Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமருக்கு எதிராக இன்று கட்சி தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் இதுதான்.!

Featured Replies

பிரதமருக்கு எதிராக இன்று கட்சி தலைவர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் இதுதான்.!

 

 
 

(ஆர்.யசி)

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது இலத்திரனியல் வாக்கெடுப்பு இல்லாது தனி நபர் பெயர் கூறிய வாக்கெடுப்பினை நடத்த பாராளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சிகளுக்கான விவாத நேர ஒதுக்கீடும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

karu.jpg

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள  நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து  கலந்துரையாடுவதற்காக  இன்று காலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபாநாயகரின் அலுவலகத்தில் கட்சித்தலைவர்களின் விசேட கூட்டம் இடம்பெற்றது. சபாநாயகர் தலைமையில் பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, கூட்டு எதிர்க்கட்சி சார்பில் தினேஷ் குணவர்த்தன, மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அனுரகுமார திசாநாயக   ஆகியோர் கலந்துகொண்டனர். 

இந்த கூட்டத்தின் போது வாக்களிக்கும் முறைமையில் இலத்திரனியல் வாக்களிப்பு இல்லாது தனி நபர் பெயர் கூறிய வாக்கெடுப்பாக  நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த வாக்கெடுப்பை நடத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  இந்த கூட்டத்தின் தீர்மானங்கள் குறித்து தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் கூறுகையில்,

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த பாராளுமன்ற விவாதம் 4ஆம் திகதி இடம்பெற்றவுள்ளது. இந்த விவாத தினத்தின் நேர ஒதுக்கீடுகள் குறித்தே பிரதானமாக கலந்துரையாடப்பட்டது. இதில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, கூட்டு எதிர்க்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சிகளுக்கான நேர ஒதுக்கீடுகள் தீர்மானிக்கப்பட்டது. அன்றைய தினம் காலை 9 மணிக்கு பாராளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகும், வாய்மூல வினாக்கான விடைக்கான நேரம் முடிவடைந்த பின்னர் விவாதம் ஆரம்பிக்கப்படும். மதிய நேர இடைவேளை வழங்கப்படாது. தொடர்ந்தும் இரவு 9 மணி வரையில் விவாதம் தொடரும். பின்னர் வாக்கெடுப்புக்கு விடப்படும் என தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/32014

  • தொடங்கியவர்

4ஆம் திகதி விவா­தத்­துக்கு தயா­ராகும் அரசியல் கட்­சிகள்

08-4576f47b0dccd68ac5966d49dc4e1ce0955c5e47.jpg

 

(ரொபட் அன்­டனி)

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை தொடர்பில் அர­சியல் கட்­சிகளும் பொது அமைப்­புக்­களும் தொடர்ந்து அர­சியல் காய் நகர்த்­தல்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன.    

எதிர்­வரும் 4ஆம் திகதி பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை விவா­திக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் அன்­றைய தினம் என்ன நடக்­கப்­போ­கின்­றது என்­பது தொடர்­பி­லேயே தற்­போது தேசிய அர­சி­யலில் பர­வ­லாக விவா­திக்­கப்­பட்டு வரு­கின்­றது. ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சி­யினர் தாம் இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் வெற்­றி­ய­டைவோம் என மிகவும் திட்­ட­வட்­ட­மாக தெரி­வித்து வரு­கின்­றனர்.

அதா­வது இந்த நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையின் மூலம் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சி­யா­னது அர­சி­யலில் ஒரு நிலை­யான திருப்­பு­மு­னையை அடையும் என மிகவும் உறு­தி­யான முறையில் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் தெரி­வித்து வரு­கின்­றனர்.

அத்­துடன் தமக்கு தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பி­னரும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யி­னரின் ஒரு பிரி­வி­ன­ரதும் ஆத­ரவு கிடைப்­பது உறுதி என்றும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் வெற்­றி­கொள்வோம் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் தெரி­வித்து வரு­கின்­றனர்.

மறு­புறம் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை சமர்ப்­பித்­துள்ள கூட்டு எதிர்க்­கட்­சி­யா­னது இந்த முயற்­சியில் தாம் பாரிய வெற்­றியை அடைவோம் என தெரி­வித்து வரு­கின்­றது. நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணைக்கு ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சிக்­குள்­ளேயே அதி­க­மா­ன­னோரின் ஆத­ரவு கிடைக்கும் என்றும் கூட்டு எதிர்க்­கட்­சி­யினர் கூறி­வ­ரு­கின்­றனர்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி இது­வரை உத்­தி­யோ­கப்­பூர்­வ­மான நிலைப்­பாட்டை அறி­விக்­க­வில்லை. எப்­ப­டி­யி­ருப்­பினும் பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்­பின்­போது சுதந்­தி­ரக்­கட்­சி­யினர் இரண்­டாக பிள­வு­படும் அபாயம் உள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதே­வேளை நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை விவ­கா­ரத்தில் திருப்­பு­மு­னை­யான நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்­கின்ற தமிழ் தேசி­யக்­கூட்­டப்­பை­பா­னது எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை கூடி தீர்­மா­னிக்­க­வுள்­ளது.

தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை எதிர்த்து வாக்­க­ளிக்கும் என ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்சி நம்­பிக்­கொண்­டி­ருக்கும் சூழலில் அது­தொ­டர்­பான இரா­ஜ­தந்­திர நகர்­வு­களும் இடம்­பெற்று வரு­கின்­றன.

அதே­போன்று கூட்­ட­மைப்பின் ஆத­ரவைப் பெற்­றுக்­கொள்ளும் நோக்கில் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சியும் கூட்டு எதி­ர­ணியும் கடும் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன. தற்­போ­தைய நிலை­மையில் பாரா­ளு­மன்­றத்தில் ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்­சிக்கு 107 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் உள்­ளனர்.

அதில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான விஜ­ய­தாஸ ராஜ­ப­க்ஷவும் அத்­து­ர­லிய ரத்­தின தேரரும் நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பின் போது எவ்­வா­றான முடிவை எடுப்­பார்கள் என்­பது குறித்து இது­வரை வெளிப்­ப­டுத்­த­வில்லை.

அதே­போன்று இந்த ஐக்­கி­ய­தே­சி­யக்­கட்சி வச­முள்ள 107 எம்.பி.க்களில் சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் 7 உறுப்­பி­னர்­களும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் 5 உறுப்­பி­னர்­களும், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் 6 உறுப்­பி­னர்­களும் இடம்­பெ­று­கின்­றனர். மறு­புறம் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி வசம் 95 எம்.பி.க்கள் உள்னர்.

அதில் ஜனா­தி­பதி மைத்திரிபால சிறிசேன தரப்பிடம் 42 எம்.பி.க்கள் உள்ளனர். மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரிடம் 53 எம்.பி.க்கள் உள்ளனர். அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம் 16 எம்.பி.க்களும் ஜே.வி.பி. வசம் 6 எம்.பி.க்களும் உள்ளனர். அதேபோன்று ஈ.பி.டி.பி. வசம் ஒரு எம்.பி. பதவியும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அரசியல் கட்சிகள் எதிர்வரும் நான்காம் திகதிக்கான விவாதத்தில் பங்கேற்பதற்கு தயாராகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-28#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.