Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாதத்தை தூண்டும் சுமந்திரன்! நாமல்

Featured Replies

இனவாதத்தை தூண்டும் சுமந்திரன்! நாமல்

 

கூட்டு எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முட்டுக்கொடுத்து அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாது எனவும் மக்களின் ஆதரவு யாரிடம் உள்ளது என்பதை அறிய வேண்டுமாயின் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் இலஞ்சம் மற்றும் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் தாமரை மொட்டுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர் குடங்களை கொடுக்கும் போது, ஐக்கிய தேசியக்கட்சியின் அமைச்சர் உரளை கொடுத்தார்.

இலங்கையின் தேர்தல் வரலாற்றில் தேர்தல் சட்டம் அதிகளவில் இந்த தேர்தலிலேயே மீறப்பட்டது. பொருட்களை விநியோகித்து வாக்குகளை பெற முடியாது என்பதை மக்கள் காட்டியுள்ளனர்.

அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் பிரித்து அறிய முடியாதுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைவரும் ஒன்றாக உள்ளனர்.

மகிந்தவை விட அதிகமான வாக்குகளை பெற்றதாக அனைவரும் கூறுகின்றனர்.

நாங்கள் அரசாங்கத்தை கைப்பற்ற பார்ப்பதாக ராஜித சேனாரத்ன கூறுகிறார். நாங்கள் அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்க முயற்சிக்கவில்லை என்பதை நாம் முதலில் கூறவேண்டும்.

80 வீதமான மக்கள் வாக்களித்துள்ளனர். பிரதேச சபைத் தேர்தல் ஒன்றில் வரலாற்றில் முதல் முறையாக எதிர்க்கட்சி வென்றுள்ளது.

இனிமேலாவது மக்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவார்கள் என்று நினைக்கின்றேன்.

நாங்கள் அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுக்காது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அரசாங்கத்தை அமைக்குமாறு கூறினோம்.

கரு ஜயசூரியவை பிரதமராக்குவதா, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் யார் என்பதை தீர்மானிப்பது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினரின் வேலையல்ல.

திலங்க சுமதிபால நேற்றிரவு ஒன்றை கூறினார். மகிந்த அமரவீர இன்று காலை வேறு ஒன்றை கூறுகிறார். ஐக்கிய தேசியக்கட்சி மற்றுறொன்றை கூறுகின்றது. இப்படிதான் இவர்கள் அரசாங்கத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

அதேவேளை பொதுஜன பெரமுன இனவாதத்தை தூண்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் இனவாதத்தை பரப்பியது.

சுமந்திரன் இனவாத ரீதியான பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார் எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

 

http://www.tamilwin.com/politics/01/174758?ref=home-latest

  • தொடங்கியவர்

கூட்டமைப்பே வடக்கில் இனவாதத்தை தூண்டியது

 

 

நாட்டில் நாங்கள் இனவாதத்தை தூண்டி யதாக இரா.சம்பந்தன் கூறினார். நாம் இனவா தத்தை தூண்டவில்லை. வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே இனவாதத்தை தூண்டி வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.

namal-rajapaksa.jpg

பாராளுமன்றத்தில் நேற்று தி்ங்கட்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

உள்ளூராட்சி மன்ற தேர்தலை அடிப்படையாக வைத்து ஆட்சியை கவிழ்க்க முனையவில்லை. அத்துடன் யாருக்கும் நாம் ஆட்சியை வழிநடத்தி செல்ல முட்டுகொடுக்கவும் தயாராகவில்லை. 

நாட்டு மக்களின் முக்கிய பிரச்சினையை தீர்க்காமையே தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி பெறுவதற்கு காரணமாகும். எனினும் மக்கள் ஆணையை இன்னும் கூட அரசாங்கத்தினால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. யுத்தத்தை நிறைவு செய்த மஹிந்த ராஜபக்ஷவை சிறையில் அடைக்காமைக்கு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக ஆணை வழங்கவில்லை. மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமையே தோல்விக்கு காரணமாகும். 

அத்துடன் நாட்டில் இனவாதத்தை தூண்டியதாக இரா.சம்பந்தன் கூறினார். நாம் இனவாதத்தை தூண்டவில்லை. வடக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே இனவாதத்தை தூண்டி வருகின்றனர் என்றார்.

http://www.virakesari.lk/article/30806

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.