Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணா­ம­லாக்­கப்­பட்ட விவ­காரம் : சட்­ட­மூ­லத்தை விரை­வாக மறு­ப­ரி­சீ­லனை செய்­யுங்கள்

Featured Replies

காணா­ம­லாக்­கப்­பட்ட விவ­காரம் : சட்­ட­மூ­லத்தை விரை­வாக மறு­ப­ரி­சீ­லனை செய்­யுங்கள்

 

காணா­ம­லாக்­கப்­பட்ட விவ­கா­ரத்தில் கடந்­த­கால கார­ணி­களை நிரா­க­ரித்து எதிர்­கா­லத்தை நோக்கி பய­ணிக்க முடி­யாது.  காணா­ம­லாக்­கப்­பட்­டமை குறித்த விவ­கா­ரத்தில் கடந்தகால சம்­ப­வங்­களை கருத்­தில்­கொள்ள முடி­யாது என்றால் குற்­ற­வா­ளி­களை அர­சாங்கம் அங்­கீ­க­ரிக்­கின்­றது என்றே அர்த்­த­ப்ப­டு­கின்­றது. எனவே    வலுக்­கட்­டா­ய­மாக காணா­ம­லாக்­கப்­ப­டு­வ­தி­லி­ருந்து எல்லா ஆட்­க­ளையும் பாது­காத்தல் பற்­றிய சர்­வ­தேச சம­வாய சட்­ட­மூ­லத்தை   மீண்டும் அர­சாங்கம் பரி­சீ­லனை செய்ய வேண்டும் என எதிர்க்­கட்சித் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்தார். 

இவ் அர­சாங்கம் தீர்­வுகள் குறித்து முன்­வைத்த வாக்­கு­று­திகள் எத­னையும் நிறை­வேற்­ற­வில்லை எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை வலுக்­கட்­டா­ய­மாக காணா­ம­லாக்­கப்­ப­டு­வ­தி­லி­ருந்து எல்லா ஆட்­க­ளையும் பாது­காத்தல் பற்­றிய சர்­வ­தேச சம­வாய சட்­ட­மூலம் மீதான விவா­தத்தின் போதே அவர் இக் கார­ணி­களை குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறு­கையில், 

வலுக்­கட்­டா­ய­மாக காணா­ம­லாக்­கப்­ப­டுதல் குறித்து இன்று நாம் ஆராயும் நிலையில் இது இலங்­கையின் மிக நீண்­ட­கால நெருக்­க­டி­யாக உள்­ளது. கடந்த காலங்­களில் குறிப்­பாக ஜே.வி.பி.யின் கிளர்ச்­சிக்­கா­லத்தில் (1979-–1981) பொது­மக்கள் காணா­மலாக்­கப்­பட்­டனர். இக் காலத்தில் அப்­போ­தைய எதிர்க்­கட்சி உறுப்­பினர் மஹிந்த ராஜபக் ஷ இந்த விவ­காரம் குறித்து தொடர்ச்­சி­யாக கேள்வி எழுப்­பி­ய­துடன் ஜெனிவா வரை சென்று இந் நிலை­மை­களை எடுத்­து­ரைத்­துள்ளார். 

அதேபோல் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டையும் கால­கட்டம் வரை­யி­லும்­கூட நாடு முழு­வதும் பேசப்­பட்ட ஒரு விடயம் இந்த காண­ாமல்­போனோர் விவ­கா­ர­மாகும். குறிப்­பாக வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் காணா­ம­லாக்­கப்­பட்­டமை பர­வ­லாக பேசப்­பட்ட ஒரு விட­ய­மாகும். இவற்றின் அடிப்­ப­டையில் தான் இன்­று­வரை தமிழ் மக்கள் தமது உற­வு­களைத் தேடி போராடி வரு­கின்­றனர். கடந்த காலத்­தி­லி­ருந்து  தமிழ் மக்கள் தமது உற­வு­க­ளுக்­காக தொடர்ச்­சி­யாக போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இதில் முக்­கி­ய­மா­னது இறுதி யுத்த கால­கட்­டத்தில் இரா­ணு­வத்­திடம் சர­ண­டைந்த பொது­மக்­களே காணாமல் போயுள்­ளனர். இது நியா­ய­மற்ற விட­ய­மாகும். இன்று அர­சாங்கம் வலுக்­கட்­டா­ய­மாக காணா­மலாக்­கப்­ப­டு­த­லி­லி­ருந்து தடுக்கும் சட்­டத்தை கொண்­டு­வரும் நிலைப்­பா­டுகள் குறித்து கலந்­து­ரை­யாடி வரு­கின்­றது. இச் சட்டம் கொண்­டு­வ­ரப்­படும் நிலையில் கடந்­த­கால நிலை­மைகள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். 

மேலும் இந் நாட்டின் சுயா­தீ­னத்தில் சர்­வ­தே­சத்தின் தலை­யீ­டுகள் உள்ளதென்பதும் அவர்­களின் அழுத்தம் மற்றும் நெருக்­க­டி­களை ஏற்­று­க்கொள்ளக் கூடாதென்பதும் சர்­வ­தேச தலை­யீட்டை ஏற்­றுக்­கொள்ள முடி­யாதென்பதும் ஒரு சில­ரது நிலைப்­பா­டாக உள்­ளது. இது நாட்டின் சுயா­தீ­னத்தை அழிக்கும் என கூறு­கின்­றனர். எமக்கும் நாட்டின் சுயா­தீனம் குறித்து அக்­கறையுள்­ளது. ஆனால் நாட்டின் சுயா­தீனம் என கூறிக்கொண்டு சர்­வ­தேச சட்­டங்­களை மீறியும் சர்­வ­தேச தலை­யீடு இருக்கக்கூடாது என்­ப­தற்­கான தான்­தோன்­றித்­த­ன­மாக சட்­டங்­களை, நியா­யங்­களை உரு­வாக்­கிக்­கொண்டு ஆட்­சி­செய்­வதும் ஒரு­போதும்  சுயா­தீ­ன­மாக அமை­யாது என்­ப­தையும் சுட்­டிக்­காட்ட விரும்­பு­கின்றேன். நாம் சர்­வ­தேச சட்டதிட்­டங்­க­ளையும் மதிக்க வேண்டும். அதேபோல் இறுதி யுத்தமொன்று இடம்­பெற்­றபோது ஆயுதம் ஏந்­திய விடு­தலைப்புலிகள் இலங்கை இரா­ணு­வத்தால் அழிக்­கப்­பட்டு யுத்தம் வெற்­றி­கொள்­ளப்­பட்­டது. எனினும் இதில் பொது­மக்கள் தண்­டிக்­கப்­பட்­டமை, காணா­ம­லாக்­கப்­பட்­டமை ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­யாத விட­ய­மாகும். 

 இலங்­கையில் புலி­களை அழித்து யுத்­தத்தை வெற்­றி­கொண்ட நோக்­கத்­திற்­காக இலங்கை இரா­ணு­வத்­தையும் முன்­னைய அர­சாங்­கத்­தையும் சர்­வ­தேசம் தண்­டிக்­க­வுள்­ளது எனவும் ஒரு­சிலர் கூறு­கின்­றனர். இதை ஏற்­று­க்கொள்ள முடி­யாது. இலங்­கையில் உள்­நாட்டு யுத்தம் ஒன்று இடம்­பெற்ற நிலையில் விடு­தலைப் புலி­களை எதிர்த்து சர்­வ­தேச நாடுகள் அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தன. சர்­வ­தேச தலை­யீ­டுகள் இந்த யுத்­தத்தில் காணப்­பட்­டன. இலங்கை அர­சாங்­கத்­திற்கு சர்­வ­தே­சத்தின் முழு­மை­யான ஒத்­து­ழைப்பு அமைந்­தது. பல நாடுகள் விடு­தலைப்புலிகள் இயக்­கத்தை தடைசெய்­தன. பல நாடுகள் நிரா­க­ரித்­தன. பல நாடு­களிலிருந்து புல­னாய்வு தக­வல்கள் இலங்கை அர­சாங்­கத்­திற்கு வழங்­கப்­பட்­டுள்­ளன. முழு­மை­யாக பயங்­க­ர­வா­தத்தை ஒழிக்க சர்­வ­தேச ஒத்­து­ழைப்பு கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. இந்­தியா போன்ற நாடுகள் இறுதி யுத்­தத்தில் அதிக பங்­க­ளிப்பு செய்து இலங்கை அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்­தி­யுள்­ளன. ஐக்­கிய நாடுகள் சபையும் கூட இலங்­கையை ஆத­ரித்து செயற்­பட்­டுள்­ளது. ஆகவே சர்­வ­தேச நாடுகள் விடு­தலைப்புலி­களை ஆத­ரித்­தன என்­பது உண்­மைக்கு அப்­பாற்­பட்ட கார­ணி­யாகும். 

இவ் அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்து 3 ஆண்­டு­களைக் கடந்­துள்ள நிலையில்  நாட்டில் தீர்­வு­களை பெற்­றுத்­த­ருவோம், உண்­மை­களை கண்­ட­றிவோம் என கொடுத்த வாக்­கு­று­திகள் எவையும் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அர­சியல் தீர்வு விட­யத்தில் அர­சாங்­கத்தின் பயணம் உறு­தி­யாக இல்­லை­யென்­பது தெரி­கின்­றது. இவ் அர­சாங்கம் நாட்டு மக்­க­ளுக்கும் சர்­வ­தேச நாடு­க­ளுக்கும் ஐக்­கிய நாடுகள் சபைக்கும் வழங்­கிய வாக்­கு­று­திகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை.  இந்த சட்டம் எதிர்­கா­லத்தில் நடக்கும் செயற்­பா­டுகள் குறித்து மட்­டுமே கவனம் செலுத்துமெனவும் கடந்­த­கால சம்­ப­வங்கள் இதில் உள்­ள­டக்­கப்­ப­டாது எனவும்  வெளி­வி­வ­கார அமைச்சர் சபையில் தெரி­வித்தார். 

ஏன் இவ்­வா­றான ஒரு தீர்­மா­னத்தை அர­சாங்கம் முன்­னெ­டுக்­கின்­றது என தெரி­ய­வில்லை. ஏன் கடந்­த­கால சம்­ப­வங்­களை ஆராய முடி­யாது? இலங்­கையில் பயங்­க­ர­வா­தத்தை எதிர்த்து இலங்கை அர­சாங்கம் யுத்தம் செய்­தது. இதில் இலங்கை அர­சாங்கம் பாது­காப்பு தரப்பை பயன்­ப­டுத்தி அர­சாங்­கத்தின் கட்­ட­ளைக்கமைய இரா­ணுவம் யுத்­தத்தை முன்­னெ­டுத்­தது. இதில் ஆயு­தப்­ப­டை­க­ளுக்கும் ஆயுத தாரி­க­ளுக்கும்  யுத்தம் இடம்­பெற்­ற­தற்கு  அப்பால் அப்­பாவி மக்கள், ஆயுதம் ஏந்­தாத போரா­ளிகள் என அனை­வரும் ஏன் தண்­டிக்­கப்­பட்­டனர்? பெண்கள் கற்­ப­ழிக்­கப்­பட்­டனர். இவற்றை மறுக்­கவே முடி­யாது. இவற்­றுக்கு எதி­ராக வழக்கு தொடர்ந்தும் குற்­ற­வா­ளி­களை தண்­டிக்க வேண்டும். 

ஆனால் கடந்­த­கால சம்­ப­வங்­களை நிரா­க­ரித்து உண்­மை­களை மறைப்பதென்பது குற்­ற­வா­ளி­களுக்கு அர­சாங்கம் அங்­கீ­காரம் கொடுக்­கின்­றது என்­பதே அர்த்­த­மாகும். இதனை எம்மால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. யுத்­தத்தில் அப்­பாவித்தமிழ் சிவில் மக்கள், ஆயுதம் ஏந்­தாத போரா­ளிகள் காணாம­லாக்­கப்­பட்­ட­மையை விடு­த­லைப்­பு­லிகள் என்ற நிலைப்பாட்டில் இருந்து அவதானிக்க முடியாது. இரண்டும் வேறுபட்ட காரணிகளாகும். இதனை அரசாங்கம் விளங்கிக்கொள்ள வேண்டும். இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும். குற்றவாளிகளுக்ெகதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே இது எதிர்காலத்தில் மட்டுமல்ல, கடந்த கால குற்றங்களையும் கருத்தில் கொண்டு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். பொறுப்புக்கூறல்  விடயங்களை அரசாங்கம் தட்டிக்கழிக்க முடியாது. நெருக்கடிகளை அரசாங்கம் சார்ந்திருக்கக்கூடாதென்றால் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்கவேண்டிய கடமையுள்ளது. ஆகவே அரசாங்கம் இன்று கொண்டுள்ள நிலைப்பாடு குறித்து மீண்டும் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்கும் செயற்பாடுகளை கையாள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/31384

12 minutes ago, நவீனன் said:

காணா­ம­லாக்­கப்­பட்ட விவ­கா­ரத்தில் கடந்­த­கால கார­ணி­களை நிரா­க­ரித்து எதிர்­கா­லத்தை நோக்கி பய­ணிக்க முடி­யாது.  காணா­ம­லாக்­கப்­பட்­டமை குறித்த விவ­கா­ரத்தில் கடந்தகால சம்­ப­வங்­களை கருத்­தில்­கொள்ள முடி­யாது என்றால் குற்­ற­வா­ளி­களை அர­சாங்கம் அங்­கீ­க­ரிக்­கின்­றது என்றே அர்த்­த­ப்ப­டு­கின்­றது. எனவே    வலுக்­கட்­டா­ய­மாக காணா­ம­லாக்­கப்­ப­டு­வ­தி­லி­ருந்து எல்லா ஆட்­க­ளையும் பாது­காத்தல் பற்­றிய சர்­வ­தேச சம­வாய சட்­ட­மூ­லத்தை   மீண்டும் அர­சாங்கம் பரி­சீ­லனை செய்ய வேண்டும்

பாராளுமற்றில் சட்டமூலத்துக்கு ஆதரவாக கையை தூக்கிப்போட்டு இப்ப யாரை ஏமாற்ற சம்பந்தனும், மாவை சேனாதிராசாவும் ஊளையிடுகின்றனர்?

இதன் மூலம் இவர்கள் பெருமளவு இலஞ்சத்தை பெற்றுக்கொண்டார்கள் என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.