Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஷாருக், அமிதாப், ஏ.ஆர்.ரகுமான் வருகையால் களைகட்டிய 'விருஷ்கா' வரவேற்பு (புகைப்படத் தொகுப்பு)

Featured Replies

இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர் கயான் சேனாநாயக்கவை திருமண விருந்துபசாரத்திற்கு அழைத்த கோலி

 

 
 

இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர் கயான் சேனாநாயக்கவை திருமண விருந்துபசாரத்திற்கு விராட் கோலி அழைத்துள்ளர்.

DSCKYuaVoAAxqIv.jpg

மும்பையில் நேற்று நடைபெற்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்று வாழ்த்தினர்.

DSCMrCgXkAAPu1C.jpg

கடந்த 21ம் திகதி புதுமண தம்பதியினர் இந்தியா திரும்பினர். அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதைத்தொடர்ந்து, டெல்லி தாஜ் ஹோட்டலில் விராட் கோலி – அனுஷ்கா ஜோடியின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இருவீட்டாரின் உறவினர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

DSCMrCpXkAEMpFk.jpg

இந்நிலையில், மும்பையில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் நேற்று மற்றொரு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

DSCMrCgX0AE2A9X.jpg

இதில், இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர் கயான் சேனாநாயக்க மற்றும் அனில் கும்ப்ளே, சுனில் கவாஸ்கர், வீரேந்தர் சேவாக், உமேஷ் யாதவ்,குல்தீப் யாதவ், செடேஷ்வர் புஜாரா, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா, சந்தீப் படேல், ரவிச்சந்திரன் அஸ்வின், சாய்னா நேவால் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், பிரபல இசையமைப்பாளர் மற்றும் ஷாருக் கான், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன், ரேகா, கங்கனா ரனாவத், கரன் ஜோகர் உள்பட பாலிவுட் பிரபலங்கள் இந்த விருந்தில் பங்கேற்று புதுமண தம்பதியரை வாழ்த்தினர்.

http://www.virakesari.lk/article/28659

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இலங்கை ரசிகரையும் அழைத்த கோலி; மகிழ்ச்சிப் பெருக்கில் தென்னிலங்கை!

 

இலங்கை ரசிகரையும் அழைத்த கோலி; மகிழ்ச்சிப் பெருக்கில் தென்னிலங்கை!

இந்திய துடுப்பாட்ட அணியின் தலைவர் விராட் கோலி தனது திருமண வரவேற்பு நிகழ்வுக்கு இலங்கையிலுள்ள தனது தீவிர ரசிகர் ஒருவரை அழைத்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியுள்ளது.

கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதியினரின் திருமண வரவேற்பு நிகழ்வு மும்பையிலுள்ள st regis astor ballroom நட்சத்திர விடுதியில் நடைபெற்றுள்ளது. இதில் கோலியின் தீவிர ரசிகரான கயன் சேனநாயக்க எனும் இலங்கையருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இலங்கை ரசிகரையும் அழைத்த கோலி; மகிழ்ச்சிப் பெருக்கில் தென்னிலங்கை!

நடிக நடிகைகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட மிகப்பெரும் பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் கயன் சேன நாயக்கவும் கலந்துகொண்டமை தென்னிலங்கை மக்களால் பெருமையாகப் பார்க்கப்படுவதாக சமூக வலைத்தளங்களிலிருந்து அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

மும்பை சென்ற கயன், இந்தியாவின் பிரபல துடுப்பாட்ட வீரர்களான சச்சின், பும்ரா, ஜடேஜா உள்ளிட்ட பலருடனும், கோலி மற்றும் அனுஷ்கா சர்மாவுடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்த நிலையில் இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிவரும் நிலையிலேயே கயன் தற்பொழுது தென்னிலங்கை மக்களின் பேசுபொருளாக மாறியுள்ளார்.

இலங்கை ரசிகரையும் அழைத்த கோலி; மகிழ்ச்சிப் பெருக்கில் தென்னிலங்கை!

இலங்கை ரசிகரையும் அழைத்த கோலி; மகிழ்ச்சிப் பெருக்கில் தென்னிலங்கை!

https://news.ibctamil.com/ta/internal-affairs/Virat-Kohli-invited-Sri-Lankan-fan

  • தொடங்கியவர்

ஷாருக், அமிதாப், ஏ.ஆர்.ரகுமான் வருகையால் களைகட்டிய 'விருஷ்கா' வரவேற்பு (புகைப்படத் தொகுப்பு)

अनुष्का और विराट कोहलीபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இத்தாலியில் திருமணம், பனிபொழியும் மலையில் தேன் நிலவு, புதுடெல்லியில் திருமண வரவேற்பு நிகழ்வு என்று விராட் கோலி - அனுஷ்கா திருமண கொண்டாட்டங்கள் நேற்றோடு மும்பையில் முடிவுக்கு வந்துள்ளன.

நேற்று மும்பையில் நடைபெற்ற விராட் கோலி - அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்வின் இனிமையாக தருணங்களை புகைப்படத் தொகுப்பாக வழங்குகிறோம்.

विराट कोहली और अनुष्का शर्माபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

மும்பையில் நடைபெற்ற விருஷ்கா வரவேற்பு நிகழ்வின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வந்தது. ட்விட்டரில் #Viruska's_reception என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டானது.

अमिताभ बच्चनபடத்தின் காப்புரிமைTWITTER/AMITABH BACHCHAN

விராட் கோலி - அனுஷ்கா வரவேற்பு நிகழ்வில் குடும்பத்தாருடன் கலந்துகொண்ட அமிதாப் பச்சன் ட்விட்டரில் சில புகைப்படங்களை பதிவேற்றியிருந்தார்.

अमिताभ और अनुष्काபடத்தின் காப்புரிமைTWITTER/AMITACHBACHCHAN

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, மனைவி சாக்‌ஷி மற்றும் மகள் ஜிவாயுடன் வரவேற்பு நிகழ்விற்கு வந்திருந்தார்.

धोनीபடத்தின் காப்புரிமைTWITTER

பாலிவுட்டில் அனுஷ்காவுடன் நடித்த ரன்பீர் கபூரும் வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

कोहली और अनुष्काபடத்தின் காப்புரிமைINSTAGRAM/VIRAT.KOHLI.S

அனுஷ்கா ஷர்மா பாலிவுட்டில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றதற்கு ஷாருக் கான் ஒரு முக்கிய காரணம். அவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த ரப் நே பானாதி ஜோடி என்ற திரைப்படம் பாலிவுட்டில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. விருஷ்கா திருமண வரவேற்புக்கு பாலிவுட்டின் கிங் கானும் வந்திருந்தார்.

विराट कोहली, शाहरुख खान और अनुष्का शर्माபடத்தின் காப்புரிமைSHAHRUKH KHAN/TWITTER
कंगना रनोटபடத்தின் காப்புரிமைINSTAGRAM/VIRAT.KOHLI.S

 

http://www.bbc.com/tamil/india-42490657

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

கோலி - அனுஷ்கா மும்பை திருமண வரவேற்பு: குவிந்த பிரபலங்கள்! (புகைப்படங்கள்)

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, நவீனன் said:
AGES

TWITTER

பாலிவுட்டில் அனுஷ்காவுடன் நடித்த ரன்பீர் கபூரும் வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

कोहली और अनुष्का.S

 

 

மனதுக்கு ஆறுதலான செய்தி 
இப்பிடியே ஒவொன்றாய் தூக்கி கொண்டு போனால் 
நாம் எப்போது கரை சேருவது 

எப்பவும் ஒரு வில்லன் புகுந்தால்தான் 
பிரிவு வரும் 
எமக்கும் ஒரு வழி பிறக்கும். 

  • தொடங்கியவர்

பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்ட கோலி, அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த இவர் யார்?

 

 
26165246_2071400563093930_3822623756840503695_n

 

டிசம்பர் 26 அன்று மும்பையில் நடைபெற்ற கோலி, அனுஷ்காவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு கிரிக்கெட் மற்றும் திரையுலக பிரபலங்கள் எனப் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ரசிகர் ஒருவருக்கும் அழைப்பு சென்றிருந்தது.

டிசம்பர் 21 தில்லியில் நடைபெற்ற இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில் இந்த ஜோடி கிரிக்கெட் மற்றும் திரையுலக பிரபலங்களுக்காக தங்களது இரண்டாவது வரவேற்பு நிகழ்ச்சியைக் கடந்த செவ்வாய்க் கிழமை மும்பையில் கொண்டாடினர். இதில் கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள் எனப் பலரும் பங்கு பெற்றனர். அந்தப் படங்கள் யாவும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

இந்நிலையில் நிகழ்விற்கு வந்த மாற்றுத் திறனாளி ஒருவருடன் அனுஷ்கா ஷர்மாவும், விராட் கோலியும் செல்ஃபி எடுத்துக் கொள்வதை போன்ற ஒரு புகைப்படமும் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டது. பலருக்கும் யார் இந்த நபர் என்கிற கேள்வி மனதில் எழுந்திருக்கும். அவரது பெயர் கயன் சேனநாயக், மாற்றுத் திறனாளியான இலங்கையைச் சேர்ந்த இவர் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர். இலங்கை அணி எங்கு விளையாடச் சென்றாலும் அந்த இடத்திற்கே நேரில் சென்று அவர்களை ஊக்கப்படுத்துவார்.

gayan_and_sachin.jpg

2007-ம் ஆண்டு அண்டர்-19 உலகக் கோப்பை போட்டியில் முதல் முதலில் கோலியை சந்தித்த இவர், அவரது ஆட்டத்தைப் பார்த்து கோலி வெறியராகவே மாறி உள்ளார். கடந்த 10 ஆண்டுகளாகக் கோலியுடன் நெருங்கிய தொடர்பையும் இவர் வைத்துள்ளார். சமீபத்தில் நடந்த இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையேயான போட்டிக்காக இந்தியா வந்திருந்த இவரைத் தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளார் விராட் கோலி.

“விராட் கோலி ஒரு சிறந்த விளையாட்டு வீரர் மட்டுமல்ல ஒரு நல்ல கேப்டனும் கூட” என்று கயல் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார். கொண்டாட்டத்தில் பங்கு பெற்ற கயல் சச்சின், ஜடேஜா, பும்ரா, அஸ்வின் உள்ளிட்ட பலருடனும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளார். விராட் கோலிக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் அதிலும் குறிப்பாக இந்தியாவில் இருக்கும் கோலி வெறியர்களுக்கு மத்தியில், அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கு பெற்று அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இலங்கையைச் சேர்ந்த கயலுக்குக் கிடைத்துள்ளது.
 

26000877_2071812633052723_66210212093812

 

26168302_2071515889749064_80647564303998

 

25660060_2071812609719392_58473503040137

 

gayan-mos-3_122717024031.jpg

http://www.dinamani.com/sports/sports-news/2017/dec/28/virat-kohli-invited-his-super-fan-gayan-senanayake-to-reception-2834574.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.