Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த கனவு கண்­டாலும் நடக்­காது  ; ராஜித்த சேனா­ரத்ன

Featured Replies

மஹிந்த கனவு கண்­டாலும் நடக்­காது  ; ராஜித்த சேனா­ரத்ன

நல்­லாட்சி அர­சாங்­கத்­துக்கு 2015 ஜன­வரி 8 ஆம் திகதி   ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது கிடைக்­கப்­பெற்ற மக்கள் ஆணை உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலில் மேலும் உறு­தி­யா­கி­யுள்­ளது. அத்­துடன் பிர­த­மரை மாற்­றவோ அல்­லது அர­சாங்கம் ராஜி­னா­மா­செய்­யவோ எந்­த­தே­வையும் வெளிப்­ப­ட­வில்லை என சுகா­தார அமைச்­சரும் அமைச்­ச­ரவை இணைப்­பேச்­சா­ள­ரு­மான ராஜித்த சேனா­ரத்ன தெரி­வித்­துள்ளார்.

mahinda-rajapaksa-1.jpg

உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் பெறு­பே­றுகள் தொடர்­பாக ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அதில் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது,

நடந்து முடிந்த தேர்­தலில் வெளி­வந்­தி­ருக்கும் பெறு­பே­று­களின் பிர­காரம் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­ன­வுக்கு அளிக்­கப்­பட்ட மொத்த வாக்­கு­களில் 45வீத­மான வாக்­கு­களே கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. அது ஜன­வரி 8ஆம் திகதி முன்னாள் ஜனா­தி­பதி பெற்­றுக்­கொண்ட வாக்கு வீதத்­தை­விட குறை­வான வாக்­கு­வீ­த­மாகும். இந்த பெறு­பே­று­களின் பிர­காரம் நாட்டின் பெரும்­பான்­மை­யான வாக்­கா­ளர்கள் தங்கள் வாக்­கு­களை மொட்டு சின்­னத்தில் போட்­டி­யிட்ட பொது­ஜன பெர­மு­ன­வுக்கு  எதி­ரா­கவே அளித்­துள்­ளமை தெளி­வா­கின்­றது.

மேலும் தேர்தல் பெறு­பே­றுகள் தொடர்­பாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க ஆகி­யோ­ருடன்  கலந்­து­ரை­யா­டினேன். அர­சாங்­கத்தின் குறை­பா­டு­களை நிவர்த்தி செய்­து­கொண்டு முன்  செல்ல இரண்­டு­பேரும் இணக்கம் தெரி­வித்­தனர். உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தலில் வெற்­றி­பெற்று நாட்டின் பிர­த­ம­ரா­கவோ அல்­லது பொதுத்­தேர்தல் ஒன்றை  நடத்­து­வ­தற்கோ முன்னாள் ஜனா­தி­பதி கனவு கண்­டு­கொண்­டி­ருந்­த­போதும் அது இடம்­பெ­றப்­போ­வ­தில்லை. முன்னாள் ஜனா­தி­ப­திக்கு பிர­தமர் பதவி வழங்க ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியோ ஐக்­கிய தேசிய கட்­சியோ இது­வரை முன்­மொ­ழி­ய­வில்லை.

 2015ஆம் ஆண்டு ஊழல் மற்றும் மோச­டி­களை ஒழிப்­ப­தற்கே ஆளும் அர­சாங்­கத்­துக்கு மக்கள் ஆணை கிடைக்­கப்­பெற்­றது. அதனை தொடர்ந்து முன்­னுக்கு கொண்­டு­செல்ல நல்­லாட்சி அர­சாங்­கத்தின் தலை­வர்கள் இணக்­கப்­பாட்­டுக்கு வந்­துள்­ளனர்.

 இந்த தேர்­தலில் பேரு­வளை தொகுதி தோல்­வி­ய­டைந்­த­துடன் என்னை கண்டு பிடிக்க முடி­யாமல் இருப்­ப­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டலஸ் அழ­கப்­பெ­ரும ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது தெரி­வித்­துள்ளார். டலஸ் அழ­கப்­பெ­ரு­ம­வைப்­போன்று நான் அமெ­ரிக்­கா­வுக்கு தப்­பிச்­செல்­ல­வில்லை. வீட்டில்தான் இருக்கின்றேன் என்பதை அவருக்கு தெரிவிக்க விரும்புகின்றேன். 

அத்துடன் மக்கள் ஆணையின் பிரகாரம் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் போராட்டத்தில் தொடர்ந்து நிலைத்திருப் பேன். அதேபோன்று 2020 க்கு பிறகு ஜனாதிபதியை மீண்டும் நியமிக்கவும் நடவடிக்கை எடுப் பேன்

http://www.virakesari.lk/article/30564

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, நவீனன் said:

 2015ஆம் ஆண்டு ஊழல் மற்றும் மோச­டி­களை ஒழிப்­ப­தற்கே ஆளும் அர­சாங்­கத்­துக்கு மக்கள் ஆணை கிடைக்­கப்­பெற்­றது.

இதை முதலே செய்திருந்தால் பல ஊழல் பேர்வழிகள் உள்ளுக்கை இருந்திருப்பார்கள் தேர்தலில் நிக்க வாய்ப்பே இருந்திருக்காது. காலத்தை விட்டிட்டு இனி அழுது புலம்பிப் பயன் இல்லை. எல்லாரும் கம்பி எண்ணப் பயிற்சி எடுத்து வைப்பது நல்லது எனத் தோன்றுது.

5 hours ago, satan said:

இதை முதலே செய்திருந்தால் பல ஊழல் பேர்வழிகள் உள்ளுக்கை இருந்திருப்பார்கள் தேர்தலில் நிக்க வாய்ப்பே இருந்திருக்காது. காலத்தை விட்டிட்டு இனி அழுது புலம்பிப் பயன் இல்லை. எல்லாரும் கம்பி எண்ணப் பயிற்சி எடுத்து வைப்பது நல்லது எனத் தோன்றுது.

மஹிந்தவால் மீண்டும் ஜனாதிபதியாக முடியாது.

அவரின் வாக்கு வங்கி 47 % இருந்து 45 % சரிந்துள்ளது.

மஹிந்த வெல்ல வேண்டுமானால் யாராவது தமிழ் அல்லது முஸ்லீம் நபரை ஜனாதிபதி தேர்தலில் நிற்க வைத்தால் மட்டும் முடியும்.

6 hours ago, satan said:

இதை முதலே செய்திருந்தால் பல ஊழல் பேர்வழிகள் உள்ளுக்கை இருந்திருப்பார்கள் தேர்தலில் நிக்க வாய்ப்பே இருந்திருக்காது. காலத்தை விட்டிட்டு இனி அழுது புலம்பிப் பயன் இல்லை. எல்லாரும் கம்பி எண்ணப் பயிற்சி எடுத்து வைப்பது நல்லது எனத் தோன்றுது.

அப்படி செய்யாமல் விட்டதன் காரணமே மஹிந்த பூச்சாண்டியை காட்டி தமிழ் மக்களுக்கான தீர்வை இழுத்தடித்து பின் நீர்த்து போக செய்வதற்கே. அவர்கள் காட்டிய பூச்சாண்டி பூமராங் போல அவர்களை தாக்க  வந்து விட்டது

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Dash said:

மஹிந்தவால் மீண்டும் ஜனாதிபதியாக முடியாது.

அவரின் வாக்கு வங்கி 47 % இருந்து 45 % சரிந்துள்ளது.

மஹிந்த வெல்ல வேண்டுமானால் யாராவது தமிழ் அல்லது முஸ்லீம் நபரை ஜனாதிபதி தேர்தலில் நிற்க வைத்தால் மட்டும் முடியும்.

 அவர் ஜனாதிபதியாகவிட்டாலும் அவர் அரசியலில் இருத்தலே தமிழர்க்கு ஆபத்து என்பது   எனது  கருத்து.  அரசியலில் இருந்து தூர ஒதுக்கி வைக்கபடவேண்டியவர். அதற்காக மற்றவர்கள் திறமானவர்கள் என்று சொல்லவில்லை. இப்ப மஹிந்த ஆட்ச்சி நடந்திருந்தால் ஒட்டுக்குழுக்களோடு தமிழினம் வெள்ளை வானில் எமலோகம் போயிருக்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.