Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கியின் பதிலால் சபையில் சலசலப்பு!!

Featured Replies

  •  
  • விக்கியின் பதிலால் சபையில் சலசலப்பு!!
 
 

விக்கியின் பதிலால் சபையில் சலசலப்பு!!

 

வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சுக்­க­ளில் மாற்­றங்­களை செய்து விட்­டேன் அதோடு அமைச்­சுக்­கள் மீதான எனது நட­வ­டிக்­கை­கள் முடிந்து விட்­டன என்ற பாணி­யில் முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் நேற்று வடக்கு மாகாண சபை­யின் அமர்­வில் பதில் அளித்­த­தால் சபை­யில் சிறிது நேரம் களேப­ரம் ஏற்­பட்­டது.

வடக்கு மாகாண சபை­யின் 119 ஆவது அமர்வு நேற்று அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தலை­மை­யில் இடம்­பெற்­றது.

‘வடக்கு மாகாண முதல்­வ­ரி­டம் மாகாண அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்ட இலஞ்ச ஊழல் குற்­றச்­சாட்டு, நிதி மோசடி, அதி­கார துஷ்­பி­ர­யோ­கம் போன்­ற­வற்­றுக்கு எதி­ராக உங்­க­ளால் விசா­ர­ணைக் குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்டு, அறிக்கை வெளி­யி­டப்­பட்­டது. சில அமைச்­சுக்­கள் மீது சாட்­சி­கள் சாட்­சி­ய­ம­ளிக்க முன்­வ­ரா­மை­யால் அவற்­றின் மீது தொடர் நட­வ­டிக்­கை­யாக அவர்­கள் மீது மீண்­டும் விசா­ரணை மற்­றும் வெளி­யான அறிக்­கை­யின்­படி என்ன நட­வ­டிக்கை எடுப்­பது என தானே முடி­வெ­டுப்­பேன் என முதல்­வர் கூறி­யி­ருந்­தார்.

விசா­ரணை அறிக்கை வெளி­யாகி பல மாதங்­கள் கடந்­துள்ள நிலை­யில் நீங்­கள் எடுத்த நட­வ­டிக்கை என்ன?.”- என்று அதில் வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ராசா வாய்­மூ­ல­மான வினா­வைத் தொடுத்­தார்.

“வடக்கு மாகாண சபை­யின் அமைச்­சுக்­க­ளில் மாற்­றத்தைச் செய்து விட்­டேன். அத்­து­டன் எனது கட­மை­கள் முடிந்­து­விட்­டன.”- என்று முத­ல­மைச்­சர் பதி­ல­ளித்­தார்.

முத­ல­மைச்­ச­ரின் இந்­தப் பதி­லால் சபை­யில் சல­ச­லப்பு ஏற்­பட்­டது.
“அமைச்­ச­ர­வை­யில்­தான் மாற்­றம் செய்ய நினைத்­தி­ருந்­தீர்­கள் என்­றால் உங்­க­ளின் அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி மாற்­றத்தைச் செய்­தி­ருக்­க­லாம். அதனை விடுத்து ஒரு விசா­ர­ணைக் குழு அவர்­க­ளுக்கு இலட்­சக்­க­ணக்­கில் செலவு செய்­தி­ருக்­கத் தேவை­யில்லை.”- என்று எதிர்க்­கட்­சித் தலை­வர் தெரி­வித்­தார்.

“மாகாண சபை­யின் ஊடாக விசா­ர­ணைக் குழு அமைக்­கப்­ப­ட­வில்லை. சபை­யில் ஒரு அமைச்­ச­ருக்கு எதி­ராக மட்­டுமே குற்­றச்­சாட்டு முன்­வைக்­கப் பட்­டது.

இது அனை­வ­ருக்­கும் தெரி­யும். முதல்­வர்­தான் விசா­ர­ணைக்­குழு அமைத்­தார். அவர் அடுத்து என்ன செய்­ய­வுள்­ளார் என்­பதை எதிர்­வ­ரும் அமர்­வில் கூறு­வார். அது­வரை பொறு­மை­யாக இருங்­கள்.”- என்று கூறி அவைத்­த­லை­வர் இந்த விட­யத்தை முடி­வுக்­குக் கொண்­டு­வந்­தார்.

http://newuthayan.com/story/79317.html

  • தொடங்கியவர்
 
 
 

குற்­றஞ்­சாட்­டிய விக்­னேஸ்­வ­ரன் ஆதா­ரத்தை அம்­ப­ல­மாக்­கட்­டும்- சயந்­தன்!!

 

வடக்கு மாகாண அமைச்­சுக்­கள் மீதான குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் விசா­ரணை செய்த விசா­ர­ணைக் குழு­வின் அறிக்­கை­கள் வந்த பின்­னர் முன்­னாள் சுகா­தார அமைச்­சர் சத்­தி­ய­லிங்­கத்­துக்கு எதி­ராக இரண்டு குற்­றச்­சாட்­டுக்­கள் உள்­ளன என்று முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தி­ருந்­தார். அது தொடர்­பான ஆதா­ரங்­களை அவர் சபை­யில் பகி­ரங்­கப்­ப­டுத்த வேண்­டும்.

இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் கே.சயந்­தன் கோரிக்கை விடுத்­தார். வடக்கு மாகாண சபை­யின் 119 ஆவது அமர்வு நேற்று அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தலை­மை­யில் இடம்­பெற்­றது. அதி­லேயே அவர் இவ்­வாறு கோரி­னார். அவர் தெரி­வித்த­தா­வது-:

வடக்கு மாகாண அமைச்­சுக்­கள் மீதான குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் விசா­ரணை செய்ய ஆணைக்­குழு ஒன்று முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ர­னால் நிய­மிக்­கப்­பட்டு விசா­ர­ணை­கள் இடம்­பெற்­றன. அந்த ஆணைக்­குழு சில பரிந்­து­ரை­க­ளை­யும் அறி­வித்­தி­ருந்­தது.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் திடீ­ரென முன்­னாள் சுகா­தார அமைச்­சர் சத்­தி­ய­லிங்­கம் மீது இரண்டு குற்­றச்­சாட்­டுக் கள் உள்­ளன என்று ஊட­கங்­கள் வாயி­லாக கூறி­யி­ருந்­தார். அவ்­வாறு கூறி­யது மட்­டு­மல்­லாது பதவி நீக்­கப்­பட்ட விவ­சாய மற்­றும் கல்வி அமைச்­சர் தவிர்ந்த போக்­கு­வ­ரத்து அமைச்­சர், சுகா­தார அமைச்­சர் மீது விசா­ர­ணைக் குழு ஒரு மாதத்­தில் அமைக்­கப்­ப­டும் என்­றும் கூறி­யி­ருந்­தார்.

எனி­னும் இன்­று­வரை நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. அத­னால் அவ­ரி­டம் உள்ள ஆதா­ரங்­களை சபை­யில் சமர்ப்­பிக்­கட்­டும். நாம் சபை­யின் ஊடாக விசா­ர­ணைக் குழுவை நிய­மிப்­போம்.- என்­றார்.

http://newuthayan.com/story/79314.html

  • தொடங்கியவர்
 
 
 

விக்­கி­யின் குற்­றச்­சாட்டு அர­சி­யல் பழி­வாங்­கலே- சத்தியலிங்கம்!!

 

எம்­மீது முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் விசா­ர­ணை­கள் நடத்­தப்­பட வேண்­டும். நாம் குற்­ற­வா­ளி­கள் என்­றால் எமக்குத் தண்­டனை வழங்க வேண்­டும். நாம் எதற்­கும் தயா­ரா­கவே உள்­ளோம். வீணான திரு­டன் பழியை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது.

இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் சத்­தி­ய­லிங்­கம் தெரி­வித்­தார். வடக்கு மாகாண சபை­யின் 119 ஆவது அமர்வு நேற்று அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தலை­மை­யில் நடை­பெற்­றது. அதில் அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்த­தா­வது:-

வடக்கு மாகாண சபை ஆரம்­பிக்­கப்­பட்ட போது நாமாக விரும்­பிக் கேட்டு அமைச்­சுப் பத­வியை பெற­வில்லை. வடக்கு மாகாண முதல்­வர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனே எமக்கு அமைச்­சுப் பத­வியைத் தந்­தார்.அவர் எமக்குத் தந்த பணியை நாம் மக்க­ளுக்­காக சிறப்­பா­கவே செய்து வந்­தோம். எனி­னும் அர­சி­யல் ரீதி­யான பழி­வாங்­க­லுக்­கா­கவே அவர் எம்மை நீக்­கி­யுள்­ளார்.

அதற்­காக நான் எனது பத­வியை மீண்­டும் கேட்­க­வில்லை. எம்மை மாற்ற வேண்­டு­மென்­றால் முதல்­வர் தனது அதி­கா­ரத்தைப் பயன்­ப­டுத்தி அமைச்­ச­ரவை மாற்­றத்­தைச் செய்­தி­ருக்­க­லாம். முத­ல­மைச்­சர் அமைத்த ஆணைக்­கு­ழு­வும் எம்மைக் குற்­ற­வா­ளி­க­ளாக இனங்­கா­ண­வில்லை. முத­ல­மைச்­சர் விடுத்த கோரிக்­கை­யின் பேரி­லேயே நான் அமைச்­சுப் பத­வி­யில் இருந்து தானாக வில­கி­னேன்.

விசா­ர­ணைக் குழு­வின் அறிக்கை வெளி­யா­கிய பின்­னர் என் மீது இரண்டு குற்­றச்­சாட்­டு­கள் உள்­ளன என்று முதல்­வர் ஊட­கங்­கள் வாயி­லாகத் தெரி­வித்­தி­ருந்­தார். விசா­ரணை அறிக்கை வந்த பின்­னர் 750 கோவை­களை நான் திரு­டி­னேன் என்­றும்,நோயா­ளர்­க­ளுக்­காக கொள்­வ­னவு செய்த உப­க­ர­ணங்­க­ளில் மோசடி செய்­தேன் என்­றும் என்­மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டது. ஆனால் இன்­று­வரை அது தொடர்­பில் எந்த விசா­ர­ணை­யும் நடக்­க­வில்லை.

முத­ல­மைச்­சர் உட­ன­டி­யாக விசா­ர­ணைக் குழுவை நிய­மிக்க வேண்­டும். அல்­லது சபை­யில் குற்­றச்­சாட்­டுக்­கான ஆதா­ரங்­களைச் சமர்ப்­பிக்க வேண்­டும். அதன் பின்­னர் சபை­யின் ஊடாக நட­வ­டிக்கை எடுக்­கட்­டும். அது­வும் இய­லாது என்­றால் வடக்­கில் உள்ள பொது அமைப்­பு­களை இணைத்து விசா­ர­ணைக் குழு ஒன்றை நிய­மித்து விசா­ரணை நடத்­தப்­பட வேண்­டும்.

எந்த விசா­ர­ணை­யை­யும் நன் சந்­திக்கத் தயா­ராக இரு­க்கின்­றேன். எனது எதிர் காலம் மற்­றும் எனது பிள்­ளை­க­ளின் எதிர்­கா­லம் போன்­ற­வற்றைக் கருத்­திற் கொண்டு விசா­ர­ணைக் குழுவை நிய­மித்து நாம் குற்­ற­வாளி என்­றால் எம்மைத் தண்­டி­யுங்­கள். அதை­வி­டுத்து பொய்­யாக எம்மைத் திரு­ட­னாக்­கா­தீர்­கள். மாகாண சபை­யின் ஆயுட்­கா­லம் முடி­வ­தற்­குள் எம்மைத் தண்­டி­யுங்­கள் அல்­லது குற்­றச்­சாட்­டில் இருந்து விடு­வி­யுங்­கள் –  என்­றார்.

http://newuthayan.com/story/79312.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.