Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாதிக்­கப்­பட்­டோரின் காயங்­களை ஆற்­றுப்­ப­டுத்­து­வதன் முக்­கி­யத்­துவம்

Featured Replies

பாதிக்­கப்­பட்­டோரின் காயங்­களை ஆற்­றுப்­ப­டுத்­து­வதன் முக்­கி­யத்­துவம்

 

யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் பாதிக்­கப்­பட்ட மக்­களின் காயங்­களை ஆற்­று­வ­தற்கு முன்­னைய அர­சாங்கம் பொருத்­த­மான நல்­லி­ணக்க வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டு தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. அது­மட்­டு­மன்றி, நல்­லி­ணக்­கத்தை முன்­னெ­டுக்­காமல் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் மேலும் விரி­சலை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டு­களே கடந்த காலத்தில் திட்­ட­மிட்ட ரீதியில் முன்­னெ­டுக்­கப்­பட்­ட­தாக குற்­றச்­சாட்­டுக்கள் உள்­ளன. கடந்த அர­சாங்கம் யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் தாம் வடக்கு, கிழக்கில் பாரிய அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­த­தாக மார்­தட்­டிக்­கொள்­கின்­றது. ஆனால் எந்­த­ள­வு ­தூ­ரத்­திற்கு மக்­களின் மனங்­களை வென்றோம் என்றும் யுத்­தத்­தினால் ஏற்­பட்ட வடுக்­களை ஆற்­று­வ­தற்கு என்ன நட­வ­டிக்­கை­களை எடுத்தோம் என்றும் உணர்­வ­தற்கு கடந்த கால தலை­வர்கள் தயா­ராக இருக்­கின்­ற­னரா என்று தெரி­ய­வில்லை.

குறிப்­பாக யுத்­தத்தின் பின்னர் நாட்டில் நிரந்­தர சமா­தா­னத்­தையும் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் வலு­வான நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்தால் இன்று இந்­த­ நாட்டின் நிலைமை வேறு­வி­த­மாக அமைந்­தி­ருக்கும் ஆனால், இன்றும் கூட யுத்­தத்தின் பின்­ன­ரான இந்த நாட்டில் முறை­யான வகையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த முடி­யாத ஒரு சூழல் உரு­வாக்­கப்­பட்டு வரு­வ­தாக குற்­றம்­சாட்­டப்­பட்டு வரு­கின்­றது. நல்­லி­ணக்கம் என்ற பேச்சை எடுத்­தாலே அதனை தென்­னி­லங்­கையின் இன­வா­த­சக்­திகள் வித்­தி­யா­ச­மான கண்­ணோட்­டத்தில் பார்ப்­பதும் அதற்கு எதி­ராக பாரிய பிர­சா­ரங்­களை செய்­வ­து­மான நிலைமை காணப்­ப­டு­கின்­றது. ஆனால் யுத்தம் முடி­வ­டைந்­ததும் இந்த நல்­லி­ணக்க செயற்­பாட்­டையும் தேசிய ஒற்­று­மை­யையும் சரி­யான முறையில் முன்­னெ­டுத்து யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் வடுக்­களை ஆற்­று­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களை செய்­தி­ருந்தால் இன்று நிலைமை இதை­விட வித்­தி­யா­ச­மா­ன­தாக இருந்­தி­ருக்கும்.

இந்­நி­லையில் இது­தொ­டர்பில் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக் ஷ சில விட­யங்­களை முன்­வைத்­தி­ருக்­கின்றார். குறிப்­பாக யுத்­தத்தின் பின்னர் அப்­போ­தைய அதி­கா­ரத்­த­ரப்­பினர் எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தனர் என்­பது தொடர்­பாக கோத்­த­பாய ராஜபக் ஷ சில விட­யங்­களை குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

அதா­வது 30 வரு­டங்­க­ளாக யுத்தம் நீடித்­தது. யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான இலங்­கையின் அபி­வி­ருத்­தி­களே புலி­களைத் தோற்­க­டித்­ததை விட மிகப் பெரிய வெற்­றி­யாகக் காணப்­பட்­டது. ஆனால் அதனை சர்­வ­தேச சமூ­கமும் சர்­வ­தேச அமைப்­புக்­களும் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. 2009 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2014 ஆம் ஆண்டு வரை­யான காலப்­ப­கு­தியில் நாம் பாரிய சாத­னை­களை அடைந்தோம். உட்­கட்­ட­மைப்பு வச­திகள் அன்றி அர­சியல் சாத­னை­க­ளையும் படைத்தோம். நீண்ட காலத்­துக்கு முன்னர் மாகாண சபைகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த போதிலும் 2013 ஆம் ஆண்டு வரை வட ­மா­காண சபைத் தேர்தல் நடத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை.நாங்கள் நீதி­யான சுதந்­தி­ர­மான தேர்­தலை நடத்­தினோம். நாம் வட­மா­காண சபைத் தேர்­தலில் தோற்­கப்­போ­கிறோம் என தெரிந்­து­கொண்டும் வடக்கு மக்கள் அவர்­க­ளுக்குத் தேவை­யா­ன­வர்­களை தெரிவு செய்யும் சந்­தர்­ப்பத்தை பெற்­றுக்­கொடுத்தோம் என்று முன்னாள் பாது­காப்பு செய­லாளர் குறிப்­பிட்­டி­ருக்­கின்றார்.

2013 ஆம் ஆண்டு முடிவில் அதி­க­ள­வான வீடு­களும் காணி­களும் விடு­விக்­கப்­பட்­டன. பாரிய அபி­வி­ருத்தித் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. வீதிகள், ரயில் தண்­ட­வாளங்கள், மின்­சாரத் திட்­டங்கள் உரு­வாக்­கப்­பட்­டன. எம்­மிடம் சர­ண­டைந்த பயங்­க­ர­வாதி­க­ளுக்கு நாம் புனர்­வாழ்வு அளித்தோம். 30 வருட யுத்­தத்­திற்குப் பின்னர் ஒரே இரவில் சமா­தா­னத்தை அடைய முடி­யாது. காரணம் கடந்த 3 வரு­டங்­க­ளாக என்ன நடந்­தது என்று எனக்குத் தெரி­ய­வில்லை எனவும் கோத்­த­பாய ராஜபக் ஷ கூறி­யி­ருக்­கின்றார்.

ஆனால் அர­சியல் சுதந்­திரம் குறித்துப் பேசு­வ­தற்கு முன்னர் பொரு­ளா­தார சுதந்­தி­ரத்தை மக்­க­ளுக்குப் பெற்­றுக்­கொ­டுப்­பதே முக்­கி­ய­மா­னது என நான் கரு­து­கின்றேன். ஆனால், அவர்கள் அதி­காரப் பகிர்வு குறித்து மட்­டுமே பேசு­கின்­றனர். அது இரண்டாம் பட்­ச­மாகும். மக்­க­ளுக்கு உணவு, வேலை­வாய்ப்பு, அடிப்­படைத் தேவைகள் என்­பன பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட வேண்டும். ஆனால் தமிழ் அர­சி­யல்­வா­திகள் தமது அர­சியல் ஆர்­வத்தை இந்தச் செயற்­பாட்­டுக்கு அப்பால் முன்­னெ­டுக்க முயற்­சிக்­கின்­றனர்.நாட்டின் அனைத்து மக்­க­ளையும் போன்று வடக்கு கிழக்கு மக்­களும் சம­மா­ன­வர்கள் என்­பதை உணரும் வகையில் சந்­தர்ப்­பங்­களை பெறும் வகையில் தேவை­யான நட­வ­டிக்­கை­களை எடுப்போம் என்றும் முன்­னைய அர­சாங்­கத்தின் பாது­காப்பு செய­லாளர் எடுத்­து­ரைத்­தி­ருக்­கின்றார்.

யுத்தம் என்­பது இல­கு­வா­னது அல்ல. அது இலங்­கையோ, இந்­தி­யாவோ, பாகிஸ்­தானோ, ஈராக்­கா­கவோ இருக்­கலாம். யுத்தம் என்­பது நல்ல விடயம் அல்ல. ஆனால் இலங்­கையில் நான் யுத்­தத்தை உரு­வாக்­க­வில்லை. மாறாக நான் யுத்­தத்தை முடித்தேன். யுத்தம் இருப்­பதை விட அதனை முடிப்­பது மேன்­மை­யா­னது. புலிகள் இல்­லாமல் எமது நாடு ஒரு சிறந்த இடத்தில் இருக்­கி­றது. இன்று இலங்கை ஜனா­தி­ப­தி­யினால் எங்கும் போகலாம் எனவும் கோத்­த­பாய சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

அந்­த­வ­கையில் யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் எவ்­வா­றான வேலைத்­திட்­டங்­களை தாம் முன்­னெ­டுத்­த­தாக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் விவரித்­தி­ருக்­கின்றார். ஆனால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் மனங்­களை வெல்­வ­தற்கு கடந்த அர­சாங்கம் என்ன நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டது என்­பது குறித்தே பாதிக்­கப்­பட்ட மக்கள் கேள்வி எழுப்­பு­கின்­றனர். விசே­ட­மாக யுத்தம் முடி­வ­டைந்­ததும் பாதிக்­கப்­பட்ட மக்­களின் காயங்­களை ஆற்றி அவர்­களின் மனங்­களை வெல்­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்­கான சந்­தர்ப்பம் காணப்­பட்­டது. அதே­போன்று நல்­லி­ணக்­கத்தை முன்­னெ­டுத்து சமூ­கங்­க­ளுக்­கி­டையில் புரிந்­து­ணர்­வையும் தேசிய ஒற்­று­மை­யையும் பலப்­ப­டுத்­து­வ­தற்­கான சூழலும் காணப்­பட்­டது. ஆனால், கடந்த அர­சாங்கம் அந்த சந்­தர்ப்­பத்தை சரி­யான முறையில் பயன்படுத்தியதா என்­பது கேள்­விக்­கு­றி­யாகும். யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் உட­ன­டி­யா­கவே இந்த காணாமல் போனோர் விவ­கா­ரத்தை ஆராய்ந்­தி­ருக்­கலாம். அது­மட்­டு­மன்றி யுத்­த­கா­லத்தில் பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணி­களை முழு­மை­யாக மீள்­ வ­ழங்­கி­யி­ருக்­கலாம். மேலும் பொரு­ளா­தார ரீதியில் வலு­வி­ழந்து காணப்­படும் மக்­களின் வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கலாம். வடக்கில் இரா­ணுவப் பிர­சன்­னத்தை குறைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கலாம். ஆனால், இவ்­வா­றான வேலைத்­திட்­டங்கள் எதுவும் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. காணா­மல்­போனோர் விவ­காரம் தொடர்பில் யுத்தம் முடி­வ­டைந்து ஒன்­பது வரு­டங்கள் கடந்­துள்ள நிலையில் இது­வரை எந்தத் தீர்வும் எட்­டப்­ப­ட­வில்லை. காணிகள் விடு­விப்பு விவ­கா­ரமும் இன்னும் முழு­மை­யாக தீர்க்­கப்­ப­ட­வில்லை. அது­மட்­டு­மன்றி கடந்த அர­சாங்க காலத்தில் நிய­மிக்­கப்­பட்ட கற்­றுக்­கொண்ட பாடங்­களும் நல்­லி­ணக்­கமும் தொடர்­பான ஆணைக்­குழு நாடு ­மு­ழு­வதும் விசா­ரணை அமர்­வு­களை நடத்தி இறு­தியில் வெளி­யிட்ட பரிந்­து­ரைகள் கூட கடந்த காலத்தில் அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டு உள்­ளது.

இந்­நி­லையில், கடந்த அர­சாங்கம் வடக்கில் அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுக்­க­வில்லை என்று நாம் கூற­வ­ர­வில்லை. ஆனால் அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளுடன் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் காயங்­களை ஆற்­று­வ­தற்கு பொருத்­த­மான வேலைத்­திட்­டங்­கள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என்­பதே இங்கு முன்­வைக்­கப்­படும் பிர­தான கார­ணி­யாக காணப்­ப­டு­கின்­றது. எனவே, தென்­னி­லங்­கையில் பத­விக்கு வரு­கின்ற அர­சாங்­கங்கள் ஒரு விட­யத்தை நன்­றாகப் புரிந்­து­கொள்­ள­வேண்டும்.

அதா­வது யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் காயங்­களை ஆற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­காமல் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­காமல் யுத்­தத்தின் பின்­ன­ரான சூழலை வெற்­றி­கொள்­வது என்பது கடினமானதாகும். அதனால் தான் யுத்தம் முடிவடைந்ததுடன் காயங்களை ஆற்றுப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற ஒரு சர்வதேச ரீதியான நியமம் காணப்படுகின்றது. ஆனால், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களை ஆற்றாமல் மேலும் மேலும் இனவாத சக்திகளுக்கு அஞ்சி நல்லிணக்க செயற்பாடுகளை இழுத்தடித்தால் அது நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு பாரிய தடையாகவே அமையும். இதனை மத்தியில் இருக்கின்ற அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும். எனவே, பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களை ஆற்றும் விடயத்தில் கடந்த கால ஆட்சியாளர்கள் விட்ட தவறை தற்போதைய ஆட்சியாளர்கள் விட்டுவிடக்கூடாது என்பது மிக முக்கியமாகும். எனவே, கடந்த கால அனுபவங்களிலிருந்து பாடங்களை கற்று நல்லிணக்கத்தையும் தேசிய ஒற்றுமையையும் முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களின் காயங்களை ஆற்றுவதே யுத்தத்தின் பின்னரான சூழலில் மிகப் பிரதானமான செயற்பாடாக இருக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-27#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.