Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரப்போகின்றோமா?....மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்கிறார் சம்பந்தன்

Featured Replies

மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரப்போகின்றோமா?

p22-a32b489b69875b28496433d3747ee1552f846bae.jpg

 

மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்கிறார் சம்பந்தன்
(சேனையூர், மூதூர் நிருபர்கள்)

தற்­போ­தைய அர­சாங்­கத்தை பதவி இறக்­கி­விட்டு மஹிந்த ராஜபக் ஷவை மீண்டும் நாம் ஆட்­சிக்கு கொண்டு வரப்­போ­கி­றோமா? அது ஒரு புத்­தி­சா­லித்­த­ன­மான முடி­வாக இருக்­க­மு­டி­யுமா என்­பதை கருத்தில் கொண்டு மக்கள் இந்த  தேர்­தலில் வாக்­க­ளிக்க வேண்டும் என தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட் சித் தலை­வ­ரு­மா­கிய இரா.சம்­பந்தன் தெரி­வித்தார். 

திரு­கோ­ண­மலை நக­ர­சபை, வேட்­பா­ளர்­க­ளுடன் கூடிய மக்கள் கலந்­து­ரை­யா­ட­லொன்று நேற்று முன்தினம் செவ்­வாய்க்­கி­ழமை மாலை மட்­டிக்­களி ராஜ­வ­ரோ­தயம் சதுக்கம் விநா­ய­க­பு­ரத்தில் நக­ர­சபை அப­ய­புர வட்­டார வேட்­பாளர் தம்­பி­ராஜா ராஜ்­குமார் தலை­மையில் நடை­பெற்­றது.

அதன்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

இக்­க­லந்­து­ரை­யா­டலில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் க.துரை­ரெட்ண சிங்கம், முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்­டா­யு­த­பாணி, நக­ர­சபை வேட்­பா­ளர்­க­ளான த.ராஜ்­குமார், ரமேஷ், என் ராச­நா­யகம், க. செல்­வ­ராஜா, திரு­மலை நவம், திரு­மதி. சரோ­ஜினி, கோகி­ல­ராஜா, வ.ராஜ்­குமார், தனராஜ், சே.ஸ்ரீஸ்­கந்­த­ராஜா மற்றும் பட்­ட­ணமும் சூழலும் பிர­தே­ச­சபை வேட்­பா­ளர்­களும் கலந்து கொண்­டனர்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

"கொடிய ஆட்­சி­யொன்றை இறக்கி, நல்­லாட்­சி­யொன்­றைக்­கொண்டு வந்­தார்கள். அவ்­வாட்­சியை மாற்றிக் காட்­டு­வோ­மென சிலர் சூளு­ரைக்­கின்­றார்கள். அந்­நி­லைமை ஏற்­ப­டு­மானால் யார் ஆட்­சிக்கு வரு­வார்கள் என்­பதை மக்கள் உணர்ந்து புத்­தி­சா­லித்­த­ன­மாக செயற்­ப­ட­வேண்டும்.

உள்­ளூ­ராட்சித் தேர்தல் முடி­வ­டைந்த பின்பு இந்த நாட்டின் பிர­தமர் கதி­ரையில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ ஏறுவார் என்று முன்னாள் அமைச்­சரும் எதி­ரணி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒருவர் கூறி­யுள்­ளதை பத்­தி­ரி­கையில் படித்தேன்.

அதேபோல் நடை­பெ­ற­வுள்ள இந்த உள்­ளூ­ராட்சி தேர்­த­லா­னது மிக முக்­கி­யத்­துவம் வாய்ந்­தது. ஏனெனில் தேர்­தலின் முடி­வுகள் இலங்­கையில் தமி­ழீழம் உரு­வாகப் போகின்­றதா? அல்­லது ஒற்­றை­யாட்சி தொடரப் போகின்­றதா/ என்­பதை தீர்­மா­னிக்கப் போகி­றது என்று முன்னாள் தலைவர் ஜனா­தி­பதி மஹிந்த கூறி­யி­ருந்தார். இதி­லி­ருந்து தேர்­தலின் முக்­கி­யத்­து­வத்தை புரிந்து கொள்­ள­வேண்டும் தமிழ் மக்கள். தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­பினர் அர­சாங்­கத்­துக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தா­கவும் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை நாம் தீவி­ர­மாக கையா­ள­வில்­லை­யென்றும் எம்­மீது குற்­றச்­சாட்­டு­களை சுமத்த முயற்­சிக்­கின்­றார்கள் அது தவறு. நாங்கள் அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­க­ளல்ல. நாங்கள் அர­சாங்­கத்தில் அமைச்சர் பத­வி­களை ஏற்­க­வில்லை. ஏற்­கவும் மாட்டோம். தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும்­வரை நாம் எதையும் ஏற்­கப்­போ­வ­தில்லை. அர­சாங்­கத்தின் பங்­கா­ளி­க­ளாக இருக்­கப்­போ­வ­து­மில்லை.

உள்­ளக சுய­நிர்­ணய அடிப்­ப­டையில் தீர்வு தரப்­பட வேண்டும். அவர்கள் வாழும் பிர­தே­சங்­களில் அவர்­களின் கரு­மங்­களை தாமே கையா­ளக்­கூ­டிய நிலைமை உரு­வா­கும்­வ­ரையில் நாங்கள் அமைச்சர் பத­வி­களை ஏற்­க­மாட்டோம்.

இந்­நாட்டில் ஏலவே ஒரு கொடூ­ர­மான ஆட்­சி­யி­ருந்­தது. எமது மக்­களின் ஆத­ர­வுடன் 2015 ஆம் ஆண்டு அவ்­வாட்­சிக்கு முடிவு கட்­டப்­பட்­டது. மக்­களின் ஜன­நா­யக உரி­மையின் முழு­மை­யான பலம் அந்த தேர்­தலில் பயன்­ப­டுத்­தியே மேற்­படி கொடிய ஆட்சி மாற்­றப்­பட்­டது. அம்­மாற்­றத்தைப் பயன்­ப­டுத்தி தமிழ் மக்­களின் பிரச்­சி­னைக்குத் தீர்­வு­காண அர­சியல் சாசன ரீதி­யாக நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வைக் காணு­வ­தற்கு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கின்­றன. பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண முயற்­சிகள் எடுத்து வரு­கின்றோம்.

சம்­பூரில் 1000 ஏக்­க­ருக்கு மேற்­பட்ட மக்­க­ளு­டைய காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. அதேபோல் முல்­லைத்­தீவு கேப்­பா­பு­லவு ஆகிய இடங்­களில் காணிகள் விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. 10 நாட்­க­ளுக்கு முன்பு 136 ஏக்கர் காணி கேப்­பா­பு­லவில் மக்­க­ளுக்கு விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. இன்னும் 70 ஏக்கர் காணி விடு­விக்­கப்­பட வேண்டும். இது சம்­பந்­த­மாக ஜனா­தி­ப­திக்கு கடு­மை­யான கடிதம் எழு­தி­யி­ருக்­கிறேன். கிளி­நொச்­சியில் காணி விடு­விக்­கப்­பட்­டுள்­ளது. வலி­காமம் மற்றும் மயி­லிட்டி துறை­முகம் திருப்பி மக்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது எனவே பல கரு­மங்கள் நடை­பெ­று­கின்­றன.

சிறை­யி­லி­ருந்த 50 வீத­மான கைதிகள் விடு­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். காணா­மல்­போனோர் தொடர்பில் சட்டம் நிறை­வேற்­றப்­பட்டு அவ்­வி­சா­ர­ணைகள் விரை­வில்­ஆ­ரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. ஆனால் தாமதம் நில­வு­கி­றது என்­பதை ஏற்­றுக்­கொள்­கிறேன். இது விடயம் தொடர்பில் கார­சா­ர­மாக அர­சாங்­கத்தை கண்­டித்து வரு­கின்றோம். சர்­வ­தேச சமூ­கத்­துடன் பேசும்­போது அர­சாங்­கத்தை கண்­டித்­தி­ருக்­கின்றோம். கூடிய அழுத்­தங்­களை கொடுத்து வரு­கிறோம்.

பத­விக்­காக மக்­க­ளு­டைய உரி­மை­களை விற்­ப­வர்கள் நாங்­க­ளல்ல. அதை நாம் ஒரு­போதும் செய்­ய­மாட்டோம். நடை­பெ­ற­வுள்ள தேர்­தலில் நீங்கள் அளிக்­கப்­போ­கின்ற வாக்­குகள் தமி­ழர்­க­ளு­டைய நிலைப்­பாட்டை பிர­தி­ப­லிக்­க­வேண்டும். எமது மக்கள் ஒரு­மித்து ஒற்­று­மை­யாக அளிக்­கின்ற வாக்­குகள் ஒரு­மித்த நாட்­டுக்குள் நாடு பிரிக்­கப்­ப­டாமல் வர­லாற்று ரீதி­யாக தமிழ் மக்கள் வாழ்ந்­து­வந்த பிர­தே­சங்­களில் தமது இறை­மையின் அடிப்­ப­டையில் ஆரோக்­கி­ய­மான, கௌர­வ­மான அந்­தஸ்­தைப்­பெ­று­வ­தற்கு உறு­தி­யான தீர்வு வெளி­வ­ர­வேண்டும். அதுதான் இந்த தேர்­தலில் நாம் அடை­யக்­கூ­டிய முக்­கி­ய­மான விடயம்.

உள்­ளூ­ரட்சி மன்­றப்­பட்­டி­யலை, அதிக பலத்­துடன் உரு­வாக்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன. அது மட்­டு­மன்றி நிறை­வேற்று அதி­கா­ரத்தை உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு ஒப்­ப­டைக்க ஒழுங்கு செய்­யப்­பட வேண்­டு­மென்ற கருத்து தற்­பொ­ழுது நிலவி வரு­கி­றது அதை நாம் வர­வேற்­கின்றேம். அந்த நிலைமை ஏற்­ப­டு­மாக இருந்தால் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் நியா­ய­மான அதி­கா­ரங்­களை பயன்­ப­டுத்தி கரு­மங்­களை கையா­ளக்­கூ­டிய ஒரு நிலைமை உரு­வாகும்.

எங்கள் மக்­களின் கைகளில் எப்­பொ­ழுதும் இருக்­கின்ற பலம் வாய்ந்த ஆயுதம் மக்­க­ளு­டைய வாக்­காகும். மக்­க­ளு­டைய வாக்­கென்­பது இறை­மை­யு­டைய முத­லம்­ச­மாகும்.

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முடி­வு­களை நாட்­டி­லுள்­ள­வர்கள் சர்­வ­தேச சமூ­கத்­தினர் எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். வட­கி­ழக்கு வாழ் தமிழ் மக்கள் என்­ன­வி­த­மாக வாக்­க­ளிக்கப் போகி­றார்கள் என்று தமிழ் மக்கள் ஒற்­று­மை­யாக ஒரு­மித்து வாக்­க­ளிப்­பார்­களா என்­பதை மிக உன்­னிப்­பாக அவ­தா­னித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

தமிழ் மக்கள் குறிப்­பிட்ட கொள்­கைக்­காக நீண்ட கால­மாக போராடி வந்­திக்­கி­றார்கள். தங்கள் இறைமை மதிக்­கப்­ப­ட­வேண்டும். உள்­ளக சுய­நிர்­ணய உரிமை மதிக்­கப்­பட வேண்டும். தாங்கள் வாழும் பிர­தே­சங்­களில் பல்­வேறு விட­யங்கள் தொடர்பில் சுய­நிர்­ணய அடிப்­ப­டையில் தங்­க­ளுக்­கு­ரிய அதி­கா­ரங்­களைப் பயன்­ப­டுத்தி காக்­க­வேண்­டிய உரிமை இருக்க வேண்­டு­மென்று கரு­து­கி­றார்கள்.

ஐ.நா.வின் சர்­வ­தேசப் பிர­க­ட­னத்தின் அடிப்­ப­டையில் குறித்த மக்­களை ஆட்சி புரி­வ­தற்கு அடிப்­படை ஒழுங்கு என்­ன­வெனில் அம்­மக்­களின் சம்­ம­த­மாகும். மக்­க­ளு­டைய சம்­ம­த­மில்­லாமல் அம் மக்­களை ஆட்சி புரிய முடி­யாது. கடந்த எழு­பது வரு­டங்­க­ளாக நாட்டை ஆண்­ட­வர்கள் தமிழ் மக்­க­ளு­டைய சம்­ம­த­மில்­லாமல் தமிழ் மக்­களை ஆட்சி புரிந்து வந்­தி­ருக்­கின்­றார்கள். இது ஒரு தொடர்­க­தை­யாக இருந்து வந்­தி­ருக்­கி­றது. நாங்கள் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எமது சம்­ம­தத்தை தெரி­விக்­க­வில்­லை­யென நான் கூறு­வ­தற்கு கார­ண­மென்­ன­வென்றால் 1947 ஆம் ஆண்டு தொட்டு வடகிழக்கில் இன்றுவரை ஜனநாயக ரீதியாக அளிக்கப்பட்ட ஒட்டுமொத்த முடிவுகளை நோக்கினால் ஆட்சி புரிந்தவர்களுக்கு எம்மை ஆளுவதற்கு நாம் சம்மதம் வழங்கவில்லை. சம்மதம் இல்லாமல்தான் ஆட்சி புரிந்து வருகின்றார்கள்.

போர் முடிந்த பின் ஐ.நா. முன்னை நாள் செயலாளர் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தபோது அவரை நான் த.தே.கூ. அமைப்பினரோடு சென்று சந்தித்தேன். யாழில் சந்தித்தவேளை அவரிடம் ஒரு விடயத்தை தெளிவாக கூறினேன்.

இலங்கை சுதந்திரமடைந்த பிறகு இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் அவர்களின் சம்மதத்துடன் ஆட்சி புரியப்படவில்லை. மாறாகவே அவர்கள் மீது ஆட்சி புரியப்பட்டிருக்கிறது. இது ஐ.நா. பிரகடனத்துக்கு மாறான விடயமென்று கூறியதுடன் இது தொடர முடியாது எனக் கூறினேன்" என இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி, பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் ஆகியோரும் உரையாற்றினர்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-18#page-1

  • தொடங்கியவர்
  •  
  • உரிய மதிப்பு தரா­வி­டில் – ஆட்­சியை மாற்­று­வோம்!!
sam-750x430.png

உரிய மதிப்பு தரா­வி­டில் – ஆட்­சியை மாற்­று­வோம்!!

எதிர்க்கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­விப்பு

 

 

நாம் தற்­போது நிதா­ன­மாக, நியா­ய­மாக, நேர்­மை­யாக ஒருமித்த நாட்­டுக்­குள் மதிப்­பைப் பெற்­றுக் கொள்ள முயற்­சிக்­கின் றோம். அது நடை­பெ­றா­விட்­டால் எமது சம்­ம­தம் இல்­லா­மல் நடை­பெ­றும் ஆட்­சியை மாற்ற வேண்­டிய நிலை ஏற்­ப­டும்.

இவ்­வாறு எதிர்க்கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் எச்­ச­ரித்­துள்­ளார்.
திரு­கோ­ண­ம­லை­ நக­ர­ச­பை­யில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பின் கீழ் உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­களை ஆத­ரித்து நேற்று நடத்­தப்­பட்ட மக்­கள் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் தெரி­வித்­த­தா­வது-,

வடக்கு, கிழக்­கில் உள்ள மக்­கள் ஒரு மித்து நிற்­கின்­றார்­களா என்­ப­தைப் பன்­னாட்டு ரீதி­யில் இந்த தேர்­தலை பலர் உற்று நோக்­கு­கின்­ற­னர். தமிழ் மக்­கள் மிக நீண்ட கால­மாக போராடி வரு­கின்­றார்­கள்.

ஐக்­கிய நாடு­கள் சபை­யின் அடிப்­படை பிர­க­டத்­தின் படி ஒரு மக்­களை அவர்­க­ளின் சம்­ம­தம் இல்­லா­மல் ஆட்சி புரிய முடி­யாது. எமக்கு சுயாட்சி உரித்து உண்டு. அந்த உரிமை மதிக்­கப்­பட வேண்­டும். நாம் தற்­போது நிதா­ன­மாக, நியா­ய­மாக, நேர்­மை­யாக ஒரு­மித்த நாட்­டுக்­குள் நியா­ய­மான மதிப்­பைப் பெற்­றுக் கொள்ள முயற்­சிக்­கின்­றோம். அது நடை­பெறா விட்­டால் எமது சம்­ம­தம் இல்­லா­மல் நடை­பெ­றும் ஆட்­சியை மாற்ற வேண்­டிய நிலை ஏற்­ப­டும்.

 

நாங்­கள் இன்று அர­சுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­கின்­றோம் என்­றும், மக்­க­ளு­டைய பல கரு­மங்­களை தீவி­ர­மாக கையா­ள­வில்லை என்­றும் எம்­மீது குற்­றம் சாட்ட சிலர் முயற்­சிக்­கி­றார்­கள். அது தவறு நாங்­கள் அர­சின் பங்­கா­ளி­கள் அல்ல. நாங்­கள் அர­சின் அமைச்­சர்­க­ளும் அல்ல.

எமது பிரச்­சினை தீரும் வரை அமைச்­சர்­க­ளாக வர­மாட்­டோம். எமது மக்­கள் தமது உள்­ளக சுய­நிர்­ணய உரி­மை­யின் அடிப்­ப­டை­யில் அவர்­கள் வாழ்­கின்ற பிர­தே­சங்­க­ளில் அவர்­க­ளு­டைய கரு­மங்­களை அவர்­களே கையா­ளக் கூடிய நிலை ஏற்­ப­டும் வரை நாம் அமைச்­சுப் பத­வி­களை ஏற்க மாட்­டோம்.

நாட்­டில் ஒரு கொடு­ர­மான ஆட்சி நடை­பெற்­றது.அதை எமது மக்­க­ளின் வாக்­குப் பலத்­தால் நாம் மாற்­றி­னோம் அதன் நிமித்­தம் எமது மக்­க­ளின் காணிப் பிரச்­சினை காணா­மல் போனோர் பிரச்­சினை தொடர்­பான விட­யங்­க­ளுக்கு தீர்வு பெற்று வரு­கின்­றோம்.- என்­றார்.

http://newuthayan.com/story/63338.html

  • கருத்துக்கள உறவுகள்

நாங்க அப்படித்தான் ஆஸ்பத்ரியில மகிந்தவை கூப்பிட்டு டாக்(Talk) ஐ போடுவோம் 
தேர்தல் வந்தால் உசுப்பேத்தி மக்கள்  வாக்குகளை ஆட்டையை போடுவோம் ...இதுக்கு பெயர்தான் ராசதந்திரம் 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் சரியாக வாக்களிக்கவேண்டும் அல்லது சிங்கள பேயோ பிசாசோ பூதமோ ஆட்சிக்கு வந்து தமிழருக்கு பிரச்சினை கொடுக்கும் என்று சம்பந்தர் பயம்காட்டி தமிழ் மக்களின் வாக்குகளை பறிப்பது கோழைத்தனம். இலங்கையில் இது காலாதிகாலத்துக்கு தொடர்ந்துகொண்டேயிருக்கும் இனியும் தொடரப்போகும் ஒரு அரசியல் யதார்தம் என்பதை உணர்ந்து தமிழ் மக்கள் இந்த அரசியல் நீர்ச்சுழியில் இருந்து விடுபட்டு  நிரந்தரமாக வெளியேவர இவர்போன்ற மிகவும் முதிர்ந்த அரசியல்வாதிகள் என்ன மாற்றுத்திட்டம் அரசியல் சாணக்கியம் வைத்திருக்கிறார்கள் என்பதை இவர்கள் தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.