Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஆரம்பித்த சில நிமிடங்களில் முகாபே இராஜினாமா

Featured Replies

நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஆரம்பித்த சில நிமிடங்களில் முகாபே இராஜினாமா (UPDATE)

 

பிந்திய செய்திகளின்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த விவாதம் ஆரம்பித்த சில நிமிடங்களில் முகாபே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டு சபாநாயகர் அறிவித்துள்ளார்.

ஸிம்பாப்வே ஜனாதிபதி ரொபர்ட் முகாபே மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த விவாதம் அந்நாட்டு பாராளுமன்றில் ஆரம்பித்துள்ளது.

9_Mugab.JPG

ஸிம்பாப்வே சுதந்திரம் பெற்ற 1980ஆம் ஆண்டு முதல் பிரதமராகப் பதவி வகித்த முகாபே, 1987ல் ஜனாதிபதியாகப் பதவியேற்றதையடுத்து, கடந்த முப்பது வருட காலமாக அதே பதவியில் தொடர்ந்து வருபவர்.

தற்போது 93 வயதாகும் முகாபேயின் பதவியைத் தன்வசப்படுத்திக்கொள்ள அவரது மனைவி கிரேஸ் முகாபே முயற்சிப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

அதை நடைமுறைப்படுத்திக்கொள்வதற்காக அந்நாட்டு அரசியல் சட்டங்களிலும் மாற்றங்கள் ஏற்படுத்த முயன்றதாக முகாபே மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவர் பதவி விலக வேண்டும் என்ற போராட்டங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்றே வந்தன.

கடந்த வாரம் அந்நாட்டில் இராணுவ ஆட்சி அறிவிக்கப்பட்டது. என்றபோதும், தனது பதவியில் இருந்து விலக முகாபே மறுத்துவருகிறார்.

இந்நிலையிலேயே அவர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பாராளுமன்றுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு, முகாபேயின் சொந்தக் கட்சியும் ஆதரவளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/27311

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்று இரண்டு வருடங்களுக்குள் உட்பட்டு 
கோசான் என்ற கருத்தாளருக்கு இங்கு எழுதி இருந்தேன் 
இவர் இன்னும் கொஞ்ச நாளில் சொந்த மக்காளாலேயே தூக்கி ஏறியபடுவார் என்று 
இப்போ நடந்துகொண்டு இருக்கிறது.

ஆப்ரிக்க கருணாநிதி 
வாயை திறந்த தமிழ் தமிழ் என்று பொய் பொய் 
செய்த ஒரே வேலை குடும்பத்துக்கு சொத்து சேர்த்தது 

  • தொடங்கியவர்

முகாபே பதவி விலகல்: ஜிம்பாப்வே வீதிகளில் மக்கள் ஆரவார கொண்டாட்டம்

அதிபர் பதவியில் இருந்து ராபர்ட் முகாபே விலகியுள்ள நிலையில், அவரது 37 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதை அந்நாட்டு மக்கள் வீதிகளில் கொண்டாடி வருகின்றனர்.

ஜிம்பாப்வே தெருக்களில் மக்கள் கொண்டாட்டம்படத்தின் காப்புரிமைREUTERS

அந்நாட்டு நாடாளுமன்றத் அவைத்தலைவரால் வாசிக்கப்பட்ட முகாபேயின் பதவி விலகல் கடிதத்தில், அதிகார மாற்றம் சுலபமாக நடைபெற வேண்டும் எனும் நோக்கில், தாமாக முன்வந்து பதவி விலகி முடிவு செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பதவியில் இருந்து விலகும் வரை 93 வயதாகும் முகாபேதான் உலக நாடுகளின் தலைவர்களிலேயே மிகவும் அதிக வயதானவராக இருந்தார்.

அவரது பதவி விலகல் அறிவிப்பால் நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. அந்த செய்தியைக் கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் அவையிலே எழுந்து நடனமாடத் தொடங்கினர்.

நாடாளுமன்ற உறுப்பினர்படத்தின் காப்புரிமைAFP Image captionமேசை மீது நின்று ஆடும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்

அவர் பதவி விலகல் கடிதத்தை கொடுக்கும் முன்பே அதை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்கள், முன்னதாகவே கொண்டாட்டங்களுக்குத் தயாராகினர்.

ஜிம்பாப்வே தெருக்களில் மக்கள் கொண்டாட்டம்படத்தின் காப்புரிமைEPA

தகவல் வெளியானதும் தெருக்களில் கூடியிருந்த மக்களும் வாகன ஓட்டிகளும் தேசியக் கொடியை ஏந்திக்கொண்டு ஆடிப் பாடியும், வாகனங்களின் மீதும் ஏரி நடனமாடியும் கொண்டாட்த் தொடங்கினர்.

ஜிம்பாப்வே தெருக்களில் மக்கள் கொண்டாட்டம்படத்தின் காப்புரிமைREUTERS

முகாபே பதவி விலக வற்புறுத்திய ராணுவத்தைச் சேர்ந்த வீர்ர்களும் மக்களுடன் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.

ராணுவத்தைச் சேர்ந்த வீர்ர்களும் மக்களுடன் கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.படத்தின் காப்புரிமைREUTERS Image captionராணுவ டாங்கி மீது கொண்டாட்ட்த்தில் ஈடுபட்டுள்ள ராணுவ வீர்ர்கள் ஜிம்பாப்வே தெருக்களில் மக்கள் கொண்டாட்டம்படத்தின் காப்புரிமைAFP

2015-இல் ஒரு பொது நிகழ்வில் மேடையில் இருந்து முகாபே கீழே விழும் படம், அவர் ஜிம்பாப்வே எல்லையில் இருந்து தப்பி குதிப்பது போல மாற்றப்பட்டு பரவலாக சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டது.

முகாபே கீழே விழும் படம்படத்தின் காப்புரிமை_

நீங்கள் முன்னதாகவே தொடங்கி தாமதமாக முடித்துள்ளீர்கள் என்று கூறி அவரது இளம் வயதில் எடுகப்பட்ட படம் ஒன்றும் பகிரப்பட்டுள்ளது.

 

There'll never be anyone like Cde RG Mugabe. I'm grateful for the opportunity to have served my country under & with him. I'm proud that I stood with & by this iconic leader during the trying moments of the last days of his Presidency. Democracy requires politics to lead the gun!

 
 
 
View image on Twitter
 

Hollywood is not sleeping! The #Mugabe story ????

 
 

முகாபேவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் எடுக்கப்படும் என்று ஹாலிவுட் நடிகர் டான் சீடல் படத்தை வைத்து பகடிக்காக உருவாக்கப்பட்டுள்ள போஸ்டரை அந்த நடிகர் பகிர்ந்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global-42076319

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.