Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விரைவில் உண்மையை வெளிவிடுவோம் ; மாவை

Featured Replies

விரைவில் உண்மையை வெளிவிடுவோம் ; மாவை

 

குற்றச்சாட்டு சுமத்தியவரே  குற்றத்திற்கு பொறுப்பானவர் தனிப்பட்ட ரீதியில் எவரையும் தாக்கியதில்லை. நாங்கள் விரைவில் உண்மையை வெளியிடுவோமென இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

 

யாழ். மாநகர சபையின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

குற்றச்சாட்டு சுமத்தியவரே  குற்றத்திற்கு பொறுப்பானவர் நாங்கள் எமது கொள்கைகள் கோட்பாடுகளுடன் எமது இலக்கை அடைய போராடி வருகின்றோம். தனிப்பட்ட ரீதியில் எவரையும் தாக்கியதில்லை. நாங்கள் விரைவில் உண்மையை வெளியிடுவோம்.

 

 

தனிப்பட்ட அரசியல் வாழ்க்கையிலும் சரி இலங்கை தமிழரசுக் கட்சியின் வரலாற்றிலும் சரி இவ்வாறான கேள்விகள் எழுவதில்லை. இதற்கு சொந்தக்காரர்கள் தான் இவ்வாறான கேள்விகளை கேட்டுள்ளார்கள்.

mavai.jpg

கொள்கைகள் தந்திரோபாயங்களுக்காக ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றோம். அந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில்தான் பல கோடிகள் மக்களின் அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

 

குறிப்பாக வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு இரண்டு கோடி ரூபா இலஞ்சம் வழங்கியமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் கருத்துத் தெரிவித்தமை தொடர்பில் பதிலளிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ.சரவணபவன், மாகாண சபை உறுப்பினர்களான இ.ஜெயசேகரம், பா.கஜதீபன், பரஞ்சோதி மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொருளாளர் கனகசபாபதி, மாநகர சபையின் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/29792

 

 

த.தே.கூட்டமைப்பின் யாழ். மாநகர சபைத் தேர்தலுக்கான விஞ்ஞாபன வெளியீடு!

 

த.தே.கூட்டமைப்பின் யாழ். மாநகர சபைத் தேர்தலுக்கான விஞ்ஞாபன வெளியீடு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபைத் தேர்தலுக்கான விஞ்ஞாபன வெளியீடு இன்று(22) பிற்பகல் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் இடம்பெற்றது.

வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி. கே. சிவஞானம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தை வெளியிட்டு வைக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றாகிய புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த. சித்தார்த்தன் பெற்றுக் கொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான த. ஜெயசேகரம், பா. கஜதீபன், எஸ். பரஞ்சோதி ஆகியோரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகர சபை வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

த.தே.கூட்டமைப்பின் யாழ். மாநகர சபைத் தேர்தலுக்கான விஞ்ஞாபன வெளியீடு!

த.தே.கூட்டமைப்பின் யாழ். மாநகர சபைத் தேர்தலுக்கான விஞ்ஞாபன வெளியீடு!

த.தே.கூட்டமைப்பின் யாழ். மாநகர சபைத் தேர்தலுக்கான விஞ்ஞாபன வெளியீடு!

https://news.ibctamil.com/ta/internal-affairs/TNA-local-government-election-22

  • தொடங்கியவர்

சிவசக்தியின் கருத்தால் வருத்தப்படும் மாவை

சிவசக்தியின் கருத்தால் வருத்தப்படும் மாவை

 

வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்ததற்காக அரசாங்கத்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு, இரண்டு கோடி ரூபா வழங்கப்பட்டதாக, சிவசக்தி ஆனந்தன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என்றும், இது தனக்கு கவலையை ஏற்படுத்தியதுடன் அதனை நினைத்து கண்ணீர் சிந்தியதாகவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பின் சக பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தனின் இந்தக் குற்றச்சாட்டுக்கள் தம்மை அச்சுறுத்துவதால் அது குறித்து தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட உள்ளதாகவும் ஆயினும் இரண்டு கோடிக்கு விலைப்படுபவர்கள் தாங்கள் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாநகர சபைக்கான தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நேற்று நடைபெற்ற போதே, பாராளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, தமிழரசுக் கட்சிப் பயணத்திலும் சரி, இத்தகைய அநாகரிகமான செயற்பாடுகளை மேற்கொண்டது கிடையாது. எமது கொள்கைகளின் தந்திரோபாயமாக மத்திய அரசுடனும் பேச்சுக்களை நடத்தி வருகின்றோம்.

இதனடிப்படையில் தான் எமது மக்களின் பிரச்சினைகள், தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசுடன் பேசி இந்த ஒதுக்கீடுகளைப் பெற்றுக் கொண்டோம்.

நாம் எமது தேர்தல் அறிக்கைகளிலும் அரசியற் தீர்வு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் பொருளாதார மேம்பாட்டுடன் இணைந்து, எமது மக்களையும் எமது தேசத்தையும் மீளக்கட்டியெழுப்ப வேண்டுமென்ற பிரதான விடயங்களை உள்ளடக்கி வந்திருக்கின்றோம்.

இதற்கே எமது மக்கள் தமது ஆணையை எமக்கு வழங்கி வந்திருக்கின்றார். இவ்வாறு நாம் மக்களுக்காக செய்கின்ற விடயங்களை வைத்து நாம் இலஞ்சம் வாங்கியதாக கூறுவது மிக வேதனையாக உள்ளது.

மேலும், இவ்வாறான செய்திகள் வருகின்ற போது, அவை பற்றிய விளக்கங்கள் ஊடகங்களுக்கு தெரியாதா? அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டாமா? அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எம்மிடம் கேட்க வேண்டுமென்ற தார்மீக கடமை இல்லையா என்றும் ஊடகங்களிடம் மாலை சேனாதிராஜா கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன், மக்களுக்காக நாங்கள் செயற்படுகின்ற போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்கின்றது என்று தெரியாதவர்கள் கேட்பதில் நியாயம் இருந்தாலும் தெரிந்தவர்கள் ஏன் அவ்வாறு கேட்கின்றனர். நாம் மக்களுக்கான அரசியற் தீர்வுடன் இணைந்ததாக மக்களின் வாழ்வையும் வளப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்.

நாம் அரசிடம் இரண்டு கோடி அல்ல பல ஆயிரம் கோடிகளைப் பெற்று மக்களுக்குச் சேவையாற்றியிருக்கின்றோம். இவ்வாறு நாம் செயற்படுகின்ற போது தான், இவ்வாறான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன.

இவ்வாறு இரண்டு கோடிகளுக்கு விலைபோகின்றவர்கள் நாங்கள் அல்ல. எம்மை விலைபோனவர்கள் என்று சொல்பவர்களுக்கு அது பொருந்தினாலும் எமக்கு அது பொருந்தாது. ஆயினும், குற்றச்சாட்டுக்கள் எமக்கு மிகக் கவலையை ஏற்படுத்தியிருப்பதுடன் அது எம்மை அச்சுறுத்தும் செயல் என்பதால் தேர்தல்கள் ஆணையாளரிடமும் முறையிட உள்ளோம்.

நாங்கள் கொலையாளிகளோ, கொள்ளையடிப்பவர்களோ, மோசடியாளர்களோ அல்ல. நாங்கள் எப்பொதும் பொய் சொல்லியதில்லை. மக்களுக்கு உண்மையையே சொல்லி வருகின்றோம். இந்த நிலையில் மக்களை ஏமாற்றி வாக்குப் பெறுதற்காகத் தான் பாராளுமன்ற உறுப்பினர் பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார்.

தமிழ் தலைமையை மாற்ற வேண்டும், தமிழரசுக் கட்சியை வேரறுக்க வேண்டும். என்று எல்லாம் பேசி வருகின்றனர். இதேபோன்று தான் கடந்த தேர்தலிலும் சம்பந்தனை, சுமந்திரனை தோற்கடிக்க வேண்டுமென்று கூறினார்கள்.

உண்மையில் நடந்தது என்ன. அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியும். அன்று அவ்வாறு கூறியவர்கள் தான் இன்றும் அதனையே கூறுகின்றனர். ஆயினும் அவ்வாறு கூறி வருபவர்களது கொள்கைகள், கோட்பாடுகள் என்ன? தங்கள் திட்டங்கள் என்ன? என்பது பற்றி என்றும் சொல்லியதில்லை. ஆனால், நாம் எமது கொள்கை கோட்பாடுகளை முன்வைத்தே வருகின்றோம்.

நாம் நிதானமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் பெய்களைப் பேசி மக்களைத் திசை திருபாது உண்மையைப் பேச வேண்டுமென்றும் தெற்கிலே இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டுமென்றும் இங்கே வடக்கு கிழக்கிலே தமிழரசுக் கட்சியை தோற்கடிக்க வேண்டுமென்றும் பலரும் போராடுகின்றனர் என்றார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மாவை சேனாதிராஜாவிடம், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்வார்களா என வினவப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், நாம் அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருக்கிறதென்றால் பல அமைச்சுக்களை பெற்றிருக்கலாம். சிறிய சிறிய கட்சிகளே பல அமைச்சுக்களை பெற்றிருக்கின்ற போதும், நாம் எமக்கு அமைச்சுப் பதவிகள் வேண்டாம் என்று கூறி நிராகரித்திருந்தோம்.

அவ்வாறு ஏற்கனவே எமக்கு, வந்த அமைச்சுப் பதவிகளையே நிராகரித்திருக்கின்ற நிலையில் மீளவும் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்ற நிலைப்பாட்டிலே இருக்கின்றோம். அது குறித்து எந்தப் பேச்சுக்களும் கிடையாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=99449

 

 

நாங்கள் கொலையாளிகளும் அல்ல கொள்ளையடிப்பவர்களும் அல்ல

1-99e14b59af2c4d46d013b11789c589eb0ab8ccf7.jpg

 

குற்றச்சாட்டு சுமத்தியவர்களே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் மாவை
(எம்.நியூட்டன்)

குற்­றச்­சாட்டு சுமத்­தி­ய­வரே குற்­றத்­திற்கு பொறுப்­பா­ன­வ­ராவார். நாங்கள் எமது கொள்­கைகள், கோட்­பா­டு­க­ளுடன் எமது இலக்கை அடைய போராடி வரு­கின்றோம். தனிப்­பட்ட ரீதியில் எவ­ரையும் தாக்­கி­ய­தில்லை எனத் தெரி­வித்த இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்சித் தலைவர் மாவை சேனா­தி­ராஜா நாங்கள் விரைவில் உண்­மையை வெளி­யி­டுவோம் எனத் தெரி­வித்தார்.

யாழ். மாந­கர சபையின் தேர்தல் விஞ்­ஞா­பன வெளி­யீடு நேற்று யாழ். இளங்­க­லைஞர் மண்­ட­பத்தில் நடை­பெற்­ற­போது ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளித்­த­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

குறிப்­பாக வரவு – செலவுத் திட்­டத்­திற்கு ஆத­ரவு தெரி­விப்­ப­தற்கு கூட்­ட­மைப்பு எம்.பி.க்களுக்கு தலா இரண்டு கோடி ரூபா வழங்­கப்­பட்­ட­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தி வரு­கின்றார். இது­கு­றித்து கேட்­ட­போதே மாவை சேனா­தி­ராஜா எம்.பி. மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்,

தனிப்­பட்ட அர­சியல் வாழ்க்­கை­யிலும் சரி இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் வர­லாற்­றிலும் சரி இவ்­வா­றான கேள்­விகள் எழு­வ­தில்லை. இதற்கு சொந்­தக்­கா­ரர்கள் தான் இவ்­வா­றான கேள்­வி­களை கேட்­டுள்­ளார்கள். கொள்­கைகள், தந்­தி­ரோ­பா­யங்­க­ளுக்­காக ஒவ்­வொரு சந்­தர்ப்­பங்­க­ளிலும் அர­சாங்­கத்­துடன் பேச்­சு­வார்த்­தை நடத்தி வரு­கின்றோம். அந்த பேச்­சு­வார்த்­தையின் அடிப்­ப­டை­யில்தான் பல கோடி ரூபா மக்­களின் அபி­வி­ருத்­திக்­காக ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது.

நாங்கள் எங்­க­ளு­டைய தேர்தல் அறிக்­கையில் தெளி­வாக இரண்டு விட­யங்­களை கூறி­யுள்ளோம். ஒன்று இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு, மற்­றை­யது அழிந்­து­போன எமது தேசத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வது. மக்கள் இதற்கு எமக்கு ஆணை தந்­துள்­ளார்கள். இவ் விட­யங்­களை பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரிந்­தி­ருக்க வேண்டும்.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இவ்­வா­றான விட­யங்­களை பேசும்­போது அவ­தா­ன­மாக இருக்க வேண்டும். சில ஊட­கங்­களில் இவ்­வா­றான செய்­திகள் வரு­கின்­ற­போது இது தொடர்பில் ஆதாரம் இருக்­கின்­றதா என்­பதை தேடிப்­பார்க்க வேண்டும். குற்­றச்­சாட்டு தொடர்­பிலும் மறு­த­ரப்­பி­டமும் விசா­ரிக்க வேண்டும். இதற்­கான கடமை ஊட­கங்­க­ளுக்கு உண்டு. தார்­மீகக் கட­மையை மீறியே இந்தச் செய்­தி­யினை அந்த ஊடகம் வெளி­யிட்­டுள்­ளது.

எங்­க­ளு­டைய வர­லாற்றில் இவ்­வா­றான சம்­பவங்கள் நடை­பெற்­ற­தில்லை. அவர்­க­ளு­டைய வர­லாற்றில் இது நடந்­தி­ருக்கும். இந்த அர­சாங்­கத்தில் பல்­வே­று­கட்ட பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி மக்­க­ளுக்­கான அபி­வி­ருத்தித் திட்­டங்­களை முன்­வைத்­தி­ருக்­கின்றோம். வட கிழக்குப் பகு­தி­க­ளுக்கு ஜனா­தி­பதி, பிர­தமர், அமைச்­சர்கள் வரும்­போது பல்­வேறு கோரிக்­கை­களை நாங்கள் முன்­வைத்­தி­ருக்­கின்றோம். அபி­வி­ருத்தித் திட்­டங்­களை ஒருங்­கி­ணைத்துச் செய்­யு­மாறும் கோரிக்­கை­களை நாங்கள் முன்­வைத்­துள்ளோம்.

எமது கோரிக்­கை­க­ளி­னால்தான் இவ்­வா­றான நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு முறைப்­ப­டி­யான திட்­டங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு என்ன செய்­கின்­றது என்­பது தெரிந்­த­வர்­க­ளுக்குத் தெரியும். தெரி­யா­த­வர்கள் இதனைக் கேட்­கலாம். ஆதா­ர­பூர்­வ­மான சில விட­யங்­களை நாங்கள் மக்கள் முன் வைக்­க­வுள்ளோம். இவ்­வா­றான சூழலில் பொய்­சொல்லி மக்­களை ஏமாற்றத் தேவை­யில்லை. பொய்­களை கூறி மக்­களை ஏமாற்றி தேர்­தலில் வெல்­லு­வ­தற்­கா­கவே குறித்த பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இவ்­வாறு செயற்­பட்­டுள்ளார்.

எங்­க­ளுக்கு இவ்­வாறு தனிப்­பட்ட ரீதியில் தாக்­கு­வதோ, வீண்­பழி சுமத்­து­வதோ தேவை­யற்­றது. அவ்­வா­றான பழக்கம் எம்­மி­ட­மில்லை. குற்­றச்­சாட்டு சுமத்­தி­ய­வரே குறித்த குற்­றத்­திற்கு பொறுப்­பா­னவர். அவ­ருக்கு எமது நன்­றிகள் உரித்­தா­கட்டும். குறித்த குற்­றச்­சாட்டு தொடர்பில் தேர்தல் ஆணை­யகத்­தி­டமும் முறை­யி­ட­வுள்ளோம். சட்­டத்­த­ர­ணி­க­ளி­டமும் ஆலோ­சனை பெற்­றுள்ளோம். எங்­களை பத்­தி­ரி­கைகள் ஊடாக அச்­சு­றுத்­து­கின்ற முயற்­சியே இது­வாகும். நாங்கள் எந்­த­வொரு காலத்­திலும் விலை போன­வர்கள் அல்ல. அப்­ப­டி­யாக இருந்தால் நாங்கள் அமைச்­சர்­க­ளாக இருப்போம். எத்­த­னையோ சிறிய கட்­சி­களைச் சேர்ந்­த­வர்கள் அமைச்­சர்­க­ளாக இருக்­கின்­றார்கள். எங்­களை பலர் நிர்ப்­பந்­தித்­தார்கள். நாங்கள் மாட்டோம் என்று இருந்தோம்.

கொள்­கைக்­காக கொள்­கை­யுடன் செயற்­ப­டு­ப­வர்கள் நாங்கள் யார் என்­பது மக்­க­ளுக்குத் தெரியும். நாங்கள் கொலை­யா­ளிகள் அல்ல. கொள்­ளை­ய­டிப்­ப­வர்கள் அல்ல, மோச­டிக்­கா­ரர்கள் அல்ல. மோச­டி­யாக நடப்­ப­வர்­களும் அல்ல. இன்று ஒரு­சில கட்­சி­க­ளு­டைய சுலோகம் தலை­மையை மாற்­ற­வேண்டும் என்­ப­தாகும். கடந்த தேர்­த­லிலும் இத­னைத்தான் முன்­வைத்­தார்கள். சம்­பந்­தனை, சுமந்­தி­ரனை தோற்­க­டிக்க வேண்டும். இதற்­காக வெளியில் உள்ள சக்­தி­க­ளுடன் சேர்ந்து ஏகப்­பட்ட வேலைகள் செய்­தார்கள். இறு­தியில் நடந்­தது என்ன?- தற்­போதும் அத்­த­கைய கதையை கட்­டு­கி­றார்கள். மக்கள் பிர­தி­நி­திகள் பொறுப்­புடன் நடந்­து­கொள்ள வேண்டும். இருக்­கின்ற சந்­தர்ப்­பங்­களை இழந்­து­வி­டக்­கூ­டாது.

தென்­னி­லங்­கையில் நெருக்­க­டிகள் வரு­கின்­றன. அங்கு அர­சாங்­கத்தை தோற்­க­டிக்க வேண்டும் என முயற்­சிகள் நடக்­கின்­றன. இங்கு தமி­ழ­ரசுக் கட்­சியை, அதன் தலை­மையை தோற்­க­டிக்க வேண்டும் என போரா­டு­கின்­றார்கள். தேர்­தலில் போட்­டி­யிடும் கட்­சிகள் மக்­க­ளுக்கு என்ன செய்ய வேண்டும், எவ்­வாறு செய்­ய­வேண்டும் என்­ப­தையே அறிக்­கையில் கூறு­வார்கள். ஆனால் இங்­குள்ள சில கட்­சிகள் எதை­யெல்லாம் பிர­சு­ரிக்­கின்­றன. நாங்கள் ஒவ்­வொரு முறையும் கொள்­கைகள், கோட்­பா­டு­களை எத்­த­கைய இலக்கை அடைய வேண்டும் என்­பதை வெளிப்­ப­டுத்தி வரு­கின்றோம். தனிப்­பட்ட ரீதியில் எவ­ரையும் தாக்­கி­ய­தில்லை. நாங்கள் விரைவில் உண்­மையை வெளி­யி­டுவோம் என்றார்.

குறித்த நிகழ்வில் யாழ்.மாநகர சபை யின் தேர்தல் விஞ்ஞாபனத்தை மாவை சேனாதிராஜா வெளியிட பாராளுமன்ற உறுப்பினரும் புௌாட் இயக்கத்தின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் பெற்றுக்கொண்டார். வடக்கு மாகாண சபை யின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ் வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங் கம் சித்தார்த்தன், ஈ.சரவணபவன், மாகாண சபை உறுப்பினர்களான இ.ஜெயசேகரம், பா.கஜதீபன், பரஞ்சோதி மற்றும் இலங் கைத் தமிழரசுக் கட்சியின் பொருளாளர் கனகசபாபதி, மாநகர சபையின் வேட்பா ளர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-01-23#page-2

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை மகிந்த தரப்பு உறுப்பினர்களும் கிழித்தார்களே! அப்போது தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டீர்களா? 

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, MEERA said:

உங்களை மகிந்த தரப்பு உறுப்பினர்களும் கிழித்தார்களே! அப்போது தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டீர்களா? 

அதெல்லாம் இப்போதைக்கு கேட்க்க கூடாது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.