Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"மிஷ்கினு, ராமு... நீங்க அப்படின்னா, அப்புறம் நாங்க எப்படி?!'' - 'சவரக்கத்தி' விமர்சனம்.

Featured Replies

  •  

"மிஷ்கினு, ராமு... நீங்க அப்படின்னா, அப்புறம் நாங்க எப்படி?!'' - 'சவரக்கத்தி' விமர்சனம்.

'கத்தி எதுக்குத்தான்... தொப்புள்கொடி வெட்டத்தான்' - படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலின் வரிகள்தான், படத்தின் கதைக்களம். பரோல் முடியும் நாள், மாலை 6 மணிக்கு மீண்டும் சிறைக்குச் செல்ல வேண்டும் என்கிற வெறுப்பில், அழுத்தத்தில் காரில் நகரத்தைச் சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு கேங் லீடர், சந்தர்ப்பவசத்தால் அவனது வழியில் மாட்டிக்கொள்ளும் ஓர் அப்பாவி குடும்பஸ்தன்... இருவருக்குமிடையிலான  துரத்தல்களும் ஓட்டமுமான திரைக்கதை,  துயரத்திலும் நகைச்சுவையிலுமாக மாற்றி மாற்றி தீட்டப்பட்டதுதான், இந்தக் கூர்மையான 'சவரக்கத்தி'.

சவரக்கத்தி விமர்சனம்

 

தன் ஏழ்மையான அன்றாட வாழ்க்கையைச் சுவாரஸ்யமான பொய்களால் ஓட்டிக்கொண்டிருப்பவர், பார்பர் பிச்சை (ராம்). கடன் வாங்குவது, காரணம் சொல்வது என வாழ்வைக் கழிக்கும் 'சந்திரபாபு' ரசிகர். மாலை ஆறு மணிக்குள் மீண்டும் போலீஸிடம் ஆஜராகி, சிறைக்குச் செல்லவேண்டிய காரணத்தால், இருக்கும் ஒருநாளை 'போகும் போக்கில்' வாழ நினைக்கும் வில்லன் மங்கா (மிஷ்கின்). தன் நிறைமாத கர்ப்பிணி மனைவி சுபத்ரா (பூர்ணா)வின் தம்பிக்கு ‘திருட்டுத்தனமாக’ நடக்கவிருக்கும் காதல் திருமணத்துக்குக் குடும்பத்தோடு பைக்கில் கிளம்புகிறார் பிச்சை. போகும் வழியில் வில்லன் மங்காவுக்கும், பிச்சைக்கும் எதிர்பாராதவிதமாக நடக்கும் சிறு மோதல், இருவருக்குமான அன்றைய நாளை கலைத்துப்போடுகிறது. கையில் ஒரு சவரப்பெட்டியுடன்  பிரச்னைக்குப் பயந்து ஓடத்தொடங்குகிறார், பிச்சை. அவரைப் பழிவாங்க 'பூவா, தலையா' போட்டுப் பார்க்கும் மங்கா, வெட்டுக்கத்தியைக் கையில் எடுக்கிறார். 

இன்னொரு பக்கம், சுபத்ராவின் தம்பி திருமணம் செய்யவிருக்கும் பணக்கார வீட்டுப் பெண்ணைத் தேடிக்கொண்டிருக்கும் அவளின் குடும்பம். மங்கா - பிச்சை மோதலுக்குக் கிடைத்த விடை என்ன, சுபத்ராவின் தம்பியின் காதல் திருமணம் நடந்ததா, இந்த இரு கதைகளுக்குமான முடிச்சுகள் எப்படி அவிழ்ந்தன... என்பதை அழகியலும் நகைச்சுவையுமாகச் சொல்கிறது படம்.

சவரக்கத்தி விமர்சனம்

‘சென்சிட்டிவான முடிச்சுகள் கொண்ட ஒரு கதை, விறுவிறுப்பாக, ஆரவாரமாக நகரும்' என்ற பிம்பத்தை உடைத்துப்போட்டு, டார்க் காமெடியில் திரைக்கதையை நகர்த்தியிருப்பது, 'சவரக்கத்தி'யின் ஸ்பெஷல் ட்ரீட்மென்ட். அந்த வகையில், திரைக்கதைதான் படத்தின் முதல் கதாநாயகன். 'ஆறு மணிக்குமேல் மூன்று வருட வாழ்க்கையை ஜெயிலில்தான் கழிக்கப்போகிறோம்' என்ற விரக்தி, அதற்கு ஏற்ற உடல்மொழி, வசனங்கள் என தன் மறுபக்கத்தைக் காட்டியிருக்கிறார் வில்லன் மிஷ்கின். வில்லனுக்கு நேரெதிர் கேரக்டரில் இயக்குநர் ராம். வழவழ வசனங்கள், மெச்சூரிட்டி இல்லாத மேனரிஸம், அப்பாவித்தனம் என அந்தக் கதாபாத்திரம் கோரும் நடிப்புக்காக மிஷ்கினுக்குப் போட்டியாக உழைத்திருக்கிறார். 'இந்தா... நீங்க அப்படின்னா அப்புறம் நாங்க எப்படி?' என்ற ரகத்தில் தனக்கான கேரக்டரைக் கச்சிதமாக செய்திருக்கிறார் பூர்ணா. படத்தின் பெரும்பலம் இந்த மூவர்தான்!

தவிர, தலையைத் தட்டிய குற்றத்துக்காக 'போய்யா... இன்னைக்கு உன் நாள் நல்லாவே இருக்காது' என ராமுக்கு சாபம் கொடுக்கும் சிறுவன், மிஷ்கினின் சித்தப்பா மற்றும் மிஷ்கினின் 'ரகரகமான' அடியாட்கள், கரும்பு ஜூஸ் கடை அம்மா, அடிவாங்கும் ஜோசியக்கார நண்பர்,ராம் துவளும்போது தைரியம் கொடுக்கும் 'பொய்யாமொழி' டீக்கடை மாஸ்டர்,  வாடகை சைக்கிள் கொடுக்கும் நபர், குப்பை பொறுக்கும் ஆள், 'இங்கிலீஷ்' பைத்தியம் ஷாஜி... எனப் படத்தில் இடம்பெற்ற பல குட்டிக் குட்டிக் கேரக்டர்களில் சுவாரஸ்யம் அதிகம். பல அடிகளுக்கு மத்தியிலும் பளிச் ஐடியாக்கள் கொடுத்து மிஷ்கினிடம் பரிசு பெறும் கேரக்டருக்கு கூடுதல் லைக்ஸ். படத்தில் சிங்கிள் ப்ரேமில் வந்து போகிறவருக்கும் ஒரு கதை இருப்பதாக பார்வையாளிடம் கடத்துகிற திரைக்கதை பாராட்டுக்குரியது. வசனங்களிலும் சில பல கதை லேயர்கள். “வெளியே ஒரு பெரியவர் பிச்சையெடுத்துக்கொண்டிருப்பார், அவர் ஒரு சுதந்திரப் போராட்ட தியாகி. அவர்கிட்ட ஒரு கையெழுத்து வாங்கிட்டு வாங்க. சுயமரியாதைத் திருமணமா பதிவு பண்ணிடலாம்” என பதிவாளர் சொல்கிற இடம் ஒரு உதாரணம்.  

சவரக்கத்தி விமர்சனம்

வழக்கமான மிஷ்கின் படங்களில் இருக்கும் ஷாட், இருட்டு, சோகப் பின்னணி இசை என எதுவும் இல்லாமல், காமெடி சரவெடி கொளுத்த முயற்சி செய்திருக்கிறார் மிஷ்கின். அதைக் கச்சிதமாகக் கையாண்டு இயக்கியிருக்கிறார், படத்தின் இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யா. வெல்கம் பாஸ்! ஒளிப்பதிவாளர் கார்த்திக் வெங்கட்ராமின் உழைப்பு அபாரம். மிஷ்கின் டெம்ப்ளேட்டுகளில் இருந்து தனித்துத் தெரிய, ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். குறிப்பாக, 'ஸ்டேபிள்' ஷாட்கள் அதிக கவனம் பெறுகிறது. ரன்னிங், சேஸிங் எனப் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் திரைக்கதைக்குத் தொய்வில்லாத வடிவம் கொடுத்திருக்கிறார், எடிட்டர் சதீஷ்குமார். அரோல் கொரேலியின் பின்னணி இசை திரைக்கதையோடு இரண்டறக் கலந்து ஒலிக்கிறது. தமிழச்சி தங்கபாண்டியன் எழுதியுள்ள 'அண்ணாந்து பார்' பாடல் கச்சிதமான இடத்தில் பொருத்தப்பட்டு பார்வையாளனுக்கு உணர்வைக் கடத்துகிறது.

டார்க் ஹீயூமர் என்றாலும், ‘கர்ப்பிணி' பூர்ணா தாறுமாறாக சுவற்றைத் தாண்டுவது, ஓடுவது, திடீர் திடீரென நடக்கும் மனமாற்றங்கள்... எனப் படத்தின் 'நெகட்டிவ்' ஏரியாவைக் கொஞ்சம் குறைத்திருக்கலாம். காமெடியாகவே நகரும் திரைக்கதையில் ஆங்காங்கே வரும் எமோஷனல் காட்சிகள், முன்கூட்டியே கணிக்கும் விதத்தில் இருப்பது மற்றொரு குறை. மிஷ்கினின் ஆளுமை இயக்குநர் ஆதித்யாவை திரைமொழியிலும் பெரிதும் பாதித்திருக்கிறது.

 

வன்முறை - அன்பு இரண்டின் மோதலில், முதன்முறையாக அந்தக் கத்தியில் ரத்தம் படியும் இடம் செம. அனைத்துத் தரப்பு பார்வையாளர்களுக்குமான ஒரு சுவாரஸ்ய சினிமா சவரக்கத்தி! 

 

 

 

https://cinema.vikatan.com/movie-review/115984-savarakathi-movie-review.html

  • தொடங்கியவர்

சினிமா விமர்சனம்: சவரக்கத்தி

சமீப காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் எந்த வகை திரைப்படங்களிலும் சேராமல், வேறுமாதிரியான ஒரு கதை - திரைக்கதையுடன் துயர நகைச்சுவையுடன் தன் முதல் படத்தை உருவாக்கியிருக்கிறார் ஜி.ஆர். ஆதித்யா.

சினிமா விமர்சனம்: சவரக்கத்தி

சைக்கோத்தனமான ரவுடி, அவனிடம் தெரியாமல் மோதிவிடும் ஒரு சாதாரண மனிதன், கர்ப்பமாக உள்ள, காது கேட்காத அவனது மனைவி - இந்த மூவரின் ஒரு நாள் பயணம்தான் படம்.

சரளமாக பொய்பேசி, பில்ட்-அப் கொடுக்கும் சிகையலங்காரக் கலைஞர் பிச்சை (ராம்). இவரது காது கேட்காத, நிறைமாத கர்ப்பிணி மனைவி சுபத்ரா (பூர்ணா). மாலை சிறை திரும்ப வேண்டிய காரணத்தால் பெரும் கோபத்தில் இருக்கும் சைக்கோ ரவுடி மங்கா (மிஷ்கின்).

 
திரைப்படம் சவரக்கத்தி
 
நடிகர்கள் ராம், மிஷ்கின், பூர்ணா
 
ஒளிப்பதிவு கார்த்திக்
 
இசை அரோல் கொரேலி
 
கதை - திரைக்கதை மிஷ்கின்
 
இயக்கம் ஜி.ஆர். ஆதித்யா

சுபத்ராவின் தம்பியின் திருமணத்திற்காக அவசரமாக இரு சக்கர வாகனத்தில் செல்லும் பிச்சை, போகும் வழியில் மங்காவோடு மோத வேண்டிவருகிறது. இதனால் பிச்சையைத் துரத்த ஆரம்பிக்கிறான் மங்கா. சிறை திரும்புவதற்குள் மங்காவும் பிச்சையும் ஆடும் ஆடு-புலி ஆட்டமே சவரக்கத்தி.

மூன்றே முக்கியக் கதாபாத்திரங்கள். ஒரே நாளுக்குள் நடக்கும் சம்பவங்கள் என ஒரு சவாலான கதையை எடுத்துக்கொண்டு தன் முதல் படத்தை முயற்சித்திருக்கும் ஆதித்யா, அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார். படம் துவங்கியதிலிருந்து முடியும்வரை மங்கா, பிச்சையைத் துரத்துவதுதான் கதை.

சினிமா விமர்சனம்: சவரக்கத்தி

இந்த ஒற்றை வரியை சுவாரஸ்யமான சம்பவங்கள், வெவ்வேறு விதமான மனிதர்கள் ஆகியவற்றை வைத்து விறுவிறுப்பாக பின்னிக்கொண்டே செல்கிறார் இயக்குனர். இடைவேளை வரை படம் பறக்கிறது. ஆனால், இடைவேளைக்குப் பிந்தைய காட்சிகளில் சிறிது தொய்வு ஏற்பட்டு, இறுதிக் காட்சியில் மீண்டும் சூடுபிடிக்கிறது படம்.

சுமார் ஒன்றே முக்கால் மணி நேரமே ஒடுகிறது படம். இரண்டே இரண்டு பாடல்கள். இந்த அம்சங்களும் இந்தப் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டுகின்றன.

சினிமா விமர்சனம்: சவரக்கத்தி

பிரதானமான முன்று கதாபாத்திரங்கள் தவிர, மங்காவுடன் அடியாட்களாக வரும் நபர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக செயல்படுவதன் மூலம் சில நிமிடங்களிலேயே ஒரு தனி பாத்திரமாக நிலைபெற்றுவிடுகிறார்கள்.

படத்தில் வரும் எல்லோருமே சிற்சில காட்சிகளே வந்தாலும், சட்டென மனதில் பதிந்துவிடுவது இந்தத் திரைக்கதையின் வெற்றி.

சினிமா விமர்சனம்: சவரக்கத்தி

பிச்சையாக வரும் இயக்குனர் ராம், படத்தின் பல தருணங்களில் பின்னியெடுக்கிறார். நாயகி பூர்ணா, மிஷ்கின் என எல்லோருமே சில தருணங்களில் அட்டகாசமாக வெளிப்படுகிறார்கள். ஆனால், மீதமிருக்கும் காட்சிகளில், படத்தில் வரும் எல்லோருமே நவீன நாடகங்களுக்கே உரிய நடிப்பை வெளிப்படுத்துவது உறுத்தலாக இருக்கிறது.

அடியாளாக நடிப்பவர்கள் முதற்கொண்டு, விசித்திரமாக நடக்கிறார்கள், ஓடுகிறார்கள். மிஷ்கின் இயக்கும் படங்களுக்கே உரிய பிரச்சனை இந்தப் படத்திலும் இருக்கிறது. இந்த சிறிய பிரச்சனையை விட்டுவிட்டால், பார்த்து ரசிக்கக்கூடிய படம்தான் சவரக்கத்தி.

 

http://www.bbc.com/tamil/arts-and-culture-43009762

Edited by நவீனன்

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 2/9/2018 at 10:34 PM, நவீனன் said:

..

வன்முறை - அன்பு இரண்டின் மோதலில், முதன்முறையாக அந்தக் கத்தியில் ரத்தம் படியும் இடம் செம.

அனைத்துத் தரப்பு பார்வையாளர்களுக்குமான ஒரு சுவாரஸ்ய சினிமா சவரக்கத்தி!

https://cinema.vikatan.com/movie-review/115984-savarakathi-movie-review.html

மிஷ்கினின் சில படங்கள் அமைதியான 'த்ரில்லர்' மூலம் சுவாரசியமாக இருக்கும்.

சவரக்கத்தி படத்தின் விமர்சனம் வந்ததும் திரையரங்கில் பார்க்கலாமென எண்ணினேன், படம் நான் வசிக்கும் பகுதியில் வெளியாகவில்லை!

இன்று இணையத்தில் தரமான பிரிண்ட்(HD) வெளி வந்ததுள்ளது.. :)

படமும் விறுவிறுப்பாக இருந்தது..

ஒருமுறை நிச்சயம் பார்க்கலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.