Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாங்கோ ஒடியல் கூழ் குடிக்கலாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கிண்ணத்தில் விட்டு ஒரு துண்டு தேங்காய் சொட்டும் எடுத்து கடித்து கடித்து குடித்துக் கொண்டிருங்கோ.செய்முறையை ஆறுதலாக எழுதுகிறேன்.இது மச்சக் கூழு; சைவக்காரர் கையை வைத்திடாங்தோங்கோ.

IMG-0900.jpg

IMG-0901.jpg

தேவையான பொருட்கள்.
ஒடியல் மாவு
மீன்
நண்டு(சிறியது)
இறால்
மரவள்ளிகிழங்கு
பயிற்றங்காய்
பலாக்கொட்டை
சோழன்
பச்சைமிளகாய்
பழப்புளி
உப்பு
செத்தல்மிளகாய்

செய்முறை
பெரிய சட்டி அல்லது குண்டானில் முக்கால்வாசி தண்ணீர் நிரப்பி மரக்கறி மீன் வகைகளைப் போட்டு கொதித்த பின் செத்தல்மிளகாய் அடித்து(உறைப்பு கூடுதலாக இருந்தால் நல்லது)போட்டு நன்றாக கொதித்து அவிந்த பின் பழப்புளியை கரைத்து விடவும்.கடைசியில் ஒடியல் மாவைக் கரைத்து விடவும்.இறக்க முதலே உப்பு புளி உறைப்பு உங்களுக்கு ஏற்ற மாதிரி இருக்கிறதா என்று சரி பார்த்துக் கொள்ளவும்.

கூழ் பலரும் பல இடங்களில் பல மாதிரி செய்வார்கள்.இது நாங்கள் செய்த முறை மட்டுமே.கூழ் தனியே இருந்து குடிக்கமுடியாது.ஐந்து பத்து பேர் இருந்தால்த் தான் கலகலப்பாக இருக்கும்.

Edited by ஈழப்பிரியன்

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "angry moving gif"

  • கருத்துக்கள உறவுகள்

கூழைக் காய்ச்சி வைச்சுப் போட்டு, பனங்கள்ளு வாங்கியண்டோடியாறன் போனாளை காணமப்பா....

அங்கையே அடிச்சிற்று வழக்கம் போல மப்பில விழுந்து கிடக்கிறாரோ தெரியேல்ல... 

சுவியர் வேற, அந்தரப்படுறார்...

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

கூழைக் காய்ச்சி வைச்சுப் போட்டு, பனங்கள்ளு வாங்கியண்டோடியாறன் போனாளை காணமப்பா....

அங்கையே அடிச்சிற்று வழக்கம் போல மப்பில விழுந்து கிடக்கிறாரோ தெரியேல்ல... 

சுவியர் வேற, அந்தரப்படுறார்...

அவர் சைவக்காரர் கை வைக்க வேண்டாம் என்று சொல்லிபோட்டார்......!  tw_blush:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, suvy said:

Résultat de recherche d'images pour "angry moving gif"

ஏனிந்த கடுப்பு?

5 hours ago, Nathamuni said:

கூழைக் காய்ச்சி வைச்சுப் போட்டு, பனங்கள்ளு வாங்கியண்டோடியாறன் போனாளை காணமப்பா....

அங்கையே அடிச்சிற்று வழக்கம் போல மப்பில விழுந்து கிடக்கிறாரோ தெரியேல்ல... 

சுவியர் வேற, அந்தரப்படுறார்...

வந்துட்டேன்யா வந்துட்டேன்.

நிறத்தையும், இறுக்கத்தையும் பார்த்தா, கூழுக்கு தேவையில்லாத சாமான்கள் சேர்த்தமாதிரி தெரியுது, சத்தென்றுநினைத்து; பூசணி/உ.கிழங்கு, Chili beans, etc.

எழுதினாத்தானே ஒருமுடிவுக்கு வரலாம், கொன்னந்து வைச்சுட்டு பிலாவிலை பொறுக்கப்போட்டியளாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%  %E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D.jpg

ஒடியல் கூழ் அருந்துவதில் சில நுனுப்பங்கள் இருக்கின்றன, ஒரு சாதாரண பாத்திரத்தில் ஒடியல் கூழை விட்டு குடித்தால் அதன் சரியான சுவை தெரியாது, அதானால் பனை ஓலையில் 'பிளா' தயாரித்து அதில் கூழ் குடிக்கும்போது அதிக சுவயைத் தரும். அடுத்ததாக உறவினர் நண்பர்களோடு சேர்ந்து, அதாவது பலருடன் சேர்ந்து கூழ் குடிக்கும் போது அதன் உணர்வுகள் புரியும்.

கூழ் குடித்து அரை மணி நேரத்துக்கு முன் நீர் அருந்தல் ஆகாது. கூழ் குடிக்கும் போது பேச கூடாது, காரணம் கூழில் உள்ள மீன் முற்கள் தொண்டை பகுதியில் போறுக்க கூடும், சிறு குழந்தைகள் கூழ் குடிக்கும் போது அதிக கவனம் எடுக்கவும், காரணம்: கூழின் கார தன்மை, மற்றும் கூழில் இருக்கும் மீன் முள்ளுகள். கூழ் எப்பொழுதும் அதிக சூடாகவே குடிக்க வேண்டும்.

ஒடியல் கூழ்

நான் இந்த ஒடியல் கூழை கண்ணால் கண்டதும் கிடையாது.

எங்கள் பகுதிகளில் கேழ்வரகு கூழ், அதில் பழைய சோற்றைக் சிறிது கலந்து, உரித்த வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒரு கடி கடித்துக்கொண்டே சாப்பிட்டால் அமிர்தமாய் இருக்கும். பெரும்பாலும் விவசாயம் செய்யும்ப்பொது வயல்வெளிகளின் நடுவே மதிய உணவாக இதை அருந்துவர்.

என்னுடைய தந்தையாருடன் வயலில் பயிர்செய்கையின்போது பலமுறை கேழ்வரகு கூழை அருந்தியுள்ளேன்.

201704051258176298_how-to-make-ragi-kooz  201707290148_kuww.jpg

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ராசவன்னியன் said:

சில உணவு வகைகளின் மூலவரலாறுகளை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. இலங்கையின் பலவும்  யாழ்ப்பாணத்தின் சிலவும், ஐரோப்பியர்களினால்  மறுசீரமைக்கப் பட்ட உணவுகள் ஆகும்.

தமிழகமும், தென் இந்தியாவும், பிரிட்டிஷ் காரர் வந்த 18ம் நூறாண்டு வரை சுதந்திரமானது. இலங்கையோ 16ம் நூறாண்டின் ஆரம்பம் முதல், பிரிட்டிஷ்காரர் வரும்வரை ஏறக்குறைய 250 வருடங்கள், போர்த்துக் கியருக்கு, பின்னர் டச்சுக்காரர்களுக்கும்  அடிமையானது. அவர்கள் 130 வகையான காய் கறிகளை அறிமுகம் செய்து, பல சமையல் முறைகளையும் அறிமுகம் செய்துள்ளனர்.

உருளைக்கிழங்கு, தக்காளி, பறங்கிக் காய் என்ற பூசணிக்காய், பீட்ரூட், கோவா, முள்ளங்கி என்று மிக நீண்ட லிஸ்ட் அவர்களது அறிமுகம்.

அந்த வகையில் இந்த, யாழ்ப்பாண கூழ், போர்த்துக்கேய அறிமுக ஒன்றாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களால்  அறிமுகமான மிளகாய், பீன்ஸ், மரவள்ளி இதனுள் சேர்க்கப் படுகின்றது. seafood stew என அழைக்கப் படும் இந்த கூழ்.... யாழ்ப்பாணத்தில் பிரசித்தமானது. ஆனாலும், நாம் இது தமிழரின் பாரம்பரியம் என (தவறாக) எண்ணுகிறோம்.

தமிழரின் பாரம்பரியம், கஞ்சி, ஆடிக்கூழ், கேழ்வரகு கூழ், கம்மங்க்கூழ்  போன்றவை.

முக்கியமாக, கறி போன்றே, கஞ்சி என்ற தமிழ் சொல், போர்த்துக்கேயரால் அறிமுகப் படுத்தப் பட்டதாக conjee என்ற பெயரில் ஆங்கில சொல்லாக ஆங்கில அகராதியில் உள்ளது. 

Edited by Nathamuni

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Knowthyself said:

நிறத்தையும், இறுக்கத்தையும் பார்த்தா, கூழுக்கு தேவையில்லாத சாமான்கள் சேர்த்தமாதிரி தெரியுது, சத்தென்றுநினைத்து; பூசணி/உ.கிழங்கு, Chili beans, etc.

எழுதினாத்தானே ஒருமுடிவுக்கு வரலாம், கொன்னந்து வைச்சுட்டு பிலாவிலை பொறுக்கப்போட்டியளாக்கும்.

உண்மை தான்.சாமானைக் கூடப் போட்டுட்டு சட்டி சின்னன் என்று சட்டை முறைத்து பார்த்து; கொண்டிருந்தது தான்.கொஞ்சம் இறுக்கம்.மற்றபடி சுவையாக இருந்தது.எல்லோரும் விரும்பி குடித்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

.....தமிழரின் பாரம்பரியம், கஞ்சி, ஆடிக்கூழ், கேழ்வரகு கூழ், கம்மங்க்கூழ்  போன்றவை.

கம்மங்கூழ் சில சமயம் அருந்தியுள்ளேன்.. ஆனால் கம்பு தானியத்தில் அதிகம் செய்யப்படுவது கம்பு உருண்டை..

சத்தான சுவையான உணவும்கூட.

பெரும்பாலும் கிராமங்களில் 'கார்த்திகை பண்டிகை'யன்று முதல் நாள் கம்பு உருண்டை, மற்றும் அரிசி உருண்டை செய்து முருகனுக்கு படைத்து உண்பதுண்டு.

201611301201318702_how-to-make-rye-urund  rice-flour-balls.jpg

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ராசவன்னியன் said:

ஒடியல் கூழ் அருந்துவதில் சில நுனுப்பங்கள் இருக்கின்றன, ஒரு சாதாரண பாத்திரத்தில் ஒடியல் கூழை விட்டு குடித்தால் அதன் சரியான சுவை தெரியாது, அதானால் பனை ஓலையில் 'பிளா' தயாரித்து அதில் கூழ் குடிக்கும்போது அதிக சுவயைத் தரும். அடுத்ததாக உறவினர் நண்பர்களோடு சேர்ந்து, அதாவது பலருடன் சேர்ந்து கூழ் குடிக்கும் போது அதன் உணர்வுகள் புரியும்.

கூழ் குடித்து அரை மணி நேரத்துக்கு முன் நீர் அருந்தல் ஆகாது. கூழ் குடிக்கும் போது பேச கூடாது, காரணம் கூழில் உள்ள மீன் முற்கள் தொண்டை பகுதியில் போறுக்க கூடும், சிறு குழந்தைகள் கூழ் குடிக்கும் போது அதிக கவனம் எடுக்கவும், காரணம்: கூழின் கார தன்மை, மற்றும் கூழில் இருக்கும் மீன் முள்ளுகள். கூழ் எப்பொழுதும் அதிக சூடாகவே குடிக்க வேண்டும்.

வன்னியர் நீங்கள் சொல்வது போல ஊரில் பிழா மற்றும் பலா இலையில்த் தான் கூழ் குடிப்பது.இங்கே அத்தனை வசதிகளும் இல்லையே.

பொதுவாகவே சேர்ந்து சாப்பிட்டால் ஒரு தனி சுகம்.அதிலும் கூழ் என்றால் கட்டாயம் ஆட்கள் கூட இருந்தே தீர வேண்டும்.

பிள்ளைகள் மற்றும் சின்னவர்கள் பொதுவிலேயே மீன் முள்ளைக் கண்டால் பிரச்சனை பண்ணுவார்கள்.அதனால் முதலே மீனை அவித்து முள்ளெல்லாம் அகற்றி சதையை மட்டும் எடுத்து தான் கூழுக்கு போட்டது.

ஏன்?உங்களுக்கு ஏதாவது முள்ளு குற்றியதா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

அந்த வகையில் இந்த, யாழ்ப்பாண கூழ், போர்த்துக்கேய அறிமுக ஒன்றாக இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களால்  அறிமுகமான மிளகாய், பீன்ஸ், மரவள்ளி இதனுள் சேர்க்கப் படுகின்றது. seafood stew என அழைக்கப் படும் இந்த கூழ்.... யாழ்ப்பாணத்தில் பிரசித்தமானது. ஆனாலும், நாம் இது தமிழரின் பாரம்பரியம் என (தவறாக) எண்ணுகிறோம்.

தமிழரின் பாரம்பரியம், கஞ்சி, ஆடிக்கூழ், கேழ்வரகு கூழ், கம்மங்க்கூழ்  போன்றவை.

முக்கியமாக, கறி போன்றே, கஞ்சி என்ற தமிழ் சொல், போர்த்துக்கேயரால் அறிமுகப் படுத்தப் பட்டதாக conjee என்ற பெயரில் ஆங்கில சொல்லாக ஆங்கில அகராதியில் உள்ளது. 

நாதம் இதுவரை கூழ் எமது உணவு என்று தான் எண்ணியிருந்தேன்.புதிய தகவல்கள் பல தந்துள்ளீர்கள்.தகவலுக்கு நன்றி.

ஆடிக்கூழ் குடித்திருக்கிறேன்.கஞ்சியில் பல வகை.எனது தகப்னார் ஒரு கஞ்சி பிரியன்.அடிக்கடி இலைக் கஞ்சி தயார் செய்வார்.இப்ப கூட வீட்டில் பால்கஞ்சி செய்வார்கள்.பிள்ளைகளுக்கும் மிகவும் விருப்பம்.தடிமன் குணம் என்றால் புழிக்கஞ்சி உப்புக்கஞ்சி காச்சுவார்கள்.

15 minutes ago, ராசவன்னியன் said:

பெரும்பாலும் கிராமங்களில் 'கார்த்திகை பண்டிகை'யன்று முதல் நாள் கம்பு உருண்டை, மற்றும் அரிசி உருண்டை செய்து முருகனுக்கு படைத்து உண்பதுண்டு.

வன்னியர் அரிசி உருண்டை எமது வீட்டில் செய்வார்கள்.கம்பு உருண்டை கேள்விப்பட்டதே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, ஈழப்பிரியன் said:

ஏன்?உங்களுக்கு ஏதாவது முள்ளு குற்றியதா?

அவர் தான் கண்ணாலே கண்டதில்லை என்கிறாரே..

4 minutes ago, ஈழப்பிரியன் said:

நாதம் இதுவரை கூழ் எமது உணவு என்று தான் எண்ணியிருந்தேன்.புதிய தகவல்கள் பல தந்துள்ளீர்கள்.தகவலுக்கு நன்றி.

ஆடிக்கூழ் குடித்திருக்கிறேன்.கஞ்சியில் பல வகை.எனது தகப்னார் ஒரு கஞ்சி பிரியன்.அடிக்கடி இலைக் கஞ்சி தயார் செய்வார்.இப்ப கூட வீட்டில் பால்கஞ்சி செய்வார்கள்.பிள்ளைகளுக்கும் மிகவும் விருப்பம்.தடிமன் குணம் என்றால் புழிக்கஞ்சி உப்புக்கஞ்சி காச்சுவார்கள்.

சித்திரை கஞ்சி குடித்திருக்கிறீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

வன்னியர் நீங்கள் சொல்வது போல ஊரில் பிழா மற்றும் பலா இலையில்த் தான் கூழ் குடிப்பது.இங்கே அத்தனை வசதிகளும் இல்லையே.

பொதுவாகவே சேர்ந்து சாப்பிட்டால் ஒரு தனி சுகம்.அதிலும் கூழ் என்றால் கட்டாயம் ஆட்கள் கூட இருந்தே தீர வேண்டும்.

பிள்ளைகள் மற்றும் சின்னவர்கள் பொதுவிலேயே மீன் முள்ளைக் கண்டால் பிரச்சனை பண்ணுவார்கள்.அதனால் முதலே மீனை அவித்து முள்ளெல்லாம் அகற்றி சதையை மட்டும் எடுத்து தான் கூழுக்கு போட்டது.

ஏன்? உங்களுக்கு ஏதாவது முள்ளு குற்றியதா?

ஈழப்பிரியன், நீங்கள் யாரையும் ஒடியல்கூழ் விருந்திற்கு அழைக்காமல் நீங்கள் மட்டும் கமுக்கமாக குடித்துவிட்டால், எங்களுக்கு எப்படி அதன் சுவையோ, அதிலுள்ள முட்களோ தெரியும்..? :)

நான் இதுவரை ஒடியல்கூழை கண்டதே கிடையாது..! :unsure:

எனக்கு நீங்கள் தயாரித்த  ஒடியல்கூழை தவறாது பார்சல் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.:grin:

Er.ராசவன்னியன்,
நம்பர்:6, விவேகானந்தர் தெரு,
துபாய் குறுக்கு சந்து,
துபாய் மெயின் ரோடு,
(துபாய் பஸ் ஸ்டாண்டு அருகில்)
துபாய்.

வீட்டிற்கான வழி காட்டி அறிவிப்பு பலகை உங்கள் பார்வைக்கு...!

11rvsig.jpg

  • கருத்துக்கள உறவுகள்

3 minutes ago, ராசவன்னியன் said:

Er.ராசவன்னியன்,
நம்பர்:6, விவேகானந்தர் தெரு,
துபாய் குறுக்கு சந்து,
துபாய் மெயின் ரோடு,
(துபாய் பஸ் ஸ்டாண்டு அருகில்)
துபாய்.

வீட்டிற்கான வழி காட்டி அறிவிப்பு பலகை உங்கள் பார்வைக்கு...!

11rvsig.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ராசவன்னியன் said:

ஈழப்பிரியன், நீங்கள் யாரையும் ஒடியல்கூழ் விருந்திற்கு அழைக்காமல் நீங்கள் மட்டும் கமுக்கமாக குடித்துவிட்டால், எங்களுக்கு எப்படி அதன் சுவையோ, அதிலுள்ள முட்களோ தெரியும்..? :)

நான் தனியே குடிக்கவில்லை.அதனால்த் தான் படத்தை மட்டும் போட்டு விபரம் எழுத சுணங்கிவிட்டது.  

ஊரில் கூழ் என்றால் கள்ளுமுட்டியும் பக்கத்தில் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

நான் தனியே குடிக்கவில்லை.அதனால்த் தான் படத்தை மட்டும் போட்டு விபரம் எழுத சுணங்கிவிட்டது.  

ஊரில் கூழ் என்றால் கள்ளுமுட்டியும் பக்கத்தில் இருக்கும்.

வருத்தப்படாதீர்கள், ஈழப்பிரியன் ஐயா..! sgentil.gif

ஆனால் ஒடியல்கூழை mange9.gifதவறாமல் துபாய் முகவரிக்கு அனுப்பிவிடவும்..சொல்லிப்புட்டேன்..! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

நாதம் அருமையான காணெளி.ரொம்பவும் சிரிப்பாக இருந்தது.

அப்படியே காப்பி பண்ணியிருப்பார் என்று எதிர் பார்க்கவில்லை.இந்தக் காணொலியை மட்டும் இணைத்திருக்காவிட்டால் உண்மையாக இருக்குமோ என்று குழம்பியிருப்பேன்.

2 minutes ago, ராசவன்னியன் said:

வருத்தப்படாதீர்கள், ஈழப்பிரியன் ஐயா..! sgentil.gif

ஆனால் ஒடியல்கூழை mange9.gifதவறாமல் துபாய் முகவரிக்கு அனுப்பிவிடவும்..சொல்லிப்புட்டேன்..! :)

சரி சரி கிடைத்ததும் தகவல் தரவும்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

நாதம் அருமையான காணெளி.ரொம்பவும் சிரிப்பாக இருந்தது.

அப்படியே காப்பி பண்ணியிருப்பார் என்று எதிர் பார்க்கவில்லை.இந்தக் காணொலியை மட்டும் இணைத்திருக்காவிட்டால் உண்மையாக இருக்குமோ என்று குழம்பியிருப்பேன்.

என்ன சார், இவ்ளோ அப்பாவியாக இருக்கிறீர்கள்..? இந்த 'துபாய் காமெடி' பட்டி தொட்டியெல்லாம் மிகப்பிரபலம் ஆச்சே..! :)

ஆனால் ஓவ்வொரு முறையும் பர் துபாய் பேருந்து நிலையத்தை நான் கடக்கும்போது, இப்பொழுதும் இந்த 'துபாய் காமெடி' நினைவில் வரும்.

Edited by ராசவன்னியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, Nathamuni said:

சித்திரை கஞ்சி குடித்திருக்கிறீர்களா?

சித்திரைக் கஞ்சி கோவில்களில் குடித்திருக்கிறேன்.அன்று தானே போர்த் தேங்காய் அடிப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

திரிக்கு சம்மந்தம் இல்லையென்றாலும் 'துபாய் பஸ் ஸ்டாண்டு' சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அதன் படத்தை இணைத்துள்ளேன்..! :)

துபாயின் பல பகுதிகளிலும் சிறுசிறு பஸ் ஸ்டாண்டுகள் உண்டு..

ஆனால் நகரின் முக்கிய வணிகப் பகுதிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள பர் துபாய்(Bur Dubai) பஸ் ஸ்டாண்டு(அல் குபைபா) தான் மிகவும் பிரபலமாகவும், அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கும் (குறிப்பாக சார்ஜா, அபுதாபி) செல்ல அதிக பேருந்துகளும் வந்து போகும் இடமாக உள்ளது.

இங்கிருந்து துபாய் இந்து கோவில்கள், மினா பஜார், தெய்ரா துபாய்க்கு(Deira Dubai) செல்ல கால்வாயை கடக்க அப்ரா ஆகியவை நடை தூரம்தான்..!

a9a5b48114a1d07378fda97bbb339af5.jpgBeauty+of+Bur+Dubai+Bus+stand+3+DSC06345

8972196966_2d2edc9705.jpg46957430.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பஸ் நிறுத்தங்கள் குளிரூட்டப்பட்டவையாக இருக்கும் என கேள்விப்பட்டிருந்தேன். அப்படி தெரியவில்லையே.

மிகுந்த வெப்ப காலங்களில் எபபடி சமாளிக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

பஸ் நிறுத்தங்கள் குளிரூட்டப்பட்டவையாக இருக்கும் என கேள்விப்பட்டிருந்தேன். அப்படி தெரியவில்லையே.

மிகுந்த வெப்ப காலங்களில் எபபடி சமாளிக்க முடியும்.

பஸ் நிறுத்துமிடங்கள் (Bus Stops) மட்டுமே குளிரூட்டப்பட்டவை.

பஸ் தரிப்பிடங்கள் (Bus Stand) அல்ல.

அவ்வளவு பரந்த தரிப்பிடத்தை முழுவதும் குளிரூட்டப்பட 'டப்பு' நிறைய வேண்டுமே..? :unsure:

இக்கட டப்பு லேது, நைனா..! :grin:

Dubai+-+Airconditioned+bus+stop+shelter.  DubaiAC_main_0713.jpg

ac-bus-stop.jpg  P1020918.JPG

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரி பதியப்பட்ட இரண்டே நாளில் 414 பார்வைகளை தொட்டிருக்கு.. :)

ஒடியல் கூழுக்கு அவ்வளவு 'கிராக்கி'யா..? :unsure:

திருவாளர் ஈழப்பிரியன், இதற்காகவே மறுபடியும் ஒடியல் கூழ் காய்ச்சனும்!!

Edited by ராசவன்னியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.