Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெறும் வாக்குறுதிகளால் அரசியல் நடத்தாதீர்கள்

Featured Replies

வெறும் வாக்குறுதிகளால் அரசியல் நடத்தாதீர்கள்

 

நீதிமன்­றத்­தால் தண்­டனை விதிக்­கப்­பட்ட தமிழ் அர­சி­யல் கைதி­க­ளுக்­குப் பொது­மன்­னிப்பு வழங்கி விடு­விப்­ப­தில் தனக்கு ஆட் ே­ச­பனை ஏதும் இல்லை என்று அரச தலை­வர் மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­ன­ரி­டம் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

ஆனந்த சுதா­க­ர­னின் விவ­கா­ரம் மனி­தா­பி­மான ரீதி­யில் பூதா­கா­ர­மாகி வரும் நிலை­யில் அரச தலை­வர் இந்­தக் கருத்­தைத் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

தாயை­யும் இழந்து தகப்­ப­னை­யும் சிறைக்­குக் காவு கொடுத்­து­விட்­டுப் பரி­த­விக்­கும் இரு குழந்­தை­கள் தமது எதிர்­கா­லத்­திற்­கா­கத் தந்­தைக்­கா­வது பொது மன்­னிப்பு வழங்­குங்­கள் என்று ஒவ்­வொரு வாச­லாக ஏறி இறங்­கு­வ­து­டன், படிப்­பை­யும் பரீட்­சை­யை­யும் விட்­டு­விட்டு தலை­வர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் மாறி மாறி கடி­தங்­களை எழு­தி­வ­ரு­கி­றார்­கள்.

அவர்­க­ளின் பரி­தாப நிலை­யைக் கருத்­தில்­கொண்டு மனி­தா­பி­மா­னத்­து­டன் நடந்­து­கொள்­ளுங்­கள் என்­ப­து­தான் அரச தலை­வ­ருக்கு முன்­னால் உள்ள கோரிக்கை.

ஆனால், அதற்கு நேர­டி­யா­கப் பதி­ல­ளிப்­ப­தைத் தவிர்த்­துக்­கொண்­டுள்­ளார் அரச தலை­வர் மைத்­திரி. இந்­தப் பிஞ்­சு­க­ளின் மன்­றாட்­டத்­திற்கு நேர­டி­யா­கப் பதி­ல­ளிப்­ப­தைத் தவிர்ப்­ப­தற்­காக அவர் எடுத்­துக்­கொண்­டுள்ள விட­யம் அர­சி­யல் கைதி­க­ளைப் பற்­றி­யது.

தடுப்­பில் உள்ள சில நூற்­றுக்­க­ணக்­கான தமிழ் அர­சி­யல் கைதி­க­ளில் 50க்கும் மேற்­பட்­ட­வர்­கள் தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­கள்.

நீண்ட கால­மாக எந்­த­வித விசா­ர­ணை­க­ளும் இன்­றிச் சிறை­க­ளில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பின்­னர், தொட­ரப்­பட்ட வழக்­கு­க­ளில் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட தமிழ் அர­சி­யல் கைதி­கள் வழங்­கி­னார்­கள் என்று சொல்­லப்­ப­டும் ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லங்­க­ளின் அடிப்­ப­டை­யில் அவர்­க­ளுக்­குப் பெரும் தண்­ட­னை­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

இந்த ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லங்­கள் பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்­தின் கீழ் வாங்கப்­பட்­டவை என்­ப­தும், சித்­தி­ர­வதை மூலம் வாங்கப்­பட்­டவை என்­ப­தும் உல­க­றிந்த இர­க­சி­யம். அத்­த­கைய வாக்­கு­மூ­லங்­க­ளின் அடிப்­ப­டை­யி­லேயே அர­சி­யல் கைதி­கள் பல­ருக்­கும் தண்­ட­னை­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.

இது­போன்­ற­தொரு ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லத்­தின் அடிப்­ப­டை­யி­லேயே ஆனந்த சுதா­க­ர­னிற்­கும் 99 தட­வை­கள் அனு­ப­விக்க வேண்­டிய ஆயுள் தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அவர் உட்­பட அர­சி­யல் கைதி­க­ளின் விடு­விப்­புத் தொடர்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன அக்­கறை காட்­டி­னால் அது மிக­வும் வர­வேற்­புக்­கு­ரி­யது. உண்­மை­யில் ஒரு நாட்­டின் தலை­வ­ராக, இனங்­க­ளுக்கு இடை­யி­லான நல்­லி­ணக்­கத்தை விரும்­பும் தலை­வ­ராக அத்­த­கைய அக்­கறை அவரை இனங்­காட்­டும்.

ஆனால், இந்த விட­யத்­தில் மைத்­தி­ரி­யின் அக்­க­றையை அப்­படி எடுத்­துக்­கொள்ள முடி­யுமா என்று தெரி­ய­வில்லை. பூதா­கா­ர­மா­கி­வ­ரும் ஆனந்த சுதா­க­ரின் விவ­கா­ரத்தை இல­கு­வில் கிடப்­பிற்­குத் தள்­ளி­வி­டு­வ­தற்­கும், காலத்­தைத் தாம­திப்­ப­தற்­கு­மான உத்­தி­யா­கவே அரச தலை­வ­ரின் அக்­க­றை­யைப் பார்க்­க­வேண்­டி­யுள்­ளது.

இதற்கு வலு­வான கார­ண­மும் உண்டு. 2015ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லில் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை வேட்­பா­ள­ராக அங்­கீ­க­ரிப்­ப­தற்கு முன்­பி­ருந்து தமிழ் மக்­கள் சார்­பாக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பல கோரிக்­கை­களை முன்­வைத்­தி­ருந்­தது.

தமி­ழர் நிலங்­களை ஆக்­கி­ர­மித்­துள்ள இரா­ணு­வத்­தி­னர் அவற்­றை­விட்டு வெளி­யே­ற­வேண் டும், வடக்கு கிழக்­கில் அள­வுக்­க­தி­க­மாக உள்ள இரா­ணு­வத்­தி­ன­ரைக் குறைத்து 1980ஆம் ஆண்­டுக்கு முன்­பி­ருந்த நிலைக்­குத் திரும்­பக் கொண்டு வர­வேண்­டும், காணா­மற்­போ­னோ­ரின் கதி என்ன என்­பதைக் கண்­ட­றி­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும், அர­சி­யல் கைதி­கள் அனை­வ­ரை­யும் விடு­விக்­க­வேண்­டும் என்­பவை அவற்­றுள் சில.

இவை தொடர்­பாக ஆரம்­பத்­தில் அரச தரப்­பு­டன் கூட்­ட­மைப்பு சில சுற்­றுப் பேச்­சுக்­க­ளை­யும் நடத்­தி­யி­ருந்­தது. குறிப்­பாக, சிறை­க­ளில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சி­யல் கைதி­கள் தொடர்­பில் இத்­த­கைய பல சந்­திப்­புக்­கள் அரச தரப்­பு­டன் நடத்­தப்­பட்­டன.

அப்­போது, தண்­டனை விதிக்­கப்­பட்ட கைதி­கள் விவ­ரம், வழக்­குத் தொட­ரப்­ப­டாது தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள கைதி­கள் விவ­ரம், வழக்­குத் தொட­ரப்­பட்ட நிலை­யில் தடுத்து வைக்­கப்­பட்ட கைதி­கள் விவ­ரம் என்­ப­வற்­றைத் தாம் சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தி­டம் இருந்து கோரி இருக்­கி­றார் என்­றும், அது கிடைத்­த­தும் அத­ன­டிப்­ப­டை­யில் முதற்­கட்­ட­மாக வழக்­குத் தொட­ரப்­ப­டா­மல் இருக்­கும் கைதி­களை உடன் விடு­விக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்­றும் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது.

காணா­மற்­போ­னோ­ரின் உற­வி­னர்­க­ளைச் சந்­தித்த சம­யங்­க­ளி­லும் சிறை­க­ளில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் பட்­டி­யலை வெளி­யி­டு­வார் என்று அரச தலை­வர் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தார்.

ஆனால், அந்­தப் பட்­டி­யல் இது­வ­ரை­யில் வெளி­யா­கவே இல்லை. இதனை பன்­னாட்டு மன்­னிப்­புச் சபை போன்ற மனித உரிமை அமைப்­பு­கள் பல தட­வை­கள் சுட்­டிக்­காட்­டிய பின்­ன­ரும் அந்­தப் பட்­டி­யல் வெளி­ யா­கவே இல்லை.

முன்­னாள் நீதி அமைச்­சர் விஜ­ய­தாச ராஜ­பக்­சவே இதற்­கான முட்­டுக்­கட்டை என்று சாட்­டுச் சொல்­லப்­பட்­டது. ஆனால், புதிய அமைச்­சர் பத­வி­யேற்­ற­தன் பின்­ன­ரும் அந்­தப் பட்­டி­யல் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

தற்­போது தண்­டனை பெற்ற அர­சி­யல் கைதி­களை விடு­விக்க அவர்­க­ளுக்­குத் தீர்ப்பு வழங்­கிய நீதி­ப­தி­கள், சட்­டமா அதி­பர், நீதி அமைச்­ச­ரின் அறிக்கை என்­ப­வற்றை அரச தலை­வர் கேட்­டி­ருக்­கி­றார் என்று சொல்­லப்­பட்­டி­ருக்­கி­றது. இந்த அறிக்கை எப்­போது கிடைத்து, எப்­போது அர­சி­யல் கைதி­கள் விடு­விக்­கப்­ப­டு­வார்­கள் என்­ப­தைக் கட­வு­ளா­வது அறி­வாரோ என்று தெரி­ய­வில்லை.

தடுப்­பில் உள்­ள­வர்­கள் பட்­டி­யல் மாதி­ரியே காலத்­தைக் கடத்­தி­வி­டு­வ­தற்­கான உத்­தி­யா­கத்­தான் இந்த அறிக்­கை­யும் கேட்­கப்­பட்­டி­ருக்­கி­றதா என்­கிற சந்­தே­கத்­தை­யும் தவிர்க்க முடி­ய­வில்லை.

தலை­வர்­கள் உதிர்க்­கும் வார்த்­தை­களை நம்பி வெளியே மக்­கள் வழி­மேல் விழி வைத்­துக் காத்­தி­ருக்­கி­றார்­கள்.

எனவே இவ்­வாறு காலத்­தைக் கடத்­தும் வார்த்­தை­க­ளை­யும் வாக்­கு­று­தி­க­ளை­யும் கூறி அர­சி­யல் நடத்­து­வதை விட்­டு­விட்டு உண்­மையை உரைக்­கத் தலை­வர்­கள் முன்­வ­ர­வேண்­டும்.

http://newuthayan.com/story/79504.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.