Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

''பெண்ணினம் தலைநிமிருமா?''

Featured Replies

''பெண்ணினம் தலைநிமிருமா?''

-சி.ஆதித்தன்-

பெண்ணினம் தலைநிமிருமாஇன்றைய நவீன உலகில் இனமுரண்பாடுகளுக்கும், பொருளாதார பிரச்சினைகளுக்கும் அடுத்தபடியாக பெரியளவில் உள்ள விடயம் பெண்கள் தொடர்பான பிரச்சினையே. இப்பிரச்சினை சாதாரணமாக தீர்த்துவிடக்கூடிய சிறிய பிரச்சினையல்ல. மாறாக உலகின் வரலாற்றிலே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெண்ணினத்தின் மீதான அடக்குமுறைப்பிரச்சினைகள் கருக்கட்டிவிட்டது. இன்று அது ஒரு பூதாகரமான பெரும் பிரச்சினையாக உருப்பெற்றுள்ளது.

சுர்வதேச மகளிர் தினமான மார்ச் 08ம் திகதி உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடுகளினால், அரசுகளினால், தேசியத்தினால், நிறத்தினால், மதத்தினால், மொழியினால்; பன்பாட்டினால் வேறுபட்டு உலகின் பல்வேறு திசைகளிலெல்லாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பெண்ணினமும் தாம் கடந்துவந்த பாதையை சுமந்துவந்த துயரத்தினை .ந்நாளில் ஒருகணம் சிந்திக்க வேண்டியது அவசியமாகிறது.

பெண்கள் என்றால் ஒரு காலத்தில் மிகவும் நலிவர்களாகவே கருதப்பட்டு வந்தனர். துன்பங்களையும் வேதனைகளையும் சுமந்து சமநீதிக்கனவடன் பயணித்த அவர்களுடைய வாழ்க்கைப்படகில் சந்தித்த வெற்றிகளையும் தோல்விகளையும் வடுக்களையும் நினைவுறுத்தும் நாள் தான் சாவ்தேச பெண்கள் தினம். உலகின் பல பாகங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பெண்கள் பல்வேறு காலப்பகுதியில் தமது உரிமைக்காகவும் நீதிக்காகவும் தொடர்ந்து போராடியிருக்கிறார்கள.; இதில் பல போராட்டங்கள் யதார்த்தத்திற்கு புறம்பான வகையில் முன்னெடுக்கப்பட்டமையால் தோல்வியைத் தழுவநேரிட்டன சில சந்தர்ப்பங்களில் போராட்டக் கொள்கைகள் திசைமாறிப் போயின. உதாரணமாக பெண்ணடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டம் எனபது ஒரு கட்டத்தில் ஆண்வர்க்கத்திற்க எதிரான போராட்டமாக மட்டும் திசைமாறியது.

முதல்கட்ட பெண்களின் போராட்டம் சமஊதியத்திற்கான போராட்டமாகவே அமைந்திருந்தது. அமெரிக்கா, ஒஸ்ரியா, டென்மார்க், சவிஸ்லாந்து ஜேர்மனி போன்ற நாடுகளில் பெண்கள் தாங்கள் செய்கின்ற வேலைக்கேற்ற ஊதியத்தை கொடுக்குமாறும் ஆண்களிற்கும், பெண்களிற்கும் இடையில் ஊதிய வேறுபாடு தேவையில்லையெனவும் குரலெழுப்பினர்.

1917ம் ஆண்டு லெனினால் மாபெரும் ரஸ்சியப்புரட்சி முன்னெடுக்கப்பட்டது. பெண்களின் எழுச்சியும் அவர்கள் கிளர்தெழுந்து ஜோர்ச் மன்னனிற்கு எதிராக நடத்திய போராட்டமும் ஜோர்ச் மன்னனின் ஆட்சியை அகற்றி மாபெரும் பொதுவுடமை சமுதாயமொன்றைப்படைப்பதற்கு கால்கோலாயின.

ஏரித்திரிய விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட காலப்பகுதியில் எசையாஸ் எவேவேக்கிக்கு ஆதரவாக திரண்ட எரித்திரிய பெண்களை ஒரு போரிடும் ஆயுதப்படையணியாக்கியதன் மூலம், அவர்களையும் தமது சுதந்திர போராட்டத்திலே பங்களிக்க வைத்தார் எவேவேக்கி. வியட்நாம், கிழக்குத் தீமோh,; சீனா போன்ற போராடி விடுதலைப்பெற்ற நாடுகளிலெல்லாம் அவ்விடுதலை போராட்டத்திற்காக பெண்கள் பங்காற்றினர்.

அடக்குமுறையென்பது முதலில் பெண்களிற்கெதிராகவே தொடங்குகின்றது. உலகெங்கும் பரவலாக நடத்தப்பட்ட போராட்டங்கள் மூலம் உலகம் விழிப்படையத் தொடங்கியது. 1945 ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் பிரகாரம் பெண்களிற்கும் சம உரிமையும் வாக்களிக்கும் உரிமையும் வழங்கப்பட்டதுடன் அடிப்படை மனித உரிமைகளை வழங்குவதற்கும் வழிவகுத்தது. இந்த வகையில் உலகில் சர்ச்சை நிறைந்ததும் தேடல்மிக்கதுமான பெண்ணியம் அதன் அர்த்த பரிமாணங்களையும் விரிவாகவும் விளக்கமாகவும் நாம் பார்க்க வேண்டும்.

பெண்ணியம் (கநஅinளைஅ) என்ற சொல் சுமார் 19ம் நூற்றாண்டளவில் தோற்றம் பெற்றதாகக் கருதப்படுகிறது. அதாவது பெண் எழுச்சி கருக்கொண்ட ஆரம்ப கட்டங்களின் தொடக்க காலம் அது. புதிய சிந்தனையின் எழுச்சி வடிவம் பெற்ற அந்தக்காலப்பகுதியிலேயே பெண்ணியத்தையும் ஒரு ஆய்வுக் கோட்பாடாக எழுதப்பட்டது. இவ்வெழுத்தாளுகை மூலம் பல மாற்றங்களும் பெண்ணியம் தொடர்பான முன்னேற்றப் போக்குகளும் தோன்றத் தொடங்கின.

ஆனால், இதே நேரம் முதலாளித்துவத்திற்கு எதிராக எழுந்த மாக்சீய வர்க்கப் போராட்டத்தில் ஆதிக்க வெறியர்களை எதிர்க்கும் நோக்கில் ஆணாதிக்கதிற்கெதிராகவும் குரலெழுப்பப்பட்டது. உண்மையில் மாக்சியம் என்பது பெண் ஒடுக்குமுறைக்கெதிராகவும் குரலெழுப்பப்பட வேண்டும் என்பதை வலியுறுதுகின்றது

பெண்ணடிமைத்தனமும் அதற்கெதிரான போராட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இச்சூழலில் பெண்ணடிமைத்தனம் என்றால் என்ன? என்பது பற்றிய கருத்துக்களையும் பார்க்க வேண்டும். உலகம் முழுவதும் ஆண் என்பவன் பெண் என்பவளை அதிகாரம் செய்யக்கூடிய வகையில் தான் பால்வகைப் பிரிவுகள் வைக்கப்பட்டுள்ளன. ஆண் தன்னை எல்லாவற்றிலும் முதன்மைப்படுத்திக் கொண்டு பெண்ணைக் கட்டுப்படுத்தினான். எல்லாவற்றிலும் பெண்ணை ஒதுங்கச் செய்து அவளது இயக்கத்தை கட்டுப்படு;த்தினான.; புதுமையான சமூக விதிமுறைகளை விதித்து அவளை பலமற்றவளாக்கினான.; இவ்வாறு அவள் பலமிழக்கும் போது சுயசிந்தனையற்றவளாகி ஆண்களின் கைப்பாவையாகவும் சமூகத்தின் போகப் பொருளாகவும் மாறுகின்றாள். இ;ப்படியாக பெண்ணடிமைத்தனம் சமூகக் கட்டமைப்பினுடாக வளர்த்தெடுக்கப்படுகின்றது.

உலக நிலை இவ்வாறு இருக்க எமது தமிழர் வாழ்வில் பெண்ணடிமைத்தனத்தைப் பற்றி சற்று ஆராய வேண்டியிருக்கிறது தமிழர் வரலாற்றில் இலக்கியங்கள் தோன்றிய காலத்திலேயே பெண்ணடிமைத்தனம் இலக்கியங்களுடாக விருட்சமாக வளர ஆரம்பித்தது.

காலங்காலமாக அவ்விருட்சம் பல கிளைகள் பரப்பி விசாலித்தது. தனது விழுதுகளை ஊன்றி ஆழ வேரோடிப்போயிருக்கிறது. ஆனால், “பாண்டிய மன்னன் அறம் பிழைத்தான் அதனால் தனது கணவன் கொலை செய்யப்பட்டான்” என்பதை அறிந்த கண்ணகி பொங்கி எழுந்து மதுரையை எரித்தாள் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இங்கே பெண்ணின் எழுச்சியை இளங்கோ கூறுவதையும் மற்றொரு பக்கமாக நாம் பார்க்க வேண்டும்.

இது மாற்றம் காணுகின்ற யுகம். ஆண் பெண் இருபாலரும் சம நீதியுடன் சுதந்திரமாக வாழவேண்டுமெனில் பெண்ணியம் தொடர்பான அடிப்படைக் கொள்கைகள் மாற்றப்பட வேண்டும். அனைவரிற்கும் ஒரே நீதி ஏற்பட வேண்டும். இது பெரியாரின் கருத்து இக்கருத்தே இக்காலத்திற்கு மிகவும் பொருத்தமாகவே உள்ளது.

இன்று உலகநாடுகளுடன் ஒப்பிடுமிடத்து தமிழீழத்தில் பெண்ணானவள் தனது அடிமைத் தனங்களிலிருந்து விடுதலையடைந்து வருவதை காணலாம் தமீழீழ விடுதலைப் போராட்டமும் தலைவரின் தீர்க்கதரிசனமான பார்வையுமே இதற்கு கால்கோளாயின

அமுக்கிப்புதைத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணினத்தின் பல்துறை ஆளுமை தமிழீழத்தில் பொங்கி புதுவடிவமெடுப்பதை அவதானிக்கலாம. திறமை ஆற்றல் என்பன பாலியலில் வேறுபாடுகளிற்கு அப்பாற்பட்டது என்பது இதிலிருந்து புலனாகிறது. இந்த இடத்தில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்கள் பெண்கள் தொடர்பாக கூறிய கருத்ததொன்றை முன்வைத்து இப்பத்தியை நிறைவு செய்யலாம்.

வீரத்திலும், தியாகத்திலும் விடுதலை உணர்விலும் ஆண்களிற்கு எவ்வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை பெண்போராளிகள் தமது வீரசாதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.

நன்றி

ஈழமுரசு

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் இப்படிச் சொல்லிச் சொல்லியே காலம் கழிக்கப் போகினம்..!

கெதியா வந்து தங்கட பாட்டை தாங்களே பார்க்க முன் வர வேண்டும் பெண்கள். உடுப்புக்கும் சோக்குக்கும் குடிக்கவும் புகைக்கவும் செலவழிக்கும் தொகைகளை குழந்தைகள் மற்றும் பெற்றோரை பராமரிக்க பெண்கள் செலவு செய்ய முன்வர வேண்டும்.

கடினமான வேலைகளில் ஆண்கள் மட்டும் ஈடுபடுவதை நிறுத்தி பெண்கள் ஆண்களுக்கு நிகராக வேலை வாங்கப்பட்டு ஊதியம் வழங்க வேண்டும்.

குழந்தை பிறப்பு லீவு.. தலையிடி லீவு இதுகளுக்கு ஒரு வரையறை வருவதோடு லீவு காலத்துக்குரிய வேலைகளுக்கு ஈடான வேலைகளை முதலே செய்யப் பணிக்க வேண்டும்..!

கற்பகால லீவுகள் வழங்கப்படும் போது குழந்தைகள் பராமரிப்புக்கு ஆண்களின் பங்களிப்பை அதிகரிக்க பெண்களுக்கு வழங்கப்படும் காலத்துக்கு ஏற்ப ஆண்களுக்கும் அவர்கள் தங்களின் புதிய வாரிசின் மீது அன்பை பராமரிப்பை அதிகரிக்கும் வகையில் மன அழுத்தங்கள் அற்று செயற்பட காலம் வழங்க வேண்டும். தங்கள் துணையைப் பராமரிக்கவும் அவர்கள் நேரம் செலவிட அனுமதிக்க வேண்டும்..!

லேடிஸ் பெஸ்ட் என்பது போன்ற சொற்தொடர்களை களைய வேண்டும்.

மகளிர் தினம் போல ஆடவர் தினமும் அறிமுகப்படுத்தப்பட்டு பெண்களால் ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், குடும்ப ஆண்களின் மன அழுத்தம் அதிகரிப்பது வேலைப்பழுக்களை ஆண்கள் தலையில் மட்டும் கட்டுவிட்டு ரீவி பார்க்கும் பெண்கள் என்று பெண்களின் பொறுப்பற்ற நிலைகள் வெளி வர வேண்டும்..!

பெண்களைப் போல ஆண்களுக்கும் கிரமமான மருத்துவப் பரிசோதனைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

பாகுபாடின்றி வேலைத்தளங்களில் அணைத்துத் துறைகளிலும் ஆண்களுக்கு சம வீதம் அளிக்க வேண்டும். குறிப்பாக நிர்வாகத்துறை. பேர்சனல் செக்கிரற்றி என்று மினிஸ்கேட்டில பெண்கள் கவர்ச்சி காட்டி வேலை தேடுதல் ஒளிக்கப்பட வேண்டும்.

வேலையிடங்கள் பொது இடங்களில் பெண்கள் கவர்சிகர உடைகள் அணிவது கவர்ச்சி தகுதியாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.. ஆண்கள் போல இயல்பாக நாகரிகமான உடையணிந்து வர வேண்டும்.

குழந்தைகள் மற்றும் குடும்பம் தொடர்பான வர்த்தக விளம்பரங்களில் பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்படுவது நிறுத்தப்பட்டு ஆண்களுக்கும் சம முக்கியம் அளிக்க வேண்டும்.

போர்களத்தில் 100% பெண்களின் பங்களிப்போடு வெற்றிகள் பெறப்பட வேண்டும். ஆண்களைக் கலந்து அனுப்பிறதை நிறுத்த வேண்டும். ஆண்களுக்கு தனியான பகுதியும் பெண்களுக்கு தனியான பகுதியிலும் போர் களம் அமைத்துக் கொடுக்கும் போது வீரத்தின் விளைவு அப்போதுதான் தெளிவா தெரியும்..!

பெண்களால் திட்டமிட்டு காதலித்து கைவிடப்படும் அல்லது திருமணம் செய்துவிட்டு ஏமாற்றி பலருடன் உறவு வைக்கும் விபச்சாரிகளை அடையாளம் காட்டுவதோடு பாதிக்கப்படும் ஆண்களுக்கு உளவியல் நெறிப்படுத்தல்கள் வழங்கப்பட வேண்டும். அப்படிப்பட ஆண்கள் உளவியல் சமுகவியல் தக்கங்களில் இருந்து மீளவும் தங்கள் வாழ்வில் வெற்றி பெற வழிகாட்டல்கள் அவசியம்.

குடும்பத்தில் அப்பா - பிள்ளைகள் உறவை சீர்குலைக்கும் அம்மாக்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகளை பிரித்து தாயிடம் மட்டும் ஒப்படைக்கும் நிலையில் அப்பாமாரின் மனநிலை கவனத்தில் கொள்ளப்பட்டு அதற்கு ஏற்ப தீர்மானங்கள் எடுக்க வேண்டும்.

பெண்களால் பரவும் தொற்று நோய்கள் குறித்து ஆண்கள் விழிப்புணர்வு படுத்தப்பட வேண்டும்.

இப்படியும் இன்னும் நிறையவும் பல விடயங்களிலும் விழிப்புணர்வுகள் ஆண்கள் மத்தியிலும் எழ வேண்டி இருக்கிறது என்பதை இன்னும் பெண்கள் தொடர்பில் பழைய ரெக்கோட் போட்டு காலம் ஓட்டும் கட்டுரையாளர்கள் உணர வேண்டும். ஆண்கள் மத்தியில் பெண்களால் எழும் பிரச்சனைகள் தொடர்பில் பெண்கள் அறிவுறுத்தப்பட வேண்டும். :P :icon_idea:

Edited by nedukkalapoovan

காதலித்துவிட்டு கைவிட்ட பெண்களை தெரியும். ஆனால் யாரையும் "திட்டமிட்டு" காதலித்து கைவிட்ட பெண்களை நான் இதுவரை கேள்விப்படவில்லை.

ஆண்களில் அப்படியானவர்களைக் கண்டிருக்கிறேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.