Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாண பல்கலை சிங்கள மாணவர்கள் நால்வர் மறியலில்!

Featured Replies

யாழ்ப்பாண பல்கலை சிங்கள மாணவர்கள் நால்வர் மறியலில்!

 

யாழ்ப்பாண பல்கலை சிங்கள மாணவர்கள் நால்வர் மறியலில்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மூன்றாம் ஆம் வருட சிங்கள மாணவர்கள் 4 பேர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

4ஆம் வருட மாணவர்கள் இருவரைத் தாக்கிய குற்றச்சாட்டிலேயே அவர்கள் விளக்கமறியில் வைக்கப்பட்டனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 4ஆம் வருட சிங்கள மாணவர்கள் இருவருக்கும் இருவருக்கும் 3ஆம் வருட சிங்கள மாணவர்களை கடந்த வியாழக்கிழமை இரவு பல்கலைக்கழகத்திற்கு முன்பாக வைத்து தாக்குதல் நடத்தினர்.

சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான மாணவர்கள், கோப்பாய் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர். அவர்கள் இருவரும் காயங்கள் ஏற்படாத போதும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார், தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் 4 சிங்கள மாணவர்களைக் கைது செய்தனர்.

அவர்கள் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.மாணவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் பிணை விண்ணப்பம் செய்தார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையேயான மோதல்கள் தற்போது அதிகரித்து வருவதால், விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் 4 மாணவர்களையும் வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

 

https://news.ibctamil.com/ta/internal-affairs/jaffna-courts--news-22012017

  • கருத்துக்கள உறவுகள்

என்ன பிரச்சனையாக இருக்கும் ?

  • தொடங்கியவர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக சிங்கள மாணவர்களுக்கு பிணை :

Jaff-uni-_2320.jpg?resize=800%2C600
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 3ஆம் வருட சிங்கள மாணவர்கள் 13 பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இன்று வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 4ஆம் வருட சிங்கள மாணவர்கள் இருவருக்கு 3ஆம் வருட சிங்கள மாணவர்கள் கடந்த 18ஆம் திகதி வியாழக்கிழமை இரவு பல்கலைகழகத்துக்கு முன்பாக வைத்து தாக்குதல் நடத்தினர்.

சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்குள்ளான மாணவர்கள், கோப்பாய் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்தனர். இந்த நிலையில் விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் காவல்துறையினர், தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் 4 சிங்கள மாணவர்களைக் கைது செய்தனர். அவர்கள் நான்கு பேரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

Jaff-uni-_2329.jpg?resize=781%2C542

இந்த நிலையில் 3ஆம் வருட சிங்கள மாணவர்கள் 9 பேர் கோப்பாய் காவல் நிலையத்தில் நேற்றுச் சரணடைந்தனர். அவர்கள் 9 பேரும் நீதிமன்றின் உத்தரவில் இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் 13 மாணவர்களும் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். 13 மாணவர்களையும் நிபந்தனையுடனான பிணையில் விடுவித்து நீதிவான் உத்தரவிட்டார்.

http://globaltamilnews.net/2018/63189/

  • கருத்துக்கள உறவுகள்
On ‎22‎.‎01‎.‎2018 at 5:47 PM, பெருமாள் said:

என்ன பிரச்சனையாக இருக்கும் ?

4ஆம் வருட மாணவர்கள் ஒருவருடம் கூடுதலாகத் தமிழருடன் பழகியதால் சிறிது முக்தியடைந்துள்ளனர். :grin:

3ஆம் வருட மாணவர்கள் ஒருவருடம் குறைவாகப் பழகியதால் இன்னமும் முக்தியடையவில்லை. :shocked:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.