Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளுராட்சி தேர்தல் ஜெனிவா சம்பந்தப்பட்டது அல்ல –முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள்

Featured Replies

உள்ளுராட்சி தேர்தல் ஜெனிவா சம்பந்தப்பட்டது அல்ல –முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள்

 

 
 

உள்ளுராட்சி தேர்தல் ஜெனிவா சம்பந்தப்பட்டது அல்ல –முன்னாள் முதலமைச்சர் வரதராஜபெருமாள்

உள்ளுராட்சிமன்ற தேர்தலானது அடிப்படையான மக்களின் தேவைகளோடும் பிரச்சனைகளோடும் சம்பந்தப்பட்ட விடயங்களை கையாளுகின்ற மக்களுடைய தேவைகளை திருப்தி செய்கின்ற மக்களுடைய தேவைகளை கவனிக்கின்ற அடிப்படை நிறுவனங்களான உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலாகும்.
இந்த தேர்தலானது ஜெனிவா சம்பந்தப்பட்டதோ காணாமல் போனோர் சம்பந்தப்பட்டதோ அரசியல் கைதிகள் சம்பந்தப்பட்டதோ அல்லது அரசியல் தீர்வு சம்பந்தப்பட்டதோ அல்ல என முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவருமான வரதராஜப்பெருமாள் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பாலமீன்மடுவில் உள்ள அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் செயலாளர் சிறிதரன்,மட்டக்களப்பு மாநகரசபை வேட்பாளா குகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எங்களுடைய கட்சி மெழுகுதிரி சின்னத்தில் போட்டியிடுகின்றது. தோழர் பத்மநாபா அவர்களுடைய தலைமையிலிருந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியுடைய வரலாற்று பாரம்பரியத்தோடும் தற்பொழுது தமிழ் சமூக ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் இன்றைய காலகட்டத்தினுடைய தேவைகளையும் நிலைமைகளையும் பிரதிபலிக்கின்ற வகையில் கட்சியின் பெயரை கொண்டிருக்கின்றது.

இந்த தேர்தலானது அடிப்படையான மக்களின் தேவைகளோடும் பிரச்சனைகளோடும் சம்பந்தப்பட்ட விடயங்களை கையாளுகின்ற மக்களுடைய தேவைகளை திருப்தி செய்கின்ற மக்களுடைய தேவைகளை கவனிக்கின்ற அடிப்படை நிறுவனங்களான உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலாகும்.
இந்த தேர்தலானது ஜெனிவா சம்பந்தப்பட்டதோ காணாமல் போனோர் சம்பந்தப்பட்டதோ அரசியல் கைதிகள் சம்பந்தப்பட்டதோ அல்லது அரசியல் தீர்வு சம்பந்தப்பட்டதோ அல்ல.

உள்ளுராட்சி சபை என்பது நுளம்புகளை ஒழிப்பதற்கான சபையாகும். நல்ல தண்ணீர், நல்லவீதிகள் கொடுப்பதற்கான சபையாகும். எங்களுடைய நகரங்களையும் பிரதேசங்களையும் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருப்பதே உள்ளுராட்சி மன்றங்களின் கடமையாகும்.

கடந்த காலங்களில் உள்ளுராட்சி மன்றங்கள் ஊழல்களும் மோசடிகளும் நிறைந்தவையாக இருந்துள்ளன. உள்ளுராட்சி மன்றங்களுக்கு வந்த பணத்தினை மக்களுடைய தேவைகளை சரியாக நிவர்த்தி செய்ய பயன்படுத்தாமல் அவை மீண்டும் கொழும்பிற்கு திரும்பிச் செல்கின்ற வகையில் தான் உள்ளுராட்சி மன்றங்கள் நிர்வகிக்கப்பட்டு வந்திருக்கின்றன. அந்த நிலைமைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

உள்ளுராட்சி மன்றங்கள் மக்களுக்கு சேவை செய்கின்றவையாக நேர்மையாக செயற்படுகின்றவையாக மக்களுடைய தேவைகளையும் கருத்துக்களையும் அறிந்து அந்த வகையில் சேவை செய்கின்றவையாக ஆற்றலோடு சேவை செய்கின்ற நிறுவனங்களாக அமைய வேண்டும் என்கின்ற நோக்கோடு தான் எங்களுடைய தமிழ் சமூக ஜனநாயகக் கட்சி இந்த தேர்தலில் இறங்கியிருக்கின்றது.

தமிழ் சமூக ஜனநாயகக் கட்சியை தமிழ் மக்களுடைய புதிய தலைமைக்கு கொண்டு வருவதற்கு மக்கள் மெழுகுதிரி சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்த நாட்டில் தமிழ் மக்களின் நிலைமை எவ்வாறு இருக்கின்றது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

வெறுமனே வீர வசனங்கள் பேசுவதும் தேர்தலில் வெல்வதும் பின்னர் தங்களுடைய சுகபோகங்களை பார்க்கின்ற அரசியல் தான் தமிழ் மக்கள் மத்தியில் இன்று வளர்ந்திருக்கின்றது. அந்த நிலையை மாற்றியமைப்பதற்கு உண்மையாக மக்களுக்கு சேவை செய்பவர்கள், உண்மையாக கடந்த காலங்களில் தங்களை அர்ப்பணித்து மக்களுக்காக சேவையாற்றியவர்கள், தங்களுடைய கல்வியை இழந்து மக்களுக்காக போராடியவர்களை மக்கள் தெரிவு செய்யும் போதுதான் உண்மையான மக்கள் சேவகர்களை மக்கள் பெற முடியும்.

இந்த விடயங்களை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். குறிப்பாக இளைஞர் சமூகம் மிகத் தெளிவான சிந்தனையோடு செயற்பட வேண்டும். ஏனெனில் இனிவரும் காலம் அவர்களுக்குரியது. எங்களுடைய பிரதேசங்களின் வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைவதற்கு தேவையான வேலைகளை செய்கின்ற கடமை அரசியல் தலைமைகளுக்குண்டு. அந்த இலக்கோடு தமிழ் சமூக ஜனநாயகக் கட்சி செயற்படவிருக்கின்றது.

இந்த தேர்தலில் தமிழ் சமூக ஜனநாயகக் கட்சியை தமிழ் மக்கள் தங்களுடைய மிக முக்கியமான பிரதிநிதித்துவமாக அங்கீகரிப்பார்கள் என்ற நம்பிக்கையோடும் மக்களின் ஆதரவு எப்போதும் இருக்கும் என்ற நம்பிக்கையோடும் நாங்கள் இந்த தேர்தலில் இறங்கியிருக்கின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஓரு தீர்வு திட்டத்திற்காக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்திவருவதாக தெரிவிக்கும் நிலையிலும் தீர்வு கிடைக்குமா என்பது அவர்களுக்கே தெரியாத நிலையிருக்கின்றது.
பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெறுவது அவசியமாகும்.பேச்சுவார்த்தைகளின்போது விட்டுக்கொடுப்பு என்பதும் மறுக்கமுடியாதது.

ஆனால் தமிழ் மக்களின் அடிப்படையான விடயங்களில் விட்டுக்கொடுப்புகளை செய்யாமல்பேச்சுவார்த்தைகளை நடாத்துவது தமிழ் தலைவர்களின் கடமையாகும்.ஆனால் அவர்கள் அதனை செய்வார்களா என்பதை காலமே பதில்சொல்லும்.

இலங்கையில் கடந்த காலத்தில் மாறிமாறி ஆட்சியமைத்த இரண்டு பெரும் கட்சிகள் இணைந்துஆட்சியமைத்துள்ளது.இவை நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகங்களுக்கு பல வாக்குறுதிகளையளித்தன.இரண்டு தேசிய கட்சிகளும் ஒருங்கிணைந்துள்ளதானது ஒரு அற்புதமான காலமாகும். இதனை தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வினைப்பெற்றுக்கொள்ளும் வகையிலான வழிவகைளை பெறுவதற்கான வழிவகைகளை தமிழ் தலைமைகள் செய்யாத நிலையே இருக்கின்றது.

தமிழர்கள் தங்களுக்கு தேவையென்றால் தமிழ் பேசும் மக்கள் என்று சொல்வதும் எங்களுக்கு பிரச்சினையேற்பட்டால் தமிழர்கள்வேறு முஸ்லிம்கள் வேறு என்று சொல்வது சரியானது அல்ல.

தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதற்காக பல ஆண்டுகளாக தமிழ் தலைவர்கள் முயற்சிகளை மேற்கொண்டுவந்துள்ளனர்.ஆனால் அது ஒருவருக்கொருவர் சந்தேகம்கொண்டு பார்க்கின்ற,ஒருவருவருக்கொருவர் பிரிந்திருக்கின்ற நிலையே இன்று ஏற்பட்டுள்ளது.இதுமிகவும் கவலைக்குரிய விடயம்.

இந்த நாட்டில் தமிழர்களுக்கு எதிராக முஸ்லிம்களையும் முஸ்லிம்களுக்கு எதிராக தமிழர்களையும் பயன்படுத்துகின்ற பேரினவாத போக்கு இருந்துவந்திருப்பதுடன் அதற்கு துணையாக தமிழர்களோ முஸ்லிம்களோ இருக்ககூடாது.

கிழக்கில் தமிழருக்கு பதிலா முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வராது பிரச்சினையல்ல.பல்லினங்கள் வாழும் இந்த கிழக்கு மாகாணத்தின் சகல மக்களினதும் நலன்களையும் சமத்துவமாக கருத்தில்கொள்ளும் முதலமைச்சர் வருவதுதான் அவசியமானதாகும்.

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்துசெல்லவே விரும்பினோம்.அதற்கான சமிக்ஞையினை நாங்கள் வெளிப்படுத்தியபோதிலும் எங்களுக்கு எந்தவிதமான பதில்களும் வழங்கப்படாத நிலையிலேயே தனித்து தேர்தலில் குதிக்கவேண்டிய நிலையேற்பட்டது.இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ளேயே இடப்பங்கீடு தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன.அதற்குள் நாங்களும் சென்று பிரச்சினைகளை எதிர்கொள்வது அவளவு பொருத்தமானதாக இருக்காது.

உள்ளுராட்சிமன்ற தேர்தல் என்பது உள்ளுர் மக்களின் அபிவிருத்தி தொடர்பான விவகாரம்,உள்ளூர் மக்களின் உடனடி தேவை தொடர்பான விவகாரம்,சுத்தம்,சுகாதாரம் தொடர்பான விவகாரம்.இன்று நுளம்பு பெருக்கம்,உணவகங்களில் சுகாதாரம் இல்லை.இந்த விடயங்களை கருத்தில்கொண்டே உள்ளுராட்சிமன்ற தேர்தல்கள் இருக்கின்றன.இதனை யார் செய்வார்களோ அவர்களுக்குத்தான் மக்கள் வாக்களிக்கவேண்டும்.

ஒற்றுமையென்னும் பெயரில் மீண்டும்மீண்டும் தமிழர்கள் தவறுசெய்வார்களாக இருந்தால் தமிழர்களை யாரும் காப்பாற்றமுடியாது.தமிழ் மக்கள் புத்திபூர்வமாக சிந்திக்கவேண்டும்.பகுத்தறிவுமூலமாக சிந்திக்கவேண்டும்.கடந்த காலத்தினை எடுத்துபார்த்து சிந்திக்கவேண்டும்.பல நெருக்கடியான காலகட்டத்தில் மக்களுக்காக களத்தில் நின்று சேவையாற்றியவர்கள் தொடர்ந்து புர்pந்துகொண்டு மக்கள் செயற்படவேண்டும்.

முஸ்லிம் தலைவர்களில் பலர் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை உள்ளடக்கியதான வடகிழக்கு இணைப்புக்கு தாங்களும் தயார் என்று பல தடவைகள் கூறியுள்ளனர்.அதற்கு தமிழ் தலைமைகள் ஏன் இன்னும் முயலவில்லையென்பதே எனக்கு இன்னும் விளங்காத நிலையிருக்கின்றது.வாக்குப்பெறுவதற்கு அந்ததந்த சமூகத்திற்கு கூறும் கருத்துகளின் உண்மை நிலைமை மக்களுக்கு தெரியும்.

மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் அதிகரிக்கப்படவேண்டும் என கடந்த காலத்தில் பல ஆணகை;குழுக்கள் அரசாங்கங்களினால் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.13வது திருத்த சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும், மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் அதிகரிக்கப்படவேண்டும் என சிங்கள தலைமைகள் உட்பட அனைவரும் உணர்ந்துள்ளனர்.

தேர்தலில் பணம் இல்லாத கட்சிகள் போட்டியிடமுடியாத நிலையே இன்று தோற்றுவிக்கப்பட்டுள்ளது.உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஒரு பிரதேசசபையில் போட்டியிட வேண்டுமாகவிருந்தால் கட்டுப்பணம் செலுத்துவதற்கு சுமார் 50ஆயிரம் ரூபா தேவையாகவுள்ளது.வடகிழக்கில் சுமார் 70 பிரதேசசபைகள் தமிழர்களின் பிரதேசசபைகளாக இருக்கின்றது.சுமார் 50இலட்சம் ரூபா பணம் தேவையாகவுள்ளது.போட்டிபோடுவதற்கு நாங்கள் நியமனம் பத்திரமே தாக்கல்செய்யமுடியாது.

இன்று பலகோடி ரூபாய்கள் தொடர்புபட்டதாக இந்த தேர்தல் அமைந்திருப்பது ஒரு துரதிஸ்டவசமான நிலையாகும்.இது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல.நாங்கள் மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரத்தினைப்பெறுவதற்காகவும் மக்கள் மத்தியில் எங்களது கருத்தினை எடுத்துச்செல்வதற்காக ஒரு சில பிரதேசசபைகளிலும் நகரசபைகளிலும் போட்டியிடுகின்றோம்.

மக்கள் இம்முறை தேர்தலில் யார் நுளம்பினையொழிப்பார்கள்,யார் குப்பைகளை அகற்றுவார்கள்,யார் தமது பகுதிகளை சுத்தமாக வைத்திருப்பார்கள் என்று பார்த்து வாக்களிக்கவேண்டும்.யார் எமது வளங்களை பாதுகாப்பார்கள் என்று வாக்களிக்கவேண்டும்.

இன்று உள்ளுராட்சிமன்றங்களுக்கு வருவோர் எவ்வாறு மண்ணை கொள்ளையிடலாம்,எவ்வாறு கல்லை கொள்ளையிடலாம்,காட்டை எவ்வாறு வெட்டி விற்கலாம் என்ற போக்கில் சிலர் வருகின்றனர்.இந்த நோக்கம் இல்லாமல் எமது பிரதேசத்தினை அபிவிருத்திசெய்கின்ற,எங்களது வளங்களை எங்களது மக்களுக்காக பயன்படுத்துகின்ற,எங்களது வளங்களை எமது அடுத்த தலைமைமுறைக்கு பாதுகாத்து வழங்ககூடியவர்களையே மக்கள் தெரிவுசெய்யவேண்டும்ஃ
எமத மாநகரங்களை சுத்தம் செய்வதானது அரசியல் தீர்வு மூலம்பெறமுடியாது.எமது உள்ளுராட்சிமன்றங்கள் சரியாக நடைபெறவேண்டும்.கடந்த காலத்தில் உள்ளுராட்சிமன்றங்களை கைப்பற்றிய அரசியல்வாதிகள் பெரிய கதைகள் எல்லாம் கதைத்துவிட்டு ஊழலிலும் மோசடி,தங்களுக்குள்ளேயே குத்துவெட்டுகள்,மத்திய அரசாங்கம் வழங்கிய நிதியை முறையாக பயன்படுத்தாமை போன்ற நிலைமையினை ஏற்படுத்தினர்.இவ்வாறான நிலைமைகள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடாது என்பதை மக்கள் உறுதிப்படுத்தவேண்’டும் என்றார்.

DSC04692DSC04708

 

 

http://www.samakalam.com/செய்திகள்/உள்ளுராட்சி-தேர்தல்-ஜெனி/

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, நவீனன் said:

இன்று உள்ளுராட்சிமன்றங்களுக்கு வருவோர் எவ்வாறு மண்ணை கொள்ளையிடலாம்,எவ்வாறு கல்லை கொள்ளையிடலாம்,காட்டை எவ்வாறு வெட்டி விற்கலாம் என்ற போக்கில் சிலர் வருகின்றனர்.

முன்னாள் தோழரைப்பற்றி சொல்லுறார் போல 

42 minutes ago, நவீனன் said:

உள்ளுராட்சி தேர்தல் ஜெனிவா சம்பந்தப்பட்டது அல்ல

இந்தியா சம்பந்தப்பட்டதாக் இருக்குமோ

  • கருத்துக்கள உறவுகள்

இதையெல்லாம் இவர் ஏன் சொல்கிறார் ? 

  • கருத்துக்கள உறவுகள்

குஞ்சு குருமன்களுக்கு மொட்டையடிக்காமல் இருந்தால் நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.