக மீனவர்கள் மீன் பிடித்து வருகிறார்கள். அதற்கு அப்பால் 5 கடல் மைல் தொலைவில் உள்ள கச்சதீவுப் பகுதியில்தான் இறால் மற்றும் மீன் அதிகளவில் கிடைக்கின்றன. மீன் பிடிப்பதற்காக அந்த பகுதிக்குச் செல்லும் மீனவர்கள் மீதுதான் பெரும்பாலும் ஸ்ரீலங்கா கடற்படயினர் துப்பாக்கிச் சூடு நடத்திப் படுகொலை செய்கிறார்கள். 1974 ஆம் ஆண்டு எழுதிக்கொண்ட உடன்படிக்கையின்படி கச்சதீவு ஸ்ரீலங்காவிற்கு இந்திரா காந்தி அம்மையாரால் தாரை வார்க்கப்பட்டாலும் அதனை அண்டிய பகுதியில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவர் என்று விதி அந்த உடன்படிக்கையில் காணப்பட்டது. மீனவர்கள் மட்டுமல்ல தமிழக யாத்திரியர்களும் செல்லலாம் என்று சொல்லப்பட்டது. ஆனால் அந்த விதி ஸ்ரீலங்கா அரசு கேட்டுக் கொண்டதின் பேரில் பின்னர் நீக்கப்பட்டு விட்டது.

1976 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒப்பந்தத்தின்படி கச்சதீவுப் பகுதிக்கு தமிழக மீனவர்கள் செல்லக்கூடாது, மீன்பிடிக்கவும் கூடாது, கச்சதீவு அந்தோனியார் திருவிழாவிற்கு யாத்திரியர்கள் போகக் கூடாது என இந்திய அரசு அறிவித்தது. அப்போது தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

கச்சதீவு ஸ்ரீலங்காவிற்கு கையளிக்கப்பட்டதை அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க எதிர்த்தது. முதல்வராக இருந்த கலைஞர் கருணாநிதி அனைத்துக் கட்சியையும் கூட்டி தமிழகத்தின் எதிர்ப்பை நடுவண் அரசுக்குத் தெரிவித்தார். ஆனால் அந்த எதிர்ப்பை இந்திரா காந்தியோ அவரது காங்கிரஸ் அரசசோ சட்டை செய்யவே இல்லை.

1990 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜெயலலிதாவின் அதிமுக அரசு "தமிழக மீனவர்களின் நலனைக் காக்க கச்சதீவை மீட்போம்" என்ற முழகத்தை முன்வைத்தது. 1991 ஆம் ஆண்டு ஆடி மாதம் 14 ஆம் நாள் கோட்டையில் கொடியை ஏற்றிவைத்து விட்டுப் பேசிய முதல்வர் ஜெயலலிதா கச்சதீவை என்ன விலைகொடுத்தும் மீட்கப் போவதாகச் சூளுரைத்தார்.

1991 ஆம் ஆண்டு ஐப்பசி 4 ஆம் நாள் தமிழக சட்டமன்றத்தில் கச்சதீவை ஸ்ரீலங்காவிடம் இருந்து மீட்கக் கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் நடைமுறையில் ஒன்றுமே உருப்படியாக நடைபெறவில்லை. தில்லி அந்தத் தீர்மானத்தைக் குப்பைக் கூடைக்குள் போட்டுவிட்டது.

கலைஞர் கருணாநிதி பதவி இழந்து எதிர்கட்சி இருக்கைகளில் இருக்க நேரிட்டபோது கச்சதீவை மீட்கும் போராட்டம்பற்றி அவ்வப்போது அறிவித்தார். ஆனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தபின்னர் கச்சதீவுச் சிக்கலைக் கலைஞர் கருணாநிதி முற்றாகக் கிடப்பில் போட்டு விடுவார். இதுதான் தமிழனுக்குச் சொந்தமான கச்சதீவு சிங்களவனது தீவாக மாறிப்போன சோகக் கதை.

கச்சதீவை ஸ்ரீலங்காவிடம் இருந்து மீட்கும்வரை இராமநாதபுரம், நாகபட்டினம், வேதாரணியம் போன்ற பகுதிகளில் வாழும் இலட்சக்கணக்கான மீனவர்களுக்கு பாக்கு நீரணையில் பாதுகாப்பு அடியோடு இல்லை.

தமிழக மீனவர்களுக்கு மட்டுமல்ல கருநாடக – கேரள மாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. பங்களுர் தெருக்களில் தமிழர்கள் தமிழ் பேச முடியாது. அங்குள்ள திரையரங்குகளில் தமிழ்த் திரைப்படங்களைக் காட்ட முடியாது. கன்னட வெறியர்கள் திரைப்பட அரங்குகளுக்குத் தீ வைத்துக் கொளுத்துகிறார்கள். தமிழர்களுக்குச் சொந்தமான வாகனங்கள் சேதப்படுத்தப்படுகின்றன. இதில் சமூகவிரோதிகள் மட்டுமல்ல அரசியல்வாதிகளும் ஈடுபடுகிறார்கள். முன்னாள் கன்னட நடிகை சரோஜாதேவி ஆர்ப்பாட்டப் பேரணிகளுக்கு தலைமை தாங்குகிறார். அவர்களில் யாரும் இந்திய தேசியம் பற்றிப் பேசுவதில்லை. அது பற்றிக் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை. தங்கள் இனநலனுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று மேடை தோறும் முழங்கும் தமிழர்கள் கன்னட சுப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சிவாஜி படம் எப்பவரும் என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறார்கள்! தமிழக முதல்வர் கருணாநிதி தமிழர்களுக்கு எதிராக இன அடிப்படையில் நடத்தப்படும் தாக்குதல்கள் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல இந்திய தேசியத்துக்கு மற்ற எவரையும் விட சாமரை வீசுகிறார்.

“நாட்டின் நலனைப் புறக்கணித்து விட்டு இலங்கைத் தமிழர் பிரச்சினையில், தமிழக அரசு நேரடியாகத் தலையிடாது. தேசப் பாதுகாப்பை விட்டு விட்டு, புறக்கணித்து விட்டு இலங்கைப் பிரச்சினையில் தமிழகம் நேரடியாகத் தலையிடும் என யாரும் கனவு கூடக் காண வேண்டாம்” எனத் தமிழ் உணர்வாளர்களையும் தமிழ் தேசியவாதிகளையும் எச்சரிக்கிறார்.

மெத்தச் சரி. இலங்கைத் தமிழர் சிக்கலில் தமிழக அரசு தலையிட வேண்டாம். குறைந்த பட்சம் ஸ்ரீலங்கா கடற்படையால் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வரும் தமிழக மீனவர்களையாவது இந்திய நாட்டு நலனுக்காக ஸ்ரீலங்கா கடற்படையிடம் இருந்து தமிழக முதல்வர் காப்பாற்ற வேண்டாமா?

- நக்கீரன், தமிழ்கனேடியன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக மீனவர்களையாவது தமிழக முதல்வர் காப்பாற்ற வேண்டாமா?

இலங்கைத் தமிழர் சிக்கலில் தமிழக அரசு தலையிட வேண்டாம். குறைந்த பட்சம் ஸ்ரீலங்கா கடற்படையால் தாக்கப்பட்டும் கொல்லப்பட்டும் வரும் தமிழக மீனவர்களையாவது இந்திய நாட்டு நலனுக்காக ஸ்ரீலங்கா கடற்படையிடம் இருந்து தமிழக முதல்வர் காப்பாற்ற வேண்டாமா?

- நக்கீரன், தமிழ்கனேடியன்

இதனைச் செய்தால், சண் ரீவியின் இலாபம் எத்தனை மடங்கால் உயரும், தி. மு. க. வின் வாக்கு எத்தனை வீதத்தால் உயரும் போன்ற கணக்குகளைக் கொடுத்தீர்களானால் நிச்சயமாகச் செய்வார். ஒரு கணமும் பின் நிற்க மாட்டார்.

உண்மையைச் சொல்லப்போனால், இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப் படுவதைத் தடுப்பதற்கு கருணாநிதி எதுவுமே செய்யப்போவதில்லை. கருணாநிதி மட்டுமல்ல தமிழகத்தில் ஆட்சிக்குவரும் எந்தக்கட்சியுமே எதுவுமே செய்யப்போவதில்லை.

இவர்கள் இலங்கைத் தமிழர்களை அவலத்திலிருந்து மீட்க உதவுவார்கள்.

கனவே கலையாயோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

“தமிழனுடைய கை அந்தக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்குமென்று மாத்திரம் கருத வேண்டாம்” என்று முதல்வர் கருணாநிதி எழுதியதை வைத்துக் கொண்டு இனிமேல் தமிழக மீனவர்கள் ஸ்ரீலங்கா கடற்படைக்கு எதிராக தங்கள் கையில் துப்பாக்கி ஏந்தப் போகிறார்கள் என்று நீங்கள் முடிவு கட்டினால் அது உங்களுடைய பிழை! நானுந்தான் கடிதத்தைப் படித்துவிட்டு முதலில் குழம்பிப் போனேன்!

துப்பாக்கியாவது கத்தரிக்காயாவது. முதல்வர் கருணாநிதிக்கு புறநானூற்று வீரம் பிடிக்கும். அதற்கு விரிவுரை பொழிப்புரை எல்லாம் எழுதத் தெரியும். ஆனால் உண்மையான வீரம் பிடிக்காது! அவர் சொன்னது என்னவென்றால் இனித் தமிழனுடைய கை அந்தக் கடலில் மீன் பிடிக்காது என்பதுதான்!

கடலில் மீன் பிடிக்காவிட்டால் யாருடைய வயிறு காயும்? அதே ஏழை மீனவர்களது வயிறுதான்!

- நக்கீரன், தமிழ்கனேடியன்

கருணாநிதியா!! துப்பாக்கியா!! இலங்கைக் கடற்படைக்கு எதிராகவா!!

நானும் சற்றுக் குழம்பித்தான் போயிருந்தேன். இப்போது தெளிந்துவிட்டேன்.

அந்தாள்ல சும்மா நெடுகலுமும் நொட்டை சொல்ல கூடாது. இந்திய சட்டவிதிகளின் படிதான் அவரால் நடக்கமுடியும். ஆக எதிர்பார்ப்பது எங்கட தவறுதானே தவிர அவருடையது அல்ல. ஆறு கோடி தமிழர்களுடைய வாழ்வை நெறிப்படுத்துவதில் அவருக்கின்ற பொறுப்புக்களையும் சற்று சிந்திக்கவேண்டும். அதற்காக அவர் பத்தரை மாற்று தங்கம் என்று சொல்லவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறு கோடி தமிழர்களுடைய வாழ்வை நெறிப்படுத்துவதில் அவருக்கின்ற பொறுப்புக்களையும் சற்று சிந்திக்கவேண்டும்.

இலங்கைக் கடற்படையால் தாக்கப்படும் தமிழக மீனவர்கள் அந்த ஆறு கோடிக்குள் அடக்கமா? அல்லது தனியான கணக்குக்குள் வருவார்களா?

தெளிவுபடுத்துவீர்கள் என்று நம்பித்தான் கேட்கிறேன்.

அதற்காக அவர் கண்டித்து வெளியிட்ட அறிக்கையை நீங்கள் முழுமையாக வாசித்திருக்கிறீர்களா?

ஈழத்தமிழர்கள் மீதான ஆதரவு போக்குக்காக அவரது ஆட்சி ஒரு தடவை லைக்கப்பட்டது நீங்கள் அறியவில்லையா?

இப்போாதும் அவ்வாறான ஒரு நிலையை ஏற்படுத்துவதற்கு எத்தனை ஜில்மால்களை இந்திய றோ செய்துவருகிறது என்பதை கடந்த ஒரு மாதகாலமாக அறியவில்லையா?

நாளையே தமிழீழம் கிடைக்குமாக இருந்தால் எனது ஆட்சி கலைபடுவது பற்றிக்கூட கவலைப்படாமல் அவர்களோடு செல்ல தயார். என அவர் சொல்லவில்லையா?

தமிழ்நாட்டின் எதிர்கட்சியான ஜெயலலிதாவாலும் உள்கட்சியில் இருக்கும் காங்கிரஸாலும் அவர் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்வார் என்பதையும் நாங்கள் யோசிக்க கூடாதா?

கேள்விகளே சில பதில்களை தரும் என நம்புகிறேன்.

ஏதோ அவரால் முடிந்ததை செய்கிறார். இன்னும் அவர் செய்யலாம் என எதிர்பார்க்கலாம். அதைவிடுத்து கல்லெறிந்து கொண்டே இருப்பது எதிர்மாறான மனநிலையையே உருவாக்கும் என சொல்ல விரும்புகிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஷால், உங்கள் கருத்துடன் நான் உடன்படுகின்றேன். ஆனால் இவ்விடயம் தமிழக மீனவர்கள் தொடர்பானதுதானேயொழிய ஈழத்தமிழர் தொடர்பானதல்ல. இலங்கைக் கடற்படையால் தமிழகத் தமிழர்கள் தாக்கப்படுவதைத் தடுப்பதற்கு அவர் என்ன செய்துள்ளார்? என்ன செய்துகொண்டிருக்கின்றார்? என்ன செய்யப்போகின்றார்?

கஸ்தூரி இன்று தி.மு.க அமைச்சர்களின் தலைமையில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இது தனியே இலங்கை அரசிற்கான எச்சரிக்கையல்ல, இந்திய மத்திய அரசிற்குமான எச்சரிக்கை.

எதற்கெடுத்தாலும் அவர்களை சிங்களத் தலைவர்கள் போன்று தமிழர் விரோத சக்திகளாக கற்பனை பண்ணாதீர்கள்.

எமது வருங்கால நாட்டிற்கான அங்கிகாரம், அதன் மீதான சிங்களம் தவிர்ந்த புற சக்திகளினால் ஏற்படுத்தப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் என்பற்றை முறியடிப்பதற்கு அவர்கள் நிச்சயம் நமக்கு உதவுவார்கள்.

தமிழக மீனவர்கள் மீது இந்திய மத்திய அரசே கவனம் செலுத்த வில்லை. தமிழக அரசல்ல. இனியும் தாக்குதல்கள் தொடர்ந்தால் நிச்சயமாக தமிழகத்தின் கோபத்தை மத்திய அரசிற்கு உறைக்கும் வகையில் கருணாநிதி தெரிய வைப்பார்.

தமிழக மீனவர்களிடையே யாராவது ஜிகினா சினிமாக்காரிகள் இருந்தால் நிச்சயம் கருணாநிதியினால் எதிர்ப்பு நடவடிக்கை எடுக்கப்படும். இது ஈழத்தமிழருடைய பிரச்சனை அல்ல இருந்தாலும் இங்கு கருத்து எழுதும் சில அன்பர்களுக்காக - தயவு செய்து கடந்த கால வரலாறுகளை புரட்டிப் பாருங்கள் இந்த அரசியல் வாதியால் ஈழத்தவருக்கு உதவிகள் செய்யப்பட்டதா உபத்திரவங்கள் தரப்பட்டதா என அறிந்து கொள்ள முடியும்.

ஈழத்திலிருந்து

ஜானா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக மீனவர்கள் மீது இந்திய மத்திய அரசே கவனம் செலுத்த வில்லை. தமிழக அரசல்ல. இனியும் தாக்குதல்கள் தொடர்ந்தால் நிச்சயமாக தமிழகத்தின் கோபத்தை மத்திய அரசிற்கு உறைக்கும் வகையில் கருணாநிதி தெரிய வைப்பார்.

அப்படியொன்று நடைபெற்று தமிழக மீனவர்களின் துயரம் நீங்குமாயின் அதற்காக மகிழ்ச்சியடைபவர்களிடையே நிச்சயம் நானும் இருப்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியொன்று நடைபெற்று தமிழக மீனவர்களின் துயரம் நீங்குமாயின் அதற்காக மகிழ்ச்சியடைபவர்களிடையே நிச்சயம் நானும் இருப்பேன்.

kadantha 8 mathangkaL thamizakaththil iruNthEn. 4 thadavai rameswaram senRu menavarkaLai pEddi kaNdirukkirEn. nerukkadikaLukkuLLum Menavar pirassinaiyai meNdum thamiznAddin kavanaththukku koNduvaruvathu thOdarpAka uzaiththirukkirEn. Yarl.com udpada Eelaththu mediyakkaL uLavuththuraiyal vAsikkap paduvathudan avai pOrALikaLin aNi UdakamAkavE karuthap padukinRana. iNthi kadaRpadai pOnRa vasanangkaL ethir maRaiyAna vizaivukaLaiyE ERpaduththum. kalainjar thodarpAka munnaiya kalaththil vidda thavaRukaLai Nam vidak kudAthu.

oru mukiyamana thalaivar ippadik kURinAr: vaiko kalainjarudan iruNthiruNthal kalainjar perumpANmai arasu amaiththirupAr. Eezath thamizar pirassinaiyil Akka pUrvamaka iyangkiyiruppAr. Ipozuthu idampeRum kadumpOkkukku kAraNam emathu pizaiyana aNukumuRaikaLum Jayalalithavin ethirppumE Akum. thiru Vaiko ithupaRRi Jayalalitha ammaiyaridam pEsavENdum enpathu ethirpAppu. veLinAdukaLil iNthiya thamizarkaLin thalaimaiyil ilangkai thamizarum iNaiNthu ilangkai thUtharakangkaLmun ArpAddam seyyalam. UdakangkaLil ezuthuthum pesum pOthu avathAnam thEvai. kadaNthakAlathil karuNANithi Adssi kalaikkap paddathaRkku kAraNamanathupOnRa seyalkaLil NAm Edupaduvathu perum thavaRAkavE mudiyum.

  • கருத்துக்கள உறவுகள்

±ýÉ ¾Á¢ú ±ØÐÕ ÀÂýÀÎòи¢ÃÈ£÷¸û? ±ôÀÊ ¾Á¢Æ¢ø ±ØÐÅÐ?

  • கருத்துக்கள உறவுகள்

'' இலங்கைக் கடற்படையால் தாக்கப்படும் தமிழக மீனவர்கள் அந்த ஆறு கோடிக்குள் அடக்கமா? அல்லது தனியான கணக்குக்குள் வருவார்களா?"

தங்கை கஸ்தூரி உங்க ஆதங்கம் புரிகிறது இருந்தாலும் அவங்க ஆசனத்தை முதலில் தக்க வைக்க வேண்டாமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.