Jump to content

ஃபைவ் ஸ்டார் துரோகம்...


Recommended Posts

Posted

நீலு ......பேசிட்டிருக்கிறது நீதானே......?.. ராஜேஷ்குமாரின் பைவ் ஸ்டார் துரோகம் (22)

வேல்முருகன் செல்போனை தன் காதோடு ஓட்ட வைத்தபடி ஜாக்கிரதைக் காத்தார். தன்னுடைய குரலை மறுமுனையில் பேசுபவன் சந்தேகப்பட்டுவிடக்கூடாது என்று பேசாமல் மெளனிக்க அவன் சிரித்தான்.

“ என்ன நீலு..... சரக்கை ஃபுல்லா ஏத்துகிட்டே போலிருக்கு...... பேசவே மாட்டேன்கிற......? “

 

இனியும் பேசாமல் இருப்பது சரியில்லை. குடிபோதையில் இருப்பவனைப்போல் குழறி குழறி பேச ஆரம்பித்தார் வேல்முருகன்.

“ம்.... சொ...ல்....லு......!..... ம....ம......மணிமார்பனோட பா....பா.....பாடியை எங்க வெச்சு டிஸ்போஸ் பண்ணினே ......? “

வில்லிவாக்கத்துக்கு பக்கத்துல ஓரு குப்பைமேடு இருக்கே......? “

“ஆ...ஆமா....... “

“அங்கே புளியமரத்தையொட்டி ஓரு பள்ளம். அந்தப் பள்ளத்துல வெச்சுத்தான் வேலையை முடிச்சோம்....... “

“யாரும் பார்த்துடலையே ......? “

“ஓருத்தரோட பார்வையில பட்டுட்டோம் நீலு“

“யாரது......? “

“உச்சிவானத்துல நிலா......! “ என்றவன் சிரித்தான். சும்மா தமாஷூக்கு சொன்னேன். .....சரி....பேசின பணம் என்னோட கைக்கு எப்ப வரும் ......? “

“இப்பவே என்னோட வீட்டுக்கு வா. முழுபணத்தையும் செட்டில் பண்ணிடறேன்......! “

வேல்முருகன் குரல் கொடுத்தார்.

 

“என்ன பேச்சையே காணோம் ......? “

மறுமுனையில் அந்த குரல் தயக்கமாய் வெளிப்பட்டது.

“நீலு ......பேசிட்டிருக்கிறது நீதானே......? “

“அதுல என்ன சந்தேகம்....... ஓரு ஃபுல் உள்ளே போயிருக்கிறதால பேசறதுக்கு வாய் ஓத்துழைக்க மாட்டேங்குது....... “

“இல்லை நீலு....... எனக்கு வித்தியாசம் தெரியுது. மணிமார்பனை தீர்த்து கட்டி டிஸ்போஸ் பண்ற வேலைக்கு நாம ஓரு கோடுவேர்ட் வெச்சுகிட்டோம். அந்த கோடுவேர்ட் என்னான்னு சொல்லு. பார்க்கலாம்....... “

 

வேல்முருகன் அமைதியாய் இருந்தார்.

“என்ன நீலு பேச்சையே காணோம் ......? “

“அது வந்து.... வந்து.... “

“சொல்லு......... இன்னிக்கு நீ குடிச்சிருந்தாலும் எனக்கொன்னமோ நீ பேசற மாதிரியே இல்லை..... அதுதான் கோடுவேர்ட் கேட்டேன். ..... நாம தொடர்ந்து பேசணுன்னா நீ அந்த கோடுவேர்டைச் சொல்லணும்.... “

வேல்முருகன் சில விநாடிகள் தயங்கிவிட்டு சற்று திணறலான குரலில் சொன்னார்.

“ஞாபகத்துக்கு வரலை......! “

“என்னது....... ஞாபகத்துக்கு வரலையா......? “

“ஆமா.............“

“எப்படி வரும்.. அப்படியொரு கோடுவேர்டே இல்லையே ....? “ என்று சொல்லி மறுமுனையில் சிரித்தவன் அடுத்த விநாடியே அடிக்குரலில் கேட்டான்.

 

“யார்ரா ....... நீ..... நீலகண்டனோட செல்போன் உன்னோட கைக்கு எப்படி வந்தது..... “

“நீலகண்டனோட வீட்டுக்கு வா....... நான் யார்ன்னு உனக்குத் தெரியும்......! “

வேல்முருகன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே மறு முனையில் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

வேல்முருகன் செல்போனை அணைத்துவிட்டு கலவரத்தோடு நின்றிருந்த லலிதாவைப் பார்த்தார்.

“போன்ல பேசினவன் நீலகண்டனை “நீலு நீலு“ ன்னு உரிமையோடு சொல்லி பேசறான். அவன் யார்ன்னு உனக்கு தெரியுமா ......? “

“எனக்குத் தெரியாது ஸார்“

“ஆறுமாசமாய் அவன் கூட பழகிட்டு இருக்கிறே....... ஆனா எந்தக் கேள்வியைக் கேட்டாலும் “தெரியாது“ன்னு ஓற்றை வார்த்தையில் பதில் சொல்லி தப்பிச்சுக்கிறே........ “

“சத்தியமாய் எனக்குத் எதுவும் தெரியாது ஸார். நான் ஓரு தொழில்காரி...... அவ்வளவுதான்..... “

“சரி .... சரி.... அப்படி ஓரமாய் போய் உட்கார். உன்னோட செல்போன் எங்கே......குடு.. “

 

அவளுடைய இடுப்பின் மறைவில் ஓளித்து வைத்திருந்த ஸ்மார்ட்போனை எடுத்து கொடுத்தாள். அதை வாங்கி பத்திரப்படுத்திக்கொண்ட வேல்முருகன் தன்னுடைய செல்போனை எடுத்து வில்லிவாக்கம் போலீஸ் ஸ்டேஷனின் கண்ட்ரோல் ரூமைத் தொடர்பு கொண்டு தான் யார் என்பதை சொல்லிவிட்டு பேசினார்.

 

“நான் சொல்ற ஸ்பாட்டுக்கு உடனடியாக போங்க. வில்லிவாக்கம் குப்பைமேடு ஓட்டி புளியமரம். அதற்குப் பக்கத்துல ஓரு பள்ளம். அந்தப் பள்ளத்துக்குள்ளே எக்ஸ் சீப்மினிஸ்டர் முகில்வண்ணனோட மாப்பிள்ளை மணிமார்பனோட உடல் புதைக்கப்பட்டு இருக்கிறதாய் தகவல் கிடைச்சிருக்கு. லேட் பண்ண வேண்டாம். சீன் ஆஃப் க்ரைம் பார்க்க ஃபாரன்ஸீக் பீப்பிள் போவது அவசியம். நான் இங்கே ஓரு என்கொயரியை முடிச்சுட்டு நேரா ஸ்பாட்டுக்கு வந்துடறேன். இப்ப வில்லிவாக்கம் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் யாரு......? “

 

“ஜெயச்சந்திரன் ஸார்“

“சரி.... ஸ்பாட்டுக்கு போய் பாடியைத் தோண்டி எடுத்ததும் எனக்கு இன்ஃபார்ம் பண்ணச் சொல்லுங்க....... “

வேல்முருகன் செல்போனில் பேச்சை முடித்துக்கொண்டு தனக்கு இடதுபுறம் நின்று கொண்டிருந்த கஜபதியையும், அமிர்தலிங்கத்தையும் பார்த்தார்.

“நீலகண்டனோட செல்போனில் பேசினவன் தொடர்ந்து பேசியிருந்தா உண்மைகள் வெளியே வந்து இருக்கும்...... அதுக்குள்ளே அவன் என்மேல சந்தேகப்பட்டுட்டான்“

கஜபதி பெருமூச்சொன்றை வெளியேற்றிவிட்டு சொன்னார். “ஸார் மணிமார்பன் கொலை செய்யப்பட்டதும், அவனுடைய உடல் புதைக்கப்பட்ட இடமும் தெரிஞ்சிருச்சு. ஆனா ஓரு தண்ணி வேன் ட்ரைவர் எதுக்காக “மணிமார்பனை கொலை செய்யணும்......? மணிமார்பனுக்கும், நீலகண்டனுக்கும் நடுவில் எது மாதிரியான பகை இருந்து இருக்க முடியும்ன்னு என்னால கெஸ் பண்ண முடியலை ஸார்..... நீலகண்டன் யாரு ...... அவன் பின்னணி என்னான்னு கிளறிப்பார்க்க வேண்டியது ரொம்பவும் அவசியம் ஸார்...............!“

“எஸ் ....... மொதல்ல இந்த வீட்டை சர்ச் பண்ணி ஏதாவது தடயம் தட்டுப்படுதான்னு பார்ப்போம்“வேல்முருகன் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே லலிதாவின் குரல் பின்னாலிருந்து கேட்டது.

“ஸார் “

திரும்பினார்.

“என்ன......? “

“இப்பத்தான் ஓரு விஷயம் ஞாபகத்துக்கு வருது ஸார் “

"சொல்லு“

“போன மாசத்துல ஓருநாள் சாயந்தரம் நாலு மணி இருக்கும் ஸார். கோடம்பாக்கத்துல ஓரு பார்ட்டியைப் பார்த்துட்டு வீட்டுக்கு ஆட்டோவில் போய்க்கிட்டிருந்தேன். யுனைடெட் இந்தியா காலனிப்பக்கம் வந்துட்டிருந்த போது அங்கே இருக்கிற ஸ்கூல் வாசல்ல நீலகண்டன் நின்னு யார்க்கோ வெயிட் பண்ணிட்டு இருக்கிற மாதிரி தெரிஞ்சுது. நான் ஆட்டோவை ஓரமாய் நிறுத்தி வெயிட்டிங்ல போட்டுட்டு நீலகண்டன்கிட்டே போனேன். என்னைப் பார்த்ததும் நீலகண்டனோட முகத்துல பெரிய அதிர்ச்சி. இருந்தாலும் அதைக் காட்டிக்காமே சிரிச்சான். என்ன ல்லலி இந்தப்பக்கம்ன்னு கேட்டான். நான் பதிலுக்கு நீ இங்கே ஸ்கூல் வாசல்ல யார்க்காக நின்னு வெயிட் பண்ணிட்டிருக்கேன்னு கேட்டேன். அதுக்கு அவன் நான் வேலை செய்யற கம்பெனி முதலாளியோட பொண்ணு இந்த ஸ்கூல்ல படிக்குது. இன்னிக்கு அவரோட கார் ரிப்பேர். அதனால நான் வேன்ல கூட்டிட்டு போக வந்தேன்னு சொன்னான்“

கேட்டுக்கொண்டிருந்த அமிர்தலிங்கம் அதிர்ச்சியோடு குறுக்கிட்டார் “எனக்கு ரெண்டும் பசங்கதானே.....! பொண்ணு கிடையாதே......? அதுவும் இல்லாமே பசங்க ரெண்டு பேரும் வெளியூர்ல காலேஜ் கோர்ஸ் படிச்சுட்டு இருக்காங்க.... எதுக்காக அப்படி பொய் சொன்னான்னு தெரியலையே......?

லலிதா தொடர்ந்தாள்.

“எனக்கும் அந்த சந்தேகம் வந்தது ஸார். ஆனாலும் அந்த சந்தேகத்தை முகத்துல காட்டிக்காமே சரின்னு சொல்லி தலையாட்டிட்டு ஆட்டோவுக்குள்ள போய் உட்கார்ந்துகிட்டேன். ஆட்டோவில் புறப்பட்டு போற மாதிரி போக்கு காட்டிட்டு ரோட்டோட மறுபக்கத்துக்கு ஆட்டோவை கொண்டு போய் நிறுத்திகிட்டு நீலகண்டனை வாட்ச் பண்ணினேன். ஓரு பத்து நிமிஷத்துக்கு அப்புறம் ஸ்கூல் உள்ளேயிருந்து ஓரு பொண்ணு வெளியே வந்தது. அது படிக்கிற பொண்ணு மாதிரி தெரியலை. வயசு முப்பது இருக்கும். சிவப்பாய் அழகாய் இருந்தா. சுருட்டை முடி. நேராக நீலகண்டனுக்கு பக்கத்துல போய் நின்னா. ஓரு அஞ்சு நிமிஷம் பேசியிருப்பாங்க. அதுக்கப்புறம்தான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது “

(தொடரும்)
Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-series-five-star-dhrogam-part-22-323972.html

  • 2 weeks later...
Posted

"எஸ் ஸார்...... அயாம் வெயிட்டிங்..." - ராஜேஷ் குமாரின் பைவ் ஸ்டார் துரோகம் (23)

லலிதா பேச்சை நிறுத்த வேல்முருகன் அவளை அதிர்ச்சியோடு பார்த்தார்.

“எதிர்பாராத சம்பவமா......? “

“ஆமா ஸார்....... சிவப்பாய் அழகாய் இருந்த அந்தப் பொண்ணு நீலகண்டன்கிட்டே பேசிட்டு இருக்கும்போதே அவ தன் காலில் இருந்த ஸ்லிப்பரை கழற்றி அவனை அடிக்க ஆரம்பிச்சா.... அந்த அடியில் நிலை குலைஞ்சு போன நீலகண்டன் பின் வாங்கி ஓடிட்டான். ரோட்ல போயிட்டிருந்த யாருமே அந்தச் சம்பவத்தை கவனிக்கலை. நான் மட்டுந்தான் நோட் பண்ணினேன் “

“இந்த சம்பவத்தைப்பற்றி நீ அடுத்த முறை நீலகண்டனை சந்திக்கும்போது கேட்டியா......? “

 

“கேட்கலை ஸார்“

 

“ஏன் கேட்கலை.......“

“ஸார் நான் ஓரு தொழில்காரி. நீலகண்டனோட தாலி கட்டின பெண்டாட்டி கிடையாது. ஓரு பொண்ணுகிட்டே நீ ஏன் ஸ்லிப்பர்ல அடி வாங்கினேன்னு நீலகண்டன்கிட்டே நான் கேட்டா அந்த ஆளுக்கு கோபம் வரும். நீ என்னை வேவு பார்த்தியான்னு கேட்பான். அதுக்கு அப்புறம் அவன் என்னைக் கூப்பிடமாட்டான். அவன் அடி வாங்கினது எனக்கு தேவையில்லாத விஷயம்ன்னு நினைச்சேன். கேட்கலை....... !

 

“ சில விநாடிகள் மெளனம் சாதித்த வேல்முருகன் லலிதாவை ஏறிட்டார். “இந்த சம்பவம் எப்ப நடந்ததுன்னு சொன்னே......? “

“போன மாசத்துல ஓரு நாள் “

“தேதி ஞாபகம் இருக்கா ......? “

“இல்லை ஸார்“ “சம்பவம் நடந்த நேரம் ......? “

“சாயந்தரம் நாலு மணி “

“அது எந்த ஸ்கூல்......? “

“யுனைடெட் இந்தியா காலனிக்குப் பக்கத்துல அந்த ஸ்கூல் இருக்கு ஸார். ஸ்கூல் பேரு தெரியாது......!“

“அந்தப் பொண்ணை மறுபடியும் பார்த்தா உனக்கு அடையாளம் தெரியுமா ......? “

“தெரியும் ஸார்.... அந்தப் பொண்ணு ரொம்பவும் அழகாய் இருந்ததாலே முகம் நல்லாவே ஞாபகம் இருக்கு. டீச்சராய் வேலை பார்க்கிறான்னு நினைக்கிறேன் ஸார்“

“நாளைக்கு காலையில் ஏழு மணிக்கெல்லாம் நீயும், நானும் அந்த ஸ்கூலுக்கு ஓரு காரில் போறோம். ஸ்கூலுக்கு எதிர்ல காரை நிறுத்திவிட்டு அந்தப் பொண்ணை வாட்ச் பண்றோம்......“

“ஸார் ........ என்னை இந்தப் பிரச்சினையில் மாட்டி விட்டுடாதீங்க ஸார் ......... நீலகண்டன் ஓரு தப்பான ஆளுன்னு தெரிஞ்சிருந்தா அவன் கூட பழகியிருக்கவே மாட்டேன்......! “

“இதோ பார்........ நீலகண்டன் பண்ணியிருக்கறது திருட்டு இல்லை. கொலை..... அதுவும் கொலை செய்யப்பட்டவர் சாதாரண நபர் கிடையாது. முன்னாள் முதலமைச்சரோட மருமகன். இந்தக் கொலையை நீலகண்டன் மட்டும்தான் தனித்து பண்ணியிருக்க முடியாது. அவனுக்குப் பின்னாடி யாரோ சிலர் இருக்காங்க..... அந்த யாரோ யார்ன்னு கண்டு பிடிக்கற வரை நீயும் விசாரணை வளையத்தை விட்டு வெளியே வர முடியாது. உனக்கு வீடு எங்கே ......? “

 

“சூளைமேட்ல ஸார்“

“நீ ரெண்டு நாளைக்கு வீட்டுக்கு போக முடியாது. பெண் போலீஸோட கஸ்டடியில்தான் இருக்கணும்“

வேல்முருகன் அவளைப் பார்த்து கடுமையான குரலில் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவருடைய செல்போன் அழைத்தது.

எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தார்.

டிஸ்ப்ளேயில் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனின் பெயர் தெரிந்தது.

செல்போனை காதுக்கு ஓற்றினார் வேல்முருகன். “சொல்லுங்க ஜெயச்சந்திரன்“

“ஸார் ..... நான் இப்ப ஓரு போலீஸ் டீமோடு வில்லிவாக்கம் வந்து நீங்க சொன்ன குப்பைமேட்டு ஸ்பாட்டுக்கு பக்கத்துல நின்னுட்டிருக்கேன். ஓரு இடத்துல மட்டும் மண் சற்று இளகியிருக்கிறதால அந்த இடத்தை தோண்டும் வேலை நடந்துட்டிருக்கு.... நீங்க ஸ்பாட்டுக்கு வர்றீங்களா ......? “

 

“நான் இன்னும் அரை மணி நேரத்துக்குள்ளே புறப்பட்டு வர்றேன்.... இங்கே ஓரு என்கொயரி போயிட்டிருக்கு. அதை முடிச்சுட்டு வந்துடறேன்..... ! “

“எஸ் ஸார்...... அயாம் வெயிட்டிங்...... “ செல்போனை அணைத்த வேல்முருகன் லலிதாவிடம் திரும்பினார்.

“இதோ பார்.... நீலகண்டனைப்பற்றி தெரிஞ்ச ஓரே நபர் இப்போதைக்கு நீ மட்டும்தான்...... போலீஸூக்கு நீ முழு ஓத்துழைப்பு கொடுத்தால் தான் முதலமைச்சரோட மருமகனை கொலை பண்ணினது யார்ங்கிற உண்மை தெரிய வரும். நீ ஏதாவது ஓரு விஷயத்தை மறைச்சாலும் அதுவே உன்னை இந்த கேஸ்ல மாட்ட வெச்சுடும்..... என்ன நான் சொல்றது புரியுதா ......? “

“பு...பு...புரியுது ஸார்....... !“

“இன்னும் கொஞ்ச நேரத்துல பெண் போலீஸ் வருவாங்க. அவங்க கூட போயிடு“

 

லலிதா மிரட்சியோடு தலையாட்டிக்கொண்டு இருக்கும்போதே வேல்முருகனின் செல்போன் மறுபடியும் வாயைத் திறந்தது. எடுத்துப்பார்த்தார்.

ஜெயச்சந்திரன் கூப்பிட்டுக்கொண்டிருந்தார். போனை காதுக்கு ஓற்றினார்.

“என்ன.... மணிமார்பனோட பாடி தோண்டின இடத்துல கிடைச்சுதா ......? “

“ கிடைச்சுது ஸார்.... ஆனா....... “

“ஆனா... என்ன...... சொல்லுங்க ஜெயச்சந்திரன் “

“மணிமார்பனின் டெட்பாடியோடு இன்னொரு டெட்பாடியும் இருக்கு ஸார். ரெண்டு பாடியையும் சேர்த்து புதைச்சிருக்காங்க “

“என்னது இன்னொரு பாடியா......? “

“ஆமா ஸார்..... அது ஓரு பெண்ணோட பாடி“

 

 

*****

 

விடியற்காலை நான்கு மணி. ஜி.ஹெச்சின் பல பிளாக்குகள் இன்னும் இருட்டில் இருக்க முகில்வண்ணனின் கார் பிரதான நுழைவு வாயிலுக்குள் பிரவேசித்து ஹாஸ்பிடலின் பின்பக்கம் இருந்த மார்ச்சுவரிக்கு எதிரே இருந்த ஓரு மரத்துக்குக் கீழே போய் நின்றது.

காரின் நான்கு கதவுகளும் திறந்து கொள்ள முகில்வண்ணன், செந்தமிழ், போலீஸ் கமிஷனர் ஆதிமுலம், டி.ஐ.ஜி.இப்ராஹிம் இறங்கினார்கள்.

மார்ச்சுவரிக்கு முன்பாக காத்திருந்த வேல்முருகனும், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனும் அவர்களை எதிர்கொண்டு சல்யூட் வைத்து தளர்ந்தார்கள்.

கமிஷனர் ஆதிமுலம் வேல்முருகனை ஏறிட்டார்.

“மீடியாவுக்கு நியூஸ் போகலையே“

“இல்ல ஸார்.... !“

“இனியும் போகக்கூடாது. மணிமார்பனோட டெட்பாடி மட்டும் கிடைச்சிருந்தா பரவாயில்லை. கூடவே ஓரு பெண்ணோட டெட்பாடியும் சேர்ந்து கிடைச்சிருக்கு. இந்த செய்தி மீடியாக்களுக்கு போனால் அது மிகப் பெரிய அதிர்வு அலைகளை உருவாக்கும்“

 

“தெரியும் ஸார்....... அதனால்தான் ஹாஸ்பிடல் டீனுக்கு தகவல் கொடுத்து இந்த செக்சனில் இருந்த எல்லோரையும் வெளியே அனுப்பிட்டோம்.... !“

முகில்வண்ணன் தளர்ந்து போன நடையோடும் கவலையில் இறுகிப்போன முகத்தோடும் மகன் செந்தமிழின் தோளைப்பற்றிக் கொண்டு நடந்தார். மார்ச்சுவரி

அறை ஃபார்மலின் திரவ வாசனையோடு வந்தது. வயிற்றைக் கலக்கியது.

ஹாஸ்பிடல் டீன் சகாயம் பவ்யமாய் எதிர்கொண்டு உள்ளே கூட்டிப்போனார். அறையின் மையத்தில் போடப்பட்டிருந்த அகலமான தகர மேஜையின் மேல் வெள்ளைத்துணிகளால் போர்த்தப்பட்ட மணிமார்பனின் உடம்பும், அந்தப்பெண்ணின் உடம்பும் பார்வையில் இடறியது.

முகில்வண்ணன் தடுமாற்றமாய் நடந்து போய் மணிமார்பனின் தலைமாட்டில் நின்றார். உதடுகள் துடித்து கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது. குரல் தழுதழுத்தார்.

 

“மாப்ள..... உங்களை இப்படியொரு கோலத்தில் பார்க்கவா எம் பொண்ணை உங்களுக்கு கட்டி வெச்சேன்? மூணு நாள் கல்யாணம் நடத்தி ஊர்ல இருக்கிற கல்யாண மண்டபங்களையெல்லாம் வாடகைக்கு எடுத்து ஓரு லட்சம் பேர்க்கு விருந்து சாப்பாடு போட்டேன். தமிழ்நாட்ல இருக்கிற பராமரிக்கப்படாத கோயில்களையெல்லாம் என் பொறுப்புல எடுத்துகிட்டு கும்பாபிஷேகம் நடத்தி வெச்சேன். 108 ஜோடிகளுக்கு கல்யாணம் பண்ணி வெச்சேன். எந்த ஓரு புண்ணியமும் எம்பெண்ணோட தாலியைக் காப்பாத்தல..... உங்களுக்கு எதுவும் நடந்து இருக்காது. நீங்க உயிரோடு திரும்பி வருவீங்க என்கிற நம்பிக்கையோடு எம்பெண்ணு வீட்ல காத்துட்டிருக்கா.... ஆனா நீங்க இப்படி...... “

 

கதறி அழுதவரை மகன் செந்தமிழ் ஆதரவாய் அணைத்துக் கொண்டான். அவனுடைய கண்களில் கண்ணீருக்கு பதிலாய் அனல் பறந்தது. “

அப்பா ! இது அழறதுக்கான நேரம் இல்லை. நம்ம மாப்பிள்ளையை இப்படிக்கொண்டு வந்து படுக்க வெச்சவங்க யார்ன்னு கண்டுபிடிச்சு அதே மாதிரி அவங்களையும் படுக்க வைக்கணும்“

 

போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் அவனுடைய தோளைத் தொட்டார்.

“செந்தமிழ்“

அவன் திரும்பினான். கண்களில் நீரோடு என்ன என்பது போல் பார்த்தான்.

செத்துப்போன அந்தப் பொண்ணு யார்ன்னு தெரியுதா......? “

“தெரியல...... “

“பொண்ணோட வலது கையை பாருங்க“

செந்தமிழ் பார்த்தான்.

பார்வை நிலைத்தது.

(தொடரும்)

 



Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-series-five-star-dhrogam-23-324732.html

  • 2 weeks later...
Posted

போலீஸ் உன்னை மோப்பம் பிடிச்சுட்டாங்க.. ராஜேஷ் குமாரின் பைவ் ஸ்டார் துரோகம் (24)

 

- ராஜேஷ்குமார்

செந்தமிழ் அந்தப் பெண்ணின் வலது கையைப் பார்த்தான்.

அவளுடைய வலது கையின் மணிக்கட்டுப்பகுதியில் M.M.S என்ற ஆங்கில எழுத்துக்கள் பச்சைக் குத்தப்பட்டிருப்பது பளிச்சென்று தெரிந்தது.

போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் செந்தமிழை ஏறிட்டார்.

பொதுவாக உங்க மாப்பிள்ளை மணிமார்பனை கட்சித்தொண்டர்களும் சரி, அவருடைய நண்பர்களும் சரி, எம்.எம்ன்னுதானே கூப்பிடுவாங்க...... !"

"ஆமா ஸார்....... !"

"இந்தப் பெண்ணோட கையில் பச்சைக் குத்தப்பட்டு இருக்கிற முதல் இரண்டு எழுத்துக்களான M.M ஏன் மணிமார்பனின் பெயரைக் குறிக்கிற எழுத்துக்களாய் இருக்ககூடாது... ? அந்த 'S' என்ற எழுத்து அவளுடைய பெயரில் முதல் எழுத்தாகக்கூட இருக்கலாம்" கமிஷனர் சொல்ல செந்தமிழ் தலையாட்டினான். "இவ யார்ன்னு கண்டுபிடிச்சுட்டா போதும். மாப்பிள்ளையோட கொலைக்கு காரணமானவங்களை சுலபமாய் நெருங்கிடலாம்... !" என்னோட கணிப்பும் அதுதான். மொதல்ல நீங்க அப்பாவைப் பார்த்துக்குங்க. நான் இப்ப ரெண்டு நிமிஷத்துல வந்துடறேன்" சொன்ன போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் மார்ச்சுவரி அறைக்கு வெளியே வந்து சற்றுத்தள்ளி மரத்துக்குக் கீழே நின்றிருந்த வேல்முருகன், இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரனிடம் வந்தார். அவரைப் பார்த்ததும் அட்டென்ஷனுக்கு வந்து தளர்ந்தார்கள்.

"வேல்முருகன் "

"ஸார்........ "

"கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனிக்குப் பக்கத்துல இருக்கிற ஸ்கூலில்தான் ஓரு பெண்ணிடம் அந்த நீலகண்டன் ஸ்லிப்பரில் அடி வாங்கினான்னு அந்த தொழில்காரி லலிதா சொன்னா......? "

"ஆமா ஸார்....... !"

"இப்போ மணிமார்பனோடு சேர்ந்து புதைக்கப்பட்டு இருக்கிற பெண் ஓரு வேளை அந்தப் பெண்ணாய் இருக்கலாமோ......? "

 

"எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது ஸார். அதனால்தான் அந்தப் பெண்ணோட பாடி மார்ச்சுவரிக்கு வந்ததும், அவ முகத்தை என்னோட செல்போன்ல போட்டோ எடுத்து, வாட்ஸ்அப் மூலமாய் லலிதாவை கஸ்டடி பண்ணி வெச்சுருக்கிற தேனாம்பேட்டை இன்ஸ்பெக்டர் மாலதிக்கு அனுப்பினேன். லலிதாகிட்டே அந்தப் பெண்ணோட போட்டோவைக் காட்டி, நீலகண்டனை ஸ்கூல் வாசல்ல வெச்சு ஸ்லிப்பரில் அடிச்சது இந்தப் பொண்ணுதானான்னு கேட்கச் சொன்னேன். இன்ஸ்பெக்டர் மாலதியும் நான் அனுப்பிய வாட்ஸ்அப் போட்டோவை லலிதாகிட்டே காட்டி கேட்டிருக்காங்க. அவ போட்டோவைப் பார்த்துட்டு நான் பார்த்த பொண்ணு இவ இல்லைன்னு சொல்லியிருக்கா"

 

சில விநாடிகள் மெளனமாய் இருந்த ஆதிமுலம் பிறகு நிமிர்ந்தார்.

"வேல்முருகன் "

"ஸார் "

"கோடம்பாக்கம் ஏரியாவில் அந்த ஸ்கூல் எங்கே இருக்குன்னு ட்ரேஸ் பண்ணிட்டீங்களா......? "

"பண்ணிட்டேன் ஸார்"

"அந்தப் பொண்ணு யார்ன்னு கண்டுபிடிக்க நீங்க அந்த பலான லேடி லலிதாவைக் கூட்டிகிட்டு நாளைக்கு எத்தனை மணிக்கு ஸ்கூலுக்கு போறீங்க......? "

"ஏழுமணிக்கு ஸார்....... "

"ஸ்கூலுக்கு வெளியே எதிர்ப்பக்கத்துல ஜீப்பை நிறுத்திகிட்டு அந்தப் பொண்ணை அப்ஸர்வ் பண்ணப் போறீங்களா? "

"இல்லை ஸார்"

" தென்..... வாட்ஸ் யுவர் இன்வெஸ்டிகேஷன் அப்ரோச்......? "

" அந்த ஸ்கூல் பிரின்ஸிபாலையே நேரிடையாக பார்த்து விபரத்தைச் சொல்லி விசாரிக்க வேண்டியதுதான் ஸார்"

"ஓ.கே. .......... விசாரணை ரகசியமாய் இருக்கட்டும்....... நீங்க போலீஸ் டிபார்ட்டுமெண்ட்ன்னு அந்த ஸ்கூல் பிரின்ஸிபாலுக்கு தெரிய வேண்டாம். தேவைப்பட்டா சொல்லுங்க"

 

"எஸ் ஸார் "

"அந்த பிரின்ஸிபாலோட பேர் என்ன ? "

"தெய்வநாயகி"

 

*****

 

 

மறுநாள் காலை ஏழரை மணி.

ஐம்பது வயதின் விளிம்பில் இருந்த பள்ளியின் பிரின்ஸிபால் தெய்வநாயகியின் அறையில் அவளுக்கு முன்பாய் உட்கார்ந்திருந்தார்கள் வேல்முருகனும், லலிதாவும். தெய்வநாயகி லலிதாவிடம் கேட்டாள்.

"அந்தப் பொண்ணை இந்த ஸ்கூல் வாசலில்தான் பார்த்தியா? "

"ஆமா மேடம் "

" அப்ப நேரம் எவ்வளவு இருக்கும் ? "

"நாலுமணியிலிருந்து நாலரை மணிக்குள்"

"எப்படியிருந்தான்னு மறுபடியும் ஓரு தடவை சொல்லு"

லலிதா சொன்னாள்.

" சிவப்பாய்...... அழகாய்..... சுருட்டை முடியோடு..... "

"மறுபடியும் அந்தப் பொண்ணைப் பார்த்தா உன்னால அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா......? "

"முடியும் மேடம் ......!"

 

" நீ சொல்ற அடையாளங்களோடு எந்த ஓரு டீச்சரும் இங்கே வேலை பார்க்கல. இருந்தாலும் இது டீச்சர்ஸ் க்ரூப் போட்டோ. போன மாசம் ஆண்டு விழாவின் போது எடுக்கப்பட்ட போட்டோ..... மொத்தம் 37 டீச்சர்ஸ். ஓவ்வொரு போட்டோவையும் நிதானமாய் பாரு... "

 

பிரின்ஸிபால் தெய்வநாயகி தன் மேஜையின் இழுப்பறையைத் திறந்து மவுண்ட் செய்யப்பட்டு இருந்த அந்தப் பெரிய போட்டோவை எடுத்து லலிதாவிடம் நீட்டினாள். லலிதா அதை வாங்கி பார்வையைப் பதித்தாள்.

மொத்தம் மூன்று வரிசைகளில் அந்த மூப்பத்தேழு ஆசிரியைகளும் பல்வேறு வயதுகளில் காமிராவைப் பார்த்து விதவிதமாய் புன்னகை செய்து இருந்தார்கள்.

லலிதா போட்டோவில் இருந்த முகங்களை உன்னிப்பாய்ப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கி தலையாட்டினாள். வேல்முருகனை ஏறிட்டபடி சொன்னாள் "நான் அன்னிக்குப் பார்த்த பெண் இந்தப் போட்டோவில் இல்லை ஸார்"

"எதுக்கும் இன்னொரு தடவை பார்த்துரு......சில பேர் நேர்ல பார்க்க ஓரு மாதிரியாகவும், போட்டோவில் ஓரு மாதிரியும் இருப்பாங்க"

 

"இல்ல ஸார்....... அந்தப் பொண்ணு போட்டோவில் இல்லை.... என்னால மறக்க முடியாத முகம்.... அது...... !"

தெய்வநாயகி குறுக்கிட்டாள்.

"ஸார்....... அந்தப் பொண்ணு யாராக இருக்கக்கூடும் என்பதை என்னாலே ஓரளவுக்கு கெஸ் பண்ண முடியுது!"

"சொல்லுங்க மேடம் ......!"

"இங்கே படிக்கிற ஸ்டூடண்ட்ஸில் யாராவது ஓருத்தரோட அம்மாவாகக்கூட அந்தப் பெண் இருக்கலாமில்லையா......? "

"மே...பி.... இன்னிக்கு சாயந்தரம் நாலுமணியிலிருந்து நாலரை மணி வரைக்கும் அந்த ஓரு கோணத்திலேயும் அந்தப் பெண் பார்வைக்கு தட்டுப்படறாளான்னு பார்த்துட வேண்டியதுதான்.

இந்த விஷயத்துல உங்களுடைய ஓத்துழைப்பு வேணும் மேடம் "

"ஷ்யூர் ....... நீங்களும் இந்தப் பெண்ணும் சரியாய் நாலுமணிக்கு என்னோட ரூமுக்கு வந்து இங்கே சி.சி.டி.வி. காமிரா யூனிட்டுக்கு முன்னாடி உட்கார்ந்துடுங்க...... ஸ்கூல் எண்ட்ரன்ஸ் கேட்ல நுழையறவங்க யாராக இருந்தாலும் காமிராவோட பார்வைக்கு சிக்காமே இருக்க முடியாது...... ஓரு வேளை அந்தப் பெண் இன்னிக்கு வரமுடியாமே போனாலும் நாளைக்கு வரலாம்!"

 

"ஓ.கே. மேடம்........ தேங்க்ஸ் ஃபார் யுவர் கைண்ட் கோப்ரேஷன்..... இன்னிக்கு ஈவினிங் வர்றோம்"

"வெல்கம் "

தெய்வநாயகி எழுந்து நின்று கைகூப்பினாள்.

வேல்முருகனும், லலிதாவும் அந்த அறையைவிட்டு வெளியேறி காம்பெளண்டைத் தாண்டும் வரை ஜன்னல் வழியே பார்த்துக்கொண்டு இருந்த தெய்வநாயகி தன் செல்போனை எடுத்து உயிர்ப்புக்குக் கொண்டு வந்து ஓரு எண்ணைத் தேய்த்துவிட்டு பேசினாள்.

"மிருணாளினி.... !

இப்ப நீ எங்கே இருக்கே? "

"வீட்லதான் மேடம்! ஏன் என்ன விஷயம் மேடம் ? உங்க பேச்சுல ஓரு டென்ஷன் தெரியுது"

"டென்ஷன் படாமே என்ன பண்றது.... ? போலீஸ் உன்னை மோப்பம் பிடிச்சுட்டாங்க...... "

(தொடரும்)



Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-series-five-star-dhrogam-24-325723.html

  • 3 weeks later...
Posted

என்ன மேடம் சொல்றீங்க.. ராஜேஷ்குமாரின் பைவ் ஸ்டார் துரோகம் (25)

-ராஜேஷ்குமார்

“போலீஸ் உன்னை மோப்பம் பிடிச்சுட்டாங்க......“ என்று பள்ளியின் பிரின்ஸிபால் தெய்வநாயகி சொன்னதும் செல்போனின் மறுமுனையில் இருந்த மிருணாளினி பதட்டம் அடைந்தவளாய் கேட்டாள்.

“என்ன மேடம் சொல்றீங்க... ? “

“உண்மையைச் சொல்லிகிட்டு இருக்கேன். அன்னிக்கு அந்த நீலகண்டனை நீ பள்ளிக்கூட வாசல்ல வெச்சு ஸ்லிப்பரில் அடிச்சதை யாரும் பார்த்திருக்க வாய்ப்பு இல்லைன்னு நீ என்கிட்டே சொன்னே..... ஆனால் அந்த நீலகண்டனுக்கு வேண்டிய ஓரு பொண்ணு பார்த்து இருக்கா. அவ பேரு லலிதா. ஓரு பலான தொழில்காரி... அவ உன்னை நல்லாவே அடையாளம் பார்த்து அந்த இன்ஸ்பெக்டர் வேல்முருகன்கிட்டே சொல்லியிருக்கா.... அவர் என்கொயரிக்கு வந்துட்டார்...... பட் நான் சமாளிச்சுட்டேன்.... “

 

“இப்ப என்ன பண்றது மேடம்... ? “

 

“நீ கொஞ்ச நாளைக்கு ஸ்கூல் பக்கம் வராதே ! வெளியே எங்கேயாவது போறதாய் இருந்தால் ஹேர்ஸ்டைலையும், ட்ரஸ்கோடையும் மாத்திக்க...... முக்கியமான விஷயமாய் இருந்தால் மட்டும் எனக்கு போன் பண்ணு..... எல்லாத்தையும் காட்டிலும் முக்கியமான விஷயம் என்ன தெரியுமா... ? “

“ சொல்லுங்க மேடம்“

“உன் செல்போனோடு காண்டாக்ட்ஸில் இருக்கிற எல்லா போன் நெம்பர்களையும் டெலிட் பண்ணிடு. காலரி, வாட்ஸ்அப் மெளஸஞ்சர் இன்பாக்ஸ் எல்லாமே சுத்தமாய் இருக்கட்டும்“

“சரி ... மேடம்...... எல்லாத்தையும் டெலிட் பண்ணிடறேன்“

“நீ எனக்கு போன் பண்ண வேண்டாம். ஏதாவது முக்கியமான விஷயமாய் இருந்தா உன்னோட பேஸிக் செல்லுக்கு போன் பண்றேன்“

“மேடம்...... “

“என்ன ... ? “

“எனக்கு பயமாயிருக்கு ... ? “

“எதுக்கு பயம் ... ? “

 

“டி.வி.யில் மணிமார்பனைப் பத்தின மர்டர் ந்யூஸ் எல்லா சேனல்களிலும் ப்ரேக்கிங் ந்யூஸ்களோடு பரபரப்பா போயிட்டிருக்கு. அவர் கொலை செய்யப்பட்டதற்கான பின்னணி என்னவாய் இருக்குன்னு பலபேர் பலவிதமாய் சொல்லிட்டு இருக்காங்க....... !“

“இதோ பார் மிருணாளினி..... எந்த ஓரு பரபரப்பான செய்தியாக இருந்தாலும் சரி, எல்லாமே ஓரு மூணு நாளைக்குத்தான்.......! நாளைக்கே ஓரு புது சினிமாப்படம் வரட்டும்...... இந்த மணிமார்பனின் கொலை விவகாரம் மீடியாக்களின் பார்வையிலிருந்து விலகிப்போயிடும்.......! “

“இருந்தாலும் போலீஸோட சந்தேக வளையத்துக்குள்ளே நானும் வந்துட்டேனே ....... மேடம்........ “

 

“அது நீ பண்ணின தப்பு..... அன்னிக்கு நீலகண்டன் உன்னை பள்ளிக்கூட வாசல்ல வெச்சு பேசும்போது அவனை நீ தவிர்த்து இருக்கணும். அவனைப் பார்க்காமே பள்ளிக்கூடத்து பின் வாசல் வழியாய் போயிருந்தா இப்ப இந்த போலீஸ் விசாரணையை மீட் பண்ணியிருக்க வேண்டியது இல்லை. நான் எவ்வளவோ சொன்னேன். நீ கேட்கலை. மணிமார்பன் மேல உனக்கு இருந்த கோபத்தை நீலகண்டன் மேல காட்டிட்டே...... அதுவும் ஸ்லிப்பரில் அடிச்சு........ 

 

“நான் அவனை அப்படி அடிச்சதுக்குக் காரணம் அவன் என்கிட்டே பேசின பேச்சுதான் மேடம்........ “

“சரி...சரி........இனிமே அதைப்பத்திப் பேசி எந்த ஓரு பிரயோஜனமும் இல்லை.....போலீஸ் வளையத்துக்குள்ளே இருக்கிற நீ இப்போ...... வெளியே வர்றதுதான் முக்கியம்..... அதுக்கு ஏற்ற மாதிரியான விஷயங்களைத்தான் இனிமேல் நாம் யோசிக்கணும்..... நீ செல்போனை 'கட்' பண்ணிட்டு நார்மலாய் இரு..... முடிஞ்சா ஓரு காரியம் பண்ணு“

“என்ன மேடம்......? “

“உன்னோட கிராமத்துக்குப் போயிடு.... “

“வேண்டாம் மேடம்...... போன வாரம்தான் ஓரு கல்யாணத்தை அட்டெண்ட் பண்ண ஊருக்கு போனேன். நான் இங்கேயே இருக்கேன்..... “

“சரி..... உனக்கு நான் எதையும் சொல்ல வேண்டியது இல்லை. போலீஸ் நம்மைவிட்டு ரொம்ப தூரத்தில் இருக்கிற மாதிரிதான் தெரியும். ஆனா அவங்களுக்கு ஓரு துரும்பளவு சின்ன க்ளூ கிடைச்சாலும் போதும். நம்ம தோள் மேல கையை வெச்சுருவாங்க...... ஏன்னா நம்ம போலீஸ் டிப்பாட்மெண்ட்டைப்பத்தி எனக்கு தெரியும். அவங்களாலே ஓரு குற்றவாளியை கண்டுபிடிக்கவும் முடியும். குற்றம் பண்ணின ஓருத்தரை குற்றவாளி இல்லைன்னு சொல்லி அவரைக் காப்பாத்தவும் முடியும்“

“ஐ.....நோ......மேடம்....... மணிமார்பன் எக்ஸ் சீப்மினிஸ்டர் முகில்வண்ணனோட மாப்பிள்ளை. அவர் கொலை செய்யப்படறது சாதாரண விஷயம் இல்லையே.... நம்ம தமிழ்நாட்டு போலீஸ் இந்நேரம் ஓரு ராணுவமாய் மாறியிருக்கும் “

“அது உனக்குப் புரிஞ்சா சரி....... இன்னிக்கு சாயந்தரம் நாலு மணி சுமாருக்கு அந்த இன்ஸ்பெக்டர் வேல்முருகனும், நீலகண்டனுக்கு பழக்கமான அந்த லலிதாவும் மறுபடியும் ஸ்கூலுக்கு வந்து என்னோட அறையில் இருக்கிற சி.சி.டி.வி. காமிரா யூனிட்டுக்கு முன்னாடி உட்கார்ந்து குழந்தைகளைக் கூட்டிட்டுப்போக வருகிற குழந்தைகளோட அம்மாக்களை மானிட்டரிங் பண்ணப்போறங்க..... எனக்கு அது வீண் வேலைதான். வேற வழியில்லை..... போலீஸூக்குத் தேவையான ஓத்துழைப்பை நாம விரும்பியோ, விரும்பாமலோ கொடுக்க வேண்டியிருக்கு..... முகத்துல எந்த ஓரு சலனத்தையும் காட்டாமே நடிக்க வேண்டியிருக்கு.... எல்லாவற்றுக்கும் மேலாய் போலீஸ் நம்மை விட்டு விலகிப்போகிறவரைக்கும் நாம ஜாக்கிரதையாய் இருக்க வேண்டியிருக்கு........ “ சொன்ன தெய்வநாயகி சட்டென்று குரலைத் தாழ்த்தினாள்.

 

“மிருணாளினி..... ! டீச்சர்ஸ் யாரோ வர்ற மாதிரியிருக்கு. நான் இன்னிக்கு நைட் உனக்கு போன் பண்றேன்...... அதுக்கு முன்னாடி நீ எனக்கு போன் பண்ணாதே....... ! “

“ஓ.கே.மேடம் “

இரண்டு பக்க செல்போன்களும் ஊமையாயின.

முதலமைச்சர் வஜ்ரவேலுவின் அறை. இரவு ஓன்பது மணி.

எக்ஸ் சீப்மினிஸ்டர் முகில்வண்ணன், அவருடைய மகன் செந்தமிழ் இருவரும் அவர்க்கு முன்பாய் கவலையும், பயமும் உறைந்து போன முகங்களோடு உட்கார்ந்திருக்க, போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் முதலமைச்சர் அருகே குனிந்து பவ்யமான குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.

“ஸாரோட மாப்பிள்ளையைக் கொலை செய்யும் அளவுக்கு நீலகண்டனுக்கும், அவருக்கும் எதுமாதிரியான பகை இருந்திருக்கும்ன்னு தெரியலை ஸார். இன்வெஸ்டிகேஷன் போயிட்டிருக்கு. எப்படியும் ரெண்டு நாள்ல கண்டுபிடிச்சுடலாம் ஸார்..... “

முகில்வண்ணன் கோபத்தோடு குறுக்கிட்டார்.

“கமிஷனர் ஆரம்பத்தில் இருந்தே தப்பாய் பேசிட்டிருக்கார். என்னோட மாப்பிள்ளை மணிமார்பன் கொலை செய்யப்பட வேற ஏதோ ஓரு பெரிய காரணம் இருக்கு.... வாட்டர்கேன் லாரியை ஓட்டற நீலகண்டனுக்கும், என்னோட மாப்பிள்ளைக்கும் பெரிசா எதுமாதிரியான பகை இருக்க வாய்ப்பு இல்லை... எல்லாவற்றுக்கும் மேலாய் இப்போ நீலகண்டன் உயிரோடு இல்லை. அவன் உயிரோடு இருந்தா என்னிக்காவது உண்மை வெளியே வந்துடும் என்கிற பயத்துல அவனோட கதையையும் முடிச்சுட்டாங்க..... “

 

முதலமைச்சர் வஜ்ரவேலு எல்லாவற்றையும் உன்னிப்பாய் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு மெல்ல பேச ஆரம்பித்தார்.

“முகில்...... ! நீ நம்ம கட்சியை வளர்க்க எவ்வளவோ கஷ்டப்பட்டு இருக்கே..... அந்த கஷ்டத்துல உண்மையான தியாகம் இருந்த காரணத்தால உன்னை ரெண்டு தடவை சி.எம்.மாய் தேர்ந்து எடுத்து அழகு பார்த்தது. அந்தச்சமயத்துல கூட உன்மேல யார்க்கும் பொறாமையோ, கோபமோ இருந்தது இல்லை. ஆனா இன்னிக்கு நிலவரப்படிப் பார்த்தா நீ சி.எம். கிடையாது. கட்சியிலும் ஓரு பெரிய பதவி கிடையாது. இப்படிப்பட்ட நிலைமையில் உன் பேரிலும், உன் குடும்பத்து பேரிலும் யார்க்கு என்ன பகை இருக்க முடியும்... ? கொஞ்சம் நிதானமாய் யோசனை பண்ணு..... “

கண்களில் மின்னும் நீரோடு முதலமைச்சர் வஜ்ரவேலுவை ஏறிட்டார் முகில்வண்ணன்.

“வஜ்ரவேலு இப்ப உன்கிட்டே ஓரு உண்மையைச் சொல்லட்டுமா?“ “என்ன ... ? “

“ இப்ப சட்டசபையில் நம்ம ஆளும்கட்சியும், எதிர் கட்சியும் கிட்டத்தட்ட சம பலத்தோடு இருக்கு.... நம்ம கட்சியில் இருந்து ஓரு இரண்டு பேர் அந்தப்பக்கம் போனாலே போதும் ஆட்சி ஆட்டம் கண்டிரும். இந்த உண்மை எல்லார்க்கும் தெரியும். கட்சித் தலைமை உன்னை முதலமைச்சராய் தேர்ந்து எடுத்தபோது எதிர் கட்சித்தலைவர் அறிவரசன் என்னோட மாப்பிள்ளை மணிமார்பனை ஓரு ரகசியமான இடத்தில் வெச்சு தனியாய் சந்திச்சு, உன்னோட மாமனாரையே மறுபடியும் முதலமைச்சர் சீட்ல உட்கார வெச்சு அழகு பார்க்க நாங்க தயார். உங்க கட்சியிலிருந்து ஓரு இரண்டு பேர் கட்சி மாறணும்ன்னு சொல்லியிருக்கார்“

 

வஜ்ரவேலு நிமிர்ந்து உட்கார்ந்தார். “ அட ..... இது புது செய்தியாய் இருக்கே.... மேற்கொண்டு என்ன நடந்தது முகில்...... ? “

“ என்ன நடந்து இருக்கும்ன்னு நினைக்கிறே வஜ்ரம் ...... ? “

“மணிமார்பன் எதிர் கட்சித்தலைவர் அறிவரசனை கடுமையான வார்த்தைகளால் பேசிட்டாரா ...... ? “

“அப்படி ஏதாவது பேசியிருந்தா கூட பரவாயில்லை“

“அப்புறம்...... ? “

“வாய்ல..... போட்டு மென்னுகிட்டு இருந்த பீடாவை அறிவரசன் மூஞ்சி மேலேயே ரத்தம் தெறிச்ச மாதிரி துப்பிட்டு வந்திருக்கார்.

 

(தொடரும்)

Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-series-five-star-dhrogam-part-25-327202.html

 

  • 3 weeks later...
Posted

எ...எ.....என்னது வீடியோ சாட்சியமா...? பைவ் ஸ்டார் துரோகம் (26)

முதலமைச்சர் வஜ்ரவேலு மிரண்டு போன முகத்தோடு முகில்வண்ணனை ஏறிட்டார்.

“முகில்...... ! நீ என்ன சொல்றே... ? “

“இதுவரைக்கும் யார்க்கும் தெரியாத வெளியே வராத ஓரு செய்தியை இப்ப உன்கிட்டே சொல்லிட்டிருக்கேன்“ “எதிர் கட்சித்தலைவர் அறிவரசன் முகத்துல பீடாவை மென்னு துப்பின விஷயம் சாதாரண விஷயம் இல்லை...... உன்னோட மாப்பிள்ளை மணிமார்பன் அப்படிப்பட்ட ஓரு காரியத்தைப் பண்ணியிருந்தான்னா அப்பவே விஷயம் வெளியே வந்து இருக்குமே...? “

“எப்படி வரும் வஜ்ரவேலு ...? அறிவரசன் பேசின விஷயம் வெளியே சொல்லக்கூடிய ஓண்ணா என்ன ...? திருடனுக்கு தேள் கொட்டினா அவன் கத்துவானா என்ன ...? “

“சரி.... இந்த சம்பவத்தை நேர்ல பார்த்தவங்க யாராவது இருக்காங்களா ... ? “

“வீடியோ சாட்சியமே இருக்கு “

“எ...எ.....என்னது வீடியோ சாட்சியமா ...? “

 

“ஆமா...... என்னோட மாப்பிள்ளை மணிமார்பன் அறிவரசன் கூப்பிட்ட பேச்சு வார்த்தையில் கலந்துக்க போனபோது ஓரு நானோ ஸ்மார்ட் செல்போனையும் எடுத்துட்டு போயிருக்கார். அந்த போனின் வீடியோவை “ஆன்“ பண்ணிட்டுத்தான் பேச்சு வார்த்தையை ஆரம்பிச்சிருக்கார். அது எல்லா டைரகஷன்களையும் பார்த்து சுழல்கிற வீடியோ காமிரா. நடந்த சம்பவத்தையும் பேசின பேச்சுக்களையும் துல்லியமாய் பதிவு பண்ணியிருக்கு... அதை மாப்பிள்ளை மணிமார்பன் என்கிட்டே கொண்டு வந்து காட்டினார். நான் அந்தப் போனை வாங்கி என்னோட கஸ்ட்டியில் வெச்சுகிட்டேன். இந்த விஷயம் என்னோட மகன் செந்தமிழுக்கும் கூட தெரியாது......“ சொன்ன முகில்வண்ணன் தன் கையோடு கொண்டு போயிருந்த ஓரு கைப்பையின் ஜிப்பைப் பிரித்து அந்த நானோ செல்போனை எடுத்தார்.

 

முதலமைச்சர் வஜ்ரவேலு, போலீஸ் கமிஷனர் ஆதிமுலம், முகில்வண்ணனின் மகன் செந்தமிழ் எல்லோருடைய பார்வையும் வியப்பில் உறைந்து போயிருக்க, முகில்வண்ணன் அந்த செல்போனை எடுத்து 'வீடியோ ப்ளே’ ஆப்ஷனுக்கு போய் ஸ்கீரினை டச் செய்தார்.

வீடியோவும், ஆடியோவும் கதம்பமாய் கலந்து இயங்கியது. எல்லோரும் பார்க்கும்படியாய் செல்போனை உயர்த்தி பிடித்தார் முகில்வண்ணன். எதிர் கட்சித்தலைவர் அறிவரசன் அழுத்தம் திருத்தமான குரலில் பேசிக்கொண்டிருந்தார்.

“இதோ பார் மணிமார்பன்....... உன்னோட மாமனார் முகில்வண்ணன் இந்த தமிழ்நாட்டுக்கு ரெண்டு தடவை சி.எம்.மாய் இருந்திருக்கார்.

மூணாவது தடவையும் அவர் முதலமைச்சராய் பதவி ஏத்திகிட்டா அது அவர்க்கு மிகப்பெரிய கெளரவமாய் இருந்து இருக்கும். ஆனா கட்சித்தலைமை ஏதோ ஓரு காரணத்தைச்சொல்லி அவர்க்கு சி.எம். போஸ்ட் தரலை.. இது எவ்வளவு பெரிய அநியாயம் தெரியுமா...? “

மணிமார்பன் குரல் சிரித்தது. “அநியாயம்தான். கோபம் வரத்தான் செய்யுது. அதுக்காக கட்சித்தலைமையோட கட்டளையை மீற முடியுமா...? “

“மீறினா என்ன...? “

“மீறினால் என்னாகும்ன்னு உங்களுக்கு தெரியாதா அறிவரசன்...? கட்சி உடையும். சொற்ப மெஜாரிடியில் உயிரைப்பிடித்துக் கொண்டிருக்கும் இந்த ஆட்சி கவிழும். ஆட்சி கவிழ்ந்த உடனே நீங்க ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னர்கிட்டே போவீங்க. பதவிக்கு ஆசைப்பட்டு எங்க கட்சியைச்சேர்ந்த நாலைஞ்சு பேர் உங்க அணிக்கு மாறுவாங்க... நீங்க சி.எம். ஆயிடுவீங்க... இதுதானே உங்க எண்ணம்..? “


“சேச்சே..... அப்படிப்பட்ட எண்ணமெல்லாம் எனக்கு அறவே கிடையாது மணிமார்பன்.... இப்ப எனக்கு என்ன வயசு.. நாற்பது. நான் சி.எம்.மாய் வர இன்னும் காலம் இருக்கு. என்னோட ஆசை என்னான்னா உன்னோட மாமனார் முகில்வண்ணனை மூணாவது தடவை முதலமைச்சராக்கி அழகு பார்க்கணும். அதுக்கு நீ செய்ய வேண்டிய ஓரே வேலை. உன்னோட கட்சி எம்.எல்.ஏ.க்கள் ரெண்டு பேரு நம்ம கட்சிக்கு வந்தா போதும்........ “

அறிவரசன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே மணிமார்பன் தன்னுடைய உதடுகளைக் குவித்து “தூ“ என்று பீடாச்சாறோடு உமிழ முகம் முழுவதும் ரத்தம் தெளித்தாற் போல் சிவப்பாக மாறியது.

 

அறிவரசன் ஓரு விநாடி நேரம் அதிர்ந்து போனாலும் அடுத்த விநாடியே தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்தபடி ஓரு புன்முறுவலோடு பேசினார்.

“நல்லவேளை மணிமார்பன்..... இந்த இடத்துல நீயும் நானும் மட்டும்தான் இருக்கோம். என்னோட தொண்டர்கள் யாருமில்லை. ஓரு தொண்டன் இந்த இடத்தில் இருந்திருந்தா கூட உன்னால உயிரோடு திரும்பிப்போயிருக்க முடியாது..... “

மணிமார்பன் தன் சுட்டுவிரலை உயர்த்தினான்.

“இதே எச்சரிக்கைதான் உனக்கும்..... நானும் வரும்போது என்கூட யாரையும் கூட்டிட்டு வரலை. அப்படி யாரையாவது கூட்டிட்டு வந்திருந்தா நீ ரெண்டு எம்.எல்.ஏ.க்களை கேட்ட விநாடியே உன்னோட கழுத்தில் அரிவாள் இறங்கியிருக்கும்... “

 

“மணிமார்பன் உன்னோட மாமனாருக்கு நல்லது செய்ய நினைச்சேன்“

“எனக்கு எது நல்லது எது கெட்டதுன்னு தெரியும்..... நீ உன்னோட வேலையை மட்டும் பாரு“மணிமார்பன் சொல்லி கொண்டே எழுந்தான். இப்போது அறிவரசன் குரல் உயர்ந்தது.

“இந்த அவமானத்தை நான் மறக்கவே மாட்டேன். இதுக்கு நீ ஓரு விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்“

“என்ன விலைன்னு சொல்லு..... மறுபடியும் ஓரு நடை வந்து கொடுத்துட்டு போறேன்“

இந்த உரையாடலோடு வீடியோ அணைந்து போயிற்று. அறையில் சில விநாடிகளுக்கு கனத்த நிசப்தம். போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் அந்த மெளனத்தைக் கலைத்தார்.

“ஸார்.... இந்த சம்பவம் நடந்து ஓரு வருஷம் இருக்குமா.......? “

“ம்..... இருக்கும்....... “

“மணிமார்பனை கொலை செய்தது எதிர் கட்சித்தலைவர் அறிவரசனாய் இருக்கலாம்ன்னு சந்தேகப்படறீங்களா.......? “

“இப்ப லேசாய் ஓரு சந்தேகம் வருது...... அறிவரசன் ஓரு வருஷம் வரைக்கும் தன்னோட கோபத்தை வெளியே காட்டிக்காமே இருந்து சமயம் பார்த்து மணிமார்பனின் கொலை சம்பவத்தை அரங்கேற்றியிருக்கலாம். வாட்டர் வேன் டிரைவர் நீலகண்டனுக்கும், அறிவரசனுக்கும் எதுமாதிரியான நட்பு இருந்ததுன்னு தெரிய வந்தா அறிவரசனை மடக்கிடலாம்.........“

அதுவரையிலும் எதுவும் பேசாமல் மெளனமாய் இருந்த செந்தமிழ் வாயைத்திறந்தான்.

“அப்பா...... என்னோட மனசுக்குப்பட்டதை சொல்லட்டுமா.......? “

“என்ன.......? “

“அறிவரசன் நம்ம மாப்பிள்ளையை கொலை பண்ணியிருக்க வாய்ப்பு இல்லை “

“எப்படி சொல்றே .......? “

“அறிவரசனைப்பத்தி எனக்கு நல்லாவே தெரியும். அவன் ஓருத்தனை பழி வாங்கணுன்னா கையில் இருக்கிற கத்திக்கு வேலை கொடுக்க மாட்டான். தன்னோட புத்தியை உபயோகப்படுத்தி மனரீதியாய்தான் தண்டிப்பான். அவனோட லாயர் டீம்ல இருக்கிற ஓரு லாயர் பேரு சத்யப்பிரகாஷ். அந்த லாயரும் இதைத்தான் சொல்லுவார். நம்ம மாப்பிள்ளை மேல அறிவரசனுக்கு அளவு கடந்த ஆத்திரமும், கோபமும் இருந்திருக்கலாம். ஆனா கூலிப்படையை அமர்த்தி கொலை செய்கிற அளவுக்கு போயிருக்க மாட்டான்“

 

முகில்வண்ணன் தன் மகன் செந்தமிழை ஓரு கோப்ப்பார்வை பார்த்தபடி கேட்டார்.

“சரி... நம்ம மாப்பிள்ளையோட கொலைக்கு அறிவரசன் காரணமாயிருக்க முடியாதுன்னா வேற என்ன காரணம் இருக்க முடியும்.......? “

“அது.... அது.... வந்து...... “ “சொல்லு.... எதுவாய் இருந்தாலும் சொல்லு“

“அப்பா.....நம்ம மாப்பிள்ளைங்கிறதுக்காக சில விஷயங்களை நாம மூடி மறைக்க முடியாது. அவர் பெண்கள் விஷயத்துல ரொம்பவும் வீக்“

“அதெல்லாம் கல்யாணத்துக்கு முந்தி... நம்ம வீட்ல பெண்ணைக் கட்டினதுமே திருந்திட்டார்... நம்ம குலதெய்வ கோயிலுக்கு வந்து சூடம் ஏற்றி சத்தியம் பண்ணியிருக்கார்....... “

“அப்படி அவர் ஓழுக்கமாய் இருந்திருந்தா அவரைக் கொலை பண்ணின நபர் ஓரு பெண்ணோட டெட்பாடியோடு சேர்த்து ஏன் புதைக்கணும்.....? அந்த பெண்ணோட கையில் M.M.S ன்னு பச்சை குத்தியிருக்கிற அடையாளம் ஓண்ணே போதும். ரெண்டு பேர்க்கும் எப்படிப்பட்ட உறவு இருந்திருக்கும்ன்னு வெளிப்படையா சொல்ல வேண்டியதே இல்லை....... !“

 

போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் இடைமறித்தார்.

“செந்தமிழ் ......நீங்க நினைக்கிற மாதிரி மணிமார்பனுக்கும், அவரோடு சேர்த்து புதைக்கப்பட்ட பெண்ணுக்கும் எந்த ஓரு சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை...!“

“என்ன ஸார் சொல்றீங்க.......? “

“நான் சொல்லலை..... அந்த பெண்ணோட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லுது “

“ என்னான்னு .......? “

“ மணிமார்பனுக்கும், அந்தப் பெண்ணுக்கும் தொடர்பு இருந்திருந்தா அந்தப் பெண் M.M.S ன்னு பச்சை குத்த வாய்ப்பு இருக்கு இல்லையா .......? “

“ஆமா....... !“

“பி.எம் ரிப்போர்ட்ல டாக்டர்ஸ் தெளிவாய் குறிப்பிட்டிருக்காங்க. அந்தப் பெண் கொலை செய்யப்பட்ட பிறகு, அதாவது இறந்த பிறகு கொலையாளி அவளுடைய கையில் M.M.S ன்னு பச்சை குத்தி மணிமார்பனோடு சேர்த்து புதைத்து இருக்கிறான்“



Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-series-five-star-dhrogam-327950.html

 


 

Posted

அறிவரசனைக் கொஞ்சம் உரசிப் பார்க்கணும்.. பைவ் ஸ்டார் துரோகம் (27)

-ராஜேஷ்குமார்

 

போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் சொன்னதைக் கேட்டு செந்தமிழ் அதிர்ந்து போன முகத்தோடு அவரைப் பார்த்தான்.

“என்ன ஸார் சொல்றீங்க.......? மணிமார்பனோடு சேர்த்து புதைக்கப்பட்ட அந்தப் பெண் கொலை செய்யப்பட்ட பிறகு, அவளுடைய கையில் M.M.S என்ற பச்சை குத்தியிருக்காங்களா ? “

“எஸ்.... அந்த பெண்ணோட உடம்பை போஸ்ட்மார்ட்டம் பண்ணின மூணு டாக்டர்ஸூம் அதை உறுதிபட சொல்லியிருக்காங்க. ஒரு பெண் உயிரோடு இருக்கும்போது பச்சை குத்தி கொள்வதற்கும், அவள் இறந்த பிறகு அவளுடைய உடம்பில் பச்சை குத்துவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்குன்னு சொல்லி ஒரு ரிப்போர்ட் கொடுத்து இருக்காங்க. அந்த ரிப்போர்ட்டை நான் இன்னமும் உங்க ஃபாதர் கிட்டே கூட காட்டலை“

செந்தமிழ் கோபத்தில் கொந்தளித்தான்.


“அப்படீன்னா எங்க மாப்பிள்ளை மணிமார்பனை கொலை செய்த நபர் கொலையை டைவர்ட் பண்றதுக்காக ஒரு பெண்ணையும் மர்டர் பண்ணி M.M.S என்ற எழுத்துக்களை பச்சை குத்தி ஒண்ணா சேர்த்து புதைச்சிருக்காங்க ? “

“அதேதான்....... !“

“கமிஷனர் ஸார்....... இது கண்டிப்பாக எதிர் கட்சித்தலைவர் அறிவரசனோட வேலையாய் இருக்க வாய்ப்பில்லை. ஏன்னா இந்த அளவுக்கு அவனுக்கு புத்திசாலித்தனம் கிடையாது. இது யாரோ ஓரு புது எதிரி“

 

முகில்வண்ணன் குறுக்கிட்டார். “செந்தமிழ் இன்னிக்கு அரசியல் நிலவரம் புரியாமே நீ பேசாதே ! அந்த அறிவரசன் பழைய மாதிரி இல்லை..... தான் நினைச்சது நடக்கலைன்னா எந்த ஒரு எல்லையையும் அவன் தாண்டுவான். நம்ம மாப்பிள்ளை அறிவரசன் மூஞ்சியில் பீடா எச்சிலை துப்பினது சாதாரண விஷயம் இல்லை. எப்படிப்பட்டவனுக்கும் கோபம் வரும். அறிவரசன் உடனடியாக கோபத்தை காட்டாமே ஒரு வருஷம் கழிச்சு யார்க்கும் சந்தேகம் வராத அளவுக்கு சமயம் பார்த்து பழி தீர்த்து இருக்கான். அவன்கிட்டே முறைப்படி ஒரு விசாரணை மேற்கொண்டால் உண்மையைக் கண்டுபிடிச்சுடலாம்“

 

செந்தமிழ் ஏதோ சொல்ல முயல கமிஷனர் கையமர்த்தினார். “அப்பா சொல்றதுதான் சரி, அந்த அறிவரசனைக் கொஞ்சம் உரசிப் பார்க்கணும்.

அந்த வேலையை நானே பார்க்கிறேன்“

முகில்வண்ணன் நிமிர்ந்தார். “கமிஷனர் ஸார்....... நீங்க விசாரணையை எப்படி பண்ணுவீங்களோ........ ஏது பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது. இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே என்னோட மாப்பிள்ளையைக் கொலை பண்ணின ஆள் யார்ன்னு எனக்கு தெரிஞ்சாகணும்...... ஆள் யார்ன்னு தெரிஞ்சதுமே எல்லார்க்கும் தெரியற மாதிரி போய் அரஸ்ட் பண்ணிடாதீங்க..... முதல்ல அவனை எனக்கு முன்னாடி கொண்டு வந்து நிறுத்துங்க..... அவன் உடம்பில் இருக்கிற பாதி உயிரை எடுத்த பிறகு அரஸ்ட் பண்ணுங்க..... “ வயிறு எக்கி இரைந்து கத்தின முகில்வண்ணன் மேற்கொண்டு பேச முடியாமல் பெரிது பெரிதாய் மூச்சு வாங்கிக்கொண்டு நாற்காலிக்கு சாய்ந்தார்.

 

முதலமைச்சர் வஜ்ரவேலு முகில்வண்ணன் தோள் மீது கையை வைத்தார்.

“இப்படியெல்லாம் உணர்ச்சிவசப்படாதே முகில். நாம் மெளனமாய் இருந்துதான் காய்களை நகர்த்தணும். இது நம்ம ஆட்சி, அதிகாரம் நம்ம கையில். சட்டத்தை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் நம்மால் வளைக்க முடியும். எந்த ஓரு தீர்ப்பையும் என்ன விலை கொடுத்தாவது வாங்க முடியும்...... மணிமார்பனை கொலை செய்த நபர் யாராக இருந்தாலும் சரி, ஒருவேளை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிச்சாலும், நம்ம கிட்டேயிருந்து தப்பிக்க முடியாது. அவனை தண்டிக்கப்போறது நீதான்“

“எனக்கு இந்த வார்த்தைகள் போதும் வஜ்ரம்“ கண்களில் நீர்மின்ன முகில்வண்ணன் முதலமைச்சர் வஜ்ரவேலுவின் கைகளைப் பற்றிக் கொண்டார்.

இரவு பத்து மணி

வருமானவரித்துறை தலைமை அதிகாரி அருள் தன்னுடைய காரை ரோட்டோரமாய் இருந்த பார்க்கிங் ஏரியாவில் நிறுத்திவிட்டு பெசண்ட் பீச் பேவ்மெண்டை நோக்கி நடந்தார். ரோட்டின் இரண்டு புறமும் பாணி பூரி ஸடால்கள், ஃபாஸ்ட்புட் உணவகங்கள், எல்.இ.டி விளக்குகளின் வெளிச்சத்தில் இளைஞர்களின் கூட்டத்தோடு களை கட்டியிருந்தது. தள்ளுவண்டிகளில் வேர்க்கடலை வாணலிக்குள் வறுபட்டுக்கொண்டிருக்க கடற்காற்றில் ரம்யமான மணம்.

 

சாலையின் பேவ்மெண்ட்டில் ஏறிய அருள் சுற்றும் முற்றும் பார்த்து தன்னை யாரும் கவனிக்கவில்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு வேகமாய் நடந்து சற்று தூரத்தில் தெரிந்த இருட்டான சமுத்திரத்தை நோக்கிப்போனார். மணலில் நூறு மீட்டர் தூரம் நடந்ததும் தன்னுடைய செல்போனை எடுத்து டார்ச்லைட்டை உயிர்ப்பித்து உயர்த்திப் பிடித்தார்.

 

அடுத்த சில விநாடிகளில் அவர்க்கு இடதுபுறம் ஐம்பது அடி தள்ளி ஒரு செல்போனின் டார்ச்லைட் ஓளிப்புள்ளி மேலே உயர்ந்து அசைந்தது. அருள் அந்த ஓளிப்புள்ளியை நோக்கிப்போனார். நிழல் உருவங்களாய் நித்திலன், சாதுர்யா, கஜபதி மூன்று பேரும் கடலைப் பார்த்தபடி உட்கார்ந்திருக்க “ஸாரி.... அடையார் பக்கம் ட்ராஃபிக் ஒரு பதினைந்து நிமிஷம் நகர முடியலை.... அதான் லேட்“ என்று சொல்லிக் கொண்டே அவர்களுக்கு முன்பாய் உட்கார்ந்தார்.

 

நித்திலன் சிரித்தான்.

“ஸார்....... நீங்க ஸாரி சொல்ல வேண்டியது இல்லை.... நாங்களும் இப்பத்தான் வந்தோம்...... “

“அப்படியா ? “ என்று சொன்ன அருள் சுற்றும் முற்றும் பார்த்தார். சாதுர்யா கேட்டாள்.

“என்ன ஸார் பார்க்கறீங்க... ? “

“இங்கேயே உட்கார்ந்து பேசலாமா..... இல்லை..... இன்னும் கொஞ்சம் உள்ளே போயிடலாமா ... ? “

“வேண்டாம் ஸார் இந்த இடமே கம்பர்டபிளாய் இருக்கு..... “

“ஓ.கே. “ என்றவர் கஜபதியைப் பார்த்தார்.

“என்ன கஜபதி ...... முகில்வண்ணன் வீட்ல நிலவரம் எது மாதிரி போயிட்டிருக்கு .. ? “

“ குழப்பம் இன்னும் அப்படியேதான் ஸார் இருக்கு. மணிமார்பனை கொலை பண்ணின நபர் எதிர் கட்சித்தலைவர் அறிவரசன் அனுப்பிய ஆளாய் இருக்குமோ என்கிற எண்ணத்துல போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் ஒரு இன்வெஸ்டிகேஷன் டீமை ஃபார்ம் பண்ணி விசாரணை நடத்தியும் எந்த ஒரு உண்மையையும் கண்டுபிடிக்க முடியவில்லை. போதாத குறைக்கு இன்னொரு பிரச்சினை வேற இப்போ வெளியே தலை நீட்டிருக்கு“

“என்ன பிரச்சினை ... ? “

“போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் பண்ணி சர்ச் வாரண்ட் இல்லாமல் எதிர் கட்சித்தலைவர் அறிவரசன் வீட்டுக்குள்ளே நுழைஞ்சு எல்லா அறைகளிலும் சோதனை போட்டு இருக்கார். வீட்டுப்பெண்கள் கிட்டே அநாகரீகமான முறையில் விசாரணை என்கிற பேரில் ஏதேதோ கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணியிருக்கார். இதனால கொந்தளிச்சுப் போன அறிவரசன் போலீஸ் கமிஷனர் மேலேயும், முகில்வண்ணன், செந்தமிழ் மேலேயும் அவமதிப்பு வழக்கு போட்டு, மனித உரிமை கமிஷனுக்கும் புகார் கொடுத்துட்டார்“

“சரி..... அந்த பலான தொழில்காரி லலிதாவும் சி.பி.சி.ஐ.டி.இன்ஸ்பெக்டர் வேல்முருகனும் நீலகண்டனை ஸ்லிப்பர்ல அடிச்ச பொண்ணைக் கண்டுபிடிச்சுட்டாங்களா... ? “

“இல்ல ஸார்....... தொடர்ந்து வாரம் பத்து நாள் ஸ்கூல்ல போய் ஹெட்மிஸ்ட்ரஸ் ரூம்ல உட்கார்ந்து மானிட்டரிங் செய்து பார்த்தும் அந்த பொண்ணு யார்ன்னு கண்டுபிடிக்க முடியலை“

“அந்த பொண்ணு யார்ன்னு தெரியவந்தால்தான் மணிமார்பனோட கொலைக்கான காரணம் வெளியே வரும் இல்லையா கஜபதி ... ? “

“ஆமா.. ஸார்“


“அந்த குடும்பத்தோடு உங்களுக்குத்தான் நெருக்கமான பழக்கம்.... நீலகண்டன், மணிமார்பன், அந்த பொண்ணு இவங்களுக்குள்ளே எது மாதிரியான தொடர்பு இருந்திருக்கும்ன்னு நினைக்கிறீங்க ... ? “

“அதான் ஸார் புரியலை...... ஆனா ஓரு உண்மை எனக்குத் தெரியும் ...! முகில்வண்ணனோட பொண்ணை மணிமார்பன் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி ஒரு நடிகையோடு அவனுக்குத் தொடர்பு இருந்தது. அந்த நடிகையோட பேரு ஜெயதாரா. அவளும் இப்போ உயிரோடு இல்லை. ஒரு இந்திக்காரனை கல்யாணம் பண்ணிகிட்டு மும்பை போனவள் அங்கே ஏதோ ஒரு பிரச்சனையால விஷம் குடிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டா. இது நடந்து நாலைஞ்சு வருஷம் இருக்கும்..... மணிமார்பன் இப்ப கொலை செய்யப்பட்டதுக்கும், அந்த ஜெயதாரா தற்கொலை பண்ணிக்கிட்டதுக்கும் எந்த சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை ஸார்....... ! “

 

“அதான் ஸார் புரியலை...... ஆனா ஓரு உண்மை எனக்குத் தெரியும் ...! முகில்வண்ணனோட பொண்ணை மணிமார்பன் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி ஒரு நடிகையோடு அவனுக்குத் தொடர்பு இருந்தது. அந்த நடிகையோட பேரு ஜெயதாரா. அவளும் இப்போ உயிரோடு இல்லை. ஒரு இந்திக்காரனை கல்யாணம் பண்ணிகிட்டு மும்பை போனவள் அங்கே ஏதோ ஒரு பிரச்சனையால விஷம் குடிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டா. இது நடந்து நாலைஞ்சு வருஷம் இருக்கும்..... மணிமார்பன் இப்ப கொலை செய்யப்பட்டதுக்கும், அந்த ஜெயதாரா தற்கொலை பண்ணிக்கிட்டதுக்கும் எந்த சம்பந்தமும் இருக்க வாய்ப்பில்லை ஸார்....... ! “

“வாய்ப்பு இருக்கு....... “

தங்களுக்கு பின்பக்கம் எழுந்த ஒரு கனமான குரல் கேட்டு அருள், நித்திலன், சாதுர்யா, கஜபதி நான்கு பேரும் திரும்பிப் பார்த்தார்கள்.

கடற்கரை இருட்டில் பத்தடி தொலைவில் அந்த இரண்டு உருவங்கள் நின்றிருந்தன.

(தொடரும்)

Read more at: https://tamil.oneindia.com/art-culture/essays/rajesh-kumar-series-five-star-dhrogam-27-328752.html



 

  • 2 weeks later...
Posted

அப்படீன்னா லலிதா சொன்னது..?.. பைவ் ஸ்டார் துரோகம் 

-ராஜேஷ்குமார் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தன் பேச்சைத் தொடர்ந்தார்.

“குழந்தையோடு போய்க்கொண்டிருந்த அந்தப்பெண்ணை நோக்கி வேகமாய் நான் நடக்க பள்ளியின் பிரின்ஸிபால் தெய்வநாயகி குரல் கொடுத்தாங்க“

 

“ஒரு நிமிஷம் மிஸ்டர் வேல்முருகன்“ தெய்வநாயகியின் குரலில் இருந்த பதட்டம் என்னை அப்படியே ஆணியடித்த மாதிரி ஸ்தம்பிக்க வெச்சுது.

திரும்பிப் பார்த்தேன். அவங்க பதட்டத்தோடு எனக்குப் பக்கமாய் வந்து நின்னாங்க. முகம் வேர்த்திருந்தது. நான் என் விஷயம்ன்னு கேட்டேன். அப்படி கேட்டதும் அவங்க தயக்கத்தோடு “குழந்தையோடு போற அந்தப்பெண்ணை விசாரிக்காதீங்க..... நீலகண்டனை ஸ்லிப்பரில் அடிச்ச பொண்ணு அவ கிடையாதுன்னு சொன்னாங்க. உடனே பக்கத்தில் இருந்த லலிதா “இல்ல மேடம்......இப்ப நாம சி.சி.டி.வி. காமிராவில் பார்த்த பொண்ணுதான் அன்னிக்கு நீலகண்டனை அடிச்சவ..... எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு..... அவளை விசாரிக்கிற விதத்துல விசாரிச்சா எல்லா உண்மைகளும் வெளியே வந்துடும்“ ன்னு சொன்னா. லலிதா இப்படி சொன்னதும் ரொம்பவும் டென்ஷனான தெய்வநாயகி நான்தான் அந்தப் பொண்ணு இல்லேன்னு சொல்றேனேன்னு தன்னையும் மீறி கத்திட்டாங்க!“

 

சாதுர்யா, நித்திலன், அருள், கஜபதி நான்கு பேரும் வேல்முருகனையே பார்க்க அவர் சில விநாடிகள் மெளனம் காத்தார். அருள் கேட்டார். “அப்புறம் ...?

“ தெய்வநாயகி அப்படி கத்தினதும் நான் அவங்களைப்பார்த்து “ஏன் இப்படி டென்ஷனாகறீங்க.... அந்தப்பெண்ணை விசாரிச்சா உங்களுக்கு என்ன பிரச்சினைன்னு கேட்டேன்“

சாதுர்யா ஆர்வம் தாங்காமல் கேட்டாள்.

“அதுக்கு தெய்வநாயகி என்ன சொன்னாங்க ...? “

“குழந்தையை கூட்டிட்டு போற அந்தப்பொண்ணு என்னோட அக்கா பொண்ணு. பேரு மீரா. ரொம்பவும் நல்ல பொண்ணு. நீங்க திடீர்ன்னு போய் விசாரிச்சா அவ மிரண்டு போயிடுவா..... நீலகண்டனை அடிச்ச பொண்ணு நிச்சயம் மீராவாய் இருக்க மாட்டான்னு தெய்வநாயகி மறுத்தாங்க. ஆனா லலிதா உறுதியான குரலில் தான் பார்த்தது இந்தப்பெண்ணைத்தான்னு தீர்மானமாய் சொன்னதும் தான் அந்தப் பொண்ணு மீராவை விசாரிச்சு பார்த்துடலாம்ன்னு கிளம்பினேன். அடுத்த விநாடி தெய்வநாயகி சட்டுன்னு என்னோட கையைப் பிடிச்சுட்டாங்க. “வேண்டாம் ஸார்..... அந்தப்பொண்ணை விசாரிக்காதீங்க. நீலகண்டனை அடிச்ச பொண்ணு யாரன்னு எனக்குத்தெரியும். வாங்க என்னோட ரூமுக்கு போய் பேசலாம்ன்னு சொன்னாங்க“

 

“அப்படீன்னா லலிதா சொன்னது ...? “

“பொய்.... தெய்வநாயகியின் வாயிலிருந்து உண்மையை வரவழைக்கிறதுக்காக நானும், லலிதாவும் சின்னதாய் ஒரு ட்ராமா பண்ணினோம். மீரா தெய்வநாயகியின் அக்கா மகள் என்கிற விஷயத்தை நான் கண்டுபிடிச்சு அதையே ஒரு ஆயுதமாய் பயன்படுத்தினேன். தன்னோட அக்கா பெண் மீராவை போலீஸ் விசாரிக்கிறதை எந்த ஒரு சித்தியால தாங்கிக்க முடியும் ..? ஸோ மிருணாளினி வெளியே வந்துட்டா..... தெய்வநாயகி சொன்ன விபரங்களை வெச்சுகிட்டு மிருணாளினி வீட்டுக்கு போய் சர்ச் பண்ணிட்டு இருக்கும்போதுதான் மிருணாளினியோட தோழி அஞ்சனா வந்தாங்க. அவங்க மூலமாய் சில விஷயங்கள் தெரிய வந்தாலும் முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கலை“

அருள் வேல்முருகனின் கையைப்பற்றிக் குலுக்கி விட்டு கேட்டார். “குட் ஜாப் பட் மிருணாளினி பற்றிய உண்மைகளை அந்த ஸ்கூல் பிரின்ஸிபால் தெய்வநாயகி எதுக்காக மறைக்கணும் ...? “

“அதுக்கான காரணத்தையும் சொன்னாங்க. மிருணாளினி அந்த ஸ்கூலில் படிச்ச ஸ்டூடண்ட். அதுவும் ஃபர்ஸ்ட் ரேங்க் ஸ்டூடண்ட். அதனால மிருணாளினி மேல் தெய்வநாயகிக்கு ஒரு ஸாஃப்ட் கார்னர் இருந்திருக்கு. பள்ளிப்படிப்பை முடிச்சு, கல்லூரிக்கு போன பின்பும் அந்தப் பாசப்பிணைப்பு தொடர்ந்திருக்கு. அம்மா, அப்பா இல்லாத மிருணாளினிக்கு ஆறுதல் தரும் ஒரு உறவாய் தெய்வநாயகி இருந்து இருக்காங்க... “

 

நித்திலன் குறுக்கிட்டு கேட்டான்.

“சரி..... மணிமார்பன் கொலையில் சம்பந்தப்பட்ட நீலகண்டனை மிருணாளினி எதுக்காக ஸ்லிப்பரில் அடிச்சா..... தெய்வநாயகிகிட்டே காரணம் கேட்டீங்களா ஸார்...? “

“ம்.... கேட்டேன். மணிமார்பனுக்கும், மும்பையில் இறந்து போன நடிகை ஜெயதாராவுக்கும் தொடர்பு ஏற்படுத்திக்கொடுத்ததே நீலகண்டன் தான். மணிமார்பன் பெரிய பணக்கார குடும்பத்துல பிறந்திருந்தாலும் சொந்தப்பணத்தை செலவழிக்க மாட்டானாம். ஜெயதாராவை கல்யாணம் பண்ணிகிறேன்னு சொல்லி சொல்லியே அவ சினிமாவில் நடிச்சு சம்பாதிச்ச பணத்தை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் சுரண்டியிருக்கான். அப்புறம் மாஜி முதலமைச்சர் முகில்வண்ணனோட வீட்டு மாப்பிள்ளையானதும் ஜெயதாராவை கை கழுவியிருக்கான். அந்த ஏக்கத்திலேயே ஜெயதாரா சினிமாவில் நடிக்கிறதை விட்டுட்டு மும்பைக்கு போய் ஒரு இந்திப்பட டைரக்டருக்கு மனைவியாகி அங்கேயும் ஒரு நிம்மதியான வாழ்க்கை கிடைக்காமல் தற்கொலை பண்ணிகிட்டு செத்துப்போயிட்டா.

 

அவளோட மரணத்தைப்பத்தி கொஞ்சமும் கவலைப்படாத மணிமார்பன் ஒரு தடவை மிருணாளினியின் வீட்டுக்குப் போய் உன்னோட அக்காவை விட நீ நல்லாயிருக்கே. நீலாங்கரையில் வீடு வாங்கித்தர்றேன். குடும்பம் நடத்தலாமான்னு கேட்டிருக்கான். மிருணாளினி சத்தம் போடவே அக்கம்பக்கத்தில் இருக்கிறவங்களுக்கு பயந்து போய் மணிமார்பன் வெளியே வந்துட்டான். இருந்தாலும் அடிக்கடி போன் பண்ணி தன்னோட விருப்பத்தை மிரட்டல் தொனியில் சொல்லியிருக்கான். தன்னோட கையாள் நீலகண்டனை தூது விட்டிருக்கான். நீலகண்டனும் மிருணாளினியை மீட் பண்ணி மணிமார்பனோட ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியிருக்கான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு சமயம் மிருணாளினி தெய்வநாயகியைப் பார்க்க ஸ்கூலுக்கு வந்தபோது நீலகண்டனும் ஃபாலோ பண்ணி வந்து மணிமார்பனோடு குடும்பம் நடத்தறதைப் பத்தி அவகிட்டே பேசியிருக்கணும். மிருணாளினி கோபத்தில் காலில் இருந்த ஸ்லிப்பரைக் கழற்றி அடிச்சிருக்கணும்“

 

அருள் இடைமறித்துக் கேட்டார்.

“இப்ப நீங்க சொன்னதெல்லாம் தெய்வநாயகி ஒரு ஸ்டேட்மெண்டாய் கொடுத்து இருக்காங்களா ...? “

“ஆமா...... “ “சரி...... மிருணாளினியைப்பற்றிய உங்க போலீஸ் பார்வை என்ன..?“

“கொலையும் செய்வாள் பத்தினி“

“ஸோ...... சந்தேகப்படறீங்க..?“ “கண்டிப்பாய்.... !

மிருணாளினி தப்பு பண்ணாதவளாய் இருந்தா ஏன் தலைமறைவாய் இருக்கணும் ..?

“ சாதுர்யா வேல்முருகனை ஏறிட்டாள்.

“ஸார்....... என்னோட கெஸ் ஓர்க் என்னான்னு சொல்லலாமா...? “

“ம்...... சொல்லுங்க“

“மிருணாளினி தலைமறைவாய் இருக்காங்கிற ஒரே காரணத்துக்காக அவளுக்கும், மணிமார்பன் கொலை செய்யப்பட்டதுக்கும் சம்பந்தம் இருக்குன்னு சொல்றது தப்புன்னு என்னோட மனசுக்குப்படுது. ஒரு சாதாரண பெண்ணால ஒரு எக்ஸ் சீப்மினிஸ்டரின் அறுபதாவது பிறந்தநாள் விழா நடக்கிற இடத்துக்குப் போய் ஒரு கொலையைப் பண்ணியிருக்க முடியுமா ...? “

“யூ.மே.பி. கரெக்ட்..... ஒரு பெண்ணால அந்த இடத்துக்குப் போய் அவ்வளவு துணிச்சலாய் கொலையைப் பண்ணியிருக்க முடியாதுதான். ஆனா கொலை பண்ண உதவி செஞ்சு இருக்கலாமில்லையா...? “

“யார்க்கு ...? “

“யார்க்கு.... எப்படின்னு இன்னும் ஒரு வாரத்துக்குள்ளே கண்டுபிடிச்சுடுவோம்“ வேல்முருகன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவருடைய செல்போன் வைபரேஷனில் உறுமியது.

எடுத்து அழைப்பது யார் என்று பார்த்தார்.

போலீஸ் கமிஷனர் ஆதிமுலம் கூப்பிட்டுக்கொண்டு இருந்தார். செல்போனை காதுக்கு ஒற்றி மெல்ல குரல் கொடுத்தார்.

“எஸ்.... ஸார் “

“வேல்முருகன் இப்ப நீங்க எங்கே இருக்கீங்க ...?

“மயிலாப்பூர் லஸ் கார்னர்ல ஸார் “

“அங்கே என்ன பண்ணிட்டிருக்கீங்க...? “

“பானிபூரி சாப்பிட்டுகிட்டு இருக்கேன் ஸார். பை... த.. பை எனிதிங் இம்பார்ட்டண்ட் ஸார் ...? “

“எஸ்..... நீங்க உடனே புறப்பட்டு எக்ஸ் சி.எம். முகில்வண்ணன் வீட்டுக்கு வாங்க....... !“

“ஸ...ஸ..... ஸார்....... எனி அன்வாண்ட்டட் ஹேப்பனிங்...? “

“எஸ்“ “என்ன ஸார் ...? “

“சொல்றேன்... பட் இப்போதைக்கு அதை யார்க்கும் கன்வே பண்ண வேண்டாம்“

“சர்ட்டன்லி நாட் ஸார் “ கமிஷனர் ஆதிமுலம் மறுமுனையில் குரலைத்தாழ்த்தினார்.

“முகில்வண்ணன் மகன் செந்தமிழ் ரெண்டு மணி நேரத்துக்கு முன்னால் சீப் மினிஸ்டரைப்பார்த்து பேச போயிருக்கார்.

ஆனா சி.எம். ஆபீஸூக்கு அவர் போகலை....... !“

“அப்புறம்..... எங்கே போனார்...? “

“அதுதான் தெரியலை.... முகில்வண்ணனும், நானும் செந்தமிழோட செல்போனை காண்டாக்ட் பண்ண முயற்சி பண்ணினோம். நோ ரெஸ்பான்ஸ். செல்போன் இன் டெட் மோட்“

 

“ஸ.....ஸார் “

“முகில்வண்ணன் ஆடிப்போயிட்டார். மைல்டு ஹார்ட் அட்டாக். ஃபேமிலி டாக்டர் சதாசிவம் வந்து பார்த்துட்டிருக்கார்“

“இதோ..... நான் உடனே புறப்பட்டேன் ஸார்

“ “பறந்து வாங்க ....... !“

(தொடரும்)



Read more at: https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-series-five-star-dhrogam-part-29-330282.html

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு இப்பவே இந்தத் தொடர் திரும்பி தொடர வேண்டும் சொல்லிப் போட்டன்?

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.