Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியா பள்ளிவாசல் கடைத்தொகுதியில் தீ : ஒற்றுமையாக வாழும் இனங்களுக்கு இடையில் வன்முறைகளை தூண்டும் விசமிகளின் செயற்பாடா ?

Featured Replies

வவுனியா பள்ளிவாசல் கடைத்தொகுதியில் தீ : ஒற்றுமையாக வாழும் இனங்களுக்கு இடையில் வன்முறைகளை தூண்டும் விசமிகளின் செயற்பாடா ?

 

 

வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இன்று அதிகாலை 1.20 மணியளவில் எற்பட்ட தீ விபத்தில் இரு கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது.

online_New_Slide.jpg

வவுனியா நகரபள்ளிவாசல் அமைந்துள்ள பகுதியில் சுமார் 14 கடைகள் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இன்று அதிகாலை திடீரென தீ பரவியதையடுத்து பள்ளிவாசல் ஊடாக தீ அணைப்பு பிரிவினருக்கும் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும், தீ அணைப்பு பிரிவனரும் பொது மக்களின் உதவியோடு பற்றி எரிந்த தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

பற்றி எரிந்த தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாலும் இரு கடைகள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன் இரு கடைகள் பகுதியளவில் எரிந்து சேதமடைந்துள்ளன.

IMG_2129.JPG

குறித்த கடைப்பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதாகவும் அதனைத் தொடர்ந்தே கடைகள் தீப்பித்து எரிந்ததாகவும், தீப் பிடித்ததும்  இருவர் தப்பியோடியதைக் கண்டதாகவும்  அப்பகுதியில் பயணித்தோர் தெரிவிக்கின்றனர்.

திட்டமிட்ட ரீதியில் இக் கடைகள் மீது  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும், விசமிகளின் செயற்பாட்டால் ஒற்றுமையாக வாழும் வவுனியாவில் இனங்களுக்கு இடையில் வன்முறைகளை தூண்டும் வகையில் இச்செயற்பாடு அமைந்துள்ளதாகவும் வவுனியா பள்ளிவாசல் நிர்வாகம் தெரிவிக்கின்றது.

சம்பவ இடத்திற்கு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் வருகை தந்து நிலமையை பார்வையிட்டதுடன் இது தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

http://www.virakesari.lk/article/27250

முஸ்லிம்கள் கடைகளை காலிசெய்து போட்டு நட்டஈடு வாங்க தாங்களே வெறும் கடைகளை எரித்ததாக  இருக்கலாம்.

  • தொடங்கியவர்
வர்த்தக நிலையங்கள் தீக்கிரை ; வவுனியாவில் பதற்றம்
 

image_dba33d45d4.jpg

-செல்வநாயகம் கபிலன்

வவுனியா நகர பள்ளிவாசலுக்கு அருகில் இருந்த இரு கடைகள் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இச்சம்பவம், இன்று (20) அதிகாலை 1.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா பள்ளிவாசல் பகுதியில் 14 கடைகள் காணப்படுகின்றன. அவற்றில் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக இரு கடைகள் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதுடன், இரு கடைகள் பகுதிளவு சேதமடைந்துள்ளன.

குறித்த வர்த்தக நிலையங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசமிகளின் செயற்பாடே தாக்குதலுக்கு காரணம் என, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தை அடுத்து, அப்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு பள்ளிவாசல் முன்பாக ஒன்று கூடினர். இதனால் அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டதுடன் பதற்ற நிலையும் ஏற்பட்டது.

இதேவேளை, தீ விபத்து குறித்து பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், அவர்களது விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் நடைபெறுகின்றன. 

குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவ்வாறு நடைபெறாத நிலையில் எதிர்வரும் புதன்கிழமை பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அப்பகுதி வர்த்தகர்களும், பள்ளிவாசல் நிர்வாகமும் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், பதற்றநிலை நிலவிய இடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான், வடமாகாண சபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், அயூப் அஸ்மின், வர்த்தக சங்கத் தலைவர் ரி.கே.இராஜலிங்கம், மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் சென்று நிலமைகளை அவதானித்தனர். 

குறித்த சம்பவம் தொடர்பில், வவுனியா பொலிஸார் விசேட குழுவை அமைத்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

http://www.tamilmirror.lk/வன்னி/வர்த்தக-நிலையங்கள்-தீக்கிரை-வவுனியாவில்-பதற்றம்/72-207521

  • கருத்துக்கள உறவுகள்

புட்டும் தேங்காய்ப்பூவும் எங்கை ஒற்றுமையையாய் இருக்கினம்.... வீட்டுக்குள்ளை இருந்துகொண்டே ...அதுவும் யாழில் திண்டுகொண்டே..இனச்சுத்திகரிப்பு என்று சத்தம் போடுகினம்......மன்னார் ரோட்டில் உள்ள பிள்ளையார் சிலையளை உடைக்கினம்......இவஈகு யாரும் ஏன் சிண்டு முடியோணும்.....இவன்களும்.. அரசியல் காவாலிகளும்தான் காரணம்.......காலியிலை தேரர் சொன்ன மாதிரி ....வெளீட ஓட்டுப் பொறுக்கிகளுக்கு அங்கு என்ன வேலை......எனவே இவன்களுக்கு கொடுத்தது சரியே

  • தொடங்கியவர்

வவுனியா பள்ளிவாசல் கடைத்தொகுதியில் தீ பரவியமைக்கு விபத்தே காரணம்!

 

வவுனியா பள்ளிவாசல் கடைத்தொகுதியில் தீ பரவியமைக்கு விபத்தே காரணம்!

வவுனியா பள்ளிவாசல் கடைத்தொகுதியில் தீ  பரவியமைக்கு மின்சார ஒழுக்கே காரணமாக இருக்கலாம்  என வவுனியா மாவட்ட உதவி பொலிஸ் உதவி அத்தியட்சகர் பியசிறி பெர்ணான்டோ தெரிவித்தார்.

வவுனியா நகர பள்ளிவாசல் பகுதியில் அமைந்துள்ள 14 கடைத்தொகுதிகளில் இரண்டு கடைகள் நேற்று(20)  தீயில் எரிந்து நாசமாகியது.

இந்நிலையில் குறித்த தீ விபத்து தொடர்பாக வவுனியா பொலிசார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா பள்ளிவாசல் கடைத்தொகுதியில் தீ பரவியமைக்கு விபத்தே காரணம்!

இது தொடர்பில் கருத்து தெரிவித்த வவுனியா மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகர்...

தீ விபத்து தொடர்பாக இன்று (20) அதிகாலை பொலிசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் உடனடியாக செயல்ப்பட்டு தீயை அணைத்துள்ளதுடன் பக்கத்து கடைகளுக்கு தீ பரவுவதை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

அத்துடன் தீயானது கடையின் உள்ளிருந்தே பரவியுள்ளதுடன் கடையை தீயிட்டு விட்டு ஓடியதாக கூறப்படும் நபர்களை எவரும் பார்த்ததாக பொலிஸில் முறைப்பாடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

வவுனியா பள்ளிவாசல் கடைத்தொகுதியில் தீ பரவியமைக்கு விபத்தே காரணம்!

இருந்தபோதும் வன்னி மாவட்ட பிரதிபொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரைக்கு அமைவாக விரிவான விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

இத் தீ விபத்து தொடர்பான விசாரணைகளில் தடவியியல் பொலிஸ் பிரிவு, துப்பறியும் நிபுணத்துவப் பிரிவு மற்றும் புலனாய்வு பிரிவு பொலிசார் களமிறக்கப்பட்டு விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தீ விபத்து நடைபெற்ற கடைகளில் சேகரிக்கப்ட்ட மாதிரிகள் இரசாயன பகுப்பாய்விற்காக கொழும்புக்கு அனுப்படவிருப்பதாகவும் வவுனியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்கர் மேலும் தெரிவித்தார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Vavuniya-mosque-shop-reason-for-fire-accident

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.