Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2ஜி வழக்கு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை

Featured Replies

#LiveUpdates 2ஜி தீர்ப்பு - கனிமொழி, ராசா நீதிமன்றம் வந்தடைந்தனர் #2GScamVerdict

 

கனிமொழி

Credits : ANI

 
 

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க மாநிலங்களவை எம்.பி., கனிமொழி உள்ளிட்டோர்  டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் வந்தடைந்தனர். சுப்பிரமணியன் சுவாமியும் நீதிமன்றம் வந்தடைந்தார். பாட்டியாலா நீதிமன்ற வளாகம் பரபரப்பாகக் காணப்படுகிறது. நீதிமன்ற வளாகத்தில் தி.மு.க தொண்டர்களும் குவிந்துள்ளனர்.  காலை 10.30 மணியளவில் தீர்ப்பு அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க அங்கம் வகித்தபோது, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தார் . அப்போது, மொபைல் போன் சேவைகளுக்கான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக, மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஒதுக்கீட்டினால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது. இதுகுறித்து சி.பி.ஐ வழக்குப்பதிவுசெய்து விசாரித்தது. இந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி-யுமான கனிமொழி ஆகியோர்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  2ஜி வழக்கு தொடர்பான வாதங்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. நாட்டையே உலுக்கிய இவ்வழக்கு, இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டுவந்த இவ்வழக்கின் தீர்ப்பு நாள், இன்று. 

https://www.vikatan.com/news/india/111401-2gscamverdict-kanimozhi-raja-reached-delhi-patiala-house-court.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

#LiveUpdates 2ஜி தீர்ப்பு! - அனைவரும் விடுதலை #2GScamVerdict

 
 

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 2ஜி வழக்கில் தீர்ப்பு வெளியானது. 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறியதை அடுத்து குற்றம்ச்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

கனிமொழி

 
https://www.vikatan.com/news/india/111401-2gscamverdict-kanimozhi-raja-reached-delhi-patiala-house-court.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

2ஜி வழக்கு: ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை

 

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டவர்களை விடுதலை செய்து டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

2ஜி வழக்கு: ராசா, கனிமொழி ஆகியோர் 'நிரபராதிகள்' என நீதிபதி தீர்ப்புபடத்தின் காப்புரிமைCHANDAN KHANNA

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்துள்ள வழக்கின் தீர்ப்பை டெல்லி சிபிஐ சிறப்புநீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது.

முன்னதாக, இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோ் மற்றும் சில தனியார் நிறுவனங்களின் தரப்பு வாதங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தன.

2ஜி வழக்கு: ராசா, கனிமொழி ஆகியோர் 'நிரபராதிகள்' என நீதிபதி தீர்ப்புபடத்தின் காப்புரிமைPRAKASH SINGH

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசு 2004-2009 மற்றும் 2009 முதல் 2014-ஆம் ஆண்டுகள்வரை ஆட்சியில் இருந்தது. அதில் முதலாவது ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதில் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011-ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது.

இதேபோல மத்திய அமலாக்கத் துறையும் தனியாக தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது.

இந்த வழக்குகளின் விசாரணை கடந்த ஆறு ஆண்டுகளாக டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது.

அறிவாலயம்

2ஜி வழக்கில் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்:

  • இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு நடந்த ஊழல்களில் மிகப் பெரிய முறைகேடு வழக்காக இது பார்க்கப்பட்டது.
  • சிபிஐ இரண்டு வழக்குகளையும், மத்திய அமலாக்கத்துறை ஒரு வழக்கையும், டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் தொடர்ந்தன.
  • முதலாவது குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்த ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
  • திமுகவைச் சேர்ந்த ஆ.ராசா, அக்கட்சித் தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, அவரது மனைவி தயாளு அம்மாள், முன்னாள் தொலைத்தொடர்புத் துறைச் செயலாளர் சித்தார்த் பெஹுரா உள்ளிட்ட முக்கிய நபர்கள் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.
  • ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் ஆகிய தனியார் நிறுவனங்கள் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தன.
  • சிபிஐ குற்றப்பத்திரிகையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் ரூ. 30,984 கோடி அளவுக்கு அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
  • தொலைத்தொடர்பு உரிமங்களை விண்ணப்பிக்க நிர்ணயித்த கடைசி தேதியை உள்நோக்கத்துடன் ஆ.ராசா மாற்றி முன்கூட்டியே இறுதி செய்ததாக சிபிஐ குற்றம்சாட்டியது. இதன் மூலம் சில தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக அவர் நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
  • ஆதாயம் அடைந்த தனியார் நிறுவனங்கள் திமுக ஆதரவு கலைஞர் டி.விக்கு கடனாக அளித்ததாகக் கூறப்படும் ரூ. 200 கோடியை லஞ்சம் என்று மத்திய அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியிருந்தது.
  • இந்த வழக்கால் 2009-இல் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுகவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. 2011-இல் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுகவுக்கு எதிரான பிரசாரத்திலும் இந்த விவகாரம் முக்கியமானதாக பேசப்பட்டது.

http://www.bbc.com/tamil/india-42436625

  • தொடங்கியவர்

'களங்கம் நீங்கிவிட்டது'- மகிழ்ச்சியில் மு.க.ஸ்டாலின்

 
 
Chennai: 

2ஜி வழக்கில் கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தி.மு.க தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடிவருகின்றனர்.



stalin
 

 

’இனி, தி.மு.க-வுக்கு எல்லாமே வெற்றிதான்’ என்று துரைமுருகன் மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்துள்ளார். சென்னையில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தனது இல்லத்தில் தொண்டர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ’எங்களை அவமானப்படுத்தி அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு போடப்பட்ட வழக்குதான் 2ஜி வழக்கு. இந்த வழக்கில் பெரிய அளவில் சித்திரித்து, பொய் கணக்கைக் காட்டித் திரித்தார்கள்.

தற்போது, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க மீதான களங்கம் நீங்கிவிட்டது. இந்த நேரத்தில், ஊடக நண்பர்களுக்கு நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். 2ஜி வழக்கு போடப்பட்டபோது எப்படி ஆர்வத்தோடு பெரிதுபடுத்தினீர்களோ... அதேபோன்று இப்போது, தி.மு.க மீது குற்றமில்லை என்று தீர்ப்பு வெளியாகியுள்ளது. இதைப்பற்றியும் நீங்கள் பெரிதுபடுத்தி, கழகத்தின் மீதுள்ள களங்கத்தைப் போக்க வேண்டும்” என்றார். 

https://www.vikatan.com/news/tamilnadu/111404-2g-verdict-stalin-distributes-sweets.html

 

 

 

ஆ.ராசா, கனிமொழி விடுவிப்பு; காங்கிரஸ், திமுக மீதான பழி அகற்றப்பட்டுள்ளது: திருநாவுக்கரசர்

CB19-CONGjpg

ஸ்டாலின், திருநாவுக்கரசர் | கோப்புப் படம்.

2ஜி வழக்கை முன்னிறுத்தி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பற்றி தவறான பிரச்சாரம் நடந்தது, ஆ.ராசா, கனிமொழி விடுவிக்கப்பட்டதன் மூலம். காங்கிரஸ், திமுக மீதான பழி அகற்றப்பட்டுள்ளது என காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று (டிசம்பர் 21 2017) தீர்ப்பு வழங்கியது. ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் இந்த வழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் நிருபிக்க அரசு தரப்பு தவறி விட்டதாக நீதிபதி தெரிவித்தார்.

இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது

"2ஜி வழக்கை முன்னிறுத்தி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பற்றி பாஜகவினர் தவறான பிரச்சாரம் செய்தனர். ஆனால் இது, தவறு என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. காங்கிரஸ் நல்லாட்சி தந்துள்ளது என்பது உறுதியாகியுள்ளது. திமுகவும் தவறு செய்யவில்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது" எனக் கூறினார்.

காங்கிரஸ் தேசிய செய்தித்தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பூ கூறியதாவது:

"2ஜி வழக்கை முன்னிறுத்தி 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுகவிற்கு எதிராக மிக மோசமான பிரச்சாரத்தை பாஜகவும், பிரதமர் மோடியும் செய்தனர். ஊர் ஊராக சுவரொட்டி ஒட்டி தவறான பிரச்சாரம் செய்தனர். ஆனால், 2ஜி வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களது பிரச்சாரம் தவறு என்பது உறுதியாகியுள்ளது. தவறான பிரச்சாரத்திற்காக பாஜவினர் மன்னிப்பு கேட்பார்களா?" எனக் கேள்வி எழுப்பினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22121740.ece?homepage=true

 

 

 

2ஜி வழக்கில் தீர்ப்பு: சித்தார்த் ட்வீட்டால் சர்ச்சை; ட்வீட்டையும் நீக்கினார்!

 

 
siddharth

2ஜி வழக்கில் அனைவரும் விடுதலையானதைத் தொடர்ந்து, நடிகர் சித்தார்த் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தையும் ட்விட்டர் தளத்திலிருந்து நீக்கினார்.

ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோர் சம்பந்தப்பட்ட '2ஜி வழக்கு' தீர்ப்பு இந்தியாவில் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. அந்த தீர்ப்பு இன்று (டிசம்பர் 21) காலை 11:00 மணிக்கு தீர்ப்பு வெளியாவதாக இருந்தது.

   
siddharthjpg
 

அதற்கு முன்னதாக நடிகர் சித்தார்த், "ராஜா, கனிமொழி நடிப்பில் திருட்டுப்பயலே-1 படத்துக்கான விமர்சனம் இன்று வெளியாகிறது. ஜெயலலிதா, சசிகலா மற்றும் குழுவினர் நடிப்பிலான திருட்டுப்பயலே-2 போலவே இந்த படத்துக்கான தீர்ப்பும் நன்றாகவே இருக்கும் என நம்புகிறேன். அனைவருக்கும் வாழ்த்துகள்" என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், 2ஜி வழக்கில் அனைவரும் விடுதலை என்று தீர்ப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து தனது சர்ச்சைக்குரிய ட்வீட்டை நீக்கினார். தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, "சூப்பர் ஹிட் என்ற செய்தி வந்துள்ளது. அனைவருக்கும் விடுதலை. என் இந்தியாவே சிறந்தது. இந்திய அரசியலின் தூய்மையான குற்றமற்ற தன்மைக்கு என் வாழ்த்துகள். எவ்வளவு நற்குணம். இனி #2ஜி கிடையாது. தேசிய கீதம் ஒலிக்கிறது. எழுந்து நில்லுங்கள்" என்று தெரிவித்திருக்கிறார் சித்தார்த்.

 

Super hit report. All acquitted. Mera Bharat Mahaan. Congrats to the pure innocence of Indian politics. Such goodness. No more #2G Please stand for national anthem.

 

சித்தார்த்தின் ட்வீட் பெரும் சர்ச்சையாக சமூகவலைத்தளத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

http://tamil.thehindu.com/tamilnadu/article22121678.ece?homepage=true

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

மேல்முறையீடு குறித்த கேள்விக்கு ஒரு வார்த்தையில் பதில் அளித்த கனிமொழி!

 
 

kanimoli_12432.jpg

2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து விடுதலை பெற்றுள்ளதால் 7 ஆண்டு மன அழுத்தம் நீதி, நியாயம் வென்றதால் நீங்கிவிட்டது என்று தி.மு.க எம்.பி கனிமொழி மகிழ்ச்சியுடன் கூறினார்.

 

டெல்லி பாட்டியாலாவில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் நீதிபதி சைனி இன்று தீர்ப்பளித்தார். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகளும் எம்.பி.யுமான கனிமொழி உட்பட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பைக் கேட்டு தமிழகம் முழுவதும் தி.மு.கவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.கவினருக்கு லட்டு வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, தி.மு.க. மீது இருந்த கறை நீங்கிவிட்டது என்றார். இந்த நிலையில், வழக்கில் இருந்து விடுதலையானது குறித்து டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, 7 ஆண்டு மன அழுத்தம் நீதி, நியாயம் வென்றதால் நீங்கிவிட்டது. 

பெரிய அழுத்தம் இருந்த நிலையில் தற்போது நிம்மதி கிடைத்துள்ளது. வழக்கில் எந்தவித உண்மையும் இல்லை என்பது தீர்ப்பின் மூலம் நிரூபணமாகியுள்ளது. தீர்ப்பையடுத்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன். 2ஜி அலைக்கற்றை வழக்கை பொய் வழக்கு என தி.மு.க கூறி வந்ததற்கு தீர்வு கிடைத்துள்ளது. சி.பி.ஐ மேல்முறையீடு செய்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். தளபதி மு.க.ஸ்டாலின் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் வாழ்த்து தெரிவித்தார்" என்றார்.

2ஜி வழக்கில் மேல்முறையீடு செய்யப்படும் என்று சுப்பிரமணியன் கூறியிருக்கிறார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்குப் பதில் அளித்த கனிமொழி, "சந்திப்போம்" என்று ஒரு வார்த்தையில் பதில் அளித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன், "தி.மு.க., கூட்டணி கட்சிகள் மீதான பொய் வழக்கு என்பது நிரூபணமாகிவிட்டது" என்று கூறினார்.

 

இதனிடையே, "2ஜி வழக்கில் இருந்து அனைவரும் விடுவிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது" என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

https://www.vikatan.com/news/tamilnadu/111408-kanimozhis-one-word-reply-to-media.html

  • தொடங்கியவர்

2ஜி வழக்கில் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்..! சுப்பிரமணியன் சுவாமி

 

2ஜி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

6_12288.jpg

 


இந்தியா முழுவதும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த 2ஜி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. 2ஜி வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக குறிப்பிடப்பட்டிருந்த ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார். குற்றங்களை நிரூபிக்க சி.பி.ஐ தவறிவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சுவாமி, 'இந்த வழக்கில் உண்மைத் தன்மையை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதன் மூலம் மத்திய அரசு நிரூபிக்கவேண்டும். ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை அவரது கூட்டாளிகள் கொண்டாடினார்கள். ஆனால், உச்ச நீதிமன்றம் அதற்கு சரியான தீர்ப்பை அளித்தது. அதேபோல இந்த வழக்கிலும் நடைபெறும்' என்று பதிவிட்டுள்ளார். 

https://www.vikatan.com/news/tamilnadu/111414-central-government-should-appeal-hc-says-subramanian-swamy.html

  • தொடங்கியவர்

`பறிமுதல் செய்த சொத்துகளை விடுவியுங்கள்; - அமலாக்கத்துறைக்கு நீதிபதி சைனி உத்தரவு

 
 

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2ஜி அலைக்கற்றைத் தொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளிலிருந்து அனைவரும் விடுதலை என்று ஒரே வரியில் தீர்ப்பு அறிவித்துவிட்டுச் சென்றுள்ளார் நீதிபதி ஓ.பி.சைனி. 


கனிமொழி
 

 

சி.பி.ஐ  சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு.

``2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது. 2ஜி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து பணமோசடி நடைபெற்றதாகக் கூறப்பட்ட புகாரையும் நிரூபிக்கவில்லை. இதனால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. அமலாக்கத்துறை பறிமுதல் செய்த ரூ.223.55 கோடி மதிப்பிலான சொத்துகளை விடுவிக்க வேண்டும். மேலும், கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் லஞ்சமாகக் கைமாறியது என்று புகார் கூறப்பட்டிருந்தது. அதற்கும் எந்த ஆதாரமும் இல்லை” என்று டெல்லி  சிறப்பு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

https://www.vikatan.com/news/india/111413-important-points-in-2g-verdict.html

 

 

`காத்திருப்போம்' - 2ஜி தீர்ப்பு குறித்து ஹெச்.ராஜா அடடே கருத்து

 
 

2ஜி தீர்ப்பு பற்றி கருத்து தெரிவித்துள்ள ஹெச்.ராஜா ‘2ஜி வழக்கில் சி.பி.ஐ மேல்முறையீடு செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

h.raja
 

 

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டவர்களை விடுதலை செய்து டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 
2ஜி தீர்ப்புக்கு காங்கிரஸ் வரவேற்பளித்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2ஜி தீர்ப்புக்கு எதிராக ட்வீட் செய்துள்ள ஹெச்.ராஜா, “குன்ஹா தீர்ப்பைக் கொண்டாடியவர்கள் உண்டு. குமாரசாமி தீர்ப்பால் குதூகலமானவர்களைப் பார்த்தோம். இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் நீதி வென்றது. 2ஜி வழக்கில் சி.பி.ஐ, அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றம் உரிமங்களை ரத்து செய்ததே ஊழலுக்கு ஆதாரம். நீதி வெல்லும். காத்திருப்போம். சி.ஏ.ஜி அறிக்கை வந்தது, உச்ச நீதிமன்றம் 2ஜி உரிமங்களை ரத்து செய்தது, 2011-ல் இந்த வழக்கு தொடரப்பட்டது அனைத்தும் நடந்தது காங்கிரஸ் ஆட்சியின் கீழ். அப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசியல் ரீதியாகப் பா.ஜ.க மீது சிப்பல், சிதம்பரம், MMS குற்றம்சாட்டுவது சிறுபிள்ளைத்தனமானதாகும்" என்று கபில் சிபில், மன்மோகன் சிங் உள்ளிட்டோரை சாடி பதிவுசெய்துள்ளார். 

https://www.vikatan.com/news/tamilnadu/111422-hrajas-tweet-about-2g-verdict.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

DRjWSoiXkAAAC8Y.jpg:large

  • தொடங்கியவர்

போலீஸ் டூ நீதிபதி... கடின உழைப்பாளி, கண்டிப்பானவர் இவர் தான் நீதிபதி ஷைனி!

 

சென்னை : 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரையும் விடுவித்து தீர்ப்பளித்துள்ள நீதிபதி ஓ.பி.ஷைனி யார் தெரியுமா. முன்னாள் மத்திய அமைச்சர் அ. ராசா மற்றும் கனிமொழி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரின் கவனமும் நீதிபதி ஓ.பி.ஷைனி பக்கம் திரும்பியுள்ளது. நாட்டின் இமாலய ஊழலாக பார்க்கப்பட்டது 2ஜி அலைக்கற்றை வழக்கு. முதலில் வருவோருக்கு முன் உரிமை என்ற அடிப்படையில் முன்னாள் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் அ.ராசா அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ. 30 ஆயிரம் கோடி இழப்பு என்று சிஏஜி அறிக்கை குறிப்பிட்டது.

ஷைனியின் தொடக்க காலம்

இதன் அடிப்படையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சுமார் 6 ஆண்டுகளாக நடைபெற்றது. இந்த மாதத்தில் மட்டுமே இந்த வழக்கின் தீர்ப்பு தேதி 3 முறை என மொத்தம் 6 முறை தீர்ப்பு தேதியானது ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நீதிபதி ஓ.பி.ஷைனி அளித்த தீர்ப்பில் அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

 

ஷைனியின் தொடக்க காலம்

நீதிபதி ஓ.பி.ஷைனி 1981ம் ஆண்டு டெல்லி காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டராக தன்னுடைய பணியைத் தொடங்கியுள்ளார். 6 மாதங்கள் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய பின்னர் மேஜிஸ்திரேட்டுக்கான தேர்வு எழுதினார். அந்த ஆண்டில் அந்த தேர்வில் வெற்றி பெற்ற ஒரே நபர் இவர் தான்.

 

உச்சநீதிமன்றம் நியமனம்

ஹரியானா மாநிலத்தில் நடுத்தர வர்க்க குடும்பத்தை சேர்ந்த ஷைனியின் கடின உழைப்பை கவனத்தில் கொண்டே அவர் இந்த வழக்கு விசாரணைக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011ம் ஆண்டு உச்சநீதிமன்றம் 2ஜி வழக்கு விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தை அமைத்து அதன் நீதிபதியாக ஷைனியை நியமித்தது.

முக்கிய ஊழல் வழக்குகளை விசாரித்தவர்

 

 


முக்கிய ஊழல் வழக்குகளை விசாரித்தவர்

தேசிய அலுமினியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் ஊழல் வழக்கு, காமன்வெல்த் ஊழல் வழக்கு உள்ளிட்ட வழக்குகளின் நீதிபதியாகவும் ஷைனி இருந்துள்ளார். காமன்வெல்த் ஊழல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ் கல்மாடியின் முக்கிய கூட்டாளிகளை கண்டறிந்து அவர்களை சிறையிலடைக்க உத்தரவிட்டரும் நீதிபதி ஷைனி தான்

 

நீதிக்காக எதிலும் சமரசம் செய்யாதவர்

வழக்கு விசாரணை தொடங்கிய போதே திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஜாமின் மனு விசாரணைக்கு வந்த போது, அவர் பெண் என்பதால் அவருக்கு ஜாமின் வழங்குவார் என்று கருதப்பட்டது. ஆனால் ஜாமினை தள்ளுபடி செய்து ஷைனி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதே போன்று அதிகாரத்தில் உள்ளவர்களிடம் கேள்வி எழுப்பவும் தயங்காதவராகவே ஷைனி இருந்துள்ளார்.

 

அதிகாரத்தை சரியாக பயன்படுத்தியவர்

இந்த வழக்கு தொடர்பாக 2013ம் ஆண்டில் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி பார்தி ஏர்டெல்லின் சுனில் மிட்டல், ஹட்சிசனின் அசிம் கோஷ் மற்றும் ஸ்டெர்லிங் செல்லுலார் நிறுவனத்தில் ரவி ரூயா ஆகியோருக்கு சம்மன் அளித்து விசாரணைக்கு அழைத்தார். கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் உடல்நிலையை காரணம் காட்டி சாட்சிப் பட்டியலில் இருந்து நீக்க விடுத்த கோரிக்கையையும் ஷைனி நிராகரித்தார்.



Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/after-aquittal-former-telecom-minister-raja-kanimozhi-mp-all-attention-towards-op-saini-305849.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆட்சியை இழந்த திமுக2ஜி ஊழல்,2G scam, ராஜா,Raja,  கனிமொழி, Kanimozhi,  விடுதலை,Release,  2ஜி ஸ்பெக்ட்ரம், 2G spectrum,முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, former Union Minister Raja, கருணாநிதி மகள் கனிமொழி, Karunanidhi daughter Kanimozhi, சி.பி.ஐ சிறப்பு கோர்ட், CBI Special Court, காங்கிரஸ்,Congress, தொலைதொடர்பு துறை, Telecom Department, ஸ்பெக்ட்ரம்  லைசென்ஸ்,Spectrum License, மத்திய அரசு, Central Government, நீதிபதி ஓ.பி.சைனி, Judge OP Saini,

சந்தோச பெருமழையில் அண்ணலும் அண்ணியும்......:grin:

 

  • தொடங்கியவர்

’7 வருஷம் காத்திருந்தேன்; ஒரு சாட்சிகூட வரல!’ - #2ஜி நீதிபதி சைனி வேதனை

 

7 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த 2ஜி வழக்கில் இன்று தீர்ப்பு வெளியானது. 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கனிமொழி, ராசா உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பு வழங்கினார்.

சைனி

 

2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

தீர்ப்பு நகலில் ஓ.பி.சைனி குறிப்பிட்டிருந்த சில சுவாரஸ்யமான தகவல் பின்வருமாறு... “2ஜி வழக்கு தொடர்ந்தவர்கள் ஆரம்பக்கட்டத்தில் உற்சாகமாகவும் தீவிராமாகவும் செயல்பட்டனர். ஆனால், நாள்கள் செல்லச் செல்ல இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் கையெழுத்துப் போடக்கூட சி.பி.ஐ தரப்பிலிருந்து யாரும் தயாராக இல்லை. குற்றம்சாட்டப்பட்டவர்களைக் குறித்து சமூகத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களும் குற்றம்சாட்டி பேசினர். ஆனால், ஒருவரும் குற்றத்தை நிரூபிக்க நீதிமன்றத்தில் சாட்சியளிக்க வரவில்லை.

2ஜி
 

கடந்த ஏழு ஆண்டுகளாக 2ஜி வழக்கில் சட்டப்படி செல்லும் ஆதாரங்களுடன் யாராவது வருவார்கள் என்று காத்துக்கொண்டிருந்தேன். வேலை நாள்கள், கோடை விடுமுறை நாள்கள் என ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை ஒருவராவது உரிய ஆவணங்களுடன் குற்றத்தை நிரூபிக்க வருவார்கள் என்று காத்திருந்தேன். ஒருவர்கூட வரவில்லை. ஏழு ஆண்டுகளில் சட்டப்படி செல்லும் ஒரு சாட்சிகூட வரவில்லை. அனுமானத்தின் அடிப்படையிலோ வதந்திகளின் அடிப்படையிலோ வழக்கை எடுத்துச்செல்ல முடியாது. 2ஜி ஒதுக்கீட்டை தொடர்ந்து பணமோசடி நடைபெற்றதாகக் கூறப்பட்ட புகாரையும் நிரூபிக்கவில்லை. இதனால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் லஞ்சமாகக் கைமாறியது என்று புகார் கூறப்பட்டிருந்தது. அதற்கும் எந்த ஆதாரமும் இல்லை” என்று நீதிபதி ஓ.பி.சைனி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

https://www.vikatan.com/news/tamilnadu/111429-opsainis-statement-over-2g-verdict.html

 

 

 

நன்கு திட்டமிடப்பட்ட குற்றப்பத்திரிகை: 2ஜி வழக்கு தீர்ப்பில் நீதிபதி

 

2gjpg

கோப்புப் படம்: ஏஎன்ஐ

 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில், முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக எம்.பி., கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கில் எவ்விதமான குற்றச்சாட்டுமே நிரூபிக்கப்படவில்லை, போதுமான ஆதாரங்கள் இல்லை என்ற அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருமே வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவதாக நீதிபதி ஓ.பி.சைனி தெரிவித்துள்ளார்.

நீதிபதி ஓ.பி. ஷைனியின் தீர்ப்பின் விவரம்:

2ஜி அலைக்கற்றை வழக்கின் தொடக்கத்தில், சிபிஐ தரப்பு மிகவும் உற்சாகத்துடன், ஆர்வத்துடன் வழக்கை எதிர்கொண்டது. ஆனால், வழக்கின் விசாரணை முன்னேற்றம் அடைந்தபோது, மிகுந்த எச்சரிக்கையுடன், பாதுகாப்புடன் சிபிஐ அணுகியது, இதனால் அரசுத் தரப்பு எதை மெய்ப்பிக்க வேண்டும் என்று விரும்புகிறது என்பதைக் கண்டுபிடிப்பது கடினமாகியது. வழக்கின் முடிவில், அரச தரப்பு வாதங்களின் தரநிலை என்பது, ஒட்டுமொத்தமாக மோசமடைந்து, எந்தவிதமான வழிகாட்டுதலும் இல்லாமல், அதைரியமாகப் போய்விட்டது.

இந்த வழக்கில் தொடக்கத்தில் ஆ.ராசாவின் செயல்பாடுகளைக் காட்டிலும், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களின் செயல் அல்லது செயல்பாடின்மை குறித்துதான் அதிகமான விவரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மூளையாக இருந்து அ.ராசா தான் சதி செய்தார் என்பதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.

ஆ. ராசா இந்த விவகாரத்தில் ஆழ்ந்த ஈடுபாட்டுடன், தடையின்றி, தன்னிச்சையாக செயல்பட்டு ஏதும் தவறு இழைத்தார்; சதி செய்தார்; ஊழல் செய்தார்; என்பதற்கான எந்தவிதமான ஆதாரங்களும் இல்லை.

இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தவறான அடிப்படையில், குறிப்பிட்ட பகுதிகள் குறித்தும், தீவிரமாக ஆய்வு செய்யப்படாமலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் போது சில சாட்சியங்களின் வாக்குமூலங்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆனால், நீதிமன்ற விசாரணையின் போது, அவர்களை நீதிமன்ற கூண்டில் கொண்டு வந்து அதை நிரூபிக்க அரசு தரப்பால் முடியவில்லை. இறுதியாக சாட்சியங்களின் வாக்குமூலங்கள் வாய்மொழியாக இருந்தாலும், அரசு தரப்பு அளித்த அறிக்கைக்கும் அதற்கும் இடையே முரண்பாடுகள் இருக்கின்றன. இது சட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது.

குற்றப்பத்திரிகையில் சிபிஐ தரப்பு பதிவு செய்துள்ள பல்வேறு விஷயங்கள் உண்மையில் சரியானது அல்ல. குறிப்பாக, நுழைவுக் கட்டணத்தை மீண்டும் மறு ஆய்வு செய்யக் கோரி நிதித்துறை செயலாளர் தீவிரமாக பரிந்துரை செய்தார் என்பதும், ஆ.ராசா மூலம் எல்.ஓ.ஐ. பிரிவு நீக்கப்பட்டது என்றும், நுழைவுக்கட்டணம் டிராய் நிறுவனத்தால் மறுஆய்வு செய்ய பரிந்துரை செய்யப்பட்டது என்பதிலும் உண்மையில்லை.

மேற்கூறப்பட்ட விஷயங்களை தீவிரமாக நான் ஆய்வு செய்ததில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது எந்த விதமான குற்றத்தையும் நிரூபிப்பதில் அரசுத் தரப்பு தோல்வி அடைந்துவிட்டது. நன்கு திட்டமிட்டு தயார் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையாகும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

http://tamil.thehindu.com/india/article22123017.ece?homepage=true

  • தொடங்கியவர்

2ஜி தீர்ப்பு: மேல்முறையீடு செய்யும் அமலாக்கத் துறை

rajakanimozhi

கனிமொழி, ஆ.ராசா | கோப்புப் படம்

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றம் 19 பேர் விடுதலை செய்துள்ளதை எதிர்த்து அமலாக்கத் துறை மேல்முறையீடு செய்ய உள்ளது.

தீர்ப்பை முழுமையாகப் படித்துப் பார்த்த பிறகு, உரிய ஆதாரங்கள் மற்றும் விசாரணையோடு உயர் நீதிமன்றத்தை அமலாக்கத்துறை அணுகும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக இந்த வழக்கில் முன்னாள் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, திமுக மகளிரணித் தலைவர் கனிமொழி உள்ளிட்ட 19 பேரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி விடுதலை செய்தார்.

கனிமொழி, ராசாவுடன் ஷாஹித் பல்வா, வினோத் கோயங்கா, ஆசிஃப் பல்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொரானி, அமிர்தம், சரத் குமார் ஆகியோரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அமலாக்கத்துறை தனது இறுதி அறிக்கையில், 10 நபர்கள் மற்றும் 9 நிறுவனங்களைக் குற்றம் சாட்டிய நிலையில், குற்றப் பத்திரிகையில் அவர்களின் பெயரை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது

http://tamil.thehindu.com/india/article22122724.ece?homepage=true

  • தொடங்கியவர்

நெட்டிசன் நோட்ஸ்: 2ஜி தீர்ப்பும் சனி பகவானின் பார்வையும்!

 

 
2

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் ஆ.ராசா மற்றும் கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக நெட்டிசன்கள் பகிர்ந்துவரும் கருத்துகளின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்…

Vadivel Paramasivam

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் நடந்த வழக்கு என்பதால் நீதிபதி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தீர்ப்பு எழுதியிருக்க முடியாது!

Sridhar Subramaniam

குஜராத் கலவர வழக்கில் மோடி குற்றமற்றவர், ஏனெனில் நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டுவிட்டார் என்று பாஜக அபிமானிகள் இத்தனை வருடங்களாக வாதாடி வருகிறார்கள்.

அந்த வாதம் ஏற்றுக் கொள்ளத்தக்கது என்றால் அதே வாதப்படி திமுகவும் 2ஜி விஷயத்தில் குற்றமற்றது என்றே ஏற்றுக்கொள்ள வேண்டும். பாஜக அபிமானிகள் இந்தத் தீர்ப்பை இகழ்வது தவறு என்று கருதுகிறேன்.

Karthick Krishna

இவங்க ரிலீஸ் ஆனது கூட பரவால்ல... வெளியே வந்து ''தர்மத்தின் வாழ்வுதனைனு.......'' ஆரம்பிப்பாங்க பாருங்க.. அதை நினைச்சாதான்...

D S Gauthaman

அடுத்து 2ஜி வழக்கில் எச்.ராஜா, தமிழிசை என்ன தீர்ப்பு சொல்வாங்கன்னு வெயிட்டிங்!

பாஜக ஆட்சிக்கு வந்ததால் திமுகவில் ஊழல் ஒழிந்ததுன்னு சொன்னாலும் சொல்வாங்க!

டான் அசோக்

இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் என ஜோடிக்கப்பட்ட வழக்கைக் கண்டு அஞ்சவில்லை. நீதிமன்றத்தில் வக்கீலை அனுப்பி வாய்தா மேல் வாய்தா வாங்கிப் பதுங்கவில்லை. பல பத்தாண்டுகள் வழக்கை இழுத்தடிக்கவில்லை.

தொலைக்காட்சி நேரலைகளில் மக்களுடன் கலந்துரையாடி தன் தரப்பை தொடர்ந்து எடுத்து வைத்தார். "ஆமாம். மொபைல் அழைப்புகளின் விலையைக் குறைத்த நான் ஸ்பெக்ட்ரம் ராசா தான்," என துணிச்சலாக அறிவித்தார்.

பெரியாரைப் போல தனக்காக தானே நீதிமன்றத்தில் இறங்கி வாதாடினார். அவருடைய பல வாதங்கள் செய்தித்தாள்களில் வெளியாகின. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று, எதிர்தரப்பு வழக்கறிஞர், "அதிர்ஷ்டம் இருப்பவர்கள் ஜெயிக்கட்டும்," எனச் சொல்ல, இவரோ, "அதிர்ஷ்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை உண்மை யார் பக்கம் இருக்கிறதோ அவர்கள் ஜெயிக்கட்டும்," என்றார்.

வாழ்க்கையில் நம் மீது எழுப்பப்படும் பொய்யான குற்றச்சாட்டுக்களை எப்படி கேலி கிண்டல்களுக்கு அஞ்சாமல், விலகி ஓடாமல் நெஞ்சுரத்தோடு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு ஆ.ராசா ஒரு மாபெரும் உதாரணம்.

Srinivasan J

நீதிமன்றமே விடுதலை செய்தாலும் திமுக ஊழல் கட்சி! அதானே?

உச்ச நீதிமன்றமே குற்றவாளி என அறிவித்தாலும் ஜெ. உத்தமர்! அதானே???

ரா புவன்

2ஜி பற்றி யோசிக்கவேண்டியது நிறைய இருக்கிறது. கண்டிப்பாக ரூ.1.76 லட்சம் கோடி ஊழல் என்பது பொய்தான். ஆனால் 1 ரூபாய் கூட ஊழலே கிடையாது என்பதையெல்லாம் நம்புமளவுக்கு நாம் முட்டாள் கிடையாது. அனைத்தும் அரசியல், அனைத்தும் அதிகாரம்.

Ganeshan Gurunathan

பாஜக அனுதாபிகள் காங்கிரசே பரவாயில்லையே என நினைக்கவும், திமுக அனுதாபிகள் பாஜகவே பரவாயில்லையே என நினைக்கவும் வாய்த்த விநோத சூழல்..!

Kadanganeriyaan Perumal

சாதிக் பாட்ஷா ஆன்மா சாந்தியடையட்டும்....

Vijay Sivanandam

நேற்று நிறைய துப்பறிவாளர்களைக் கண்டோம்....

இன்று பல சட்ட வல்லுநர்களைக் காண்கிறோம்...

எப்படி பேஸ்புக்ல மட்டும் எல்லோரும் இம்புட்டு அறிவா இருக்காங்க.....

Ag Sivakumar

உடன்பிறப்புகளோட ஆட்டம் ரொம்ப ஓவரா இருக்கே? இருங்கய்யா.,. சுப்பிரமணியன் சாமி அப்பீலுக்கு போயிருக்காராம். அந்த தீர்ப்பும் வரட்டும்.

1
 

Rahim Journalist

இலையுடன் கூட்டணி வைப்பதற்குப் பதிலாக.... கனியுடன் கூட்டணி வைக்கும் மலர்... #2ஜி

KR Athiyaman

அரசியல் அழுத்தங்களை விட பணத்திற்கு விலை போகும் நீதிபதிகள்தான் அதிகம்.

Sundaram Chinnusamy

பிரதமரின் இன்ப்ளூயன்சினால்தான் தீர்ப்பு திமுகவுக்கு சாதமாக வந்ததுன்னு பாஜக ஆதரவாளர்களே சொல்றாங்க...

என்னய்யா சொல்றீங்க? கோர்ட்டை இன்ப்ளூயன்ஸ் செய்வது எவ்வளவு குற்றம்னு தெரியுமா?

மதுரை ரவி @ravisankarmdu

2ஜி விடுதலைக்கு பிறகு அடுத்ததென்ன?

நம்ம சின்னம்மா விடுதலைதான்! கொய்ங்க்!

கர்ணாசக்தி @karna_sakthi

2ஜி ஊழல் என்கிற அரசியல் ஆதாயத்திற்காக ஊதிப்பெருக்கப்பட்ட பலூனை நீதி எனும் ஊசிமுனையால் குத்தி படீர் என வெடிக்கவைத்த நீதிமன்றத்திற்கு நன்றி. அறத்துடன் நேர்மையாக போராடிய ராசாவிற்கு வாழ்த்துக்கள்.

எமகாதகன் @Aaathithamizhan

இந்த செய்தியைக் கேட்ட சந்தோஷத்தில் கலைஞருக்குத் தலை கால் புரிய ஆரம்பிச்சிடும். எழுந்து நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

மெத்த வீட்டான் @HAJAMYDEENNKS

காற்றை பிடித்து சாட்சிக்கு வைத்திருந்தால் 2ஜி வழக்கில் கனிமொழிக்குத் தண்டனை கிடைத்திருக்கும்!

வாழை.வை.சு.பா @kalpbagya32

2ஜி வழக்கில் கனிமொழி, ராசா விடுதலை: செய்தி

கடவுளையே நம்பாத ஆளுகளுக்குத்தான் சனிபகவான் பார்வை கூடப் படாது போல!

ஆல்தோட்டபூபதி @thoatta

ஏர்டெல் 4ஜி ஸ்பீடுல போடப்பட்ட வழக்கு, பிஎஸ்என்எல் 3ஜி ஸ்பீடுல நடந்து, ஐடியா 2ஜி ஸ்பீடு மாதிரி தீர்ப்பு கிடைச்சிருக்கு

மெத்த வீட்டான் @HAJAMYDEENNKS

2ஜி வழக்கில் கனிமொழி, ராசா விடுதலை.

இனி திமுகவில் தில்லாவார் மு.க.!

சிந்தனையாளன் @ungalhabeeb

2ஜி வழக்கில் கனிமொழி, ராசா குற்றவாளி இல்லை.

இதை சொல்ல 6 வருஷமா?- 2ஜி வழக்கு 2ஜி வேகத்துலயே...

Hariharasuthan Thangavelu

7 1/2 வருசம் வச்சு செஞ்சா அது சனி.

7 வருசம் வச்சும் ஒண்ணுமே செய்யாம விட்டா அது சைனி. #2ஜிதீர்ப்பு

http://tamil.thehindu.com/opinion/blogs/article22124976.ece?homepage=true

மடியில் கனம் இல்லை என்றால் 2009 லேயே காங்கிரஸ் கூட்டணி யிலிருந்து வெளியே வந்து தில்லாக வழக்கை எதிர் கொண்டிருக்கலாம் ,தமிழ் மக்களின் வெறுப்பையும் சம்பாதித்திருக்க வேண்டி இருந்திருக்காது தமிழின துரோகி என்ற அவப்பெயரும் வந்திருக்காது

Edited by அபராஜிதன்

  • தொடங்கியவர்

மத்திய அரசு கோரிக்கைக்கு ஏற்ப உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையிலும் 2ஜி விடுவிப்பு

 

 
OPSAINI

சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி.   -  படம்.| சிறப்பு ஏற்பாடு.

குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாமல் போனதை சுட்டிக்காட்டி சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி 2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்திருப்பது என்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு 'மக்கள் நலன் கருதி' கோரியதன் அடிப்படையில் உச்ச நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நடந்த விசாரணையையும் கடந்து நடந்தேறியுள்ளது.

செப்டம்பர் 3, 2013-ல் உச்ச நீதிமன்றம் தன் உத்தரவில் குறைந்தது 3 முறையாவது, ''மக்கள் நலன் கருதியேனும் முறையான விசாரணை நடத்தி குற்றங்களை கண்டுபிடிக்க வேண்டும்'' என்ற நோக்கத்தில் விசாரணை முகமை மற்றும் மத்திய அரசின் கோரிக்கைக்கு இணங்க விசாரணையை கண்காணிக்க முடிவெடுத்ததாக பதிவு செய்திருந்தது.

உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ-யை பிரதிநிதித்துவம் செய்தவரும் தற்போதைய அட்டர்னி ஜெனரலுமாகிய கே.கே.வேணுகோபால் வாதிட்ட போது, மத்திய அரசு உச்ச நீதிமன்றம் இந்த விசாரணையை கண்காணிக்க வேண்டும் என்று ஏறக்குறைய அழைப்பே விடுத்தது என்று கூற வேண்டும் எனக் கூறினார்.

மேலும், மத்திய தலைமை தணிக்கைக் கட்டுப்பாட்டு ஆணையம் மற்றும் மத்திய லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முதற்கட்டமாக நீதி நிலைநாட்டப்பட தலையீடு அவசியம் என்பதை உச்ச நீதிமன்றம் உணர்ந்ததாகவும் உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டிருந்தது. அரசியல் சாசனம் சட்டப்பிரிவு 21, முழுநிறைவான, வேகமான விசாரணையை கோருகிறது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

''ரிட் மனுக்கள் மற்றும் இந்த கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலங்கள் குறித்து முதற்கண் நாங்கள் திருப்தியடைந்துள்ளோம். இது அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் மட்டுமல்லாது, மத்திய லஞ்ச ஒழிப்புத்துறையான மத்திய கண்காணிப்பு ஆணையம் சிபிஐக்கு அக்டோபர் 12, 2009-ல் தாக்கல் செய்த அறிக்கை, மற்றும் சிஏஜி தனது ஃபெர்பாமன்ஸ் ஆடிட் அறிக்கையில் தெரிவித்திருந்த கண்டுபிடிப்புகள் ஆகியவை சார்பற்ற ஒரு விசாரணையை வலியுறுத்துகிறது'' என்று உச்ச நீதிமன்றம் தன் உத்தரவில் பதிவிட்டிருந்தது.

உச்ச நீதிமன்றம் நியமித்த 2ஜி வழக்குகளுக்கான சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், டிசம்பர் 21-ம் தேதியன்று குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் முதற்கட்ட உண்மைத்தன்மையை கருத்தில் கொண்டு உத்தரவிட்டதாக ஒப்புக்கொண்டார்.

சுப்பிரமணியன் சுவாமி மேற்கொண்ட ரிட் மனு மற்றும் பொதுநல மனுக்களுக்கான மையம் மேற்கொண்ட ரிட் மனுவை அடுத்து நீதிமன்றமும் இதற்குள் வந்தது.

மேலும் சிஏஜி வினோத் ராய் இது குறித்து ஆற்றிய பணியை, ''இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கீழ் மிக முக்கியமான பணி. மக்கள் பணத்துக்கான காவலராக அவரது கடமை மிக முக்கியமானது'' என்று வினோத் ராயின் ஆடிட் அறிக்கையையும் பாராட்டியிருந்தது.

டிசம்பர் 16,2010-ல் உச்ச நீதிமன்றம், 122 2ஜி விண்ணப்பங்கள் மீது உரிமங்கள் வழங்கப்பட்ட விவகாரத்தில் சிஏஜி மிகவும் சீரியசான முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கண்டுபிடித்தார். இதனால் 'அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் நஷ்டமாகியுள்ளது' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதாவது சுமார் 1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தனர். தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு ஆதாரமாக 'அதிக அளவிலான ஆவணங்கள்' இருந்ததால் அந்த அடிப்படையில் உச்ச நீதிமன்றம் இதில் தலையிட முடிவெடுத்தது என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில் இன்று (டிச.21) மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கூறும்போது, ''விடுவிப்பு மொத்தமாக தவறு. பல்வேறு மட்டங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பரிசீலிக்கக்கூடிய ஆதாரம் உள்ளது, அதாவது முன் கூட்டியே பிக்ஸ் செய்ததற்கான கணிசமான ஆதாரங்கள், பினாமி நிறுவனங்களை சில நிறுவனங்கள் உருவாக்கியதற்கான கணிசமான ஆதாரங்கள், பங்குகள் அளவில் சகாயம் செய்ததற்கான கணிசமான ஆதாரங்கள் இருக்கவே செய்தன'' என்றார்.

மேலும் 2ஜி வழக்கில் உள்ள மக்கள் நலன் என்பதை விளக்கிய உச்ச நீதிமன்றம், குற்றம் செய்பவர்கள் தங்கள் அரசியல் அதிகாரம், செல்வாக்கு ஆகியவற்றைப் பயன்படுத்தி விசாரணை முகமைக்கு அழுத்தம் கொடுக்கும் சாத்தியம் உள்ளது. நம் நாட்டில் விசாரணை முகமை சுயேச்சையாக இயங்குவதில்லை. இதனால் சாமானிய மக்கள் மனதில் என்ன எண்ணம் ஏற்படுகிறது எனில் என்ன குற்றம் வேண்டுமானாலும் செய்து தப்பித்துக் கொள்வார்கள் என்பதே. இது விசாரனை முகமை மட்டுமல்லாது ஒட்டுமொத்த நீதித்துறையின் மீதான களங்கமாக முடியும் என்று தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட்டிருக்க வேண்டுமா என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸிடம் கேட்ட போது, ''பல வழக்குகளில் இத்தகைய உச்ச நீதிமன்ற கண்காணிப்பு நன்மையில் முடிந்துள்ளது. ஆனால் நீதிபதிகளை மையமாகக் கொண்ட விசாரணைகளில் கடைசியில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி சொந்த முடிவுக்கே வர வேண்டியுள்ளது. எனவே இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் மேல்முறையீடு சரியானதாக இருக்கும்'' என்றார்.

ஆதாரம்: தி இந்து ஆங்கிலம்.

தமிழில் : ஆர்.முத்துக்குமார்.

http://tamil.thehindu.com/india/article22152328.ece?homepage=true

  • தொடங்கியவர்
ரூ.17,60,00,00,00,000 =0:, '2ஜி' ஊழல் வழக்கில் ,அனைவரும் விடுதலை

புதுடில்லி: நாட்டை உலுக்கிய, 1.76 லட்சம் கோடி ரூபாய், '2ஜி' ஸ்பெக்ட்ரம் மோசடி தொடர்பான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து, டில்லி, சி.பி.ஐ., நீதிமன்ற சிறப்பு நீதிபதி, ஓ.பி.சைனி தீர்ப்பு அளித்துள்ளார். குற்றத்தை நிரூபிக்க, சி.பி.ஐ., தவறிவிட்டதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் கொண்டாடி வருகின்றனர். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 

ரூ.17,60,00,00,00,000 =0:, '2ஜி' ஊழல் வழக்கில் ,அனைவரும் விடுதலை


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, 2007 - 2008ல், தி.மு.க.,வைச் சேர்ந்த, ராஜா, தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்தார். 

 

சி.ஏ.ஜி., அறிக்கை


அப்போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக, சி.ஏ.ஜி., எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி, அறிக்கை தாக்கல் செய்தார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு கொள்கையால், அரசுக்கு, 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, அறிக்கையில் கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ., விசாரணை செய்ய உத்தரவிட்டது. இதற்கிடையில், '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகளை ரத்து செய்து, 2012ல் தீர்ப்பு அளித்தது.


இந்த மோசடி தொடர்பாக, சி.பி.ஐ., இரண்டு வழக்குகளையும், இதில் நடந்துள்ள பண மோசடிகள் தொடர்பாக, அமலாக்கத் துறை ஒரு வழக்கையும் தொடர்ந்தன. இந்த வழக்குகள் விசாரணை, டில்லி, சி.பி.ஐ., நீதிமன்றத்தில் நடந்து வந்தன. ஏழு ஆண்டுகளாக நடந்த இந்த வழக்குகளில், சி.பி.ஐ., நீதிமன்ற சிறப்பு நீதிபதி, ஓ.பி. சைனி நேற்று தீர்ப்பு அளித்தார்.


சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, ராஜா, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மகளும், ராஜ்யசபா எம்.பி.,யுமான கனிமொழி உட்பட, 17 பேரையும் விடுதலை செய்து, அவர் தீர்ப்பளித்தார்.

 

19 பேர் விடுவிப்பு


அதேபோல், அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட, கருணாநிதியின் மனைவி தயாளு உட்பட, 19 பேரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்குகளில், குற்றங்களை நிரூபிக்க, சி.பி.ஐ., தவறிவிட்டதாக, தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.'2ஜி' ஊழல் வழக்கு, நாடு முழுவதும் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மீதான பல்வேறு ஊழல் வழக்குகளில், மிகப் பெரிய ஊழலாக இது பார்க்கப்பட்டது. 


தீர்ப்பு நாளான நேற்று, ராஜா, கனிமொழி உட்பட அனைவரையும் ஆஜராகும்படி, நீதிபதி உத்தரவிட்டிருந்தார். நாடு முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து அறிவதற்காக நீதிமன்ற வளாகத்தில் மக்கள் பெருமளவில் கூடியிருந்தனர். தி.மு.க.,வினரும் அதிகளவில் குவிந்திருந்தனர். சி.பி.ஐ., தொடர்பான வழக்குகளில், 1,552 பக்கங்கள் உள்பட, மூன்று வழக்குகளையும் சேர்த்து, 2,183 பக்கத் தீர்ப்பை நீதிபதி அளித்தார். தீர்ப்பின் முக்கிய பகுதியை, நீதிபதி சைனி வாசித்தார்; 

 

அப்போது அவர் கூறியதாவது:


இந்த வழக்குகளில், சி.பி.ஐ., ஒரு சில ஆதாரங்களின் அடிப்படையில், ஊழல் வழக்கை தொடர்ந்துள்ளது. எதுவுமே இல்லாத ஒன்று, மிகப் பெரியதாகக் காட்டப்பட்டுள்ளது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஒருவர் மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க, சி.பி.ஐ., தவறிவிட்டது.இவ்வாறு நீதிபதி குறிப்பிட்டார். 


இந்த வழக்கை,மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய வாய்ப்பிருப்பதால்,

 

விடுவிக்கப்பட்டுள்ள அனைவரும், தலா,ரூ. ஐந்து லட்சம் சொந்த ஜாமின் அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.இந்தத் தீர்ப்பு வெளியானதும், நீதிமன்றத்தில் குவிந்திருந்த, தி.மு.க.,வினர், பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் கொடுத்தும் கொண்டாடினர்.

இந்த தீர்ப்பை, தி.மு.க.,வினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடினர்.இந்த வழக்கில், கைது செய்யப்பட்ட ராஜா, 15 மாதங்களும், கனிமொழி, ஆறு மாதங்களும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மிகப் பெரிய ஊழல் வழக்கில் இருந்து, கனிமொழி, தயாளு உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதால், கருணாநிதியின் குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே, சி.பி.ஐ., நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, டில்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

 

யார் யார் விடுதலை?


சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில் விடுவிக்கப்பட்டவர்கள்:1. ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர், தி.மு.க.,
2. கனிமொழி, ராஜ்யசபா, எம்.பி., - தி.மு.க.,
3. ஷாகித் பால்வா, ஸ்வான், டிபி ரியாலிட்டி புரோமாட்டர்
4. சந்தோலியா, ராஜாவின் முன்னாள் செயலர்
5. சித்தார்த் பெகுரா, தொலை தொடர்புத் துறை முன்னாள் செயலர்
6. சஞ்சய் சந்ரா, யூனிடெக் ஒயர்லெஸ் நிர்வாக இயக்குனர்
7. வினோத் கோயங்கா, ஸ்வான் ரியாலிட்டி நிர்வாக இயக்குனர்
8. சரத் குமார், கலைஞர், 'டிவி' முன்னாள் இயக்குனர்
9. கரீம் மொரானி, பாலிவுட் தயாரிப்பாளர்
10. கவுதம் தோஷி, ரிலையன்ஸ் அனில் அம்பானி நிறுவன நிர்வாகி
11. ஹரி நாயர், ரிலையன்ஸ் அனில் அம்பானி நிறுவன நிர்வாகி
12. சுரேந்திர பைபரா, ரிலையன்ஸ் அனில் அம்பானி நிறுவன நிர்வாகி
13. ஆசிப் பால்வா, இயக்குனர், குசோகான் புரூட்ஸ்
14. ராஜிவ் அகர்வால், இயக்குனர் குசேகான் புரூட்ஸ் & வெஜிடபுள்ஸ்நிறுவனங்கள்
1. ரிலையன்ஸ் டெலிகாம் லிட்.,
2. ஸ்வான் டெலிகாம்
3. யுனிடெக் ஒயர்லெஸ்

http://www.dinamalar.com/news_detail.asp?id=1923649

சி.பி.ஐ., சொதப்பியதால் நொண்டியடித்த வழக்கு
ராஜாவின் அதிரடி வாதத்தால் கிடைத்தது பலன்
 
 
 

'2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், ராஜா உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டு இருப்பதன் பின்னணி குறித்து, சி.பி.ஐ., மற்றும் பாட்டியாலா கோர்ட் தரப்புகளின், தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:

 

சி.பி.ஐ.,, சொதப்பியதால், நொண்டியடித்த,வழக்கு, ராஜாவின் அதிரடி,வாதத்தால்,கிடைத்தது,பலன்


பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கில், குறைந்த விலைக்கு ஸ்பெக்ட்ரத்தை விற்றதால், பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகக் கூறி, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான, சி.ஏ.ஜி., அறிக்கை தாக்கல் செய்தது.

 

குறுக்கு விசாரணை



இந்த அறிக்கையின் பரபரப்பாலும், அரசியல் புற அழுத்தம் காரணமாகவும், இந்த பிரச்னை, 
விஸ்வரூபம் எடுத்தது.ஆனால், இந்த வழக்கு, முழுக்க முழுக்க தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ரீதியில் அமைந்தது என்பது, பலருக்கும் புரியவில்லை. முக்கிய ஆவணங்கள் இருப்பது தெரியாமல், அவற்றை கைப்பற்றுவதற்கு முன்பாகவே, உச்ச நீதிமன்றம் தலையிட்டதன் அடிப்படையில், சி.பி.ஐ., அவசர கோலத்தில், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. 


இது தான், இவ்வழக்கின் மிகப்பெரிய சறுக்கல். கிரிமினல் வழக்கறிஞர் என்பதால், ராஜா மிகவும் சாமர்த்தியமாக, முக்கிய ஆவணங்கள் இருப்பதையே வெளிக்காட்டாமல், கைது செய்து சிறையில் தள்ளிய போதும் கூட அமைதி காத்தார்; அதை விட, குற்றப் பத்திரிகையை, சி.பி.ஐ., தாக்கல் செய்யும் வரை, எதுவும் பேசாமல் இருந்தார்.ஜாமினில் 

வெளியாகி, விசாரணை துவங்கிய பின்பே, தொலை தொடர்புத் துறை, பிரதமர் அலுவலகம், நிதியமைச்சகம், 'டிராய்' என, பல்வேறு இடங்களில் இருந்த ஆவணங்களை, கோர்ட் மூலமாகவே வரவழைக்க செய்தார். எந்தெந்த குற்றங்கள் எல்லாம், ராஜா செய்ததாக கூறப்பட்டதோ, அவற்றுக்கு ஒப்புதல் அளித்து, கையெழுத்தும் போட்டிருந்த முக்கிய அதிகாரிகள் தான், சி.பி.ஐ.,யின் முக்கிய சாட்சிகள்.


இவர்களைகுறுக்கு விசாரணை செய்வது, ராஜாவுக்கு மிக எளிதாகவும் போய்விட்டது. தவிர, சி.பி.ஐ., சுமத்தும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும், ஆவணங்களை அள்ளிப் போட்டபடியே இருந்தார். இதனால், பல நேரங்களில், நீதிபதி, சைனியே, 'இதில் வழக்கு எங்கே உள்ளது?' என, சி.பி.ஐ., தரப்பை கடிந்து கொள்ள நேர்ந்தது.'ஸ்பெக்ட்ரம் விலை வேறு; ஸ்பெக்ட்ரத்தை வாங்குவதற்கான நுழைவு கட்டணம் வேறு. 


'நுழைவு கட்டணத்தை உயர்த்தாமல் போனதற்கு, அரசின் கொள்கை முடிவு காரணமே தவிர; நானல்ல' என, பார்லிமென்ட், ஜே.பி.சி., ஆகிய இடங்களில் வாதிட்டு தோற்றாலும், ராஜா நம்பிக்கை இழக்கவில்லை; காரணம், கோர்ட்டில், ஆவணங்கள் மட்டுமே செல்லுபடியாகும்.

 

சமாதானம்



அது தெரிந்த ராஜா, மிகத் தெளிவாக,ஆவணங்கள் மூலமே கோர்ட்டில் பேசினார். இந்த வழக்கின் நெளிவு சுளிவுகளை அறிந்தவன் என்பதால், தன்னால் மட்டுமே, சி.பி.ஐ.,யை கையாள முடியும் என்பதை புரிந்து வைத்திருந்து, தனக்காக ஆஜரான, பிற வழக்கறிஞர்களை தவிர்த்து, பல நேரங்களில், தானே முன்வந்து, அசாத்திய உறுதியை விசாரணையின் போது சுட்டிக்காட்டினார்.


பெரும்பாலான வேளைகளில், கூண்டில் ஏற தயங்காமலும், தானே வாதிடவும் செய்தார். சி.பி.ஐ., மூத்த வழக்கறிஞர், குரோவருக்கும், ராஜாவுக்கும், பல நேரங்களில், நேருக்கு நேர் மோதல் ஏற்பட்டு, நீதிபதி தலையிட்டு, சமாதானம் செய்ய வேண்டி யிருந்தது.'ராஜாவோ, அவரது உறவினர்களோ, முறைகேடான வழியில் சொத்து

 

சேகரிக்கவில்லை' என, கோர்ட்டில், சி.பி.ஐ., வெளிப்படையாக ஒப்புக் கொண்டது. 


'ஸ்பெக்ட்ரத்தை பெற்றது, தகுதியுள்ள நிறுவனங்கள் தான்' என்பதை, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலும், சட்டத் துறை செயலரும் ஒப்புக் கொண்டு, அதிகாரபூர்வ கடிதமே அளித்தனர்.ராஜா, இறுதியாக, தன் வாதத்தை முடித்த போது கூறியதாவது:


கண் பார்வையற்ற நான்கு பேர், யானையை தொட்டுப் பார்த்தனர். காலை தொட்டவர் துாண் என்றார். வாலை தொட்டவர் கயிறு என்றார். காதை தொட்டவர் முறம் என்றார். உடலை தொட்டவர் சுவர் எனக் கூறியதாக, கதை உள்ளது. இதே போலத்தான், ஸ்பெக்ட்ரம் குறித்த போதிய புரிதலின்றி, சி.ஏ.ஜி., - சி.பி.ஐ., - ஜே.பி.சி., அமலாக்கத் துறையினர் அணுகியதாலேயே, இத்தனை பிரச்னை. இவ்வாறு அவர் வாதாடினர்.


அதை கேட்டதும், நீதிபதி உட்பட, கோர்ட்டிலிருந்த அனைவரும், பலமாக சிரித்து விட்டனர். அன்றைய தினம் தான், தீர்ப்பு எழுதும் தேதியை, முடிவு செய்யும் தீர்மானத்திற்கே, நீதிபதி, ஓ.பி.சைனி வந்தார்.துவக்கம் முதலே, சி.பி.ஐ., தரப்பு மிக பலவீனமாக இருந்தது. அதனால் தான், 
சந்தேகத்தின் பலனை கூட, தனக்கு சாதகமாக கேட்காமல், தான் குற்றமற்றவன் என்ற ஒரே நிலைப்பாட்டில், உறுதியாக நின்று விடுதலையாகி உள்ளார், ராஜா.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1923670

  • தொடங்கியவர்

2ஜி தீர்ப்பு: வழக்கை முன்னெடுத்த முன்னாள் சிபிஐ இயக்குனர் என்ன சொல்கிறார்?

சிபிஐபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

2ஜி அலைக்கற்றை வழக்கில், போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட அனைவரையும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

இந்நிலையில், சிபிஐ இந்த வழக்கை எடுத்து விசாரிக்க காரணமாக இருந்து, விசாரணையை தொடக்கி, ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த முன்னாள் சிபிஐ இயக்குனர் ஏ.பி.சிங்குடன், பிபிசி செய்தியாளர் டெவினா குப்தா நடத்திய நேர்காணல்.

2ஜி வழக்கை முன்னெடுத்த நபர்

2ஜி வழக்கின் குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி, அனைவரையும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது குறித்து முன்னாள் சிபிஐ இயக்குனர் ஏ.பி.சிங்கிடம் கேட்டதற்கு, தாம் நீதிமன்றத்தில் இல்லை என்றும் ஆனால் இந்த தீர்ப்பு தமக்கு ஆச்சரியம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.

"விசாரணையின் முக்கிய பகுதிக்கான குற்றப்பத்திரிக்கை, 60 பக்கங்களை கொண்டது. உரிமங்கள் ஒதுக்கீட்டில் அமைச்சர் ஆ.ராசா முறைகேடு செய்ததற்கான போதுமான ஆதாரங்கள் எங்களிடம் இருந்தது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், யூனிடெக் மற்றும் ஸ்வான் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஆதரவாக ஆ. ராசா செயல்பட்டார். மேலும், இதற்கு விண்ணப்பிக்க அக்டோபர் ஒன்றாம் தேதி கடைசி நாளாக இருக்க, யூனிடெக் மற்றும் ஸ்வான் நிறுவனங்களுக்கு ஆதரவாக செப்டம்பர் 25 ஆம் தேதியே விண்ணப்பங்கள் பெறுவதை அவர் நிறுத்திவிட்டார்" எனவும் பிபிசியிடம் ஏ.பி.சிங் கூறினார்.

ஆ.ராசாபடத்தின் காப்புரிமைRAVEENDRAN

பின்னர், இடைத்தரகர் மூலமாக கனிமொழி மற்றும் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு சொந்தமான கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாகவும், அந்தப் பணம் திரும்பத் தரப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

விசாரணை மேலும் வலுமையாக இருந்திருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு, கருத்துக் கூற விரும்பவில்லை என்று கூறிய ஏ.பி. சிங், தங்களின் விசாரணையை உச்சநீதிமன்றம் பாராட்டியதாக குறிப்பிட்டார்.

2ஜி வழக்கு விசாரணையை கண்காணிக்க நீதிமன்றத்தினால் மேற்பார்வைக்குழு அமைக்கப்பட ஆரம்பத்தில் கோரப்பட்டாலும், தாங்கள் அதனை எதிர்த்ததாக ஏ.பி.சிங் தெரிவித்தார்.

மேலமை நீதிமன்றத்தில் நல்ல தந்திரத்தோடு இந்த தீர்ப்பை சிபிஐ மேல்முறையீடு செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு, அது இப்போதைய பொறுப்பாளர்கள் எடுக்கவேண்டிய முடிவு என்று தெரிவித்தார் சிங்.

http://www.bbc.com/tamil/india-42444574

  • தொடங்கியவர்

சப்-இன்ஸ்பெக்டராக இருந்து நீதிபதியாக உயர்ந்த ஓ.பி.ஷைனியின் அதிரடித் தீர்ப்புகள்!

 
 

மிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவே ஆவலுடன் எதிர்பார்த்த 2ஜி வழக்கில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்குக்கு இணையாக மக்களின்  எதிர்பார்ப்பை எகிறச்செய்த வழக்கு இது. விசாரணை இரு மாதங்களுக்கு முன்னரே, முடிந்துவிட்டாலும் தீர்ப்பு அளிக்கப்படும் நாள் பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. `தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் மீது சுமத்தப்பட்ட இந்த வழக்கில், போதிய ஆதாரங்களை சி.பி.ஐ தரப்பில் சமர்ப்பிக்கவில்லை' எனக் கூறி ஓ.பி. ஷைனி தீர்ப்பில் கூறியுள்ளார். தீர்ப்பு முடிவு, தி.மு.க தலைமை மற்றும் தொண்டர்களுக்கு அளவில்லாத உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. நீதிபதி ஷைனி

தற்போதைய தீர்ப்பு தி.மு.க-வுக்குச் சாதகமாக இருந்தாலும், வழக்கு விசாரணை தொடங்கிய காலகட்டத்தில் தி.மு.க தரப்புக்கு கிலி ஏற்படுத்தியவர் ஷைனி. நீதித் துறையில் நீதிபதி ஓ.பி.ஷைனி கண்டிப்புமிக்கவர். கனிமொழி சிறைக்குச் செல்வதற்கு இவரின் கண்டிப்பும் ஒரு காரணம். `பெண் என்பதைக் காரணம் காட்டி கனிமொழிக்கு ஜாமீன் வழங்க வேண்டும்' என்று விண்ணப்பித்தபோதெல்லாம் கொஞ்சமும் கருணை காட்டாதவர். `பெண் என்றாலும் அவர் அதிகாரமிக்க அரசியல்வாதி, வெளியே விட்டால், சாட்சியங்களை அழிக்க நேரிடலாம்' எனக் கனிமொழியின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

 
 

இதனால், கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் டெல்லி திகார் சிறையில் ஐந்து மாதங்கள் அடைக்கப்பட்டனர். அப்போது, ``இப்படிப்பட்ட ஒரு நீதிபதிகிட்டயா என் மகள் மாட்டிக்கிட்டா'' என்று ராசாத்தி அம்மாள் கண்ணீர்விட்டாராம். வயது முதிர்வு, உடல் நிலையைக் காரணம் காட்டி, தயாளு அம்மாளை நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையைகூட ஷைனி ஏற்றுக்கொள்ளாமல், அவரது உடல்நிலையைப் பரிசோதித்து அறிக்கை அனுப்ப உத்தரவு பிறப்பித்தவர்.

2ஜி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஓ.பி.ஷைனி, டெல்லி காவல் துறையில் 1981-ம் ஆண்டு முதல் ஆறு ஆண்டுகள் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றினார். 1987-ம் ஆண்டு நீதிபதி தேர்வு எழுதி தேர்வானார்.  ஹரியானாவில் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு, தற்போது 63 வயதாகிறது.  உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் அடங்கிய அமர்வு, 2ஜி வழக்கை விசாரிக்கத் தனி நீதிமன்றம் அமைக்க உத்தரவிட்டது.  இதையடுத்து, 2011-ம் ஆண்டு முதல் இந்த வழக்கை ஓ.பி.ஷைனி விசாரித்துவந்தார். எவ்வளவு  செல்வாக்குமிக்கவராக இருந்தாலும், விசாரிக்க வேண்டும் என்று கருதினால் தயக்கமில்லாமல் சம்மன் அனுப்பிவிடும் வழக்கமும் இவருக்கு உண்டு. 

இந்த வழக்கில் 2013-ம் ஆண்டு  Criminal Procedure Code (CrPC) என்ற சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, பார்தி ஏர்டெல் தலைவர் பார்தி மிட்டல், ஹட்ஸிசன் மேக்ஸ் தலைவர் ஆஷிம் கோஷ், ஸ்டெர்லிங் செல்லுலர் நிறுவனத் தலைவர் ரவி ரூயா ஆகியோரை விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகச் செய்தவர். 2ஜி வழக்கில் முக்கிய ஆதாரமாகக் கருத்தப்பட்டது நீரா ராடியா பேச்சு அடங்கிய பதிவுகள். நீதிமன்றத்தில் ஆஜரானபோது, பல கேள்விகளுக்கு மழுப்பலாக நீரா ராடியா பதிலளித்தார். நீரா ராடியாவிடம் கண்டிப்பு காட்டி, பதில்களைப் பெற்றுள்ளார் ஷைனி. 

நீதிபதி சைனி நடத்திய வழக்கில் விடுதலை பெற்ற கனிமொழி

நாட்டை உலுக்கிய முக்கிய வழக்குகளில் ஓ.பி.ஷைனி தீர்ப்பளித்துள்ளார். விளையாட்டு உலகத்தை உலுக்கிய காமன் வெல்த் ஊழல் குற்றச்சாட்டில் சுரேஷ் கல்மாடியை சிறைக்கு அனுப்பியவர் இவர்தான். சுரேஷ் கல்மாடியும் அரசியலில் செல்வாக்குமிக்கவர்தான். மத்திய அமைச்சராக இருந்தவர்.  தேசிய அலுமினியம் நிறுவன ஊழல் வழக்கை  (NALCO) விசாரித்தபோது, அந்த நிறுவனத்தின் தலைவர் ஏ.கே.ஸ்ரீவஸ்தாவுக்கு ஜாமீன் வழங்க மறுத்தார் ஷைனி. 

டெல்லி, செங்கோட்டையில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பாதுகாப்புப்படை வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளி முகமது ஆரிஃப்புக்கு தூக்குத்தண்டனை விதித்தவர் இவர்தான். பிற குற்றவாளிகள் ஆறு பேருக்கு ஆயுள்தண்டனையும் விதித்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி, எம்.எஸ். ஷபார்வால், 2002-ம் ஆண்டு ஓய்வுபெற்றுவிட, அதற்குப் பிறகு வழக்கை விசாரிக்க பிற நீதிபதிகள் மறுத்தனர். இந்த வழக்கில் பல குழப்பங்கள் இருப்பதாகவும்  காரணம் சொன்னார்கள். ஏனென்றால், முக்கிய வழக்குடன் தொடர்புடைய ஐந்து  வழக்குகளை விசாரிக்கவேண்டிய அவசியம் இருந்தது. 300 சாட்சியங்கள் இருந்தன. ஆனால், ஓ.பி.ஷைனி இந்த வழக்கை சவாலாக ஏற்று விசாரணை நடத்தி, முகமது ஆஃரிப்புக்குத் தூக்குத்தண்டனை விதித்தார். 

 

இப்படிப்பட்ட கண்டிப்பான நீதிபதியின் தீர்ப்பு கனிமொழி, ஆ.ராசாவை விடுதலை செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

https://www.vikatan.com/news/tamilnadu/111456-subinspector-turned-judge-all-you-need-to-know-about-op-saini.html

  • தொடங்கியவர்
எப்படி?
ராஜா, கனிமொழி விடுதலையானது எப்படி?
அதிரடி தீர்ப்பில்புட்டு புட்டு வைக்கிறார் சைனி
 
 
 

புதுடில்லி: நாடு முழுவதும்பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக, நீதிபதி, ஓ.பி.சைனியின், 1,552 பக்கங்கள் அடங்கிய, அதிரடி தீர்ப்பின்முக்கிய அம்சங்கள்:

 

ராஜா, Raja,கனிமொழி,Kanimozhi, விடுதலை,release, நீதிபதி சைனி,Judge Saini,  2ஜி ஸ்பெக்ட்ரம் ,2G Spectrum, சி.பி.ஐ, CBI, அமலாக்கத் துறை,Enforcement department தொலை தொடர்பு அமைச்சகம், Telecom Ministry,


* அரசியல், ஊடகங்கள் என, பொது தளங்களில் வைக்கப்படும் விமர்சன கருத்துக்களின் அடிப்படையிலேயே, சி.பி.ஐ.,யின் வாதங்கள் இருந்தன


* கோர்ட்டிற்கு தெரிந்ததெல்லாம், சட்டமும், நீதியும் ஆவணங்களும், ஆதாரங்களும் தான்; ஆனால் அதை, சி.பி.ஐ., தரவே இல்லை


* பிரதான வழக்கான, '2ஜி' ஸ்பெக்ட்ரம் வழக்கிலேயே விடுதலை என்ற நிலையில், கலைஞர், 'டிவி'க்கு நடந்த பணப் பரிவர்த்தனை, சட்ட விரோதமானது தானா என்ற கேள்வி, எழவே வாய்ப்பு இல்லை


* அமலாக்கத் துறையால் தொடரப்பட்ட வழக்கில், கனிமொழி உட்பட அனைவருமே விடுதலை செய்யப்படுகின்றனர்


* தான் கூறிய ஒவ்வொரு குற்றச்சாட்டு களையும், போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்க, சி.பி.ஐ., தரப்பு தவறி விட்டது


* தவறான புரிந்துணர்வின் அடிப்படையில் தான், குற்றப் பத்திரிகையே தயார் செய்யப்பட்டு உள்ளது. குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை


* குற்றப் பத்திரிகையிலுள்ள தகவல்கள், அரசு ஆவணங்களில் உள்ள விபரங்களுக்கு, முற்றிலும் முரணாக இருந்தன


* ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த அரசின் கொள்கைகளில், போதிய தெளிவே இல்லாமல் போனது தான், இவ்ஸ்ரீவழக்கில் ஒட்டுமொத்த குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது


* கட்டண உயர்வு குறித்து, நிதித் துறை செயலரும், டிராயும் பரிந்துரை செய்தனர் என, குற்றப் பத்திரிகையில் கூறியிருப்பது பொய்யானது


* அரசு துறைகளின் தரப்பில், போதிய ஒருங்கிணைப்பு இல்லை. வெவ்வேறு திசைகளில் பயணித்தனர். அரசு கோப்புகள் முறையாக பராமரிக்கப்படவில்லை



* தொலை தொடர்பு அமைச்சகத்திலிருந்து, சாட்சி சொல்ல வந்த அனைவருமே, மிகுந்த தயக்கத்துடன் முரண்பட்டபடியே இருந்தனர்


* கோர்ட் முன்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் இருந்த தகவல்களுக்கு முரணாகவே, சி.பி.ஐ.,யின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் இருந்தன


* அமலாக்கத் துறையால் முடக்கப்பட்ட அனைத்து சொத்துகளையும் விடுவிக்க வேண்டும். இது தொடர்பாக கைப்பற்றப்பட்ட அனைத்து ஆவணங்களையும், சி.பி.ஐ., திருப்பி ஒப்படைக்க வேண்டும்


* வாய்மொழியாக கூறப்பட்ட சாட்சிகள் அனைவருமே, கூண்டிலேறிசாட்சி சொல்லும் போது, முரண்பாடாக மாற்றி பேசினர்


* அரசு அதிகாரிகளின் ஆவணங்கள் அனைத்துமே, விருப்பத்திற்கு ஏற்றபடி குறிப்பெழுதி இருப்பதால், அதன் அர்த்தம் என்ன என்பதை, அவர்களாலேயே விளக்க முடியவில்லை


* சி.பி.ஐ., தயாரித்தகுற்றப் பத்திரிகை, வேண்டுமென்றே குற்றம் சுமத்த வேண்டுமென்ற உள்நோக்கத்துடன் தயார் செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது


* அவரவர் விருப்பத்துக்கு ஏற்ற வகையில் பொருள் கொள்ளும் வகையில், அரசு ஆவணங்கள் உள்ளன. அதிகாரிகளுக்கே அர்த்தம் தெரியவில்லை


* இந்த வழக்கிற்காக, காலை, 9:00 மணிக்கே கோர்ட்டுக்கு வந்து விடுவேன். மாலை, 5:00 மணி வரை இருப்பேன். கோடை விடுமுறையின் போது கூட, கோர்ட்டுக்கு வந்தேன்


* சரியான, வலுவான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் வருவர் என, இந்த வழக்கிற்காக, நானும் ஏழு ஆண்டுகளாக காத்திருந்தேன்; கடைசி வரை அது நடக்கவில்லை


* ராஜா, இவ்வழக்கில் சதி செய்தார்; ஊழல் செய்தார்; குற்றச் செயலில் ஈடுபட்டார் என்பதற்கான எந்தஆதாரமும் இல்லை


* இந்த வழக்கில், 'பிரதான சதிகாரர் ராஜா' என்ற குற்றச்சாட்டு, முற்றிலுமாக நிராகரிக்கப்படுகிறது


* வழக்கின் துவக்கத்தில் உற்சாகம் காட்டிய, சி.பி.ஐ., போகப் போக, எச்சரிக்கை உணர்வு தலைதுாக்கி, எதை நிரூபிக்கப் போகிறோம் என்பதை தெரியாமல் தடுமாறியது


* வாதங்கள் அனைத்துமே சீர்குலைந்து, திக்கு திசை தெரியாமல் தவிக்கும் நிலைக்கு, சி.பி.ஐ., ஆளானது இறுதியாக, தாங்கள் முன்வைத்த நிரூபிக்க முடியாமல், பரிதாபகரமான வகையில், சி.பி.ஐ., தோல்வி அடைந்துள்ளது.

 


 

போலீஸ் அதிகாரியாக இருந்து நீதிபதியானவர் சைனி


நாடே பெரிதும் எதிர்பார்த்த, '2ஜி' ஸ்பெக்ட்ரம்குற்றச்சாட்டுகளை இயன்றயளவு கூட ஒதுக்கீடு ஊழல் வழக்கில் தீர்ப்பு அளித்த, சி.பி.ஐ., நீதிமன்ற சிறப்பு நீதிபதி, ஓ.பி.சைனி, 63, போலீஸ் அதிகாரியாக இருந்து நீதிபதியானவர்.

ஹரியானாவில், நடுத்தர குடும்பத்தில் பிறந்த சைனி, 1981ல், டில்லி போலீசில், எஸ்.ஐ.,யாக பணியாற்றினார். ஆறு ஆண்டுகள் பணிக்கு பின், நீதித் துறை மாஜிஸ்திரேட் பதவிக்கான தேர்வை எழுதினார். அப்போது, தேர்ச்சி பெற்ற ஒரே நபராக, அவர் விளங்கினார்.


'2ஜி' வழக்கில், சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க உத்தரவிட்ட போது, அதன் நீதிபதியாக, உச்ச நீதிமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், சைனி. அதற்கு முன், பல்வேறு முக்கிய வழக்குகளில், அவர் அளித்த அதிரடி தீர்ப்புகள், அவரது நேர்மைக்கு சான்றாக அமைந்தன.'2ஜி' வழக்கின் விசாரணையிலும், அவர் காட்டிய கண்டிப்பு, எழுப்பிய கேள்விகள், பலருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தின.


இந்த வழக்கில், ஐந்து மாதங்கள் சிறையில் இருந்த, தி.மு.க., தலைவர், கருணாநிதியின் மகள், கனிமொழிக்கு, பெண் என்ற அடிப்படை யில் ஜாமின் கேட்ட போது, கண்டிப்பாக கிடைத்துவிடும் என, பலரும் நினைத்தனர். ஆனால், அரசியல் அதிகாரமுள்ளவர் என்பதால், சாட்சிகளை கலைத்து விடுவார் எனக் கூறி, ஜாமின் வழங்க, சைனி மறுத்தார்.அதிக அதிகாரம் உள்ளவர்களையும் கேள்வி எழுப்ப, அவர் தவறியதில்லை.


2013ல், நீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி,பிரபல தொழிலதிபர்கள், சுனில் மிட்டல்,அசிம் கோஷ், ரவி ரூயியா ஆகியோருக்கு, 'சம்மன்' அனுப்பினார்.

வயது மற்றும் மருத்துவக் காரணங்களை காட்டி விலக்கு கோரி, தி.மு.க., தலைவர், கருணாநிதி யின் மனைவி, தயாளு அம்மாள் மனு செய்த போது, அதை ஏற்க மறுத்து, ஆஜராக உத்தர விட்டார். வர்த்தக நிறுவனங்கள் இடையே, இடைத்தரகராக செயல்பட்ட நீரா ராடியா, விசாரணையின் போது கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்த போது, சைனி கண்டித்தார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1923688

  • தொடங்கியவர்

மகளின் கன்னத்தில் அன்பு முத்தமிட்ட கலைஞர் கருணாநிதி! #kalaignar 

 
 

கனிமொழி

கனிமொழி மற்றும் ஆ.ராசா  திமுக தலைவர் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். அப்போது மகள் கனிமொழி கன்னத்தில் கருணாநிதி முத்தமிட்டார். தன் கண்ணாடியை தன் கைகளாலேயே சரிசெய்தார். இந்த காட்சி அருகில் இருந்தவர்களையும் கண்கலங்க செய்தது. மற்றொரு தடவை கனிமொழியை அழைத்து கன்னத்தை கிள்ளி முத்தமிட்டு, ஆசி வழங்கினார். 

 

கருணாநிதி

Credits - SunTV
 

2ஜி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட கனிமொழி மற்றும் ஆ.ராசா டெல்லியில் இருந்து இன்று சென்னை வந்தடைந்தனர். சென்னை விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. கோபாலப்புரம் இல்லத்தில் பறையாட்டம், கரகாட்டாம் என களைகட்டியது. 

சென்னை விமானநிலையத்தில் இருந்து கோபாலபுரம் வந்த கனிமொழி மற்றும் ஆ.ராசா திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனிடம் ஆசி பெற்றனர். கனிமொழி திமுக தலைவர் கருணாநிதி அருகில் சென்றதும் அவர் உற்சாகத்தில் மகளை பார்த்து சிரித்தார். தனக்கு அணிவித்த மாலையை கருணாநிதிக்கு அணிவித்து மகிழ்ந்தார். தன் தந்தையின் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டு கண்கலங்கினார். பதிலுக்கு கருணாநிதியும் மகளின் கன்னத்தை அன்பாக கிள்ளி முத்தமிட்டு சிரித்தார் கருணாநிதி. உடல் நிலைக்குறைவால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடந்த கருணாநிதி மகளின் விடுதலையை தொடர்ந்து மீண்டும் பழைய நிலைக்கு திரும்பிவருகிறார்

https://www.vikatan.com/news/tamilnadu/111653-karunanidhi-wished-her-daughter.html

  • தொடங்கியவர்

2ஜி வழக்கில் விடுவிப்பு; சென்னை விமான நிலையத்தில் கனிமொழிக்கு உற்சாக வரவேற்பு: ஸ்டாலின், திமுக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து

 

 
anijpg

கனிமொழியை வரவேற்கும் ஸ்டாலின் | படம்: சிறப்பு ஏற்பாடு.

2 ஜி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட கனிமொழி, அ.ராசா டெல்லியிலிருந்து இன்று (சனிக்கிழமை) சென்னை திரும்பினர். அவர்களுக்கு விமான நிலையத்தில் திமுக தொண்டர்கள் தாரை தப்பட்டை முழங்க வரவேற்பு அளித்தனர். மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் நேரில் சென்று வாழ்த்தினர்.

கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த 2ஜி வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட 11 பேரையும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்று பாட்டியாலா கோர்ட் கடந்த 21-ம் தேதி விடுவித்தது. இதனால் திமுக தரப்பினர் உற்சாகம் அடைந்தனர்.

விடுதலையான கனிமொழி, ஆ.ராசாவுக்கு வாழ்த்துகள் குவிந்தது. காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர்கள், தமிழக எதிர்க்கட்சித்தலைவர்கள், டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர். திமுகவுக்கு எதிராக புனையப்பட்ட அவதூறு துடைத்தெரியப்பட்டதாக மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார்.

இந்நிலையில் டெல்லியிலிருந்து இன்று காலை விமானம் மூலம் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் சென்னை திரும்பினர். சென்னை திரும்பும் அவர்களை வரவேற்கவும் அதை வெற்றி விழாவாக கொண்டாடவும் திமுக தீர்மானித்தது. இன்று பிற்பகல் சென்னை திரும்பிய கனிமொழி, ஆ.ராசாவை வரவேற்க ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் சென்னை விமான நிலையத்தில் கூடினர்.

தாரை, தப்பட்டை, மேளதாளம் முழங்க அவருக்கு வரவேற்பு அளித்தனர். சரியாக நண்பகல் 12.20 மணிக்கு கனிமொழி, ஆ.ராசா வெளியே வந்தனர். அவர்களை மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு திமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பூச்செண்டு கொடுத்து, சால்வை அணிவித்து வரவேற்றனர். பின்னர் தொண்டர்கள் வாழ்த்துடன் வழி நெடுக வரவேற்புடன் கோபாலபுரம் அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு கருணாநிதியிடம் கனிமொழியும், ஆ.ராசாவும் வாழ்த்து பெறுகின்றனர்.

கண்கலங்கிய கனிமொழி..

விமான நிலையத்தில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோரை மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இருவரது கைகளையும் கோர்த்து தன்னுடன் நிறுத்தி புகைப்படம் எடுக்கச்சொன்னார். அப்போது புகைப்படத்திற்கு நின்ற கனிமொழி கண்கலங்கினார். புகைப்படம் எடுத்து முடித்தப்பின் ஸ்டாலினை நோக்கி திரும்பிய கனிமொழி அவரை பாசத்துடன் ஆரத் தழுவி நன்றி தெரிவித்தார். அவர் முதுகில் ஆதரவாக ஸ்டாலின் தட்டினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22265680.ece?homepage=true

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஊழல் காரணமாக தமிழ் இனமே கருவருக்கபட்டு அழிந்தது தி மு கா என்ற கட்சி காங்கிரச்சின் ஏவலாளி ஆகியது .

  • தொடங்கியவர்

1,76,000,00,00,000 ஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்!

 

 
2gjpg

1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்களுக்கும் கொடுத்திருக்க மாட்டார்கள். ஞாபகம் இருக்கிறது. அநேகமாக, ‘அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல்’ என்று செய்தியைத் தந்த பெரும்பான்மை தேசிய ஊடகங்கள் ‘நாட்டுக்கு இழப்பு: ரூ.1.76 லட்சம் கோடி’ என்று தொகையை எழுத்தில் கொடுப்பதைக் காட்டிலும், எண்ணாகக் கொடுப்பதிலேயே உவகை அடைந்தன. ஏனென்றால், இதற்கு முன் இவ்வளவு பெரிய எண்ணை ஊடகங்கள் கையாண்டதில்லை.

அறிவியலாளர்கள், கணிதவியலாளர்கள்போல எண்களின் உலகத்துக்குள் சஞ்சரித்திருப்பவர்கள் அல்ல ஊடகவியலாளர்கள். தவிர, இந்தியச் சூழலில் லஞ்சம், ஊழலை வெளிக்கொணர்வதும் விவாதிப்பதும் ஊடகவியலாளர்களுக்கு அவ்வளவு இலகுவான சமாச்சாரமும் அல்ல. அது உயிர் விளையாட்டு. ஆட்சியாளர்களிடம் எல்லையற்ற அதிகாரம் இருக்கிறது. வாசல் வழியாகவும் வரலாம்; கொல்லைப்புறம் வழியாகவும் வரலாம் ஆபத்து. ஊடகவியலாளர் எந்த மிரட்டலுக்கும் அசையாதவர் என்றால், அமித் ஷா பாணியில் செய்தியை வெளியிடுவதற்கே நீதிமன்றத்தின் துணையுடன் சட்டபூர்வத் தடை வாங்கிவிடலாம். இவை எல்லாவற்றிலிருந்தும் விதிவிலக்கான, அரிதான விவகாரம் இது.

அலைக்கற்றை என்ற வார்த்தையையே நாட்டின் பெரும்பான்மை மக்கள் அப்போதுதான் முதல் முறையாகக் கேள்விப்பட்டனர். ‘இது சரி - தவறு’ என்று விவாதிக்கப் பலருக்கும் புரிபடாத விஷயம். தொகையைக் குறிப்பிட்டிருப்பதோ தலைமைக் கணக்காயர் அறிக்கை. தலைமைக் கணக்காயர் அலுவலகமானது, ஒரு தன்னாட்சி அமைப்பு. அரசியலமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்டது. ஆக, இந்த எண்ணை உச்சரிக்க, அதாவது இந்த எண்ணை ஊழல் தொகை என்று சொல்லவும் நிரூபிக்கவும் ஊடகங்கள் மெனக்கெட வேண்டியது இல்லை. சட்டரீதியிலான நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் இருக்கிறது. ஒரு ‘கட்டுக்குள் வளர்ந்த பிள்ளை’யான இந்திய ஊடகங்களுக்கு அலைக்கற்றை விவகாரத்தில் இருந்த ‘பாதுகாப்பான விளையாட்டு’ அளப்பரிய கிளுகிளுப்பையும் பரவசத்தையும் கொடுத்தது.

இந்திய ஜனநாயகத்தை மேம்படுத்தவும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் (2005) தகவல் உரிமைச் சட்டத்தை மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்திருந்தது. விளைவாக, சின்னதும் பெரிதுமாக நிறைய முறைகேடுகள் ஆதாரத்துடன் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்திய வாய்கள் அப்போதுதான் ஊழலைப் பொதுவெளியில் தயக்கமின்றிப் பேசவும் ஆரம்பித்திருந்தன. இந்தப் பின்னணியில்தான் அது நிகழ்ந்தது. எண்களை விசாரணையின்றிப் பயன்படுத்துவது ஒரு நாட்டின் அரசியலையும் வரலாற்றையும் எப்படியெல்லாம் மாற்றியமைக்கும் என்பது தொடர்பில் எந்தப் பிரக்ஞையும் இல்லாமலேயே பெரும்பான்மையோர் அதைக் கையாண்டனர் (உணர்ச்சிவசப்பட்டு எழுதியவர்களில் நானும் ஒருவன்; பின்னாளில் திருந்தியவன்).

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு, தொலைத்தொடர்புத் துறையை ஆ.ராசா கையாண்ட விதம், ராசாவை வழக்கிலிருந்து விடுவிக்கும் இப்போதைய தீர்ப்பு… இவை எல்லாவற்றைக் காட்டிலும் இந்த வழக்கு இந்தியச் சமூகத்திலும் அரசியலிலும் எப்படியான மாற்றங்களை உண்டாக்கியிருக்கிறது; அது ஏற்படுத்தியிருக்கும் மோசமான ஒரு விளைவுக்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது என்பதே நாம் பிரதான கவனம் அளிக்க வேண்டிய விஷயம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இந்தத் தீர்ப்பு வருவதற்குப் பல காலம் முன்னரே ‘1,76,000,00,00,000’ என்ற எண் பல்லிளித்துவிட்டது. நம்முடைய அமைப்பும் மனமும் எவ்வளவு பெரிய ஓட்டைகளை வைத்திருக்கிறது என்பதைக் காட்டிவிட்டது!

 

ஊதிப் பெருக்கப்பட்ட எண்!

இந்த மாய எண்ணின் சூத்திரதாரியான தலைமைக் கணக்காயர் வினோத் ராய் தன்னுடைய அறிக்கையில், ‘2008 இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு’ என்று குறிப்பிட்ட தொகையிலேயே நான்கு விதமான அனுமானங்கள் இருந்தன. ரூ.67,364 கோடி, ரூ.57,666 கோடி, ரூ. 69,626 கோடி, ரூ.1.76 லட்சம் கோடி என்று நான்கு அனுமானத் தொகைகளை அவர் தெரிவித்திருந்தார். அதேபோல, மத்தியப் புலனாய்வு அமைப்பின் அறிக்கை, ‘ரூ.35,000 கோடி இழப்பு’ என்றது. அதற்கு முன்பாக விசாரித்த மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு, ‘ரூ.22,000 கோடி’ என்றது. ஆக, இழப்பு மதிப்பு என்று ஒன்றுக்கு ஒன்று முரணாக ஏகப்பட்ட எண்கள்.

இதில் ‘இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு’ என்ற அனுமானத்துக்கான அடிப்படையாக வினோத் ராய் முன்வைத்தது, 2010-ல் மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை ஏலத்தின்போது அரசுக்குக் கிடைத்த ரூ. 1 லட்சம் கோடி தொகையுடனான ஒப்பீடு! ஏனென்றால், 2008-ல் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டின்போது அரசுக்கு ரூ.10,772 கோடி மட்டுமே கிடைத்தது; அது மிகக் குறைவானது என்றார் வினோத் ராய். இந்த அடிப்படையிலேயே ஆ.ராசா அமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட 122 உரிமங்களையும் ரத்துசெய்துவிட்டு, ஏலம் நடத்த 2012-ல் உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம். லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இந்த ஏலம் போகும் என்று பேசியவர்களை எனக்குத் தெரியும். அரசாங்கம் ரூ.40,000 கோடி இலக்கு நிர்ணயித்தது. ஆனால், ரூ.9407 கோடிக்கு மட்டுமே ஏலம் போனது. ஆக, ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என்பது ஊதிப்பெருக்கப்பட்ட குற்றச்சாட்டு என்பது அப்போதே அப்பட்டமாகிவிட்டது.

பின்னாளில் இதுகுறித்து ஒப்புதல் வாக்குமூலமும் அளித்தார் வினோத் ராய். “நிச்சயமாக, ரூ.1.76 லட்சம் கோடி என்பது மிகைப்படுத்தப்பட்ட மதிப்புதான். அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பரபரப்புக்குள்ளாக்க வேண்டும் என்பது நோக்கம் இல்லை. ஆனால், இந்த விஷயத்தின் மீது கவனத்தை உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்று தனது சுயசரிதையில் எழுதினார். மேலும், “அவ்வளவு பெரிய தொகை என்பதாலேயே பொதுக் கணக்குக் குழு அதை விவாதிப்பதற்கு எடுத்துக்கொண்டது” என்றும் ஒரு பேட்டியில் சொன்னார். அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் போலவே, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டிலும் இப்படி மிகைப்படுத்தப்பட்ட அனுமானங்களைச் சொல்லியிருக்கிறார் வினோத் ராய். நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் முதலில், ‘ரூ.10.7 லட்சம் கோடி இழப்பு’ என்றவர் பிறகு ‘ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு’ என்றார்.

அடிப்படையில், நாட்டின் தலைமைக் கணக்காயர் என்ற பதவியை, கணக்காயம் எனும் அமைப்பையே கேலிக்கூத்தாக்கிவிட்டார் வினோத் ராய். அதன் மீதான நம்பகத்தன்மையை நாசமாக்கிவிட்டார். அவரால் விளைந்த ஒரே நன்மை என்றால், நம்பகத்தன்மை மிக்க ஒரு அதிகாரப் பீடத்தில் அமர்ந்துகொண்டு ஒருவர் சொன்னால், - அவர் என்ன சொன்னாலும் - அதைக் கேட்டுக்கொள்ளும் சூழலில்தான் இந்நாட்டின் அத்தனை அமைப்புகளும் இருக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டிருப்பது மட்டும்தான்! இது எத்தகைய விளைவை உண்டாக்கியிருக்கிறது என்பதை எவரும் எண்ணிப் பார்ப்பதாகத் தெரியவில்லை.

 

எல்லா நீதிகளையும் வீட்டுக்கு

அனுப்பிய ஊழல் விவாதம்!

உண்மையில், சமகால இந்திய அரசியலின் உரையாடல் போக்கையே வினோத் ராயின் மாய எண் பெரிய அளவில் மாற்றியமைத்துவிட்டது. சமூக நீதி, மதச்சார்பின்மை, விளிம்புநிலை மக்களின் பிரதிநிதித்துவம் இப்படிக் கடந்த நூறாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் அரங்கின் பிரதான தளத்துக்கு மேலேறிவந்த எல்லா ஜனநாயக விழுமியங்களையும் வினோத் ராயின் மாய எண் பின்னுக்குத் தள்ளிவிட்டது. இந்திய அரசியல் விவாத களத்தின் ஆக முக்கியமான கதையாடலாக ஊழலை அது உருவாக்கியது. அரசியலை அளவிடுவதற்கான உச்ச மதிப்பீட்டுக் கருவியாக ஊழலை அது கட்டமைத்தது.

விளைவாக, இந்நாட்டின் ஜனநாயகத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் பல சக்திகள் பின்தள்ளப்பட்டன. புதிய அரசியல் அலைக்கற்றை ஒன்று உருவானது. ‘ஊழல் ஒழிப்பு’ என்ற பெயரில் உருவெடுத்த அந்த அலைக்கற்றையானது தூய்மைவாதத்தோடும் தேசியத்தோடும் தன்னைப் பிணைத்துக்கொண்டது. தேசியத்தின் வண்ணத்தில் ஊழல் எதிர்ப்பைப் பேசும், ஊழல் எதிர்ப்பின் பெயரால் எல்லாவற்றையும் நியாயப்படுத்தும் புதிய தேசியவாதிகளை மையம் நோக்கி அது நகர்த்தியது. ஒரு அண்ணா ஹசாரே அதன் துணை விளைவு, ஒரு அர்விந்த் கெஜ்ரிவால் அதன் துணை விளைவு, ஒரு பாபா ராம்தேவ் அதன் துணை விளைவு, ஒரு மோடி அதன் துணை விளைவு!

இந்தப் புதிய அரசியல் அலைக்கற்றையானது ஊழலை முன்னிறுத்தி ஏனைய எல்லா நியாயங்களையும் அழித்ததோடு, கடைசியில் அது எதை நியாயமாகப் பேசியதோ அந்த ஊழல் எதிர்ப்பிலும் ஓட்டை போட்டதுதான் மாய எண் ஏற்படுத்திய உச்ச சேதாரம்!

சில மாதங்களுக்கு முன்பு தமிழின் முன்னணிப் புலனாய்வு வார இதழ்களில் ஒன்றான ‘நக்கீரன்’ பத்திரிகையின் ஆசிரியர் கோபாலுடன் ஊடகங்களின் சமகாலப் போக்கு தொடர்பாகப் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன ஒரு விஷயம் இந்தக் கட்டுரையோடு பொருந்தக் கூடியது என்று நினைக்கிறேன். “முன்பெல்லாம் புலனாய்வு இதழ்களில் உள்ளூர் அளவில் அடிக்கடி லஞ்சம், ஊழல்களை அம்பலப்படுத்தும் செய்திகளைக் காண முடியும். இப்போது அந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டதே என்ன காரணம்?” என்று கேட்டேன். நாடு முழுக்கவுமே இப்படி ஒரு போக்கு இருக்கிறது என்றவர் அதை விளக்கினார். “லஞ்ச ஊழல் விஷயங்களை ரொம்ப சிரமப்பட்டுதான் வெளிக்கொண்டு வர்றோம். ஆனா, அதுக்கு உரிய கவனம் இன்னைக்கு மக்கள் மத்தியில இல்லை. முன்னாடிலாம் ஒரு பத்தாயிரம் ரூபா ஒருத்தர் லஞ்சம் வாங்கிட்டார்னு செய்தி போட்டாக்கூட அவ்வளவு பரபரப்பா பேசுவாங்க. நடவடிக்கை இருக்கும். படிக்குறவங்க நம்ம வேலை பண்ணுற இடத்துல இப்படித் தப்பு நடந்தாலும் அதை வெளியே கொண்டுவரணும்னு தோணுதுங்கன்னு சொல்லிப் பேசுவாங்க. இப்போ அதெல்லாமே மாறிட்டு. ஒரு அதிகாரி கோடி ரூபாயை லஞ்சமா வாங்குறார்னு படத்தோடு போட்டாலும் அதுக்கு எந்தக் கவனமும் இல்லை. இதெல்லாம் ஒரு காசா, குத்தமான்னு ஒரு மனோபாவம் உருவாகிடுச்சு. ஒரு அமைப்புக்குள்ள இருக்குற ஆட்கள் தப்பைப் பொறுத்துக்க முடியாம தகவல் கொடுக்குறப்போதான் பத்திரிகைகள் உள்ளே நுழையுறோம். இப்போ அதுவே குறைஞ்சுடுச்சு!”

நேற்றைக்கு ஆயிரம் லஞ்சங்களுக்கே பதற்றமான மக்களுக்கு ஏன் கோடி ஊழல்கள் இன்று சாதாரணம் ஆகிவிட்டன? நாடு செழித்து, சாமானியர்கள் கைகளிலும் கோடிகள் மலிந்துவிட்டதா?

வெவ்வேறு தருணங்களில் நானே பலர் இதைச் சொல்லக் கேட்டிருக்கிறேன், “ஏன் சார், ஒண்ணேமுக்கா லட்சம் கோடிக்கு முன்னாடி இதெல்லாம் ஒரு விஷயமா?”

ஆம், அலைக்கற்றை விவகாரம் ஊழல் விஷயத்தில் பொதுபுத்தியைக் கூர்மையாக்கவில்லை; மழுங்கடித்துவிட்டது. அலைக்கற்றை விவகாரம் பற்றியெரிந்த நாட்களில் என்னுடைய சகா ஒருவர் சொன்னார், “பொதுவாக, நம் நாட்டில் ஒரு திட்டத்தில் லஞ்சம், ஊழலுக்கான சாத்தியம் என்பது 10% முதல் 30% வரை. அப்படியென்றால், இங்கே ஊழல் நடந்ததாகக் கொண்டாலும், அதிகபட்சம் எவ்வளவு பணம் கை மாறியிருக்கும்? அதிகபட்சம் சில ஆயிரம் கோடிகள்! ஆனால், ரூ.1.76 லட்சம் கோடி என்று திரும்பத் திரும்ப உச்சரிப்பதன் வாயிலாக, நாளைக்கு ரூ.10,000 கோடியை ஒருவர் லஞ்சமாகப் பெற்றார் என்றால்கூட அதை ஒரு விஷயமாக மக்கள் கருத முடியாத சூழலை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம்!”

அப்படித்தான் ஆகிவிட்டது. இந்திய அரசியல் வர்க்கமானது வினோத் ராய் அனுமானமாக ‘இழப்பு’ என்று குறிப்பிட்ட ரூ.1.76 லட்சம் கோடியை ‘ஊழல்’ என்று மொழிபெயர்த்து, மக்கள் மனதில் வெற்றிகரமாக அதைப் பதித்தும்விட்டது. இன்று ஒரு லட்சம் கோடியை ஒரு அரசியல்வாதியோ அதிகாரியோ பணமாக வாங்கி கையும் களவுமாகப் பிடிபட்டாலும் மக்களுக்கு அது பெரிய விஷயம் அல்ல. சாத்தியமே இல்லாத ஒரு மாய எண்ணின் பெயரால் ஊழலுக்கான சொரணையையே மக்களிடம் மழுங்கடித்துவிட்டோம். ஜனநாயகத்தின் நான்கு தூண்களுக்கும் இதில் பங்கிருக்கிறது. ஊழல் நடந்ததா, இல்லையா; குற்றம் நிரூபிக்கப்பட்டதா, இல்லையா என்பதல்ல; ஒரு மாய எண்ணிடம் ஒரு தேசமே தோற்றுவிட்டது என்பதுதான் பிரதான பிரச்சினை!

- சமஸ்,

தொடர்புக்கு:samas@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/opinion/columns/article22264511.ece

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பெருமாள் said:

இந்த ஊழல் காரணமாக தமிழ் இனமே கருவருக்கபட்டு அழிந்தது தி மு கா என்ற கட்சி காங்கிரச்சின் ஏவலாளி ஆகியது .

 

இன்று பெரும்பாலானவர்கள் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். அதனால் எவரிடமும் எங்கேயும் ஈரமில்லை , தூற்றல்கள் பற்றி கிஞ்சித்தும் அலட்டிக் கொள்வதில்லை.....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நவீனன் said:

1,76,000,00,00,000 ஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்!

தோற்கடித்தது மட்டும் அல்ல ஒரு இனத்தையே அழித்த எண்ணும் அதுதான் . இந்த தி மு கா  போரை நிப்பாட்டுவதுக்கு என்று போய் டெல்லியில் சோனியாவின் காலில் விழுந்து அழுவது கனியை  இந்த பிரச்னையில் இருந்து மாட்டாமல் விடும்படி மட்டுமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.