Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை மாற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை மாற்றம்

by in செய்திகள்

cabinetசிறிலங்காவில் இன்று அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது. அதிபர் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில்  பொறுப்பேற்கவுள்ளனர்.

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை அடுத்து, இந்த அமைச்சரவை மாற்றம் இடம்பெறவுள்ளது.

இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது, ஐதேக தரப்பில் லக்ஸ்மன் கிரியெல்லவிடம் உள்ள நெடுஞ்சாலைகள், மற்றும் உயர்கல்வி அமைச்சு கபீர் காசிமிடம் கையளிக்கப்படும் என்றும், கபீர் காசிமிடம் உள்ள பொது தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சு லக்ஸ்மன் கிரியெல்லவிடம் கையளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி சமரவீர, நிலையான அபிவிருத்தி மற்றும் வனவாழ் உயிரினங்கள் அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

சாகல ரத்நாயக்கவிடம் இருந்து சட்டம், ஒழுங்கு அமைச்சு மீளப் பெறப்பட்டு, தெற்கு அபிவிருத்தி மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, நிதி அமைச்சராக மங்கள சமரவீரவே தொடருவார் என்றும், சட்டம் ஒழுங்கு அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனைய அமைச்சரவை நிலையிலுள்ள அமைச்சர்களின் பொறுப்புகளில் பெரியளவில் மாற்றங்கள் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

ஹர்ஷ டி சில்வா,அஜித் பெரேரா, சுஜீவ சேனசிங்க, ஆகியோருக்கு சுதந்திரமான அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளன.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் அமைச்சுக்களிலும் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.

விவசாய அமைச்சராக மகிந்த அமரவீர நியமிக்கப்படலாம் என்றும், தற்போதைய விவசாய அமைச்சர் துமிந்த திசநாயக்க திறன் விருத்தி கைத்தொழில் பயிற்சி அமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திம வீரக்கொடி புதிய கடற்றொழில் அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, அமைச்சர் பதவியை ஏற்கப் போவதில்லை என்று கூறியிருந்த சுசில் பிரேம ஜயந்த இன்று ஜப்பானுக்குப் பயணமாகவுள்ளார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.puthinappalakai.net/2018/02/25/news/29311

Update : அமைச்சரவை மறுசீரமைப்பு ஆரம்பம் >>>> உள்ளே அமைச்சு பதவிகள் >>>>

 

 

புதிய அமைச்சரவை மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சட்டம் ஒழுங்கு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

லக்ஸ்மன் கிரியெல்ல  அரச முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

கபீர் ஹாசிம்  உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

சாகல ரத்னாயக்க  தென் மாகாண அமைச்சர் மற்றும் இளைஞர் விவகார அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஹரீன் பெர்னாண்டோ  டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ரவீந்திர சமரவீர வனவளம் மற்றும் நிலையான அபிவிருத்தி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

பியசேன கமகே இளைஞர் விவகார, தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அஜித் பி பெரேரா சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஜே.சீ. அலவத்துவல   உள்விவகாரம் பிரதி அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

கலாநிதி ஹர்ஷ டி சில்வா தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

http://www.virakesari.lk/article/30991

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.