Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமர் விவகாரம், நீதிமன்றத்திடம் ஜனாதிபதி கோருவார். சந்திப்பில் முடிவு இல்லை

Featured Replies

பிரதமர் விவகாரம், நீதிமன்றத்திடம் ஜனாதிபதி கோருவார். சந்திப்பில் முடிவு இல்லை

 

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பின்னர் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை இடம்பெற்ற பேச்சுக்களில் கூட முடிவுகள் எடுக்கப்பட்வில்லையென கூறப்படுகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு அவசரமாக கூடி, தற்போதைய அரசியல் நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

பிரதமர் விவகாரம், நீதிமன்றத்திடம் ஜனாதிபதி கோருவார்.  சந்திப்பில் முடிவு இல்லை

இந்த கலந்துரையாடலில், நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டு செல்வது மற்றும் புதிய அமைச்சரவை தெரிவு குறித்த விடயங்கள் பேசப்பட்டதாக ஜனாதிபதி செயலகத் தகவல்கள் கூறியதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான உறுப்பினர்களுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, தனித்து ஆட்சி அமைப்பதே மைத்திரிபால சிறிசேனவின் விருப்பமாகும்.

இந்த நிலையில் இன்று இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பு முக்கியமானது என ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன. 

ஆனாலும் இந்த சந்திப்பில் என்னென்ன விடயங்கள் பேசப்பட்டது என்பது தொடர்பான விபரங்கள் எதனையும் ஜனாதிபதி செயலகமோ அல்லது பிரதமர் அலுவலகமோ அதிகாரபூர்வமாக ஊடகங்களுக்கு எதுவும் கூறவில்லை என ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் வியாழக்கிழமை புதிய அமைச்சரவை அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தில் நாளுக்கு நாள் குழப்பங்கள் அதிகரித்து வருகின்றன.

அதேவேளை நல்லாட்சி அரசாங்கம் தொடர வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக தொடர்ந்து பதவி வகிக்க வேண்டும் எனவும் கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

அத்துடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மூலமாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சர்வதேசத்தின் நிலைப்பாடு எடுத்துக் கூறப்பட்டிருந்தது. நேற்று சனிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த சம்பந்தன், மஹிந்த ராஜபக்சவை இணைத்து புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால் நிலமை வேறுவிதமாக மாறிவிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அதேவேளை இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபால, புதிய பிரதமரை நியமிப்பது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் ஆலோசணையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரவுள்ளதாக கூறினார்.

19 ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் பிரதமரை ஜனாதிபதி பதவி விலக்க முடியுமா என்பது குறித்து சட்ட மா அதிபரிடம் விளக்கம் கோரியுள்ள நிலையில், உயர் நீதிமன்றத்திடம் ஆலோசணை கேட்கவுள்ளதாக திலங்க சுமதிபால கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://news.ibctamil.com/ta/politics/Prime-Minister-issue-

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.