Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ரெலோ மீதான தாக்குதலுக்கு மன்னிப்பு?-காலம் கடந்த ஞானம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரெலோ மீதான தாக்குதலுக்கு மன்னிப்பு?-காலம் கடந்த ஞானம்!

 
 
 
 
 
காலம் கடந்த ஞானம்

ரெலோ மீதான தாக்குதலுக்கு மன்னிப்புக் கோருகிறேன்!

லண்டனில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ)வினால் ஒழுங்கு செய்ப்பட்ட கூட்டத்தில் திரு வாசு தேவனின் உரை இந்த மிகவும் முக்கியத்துவமான உரையை மீண்டும் இங்கு பதிவுடுவது அவசியம் என்று கருதுகின்றோம்.
 
 - த சோதிலிங்கம் ...

ரெலோ தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் சக தோழர்கள் புலிகளால் சகோதரப் படுகொலை செய்யப்பட்ட 25வது வருட நினைவஞ்சலிக் கூட்டத்தில் நேுசுனுழு-வாசுதேவன் ஆற்றிய உரை. மகாத்மா காந்தியடிகள் கூறிய ஒரு வாசகம்! கண்ணுக்கு கண் என்பது உலகை குருடாக்கிவிடும். மன்னிப்பு இல்லையேல் எதிர்காலம் இல்லை என்று நிற வெறிக்கெதிராக குரலெழுப்பிய னுநளஅழனெ வுரவர ஆணித்தரமாக கூறுகிறார். மன்னிப்பு என்பது மறப்பதற்காக அல்ல! மாறாக மன்னிப்பு இல்லாவிட்டால் மனித எதிர்காலம் இல்லாது போய்விடும் என்று கூறுகிறார். இன்று நான் உங்கள் முன்நின்று உரையாற்றுவது எனது கடந்த காலத் தவறிற்கு பிராயச்சித்தம் தேட அல்ல. நாம் விட்ட தவறுகளை நீங்கள் இன்று மன்னித்தபோதும் நாம் இறக்கும் வரை அது நம்முடன் கூடவே பயணித்து அது எம்மை சித்திரவதை செய்யும். ஆனால் இன்று நீங்கள் என்னை இங்கு பேச அழைத்ததன் மூலம் அந்த சித்திரவதையில் இருந்து ஒரு சிறிய அசுவாசத்தை பெற உதவியிருக்கிறீர்கள். அதற்கு நான் உங்களிற்கு எனது மனமாரந்த நன்றியை தெரிவிக்கிறேன்.

தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது; யாவரும் கவனிக்கவில்லை எனில் உண்மை பொய் ஆகாது. பொது மக்கள் துணையின்றியும் உண்மை நிலைத்து நிற்கும். அது தன்னிலையுடையது. மகாத்மா காந்தியவர்கள் கூறிய இன்னுமெரு வாசகம். 1986 சித்திரை மாதம் 29ம் திகதி எமது தேசிய விடுதலைப் போராட்டம் தனது சாவு மணியை அடிக்க தொடங்கிய நாள்! நானும் எனது சகாக்களும் ஏன் எதற்கு என்று கூட கேள்வி கேட்க திரணியற்று மனித அவலம் ஒன்றிற்கு துணை போன நாள்!

பருத்தித்தித்துறை இராணுவ முகாமை தாக்க பல படையணிகளுடன் பயிற்சி பெற்ற நாம் திடீரென்று புலிகளின் யாழ் தளபதி கிட்டுவால் ஒரு அவசர கூட்டத்திற்கு அழைக்கப்படுகிறோம். நாம் ரெலோ மீது தாக்குதல் நடத்த போகிறோம் என்று கூறியவுடன் எமக்கு எதுவுமே புரியவில்லை. எமது போராளிகளை அவர்கள் கைப்பற்றி வைத்திருக்கிறார்கள் அவர்களை மீட்க நாம் கல்வியங்காட்டை சுற்றிவளைக்கப் போகிறோம் என்ற விளக்கத்துடன் பாரிய சகோதரப் படுகொலைக்கான திட்டமிடல் தொடங்குகிறது. அதீத விசுவாசம் கொண்டவர்கள் தலைமை கூறியதை விட மோசமான மனிதவதைகளை செய்தனர்!

தலைமைக்கு பணிந்தவர்கள் தலைமை கூறியதை அப்படியே செய்தார்கள். மனிதாபிமானமுள்ளவர்கள் விறைத்துப் போய் செய்வதறியாது திகைத்து நின்றனர். சரணடைந்தவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்! தூங்கியவர்கள்இ தூங்க முடியாது வருத்தத்தில் படுத்திருந்தவர்கள்இ தப்பியோடியவர்கள் வெள்ளைக்கொடி பிடித்தவர்கள்இ பிடிக்காதவர்கள் என்று ஒருவரைக் கூட மிச்சம் வைக்காது வேட்டையாடல் நடைபெற்றது.

தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணிக்க தயாராக இருந்த நூற்றுக்கணக்கான போராளிகள் தெருநாயை சுடுவது போல் வேட்டையாடப்பட்டார்கள். ஆனால் மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். 3 நாட்களாக கல்வியங்காட்டு சந்தியில் காவல் கடமையில் இருந்த எனக்கு கோப்பி முதல் 3 நேர உணவும் தந்து உபசரித்தார்கள். தமிழ் மக்களின் விடுதலைக்காக என்று கட்டியெழுப்பிய மற்றைய இயக்கங்கள் தம் சொந்த சகோதரர்கள் வேட்டையாடப்படுகையில் கைகட்டி மௌனமாக வேடிக்கை பார்த்தார்கள்!

நரபலி எடுத்துக் களைத்த அனைவரும் மீண்டும் முகாம் திருப்புகிறோம். மனச்சாட்சி உறுத்தியவர்கள் ஒரு சிலர் ஒளிவில் சிகரட் புகைக்க ஒதுங்கி பேசா மடந்தைகளாக அப்படியே மௌனத்து போனோம்! பயம் ஒரு புறம்! போராட்டம் சூன்யமாகி விட்டதே என்ற ஆதங்கம் ஒரு புறம்! கொல்லப்பட்டவர்கள் எம்மவர்கள் என்ற மனச்சாட்சியின் உறுத்தல் ஒரு புறம்! அன்று முதல் நாம் ஒரு நடைபிணமாகவே மாறி விட்டோம். ஆனால் அந்த வேதனை ஆறுவதற்கு முன்பே ஆயுதங்களை கட்டி தாக்குதலுக்கு தயாராகச் சொல்லி மீண்டும் ஒரு கட்டளை மே 6ம் திகதி அதிகாலை வருகிறது! தலையிடி காய்ச்சல் என்று சாக்கு கூறிய இரண்டு போராளிகள் தும்புக்கட்டையால் நையப்புடைக்கப்பட்டதை பார்த்ததும் எல்ப் ட்ரக்கில் முண்டியடித்தபடி கோழைகளாக அடுத்த கொலைக்களத்திற்கு புறப்பட்டோம்.

அன்று கோண்டாவில் சுற்றிவழைப்பில் எனக்கு கோண்டாவில் பஸ் டிப்போவிற்கு அருகில் காவல் கடமை! ஒரு வயது முதிர்ந்தவர் என்னுடன் பேசினார். நான் கொஞ்சம் விரக்தியாக பேசியதாலே என்னவோ துணிந்து ஒரு விடயத்தை கூறினார். தம்பி துவக்கெடுத்தவனுக்கு துவக்காலை தான் சாவு! இது எல்லாம் ஒரு பெரிய அழிவிலைதான் முடியும்! மேலை ஒருத்தன் பாத்துக் கொண்டிருக்கிறான் எண்டதை மறந்திடாதை என்று கூறிவிட்டு போய்விட்டார்.

சில மணித்துளிகளுக்குள் ரெலோ இயக்க தலைவரும் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார் என்று வோக்கியில் செய்தி வந்தது. 1987 மே மாதம் ஒரு புகையிலைத் தோட்டத்தில் மறைந்து நிராயுதபாணியாக இருந்த சிறீ சபாரத்தினம் அவர்கள் கையை உயர்த்தியபடி கிட்டு பேசுவோம் பேசித் தீர்ப்போம் என்று கூறியபடி வெளியில் வந்து கிட்டுவின் மெய்ப்பாதுகாவல் கடமையிலிருந்த சாந்தமணியின் அருகில் சென்று அவரின் துப்பாக்கியை பறிக்க முற்பட்டதாகவும் உடனடியாக கிட்டு அவரை சுட்டுக்கொன்றதாகவும் வோக்கி டோக்கி அலறியது! இந்தியாவுடன் சேர்ந்து புலிகளை அழிக்க சதி செய்த ரெலோ புலிகளால் அழிக்கப்பட்டது என்று செய்தி எங்கும் அலறியது.

எல்லாம் முடிந்து விட்டது. ரெலோ இயக்கம் மக்களிடம் களவெடுத்த பொருட்கள் என்று பல கண்காட்சிகள் யாழ் நகரில் காட்டப்பட்டது. அண்மையில் நான் யாழ்ப்பாணம் சென்ற போது கூட எனது நண்பர் கூறினார் ரெலொ களவெடுத்த படியால்தான் புலியள் அவையை அழிச்சவை என்று! பாவம் அந்த அப்பாவி மக்களிற்கு இன்றும் தெரியாது கண்காட்சியில் காட்டப்பட்ட பொருட்களில் முக்கால்வாசிக்க மேற்பட்ட பொருட்கள் எமது இயக்கத்தால் கொள்ளையடிக்கப்பட்டவை என்று…

சரியாக 22ஆண்டுகள் கழித்து 2009மே மாதம் தொலைக்கட்சி ரேடியோ ஏன் உலகம் எல்லாமே அலறியது வெள்ளைக்கொடியுடன் பேசச் சென்றவர்கள் சுட்டக்கொல்லப்பட்டார்கள் என்று!

அன்று கோண்டாவிலில் அந்த பெரியவர் என்ன சொன்னாரே அது நடந்தேறி விட்டது! வெள்ளைக் கொடிஇ சரணடைவுஇ நிராயுதபாணியாக கொலை என்று நாம் மீளவும் இன்று அங்கலாய்கிறோம்… ஆத்திரப்படுகிறோம்… அவமானப்படுகிறோம். ஆனால் அன்றும் இது நடைபெற்றது. யாரும் ஆத்திரப்படவில்லைஇ அவமானப்படவில்லைஇ ஐநாவிடம் சென்று நியாயமும் கேட்கவில்லை!

25 ஆண்டுகள் சென்று விட்டது இன்று கூட இதைப்பற்றி ஒரு சுயவிமர்சனத்தை செய்யவோ குறைந்த பட்சம் ஒரு பொது மன்னிப்பு கேட்க கூட தயாராக இல்லை.கேட்க ஆயத்தப்படுத்தியவரையும் துரோகியாக்கி இறுதியில் அவரின் மன்னிப்பையும் காட்டிக்கொடுப்பு என்று ஏளனம் செய்கிறார்கள்.

இன்று நானும் ஒரு துரோகி!காரணம் நான் பழசை கிளறுகிறேனாம். நாம் செய்வதெல்லாவற்றையும் கூட்டி அப்படியே மறைத்து விட வேண்டும்! அதை சும்மா கிளறுவதால் என்ன பயன்? செய்தவர்கள் இன்று இல்லை! ஆனால் உவன் மகிந்தனை விடக்கூடாது. இவர்கள் எல்லாம் இன்றும் மறக்கும் ஒரு விடயம் எவன் ஒருவன் தனது கடந்தகாலத்தை மறக்கிறானோ அவன் மீண்டும் அதையே செய்ய முயல்வான் என்பதே!

எம் தமிழ் தலைமைகள் எல்லாம் அன்று முதல் இன்று வரை தமது அதிகாரங்களை தக்க வைப்பதிலேயே குறியாக இருந்தார்களே ஒழிய மக்கள் நலன் மீது எந்த வித அக்கறையும் இருக்கவில்லை. இவ்வளவு அவலம் வந்து முடிந்த பின்னரும் ஒரு மீளாய்வுக்கு தயார் இல்லை!

அவசர அவசரமாக கட்சி கட்டுவதிலும் தேர்தல் வைப்பதிலும் குறியாக இருக்கின்றனர். ஜனநாயகப் பண்புகள் அற்ற அமைப்புகளை கட்டியெளுப்புவதுடன் ஆயுதங்களை விட பலமான ஊடகங்கள் இன்று கைகளில் வைத்துக் கோண்டு ஆராஜகம் செய்து வருகின்றனர். உண்மைகள் மக்களிடம் போனால் செல்வாக்கு போய்விடும் என்ற பயத்தில் சுயநலம் கொண்ட மிருகங்களாக மாறி நடந்து மடிந்த போரில் குற்றுயுரும் குலை உயிருமாக தப்பியவர்களின் நியாயமான கோபங்கள் ஆதங்கங்கள் பேன்றவற்றை இன்று உயிருடன் குழிதோண்டிப் புதைக்கின்றனர். அந்த மக்களின் பட்டினிச் சாவில் இன்று தம் வெட்கங்கெட்ட அரசியலை செய்கின்றனர்.

50 வருடகாலமாக எதைப் பேசினோமோ அதையே இன்றும் பேசுகிறோம். உலக மாற்றம் பற்றிய எந்த சிந்தனையும் இன்றி அடுத்தவனை குறை கூறுவதிலும் எமது தவறுகளுக்கு நியாயம் கதைத்தபடி அடுத்தவன் தவறுகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதிலேயெ நாம் கண்ணும் கருத்துமாக நிற்கிறோம்.

காலாகாலமாக வேரூன்றி பெரு விருட்சமாக வடக்கில் வாழ்ந்து வந்த முஸ்லீம் சகோதரர்களை ஒரு இரவிற்குள் விரட்டியடித்து விட்டு சிங்களவன் எங்கடை காணியைப் பறிக்கிறான் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறோம். அந்த சமூகத்திடம் குறைந்த பட்சம் மன்னிப்புத்தான் கேட்க வேண்டாம் அது சரியென்று வியாக்கியானம் கொடுத்து அவர்களை இன்னமும் அவமானப்படுத்துகிறீர்கள். இலங்கை ஒரு பல கலாச்சாரங்களைஇ பல இனங்களைஇ பல மதங்களை கொண்ட ஒரு நாடு என்பதை மறந்து எனது சாதி உயர்ந்து நிற்க வேண்டும் என்ற சுயநலமும் மற்றவனை வீழ்த்த வேண்டும் என்ற ஆவேசமும் தான் எங்களை நோக்கிய சிங்கள பேரினவாதத்தை வளர்த்தது என்பதை நாம் என்று உணரப்போகிறோம்?

காலணித்துவ ஆட்சியின் பின் இலங்கையில் இனங்களிற்கிடையிலான சந்தேகங்களை வைத்து அரசியல் செய்த தமிழ்இ சிங்கள தலைமைகள் தான் இனவாத அரசியலைத் தோற்றுவித்தன. இதே சந்தேகங்கள்தான் இன்று எம் எல்லாரிடமும் பல்வேறு பிளவுகளை தோற்றுவித்தும் வருகிறது. இதற்கு நாம் முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இலங்கை என்ற அழகிய தீவில் மக்கள் என்றுமே நிம்மதியாக வாழ முடியாது.

புலம்பெயர் மண்ணில் வாழும் மக்கள் இன்று ஆத்திரம் கொண்டவர்களாகவும் பழிக்கு பழி என்ற சிந்தனையை மட்டுமே தம்முள் வைத்தபடி இனவாத அரசியலை வளர்த்து வருகிறார்கள். தமிழ் மற்றும் சிங்கள இனவாதிகளிற்கு இவர்கள் இன்னமும் தீனி போட்ட வண்ணமுள்ளனர். கண்ணுக்கு கண் என்பது உலகை குருடாக்கிவிடும் என்பதை பற்றியெல்லாம் இவர்களிற்கு கவலை இல்லை! நான் குருடானாலும் பரவாயில்லை என் எதிரியை குருடாக்க வேண்டும் என்ற ஆவேசம் தான் அவர்களிடம் மிஞ்சி நிற்கிறது.

இன்று இந்த நிகழ்வு நடைபெறுவது கூட பலருக்கு தெரியாது. தெரிந்தாலும் அது பற்றி அக்கறையில்லை! இதுதான் எம் சமூகத்தின் சாபக்கேடு. தம் தவறுகளை திருத்த முயலாதவர்கள் எப்படி அடுத்தவனை திருந்தச்சொல்ல முடியும்?

யுத்தம் முடிவடைந்து இன்று இலங்கையில் இனங்களிற்கிடையிலான உறவு வளர்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தள்ளது. புலம்பெயர் மண்ணில் உள்ளவர்கள் முதலில் தங்கள் கோபங்கள் ஆத்திரங்களை மறக்க வேண்டும். கடந்த 30 ஆண்டுகாலப் பகுதியில் நடந்த ஒவ்வொரு விடயங்களையும் பக்க சார்பற்று நேர்மையுடன் திரும்பி பார்க்க வேண்டும். தாம் விட்ட தவறுகளிற்கு மன்னிப்பு கோர வேண்டும். தமக்கிழைக்கப்பட்ட அநீதிக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டாது அந்த தவறு திரும்பவும் நடைபெறாதிருக்க என்ன செய்ய முடியும் என்று சிந்திக்க வேண்டும். அதற்கான ஒரு பொறிமுறையை உருவாக்க வேண்டும். இதற்கு நாம் முதலில் மன்னிக்க தயாராக வேண்டும். தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற நிறவெறிப் போராட்ட முடிவு இன்று எமக்க ஒரு நல்ல பாடமாக இருக்கிறது.

இலங்கையர் அனைவரும் தான் சாராத இன மத கலாச்சாரங்கள் இலங்கையின் ஒரு கொடை என்பதை உள்வாங்க வேண்டும். அதையும் பாதுகாத்து வளர்ப்பது எமது கடமை என்பதை நம் மனதில் நிலை நிறுத்த வேண்டும். இதன் முலமாக இனங்களிற்கிடையிலான உறவு மேம்படுவதுடன் இன விரேதாங்களும் சந்தேகங்களும் அற்றுப்போகும் ஒரு சூழல் உருவாகும்.

சகோதர படுகொலைகளை நாம் மன்னித்து ஒன்றுபட்டு முன்நோக்கி நகர வேண்டும். இதற்கு எல்லா இயக்கங்களிலுமிருந்து போராட சென்று மரணித்தவர்களை ஒன்றாக நினைவு கூர நாம் ஒரு பொதுவான தினத்தை தெரிந்தெடுக்க வேண்டும். இந்த தினம் எமது கடந்தகால இயக்க மோதல் காயங்களிற்கு ஆறுதல் கொடுக்கும் ஒரு தினமாக அமையவேண்டும். அன்று அனைவரும் தாம் முன்விட்ட பிழைகளை நேர்மையுடன் மனம் விட்டு பேச வேண்டும்.

எமது போராட்டத்திற்கு தலைமை வகித்த எல்லா தலைவர்களும் இன்று எம்முடன் இல்லை. அவர்கள் யாருமே தம் தவறுகளிற்கு மன்னிப்புக் கோரவில்லை. ஆனால் இந்த நாளில் நான் சார்ந்த அமைப்பு செய்த சகல தவறுகளிற்கும் அந்த அமைப்பில் ஒரு காலத்தில் இருந்தவன் என்ற முறையிலும் இதனால் அன்று நான் செய்திருக்க கூடிய சகல தவறுகளிற்கும் இன்று உங்களிடம் ஒரு பொது மன்னிப்பை கோருகிறேன்.

உலகில் மாற்றம் வரவேண்டுமாயின் அது உன்னுள் தான் ஆரம்பிக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வாசகத்துடன் எனது உரையை முடிக்கிறேன்.

- ரெலோ மீது தாக்குதல் நடத்திய முன்னாள் புலி உறுப்பினர் வாசுதேவன்!
 
10991121_899443856742981_901936868111316
 

முன்னாள் போராளி எல்லாளனின் கீறல் - 18”


இவ்வாரம் நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி இயக்கங்களுக்கிடையிலான முதலாவது பெரும் மோதலை கீறப்போகிறேன்.

        

   இம் மோதல் எப்படி ஆரம்பமானது என்பது பற்றி ஒரு தொடர் கட்டுரையிலிருந்து சில பகுதிகளை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கின்றேன்...

 யாழ்ப்பாணத்தில் மருதனார் மடம், நெல்லியடி போன்ற இடங்களில் சிறு சிறு சச்சரவுகள் புலிகள் - டெலோவினரிடையே நிகழ்ந்தன. ஆயினும் பாரியளவு பாதிப்பு ஏற்படாத வகையில் இரு தலைமைகளும் தங்கள் உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தன. 1986 ஏப்ரல் 29 அரியாலைப் பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த இவ்விரு இயக்க உறுப்பினர்களிடமும் முரண்பாடு ஏற்பட்டது. புலிகள் இயக்க உறுப்பினர்களை டெலோ உறுப்பினர்கள் தாக்கினர். எனவே தாக்கப்பட்ட உறுப்பினர்கள் அரியாலையில் இருந்த நடா முகாமுக்கு தொலைத் தொடர்பு மூலம்  விடயத்தைத்  தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்தார் பொறுப்பாளர் நடா. புலிகளைத் தாக்கிய டெலோ உறுப்பினர்கள் துவிச்சக்கர வண்டியில் வந்துகொண்டிருப்பதைக் கண்டதும் அவர்களைப்  பிடித்தார். அடிக்கவும் செய்தார். இதனால் புலிகளுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டுமென டெலோவினர் முடிவெடுத்தனர்.

         அப்போது தமது கோட்டையாக அவர்கள் கருதிக்கொண்ட கல்வியங்காட்டில் புலிகள் யாராவது அகப்பட்டால் பிடிப்பதெனத் தேடித் திரிந்தனர். சரா என்ற புலி உறுப்பினரைக் கண்டதும், அவரைப் பிடிக்கலாமென நோட்டமிட்டனர். ஆனால் கிட்டே வந்து பார்க்க முடியவில்லை. ஏற்கனவே ஒரு பிரச்சினையில் சரா கூட்டமாக வந்த ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர்களைத் தனது துணிச்சல் மூலம் மிரட்டியனுப்பிய சம்பவம் இவர்களுக்கு நன்கு தெரியும். சராவும் கல்வியங்காட்டைச் சேர்ந்தவர்தான்.

பேச்சுக்கு அழைப்பு...
கல்வியங்காடு பழம் வீதியில் இருபாலைக்கு அண்மித்ததாக புலிகளின் புகைப்படப்பிரிவின் வேலைகள் நடைபெறும் இடம் இருந்தது. அங்கு  சந்துரு என்றொரு உறுப்பினர் செல்ல வேண்டியிருந்தது. இந்தியாவிலிருந்து படகில் திரும்பிக்கொண்டிருந்த புலிகளின் படகு மீது ஸ்ரீலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தினர். அப்படகில் அப்போதைய மட்டக்களப்பு பொறுப்பாளராக விளங்கிய அருணாவும் உடன் இருந்தார். இத் தாக்குதலில் அனைவரும் வீரச்சாவடைந்து விட்டதாகக் கருதப்பட்டது. இவர்கள் அனைவரது புகைப்படங்களையும் வீரவணக்கத்துக்காக வைக்க வேண்டியிருந்தது. தட்டா தெருச் சந்திக்கு அண்மையிலிருந்த புலிகளின் தலைமைப் பணிமனையிலிருந்து புகைப்படப் பிரிவின் இடத்துக்கு சந்துருவைக் கூட்டிக்கொண்டு செல்லுமாறு அப்போது அங்கே வந்த பசீர் என்னும் உறுப்பினர் கோரப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் சென்ற பசீரையும், சந்துருவையும் கல்வியங்காடு ஞானபாஸ்கரோதயா சனசமூக நிலையத்துக்கு அப்பால் நித்தி என்ற டெலோ உறுப்பினரும் இன்னுமொருவரும் வழிமறித்தனர். அவர்களுக்குப் பசீரைத் தெரியாது. சந்துரு புலிகள் இயக்க உறுப்பினர் எனத் தெரியும். "நீங்கள் டைகேர்ஸ் தானே? " என்று கேட்டார் நித்தி "ஓம்" எனப் பதிலளித்தார் பசீர். "உங்கட ஆக்கள் எங்கட ஆக்களுக்கு அடிச்சிப்போட்டினம். அதைப்பற்றிக் கொஞ்சம் கதைக்க வேணும்.  உள்ளுக்குள்ள வாங்கோ" என்று தமது முகாமொன்றைக் காட்டினார். அதற்கு "பிரச்சினைகள் பற்றிக் கதைக்க வேணுமெண்டா, அதுக்குத் திலீபன் தான் வரவேணும். நான் போய்த் திலீபனுக்குச் சொல்லுறன். நீங்கள் அவரோட கதைச்சு முடிவு காணுங்கோ" எனத் தெரிவித்தார் பசீர். "நாங்கள் திலீபனுக்குச் சொல்லுறம், அவரும் வரட்டும். முதல்ல நீங்கள் உள்ளுக்கு வாங்கோ" என்ற நித்தியின் குரலில் ஒரு கண்டிப்புத் தெரிந்தது. அங்கிருந்து தப்ப வழி இல்லை. இருவரும் உள்ளே போனால் கிட்டுவுக்குத் தகவல் தெரிவிக்க முடியாது. தான் அங்கே நின்று கொண்டு சந்துருவை விடுவிக்கவும், கிட்டுவுக்குத் தகவல் அனுப்பவும் உள்ள வழி பற்றி உடனடியாக முடிவெடுத்தார் பசீர்.  "சரி பிரச்சினை இல்லை; நான் உள்ளுக்க வாறன்; ஆனா என்னோட வந்தவருக்கு முக்கியமான வேலை இருக்கு அவர் போகட்டும் என்ன" என்று சொல்லிவிட்டு அவர்கள் அவர்களின் பதிலை எதிர்பாராமலே சந்துருவிடம் மோட்டார் சைக்கிளைக் கையளித்தார் பசீர்.

சந்துருவின் சாமர்த்தியம் !
அவர் குறிப்பால் தனக்கு உணர்த்தியதைக்  கச்சிதமாகப் புரிந்து கொண்டார் சந்துரு. புகைப்படப் பிரிவுக்குப் போவது போல போன வழியில் அப்படியே போய் இராசபாதை வழியாக கிட்டுவின் முகாமுக்கு விரைந்தார். அவர் வந்த வழியில் திரும்பிச் செல்ல முனைந்திருந்தால் நிலைமை பாதகமாக முடிந்திருக்கும். அவரையும் தடுத்திருப்பார்கள்.
  சந்துரு வேகமாகச் சென்றதும் தான் நித்திக்கு நிலைமை புரிந்தது. தான் அவரைப் போக விட்டிருக்க கூடாது என உணர்ந்தார். இதே வேளை பசீர் "சிறியண்ணையிட்டச் சொல்லுங்கோ பசீர் வந்திருக்கிறனெண்டு. அவருக்கு என்னைத் தெரியும்" என்றார். உடனே இருவரை சிறி சபாரத்தினத்திடம் அனுப்பிய நித்தி "நாங்கள் வேற ஒரு இடத்தில இருந்து கதைப்பம் வாங்கோ" எனக் கூறி ஞானபாஸ்கரோதயா நிலையத்துக்கு முன்னால் பருத்தித்துறை வீதியில் போய் முடியும் இடத்திலுள்ள மற்றொரு டெலோ முகாமுக்கு பசீரை அழைத்து சென்றார். பசீர் நம்பிக்கையோடு அங்கு சென்றார்.
     புதிய உறுப்பினர்களிடையே புரிந்துணர்வு இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஒன்றாக ஒரே இடத்தில் தங்கியிருந்து சாப்பிட்டு, படுத்துறங்கி நட்பாகப் பழகிய சிறி பழைய நட்புக்கு மதிப்புக் கொடுப்பார் என பசீர் நினைத்தார்.
எனவே இப்படியான சந்தர்ப்பத்தில் அவர் தன்னை அழைத்து உரையாடுவார் அல்லது தானிருக்கும் இடத்துக்கு வந்து சந்திப்பார் எனக் காத்திருந்தார் பசீர்.
 இதேவேளை சந்துரு கிட்டுவின் முகாமுக்குச் சென்ற போது அங்கே ஒரே அமளி - கல்வியங்காடு பிரதேசப் பொறுப்பாளர் முரளியை டெலோவினர் கடத்தி விட்டதாகப் பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தனர். எந்த நிலைக்கும் ஆயத்தமாகப் புறப்படும் நிலையில் அவர்கள் இருந்தனர்.

சீற்றமுற்ற கிட்டு
கிட்டுவிடம் போன சந்துரு "காக்காண்ணையை டெலோ புடிச்சிட்டாங்கள்" என்று சொன்னதும் கோபத்தின் உச்சிக்கே போய் விட்டார் அவர். ஏனெனில் பசீரின் திருமண ஏற்பாடு குறித்து பிரபாகரனிடம் பேசி அனுமதி வாங்கியவரே அவர்தான். சகல விடயங்களையும் (புகைப்படம் முதலானவை ) அவரே ஒழுங்கு படுத்தியவர் இந்தத் திருமணத்தில் ஒரு சாட்சியாகவும் கையொப்பமிட்டவர். எனவே இனித் தாமதிக்க நேரமில்லை என முடிவெடுத்தார். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் டெலோவினருடன் தொடர்பு கொள்ள முடிவெடுத்தார். அந்தப் பதட்டமான சூழலிலும் தொடர்பு கொள்பவர் பொருத்தமான ஆளாக இருக்குமாறு பார்த்துக்கொண்டார்.

கட்டைப் பிராய்க்கு அனுப்பிய அணியினரிடம் அரை மணி நேரத்துக்குள் பசீர், முரளி  இருவரையும் விடுதலை செய்யாவிட்டால் நேரடியாக மோதுவோம் என எச்சரிக்கை விடுக்குமாறு உத்தரவிடப் பட்டிருந்தது.
இதே வேளை யாராவது ஆயுதங்களுடன் வந்தால் சுடுமாறு அங்குள்ள ஒரு மாடி வீட்டில் நின்ற தமது உறுப்பினர்களுக்கு டெலோவினர் உத்தரவிட்டிருந்தனர்.  

இதெல்லாம் தெரியாமல் சிறி சபாரத்தினத்திடம் சென்றவர்கள் வரும் வரை காத்துக் கொண்டிருந்தார் பசீர். அவர்கள் இருவரும் வந்ததும் அந்த முகாமுக்குப் பொறுப்பானவரைக் கூப்பிட்டு எதோ சொன்னார்கள். இதனைத் தொடர்ந்து டெலோ உறுப்பினர் கமல் என்பவர் பிரசுரிக்க முடியாத `செந்தமிழில்` தனது அதிகாரத்தைக் காட்ட முனைந்தார். அதுவரை "எனக்கு யாழ்ப்பாணத்தில் நடந்த விடயங்கள் தெரியாது. திருமணம் முடிப்பதற்காக இங்கு வந்து சில நாட்கள் தான் ஆகிறது" என்று பசீர் சொல்லிக் கொண்டிருந்தார். கமலின் விசாரணைத் தொனி மாற்றமடைந்தது. அடிகளும் விழத்தொடங்கின.
அந்த நேரத்தில் "வந்திட்டாங்கள்" என்று கூறியபடி ஒருவர் ஓடி வந்தார். தொடர்ந்து உத்தரவுகள் தூள் பறந்தன  "நான் சொல்லும் வரை ஒருவரும் சுடக் கூடாது" என பொறுப்பாளர் கட்டளை இட்டார்.
எங்கெங்கே நிலையெடுக்க வேண்டுமென அவரது வாய் உத்தரவு விட்டுக்கொண்டிருந்தது. அவ்வேளையில் ஒரு அறையிலிருந்து முரளி இழுத்து வரப்பட்டார். முரளி - பசீர் இருவருக்கும் ஒருவரை ஒருவர் பார்த்ததில் அதிர்ச்சி. இருவருக்கும் ஒருவருக்கொருவர் பிடிபட்டது அதுவரை தெரியவில்லை. "இவங்கள் ரெண்டு  பேரையும் போட்டால் சரிவரும் " என்று சொல்லிவிட்டு முரளியை பசீர் நிற்கும் பக்கம் இழுத்துக்கொண்டு வந்தார் ஒருவர் - அப்போது வேறொருவர் "வேண்டாம் ! இவங்களை வச்சுத் தப்புவோம்" என்றார். அதை மற்றவர்களும் ஏற்றுக்கொண்டது போல் தெரிந்தது.
பிழையான நேரத்தில் பிழையான முடிவை எடுத்து விட்டது டெலோ. ஓரிரு நாட்களில் பருத்தித்துறை இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தனர் புலிகள். மன்னார் - வன்னியிலிருந்து ஏறத்தாழ எல்லாப் புலிகளும் இத் தாக்குதலுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த வேளையில் தான் புலிகளுக்கு பாடம் படிப்பிக்க வேண்டுமென்று முடிவெடுத்து விட்டனர் டெலோவினர். இந்நிலையில் புலிகளின் சகல அணிகளும் கல்வியங்காட்டை முற்றுகையிட்டன அப்போதுதான் நிலைமையின் விபரீதம் புரிந்தது டெலோவினருக்கு. பசீரையும், முரளியையும் இழுத்துக் கொண்டு ஒவ்வொரு வீடாகத் திரிந்தனர். இடை இடையே அடியும் விழுந்தது அவர்களுக்கு. "அவங்களை விடுங்கோடா" என்று சத்தமிட்டபடி சராவின் சகோதரிகள் பின்னால் ஓடி வந்தனர். அவர்களை நோக்கியும் `செந்தமிழால்` வீரம் காட்டினர் சிலர். முற்றுகை மெல்ல மெல்ல இறுகியது. இனி தப்புவது கடினம் என்ற நிலைமை அவர்களுக்கு.

தம்மைத் தடுத்து வைத்திருந்த டெலோ  உறுப்பினர்களிடம் " இந்தச் சண்டையை நிறுத்த எங்களால முடியும். எங்கள் இரண்டுபேரையும் பொதுமக்களோடு விடுங்கோ. நாங்கள் போய் சொன்னால், கிட்டு சண்டையை நிற்பாட்டுவார். நேரம்போனால் பாரிய உயிரிழப்பு ஏற்படும்” எனக் கூறினார் பசீர்.

 பசீரையும், முரளியையும் மாற்றிக் கொண்டிருந்தனர். முற்றுகை இறுகி இறுகி இந்த வீட்டை நெருங்கும் சமயமாகிவிட்டது.
.
 அப்போது அங்கிருந்த டெலோவினருக்கு ஒரு வகையில் தாங்கள் கவசமாக இருப்பதைப் புரிந்து கொண்டனர் பசீரும், முரளியும்.
இதேவேளை சண்டை கட்டைப்பிராயில் தொடங்கியவுடனே கிட்டுவும் , பிரபாகரனும் உரையாடினார். இருவரையும் விடுதலை செய்யாததால் சண்டையைத் தொடர்வதென முடிவெடுத்தனர்.
கட்டைப்பிராய் மாடிவீட்டில் சண்டை தொடங்கிய விதம் குறித்தும் தெரிவிக்க வேண்டியுள்ளது. அங்கு நின்ற திருமலையை சேர்ந்த டெலோ உறுப்பினர் ஒருவர் வாகனத்தில் ஆயுதங்களுடன் புலிகள் வந்து இறங்கியதைக் கண்டதும் கைநடுங்கி வானத்தை நோக்கிச் சுட்டார். ஆயுதங்களோடு யார் வந்தாலும் சுடு என்று தான் அவர்களுக்குக் கட்டளை இடப்பட்டிருந்தது. ஒரு வேட்டு போதுமே சமரைத் தொடங்க - பேச்சுவார்த்தைக்கோ எச்சரிக்கை விடவோ தேவையில்லாமல் போயிற்று. லிங்கம் தலைமையிலான குழுவினருக்கும் இப்படித்தான் எதாவது நடந்திருக்க வேண்டும். அவரது தலையில் சுட்டுக் காயம் காணப்பட்டது.

டெலோ புலிகள் மோதல் அடுத்த கீறலிலும் தொடரும்...

http://www.thennaadu.com/2018/02/18.html

 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.