Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை – பாகிஸ்­தான் இணை அறி­விப்பு சொல்­ல­ள­வில் மட்­டும்தானா?

Featured Replies

 
 
 

இலங்கை – பாகிஸ்­தான் இணை அறி­விப்பு சொல்­ல­ள­வில் மட்­டும்தானா?

 

உலக பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ராக இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு இலங்­கை­யும், பாகிஸ்­தா­னும் இணங்­கி­யுள்­ள­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இன்று முழு உல­க­மும் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­த­லுக்கு முகம் கொடுத்து வரு­கின்­றது. பயங்­க­ர­வா­தி­கள் ஈவு இரக்­க­மற்ற வகை­யில் அப்­பாவி மக்­க­ளின் உயிர்­களை பறித்­தெ­டுத்து வரு­கின்­ற­னர்.

பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ராக உலக நாடு­கள் அணி­தி­ரண்டு போராடி வரு­கின்ற போதி­லும், அவற்­றால் அதைக் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை.

இலங்­கை­யின் நீண்ட கால­மாக நீடித்த பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தில் பாகிஸ்­தான் வழங்­கிய ஒத்­து­ழைப்பை இல­கு­வில் மறக்­க­மு­டி­யா­தென இலங்­கை­யின் அரச தலை­வர் பாகிஸ்­தா­னில் வைத்­துக் கூறி­யுள்­ளார்.

அந்த நாட்­டின் சுதந்­திர தின நிகழ்­வு­க­ளில் முதன்மை அதி­தி­யா­கக் கலந்து கொண்ட அவர் அந்த நாட்­டுத் தலைமை அமைச்­ச­ரு­ட­னான பேச்­சுக்­க­ளின்­போது இவ்­வாறு தெரி­வித்­தார்.

அர­சுக்­க­ளால் புறக்­க­ணிக்­கப்­ப­டும் மக்­கள் கிளர்ச்சியாளர்களாகப் பிர­வே­சிக்­கின்றனர் 

கிளர்ச்சிக் குழுக்கள் உருவாவதற்குப் பல கார­ணங்­கள் உள்­ளன. தொடர்ந்து பல்­வேறு வகை­யி­லும் புறக்­க­ ணிக்­கப்­பட்டு வரு­கின்ற ஒரு மக்­கள் பிரி­வி­னர், இனி­யும் பொறுத்­துக்­கொள்ள முடி­யாது என்ற நிலை­யில் பயங்­க­ர­வா­தச் செயல்­க­ளில் ஈடு­பட ஆரம்­பிக்­கின்­ற­னர். இது மத ரீதி­யா­கவோ, அல்­லது இன ரீதி­யா­கவோ அமை­ய­லாம்.

இலங்­கை­யில் கூடத் தமி­ழர்­க­ளின் உரி­மைக்­கான போராட்­டம் 20 ஆண்­டு­க­ளை­யும் கடந்து இடம்­பெற்­றது. இதில் ஏரா­ள­மான மனித உயிர்­கள் காவு­கொள்­ளப்­பட்­டன. பெரு­ம­ள­வில் பொரு­ளா­தார இழப்­புக்­க­ளும் ஏற்­பட்­டன.

இவற்­றுக்­குப் பின்­ன­ரும் மாறி மாறி ஆட்­சிக்கு வந்த அர­சு­கள் தமி­ழர்­க­ளுக்கு உரிமை வழங்­கு­வது தொடர்­பா­கச் சிந்­தித்­துக்­கூ­டப் பார்க்­க­வில்லை. இறு­தி­யில் உரி­மைப்­போ­ராட்­டம் பயங்­க­ர­வாத முத்­திரை குத்­தப்­பட்டு, பிற நாடு­க­ளின் பங்­க­ளிப்­பு­டன் மௌனிக்­கப்­பட்­டது.

இறு­திப் போரின்போது பல ஆயி­ரக்­க­ணக்­கான அப்­பா­வித் தமி­ழர்­கள் கொல்­லப்­பட்­டதை இலங்­கை­ய­ரசு ஒரு பொருட்­டா­கவே மதிக்­க­வில்லை. இறு­திப் போர் இடம்­பெற்ற போது படை­யி­ன­ரால் மேற்­கொள்­ளப்­பட்ட போர்க்­குற்­றங்­கள் மற்­றும் மனித உரிமை மீறல்­கள் தொடர்­பாக ஐ. நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­ட­போ­தி­லும், அதற்­குப் பொறுப்­புக்­குக் கூறு­வ­தி­லி­ருந்து இலங்கை அரசு பின்­ன­டித்து வரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் பொறு­மை­யி­ழந்த நிலை­யில் இலங்­கைக்கு எதி­ரான கருத்­துக்­க­ளைத் தொடர்ந்து வௌியிட்டு வரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. அமெ­ரிக்கா இப்­போது தான் இலங்­கை­யின் இரட்டை வேடத்­தைப் புரிந்­து­கொண்­டுள்­ளது.

அமெ­ரிக்­கா­வும் பிற மேற்­கு­லக நாடு­க­ளும் தமி­ழர் போரா­டி­ய­தற்­கான சரி­யான கார­ணத்­தைப் புரிந்து கொள்­ளா­மல் தமி­ழர் போராட்­டத்­துக்கு பயங்­க­ர­வாத முத்­தி­ரை­குத்தி அதை ஒடுக்­கு­வ­தற்­குப் பேரு­தவி புரிந்­தன.

இதை­வி­டுத்து போராட்­டத்­தின் உண்­மை­யான கார­ணம் கண்­ட­றி­யப்­பட்டு அதற்­கான தீர்­வு­க­ளும் வழங்­கப்­பட்­டி­ருந்­தால், ஏரா­ள­மான உயிர்­களை அழி­வி­லி­ருந்து காப்­பாற்­றி­யி­ருக்க முடி­யும்.

பயங்­க­ர­வா­தத்­துக்­கும் பாகிஸ்­தா­னுக்­கும் இடை­யில் நெருங்­கிய தொடர்­புண்டு

உல­கப் பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரா­கக் கிளம்­பி­யி­ருக்­கும் பாகிஸ்­தா­னும் இலங்­கை­யும் முத­லில் தத் த­மது நாடு­க­ளி­லி­ருந்து பயங்­க­ர­வா­தத்தை இல்­லா­தொ­ழிக்­கும் பணி­களை முன்­னெ­டுக்க வேண்­டும்.

பயங்­க­ர­வா­தத்­துக்­கும் பாகிஸ்­தான் நாட்­டுக்­கும் இடை­யில் நெருங்­கிய தொடர்­பு­கள் உள்­ளன. பயங்­க­ர­வா­தத்­தின் ஊற்­றுக்­கண் பாகிஸ்­தான் என்­றால் அது மிகை­யா­காது.

இதன் பக்­கத்து நாடான இந்­தியா பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தல்­களை பாகிஸ்­தான் நாட்­டில் இருந்தே பெரு­ம­ள­வில் எதிர்­கொண்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஓர் இனத் தொகு­திக்கு எதி­ரான வன்­செ­யல்­க­ளை­யும் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­யா­கவே கருத முடி­யும். இந்த வகை­யில் பார்த்­தால் அண்­மை­யில் இலங்­கை­யில் நடத்­தப்­பட்ட முஸ்­லிம் மக்­க­ளுக்­கெ­தி­ராக நடத்­தப்­பட்ட வன்­செ­யல்­க­ளை­யும் பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளின் பட்­டி­ய­லில் உள்­ள­டக்க முடி­யும்.

காலம் கால­மாக தமி­ழர்­க­ளுக்கு எதி­ரா­க­வும் இவை இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. இவை மேலும் இடம்­பெ­றா­மல் பார்த்­துக் கொள்ள வேண்­டி­யது இலங்கை அர­சின் தலை­யாய கட­மை­யா­கும்.

சிரி­யப் படு­கொ­லை­கள் குறித்து உலக வல்­ல­ரசு நாடு­கள் பெரி­தாக அலட்­டிக் கொள்­ள­வில்லை

சிரி­யா­வில் இடம்­பெற்று வரு­கின்ற மனி­தப்­ப­டு­கொ­லை­களை எந்த வகை­யி­லும் நியா­யப்­ப­டுத்த முடி­யாது. சிரிய அர­சுக்கு ஆத­ர­வாக ரஷ்யா நடத்தி வரு­கின்ற கண்­மூ­டித்­த­ன­மான விமா­னத் தாக்­கு­தல்­க­ளால் ஒன்­றும் அறி­யாத பச்­சி­ளம் பால­கர்­க­ளும் உடல் சிதறி உயி­ரி­ழப்­ப­தை­யும், காயங்­க­ளால் அவர்­கள் அவ­திப்­ப­டு­வ­தை­யும் தொலைக்­காட்­சி­க­ளில் பார்க்­கும்­போது பெரி­தும் மனம்­வ­ருந்த வேண்டியுள்­ளது.

ஆனால் வல்­ல­ரசு நாடு­கள் இவை குறித்­துப் பெரி­தும் அலட்­டிக் கொள்­வ­தில்லை. ரஷ்­யா­வுக்கு எதி­ராக எந்த நட­வ­டிக்­கை­க­ளை­யும் அந்த நாடு­கள் இது­வரை மேற்­கொள்­ளா­தமை வேத­னைக்­கு­ரி­யது.

வல்­ல­ர­சு­கள் உட்­பட மிகப் பெரிய நாடு­கள் பயங்­க­ர­வா­தம் என்ற பதத்தை தமது விருப்­பத்­துக்கு ஏற்ற வகை­யில் பயன்­ப­டுத்தி வரு­கின்­றன. ரஷ்­யா­வி­ட­மி­ருந்து ஆப்­கா­னிஸ்­தா­னைப் பாது­காப்­ப­தற்­காக தலி­பான்­க­ளைப் பயன்­ப­டுத்தி அதற்கு மிகப்­பெ­ரிய ஆத­ரவை வழங்­கிய அமெ­ரிக்கா, இன்று தலி­பான்­களை ஒழிப்­ப­தில் முன்­நிற்­கின்­றது.

பலஸ்­தீன மக்­க­ளின் உரி­மை­க­ளுக்­கா­கப் போரா­டிய பலஸ்­தீன விடு­தலை இயக்­கம் மிகப்­பெ­ரிய பயங்­க­ர­வாத இயக்­க­மென ஒரு காலத்­தில் பேசப்­பட்­டது.

ஆனால் இஸ்­ரேல் நாடு பலஸ்­தீன மக்­க­ளுக்கு எதி­ராக மேற்­கொள்­கின்ற மனி­தா­பி­மா­ன­மற்ற நட­வ­டிக்­கை­களை எவ­ருமே கண்டு கொள்­வ­தில்லை.

தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளும் ஒரு பயங்­க­ர­வாத இயக்­க­மாக முத்­திரை குத்­தப்­பட்ட போதி­லும், அது நடத்­திய போராட்­டத்­தி­லும் ஒரு நியா­யம் இருக்­கவே செய்­தது.

இது­போன்­று­தான் ஏனைய இயக்­கங்­க­ளின் அடிப்­படை நோக்­க­மும் ஆரா­யப்­பட்டு உரிய தீர்வு காணப்­பட வேண்­டும்.

உலக பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ராக இலங்­கை­யும், பாகிஸ்­தா­னும் கை கோர்ப்பு என்­பது வெறும் செய்­தி­யாக மட்­டுமே இருக்­கப்­போ­கின்­றது.

http://newuthayan.com/story/78949.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.