Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் 30 நாட்களுக்குள் தீர்வு தர வேண்டும்

Featured Replies

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் 30 நாட்களுக்குள் தீர்வு தர வேண்டும்

Ranil-418d5b2236cd2707de3182bf454fccab85a0a032.jpg

 

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஜனாதிபதி, பிரதமருக்கு 21 முஸ்லிம் எம்.பி.க்களும் கையெழுத்திட்டு கடிதம்முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடர்ந்து மேற்கொள் ளப்பட்டு வரும் வெறுப்புப் பேச்சு, அச்சுறுத்தல்கள் மற்  றும் வன்முறைகளுக்கு நிரந்தரத் தீர்வொன்றினை எதிர்வரும் 30 தினங்களுக்குள் பெற்றுத் தாருங்கள் எனக் கோரி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 21 பேரும் கையொப்பமிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளனர். 

இக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து வன்செயல்களும் ஊரடங்குச் சட்டம் மற்றும் நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தபோதே அரங்கேறியிருக்கின்றன. இவை திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயல்களாகும்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான நாங்கள் பௌத்த தீவிரவாதிகளினால் சில பௌத்த குருமாரின் ஒத்துழைப்புடன் முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து மேற்கொண்டுவரும் வெறுப்புப் பேச்சு செயல் திட்டங்கள் அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகளை தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறோம்.

முஸ்லிம் சமுகத்திற்கு விடுக்கப்படும் இந்த அச்சுறுத்தல்களுக்கு நிரந்தர தீர்வொன்றினை எதிர்வரும் 30 தினங்களுக்குள் பெற்றுத் தருமாறு தாங்களிடம் பணிவான வேண்டுகோளினை விடுக்கிறோம்.

அண்மையில் அம்பாறை, திகன, தெல்தெனிய, கண்டி மற்றும் இலங்கயைின் ஏனைய நகரங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் ஏதோ ஒரு காரணத்திற்காக திடீரென இடம்பெற்றவையல்ல. இவை முஸ்லிம்களின் பொருளாதாரத்தையும் தன்னம்பிக்கையும் அழிப்பதற்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவைகளாகும். இந்தக் குற்றங்களைப் புரிந்தவர்களின் பின்னணியில் பலம் வாய்ந்தவர்கள் இருந்து செயற்பட்டிருக்கிறார்கள் என நாம் சந்தேகிக்கிறோம்.

அனைத்து வன்செயல்களும் பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகள் கடமையில் இருந்த போதே கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. வன்செயல்கள் இடம்பெற்ற பகுதிகளில் ஊடரங்கு சட்டம் அமுலில் இருந்த வேளையிலே காடையர்கள் வன்முறையாளர்கள் சுதந்திரமாக நடமாடி வன்செயலில் ஈடுபட்டுள்ளார்கள்.

அத்தோடு நாடெங்கும் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலே இச்சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. முஸ்லிம் சமூகத்துக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளால் முஸ்லிம் சிவில் மற்றும் மத தலைவர்களுக்கு உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்த நிலையிலேயே இச் சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

திகன வன்செயல்கள் அளுத்கமயில் நடைபெற்ற சம்பவத்தைப் போன்றே அளுத்கமயில் பௌத்த வன்முறைக் குழுக்கள் ஊடரங்குச் சட்டம் அமுலில் இருந்தபோது வீதிகளில் சுதந்திரமாக நடமாடுவதற்கு அனுமதிக்கபட்டிருந்தது. இதுவே வன்செயல்களுக்கு காரணமாக அமைந்தது. அளுத்கம சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் சட்டத்தின் முன்நிறுத்தப்படவில்லை. அளுத்கம தாக்குதல் தொடர்பாக முஸ்லிம்களால் 44 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கத்தவறியதாலும் சட்டமும் ஒழுங்கு அமுல் நடாத்தப்படாமையினாலும் முஸ்லிம் சமூகம் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்கு ஒட்டுமொத்தமாக வாக்களித்தது.

ஆனால் அவ்வாறான வன்செயல்கள் மீண்டும் தொடர்வதால் முஸ்லிம் இளைஞர்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். அவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு தற்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முயற்சித்தால் அது தற்போதைய நிலையை மேலும் தீவிரமாக்குவதாக அமையும்.

வெறுப்புப் பேச்சுகள் மூலம் நாடெங்கும் பிரச்சினைகளை உருவாக்கிய தீவிரவாதிகள் நிபந்தனையுடனான பிணையில் விடுதலை செய்யப்பட்டதனாலேயே இந்நிலைமை நாடெங்கும் உருவாகியதற்கான போதுமான ஆதாரங்கள் உள்ளன.

பௌத்த மத குருமார்களும், தீவிரவாதிகளும் வெறுப்புப் பேச்சுகள் மூலம் இனங்களுக்கிடையில் பதற்றமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளதற்கான ஆதாரங்கள், வீடியோ பதிவுகள், மற்றும் சமூக வலைப்பதிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இவ்வாறான இன வெறுப்புப் பேச்சுப் பேசியவர்களை சர்வதேச மற்றும் அரசியல் உரிமைச் சட்டத்தின் கீழ் (ICCPR) குற்றம் சுமத்த முடியும். இந்த வெறுப்புப் பேச்சு பேசியவர்கள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் முஸ்லிம்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் நாட்டுக்கும் சேதம் விளைவித்திருக்கிறார்கள்.

முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளை கையாள்வதில் பொலிஸ் மற்றும் நீதித்துறை நடந்து கொள்ளும் முறையானது முஸ்லிம்களை சலிப்படையச் செய்துள்ளது. தயவு செய்து சமயம், இனம் என்ற வேறுபாடின்றி, அரசியல் அழுத்தங்கள் இன்றி சட்டத்தை அமுல் நடத்தப்படுவதை உறுதி செய்யுங்கள்.

உடைமைகள் இழப்புக்கு நஷ்டஈடு வழங்குவதற்கான ஒரு செயன்முறையை உருவாக்குமாறும் நாம் உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சேதமடைந்துள்ள சொத்துகளை புனர்நிர்மாணம் செய்வதற்கு இராணுவத்தின் உதவியைக் கோரியுள்ளார் என இராணுவத் தளபதி, மல்வத்த பீடாதிபதி மகாநாயக்க தேரரிடம் கூறியுள்ளார். ஜனாதிபதியின் இந்த வேண்டுகோளை நாம் வரவேற்கிறோம். புனர்நிர்மாண வேலைகளை இராணுவம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.

சேதங்களுக்குள்ளான வர்த்தக நிலையங்களுக்கும் உடனடியாக நஷ்டஈடு வழங்குமாறு வேண்டிக்கொள்கிறோம் என அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-03-28#page-1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.