Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்களுக்காக தனிச்சட்டம் இயற்ற முடியாது: இலங்கை அரசு

Featured Replies

தமிழக மீனவர்களுக்காக தனிச்சட்டம் இயற்ற முடியாது: இலங்கை அரசு

 

 
srilanka


கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்காக தனிச்சட்டம் இயற்ற முடியாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

எல்லை தாண்டும் மீனவர்களுக்கு ரூ.40 லட்சம் முதல் ரூ.15  கோடி வரை அபராதம் விதிக்கும் வகையில் இலங்கை அரசு சட்டம் நிறைவேற்றியது.

இதற்கு தமிழக மீனவர்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உடனடியாக இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வர அழுத்தம் கொடுக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.

பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியது குறித்து இலங்கை அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று பதிலளித்துள்ளார். 

அதாவது, இலங்கை எல்லைக்குள் மீன் பிடிக்க தமிழர்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். தமிழக மீனவர்களுக்கு என புதிய சட்டம் நிறைவேற்ற முடியாது என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

மேலும், போராட்டம் நடத்துவதை விட்டுவிட்டு தமிழக மீனவர்கள் எல்லை தாண்டாமல் இருக்க வேண்டும். தமிழக மீனவர்களுக்காக சட்டத்தில் எந்த திருத்தத்தையும் செய்ய முடியாது என்று மஹேந்திர அமர வீர பதிலளித்துள்ளார்.

http://www.dinamani.com/world/2018/jan/27/தமிழக-மீனவர்களுக்காக-தனிச்சட்டம்-இயற்ற-முடியாது-இலங்கை-அரசு-2852295.html

  • தொடங்கியவர்

எல்லை தாண்டும் வெளிநாட்டுப் படகுகளை கட்டுப்படுத்த இலங்கை மசோதாவை வாபஸ் பெற முடியாது: மகிந்த அமரவீர தகவல்

mahi

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயகலா மகேஸ்வரன், சுமந்திரன் | கோப்புப் படம்.

இலங்கை நாடாளுமன்றத்தில் எல்லை தாண்டிவந்து மீன் பிடிக்கும் வெளிநாட்டுப் படகுகளை கட்டுப்படுத்தும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத் திருத்த மசோதாவை வாபஸ் பெற முடியாது என அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர சமீபத்தில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசுகையில், ''இலங்கை கடல்பகுதியில் தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைந்து வாரத்துக்கு 6 ஆயிரம் டன் அளவில் மீன்களை பிடித்துச் செல்கின்றனர். அத்துமீறி இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை முற்றிலும் தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் விரைவில் தாக்கல் செய்யப்படும்'' என்று தெரிவித்தார்.

இலங்கை கடல் பகுதியில் தடை செய்யப்பட்ட வலைகள், படகு மூலம் மீன்பிடிக்கும் உள்நாட்டு (இலங்கை) மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுவதுபோல, இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிக்கும் வெளிநாட்டு படகுகளுக்கும் தண்டனை மற்றும் அபராதம் விதிப்பதற்கு அந்நாட்டு மீன்வளத்துறை சார்பில் புதிய சட்டதிட்டத்தை தயாரிப்பதற்கு தனிக்குழுவும் அமைக்கப்பட்டது.

இதனடிப்படையில் இலங்கை மீன்வளத் துறையின் 59/1979-ம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான திருத்த மசோதாவை கடந்த புதன்கிழமை அன்று இலங்கை நாடாளுமன்றத்தில் அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர சமர்ப்பித்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட திருத்த மசோதாவிலுள்ள ஷரத்துகளின்படி, 15 மீட்டர் நீளமுடைய படகுக்கு இலங்கை மதிப்பு ரூ.50 லட்சம் (இந்திய மதிப்பு ரூ.20 லட்சத்து 69,915), 15 முதல் 24 மீட்டர் நீளமுள்ள படகுக்கு ரூ.2 கோடி (இந்திய மதிப்பு ரூ.82 லட்சத்து 79,661), 24 மீட்டர் முதல் 45 மீட்டர் நீளமுள்ள படகுக்கு ரூ.10 கோடி (இந்திய மதிப்பு ரூ.4 கோடியே 13 லட்சத்து 98,305), 45 முதல் 75 மீட்டர் நீளமுள்ள படகுக்கு ரூ. 15 கோடி (இந்திய மதிப்பு ரூ.6 கோடியே 20 லட்சத்து 97,457), 75 மீட்டருக்கும் அதிகமுள்ள படகுக்கு ரூ.17.5 கோடி வரையிலும் (இந்திய மதிப்பு ரூ.7 கோடியே 24 லட்சத்து 47,033) அபராதம் விதிக்கப்படும்.

மேலும், சட்டவிரோதமாக மீன்களைப் பிடிக்கும் படகுகளை இலங்கை கடலோரக் காவல் படையினரோ, மீன்வளத்துறையினரோ பறிமுதல் செய்யும்போது, அது எந்த நாட்டைச் சேர்ந்த மீன்பிடி படகோ, அந்த நாட்டுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பறிமுதலான மீன்பிடி படகு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெறும்போது, அந்த மீன்பிடி படகின் உரிமையாளர் நீதிமன்றத்தில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக முதல்வர் கே.பழனிசாமி மற்றும் புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை அரசு கொண்டுவந்துள்ள சட்டத் திருத்த மசோதாவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.

இது குறித்து சனிக்கிழமை கொழும்பில் செய்தியாளர்கள் சந்திப்பில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர கூறுகையில், ''இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி எந்தவொரு வெளிநாட்டு படகுகளும் மீன்டிப்பதை அனுமதிக்க முடியாது. எங்கள் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே இலங்கை மீன்பிடி சட்டத்தில் புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்திய மீனவர்களுக்கு ஏற்ற வகையில் சட்டத்தில் திருத்தங்களை செய்யவோ வாபஸ் பெறவோ முடியாது.

இலங்கை மீன்பிடிச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்களை தமிழகத்தில் போராட்டங்களை நடத்துவதைக் காட்டிலும் எல்லை தாண்டாமல் இந்திய எல்லைக்குள்ளையே மீன்பிடித்துக் கொள்ள வேண்டும்'' என்றார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article22536577.ece?homepage=true

  • கருத்துக்கள உறவுகள்

அடேய் அடுத்தவன்ர வளவுக்குள்ள போவதற்கு என்ன பாடு படுகிகிறீர்கள், வெட்கமாயில்லை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.