Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தென்னிலங்கையுடன் சோரம் போகாது விடுதலைப் புலிகளைப் போன்று இராஜதந்திரத்தையே கடைப்பிடிக்கிறது! செல்வம் எம்.பி

Featured Replies

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தென்னிலங்கையுடன் சோரம் போகவில்லை. விடுதலைப் புலிகளைப் போன்று இராஜதந்திரத்தையே கடைப்பிடிக்கிறது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் குழக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபை தேர்தலில் ஆறாம் வட்டாரமாகிய நகரப்பகுதியில் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் ரி.கே.இராஜலிங்கம் மற்றும் ரேணுகா ஆகியோரின் தேர்தல் பிரச்சார அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிராமிய மற்றும் நகர அபிவிருத்திக்கான தேர்தல் என்பதைக் கடந்து சில அரசியல் ரீதியான முரண்பாடான கருத்துக்களை இந்த தேர்தலில் பலர் முன்வைத்து வருவதைக் காணக் கூடியதாக இருக்கிறது. அந்தவகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டு விடயங்களில் அரசுக்கு ஆதரவாக செயற்படுவதான குற்றச்சாட்டை இன்று பலர் முன்வைத்து வருகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பையும்இ அவர்களது வடக்கு – கிழக்கு பிரதேசத்தையும் சிதைப்பதற்கான வேலைகள் தென்னிலங்கையில் நடைபெறுகின்றது. இன்று பொது எதிரியாக எல்லோரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே கருதி வருகின்றனர்.

இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தி சர்வதேச அழுத்தத்துடன் வருகின்ற அரசியல் தீர்வு என்ற விடயத்தை பலவீனப்படுத்தும் வகையில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது பழிகள் சுமத்தப்படுகிறது. நாங்கள் பலமாக ஆயுத முனையில் இருந்தோம் என்றால் எதற்கும் கலங்கத்தேவையில்லை. ஆயுதப் பலம் மௌனிக்கப்பட்ட பின்னர் அந்தப் பொறுப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருக்கிறது. எங்களுடைய இனப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வை புதிய அரசியலமைப்பு ஊடகாக பெறவேண்டும் என்ற நோக்கில் செயற்படுகின்றோம்.

உலகத்தையே விஞ்சுகின்ற வகையில் எமது ஆயுதப் போராட்டம் இடம்பெற்ற காலத்திலும் கூட விடுதலைப் புலிகள் தங்களது இராஜதந்திர நகர்வுகளை பல வழிகளிலும் மேற்கொண்டார்கள். அவர்கள் பிரேமதாசவுடன் பேசினார்கள். கொடுங்கோல் ஆட்சி செய்த மஹிந்தராஜபக்சவுடனும் பேசினார்கள். அந்த வகையில் போரின் தந்திரங்களாகவும், எவ்வாறு அதனை கொண்டு போக வேண்டும் என்ற வகையிலும் சோரம் போகாத ஒரு போராட்டத்தை அவர்கள் செய்தார்கள். அதேபோல் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களது இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சோரம் போகாது தங்களது கடமைகளைச் செய்கிறது. அதை இங்கு இருக்கின்ற பல கட்சிகள் இவர்கள் சோரம் போய்விட்டார்கள். இவர்கள் அரசாங்கத்டதுடன் சேர்ந்து போய் விட்டார்கள் என்று சொல்லுகின்ற அவப்பெயரை ஏற்படுத்துகிறார்கள். இதை ஏன் அவர்கள் ஒரு இராஜதந்திரமாக ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள் என்ற கேள்வியை நான் எழுப்புகின்றேன். நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு அடிவருடிகளாகவும், சோரம் போனவர்களாகவும் எந்தக் காலத்திலும் செயற்படவில்லை.

புதிய அரசியலமைப்பு மாற்றம் பெறுகின்ற சந்தர்ப்பத்தை நாங்கள் ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும். சர்வதேச சமூகம் எப்படி எங்களது ஆயுதப் போராட்டத்தை மௌனிக்கச் செய்ததோ, எப்படி கொடுங்கோல் ஆட்சியை மாற்றியதோ அதைப் போல் இந்த சர்வதேச சமூகத்திடம் நியாயம் கேட்கும் வகையில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு காய்களை நகர்த்துகிறதே தவிர, ஐக்கிய தேசியக் கட்சியிடமோ, ஜனாதிபதியிடமோ சோரம் போகவில்லை. போராட்டத்திலும் சரி, அரசியலிலும் சரி சில இராஜதந்திரங்களுடன் உருவாக்கப்பட்ட மற்றும் செயற்பட்ட வரலாறுகளை நாம் பார்க்க வேண்டும். அது தான் வெற்றியளித்திருக்கிறது. இவர்கள் ஒன்றுக்குமே சரிவர மாட்டார்கள் என்று தென்னிலங்கை சொல்லுகின்ற அந்த வாய்ப்பை நாங்கள் முற்றாக நிறுத்தி அவர்களுக்கு நாங்கள் சந்தர்ப்பத்தை வழங்கினோம். ஆனால் இவர்கள் பல விடயங்களை தரமறுக்கிறார்கள் என்ற நியாயப்பாட்டை சொல்லுவதற்கு சந்தர்ப்பங்கள் வேண்டும் அதற்கேற்பவே நாம் செயற்படுகின்றோம் என்றார்.

http://www.samakalam.com/செய்திகள்/தமிழ்-தேசியக்-கூட்டமைப்-11/

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நவீனன் said:

மீண்டும் புலிகளா ....இப்படி பிச்சையெடுப்பதை விட நீங்கலெல்லோரும் நாண்டு சாவலாம்  

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ?
புலிகள் இராஜதந்திரம நகர்வுகளை  
செய்தர்களா ?
எப்ப செய்தார்களாம் ?

என்னவோ போடா
மாதவா
இப்பவெல்லாம் செய்திகளை
வாசிச்சா
சிரிப்பா வருகுது

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, வைரவன் said:

என்ன ?
புலிகள் இராஜதந்திரம நகர்வுகளை  
செய்தர்களா ?
எப்ப செய்தார்களாம் ?

என்னவோ போடா
மாதவா
இப்பவெல்லாம் செய்திகளை
வாசிச்சா
சிரிப்பா வருகுது

புலிகள் இராஜதந்திரம் செய்தார்களோ இல்லையோ, இல்லாத புலிகளின் பெயரை வைத்து இன்றுவரை சிங்கள கட்சிகளும், தமிழ் கட்சிகளும்  அரசியல் பண்ணுவது  எந்தவகையான  ஒரு இராஜதந்திரம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?  இராஜதந்திரம் என்றால் என்ன .எப்படி, எங்கே, எவர் செய்தார்கள் செய்யவில்லை என்பதை துல்லியமாக கணிப்பவர்போல் உங்கள் பதிவு உள்ளதே அதனால் கேட்கிறேன்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.