Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில்.ஆவா குழுவை பிடிப்பதற்கு, ஐஸ் கிறீம் குடிக்கும் காவற்துறை..

Featured Replies

யாழில்.ஆவா குழுவை பிடிப்பதற்கு, ஐஸ் கிறீம் குடிக்கும் காவற்துறை..

 

unnamed-1-800x531.jpg

யாழில். வீதி சோதனைகளில் ஈடுபட்டு உள்ள சில காவற்துறையினர் பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடுவதனால் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். யாழில்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்பட்டநிலையில், குறித்த வாள் வெட்டு சம்பவங்களை ஆவா குழு எனும் குழுவே மேற்கொண்டு வருவதாக காவற்துறையினர்  தெரிவித்து தேடுதல்களை மேற்கொண்டு உள்ளனர்.

அதனை தொடர்ந்து யாழில். தற்போது வாள் வெட்டு சம்பவங்கள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு உள்ளன. அதேவேளை ஆவா குழுவை சார்ந்த பலரை பொலிசார் கைது செய்துள்ளனர். அந்நிலையில் தற்போது ஆவா குழுவை கட்டுப்படுத்த என வீதி சோதனை நடவடிக்கைகளில் காவற்துறையினர் பெருமளவில் ஈடுபட்டு உள்ளனர். யாழில், உள்ள பிரதான வீதிகள் மற்றும் சந்திகளில் பெருமளவான காவற்துறையினர்  குவிக்கபட்டு சோதனை நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வயது வேறுபாடின்றி வீதியில் செல்வோரை மறித்து சோதனைகளை மேற்கொள்வதுடன், அவர்களின் அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்டவையையும் பரிசோதிக்கின்றனர். இதனால் வீதியால் செல்வோர் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். அவசர வேலைகள் காரணமாக செல்வோர் பலத்த சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள்.

வடக்கு கிழக்கில் மாவீரர் வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் இந்த வார கால பகுதியில் வீதிகளில் பெருமளவில் காவற்துறையினர் குவிக்கபட்டு வீதி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவது அசாதாரண கால பகுதியில் யாழில்.இருந்த ஒரு பதட்ட நிலையை தற்போது ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்.கல்வியங்காட்டு சந்தைக்கு அருகில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த காவற்துறையினர் ஐஸ்கிறீம் குடித்த வாறே சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளில் வந்தவர்களை மறித்து தாம் ஐஸ் கிறீம் அருந்தி முடிக்கும் வரையில் அவர்களை வீதி ஓரத்தில் மறித்து காத்திருக்க வைத்த பின்னர், தாம் ஐஸ்கிறீம் அருந்தி முடித்த பின்னரே வாகன சாரதி அனுமதிப்பத்திரம், வரி மற்றும் காப்புறுதி பத்திரங்களை பரிசோதித்தனர். அத்துடன் துவிசக்கர வண்டியில் வந்தவர்களின் அடையாள அட்டைகளை பரிசோதித்தனர்.

காவற்துறையினர்  தாம் ஐஸ் கிறீம் குடிக்கும் வரையில் பொறுப்பற்ற விதத்தில் வீதியில் சென்றவர்களை காத்திருக்க வைத்தது , காத்திருந்தவர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தி இருந்தது .

unnamed-800x536.jpg

http://globaltamilnews.net/archives/51252

  • கருத்துக்கள உறவுகள்

இம்சை அரசன் 23 புலிகேசி படைகள் .

  • கருத்துக்கள உறவுகள்

unnamed-1-800x531.jpg

கண்ணால் கண்டதும் பொய். பாத்ததும் பொய். உற்று உணர்ந்து பார்ப்பதே மெய். :unsure:

உற்று உணர்வோடு பாருங்கள் உண்மை புரியும். அது  ஐஸ் கிறீம் அல்ல, ஐஸ் கிறீம் வடிவில் இருக்கும் ஒலி வாங்கிகள். சந்தேக நபர் ஒருவரை விசாரித்து, உடன் தகவல்கள் பரிமாறப்படுகின்றது. :) 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.