Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசத் தயார்

Featured Replies

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசத் தயார்

 

நடந்து முடிந்த காரைதீவு பிரதேசசபைத் தேர்தல் பெறுபேற்றின் அடிப்படையில் கூடிய 4 ஆசனங்களைப் பெற்ற தமிழ்த் தேசியிக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரென சுயேச்சைக் குழுத் தலைவர் சந்திரசேகரம் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

காரைதீவு மகா சபையின் வழிநடத்தல் குழு சபைச் செயலாளரின் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாம் தேர்தலுக்கு முன்பு மகாசபை கூட்டிய கூட்டத்தில் எமது காரைதீவு தமிழ் மக்களின் இருப்பு மானம் காப்பாற்றும் வகையில் செயற்படுவதென்றும் எமக்குக் கிடைக்கின்ற ஆசனங்களை எம்மிடையே சுழற்சி முறையில் அனைவரும் பகிர்ந்து சபையை அலங்கரிப்பது என்று தீர்மானம் எடுத்திருந்தோம்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

அன்று வழங்கிய வாக்குறுதிப்படி காரைதீவில் தமிழ் மக்களின் இருப்பைப் பாதுகாக்க தற்சமயம் அதிகூடிய 4 ஆசனங்களைப் பெற்ற த.தே.கூட்டமைப்புடன் பேசத்தயார் என்று இத்தால் பகிரங்கமாக அறிவிக்கின்றோம்.

தலைவராகிய நான் சி.நந்தேஸ்வரன், மா.புஸ்பநாதன் உள்ளிட்ட நால்வர் தாமாகவே சபைக்குச் செல்வதில்லையென்றும் எக்காரணம் கொண்டும் சபை பொறுப்பை எடுப்பதில்லை என்றும் பெருந்தன்மையுடன் கூறியதற்கமைவாக ஏனைய 8பேருக்கும் 4வருடத்தினுள் சுழற்சி முறையில் அந்த 2 உறுப்பினர் பதவியை சுழற்சி முறையில் வழங்குவதென்றும் தீர்மானமாகியது.

அதற்கமைய திருவுளச்சீட்டின் மூலம் முதல் வருடத்தில் யார் யார் உறுப்பினராக சபையை அலங்கரிப்பது என்றும் அடுத்தடுத்த வருடத்தில் யார் யார் சபைக்குச் செல்வது என்றும் சந்தோசமாக ஏகமனதாக முடிவானது.

எனவே ஆட்சியமைப்பதற்குத் தேவையான ஆதரவைத் தரவும், த.தே.கூட்டமைப்புடன் பேசவும் நாம் தயார் என குறிப்பிட்டுள்ளார்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/election/01/174194?ref=home-feed

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா வெள்ளை வேட்டி காரங்களா நீங்க சபையை அலங்கரிச்சது போதும் சனங்களுக்கு ஏதாவது நன்மை செய்ய முடியுமா பாருங்கப்பா?  

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vanangaamudi said:

ஐயா வெள்ளை வேட்டி காரங்களா நீங்க சபையை அலங்கரிச்சது போதும் சனங்களுக்கு ஏதாவது நன்மை செய்ய முடியுமா பாருங்கப்பா?  

இது நல்லாயிருக்கே ...தனி ஈழம் என்று நாற்பது வருடம் ,வடக்கு கிழக்கு இணைப்பு ஏக்கிய ராஜ்ஜிய என்று பத்து வருடம் இப்படி அரை நூற்றாண்டை கூத்தமைப்பு சட்டாம்பிகள் ஆட்டையை போட்டு சபையை அலங்கரித்தபோது பார்த்துக்கொண்டிருந்து விட்டு இப்போ பாவம் சுயேட்சையாய் தெரிவு செய்யப்பட்டு கொஞ்ச நாள் சபையை அலங்கரிக்கலாமென்றால் ...இந்தாளுக்கு பொறுக்குதில்லை, கோபித்துகொள்ளாதேங்கோ வணங்காமுடியண்ணை  சும்மா பகிடிக்குத்தான் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.