Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பங்களாதேஷ், ஸிம்பாப்வே, மற்றும் இலங்கை கலந்துகொள்ளும் முக்கோண ஒருநாள் போட்டி செய்திகள்

Featured Replies

                                  பங்களாதேஷ், ஸிம்பாப்வே, மற்றும்  இலங்கை கலந்துகொள்ளும் முக்கோண ஒருநாள் போட்டி செய்திகள்

 

முக்கோண ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி பங்களாதேஷ் மற்றும் ஸிம்பாப்வே ஆகிய நாடுகளை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்தப் போட்டிகள், எதிர்வரும் 15ஆம் திகதி திங்களன்று ஆரம்பமாகின்றன. இறுதிப் போட்டி எதிர்வரும் 27ஆம் திகதி நடைபெறும்.

 

1. திங்கள்கிழமை 15.1.2018

   பங்களாதேஷ் vs ஸிம்பாப்வே

  Shere Bangla National Stadium, Mirpur

  பகல் இரவு போட்டி

  மத்திய ஐரோப்பிய நேரம் 7.00

 

2. புதன்கிழமை 17.1.2018

   இலங்கை vs  ஸிம்பாப்வே

  Shere Bangla National Stadium, Mirpur

  பகல் இரவு போட்டி

  மத்திய ஐரோப்பிய நேரம் 7.00

 

3. வெள்ளிக்கிழமை 19.1.2018

   பங்களாதேஷ் vs இலங்கை

  Shere Bangla National Stadium, Mirpur

  பகல் இரவு போட்டி

  மத்திய ஐரோப்பிய நேரம் 7.00

 

4. ஞாயிற்றுகிழமை 21.1.2018

    இலங்கை vs  ஸிம்பாப்வே

   Shere Bangla National Stadium, Mirpur

   பகல் இரவு போட்டி

   மத்திய ஐரோப்பிய நேரம் 7.00

 

5. செவ்வாய்க்கிழமை 23.1.2018

   பங்களாதேஷ் vs ஸிம்பாப்வே

   Shere Bangla National Stadium, Mirpur

  பகல் இரவு போட்டி

  மத்திய ஐரோப்பிய நேரம் 7.00

 

6. வியாழன் 25.1.2018

    பங்களாதேஷ் vs இலங்கை

   Shere Bangla National Stadium, Mirpur

   பகல் இரவு போட்டி

   மத்திய ஐரோப்பிய நேரம் 7.00

 

7. சனிக்கிழமை 27.1.2018

    இறுதி போட்டி

    Shere Bangla National Stadium, Mirpur

    பகல் இரவு போட்டி

    மத்திய ஐரோப்பிய நேரம் 7.00

  

http://www.espncricinfo.com

 

 

  • தொடங்கியவர்

 

9.png&h=42&w=42

5/2 *
 
  • தொடங்கியவர்

இலங்கை - சிம்பாப்வே - பங்களாதேஷ் முக்கோணத் தொடர் அரம்பம்

 

 

இலங்கை, சிம்­பாப்வே, பங்­க­ளாதேஷ் ஆகிய அணிகள் மோதும் ஒருநாள் முக்­கோணத் தொடர் இன்று பங்­க­ளா­தேஷில் ஆரம்­ப­மா­கியது.

sri-lanka.jpg

இந்தத் தொடரில் இன்று நடை­பெ­ற­வுள்ள முத­லா­வது போட்­டியில் போட்­டியை நடத்தும் பங்­க­ளாதேஷ் மற்றும் சிம்­பாப்வே ஆகிய அணிகள் மோது­கின்­றன.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சிம்பாப்வே அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 42 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இம்­மூன்று அணி­க­ளுக்கும் 2018ஆம் ஆண்டின் முத­லா­வது தொடர் இது என்­பது விசேட அம்­ச­மாகும். அது­மட்­டு­மன்றி இலங்கை -மற்றும் பங்­க­ளாதேஷ் ஆகிய அணி­க­ளுக்கு இது முக்­கி­ய­மான போட்டித் தொடராகும்.

அது­மட்­டு­மன்றி இலங்கை அணியின் தலைமைப் பயிற்­சி­யாளர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்­க­வுக்கு இந்தத் தொடர் மிக மிக முக்­கி­ய­மா­ன­தாகும். 

காரணம் பங்­க­ளா­தேஷின் முன்னாள் பயிற்­சி­யாளர் என்ற ரீதியில் இலங்கை அணியை பொறுப்­பேற்ற பின் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க எதிர்­கொள்ளும் முத­லா­வது தொடரும் இது­வென்­ப­துதான்.

அது­மட்­டு­மன்றி கடந்த ஆண்டு சிம்­பாப்வே மற்றும் பங்­க­ளாதேஷ் ஆகிய இவ்­விரு அணி­களும் இலங்கை அணியை இலங்கை மண்ணில் வைத்தே வீழ்த்­தி­யி­ருந்­தன.

அதனால் அந்தத் தோல்­வி­க­ளுக்கு பதி­லடி கொடுக்க இந்தத் தொடரை பயன்­ப­டுத்தும் இலங்கை.

அதே­வேளை சிம்­பாப்வே அணிக்­கெ­தி­ராக இலங்­கையில் நடை­பெற்ற தொடரில் அடைந்த தோல்­விக்குப் பின்­னரே அஞ்­சலோ மெத்­தியூஸ் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்தார்.

அதேபோல் மீண்டும் தலைவர் பத­வியை ஏற்று சிம்­பாப்­வே­வு­டனேயே மோதப்­போ­வதால் போட்டித் தொடர் கடும் சவா­லாக அமைய வாய்ப்­புள்­ளது.

இதே­நேரம் பங்­க­ளா­தேஷும் தங்கள் நாட்டில் தொடரை இழக்க விரும்­பாது. அதனால் அவர்­களும் மற்றைய இரு அணி­க­ளுக்கும் கடும் நெருக்­கடி கொடுப்­பார்கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

பொறுத்­தி­ருந்து பார்ப்போம் முக்­கோணத் தொடரை வெல்­லப்­போ­வது யார் என்று. 

 

இலங்கை அணி விவரம்,

அஞ்­சலோ மெத்­தியூஸ், உபுல் தரங்க, தனுஷ்க குண­தி­லக, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்­திமால், குசல் ஜனித் பெரேரா, திஸர பெரேரா, அசேல குண­ரத்ன, நிரோஷன் டிக்­வெல்ல, சுரங்க லக்மால், நுவான் பிரதீப், துஷ்மந்த சாமிர, ஷெஹான் மதுசங்க, அகில தனஞ்சய, சந்தகன், வனிது ஹசரங்க ஆகியோர் 16 பேர் கொண்ட இலங்கை குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

http://www.virakesari.lk/article/29410

  • தொடங்கியவர்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை எளிதில் வீழ்த்தியது வங்காள தேசம்

 
அ+

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை எளிதில் வீழ்த்தியது வங்காள தேசம். #BANvZIM #TriSeries #tamimIqbal

 
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: ஜிம்பாப்வேயை எளிதில் வீழ்த்தியது வங்காள தேசம்
 
வங்காள தேசத்தில் வங்காள தேசம், இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது.

டாக்காவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வங்காள தேசம் - ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காள தேசம் பீல்டிங் தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களாக மசகட்சா, மிர் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் ஓவரை சாஹிப் அல் ஹசன் வீசினார். இந்த ஓவரில் மிர் மற்றும் எர்வின் ரன் கணக்கை துவக்காமல் ஆட்டமிழந்தனர்.

201801151808497146_1_tamimiqbal001-s._L_styvpf.jpg

5-வது வீரராக களம் இறங்கிய சிகந்தர் ராசா 52 ரன்னும், விக்கெட் கீப்பர் டெய்லர் 24 ரன்னும், மூர் 33 ரன்களும் எடுக்க ஜிம்பாப்வே 49 ஓவரில் 170 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வங்காள தேச அணியில் சாஹிப் அல் ஹசன் 3 விக்கெட்டும், முஷ்டாபிஜூர் ரஹ்மான், ருபெல் ஹொசைன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காள தேசம் களம் இறங்கியது. தொடக்க வீரர் தமிம் இக்பால் அவுட்டாகாமல் 84 ரன்கள் எடுக்க வங்காள தேசம் 28.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அனாமுல் ஹக்யூ 19 ரன்னும், சாஹிப் அல் ஹசன் 37 ரன்களும் எடுத்தனர். #BANvZIM #TriSeries #tamimIqbal #Shakib

http://www.maalaimalar.com/News/Sports/2018/01/15180850/1140393/BANvZIM-Tri-Series-ODI-Bangladesh-beats-zimbabwe-by.vpf

  • தொடங்கியவர்

முக்கோணத் தொடரின் முதல் போட்டியில் புதிய மாற்றங்களுடன் இலங்கை

Preview for Sri Lanka v ZImbabwe
 

இலங்கை கிரிக்கெட்  அணிக்கு கடந்த ஆண்டு (2017) எப்படியாவது மறக்கடிக்கப்பட வேண்டிய ஒரு மோசமான கனவு போன்று அமைந்திருந்தது. முக்கிய வீரர்களின் உபாதைகள், தொடர் தோல்விகள், அடிக்கடி இடம்பெற்ற அணித் தலைவர்களின் மாற்றம் என்பன இலங்கை அணியை வெகுவாகப் பாதித்திருந்தது.

 

இப்படியான நிலையில் காணப்பட்ட இலங்கை கிரிக்கெட்டை  சீரமைக்கும் நோக்கோடு பங்களாதேஷ் அணியின்கிங் மேக்கர்”  என கிரிக்கெட் வல்லுனர்களால் குறிப்பிடப்படும் சந்திக்க ஹதுருசிங்க டிசம்பர் மாத இறுதியில் இலங்கை அணியின் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். அவரது ஆளுகையில் புதிய அணித் தலைவரோடு புதுப் பொலிவுடனான இலங்கை அணி  பங்களாதேஷுக்கு இந்த புத்தாண்டில் முதலாவது சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கின்றது.

இந்த சுற்றுப் பயணத்தில் முதற்கட்டமாக பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பங்குபெறும் முக்கோண ஒரு நாள் தொடரில் இலங்கை பங்கேற்கின்றது.  அந்த வகையில் இலங்கை வீரர்கள் விளையாடும் முதல் ஒரு நாள் போட்டி நாளை (17) ஜிம்பாப்வே அணியுடன் டாக்கா நகரில் ஆரம்பமாகின்றது.   

இலங்கைஜிம்பாப்வே ஒரு நாள் போட்டிகள் வரலாறு

இரண்டு அணிகளும் இதுவரையில் 55 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருப்பதோடு அதில் 43  வெற்றிகளை இலங்கை சுவீகரிக்க, ஜிம்பாப்வே அணியினால் 10 வெற்றிகளுக்கே சொந்தக்காரர்களாக மாற முடிந்திருந்தது. இரண்டு போட்டிகள்  முடிவுகள் ஏதுமின்றி கைவிடப்பட்டிருந்தன.  

புள்ளி விபரங்கள் இலங்கை அணியின் ஆதிக்கத்தை காட்டியிருந்த போதிலும் கடந்த ஆண்டு சொந்த மண்ணில் மிகவும் வலிமையாக காணப்படும் இலங்கை அணியுடனான ஒரு நாள் தொடரினை ஜிம்பாப்வே வீரர்கள் முதல் தடவையாக 3-2 எனக் கைப்பற்றி சாதனை புரிந்திருந்தனர். இது இலங்கை வீரர்களுக்கு எதிரணியை குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது என்பதனை உணர்த்துகின்றது.  

இலங்கை அணி

கடந்த ஆண்டில் 29 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருந்த இலங்கை அணியினர் அவற்றில் 5 போட்டிகளில் மாத்திரமே வெற்றியடைந்திருந்தனர். அதோடு கடந்த ஆண்டில் கிரிக்கெட் வரலாற்றில் குறித்த ஆண்டு ஒன்றில் அதிக தோல்விகள் அடைந்த அணிகள் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டு மோசமான சாதனையினை நிலைநாட்டியிருந்தது. இவையனைத்தினையும் மாற்றக்கூடிய ஒரு சந்தர்ப்பம் இலங்கை அணிக்கு இந்த புதிய வருடத்தில் கிடைத்திருகின்றது.

 

நடைபெறப்போகும் இந்த முக்கோண ஒரு நாள் தொடரில் இலங்கையின் ஒரு நாள் மற்றும் T-20 போட்டிகளில் தலைவர் பதவியிலிருந்த திசர பெரேரா அதிலிருந்து நீக்கப்பட்டு, அஞ்செலோ மெதிவ்ஸ் இலங்கை அணியின் தலைமைப் பொறுப்பினை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மீண்டும் எடுத்துக் கொண்டிருக்கின்றார்.

Mathews-1-300x200.jpg அஞ்சலோ மெதிவ்ஸ்

மத்திய வரிசை துடுப்பாட்டத்தினை பலப்படுத்தும் ஆற்றல் கொண்ட மெதிவ்ஸ் பந்து வீச்சிலும் இலங்கை அணியினை சமநிலைப்படுத்தும் வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. மெதிவ்ஸ் அடிக்கடி உபாதைகளினை எதிர்கொள்ளும் வீரர் என்பதனால் இத்தொடரின் ஆரம்பப் போட்டிகளில் அவர் பந்துவீசுவது கடினம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பின்னர் வரும் போட்டிகளில் அவர் சகலதுறைகளிலும் இலங்கை அணியை வலுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை அணியின் அண்மைய ஒரு நாள் தொடரில் அணிக்குள் உள்வாங்கப்படாது போயிருந்த குசல் மெண்டிஸ் மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோரும் இந்த சுற்றுப் பயணத்தில் அணிக்குள் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர். 2016 ஆம் ஆண்டு இலங்கை சார்பாக ஒரு நாள் போட்டிகளில் 59.63 என்கிற சராசரியோடு அதிக ஓட்டங்கள் (656) குவித்த வீரரான சந்திமால் கடந்த ஆண்டில் அப்படியாக பிரகாசிக்கத் தவறியிருந்தார்.

 

இதனால் ஒரு நாள் அணியிலிருந்து நீக்கப்பட்ட சந்திமாலுக்கு இத்தொடர் இலங்கையின் ஒரு நாள் அணியில் நிரந்தர இடம் ஒன்றினை பிடிக்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மெண்டிசும் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கை அணியில் இருந்து சதீர சமரவிக்ரம மற்றும் லஹிரு திரிமான்ன ஆகியோருக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டிருக்கின்றது.

Chandimal-5-300x200.jpg தினேஷ் சந்திமால்

இலங்கை அணிக்கு துடுப்பாட இருக்கக்கூடிய ஏனைய வீரர்களில் முக்கியமானவர் உபுல் தரங்க ஆவார். கடந்த ஆண்டில் ஒரு நாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் (1011) பெற்ற வீரர்களில் மூன்றாம் இடத்தில் காணப்படும் தரங்க இலங்கை அணியில் காணப்படும் அதிக அனுபவமிக்க வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dickwella-4-300x200.jpg நிரோஷன் திக்வெல்ல

இன்னும் ஜிம்பாப்வே அணியுடன் சென்ற வருடம் இடம்பெற்ற ஒரு நாள் தொடரில் இரண்டு சதங்களை விளாசிய நிரோஷன் திக்வெல்லவும் அணிக்கு துடுப்பாட்டத்தில் பலம் சேர்க்கக்கூடிய மற்றொரு வீரர் ஆவார். அதிரடி துடுப்பாட்ட வீரரான திக்வெல்ல ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக 2017ஆம் ஆண்டில் மொத்தமாக 826 ஓட்டங்களினை குவித்திருந்தார்.

இவர்களோடு சேர்த்து சகலதுறை வீரர்களான அசேல குணரத்ன, தனுஷ்க குணத்திலக்க மற்றும் குசல் ஜனித் பெரேரா போன்றோரும் இலங்கைக்கு துடுப்பாட்டத்தில் வலுச்சேர்க்க எதிர்பார்க்க முடியும்.

Madusanka-300x200.jpg ஷெஹான் மதுசங்க

பந்துவீச்சினை பொறுத்தமட்டில் இலங்கை அணி, மணிக்கு 140 கிலோமீட்டருக்கு மேலான வேகத்தில் பந்தினை வீசும் ஆற்றல் கொண்ட இளம் வீரர் ஷெஹான் மதுசங்கவினை இந்த முக்கோண ஒரு நாள் தொடரில் அறிமுகம் செய்கின்றது. மதுசங்கவோடு இணைந்து சிரேஷ்ட வீரர்களான சுரங்க லக்மால் மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சுத்துறையை முன்னெடுக்கவுள்ளனர்.

அதோடு சுழல்பந்து வீச்சாளர்களாக அகில தனன்ஞய மற்றும் லக்ஷான் சந்தகன் மற்றும் வனிது ஹஸரங்க ஆகியோர் இலங்கை அணிக்கு சேவை வழங்கவிருக்கின்றனர்.

 

 

இத்தொடருக்காக தேர்வு செய்யப்பட்ட அனைத்து இலங்கை வீரர்களும் புதிய பயிற்சியாளர் சந்திக்க ஹத்துருசிங்கவினால் வெள்ளைப்பந்து பயன்படும் போட்டிகளில் விஷேட கவனம் செலுத்தும் நோக்கோடு உள்ளூர் முதல்தரப் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படவில்லை. அதோடு, ஹத்துருசிங்கவின் ஆலோசனைகளுக்கு ஏற்ப அவுஸ்திரேலிய விளையாட்டு உளவியல் நிபுணர் Dr. பில் ஜோன்சியிடம் இருந்தும் அறிவுரைகளையும் பெற்றிருக்கின்றனர்.

இலங்கை குழாம்

அஞ்செலோ மெதிவ்ஸ் (அணித் தலைவர்), உபுல் தரங்க, தனுஷ்க குணத்திலக்க, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, தினேஷ் சந்திமால், அசேல குணரத்ன, நிரோஷன் திக்வெல்ல, சுரங்க லக்மால், நுவான் பிரதீப், துஷ்மந்த சமீர, ஷெஹான் மதுசங்க, அகில தனன்ஞய, லக்ஷான் சந்தகன், வனிது ஹஸரங்க

ஜிம்பாப்வே அணி

இந்த முக்கோண ஒரு நாள் தொடரின் முதல் போட்டி நேற்று பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையில் நடைபெற்றிருந்தது. இப்போட்டியில் பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டம் ஆகிய இரண்டு துறைகளிலும் எந்தவித போராட்டத்தினையும் ஜிம்பாப்வே வீரர்கள் காட்டாத காரணத்தினால் பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுக்களால் போட்டியின் வெற்றியாளர்களாக இலகுவாக மாறியிருந்தனர்.

இந்த போட்டியின் முடிவு ஒரு புறமிருக்க ஜிம்பாப்வே அணி இறுதியாக பங்குபற்றிய ஒரு நாள் தொடரில் இலங்கை அணியை தோற்கடித்த காரணத்தினால், இலங்கையின் பலவீனம் என்ன என்பது பற்றி ஜிம்பாப்வே வீரர்கள் தெளிவாகவே அறிந்து வைத்திருக்க முடியும். எனவே இலங்கை அணிக்கு ஜிம்பாப்வே சவால் தரும் என்பதில் சந்தேகம் கொள்ள முடியாது.

Raza-1-300x200.jpg சிக்கந்தர் ரஷா

ஜிம்பாப்வே அணியின் துடுப்பாட்டத்தினை எடுத்து நோக்கும் போது ஆரம்ப வீரர்களான ஹமில்டன் மசகட்சா மற்றும் சோலமன் மிர் ஆகியோர் அவ்வணிக்கு பெறுமதி தரக்கூடியவர்கள். ஜிம்பாப்வே அணிக்காக இதுவரையில் 179 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் மசகட்சா அதன் மூலம் 5,000 இற்கு மேலான ஓட்டங்களை குவித்த அனுபவம் கொண்ட  ஒருவர்.

அதிரடி வீரரான மிர் இலங்கை அணியுடன் இறுதியாக நடைபெற்று முடிந்த ஒரு நாள் தொடரில் ஜிம்பாப்வேக்காக அதிக ஓட்டங்கள் (211) குவித்தவர்களில் இராண்டாம் இடத்தில் இருக்கின்றார்.

Masakadza-300x200.jpg ஹமில்டன் மசகட்சா

பாகிஸ்தான் வம்சாவளி வீரரான சிக்கந்தர் ரசா ஜிம்பாப்வே அணியின் மத்திய வரிசைக்கு பலம்தரக்கூடிய துடுப்பாட்ட வீரர். பந்தினை மிகவிரைவாக பெளண்டரி எல்லைகளுக்கு விரட்டும் ஆற்றல் கொண்ட ரசா, பங்களாதேஷ் அணியுடனான இந்த முக்கோண ஒரு நாள் தொடரின் ஆரம்பப் போட்டியிலும் பல அழுத்தங்களுக்கு மத்தியில் அரைச்சதம் (52) ஒன்றினை விளாசியிருந்தார்.  

இவரோடு அனுபவம் கொண்ட விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான பிரன்டன் டைலரும் அணிக்கு திரும்பியிருக்கின்றார். இங்கிலாந்தின் கவுண்டி போட்டிகளில் விளையாடுவதற்காக கிட்டத்தட்ட  மூன்று வருடங்கள் தேசிய அணியில் இருந்து ஓய்வெடுத்துக்கொண்ட டைலர் ஜிம்பாப்வே அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் இதுவரையில் 8 சதங்கள் மற்றும் 32 அரைச் சதங்கள் என்பவற்றுடன் மொத்தமாக 5,282 ஓட்டங்களை குவித்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Taylor-AFP-300x200.jpg பிரன்டன் டைலர் @AFP

மறுமுனையில் ஜிம்பாப்வே அணியின் பந்து வீச்சை நோக்கும் போது அவர்கள் சுழல்பந்துவீச்சாளர்களான அணித் தலைவர் கிரேம் கிரீமர், (பகுதிநேர சுழல்வீரர்) சிக்கந்தர் ரசா ஆகியோரை எதிர்பார்க்க வேண்டி இருக்கின்றது.

தற்போது ஜிம்பாப்வே அணியில் இருக்கும் பந்து வீச்சாளர்களில் கிரீமரே அதிக ஒரு நாள் விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரராக உள்ளார். அணியின் வேகப்பந்து வீச்சுத்துறைக்கு தென்டாய் சட்டாரா, கிரிஸ் பொபு மற்றும் கைல் ஜார்விஸ் ஆகியோர் வலுச்சேர்ப்பார்கள் என நம்பப்படுகின்றது.

 

ஜிம்பாப்வே குழாம்  

ஹமில்டன் மசகட்சா, சோலமன் மிர், கிரைக் இர்வின், பிரன்டன் டைலர், சிக்கந்தர் ரசா, பீட்டர் மூர், மால்கோம் வால்லர், கிரேம் கிரமர் (அணித் தலைவர்), றயான் முர்ரே, தெண்டாய் சிசோரோ, பிரன்டன் மவுடா, பிளெஸ்ஸிங் முசர்பானி, கிரிஸ் பொபு, தென்டாய் சட்டாரா, கைல் ஜார்விஸ்

பங்களதேஷின் அதிக குளிர் காலநிலையை கருதி இந்த முக்கோண ஒரு நாள் தொடரின்  அனைத்துப் போட்டிகளும் அந்நாட்டு நேரப்படி நண்பகல் 12 மணிக்கு ஆரம்பாகும்.

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

பங்களாதேஷ் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடர்: ஸிம்பாப்வேயை இன்று இலங்கை எதிர்த்தாடுகிறது

angelo-lmathews.jpgசர்­வ­தேச கிரிக்கெட் அரங்கில் ஒரு வரு­டத்­துக்கும் மேலாக மேடு, பள்­ளங்­களை சந்­தித்து வந்த இலங்கை, இவ் வருடம் புதிய பயிற்­றுநர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க, சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் மீண்டும் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஏஞ்­சலோ மெத்யூஸ் ஆகி­யோரின் கீழ் மீள் எழுச்­சியை நோக்கி நகரும் பிர­யத்­த­னத்தில் இறங்­க­வுள்­ளது.

பங்­க­ளா­தேஷில் நடை­பெற்­று­வரும் மும்­முனை ஒருநாள் சர்­வ­தேச கிரிக்கெட் தொடரில் பங்­கு­பற்றும் இலங்கை, டாக்­காவில் இன்று நடை­பெ­ற­வுள்ள இரண்­டா­வது போட்­டியில் ஸிம்­பாப்­வேயை எதிர்த்­தா­ட­வுள்­ளது.

ஸிம்­பாப்­வேக்கு எதி­ராக கடந்த வருடம் ஜூலை மாதம் அடைந்த 2 க்கு 3 என்ற தோல்­வியை நிவர்த்தி செய்யும் வகையில் இப் போட்­டியை இலங்கை எதிர்­கொள்­ள­வுள்­ளது.

சில வெற்­றி­க­ளு­டனுன் படு தோல்­வி­க­ளையும் கடந்த வருடம் சர்­வ­தேச அரங்கில் சந்­தித்த இலங்­கையை வெற்­றிப்­பா­தைக்கு இட்டுச் செல்லும் சவாலை ஏற்­ப­தாக சில தினங்­க­ளுக்கு முன்னர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க தெரி­வித்தார்.

பங்­க­ளா­தேஷின் முன்னாள் பயிற்­று­ந­ரான ஹத்­து­ரு­சிங்க, அதே நாட்­டுக்கு எதி­ரான தொடரில் இலங்கை அணியின் பயிற்­று­ந­ராக தனது பணியை ஆரம்­பித்­துள்ளார்.

GraemeCremer.jpg“கிரிக்கெட் அரங்கில் இலங்கை அணி பல விட­யங்­களில் முன்­னே­ற­வேண்டும். எனினும் இலங்கை அணி­யினால் திருப்­பத்தை ஏற்­ப­டுத்த முடியம் என நம்­பு­கின்றேன்” என்றார்.

“எனது அணி வீரர்­க­ளிடம் உள்ள திற­மை­யை­யிட்டு நான் மகிழ்ச்சி அடை­கின்றேன்” எனவும் 49 வய­தான ஹத்­து­ரு­சிங்க குறிப்­பிட்டார்.

பங்­க­ளா­தே­ஷிடம் திங்­க­ளன்று 8 விக்­கெட்­களால் தோல்வி அடைந்த ஸிம்­பாப்­வேயை இலங்கை இன்று எதிர்த்­தா­டு­கின்­றது.
எந்த நாட்­டு­ட­னான தொடரில் தோல்வி அடைந்­த­வுடன் தனது அணித் தலைவர் பத­வியைத் துறந்­தாரோ அதே அணி­யு­ட­னான போட்­டியில் மீண்டும் தலை­வ­ராக ஏஞ்­சலோ மெத்யூஸ் விளை­யா­ட­வுள்ளார்.

ஸிம்­பாப்­வே­யு­ட­னான தோல்­வியை மறந்து அதனை நிவர்த்தி செய்யும் வகையில் இன்­றைய போட்­டியில் வெற்­றி­பெற முயற்­சிப்­ப­தாக மெத்யூஸ் தெரி­வித்தார்.

இன்­றைய போட்­டியில் தனுஷ்க குண­தி­லக்க, உபுல் தரங்க, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்­திமால், ஏஞ்­சலோ மெத்யூஸ் (அணித் தலைவர்), நிரோஷன் திக்­வெல்ல, குசல் பெரேரா, அசேல குண­ரட்ன அல்­லது திசர பெரேரா, சுரங்க லக்மால், அக்­கில தனஞ்­செய, நுவன் பிரதீப் ஆகியோர் விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கை குழாத்தில் துஷ்மன்த சமீர, வனிந்த ஹசரங்க, ஷெஹான் மதுஷன்க, லக்ஷான் சந்தகேன் ஆகியோரும் இடம்பெறுகின்றனர்.

http://metronews.lk/?p=20187

  • தொடங்கியவர்

களத்தடுப்பில் ஈடுபடப்போகிறதாம் இலங்கை

 

 

சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத்தீர்மானித்துள்ளது.

sri-lanka-zimbabwe--tri-series.jpg

இலங்கை - பங்­க­ளாதேஷ் – சிம்­பாப்வே ஆகிய மூன்று நாடுகள் விளை­யாடும் ஒருநாள் முக்­கோணத் தொடர் பங்களாதேஷில் இடம்பெற்று வருகின்றுது.

இத் தொடரின் 2 போட்டி சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் டாக்காவில் இன்று பகலிரவுப் போட்டியாக இடம்பெறவுள்ளது.

இப் போட்டியின் முதலாவது போட்டியில் பங்களாதேஷ் அணி சிம்பாப்வே அணியை 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2 ஆவது போட்டி இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணி விவரம்,

உபுல் தரங்க, குசல் ஜனித் பெரேரா, தினேஷ் சந்­திமால், அஞ்­சலோ மெத்­தியூஸ், , குசல் மெண்டிஸ், அசேல குண­ரத்ன, திஸர பெரேரா, அகில தனஞ்சய, சுரங்க லக்மால், வனிது ஹசரங்க , துஷ்மந்த சாமிர ஆகியோர் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றனர்.

http://www.virakesari.lk/article/29511

  • தொடங்கியவர்

 

9.png&h=42&w=42

290/6 * (50 ov)
 
  • தொடங்கியவர்

முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது ஜிம்பாப்வே

 

வங்காள தேசத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்றைய ஆட்டத்தில் இலங்கையை ஜிம்பாப்வே 12 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #ZIMvSL

 
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது ஜிம்பாப்வே
 
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தியது ஜிம்பாப்வே
Tri Nation Cricket zimbabwe beats sri lanka

வங்காள தேசத்தில் வங்காள தேசம், இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை - ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே 6 விக்கெட் இழப்பிற்கு 290 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் மசகட்சா 73 ரன்னும், சிகந்தர் ரசா அவுட்டாகாமல் 81 ரன்னும் எடுத்தனர்.

201801172012160313_1_thisaraperera-s._L_styvpf.jpg

பின்னர் 291 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை களம் இறங்கியது. தொடக்க வீரர் குசால் பெரேரா 80 ரன்களும், கேப்டன் மேத்யூஸ் 42 ரன்னும், திசாரா பேரேரா 37 பந்தில் 64 ரன்களும் எடுத்தனர்.

இருந்தாலும் ஜிம்பாப்வே அணியின் நேர்த்தியான பந்து வீச்சால் இலங்கை அணி 48.1 ஓவரில் 278 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஜிம்பாப்வே அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #ZIMvSL

http://www.maalaimalar.com/News/Sports/2018/01/17201216/1140744/Tri-Nation-Cricket-zimbabwe-beats-sri-lanka.vpf

  • தொடங்கியவர்

தொடரிலிருந்து விலகினார் மெத்யூஸ் - அணித்தலைமையில் மீண்டும் மாற்றம்

 

பங்களாதேஷில் இடம்பெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று வெள்ளிக்கிழமை பங்களாதேஸ் மற்றும் ஸ்ரீலங்கா அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டிக்கான ஸ்ரீலங்கா அணிக்கு டினேஷ் சந்திமல் தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா  அணித்தலைவராக மீண்டும் பதவியேற்ற அஞ்சலோ மெத்தியூஸ், காயம் காரணமாக இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து டினேஷ் சந்திமல் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, அஞ்சலோ மெத்தியூஸுக்கு பதிலாக நிரோஷன் டிக்வெல அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ், சிம்பாபே மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய அணிகள் இந்த முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்று விளையாடிவருகிறது.

இந்த தொடரில் பங்களாதேஸ் மற்றும் சிம்பாபே அணிகள் தலா ஒவ்வொரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், ஸ்ரீலங்கா அணிக்கு இன்று இடம்பெறவுள்ள இந்த போட்டி மிக முக்கியமானதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடரிலிருந்து விலகினார் மெத்யூஸ் - அணித்தலைமையில் மீண்டும் மாற்றம்

https://news.ibctamil.com/ta/cricket/another-change-in-srilankan-catptaincy

  • தொடங்கியவர்

 

துரத்தும் தோல்வி!

 

முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது போட்டியிலும் இலங்கை அணி தோல்வியைச் சந்தித்துள்ளது.

7_Cricket.JPG

பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில், சற்று முன் நிறைவடைந்த அந்நாட்டு அணியுடனான போட்டியில் இலங்கை அணி மூன்று விக்கட்கள் மற்றும் 163 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாடக் களமிறங்கியது. ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தில் இறங்கிய பங்களாதேஷ் வீரர்கள், ஐம்பது ஓவர் முடிவில் ஏழு விக்கட்களை மட்டுமே இழந்து 320 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

அவ்வணியின் அனுபவமிக்க வீரர்களான தமீம் இக்பால் (84), ஷகீப் அல் ஹஸன் (67), விக்கட் காப்பாளரான முஷ்பிக்குர் ரஹீம் (62) நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். 

பின்வரிசை வீரர்களும் தம் பங்குக்கு ஓட்டங்களைச் சேகரிக்க, மொத்த எண்ணிக்கை 320 ஆக உயர்ந்தனர்.

சிறிபாத இலக்கை நோக்கிக் களமிறங்கிய இலங்கை அணியின் குசல் பெரேரா, மூன்று பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 1 ஓட்டத்துடன், நஸீல் ஹொஸைனின் துல்லியமான பந்துவீச்சில் விக்கட்டைப் பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்தடுத்து வந்த வீரர்களும் பத்துக்கும் இருபதுக்கும் ஆட்டமிழந்து தோல்வியை உறுதிசெய்தனர்.

அணித் தலைவர் தினேஷ் சந்திமால் 28 ஓட்டங்களையும் அதிக பட்சமாக 29 ஓட்டங்களை திஸர பெரேராவும் பெற்றனர்.

துடுப்பாட்டத்தில் மட்டுமன்றி, பந்துவீச்சிலும் திறமை காட்டிய ஷகீப் அல் ஹஸன், 47 ஓட்டங்களுக்கு 3 விக்கட்களைப் பறித்தார்.

வெறும் 32.2 ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்த இலங்கை அணி 157 ஓட்டங்களை மட்டுமே பெற்று, சுற்றுப் போட்டியின் இரண்டாவது தொடர் தோல்வியையும் அடைந்தது.

http://www.virakesari.lk/article/29657

  • தொடங்கியவர்

சகீப் அல் ஹஸனின் சகலதுறை ஆட்டத்தினால் இலங்கைக்கு படுதோல்வி

shakib-1-696x464.jpg
 

பங்களாதேஷில் நடைபெற்று வரும் முக்கோண ஒரு நாள் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதிய மூன்றாவது போட்டியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 163 ஓட்டங்களால் இலங்கையை அபாரமாக வீழ்த்தியுள்ளது.  

டாக்கா நகரின் மிர்பூரில் ஆரம்பமாகியிருந்த இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் மஷ்ரபி மொர்தஸா முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார்.

 

அஞ்செலோ மெதிவ்ஸ் தொடை உபாதைக்கு உள்ளாகிய காரணத்தினால் இலங்கை அணியினை தினேஷ் சந்திமால் இப்போட்டியில் வழிநடாத்தியிருந்ததோடு மெதிவ்சுக்குப் பதிலாக நிரோஷன் திக்வெல்ல அணிக்குள் சேர்க்கப்பட்டிருந்தார். அதேபோன்று, இன்னுமொரு மாற்றமாக வேகப்பந்து வீச்சாளரான துஷ்மந்த சமீரவின் இடத்தினை நுவான் பிரதீப் ஈடு செய்திருந்தார்.

இத்தொடரில் புதன்கிழமை நடைபெற்ற தம்முடைய முதல் போட்டியில் ஜிம்பாப்வே (19) அணியிடம் 12 ஓட்டங்களால் தோல்வியினை தழுவிய இலங்கை அணி முதல் வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் மைதான சொந்தக்காரர்களினை எதிர்கொள்ள தயாராகியிருந்தது.

மறுமுனையில் இத்தொடரினை இலகுவான வெற்றி ஒன்றுடன் ஆரம்பித்த பங்களாதேஷ் அணியும் நல்ல முடிவு ஒன்றினை எதிர்பார்த்து தமது துடுப்பாட்டத்தினை நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக ஆரம்பித்தது.

போட்டியின் முதல் ஓவரிலேயே இலங்கை அணிக்கு பங்களாதேஷ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான அனாமுல் ஹக்கின் விக்கெட்டினை கைப்பற்றும் சந்தர்ப்பம் கிட்டியது. எனினும் அந்த வாய்ப்பு தவறவிடப்பட அனமுல் ஹக் ஏனைய ஆரம்ப வீரர் தமிம் இக்பாலுடன் இணைந்து சிறப்பான துவக்கத்தினை வழங்கினார்.

முதல் விக்கெட்டுக்காக இவ்விரண்டு வீரர்களினாலும் 71 ஓட்டங்கள் பகிரப்பட்டது. பங்களாதேஷ் அணியின் முதல் விக்கெட்டினை திசர பெரேரா வீழ்த்தினார். முதல் விக்கெட்டாக அனாமுல் ஹக் 35  ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு நடந்தார். எனினும் தமிம் இக்பால் தன்னுடைய 40ஆவது ஒரு நாள் அரைச்சதத்துடன் புதிய துடுப்பாட்ட வீரர் சகீப் அல் ஹஸனுடன் இணைந்து தனது தரப்புக்கு வலுச்சேர்த்தார்.

 

 

இரண்டாம் விக்கெட்டுக்காக நல்லதொரு இணைப்பாட்டம் (99) பகிரப்பட்டிருந்தது. பங்களாதேஷ் அணியின் இரண்டாம் விக்கெட்டாக தமிம் இக்பால் ஆட்டமிழந்திருந்தார். தனது தரப்பை உறுதியான நிலையொன்றுக்கு கொண்டு சென்ற இக்பால் 7 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 84 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிம் இக்பாலின் விக்கெட்டின் போதே 150 ஓட்டங்களினை தாண்டியிருந்த பங்களாதேஷ் அணிக்கு சகீப் அல் ஹஸன் மற்றும் முஸ்பிகுர் ரஹீம் ஆகியோர்  அதிரடி அரைச்சதங்களை குவித்து மேலும் பெறுமதி சேர்த்தனர்.

இவர்களின் அதிரடியோடு 50 ஓவர்கள் நிறைவில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களை இழந்து  320 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் சகீப் அல் ஹஸன் 7 பெளண்டரிகள் அடங்கலாக 63 பந்துகளுக்கு 67  ஓட்டங்களினையும், முஸ்பிகுர் ரஹீம் 52 பந்துகளுக்கு 4 பெளண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 62 ஓட்டங்களினையும் குவித்திருந்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்களான திசர பெரேரா 60 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் நுவான் பிரதீப் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 321 ஓட்டங்களினை 50 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த குசல் ஜனித் பெரேரா மற்றும் உபுல் தரங்க ஆகியோர் எதிர்பார்த்த துவக்கத்தினை தரவில்லை.

 

இவர்களைத் தொடர்ந்து மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரரான குசல் மெண்டிஸ் வெறும் 19 ஓட்டங்களினையே குவித்து ஏமாற்றினார். மெண்டிஸ் இப்போட்டியோடு சேர்த்து அவரது கடந்த ஆறு ஒரு நாள் இன்னிங்சுகளிலும் வெறும் 33 ஓட்டங்களினையே பெற்றிருக்கின்றார்.

இதனையடுத்து வந்த அசேல குணரத்ன, நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் 20 ஓட்டங்களை எடுப்பதற்கும் சிரமத்தை எதிர்கொண்டனர். இலங்கை அணித் தலைவர் தினேஷ் சந்திமால் சாதர்யமான முறையில் செயற்பட்டிருந்த போதிலும் அவரை பங்களாதேஷ் வீரர்கள் இலங்கை அணியின் 5ஆம் விக்கெட்டாக ரன் அவுட் முறையில் ஓய்வறை அனுப்பியது. சந்திமால் 28 ஓட்டங்களினைப் பெற்றிருந்தார்.

இப்படியாக அனைத்து முக்கிய துடுப்பாட்ட வீரர்களும் சொதப்பலாக செயற்பட்ட பின்னர் சிறிது நேரம் திசர பெரேரா வானவேடிக்கை காட்டத் தொடங்கினார். பெரேராவின் விக்கெட்டும் வீழ்த்தப்பட போட்டியில் வெற்றி பெறுவது பங்களாதேஷுக்கு மிகவும் இலகுவாக மாறியது. முடிவில் 32.2  ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த இலங்கை அணியினர் 157 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றுக் கொண்டனர்.

இலங்கையின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக திசர பெரேரா 14 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 3 பெளண்டரிகள் அடங்கலாக 29 ஓட்டங்களினை குவித்திருந்தார்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் ஏற்கனவே துடுப்பாட்டத்தில் பிரகாசித்த சகிப் அல் ஹஸன் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி இப்போட்டியில் தனது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்ததோடு, அணித் தலைவர் மஷ்ரபி மொர்தஸா, ருபெல் ஹஸன் ஆகியோரும் தங்களது பங்குக்கு தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி இலங்கை அணியினை கட்டுப்படுத்தியிருந்தனர்.

இப்போட்டியில் பங்களாதேஷ் அடைந்த வெற்றி ஒரு நாள் போட்டிகளில்  ஓட்ட வித்தியாசத்தில் அவர்களுக்கு (163) கிடைத்த பெரிய வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியின் ஆட்ட நாயகன் விருதினை பங்களாதேஷ் அணியின் சகீப் அல் ஹஸன் தட்டிச்சென்றார்.

இலங்கை கிரிக்கெட் அணி இந்த முக்கோணத் தொடரில் அடுத்ததாக ஜிம்பாப்வே அணியினை ஞாயிற்றுக்கிழமை (21) இதே மைதானத்தில் எதிர்கொள்கின்றது.

 

முடிவு – பங்களாதேஷ் 163 ஓட்டங்களால் வெற்றி

 
 
 
 

http://www.thepapare.com/

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

198 ஓட்டங்களுக்குள் சுருண்டது சிம்பாபே

 

 
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை மற்றும் சிம்பாபே ஆகிய அணிகள் மோதுகின்றன.

இதற்கமைய, நாணயசுழற்சியில் வென்ற சிம்பாபே முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதற்கமைய, களமிறங்கிய அந்த அணி, 44 ஓவர்களிலேயே 198 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இலங்கை அணி சார்பாக நுவன் பிரதீப் 3 விக்கெட்டுக்களை சாய்த்துள்ளார்.

இதற்கமைய இலங்கைக்கு 199 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலகுவான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=99404

  • தொடங்கியவர்

ஹத்துருவின் பயிற்றுவிப்பில் இவ்வாண்டில் முதல் வெற்றியை சுவைத்த இலங்கை

 

 

சிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணி ஐந்து விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.

sri-lanka-cricket.jpg

பங்களாதேஷின் மிர்பூரில் இடம்பெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் மோதின. 

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. 

 

அதன்படி, களமிறங்கிய சிம்பாப்வே அணி, 44 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது.

சிம்பாப்வே அணி சார்பில் டெய்லர் 58 ஓட்டங்களையும் கிரீமர் 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் திஸர பெரேரா 4 விக்கெட்டுகளையும் நுவான் பிரதீப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 199 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலகுவான இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, 44.5 ஓவர்களில், ஐந்து விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 202 ஓட்டங்களைப் பெற்று ஐந்து விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் குசல் ஜனித் பெரேரா 49 ஓட்டங்களையும் திஸர பெரேரா ஆட்டமிழக்காது 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்து வீச்சில் சிம்பாப்வே அணி சார்பில் முஸரபனி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இப் போட்டி இலங்கை அணிக்கு இவ்வாண்டில் பெறப்பட்ட முதலாவது வெற்றி என்பதுடன் புதிய பயிற்றுவிப்பாளராக ஹத்துரு சிங்க பெறுப்பெடுத்த நிலையில் பெறப்பட்ட முதலாவது வெற்றி என்பது முக்கியமானது.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக திஸர பெரேரா தெரிவு செய்யப்பட்டார்.

http://www.virakesari.lk/article/29739

  • தொடங்கியவர்

பெரேரா சகலதுறைகளிலும் அசத்த முக்கோண தொடரில் இலங்கைக்கு முதல் வெற்றி

AP-1-1-696x463.jpg Sri Lanka's Thisara Perera, right, plays a shot, as Zimbabwe's wicketkeeper Brendan Taylor watches during the Tri-Nation one-day international cricket series in Dhaka, Bangladesh, Wednesday, Jan. 17, 2018. (AP Photo/A.M. Ahad)
 

பங்களாதேஷில் நடைபெற்று வரும் முக்கோண ஒரு நாள் தொடரின் நான்காவது போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் ஜிம்பாப்வே அணியினை வீழ்த்தியிருப்பதுடன், தொடரில் முதல் வெற்றியினை பதிவு செய்து இறுதிப் போட்டிக்கான வாய்ப்பினையும் தக்கவைத்துக் கொண்டுள்ளது. 

 

டாக்காவில் தொடங்கிய இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணித் தலைவர் கிரேம் கீரிமர் முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார்.

இந்த முக்கோணத் தொடரில் பங்களாதேஷுடன் வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி படுதோல்வியடைந்திருந்தது. இதன் காரணமாக தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினை உயிர்ப்பாக வைத்திருக்க இலங்கை அணி ஜிம்பாப்வேயுடன் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய சூழ்நிலையில் இந்த மோதலில் களமிறங்கியிருந்தது.

இன்றைய போட்டிக்கான இலங்கை குழாத்துக்கு சினமன் சுழல் வீரர் லக்ஷான் சந்தகன் அழைக்கப்பட வனிது ஹஸரங்கவுக்கு அணியில் இருந்து ஓய்வளிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்து இலங்கை அணிக்கெதிராக தம்முடைய இறுதி ஆறு ஒரு நாள் போட்டிகளிலும் நான்கு வெற்றிகளை சுவீகரித்த ஜிம்பாப்வே அணி  இப்போட்டியிலும் நல்ல முடிவு ஒன்றினை எதிர்பார்த்தவாறு துடுப்பாட்டத்தினை தொடங்கியது.

ஜிம்பாப்வே அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் நிதானம் கலந்த அதிரடியோடு தமது தரப்புக்கு துவக்கம் ஒன்றினை வழங்கியிருந்தனர். எனினும், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான திசர பெரேரா சிறப்பான வியூகங்களுடன் செயற்பட்ட காரணத்தினால் ஜிம்பாப்வே அணியின் ஆரம்ப வீரர்களை பெரிய துடுப்பாட்ட இன்னிங்ஸ் ஒன்றை பெற இயலாதவாறு ஓய்வறை அனுப்பினார்.

 

திசர பெரேரா ஆரம்பத்திலேயே தந்த அழுத்தத்திற்கு லக்ஷான் சந்தகனும் உரம் போட ஜிம்பாப்வே அணி ஒரு கட்டத்தில் 73 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. ஜிம்பாப்வே அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்வரிசை வீரர்களான ஹமில்டன் மசகட்ஷா, சிக்கந்தர் ராசா ஆகிய வீரர்கள் 20 ஓட்டங்களையேனும் தாண்டாது ஓய்வறை நடந்திருந்தனர்.

இப்படியாக தத்தளிப்பில் தவித்த ஜிம்பாப்வே அணியினை மத்திய வரிசை வீரர்களான ப்ரன்டன் டைலர் மற்றும் மால்கோம் வால்லர் ஆகியோர் நான்காம் விக்கெட்டுக்காக சிறந்த இணைப்பாட்டம் (66) ஓன்றினை வழங்கி மீட்டனர்.  டைலர் இதில் தனது 33ஆவது ஒரு நாள் அரைச் சதத்தினை கடந்திருந்தார்.

இவர்கள் இருவரினதும் விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட ஜிம்பாப்வே மீண்டும் சரிவுப்பாதையில் சென்றது. இதனை தடுக்க ஜிம்பாப்வே அணித் தலைவர் கிரேம் கீரிமர் துடுப்பாட்ட ரீதியாக முயற்சி ஒன்றினை எடுத்த போதிலும் அது பலனளிக்காது போனது. முடிவில் ஜிம்பாப்வே அணி 44 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 198 ஓட்டங்களினைப் பெற்றுக் கொண்டது.

ஜிம்பாப்வே அணியின் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக ப்ரன்டன் டைலர் மொத்தமாக 88 பந்துகளுக்கு 6 பெளண்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களை குவித்திருந்ததோடு கீரிமரும் 34 ஓட்டங்களுடன் அணிக்கு வலுச்சேர்த்திருந்தார்.

முன்னேற்றகரமான பந்துவீச்சினை இன்றைய நாளில் வெளிக்காட்டியிருந்த இலங்கை வீரர்களில் திசர பெரேரா 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், நுவான் பிரதீப் 3 விக்கெட்டுக்களையும் லக்ஷான் சந்தகன் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.

 

இதனையடுத்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட 199 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு இலங்கை அணி தமது துடுப்பாட்டத்தினை ஆரம்ப வீரர்களான உபுல் தரங்க, குசல் பெரேரா ஆகியோருடன் துவங்கியது.

இலகு இலக்கு ஒன்றினை எட்டும் இந்தப் பயணத்தில் உபுல் தரங்க வெறும் 17  ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார். எனினும், ஏனைய ஆரம்ப வீரரான குசல் பெரேரா, குசல் மெண்டிசுடன் இணைந்து இரண்டாம் விக்கெட்டுக்காக நல்லதொரு இணைப்பாட்டத்தினை (70) கட்டியெழுப்பி இலக்கை நெருங்க முயற்சி மேற்கொண்டிருந்தார்.

இவர்களது இணைப்பாட்டத்துடன் போட்டியின் ஆதிக்கத்தை இலங்கை எடுத்த நிலையில், இந்த இன்னிங்சின் 22ஆவது ஓவரினை வீசிய வேகப்பந்து வீச்சாளர் ப்ளெஸ்ஸிங் முசாரபனி குசல் பெரேராவின் விக்கெட்டினை கைப்பற்றினார். பெரேரா ஆட்டமிழக்கும் போது 4 பெளண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 49 ஓட்டங்களுடன் அரைச் சதத்தினை தவறவிட்டிருந்தார்.

பெரேராவின் விக்கெட்டினை அடுத்து குறுகிய நேரத்துக்குள் முசராபனி, சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய குசல் மெண்டிசின் விக்கெட்டினையும், புதிய துடுப்பாட்ட வீரராக வந்த நிரோஷன் திக்வெல்லவின் விக்கெட்டினையும் கைப்பற்ற இலங்கை அணி 117 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து பதற்றத்தினை காட்டியிருந்தது. மெண்டிஸ் இப்போட்டியில் 36 ஓட்டங்களை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

துரித கதியிலான இந்த விக்கெட்டுக்கள் காரணமாக இலங்கை அணிக்கு அழுத்தங்கள் அதிகரித்திருந்தது.  இந்த நிலையில் துடுப்பாட வந்த அணித் தலைவர் தினேஷ் சந்திமால் பொறுமையான முறையில் ஓட்டங்கள் சேர்த்தார். சந்திமாலுக்கு அதிரடி துடுப்பாட்ட வீரரான திசர பெரேரா கைகொடுக்க 44.5 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்த இலங்கை அணி 202 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கினை அடைந்தது.

 

இதில் இலங்கை அணியின் வெற்றியினை சிக்ஸர் ஒன்றுடன் உறுதி செய்த திசர பெரேரா 26 பந்துகளுக்கு 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பெளண்டரி அடங்கலாக 39 ஓட்டங்களுடனும், தினேஷ் சந்திமால் 38 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் நின்றிருந்தனர்.

ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சில் இலங்கை அணிக்கு ஒரு கட்டத்தில் அச்சுறுத்தல் தந்த ப்ளெஸ்ஸிங் முசராபனி 52 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருது சகலதுறைகளிலும் அசத்தி இந்த முக்கோண ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பினை இலங்கை அணிக்கு தக்கவைத்துக் கொள்ள உதவிய திசர பெரேராவுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்த சுற்றுத்தொடரில் அடுத்ததாக, பங்களாதேஷ் அணியினை மீண்டும் வரும் 25ஆம் திகதி எதிர்கொள்கின்றது.

ஸ்கோர் விபரம்

 

zimbabwe-inng.png

SL-bow.png

SRI-lanka-inng.pngZIM-bol.png

முடிவு இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

நாடுதிரும்புகிறார் மெத்தியூஸ் : நானே தலைமை தாங்குவேன் என்கிறார் சந்திமல்

 

 

பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் முத்தரப்பு தொடரில் காயமடைந்த இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் நாடு திரும்புகிறார்.

angelo-mathews-dinesh-chandimal.jpg

இந்நிலையில் தற்போது இடம்பெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு தலைமை தாங்கவுள்ளதாக தினேஸ் சந்திமால் தெரிவித்துள்ளார். 

 

குறித்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் இலங்கை அணித் தலைவராக செயற்பட்டுவந்த அஞ்சலோ மெத்தியூஸிற்கு ஏற்பட்ட காயத்தையடுத்து  அவருக்குப் பதிலாக தினேஷ் சந்திமால் தலைவராக செயற்பட்டார். 

 

இந்நிலையில் முத்தரப்பு தொடரின் எஞ்சிய போட்டிகளுக்கு சந்திமல் தானே தலைமை தாங்குவதாக தெரிவித்துள்ளார்.

 

சிம்பாப்வே அணிக்கு எதிராக இடம்பெற்ற நேற்றைய போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/29763

  • தொடங்கியவர்

மெத்தியூஸை அடுத்து குஷலும் நீக்கம்

 

 

 

உபாதை காரணமாக அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் தொடரில் இருந்து விலகிய நிலையில் குஷல் ஜனித் பெரேராவும் உபாதைகாரணமாக வெளியேறியுள்ளார்.

kusal-janith-perera-injury.jpg

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரரான குஷல் ஜனித் பெரேரா கடந்த சிம்பாப்பே அணிக்கெதிரான 2 ஆவது போட்டியில் துடுப்பெடுத்தாடும் போது உபாதையால் பாதிக்கப்பட்டார்.

 

இந்நிலையில் பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் முத்தொடர் ஒருநாள் போட்டியின் அடுத்த போட்டியில் அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் குஷல் ஜனித் பெரேராவுக்குப் பதிலாக துடுப்பாட்ட வீரர் தனஞ்சய டி சில்வா அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

 

இதேவேளை, அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் உபாதை காரணமாக முத்தொடர் ஒருநாள் போட்டியில் இருந்து விலகியுள்ளதுடன் பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரிலிருந்தும் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

ஜிம்பாபே அணி முத்தொடர் போட்டியில் பங்களாதேஸிடம் தோல்வி

 

ஜிம்பாபே அணி முத்தொடர் போட்டியில் பங்களாதேஸிடம் தோல்வி


ஜிம்பாபே அணி பங்களாதேசுடன் நடைபெற்ற முத்தரப்பு போட்டியில் 91 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது.

இலங்கை, ஜிம்பாபே மற்றும் பங்களாதேஸ் அணிகள் மோதும் முத்தொடர் போட்டிகள் பங்களாதேஸ் டாக்கா மைதானத்தில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற 5 ஆவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஸ் மற்றும் ஜிம்பாபே அணிகள் மோதுயுள்ளன.

போட்டியில் முதலில் களமிறங்கிய பங்களாதேஸ் அணி 50 ஒவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 216 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் பங்களாதேஸ் அணி சார்பில் ரமிம் இக்பால் 105 பந்துகளில் 76 ஓட்டங்களை கூடுதலாக பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாபே அணி 36.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 91 ஓட்டங்களால் தோல்வியடைந்துள்ளது. போட்டியின் ஆட்டநாயகனாக பங்;களாதேஸ் அணி சார்பில் 76 ஓட்டங்களை பெற்ற ரமிம் இக்பால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

https://news.ibctamil.com/ta/cricket/zimbawbe-lost-vs-bangladesh

  • தொடங்கியவர்

வங்கதேசத்தை அடக்கியது ஹத்துருவின் இலங்கைப் படை

 

பங்களாதேஷ் அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணியை 82 ஓட்டங்களுக்குள் அடக்கிய இலங்கை 83 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடுகின்றது.

lakmal.jpg

பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் முக்கோணத் தொடரில் இலங்கை, பங்களாதேஷ், சிம்பாப்வே ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

 

இப் போட்டித் தொடரின் 6 ஆவதும் முக்கியமானதுமான போட்டி இன்று டாக்காவில் இடம்பெற்று வருகின்றது.

 

இப் போட்டியில் இறுதிப் போட்டிக்குள் பங்களாதேஷ் அணி சென்றுள்ள நிலையில் அடுத்ததாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணி எது என்பதற்கான போட்டியாக இன்றைய போட்டி அமைந்துள்ளது.

இப் போட்டியில் இலங்கை வெற்றிபெற்றால் இறுதிப்போட்டியில் பங்களாதேஷ் அணியை  எதிர்த்தாடும், தோல்வியடைந்தால் சிம்பாப்வே அணி ஓட்ட விகிதத்தால் இறுதிப் போட்டிக்கு தெரிவாகக் கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடக்களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் சிம்பசொப்பனமாகத் திகழ 82 ஓட்டங்களுக்குள் பங்களாதேஷின் ஆட்டம் அடங்கியது.

இந்நிலையில் 83 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி தற்போது துடுப்பெடுத்தாடி வருகின்றது.

இலங்கை அணி 2 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

http://www.virakesari.lk/article/29901

8.png&h=42&w=42

83/0 (11.5/50 ov, target 83)

Sri Lanka won by 10 wickets (with 229 balls remaining)

  • தொடங்கியவர்

பங்களாதேஷுக்கு பாடம் கற்பித்த இலங்கை : 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி

 

 

பங்களாதேஷ் அணிக்கெதிரான முக்கிய போட்டியொன்றில் இலங்கை அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

272485.jpg

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் பங்கேற்று விளையாடும் முக்கோணத் தொடர் பங்களாதேஷில் இடம்பெற்று வருகின்றது.

272488.jpg

இத் தொடரில் ஒவ்வொரு அணியும் மற்றைய அணிகளுடன்  2 தடவைகள் போட்டியில் மோதின. மொத்தமாக ஒவ்வொரு அணிக்கும் 4 போட்டிகள் இடம்பெற்றன.

272490.jpg

தொடரின் 3 போட்டிகளில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி 15 புள்ளிகளைப் பெற்று முதல் அணியாக தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.

சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் தலா ஒவ்வொரு போட்டியில் வெற்றிபெற்ற நிலையில்,  வெற்றிபெற்ற ஓட்ட விகிதாசாரத்தின் அடிப்படையில் சிம்பாப்வே அணி 2 ஆவது இடத்தில் இருந்ததால் இலங்கை அணிக்கு இப் போட்டி வாழ்வாசாவா போட்டியாக அமைந்தது.

தொடரின் 6 ஆவது போட்டியும் இறுதிப் போட்டியாயுமாக அமைந்த இப்போட்டி பங்களாதேஷின் டாக்காவில் இன்று பகலிரவுப் போட்டியாக அமைந்தது.

இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி  முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

272493.jpg

அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடக்களமிறங்கிய பங்களாதேஷ் அணிக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் சிம்பசொப்பனமாகத் திகழ 82 ஓட்டங்களுக்குள் பங்களாதேஷின் ஆட்டம் அடங்கியது.

பங்களாதேஷ் அணி சார்பில் முஷ்பிகுர் ரஹிம் 26 ஓட்டங்களையும் சபீர் ரஹ்மான் 10 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

ஏனையோர் ஒன்றை இலக்கதுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் லக்மால் 3 விக்கெட்டுகளையும் துஷ்மந்த சாமிர, திஸர பெரேரா மற்றும் சந்தகன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

272496.jpg

இந்நிலையில் 83 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை துடுப்பெடுத்தாடி எவ்வித விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்து 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.

 இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில்  தனுஷ்க குணதிலக 35 ஓட்டங்களையும் தரங்க 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இவ் வெற்றியுடன் இலங்கை அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளது.

இறுதிப்போட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி டாக்காவில் பகலிரவுப் போட்டியாக இடம்பெறவுள்ளது.

http://www.virakesari.lk/article/29912

  • கருத்துக்கள உறவுகள்

மிக மிக நீண்ட நாட்களுக்கு பின் இலங்கை அபார வெற்றி.

  • தொடங்கியவர்

அதிரடி வெற்றியுடன் முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை

AFP-4-696x469.jpg @AFP
 

டாக்கா மிர்பூரில் நடைபெற்று முடிந்திருக்கும் (பங்களாதேஷ், ஜிம்பாப்வே மற்றும் இலங்கை ஆகிய அணிகள் பங்குபெறும்) முக்கோண ஒரு நாள் தொடரின் ஆறாவது போட்டியில்,  பங்களாதேஷ் அணியினை அதிசிறந்த பந்துவீச்சினால் இலங்கை 10 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருப்பதுடன், தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பினையும் உறுதி செய்தது.

  •  
     
 

முன்னதாக போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணியின் தலவர் மஷ்ரபி மொர்தஸா முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார்

இந்த முக்கோண ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட இலங்கை வீரர்கள் பங்களாதேஷுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் தமக்கு சாதகமான முடிவு ஒன்றினை எதிர்பார்த்த வண்ணம் களமிறங்கியிருந்தனர்.

ஜிம்பாப்வே அணியுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற இந்த முக்கோணத்தொடரின் நான்காவது போட்டியில் இலங்கை அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்த வீரர்களில் ஒருவரான குசல் பெரேராவுக்கு காயம் காரணமாக இன்றைய போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருந்தது. இவரின் இடத்தினை இலங்கை அணியில் தனுஷ்க குணத்திலக்க பிரதியீடு செய்ய, வேகப்பந்து வீச்சாளரான நுவான் ப்ரதீப்புக்குப் பதிலாக துஷ்மந்த சமீரவுக்கு இன்றைய நாளில் வாய்ப்பு தரப்பட்டிருந்தது.

தொடரின் இறுதிப் போட்டிக்கு ஏற்கனவே தெரிவாகியிருந்த பங்களாதேஷ் அணி, எந்தவித அழுத்தங்களுமின்றி தமது துடுப்பாட்டத்தினை தொடங்கியிருந்தது.

பங்களாதேஷ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான தமிம் இக்பால் மற்றும் அனாமுல் ஹக் ஆகியோர் சுரங்க லக்மாலின் அதிரடிப்பந்து வீச்சினால் பத்து ஓட்டங்களையேனும் தாண்டாது ஓய்வறை நடந்தனர். மூன்றாம் இலக்க துடுப்பாட்ட வீரராக வந்த சகீப் அல் ஹஸனையும் தனுஷ்க குணத்திலக்க தன்னுடைய அபாரமான களத்தடுப்பினால் 8 ஓட்டங்களுடன் ரன் அவுட் செய்தார். இதனால், ஆரம்பத்திலேயே 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை பறிகொடுத்து பங்களாதேஷ் அணி தடுமாறியிருந்தது.

இப்படியான நிலையில் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான முஷ்பிகுர் ரஹீம் மஹமதுல்லாவுடன் இணைந்து அணியை மீட்க முயற்சி செய்திருந்தார். எனினும், சுரங்க லக்மால் மீண்டும் சிறப்பாக செயற்பட்ட காரணத்தினால் அம்முயற்சி வீணானது. இதனால் பங்களாதேஷ் அணியின் நான்காம் விக்கெட்டாக மஹமதுல்லா 7 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.

 

இலங்கை அணியின் பந்துவீச்சுக்கு தொடர்ந்தும் தடுமாறிய பங்களாதேஷ் தமது அடுத்தடுத்த விக்கெட்டுக்களை குறுகிய ஓட்ட இடைவெளிக்குள் பறிகொடுத்தது. பங்களாதேஷின் இறுதி நம்பிக்கையான முஸ்பிகுர் ரஹீம் களத்தில் காணப்பட்ட போதிலும் அவரினையும் 26 ஓட்டங்களுடன் இலங்கை அணியின் துஷ்மந்த சமீர மைதானத்தினை விட்டு வெளியேற்றினார். ரஹீமே பங்களாதேஷ் அணி சார்பாக அதிக ஓட்டங்கள் பெற்ற வீரராக  காணப்பட்டிருந்தார்.

முடிவில் 24 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த பங்களாதேஷ் அணி 82 ஓட்டங்களினை மாத்திரமே பெற்றது. பங்களாதேஷ் அணிக்கு இது ஒரு நாள் போட்டிகளில் பெறப்பட்ட எட்டாவது அதிகுறைவான ஓட்டங்களாக பதிவாகியிருந்தது.

இன்றைய நாளில் முன்னேற்றகரமான முறையில் செயற்பட்ட இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் சுரங்க லக்மால் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும், துஷ்மந்த சமீர, திசர பெரேரா மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் கைப்பற்றியிருந்தனர்.

இதனைத் அடுத்து மிகவும் சவால் குறைந்த வெற்றி இலக்கான 83 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெறுவதற்கு பதிலுக்கு இலங்கை அணி துடுப்பாடியது.

 

ஆரம்ப தவீரர்களான தனுஷ்க குணத்திலக்க, உபுல் தரங்க ஆகியோர் அதிரடி ஆட்டத்தினை வெளிக்காட்ட 11.3 ஓவர்களில் எந்தவொரு விக்கெட்டினையும் பறிகொடுக்காமல் இலங்கை அணி வெற்றி இலக்கினை அடைந்தது. இதில் ஆட்டமிழக்காது இருந்த தரங்க 39 ஓட்டங்களினையும், குணத்திலக்க 35 ஓட்டங்களினையும் குவித்து தமது தரப்பின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்திருந்தனர்.

இப்போட்டியின் முடிவு மூலம் இலங்கை அணி பங்களாதேஷுக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் அதிக பந்துகள் (231) மீதமிருக்க பெற்றுக் கொண்ட வெற்றியினை பதிவு செய்திருக்கின்றது.

போட்டியின் ஆட்ட நாயகன் விருதினை சுரங்க லக்மால் பெற்றுக் கொண்டார்.

இந்த முக்கோண ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டிக்கு தற்போது தெரிவாகியிருக்கும் இலங்கை அணி அதில் வரும் சனிக்கிழமை (27) பங்களாதேஷ் அணியுடன் மோதுகின்றது.

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் – 82 (24) முஷ்பிகுர் ரஹீம் 26(56), சுரங்க லக்மால் 3/21(7), துஷ்மந்த சமீர 6/2(5), லக்ஷான் சந்தகன் 2/24(6), லக்ஷான் சந்தகன் 27/2(6)

இலங்கை – 83/0 (11.3) உபுல் தரங்க 39(37)*,  தனுஷ்க குணத்திலக்க 35(35)*

முடிவு இலங்கை 10 விக்கெட்டுக்களால் வெற்றி

http://www.thepapare.com

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இலங்கையா? பங்களாதேஷா? கிண்ணத்தை கைப்பற்றுவது யார் ?

 

 

2018 ஆம் ஆண்டின் முதல் தொடரை வெற்­றி­கொள்­வது யார் என்ற போட்டி இன்று நடை­பெ­ற­வுள்­ளது.

sri-lanka-bangaladesh-cricket.jpg

இலங்கை  – பங்­க­ளாதேஷ் – சிம்­பாப்வே ஆகிய அணிகள் மோதும் முத்­த­ரப்பு ஒருநாள் தொடரின் இறுதிப் போட்­டியில் ஒவ்­வொரு லீக் போட்­டி­யிலும் எதி­ர­ணி­களை வீழ்த்தி சம­ப­லத்­துடன் திகழும் இலங்­கையும் பங்­க­ளா­தேஷும் மோது­கின்­றன.

இந்தத் தொடரின் ஆரம்­பத்தில் ஆதிக்கம் செலுத்­திய அணி பங்­க­ளாதேஷ் தான். அதன்­பி­றகு இரண்­டா­வது இடத்தில் சிம்­பாப்வே திகழ்ந்­தது.

காரணம் இலங்கை அணி தான் விளை­யா­டிய முத­லி­ரண்டு போட்­டி­க­ளிலும் பங்­க­ளாதேஷ் மற்றும் சிம்­பாப்வே அணி­க­ளிடம் தோல்­வியைத் தழு­விக்­கொண்­டது.

அதன்­பி­றகு நடை­பெற்ற இரண்டு போட்­டி­க­ளிலும் இவ்­விரு அணி­க­ளுக்கும் பதி­லடி கொடுத்து இறுதிப் போட்­டிக்கு முன்­னே­றி­யது இலங்கை.

அதுவும் பங்­க­ளாதேஷ் அணிக்­கெ­தி­ரான கடைசிப் போட்­டியில் 10 விக்­கெட்­டுக்­களால் வெற்­றி­யீட்டி சாதனை படைத்­தது இலங்கை.

இந்­நி­லையில் இந்தத் தொடரின் இறு திப் போட்டி இன்று பங்­க­ளா­தேஷில் முற்பகல் 11.30 மணி­க்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இந்தப் போட்­டியில் இலங்கை அணி வீரர்கள் இருவர் சாதனை படைக்கக் காத்­தி­ருக்­கின்­றனர்.

அதில் அண்­மைக்­கா­ல­மாக சிறந்த சக­ல­துறை ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தி­வரும் திஸர பெரே­ரா­வுக்கு 150 விக்­கெட்­டுக்­களை பெற இன்னும் ஒரே ஒரு விக்­கெட்தான் தேவை.

அதேபோல் இலங்கை அணியின் மற்­றொரு நட்­சத்­திர வேகப்­பந்து வீச்­சா­ள­ரான சுரங்க லக்­மாலும் ஒரு மைல்­கல்லை இன்­றைய போட்­டியின் மூலம் எட்­ட­வுள்ளார்.

அவர் தனது ஒருநாள் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டியில் 100 விக்­கெட்­டுக்­களை வீழ்த்த இன்னும் அவ­ருக்கு இரண்டு விக்­கெட்­டுக்­கள்தான் தேவை­யாக உள்ளன.

இன்­றைய போட்­டியின் மூலம் இந்த இரு­வரும் தங்­க­ளது விக்­கெட் சாத­னையை நிகழ்த்­து­வார்கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் புதிய பயிற்­சி­யாளர் ஹத்­து­ரு­சிங்­கவின் பயிற்­சியின் கீழ் இலங்கை அணி சற்று முன்­னே­றி­யி­ருக்­கி­றது என்றே சொல்லலாம்.

முத­லி­ரண்டு போட்­டி­க­ளிலும் திண­றி­னாலும் மற்­றைய இரண்டு போட்டிகளிலும் நம்பிக்கையுடன் ஆடி வெற்றிகளைக் குவித்தது இலங்கை. 

மறுமுனையில் பங்களாதேஷ்அணியும் சமபலத்துடனேயே திகழ்கிறது. அதுவும் அவர்களின் சொந்த மைதானம் என்ப தால் இன்னும் சிறப்பாகவே தயாராகியிருப்பார்கள். 

அதனால் இன்­றைய போட்­டியை இரண்டு அணி­களும் தங்­க­ளது ஆண்டின் முதல் வெற்­றி யை தக்­க­வைத்­துக்­கொள்ள கடு­மை­யாக போராடும் என்­பது நிச்­சயம்.

இன்­றைய இறுதிப் போட்­டியில் வெற்­றி­பெற்று கிண்­ணத்தை கைப்­பற்­றப்­போ­வது யார் என்­பதை பொறுத்­தி­ருந்து பார்ப்போம்.

http://www.virakesari.lk/article/29969

முத்தரப்பு இறுதிப் போட்டியில் இலங்கை முதலில் துடுப்பாட்டம்

 

Bookmark and Share
 
இலங்கை, சிம்பாப்வே, பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு கிரிக்கட் தொடரின் இறுதிப் போட்டி இன்று பங்களாதேஷில் இடம்பெறுகின்றது.

இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

அதன்படி பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இன்றைய இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

http://tamil.adaderana.lk/news.php?nid=99563

  • தொடங்கியவர்

 

8.png&h=42&w=42

152/3 * (33.4/50 ov)
 
  • தொடங்கியவர்

பங்களாதேஷ் அணியின் வெற்றி இலக்கு 222 ஓட்டங்கள்

 

 

பங்களாதேஷ் - இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் பங்கேற்று விளையாடும் முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று துடுப்பெடுத்தாடிய  இலங்கை அணி  50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 221 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

online_New_Slide__3_.jpg

இலங்கை அணி சார்பாக அதிக பட்சமாக உபுல் தரங்க 56 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 45 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். 

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக ரொபெல் ஹுஸைன் 04 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார். 

அதன்படி இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியின் வெற்றி இலக்கு 222 ஓட்டங்கள் ஆகும்.

http://www.virakesari.lk/article/29987

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.