Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாற்பதை தொட்ட பெண்கள் உஷார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாற்பதை தொட்ட பெண்கள் உஷார்!

‘தங்களுக்கே தெரியாமல் தங்கள் பிறப்புறுப்பில் புற்று நோயைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள் கிராமத்துப் பெண்கள்!’ &இப்படியரு ‘ஷாக்’ ரிப்போர்ட் வந்திருப்பது, தமிழக அரசின் ‘வருமுன் காப்போம்’ திட்டத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில்தான்!

‘கிராமப்புற பெண்களை மட்டும் இந்த நோய் குறிவைக்கக் காரணம் என்ன?’ என மருத்துவ வட்டாரத்தில் விசாரித்த போது கேள்விப்பட்ட விஷயங்கள், மேலும் நம்மை அதிர்ச்சியில் தள்ளியது.

இதுகுறித்து நம்மிடம் விரி வாகப் பேசிய தேனி மாவட்ட மருத்துவத்துறை துணை இயக்குநர் பாலசுப்பிரமணியன், ‘‘தேனி மாவட்டத் தில் இதுவரை பத்து மருத் துவ முகாம்களை நடத்தி இருக்கிறோம். அதில், முப்பது வயதிலிருந்து நாற்பது வயதுடைய கிராமப் பெண்களுக்கு மர்ம உறுப்பில் புற்றுநோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து ஏற்கெனவே சர்வே மேற்கொண்ட உலக சுகாதார மையமும், இந்திய மருத்துவக் கழகமும் கிராமப்புற பெண் களுக்கு இதுபோன்ற நோய் இருப்பதை எங்களுக்கு அறிவுறுத்தியது. அதையடுத்து நாங்களும் தீவிரமாகப் பரிசோதனையில் இறங்கினோம். இது வரையில் தமிழகத்தின் முக்கியமான நான்கு ஊர்களில் நடத்தப்பட்ட மருத்துவமுகாம்கள் மூலமாக எங்களுக்குக் கிடைத்திருக்கும் தகவலைச் சொன்னால் அதிர்ந்துதான் போவீர்கள். அந்த முகாம்கள் மூலமாக ஏராளமான கிராமத்துப் பெண்களை சோதித் ததில் சுமார் ஒரு லட்சத்து எழுபதாயிரம் பெண்களுக்கு இந்த புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப் பட்டிருக்கிறது. இதெல்லாம் ஆரம்ப கட்டம்தான் என் றாலும், காலப் போக்கில் இதன் பாதிப்புகள் தீவிரமாகும் என்பதையும் மறுப்பதற்கில்லை.’’ என்றார்.

உடனே, இந்த நோய் வருவதற்கான காரணம் என்ன என்று அவரிடமே கேட்டோம். ‘‘குறிப்பாக போன தலைமுறை பெண்கள், அதாவது முப்பது வயதிலிருந்து நாற்பது வயதுள்ளவர்கள் மாதவிடாய் காலங்களில் சானிட்டரி நாப்கினுக்குப் பதிலாகத் துணியைப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் இதன் மூலம்தான் இந்த நோய் அவர்களின் பிறப்புறுப்பைத் தாக்குகிறது. நாப்கினாகப் பயன்படுத்தும் துணியை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக மரம், சுவர் என இண்டு இடுக்குகளில் மறைத்து வைக்கின்றனர். அவற்றையே எடுத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்துகின்றனர். துணியை நன்றாக சுடு தண்ணீரில் துவைக் காமல், தேங்கிக் கிடக்கும் கண்மாய் மற்றும் குளத்தில் துவைப்பதாலும் துணியில் ஏற்கெனவே இருக்கும் கிருமிகளுடன் சுத்தமில்லாத தண்ணீரில் இருக்கும் கிருமிகளும் சேர்ந்து விடுகின்றன. இதனால் உற்பத்தியாகும் வைரஸ், பாக்டீரியா போன்றவை பிறப் புறுப்பைத் தாக்குகின்றன. தொடர்ந்து இந்தத் தவறை செய்யும்போது நாப்கின் துணிகள் நோய்கிருமிகளின் கூடாரமாகவே மாறிவிடுகிறது. இதனால் பெண்களைத் துவக்கத்தில் வெள்ளைப்படுதல் நோய் தாக்கும். பிறகு அதுவே புற்றுநோய்க்கும் அடித்தளம் போட்டுவிடும். இது ஒரு புறமிருக்க... துணி பயன்படுத்தும் பெண்கள், துணியைப் பின்புறத்திலிருந்து முன்புறம் கட்டுவதால் மல வாயிலுள்ள அசுத்தங்கள் துணியில் பட்டு, அதிலிருக்கும் கிருமிகளும் பிறப்புறுப்பைக் கடுமையாகப் பாதித்துவிடுகின்றன. இவை மொத்தமாக சேர்ந்துதான் நாளடைவில் புற்றுநோயை உருவாக்குகின்றன. அதனால் சுகாதாரமான துணி அல்லது நாப்கின்களைப் பயன்படுத்தாத பட்சத்தில் எதிர்காலத்தில் கிராமப்புறப் பெண்கள், இந்த நோயால் பெரிய அளவில் பாதிக்கப்படும் ஆபத்திருக்கிறது’’ என திகிலூட்டியவர்,

‘‘மொத்தத்தில் சுகாதாரத்தைப் பேணுவதைத் தவிர இதிலிருந்து தப்பிக்க வேறு வழியே இல்லை. இதை வலியுறுத்தி ஊட்டச்சத்துத் துறையுடன் இணைந்து வளர்இளம் பெண்களுக்கு வாராந் திர பயிற்சிகளை நடத்தி வருகிறோம். அதில் முப்பது வயதைத் தாண் டிய பெண்களுக்கும், கருவுற்ற தாய் மார்களுக்கும் பிறப்புறுப்பு புற்றுநோய் குறித்து விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறோம்’’ என்றார்.

தொண்டு நிறுவனங்களில் உள்ள பெண்கள் அனைவரையும் இணைத்து, பெண்கள் நெட்வொர்க் நடத்தி வரும் டாக்டர் சாம்ராயை சந்தித்தபோது அவர், ‘‘மதுரை மண்டலத்தில் எய்ட்ஸ் குறித்த மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம். கிராமிய பெண்கள், மர்ம உறுப்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவது குறித்து எங்களுக்கு அதிகாரிகள் தகவல் கொடுத்ததால், அது பற்றியும் எங்கள் மகளிர் குழுக்கள் மூலம் விழிப்பு உணர்வு பிரசாரம் செய்து வருகிறோம். கிராமப்புற பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்த திட்டங்களை செயல்படுத்தும் அரசும் இந்த விஷயத்தில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும்’’ என் றார்..

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரிடம் நாம் பேசியபோது, ‘‘இந்த விஷயம் தொடர்பாக வருமுன் காப்போம் முகாம்களில் தனிக்கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளோம். இந்த நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு ஆரம்ப சுகாதார மையங்களில் மருந்து& மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆரம்ப சுகாதார மையத்துக்கும், புற்றுநோய் இருப்பதை கண்டறியும் கருவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் இந்த நோயை ஆரம்ப நிலையிலே குணப் படுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கிரமப்புற மக்களுக்கு இலவசமாக சானிட்டரி நாப்கின் தருவது பற்றி எங்கள் துறை அலுவலர்களிடம் ஆலோசனை கேட்டு, தலைவர் கலைஞரின் கவனத்துக்குக் கொண்டுசென்று முடிவு எடுக்கப்படும்’’ என்றவர், ‘‘கிராமப்புற மக்களின் சுகாதார மேம்பாட்டுக்குத் தொண்டு நிறுவனங்களை ஒருங்கிணைத்து விழிப்பு உணர்வு பிரசாரத்தையும் செய்து வருகிறோம். அதை இன்னும் தீவிரப்படுத்துவோம்...’’ என்றார்.

விகடன்

  • 2 weeks later...

அப்ப பெண்களுக்கு இப்படின்னா கோவணங்களினை தோய்க்காம திருப்பித்திருப்பி போடிற கனபேர் ஆண்களில் இருக்கிறீனம். அவையளுக்கும் இதே பிரச்சனை வரத்தானே வேணும். இல்லையா இயற்கை விதி அப்படித்தானே சொல்லுது. பெண்களுக்கு மாதவிடாய் வருவது போல ஆண்களுக்கு மாதம் மாதம் டிஸ்சாஜ் கனவில வாரது. நான் எப்பவும் உண்மையைதான் சொல்வேன். மனித உடம்பு என்பது ஒரு மின்சார பிறப்பாக்கி, எப்பவும் புவியின் காந்த பாயத்தில் சஞ்சரித்துக்கொண்டு இருக்கும் ஒரு ரோபோ. அதன் ஆயுள் இருக்கும் வரை

சுவாசிக்கும் காற்றினூடு இரத்தம் சீராக ஓட இதயம் என்ற பம்பை இயக்குகிறது. சில நேரங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். யாரும் உங்களினை தொட்டால் கறன்ட் அடிக்கும். அவர்கள் சன்னியாச வாழ்க்கை வாழ்பவர்கள். இச்சை என்ற ஒன்றை மனதினால் அடக்கி அந்த டிஸ்சாஜ் பண்ணும் சக்தியினை நெற்றிப்பகுதிக்கு கொண்டுவர பாடுபவர்கள். ஆகவே இந்த டிஸ்சார்ஜ் என்பது பெண்களுக்கும், பிறப்பு இறப்பு என்ற வட்டத்தினை அறுக்க வெளிக்கிடுபவர்கள் .ஆண்களுக்கு வேறு வேறு மாதிரியாக தெரிந்தாலும் எல்லாம் ஒன்றே.

ஆகவே ஆண்களுக்கும் இப்படி வாரது சகஜம்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப பெண்களுக்கு இப்படின்னா கோவணங்களினை தோய்க்காம திருப்பித்திருப்பி போடிற கனபேர் ஆண்களில் இருக்கிறீனம். அவையளுக்கும் இதே பிரச்சனை வரத்தானே வேணும். இல்லையா இயற்கை விதி அப்படித்தானே சொல்லுது. பெண்களுக்கு மாதவிடாய் வருவது போல ஆண்களுக்கு மாதம் மாதம் டிஸ்சாஜ் கனவில வாரது. நான் எப்பவும் உண்மையைதான் சொல்வேன். மனித உடம்பு என்பது ஒரு மின்சார பிறப்பாக்கி, எப்பவும் புவியின் காந்த பாயத்தில் சஞ்சரித்துக்கொண்டு இருக்கும் ஒரு ரோபோ. அதன் ஆயுள் இருக்கும் வரை

சுவாசிக்கும் காற்றினூடு இரத்தம் சீராக ஓட இதயம் என்ற பம்பை இயக்குகிறது. சில நேரங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். யாரும் உங்களினை தொட்டால் கறன்ட் அடிக்கும். அவர்கள் சன்னியாச வாழ்க்கை வாழ்பவர்கள். இச்சை என்ற ஒன்றை மனதினால் அடக்கி அந்த டிஸ்சாஜ் பண்ணும் சக்தியினை நெற்றிப்பகுதிக்கு கொண்டுவர பாடுபவர்கள். ஆகவே இந்த டிஸ்சார்ஜ் என்பது பெண்களுக்கும், பிறப்பு இறப்பு என்ற வட்டத்தினை அறுக்க வெளிக்கிடுபவர்கள் .ஆண்களுக்கு வேறு வேறு மாதிரியாக தெரிந்தாலும் எல்லாம் ஒன்றே.

ஆகவே ஆண்களுக்கும் இப்படி வாரது சகஜம்.

பொதுவாகவே வறிய நாடுகளில் உள்ள பெண்களுக்குள்ள பிரச்சனைதான் சார் இது. ஆண்களுக்கு பிரச்சனை வேறு. அவர்களுக்கு டிச்சார்ஜ் ஆகாவிட்டாலும் அப்சோப்சன் நடக்கும்..! பெண்களுக்கு அப்படியல்ல சார். பெண்களோ ஆண்களோ உடலை உடையை சுத்தமா வைச்சிருந்திட்டா பிரச்சனையில்ல. கறுப்பி மேம் சொன்னது போல உது 40 வயசுப் பிரச்சனையில்ல உது 15 வயசிலும் வரும்..! அது தனிநபர் சுகாதாரத்தில் தங்கி இருக்கிறது..! புற்றுநோயைத் தூண்டக் கூடிய சில நுண்கிருமிகள் வாழ தனிச்சுகாதாரக் குறைவான பெண்கள் அதிகம் இடம் கொடுக்கின்றனர். பெண்களின் பிறப்புறுப்புப் பகுதியில் பல நூறு நுண்ணங்கிகள் வாழ்கின்றன. ஆண்களுக்கு அப்படியல்ல..! சும்மா ஆண்களை பெண்களோடு எல்லாத்துக்கும் ஒப்பிடாம தனிநபர் சுகாதரத்தை பேண வழியுறுத்துங்க இருவரையும்..! அதுதான் தேவை..! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுவாகவே வறிய நாடுகளில் உள்ள பெண்களுக்குள்ள பிரச்சனைதான் சார் இது. ஆண்களுக்கு பிரச்சனை வேறு. அவர்களுக்கு டிச்சார்ஜ் ஆகாவிட்டாலும் அப்சோப்சன் நடக்கும்..! பெண்களுக்கு அப்படியல்ல சார். பெண்களோ ஆண்களோ உடலை உடையை சுத்தமா வைச்சிருந்திட்டா பிரச்சனையில்ல. கறுப்பி மேம் சொன்னது போல உது 40 வயசுப் பிரச்சனையில்ல உது 15 வயசிலும் வரும்..! அது தனிநபர் சுகாதாரத்தில் தங்கி இருக்கிறது..! புற்றுநோயைத் தூண்டக் கூடிய சில நுண்கிருமிகள் வாழ தனிச்சுகாதாரக் குறைவான பெண்கள் அதிகம் இடம் கொடுக்கின்றனர். பெண்களின் பிறப்புறுப்புப் பகுதியில் பல நூறு நுண்ணங்கிகள் வாழ்கின்றன. ஆண்களுக்கு அப்படியல்ல..! சும்மா ஆண்களை பெண்களோடு எல்லாத்துக்கும் ஒப்பிடாம தனிநபர் சுகாதரத்தை பேண வழியுறுத்துங்க இருவரையும்..! அதுதான் தேவை..! :lol:

கோவணக்கதையள் எண்டவுடனை வரிஞ்சுகட்டிக்கொண்டு முன்னுக்கு வந்துடுவியளே!அதுசரி எங்கை உங்கடை வில்லி மூக்கி?அவவுக்கு இப்பவும் அந்த நாய்க்குட்டிதான் துணையோ?ஆளைக்கண்டு கனகாலமப்பா :)

  • கருத்துக்கள உறவுகள்

கோவணக்கதையள் எண்டவுடனை வரிஞ்சுகட்டிக்கொண்டு முன்னுக்கு வந்துடுவியளே!அதுசரி எங்கை உங்கடை வில்லி மூக்கி?அவவுக்கு இப்பவும் அந்த நாய்க்குட்டிதான் துணையோ?ஆளைக்கண்டு கனகாலமப்பா :lol:

கோவணம் தான் குமாரசாமி சார் இம்போட்டண்ட்..! பிறப்புத் தொடங்கி வாழ்க்கை ஈறா முடிவு வரை அதில தான் சார் தங்கி இருக்குது..! சும்மா கோவணம் என்று கேலி பண்ணாதிங்க. ஆணோ பெண்ணோ அங்க பிரச்சனை என்றால் வாழ்ந்திட முடியுமா சார்..! சோ கோவணத்தை கிளீனா வைச்சிருக்கனும் என்றாங்க. தப்பே இல்ல..! :)

சுருக்கமா சொன்னா.. சுத்தம் சுகம் தரும்.

மூக்கிக்கு மூக்கு மேல கோவம் வாறபடியா பிளட் செக்கப்புக்கு போன இடத்தில கைப்பரென்சன் என்றிட்டாங்க.. எனியும் இங்க வந்தா இதயம் வெடிச்சு மரணம் வந்திடும் என்று பயப்படுத்திட்டாங்க போல. :):)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோவணம் தான் குமாரசாமி சார் இம்போட்டண்ட்..! பிறப்புத் தொடங்கி வாழ்க்கை ஈறா முடிவு வரை அதில தான் சார் தங்கி இருக்குது..! சும்மா கோவணம் என்று கேலி பண்ணாதிங்க. ஆணோ பெண்ணோ அங்க பிரச்சனை என்றால் வாழ்ந்திட முடியுமா சார்..! சோ கோவணத்தை கிளீனா வைச்சிருக்கனும் என்றாங்க. தப்பே இல்ல..! :lol:

சுருக்கமா சொன்னா.. சுத்தம் சுகம் தரும்.

மூக்கிக்கு மூக்கு மேல கோவம் வாறபடியா பிளட் செக்கப்புக்கு போன இடத்தில கைப்பரென்சன் என்றிட்டாங்க.. எனியும் இங்க வந்தா இதயம் வெடிச்சு மரணம் வந்திடும் என்று பயப்படுத்திட்டாங்க போல. :):)

என்ன நெடுக்கு சாமி இப்புடி சொல்லிப்போட்டியள்?இப்பெல்லாம் கோவணம் கட்டாமல் போறதுதானே பாஷன்.பத்திரிகைகளில்,தொலைகாட

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நெடுக்கு சாமி இப்புடி சொல்லிப்போட்டியள்?இப்பெல்லாம் கோவணம் கட்டாமல் போறதுதானே பாஷன்.பத்திரிகைகளில்,தொலைகாட

என்ன நெடுக்கு சாமி இப்புடி சொல்லிப்போட்டியள்?இப்பெல்லாம் கோவணம் கட்டாமல் போறதுதானே பாஷன்.பத்திரிகைகளில்இதொலைகா

கோவணக்கதையள் எண்டவுடனை வரிஞ்சுகட்டிக்கொண்டு முன்னுக்கு வந்துடுவியளே!அதுசரி எங்கை உங்கடை வில்லி மூக்கி?அவவுக்கு இப்பவும் அந்த நாய்க்குட்டிதான் துணையோ?ஆளைக்கண்டு கனகாலமப்பா :o

ஆமா..பிரைவட் மட்டர் எல்லாம் இங்கெ அலசி ஆராய்ரீங்க!..இதுக்கு நாம வந்து சண்டை பிடிப்பதா கு.சா தாத்தா? அசிங்கமா இருக்காது? :o

அப்புறம் நான் ஒன்னும் வில்லி கிடையாது.. :angry:

மூக்கிக்கு மூக்கு மேல கோவம் வாறபடியா பிளட் செக்கப்புக்கு போன இடத்தில கைப்பரென்சன் என்றிட்டாங்க.. எனியும் இங்க வந்தா இதயம் வெடிச்சு மரணம் வந்திடும் என்று பயப்படுத்திட்டாங்க போல. :rolleyes::D

என்ன? எங்களை மேலே அனுப்புவதில் அவ்வளவு இனிமை? நீங்க நினைப்பது போல் நாம் அவ்வளவு சீக்கிரம் டிக்கட் வாங்கமாட்டோம்.. :rolleyes:

Edited by mooki

அன்றைக்கு லைபிறறியில ஒரு காம சூத்திரம் புத்தகம் பார்த்தேன். நினைத்தேன் இதை ஏன் மொழிபெயர்க்கக் கூடாது என்று.

இங்க ஏதாச்சினும் அடெல்ஸ் ஒன்லி இருக்கா அப்ப இதை விலா வாரியா கதைச்சு ஆண்- பெண் உறவு எண்ணா எபாடி உண்மையா இருக்கணும் என்கிறதினை வடிவா அலசலாமில்லையா?

நான் நினைக்கவில்லை இது சரியான கேள்வி எண்ணு?

அன்றைக்கு லைபிறறியில ஒரு காம சூத்திரம் புத்தகம் பார்த்தேன். நினைத்தேன் இதை ஏன் மொழிபெயர்க்கக் கூடாது என்று.

இங்க ஏதாச்சினும் அடெல்ஸ் ஒன்லி இருக்கா அப்ப இதை விலா வாரியா கதைச்சு ஆண்- பெண் உறவு எண்ணா எபாடி உண்மையா இருக்கணும் என்கிறதினை வடிவா அலசலாமில்லையா?

நான் நினைக்கவில்லை இது சரியான கேள்வி எண்ணு?

தற்கொலை செய்வதாக முடிவு பண்ணிவிட்டீர்களா ?

ஏன்ட குஞ்சு அந்த பழைய முகத்தினை காட்டப்பா? இது காட்டு வாசி படம் மாதிரி இருக்கு. என்னர டாசா எல்லா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.