Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விலகும் முடிவில் இருந்து குத்துக்கரணம் அடித்தது சுதந்திரக் கட்சி

Featured Replies

விலகும் முடிவில் இருந்து குத்துக்கரணம் அடித்தது சுதந்திரக் கட்சி

 

 

SLFPகூட்டு அரசாங்கத்தில் இருந்து விலகும் முடிவை எடுத்த சிறிலங்கா சுதந்திரக் கட்சி இன்று தனது முடிவை மாற்றியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று நண்பகல் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் நடத்திய பேச்சுக்களை அடுத்தே, இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் கருத்து வெளியிட்ட அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க, அரசாங்கத்தில் சட்டரீதியாக பாரியதொரு மாற்றம் நிகழும் என்றும், ஆனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறாது என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமரை மாற்றுவது தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டுள்ளதாகவும், அதனை வெளிப்படுத்த முடியாது என்றும் கூறிய எஸ்.பி.திசநாயக்க, பிரதமரை மாற்றுவதற்கு அரசாங்கத்தில் உள்ள சிலர் விரும்பவில்லை எனவும் குறிப்பிட்டார்.

எனினும், சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும், ஏனைய கட்சிகளுக்குத் தாவப் போவதில்லை என்றும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்திருந்து அவரது கரங்களைப் பலப்படுத்தப் போவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறாமல் இணைந்திருக்குமாறு இந்தச் சந்திப்பின் போது சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை, அரசாங்கத்தில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று மைத்திரிபால சிறிசேன தமது கட்சியினருக்கும், ரணில் விக்கிரமசிங்க தமது கட்சியினருக்கும் உறுதிமொழிகளை அளித்துள்ளனர் என்றும் தெரியவருகிறது.

http://www.puthinappalakai.net/2018/02/19/news/29219

  • தொடங்கியவர்

அரசியல் குழப்பம் தொடர்பில் முக்கிய தீர்மானத்தை வெளியிட்டது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 

 

 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

உயர் நீதிமன்ற தீர்ப்பு கிடைக்கும் வரை நாட்டை ஸ்திரமற்ற நிலைமையில் இருந்து பாதுகாக்க தேசிய அரசாங்கத்துடன் இணைந்து தொடர்ந்து பயணிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியமைக்கு அமைவாக தொடர்ந்து தேசிய அரசாங்கத்தில் இருந்து  பயணிக்க தீர்மானித்தோம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பிரதி சபாநாயகருமான திலங்க சுமதிபால சபையில் தெரிவித்தார்.

thilanga-sumathipala-parliament.jpg

பாராளுமன்றத்தில் இன்று திங்கட்கிழமை தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பாக தினேஷ் குணவர்தன எம்.பி முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டை அறிவித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலக வேண்டும் என சுதந்திரக் கட்சியினரான நாம் கோரியது உண்மையாகும். அதற்கான பேச்சுவார்த்தைகளையும் நாம் நடத்தினோம். இதன்போது தேசிய அரசாங்கத்தில் இருந்து விலக முடியுமா என்றும் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் ஆராய்வதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள தீர்மானித்தார்.

 

எனினும் தேசிய அரசாங்கமொன்று இருப்பதனால் இதற்கு தீர்ப்பு வழங்குவது கடினமாகும். ஆகவே உயர் நீதிமன்றத்தினை நாடி இது தொடர்பில் தீர்ப்பினை பெற்றுக்கொள்ளுங்கள் என சட்டமாஅதிபர் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.

இதன்படி நேற்று அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாகவும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை பெறவுள்ளதாகவும் நான் அறிவித்தேன். இதன்படி நேற்று பகல் நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் சந்தித்தோம். நாடு தற்போது ஸ்திரமற்ற நிலைமையில் உள்ளது. 

2015 ஆம் ஆண்டு மக்கள் ஆணையின் பிரகாரம் நாம் செயற்பட வேண்டியுள்ளது. ஆகவே உயர் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை தேசிய அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்குமாறு ஜனாதிபதி கோரினார்.

இதன்படி தேசிய அரசாங்கத்துடன் இணைந்து பயணிக்க நாம் தீர்மானித்துள்ளோம் என்றார்.

http://www.virakesari.lk/article/30798

  • தொடங்கியவர்

பின்வாங்கியது சு.க. : தேசிய அரசில் நீடிக்க தீர்மானம்; நெருக்கடிக்கு தற்காலிக தீர்வு

9-aeb35664a213840b64ea8824e56610625e1cabde.jpg

 

(ரொபட் அன்டனி)

தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை அடுத்து தனி த்து அரசாங்கம் அமைப்பதற்கான முயற்  சிகளை முன்னெடுத்து வந்த ஸ்ரீலங்கா  சுதந்திரக்கட்சி தற்போது அந்த முயற் சியை கைவிட்டு தேசிய அரசாங்கத்தில்  நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளது. தேசிய அரசாங்கத்திலிருந்து விலகு  வதற்கு சுதந்திரக் கட்சி நேற்று முன் தினம் இரவு தீர்மானித்த போதிலும் ஜனா  திபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று பகல் நடைபெற்ற விசேட மற் றும் அவசர சந்திப்பின்போது ஜனாதிப தியின் வேண்டுகோளுக்கு இணங்க தேசிய அரசாங்கத்தில் நீடிக்க தீர்மானித் துள்ளது.  

நேற்றைய தினம் பாராளுமன்ற அமர்வு நடைபெற்ற நிலையில் பாராளுமன் றத்துக்கு செல்லாமல் 12 மணிக்கு சுதந்  திரக் கட்சியின் அனைத்து பாராளு மன்ற உறுப்பினர்களையும் ஜனாதிபதி செயலகத்துக்கு வருமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்தார்.  

அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி செயலகத்தில் நீண்டநேரம் கலந்துரையாடியிருந்தனர். அமைச்சர்களான சுசில் பிரேம்ஜயந்த தயாசிறி ஜயசேகர டிலான் பெரெரா ஜோன் செனவிரட்ன நிமால் சிறிபால டி. சில்வா உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இந்த அவசர சந்திப்பில் கலந்துகொண்டனர்.  

இதன்போது தனித்து அரசாங்கம் அமைக்கும் செயற்பாட்டை கைவிட்டு தேசிய அரசாங்கத்தில் முக்கியமான அமைச்சுப்பதவிகளைப் பெற்றுக்கொண்டு தேசிய அரசாங்கத்தில் நீடிப்பது என்ற தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சந்திப்பில் ஜனாதிபதி சுதந்திரக் கட்சியின் எம்.பி. க்களுக்கு நீண்ட விளக்கம் ஒன்றை அளித்திருந்தார்.

குறிப்பாக பிரதமரை சட்டரீதியாக பதவியிலிருந்து நீக்குவதில் காணப்படும் சிக்கல்கள் மற்றும் தேசிய அரசாங்கம் பயணிக்கவேண்டியதன் அவசியம் என்பன குறித்து ஜனாதிபதி சுதந்திரக் கட்சி எம்.பி. க்களுக்கு விளக்கியுள்ளார். விசேடமாக சர்வதேச சவால்களை வெற்றிகொள்ள தேசிய அரசாங்கம் நீடிக்கவேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி தெ ளிவுபடுத்தியுள்ளார். இதனையடுத்தே தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடனான சந்திப்பு முடிந்தவுடன் வெ ளியே வந்த அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க நல்லிணக்கம் சமாதானம் மற்றும் அமைதி என்ற விடயங்களை அடிப்படையாகக்கொண்டு ஜனாதிபதியை பலப்படுத்த தீர்மானித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இதன்மூலம் சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி தலைமையிலான தேசிய அாசாங்கத்தில் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளளனர். இதேவேளை தமது கட்சியிலுள்ள உறுப்பினர்களை பாதுகாக்கும் முயற்சியிலும் சுதந்திரக் கட்சியின் தற்போது ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக சிறிலங்கா சுதந்திரக்கட்சி மஹிந்த ராஜபக்ஷவின் தரப்புடன் இணைந்து அரசாங்கம் அமைக்குமாயின் தாம் அதில் இடம்பெறமாட்டோம் என சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட சுமார் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். அவ்வாறு சுதந்திரக்கட்சியானது மஹிந்த தரப்புடன் இணையுமானால் தாம் ஐக்கிய தேசியகட்சிக்கு செல்லும் முடிவில் இந்த எம்.பிக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுவதால் தற்போது சுதந்திரக்கட்சி பாரிய நெருக்கடியை எதிர்கொண்டிருந்த நிலையில் தற்போது குறுகிய காலத்துக்கு இவ்வாறு தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி 113 எம்.பி.க்களை பெற்றுக்கொள்வதிலும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்தப் பின்னணியில் தனித்து அரசாங்கம் அமைக்கும் முயற்சியை சுதந்திரக்கட்சியின் முக்கியஸ்தர்கள் கைவிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இந்நிலையில் நாளை, அல்லது நாளை மறுதினம் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அதன்போது முக்கியத்துவம் மிக்க அமைச்சுக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் தற்போது சுதந்திரக்கட்சி அவதானம் செலுத்தியுள்ளது.

சட்டம் ஒழுங்கு அமைச்சு, நிதி அமைச்சு போன்றவற்றை தம்மிடம் எடுத்துக்கொள்ளும் நோக்கில சிறிலங்கா சுதந்திரக்கட்சி தற்போது ஆராய்ந்து வருகின்றது.

 ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமையிலான தேசிய அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற நலையில் சுதந்திரக்கட்சி ஆட்சியை அமைக்கவேண்டுமானால் அக்கட்சியே பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சி கூறிவருகின்றது.

இந்நிலையில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியானது இதுவரை 113என்ற பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போயிருக்கின்றது. அதன்படி தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதற்கு சுதந்திரக் தீர்மானம் எடுத்துள்ளது.

அது மட்டுமின்றி புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்தின் அபிப்பிரயாத்தை கோரவுள்ளதாகவும் சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது அரசாங்கத்தை அமைத்தல் மற்றும் பெரும்பான்மையை நிரூபித்தல் போன்ற சர்ச்சைமிக்க விடயங்கள் இடம்பெறும் என்ற எதிர்பார்க்கப்பட்டபோதும் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. மாறாக தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் விவாதம் நடத்தப்படவேண்டும் என்ற சர்ச்சையே எழுப்பப்பட்டதுடன் பின்னர் மாலை 4 மணிமுதல் 7 மணிவரை விவாதம் நடைபெற்றது.

கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் வெளியான முடிவுகளின் பின்னர் தேசிய அரசாங்கத்தில் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி வகிக்கின்ற அரசாங்கத்தில் தாம் இருக்கமாட்டோம் என்று சுதந்திரக் கட்சி தெரிவித்ததையடுத்து பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் பிரதமர் பதவி விலகுவதற்கு மறுத்துவிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தொடர்ந்தும் தனித்து ஆட்சியமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்துவந்தன. இதனிடையே கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபாநாயகரையும் பிரதமரையும் சந்தித்து பேச்சு நடத்தினார்.

 இந்த சந்திப்புக்களின்போது தேசிய அரசாங்கத்தை நீடித்துச் செல்ல இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டபோதும் ஜனாதிபதி பிரதமரை பதவி நீக்குவது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை கோரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறனெினும் தற்போது தற்காலிகமாக தேசிய அரசாங்கத்தை நீடித்துக்கொண்டு செல்ல தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-20#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.