Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்டி நகரின் தற்போதைய நிலை?

Featured Replies

கண்டி நகரின் தற்போதைய நிலை?

கண்டி, திகன மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை இலங்கையை மட்டும் அல்ல முழு உலகத்தின் பார்வையையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த ஞாயிற்று கிழமை முதல் அரசினால் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு இன்றைய தினம் காலை நிறைவுக்கு வந்தது.

இலங்கையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் 10 நாட்களுக்கு அவசர கால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அது மட்டும் இல்லை, தீவிரமடைந்துள்ள வன்முறை சம்பவத்தை தணிப்பதற்காக சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் மற்றும் மெசென்ஜர்களில் போலியான தகவல்களை பரப்பும் குழுக்கள் தொடர்பிலும் அதிக அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.

கண்டியில் நடைபெற்ற இன மோதல் தொடர்பில் பல்வேறு விதமான தகவல்கள் பரிமாறப்பட்ட நிலையில் இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் மாலை முதல் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதுடன், கண்டி நகரம் முழு அமைதியான சூழலில் காணப்படுகின்றது.

இன்னும் ஓரிரு நாட்களில் வழமைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய சூழல் அங்கு எவ்வாறு காணப்படுகின்றது என்பது குறித்த புகைப்படங்கள் எமது செய்தியாளர் மூலம் கிடைக்கப் பெற்றுள்ளது.

மக்கள் அமைதியான முறையில் காணப்படுவதுடன், பதற்ற சூழல் முடிவுக்கு வரும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.png

http://www.tamilwin.com/community/01/176423?ref=home-feed

  • தொடங்கியவர்

கண்டியில் களமிறக்கப்பட்ட 3130 இராணுவத்தினர்! பாதுகாப்பு தீவிரம்

கண்டி பிரதேசத்தில் கடமையில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளின் உதவிக்கு 3130 இராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

இந்த குழுவினரை மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான மேஜர் ஜெனரல் ருக்மல் டயஸ் நியமித்துள்ளார்.

அத்துடன் அவரது உதவிக்கு மேஜர் ஜெனரால் நிஷ்ஷங்க ரணவன நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய இந்த குழுவில் 2500 இராணுவத்தினர், 600 கடற்படையினர் மற்றும் 30 விமான படையினர் உள்ளடக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்படுகின்றது.

மேலும் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் இராணுவ தளபதி நேரடியாக கண்காணிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/security/01/176437?ref=home-feed

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

எல்லாரும் களம் இறங்கிய நிலையில் தானப்ப, 1958, 1977, 1983 தமிழருக்கு எதிரான   கலவரம் நடாத்தி முடித்தார்கள்.

100% சிங்கள படைவீரர்கள், யாருக்கு சாதகமாக இருப்பார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.