Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொலி­ஸா­ரின் துன்­பு­றுத்­தலால் குமு­றும் துன்­னாலைவாசி­கள்!!

Featured Replies

    • பொலி­ஸா­ரின் துன்­பு­றுத்­தலால் குமு­றும் துன்­னாலைவாசி­கள்!!
    பொலி­ஸா­ரின் துன்­பு­றுத்­தலால் குமு­றும் துன்­னாலைவாசி­கள்!!
     
     

    பொலி­ஸா­ரின் துன்­பு­றுத்­தலால் குமு­றும் துன்­னாலைவாசி­கள்!!

     

    பொலி­ஸா­ரின் துப்­பாக்­கிச்­சூட்­டில் இளை­ஞர் உயி­ரி­ழந்­த­தன் பின்­னர் துன்­னா­லைப் பகு­தி­யில் ஏற்­பட்ட பதற்­றம் கார­ண­மாக, பொலி­ஸார் ஆரம்­பித்த கைது­ வேட்­டை­யும், அடா­வ­டித்­த­ன­மும் இன்­ன­மும் தொடர்­வ­தாக அந்­தப் பகுதி மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர். நான்கு மாதங்­கள் கடந்­துள்ள நிலை­யி­லும், இப்­போ­தும் பொலி­ஸார் ஆள்­க­ளைத் தேடி வந்து தம்­மைத் துன்­பு­றுத்­து­கின்­ற­னர் என்று மக்­கள் குற்­றம் சுமத்­து­கின்­ற­னர்.

    ‘‘பொலி­ஸா­ரின் அத்­து­மீ­றல் தொடர்­பில் முறைப்­பாடு ஏதும் இது­வ­ரை­யில் கிடைக்­க­ வில்லை. மக்­கள் பயப்­ப­டத் தேவை­
    யில்லை. எந்­தத் தயக்­க­மும் இன்றி எனது அலு­வ­ல­கத்­தில் முறைப்­பா­டு­களை முன்­வைக்க முடி­யும். முறைப்­பாடு செய்­யப்­பட்­டால், பொலி­ஸார் மீது பார­பட்­சம் இன்றி விசா­ர­ணை­கள் மேற்­கொள்­ளப்­ப­டும்’’ என்று நெல்­லி­யடி பொலிஸ் பிரி­வுக்­குப் பொறுப்­பான காங்­கே­சன்­துறை உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் பிரி­யந்த தெரி­வித்­தார்.

    கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி பொலி­ஸா­ரின் துப்­பாக்­கிச் சூட்­டில் துன்­னா­லை­யைச் சேர்ந்த இளை­ஞர் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். இதை­ய­டுத்து பொலிஸ் வாக­னங்­கள், பொலிஸ் காவ­ல­ரண்­கள், மீது தாக்­கு­தல் அந்­தக் கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர்­கள் என்று கரு­தப்­ப­டும் கும்­ப­லால் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. இந்­தச் சம்­ப­வங்­க­ளு­டன் தொடர்­பு­டைய குற்­றச்­சாட்­டில் பலர் கைது செய்­யப்­பட்­டி­ருந்­த­னர். பல­ரைப் பொலி­ஸார் தேடி வந்­த­னர்.

    சந்­தே­க­ந­பர்­க­ளைக் கைது செய்­கின்­றோம் எனத் தெரி­வித்து துன்­னா­லைப் பகு­தி­யைச் சுற்­றி­வ­ளைத்து பொலி­ஸார் பல தட­வை­கள் தேடு­தல் நடத்­தி­னர். இத­னால் மக்­க­ளின் இயல்­பு­வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டது. நிலமை கட்­டு­மீ­றி­யதை அடுத்து அரச தலை­வர் மட்­டம் வரை­யில் இந்த விட­யம் எடுத்­துச் செல்­லப்­பட்­டது. இதன் பின்­னர் பொலி­ஸார் சற்று ஓய்ந்­தி­ருந்­த­னர் என்று கிராம மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

    ‘‘கொஞ்­சக் கால­மாக பொலி­ஸா­ரின் செயற்­பா­டு­கள் ஓய்ந்­தி­ருந்­தன. இப்­போது மீண்­டும் பொலி­ஸார் அத்­து­மீ­றத் தொடங்கி விட்­டார்­கள். இரவு நேரங்­க­ளில் வீடு­க­ளுக்­குள் நுழை­கின்­றார்­கள். சப்­பாத்­துக் கால்­க­ளால் பட­லை­க­ளை­யும் வீட்­டுக் கத­வு­க­ளை­யும் உதைந்து உடைக்­கி­றார்­கள். வேலி­க­ளைப் பிடுங்கி எறி­கின்­றார்­கள். பெண்­க­ளு­டன் அநா­க­ரி­க­மாக நடந்­து­கொள்­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு எதி­ராக முறை­யிட்­டால், அதற்­குப் பழி­வாங்­கும் வகை­யில் முறை­யிட்­வர் மீது தேவை­யற்ற குற்­றச்­சாட்­டுக்­களை அடுக்­கு­கின்­றார்­கள். துப்­பாக்­கிச்­சூட்­டு­டன் தொடர்­பு­டைய சந்­தே­கத்­தில் கைது செய்­யப்­பட்ட பொலி­ஸார்­கூ­டப் பிணை­யில் வெளி­வந்து விட்­டார்­கள். ஆனால் எங்­களை நிம்­ம­தி­யாக வாழ விடு­கின்­றார்­கள் இல்லை. அச்­சத்­து­ட­னேயே வாழ­வேண்­டிய நிலை­யில் இருக்­கின்­றோம்’’ என்று மக்­கள் உத­யன் பத்­தி­ரி­கை­யி­டம் தெரி­வித்­த­னர்.

    தொந்­த­ரவு கொடுக்­கும் பொலி­ஸார் தொடர்­பில் முறை­யிட்­டால் நிச்­ச­யம் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் பிரி­யந்த உத­யன் பத்­தி­ரி­கை­யி­டம் உறு­திப்­ப­டுத்­தி­னார்.

 

http://newuthayan.com/story/58900.html

  • கருத்துக்கள உறவுகள்

பொலிசாருடன் தனிப்பட்ட ரீதியில் மோதிக்கொண்டால் எந்த நாட்டிலுமே தொடர்ந்து நிம்மதியை கெடுப்பார்கள், அதிலும் வட அமெரிக்க நாடுகள் என்றால் மறுபேச்சே இல்லை உடனேயே பெரும்பாலும் சுட்டு கொன்றுவிடுகிறார்கள், அல்லது நீதிமன்றம்போய் காவல்துறைமீது குற்றம் என்று நிரூபித்தாலும்கூட ஏதோ ஒரு வகையில் பின் தொடர்வார்கள், எங்குபோனாலும் ஒரு காரணம் சொல்லி லைற்றை போடுவார்கள்.

எனக்கு தனிப்பட தெரிந்த இருவர் சிலவருஷங்களுக்கு முன்னர் காவல்துறையோடு நேரடியாகமோதி கைதாகி நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தபின்னும் இன்றுவரை  ஏதோ ஒரு வகையில் காவல்துறையால் பின் தொடரபடுகிறார்கள்!

அதில் ஒருவர் வாகனம் திருத்துபவர்  அவரின் கராஜ்ஜுக்குள் இன்னொரு தமிழரின் மூலம் கைதுப்பாக்கி ஒன்றை கொண்டுபோய் வைக்க அவர்கள் எடுத்த முயற்சி பலபேருடன் பழகும் அவருக்கு தெரியவர ஓடிபோய் காவல்துறை காலிலேயே விழுந்து தான் ஒரு பயந்தவன் கோழை என்று பகிரங்கமா ஒப்புக்கொண்டபின்னரே நிம்மதியாய் திரிய விட்டார்கள்!

இதெல்லாம் சொல்வது இலங்கை பொலிஸும் சர்வதேச தரத்தில் என்ற அர்த்ததில் அல்ல, 

எந்தவித பாதுகாப்புமே இல்லாமல் வாழும் எமதுமக்கள் சிங்கள காவல்துறை இயந்திரத்துடன் முட்டிக்கொள்ளாதீர்கள், எமக்காக பேச யாருமே வரமாட்டார்கள்!    ஏனென்றால் எமது சமூகத்திலேயே உள்ள சில அரசியல் தலைமைகள், செல்வாக்குள்ள மனிதர்கள்,பொறுப்பற்ற எமது இளைஞர்கள் என்று எம்மவர்களே பலர் இலங்கை காவல்துறை பக்கம்தான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, valavan said:

எந்தவித பாதுகாப்புமே இல்லாமல் வாழும் எமதுமக்கள் சிங்கள காவல்துறை இயந்திரத்துடன் முட்டிக்கொள்ளாதீர்கள், எமக்காக பேச யாருமே வரமாட்டார்கள்!    ஏனென்றால் எமது சமூகத்திலேயே உள்ள சில அரசியல் தலைமைகள், செல்வாக்குள்ள மனிதர்கள்,பொறுப்பற்ற எமது இளைஞர்கள் என்று எம்மவர்களே பலர் இலங்கை காவல்துறை பக்கம்தான்!

இந்த கோழைத்தனத்தனமும் இனவிடுதலைக்கு வித்திட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

இந்த கோழைத்தனத்தனமும் இனவிடுதலைக்கு வித்திட்டது.

நீங்கள் சொல்வது சரி, ஆனால் அந்த கோழைத்தனத்தை தூக்கியெறிந்து மானத்துடன் வாழவைக்க, இன்னொரு பிரபாகரன் பிறக்கபோவதுமில்லை, இன்னொரு புலிகள் இயக்கம் தோன்றப்போவதுமில்லை!

இப்போது இருப்பவர்கள் எல்லாம் தமிழர்களுக்கு ஒரு பிரச்சனையென்றால் சிங்களவனை எதிர்ப்பவர்கள்  அல்ல, தனக்கு ஒரு பிரச்சனையென்றால் சிங்களவனுடன் சேர்பவர்களே! அந்த அர்த்ததில் பதிவிடப்பட்டதே என் கருத்து, வேறொன்றும் அல்ல!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.